சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு "டட டன் டட டன் டன் டும் டும் ஹாய் எவ்ரி படி விஸ் யூ ஹேப்பி நியு இயர்" என்று சகலகலா வல்லவன் பாட்டோடு நியு இயர் கொண்டாடியது ஏனோ நினைவுக்கு வருகிறது, கடந்தமுறை போலவே இந்த வருட புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை, எப்பொழுதும் போல் இதுவும் கடந்துபோகும் :) ஒரு வேளை எல்லாம் குடும்பஸ்தர்களும் இப்படிதானோ, ஏதோ வயதாவது போல் ஒரு உணர்வு...
தஞ்சையில் உழவர் சந்தைக்கு எதிரே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையில் தான் தஞ்சையில் இருந்தவரை நியு இயர் விடியும். நண்பர்கள் பீர் பாட்டில் சகிதம் அங்கு இரவு பத்துமணிக்கு ஆஜர் ஆகிடுவார்கள், சரியாக 11.55 வரை குடிச்சிட்டு அதன் பிறகு மறக்காமல் தண்ணீரை வாயில் பீச்சி அடிச்சி வாட்டர் வாஷ் செய்வார்கள் என்னடான்னு கேட்டா, புதுவருடத்தில் சுத்தமாக இருக்கனுமாம், அதுபோல் சரக்கு மீதி இருந்தாலும் குடிக்கமாட்டார்கள்.
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி வந்து மேரீஸ் கார்னரில் இருக்கும் நண்பன் கடைக்கு முன்னாடி கேக் வெட்டி அருகில் இருக்கும் சர்ச்சுக்கு வரும் பிகருங்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லி கேக் கொடுத்து கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
சிங்கபூரில் இருந்து போன் கால் வந்தது முதலில் பேசியது அப்துல்லா, அண்ணாச்சி பதிவர் சந்திப்பில் இருக்கும் பொழுது போன் செய்திருக்கிறார், நண்பர்கள் ஜோசப்பு,ஜெகதீசன்,கோவி, அத்திவெட்டி ஆகியோரும் மற்ற நண்பர்களும் வாழ்த்து சொன்னார்கள்.
அப்துல்லா போன் செஞ்சதும் அண்ணே உங்களை பற்றி பெருமையா பேசிக்கிட்டு இருந்தேன் நண்பர்களோடு என்றார்... அவ்வ்வ் அப்ப ஒன்னும் பேசவில்லை என்று சொல்றீங்க என்றேன்.ஹி ஹி ஆமான்னே என்றார், எங்களுக்கு தெரியாதா நம்மை பத்தி அப்படி பேச ஒன்னும் இல்லைன்னு, பின் அண்ணாச்சியிடம் இருந்து போன் வாங்கி ஜோசப்பு மச்சி வீட்டில் பாட்டி, தாத்தா,தாத்தாவோட பேத்தி எல்லாம் நலமா என்று விசாரிக்க ஆரம்பித்தான் மாப்பி ஒரே ஒரு டவுட் என்றேன் என்னடான்னான், போன் உன் போன் இல்லைதானே என்றேன் ஆமான் டா எப்படி கண்டுபிடிச்சே என்றான், ம்ம்ம் ங்கொய்யால ISD யில் ஓசி போனுன்னாதானே தாத்தாவில் இருந்து நலம் விசாரிப்ப என்றேன்... ஹி ஹி என்றே போனை அப்துல்லா அண்ணாச்சிக்கிட்ட கொடுத்தான், பேச ஆரம்பிக்கும் பொழுதே ஒரு உறுதிமொழி வாங்கிக்கிட்டு தான் பேச ஆரம்பிச்சேன்... பேசி முடிக்கும் வரை பாட்டக்கூடாது என்று:)
புத்தாண்டு சபதம்:
ஆசிப் அண்ணாச்சி சில வாரங்களுக்கு முன்பு எலேய் குசும்பா தமிழ்மண விருதுக்கு உன் பதிவை பரிந்துரை செய்துட்டியா என்றார், ம்ம் செஞ்சுட்டேன் அண்ணாச்சி என்றேன், எந்த எந்த பிரிவில் என்றார்? எனக்கு தூக்கிவாரி போட்டது, என்னது எந்த எந்த பிரிவிலா? அவ்வ் அண்ணாச்சி எனக்கு எல்லாம் ஒரு பிரிவில் ஒரு பதிவை பரிந்துரை செய்வதே பெரும் விசயமாக இருக்கு, நீங்க என்னடான்னா எந்த எந்த பிரிவில் என்று கேட்குறீங்க என்றேன், நானும் கொஞ்சம் தேடி பார்த்தேன் வேற பிரிவில் பரிந்துரை செய்வது போல் பதிவு எல்லாம் இல்லை அண்ணாச்சி, வேண்டும் என்றால் அடுத்த முறை மொக்கை, மரணமொக்கை என்று இருபிரிவுகள் இருந்தால் இரண்டு பதிவுகளை பரிந்துரை செய்யலாம் என்றேன். அவரும் விடாபிடியாக எலேய்
நீ மழை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தியேடா அந்த பதிவை நினைவுகள் பிரிவில் பரிந்துரை செய்யலாமே என்றார், அது நல்லாதான் இருந்துச்சு என்றார்... இல்ல அண்ணாச்சி கார்ட்டூன் பிரிவில் மட்டும் தான் பரிந்துரை செய்திருக்கிறேன் என்று சொல்லியபிறகு ஒரு முடிவு எடுத்தேன். அதை புதுவருடம் உறுதிமொழியாக மாத்திக்கிட்டேன்.
இந்த வருடம் அண்ணாச்சி நினைவு வைத்திருந்தது போல் தப்பு தவறிக்கூட ஒரு பதிவையும் எழுதிடக்கூடாது, மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன். வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!
Friday, January 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
//அண்ணாச்சி நினைவு வைத்திருந்தது போல் தப்பு தவறிக்கூட ஒரு பதிவையும் எழுதிடக்கூடாது, மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன். வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!///
ஆனந்த கண்ணீர் கம்மிங்க் பாஸ்!
ஆமாங்க. நான் கூட.. இந்த டெக்னாலஜி.. டுக்னாலஜி எல்லாம் விட்டுட்டு.. மொக்கை மட்டும் எழுதலாம்னு ஐடியா..!!
////அண்ணாச்சி நினைவு வைத்திருந்தது போல் தப்பு தவறிக்கூட ஒரு பதிவையும் எழுதிடக்கூடாது, மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன். வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!///
ஆனந்த கண்ணீர் கம்மிங்க் பாஸ்!
//
Repeatae :D
இதுவல்லவோ லட்சியம்...
இதுதான் உங்க லட்சியம்ன்னா, யார் உயிரை வேணாலும் பணயம் வெச்சாவது நிறைவேத்துங்க...
சூப்பர் லட்சியம்....
:)
வாழ்த்துகள்!
:)
nalla mudivu.. =)).. mokkaiyai minjuvathu ethuvumilla..
//ஒரு வேளை எல்லாம் குடும்பஸ்தர்களும் இப்படிதானோ, ஏதோ வயதாவது போல் ஒரு உணர்வு...///
ம்ஹும்.....இதெல்லாம் யூத்துக்கு வரக்கூடாதே.......
சூ....சூ.....விரட்டுங்க உங்க நெனப்ப...
ஆமா அண்ணாத்த நமக்கு மொக்கைதான் முக்கியம்... தமிழ்மணகாரங்க இப்படி ஒரு பிரிவை வைக்காததற்கு நாம முதல்ல தமிழ்மணத்தை புறக்கணிக்கனும். புத்தாண்டு வாழ்த்துக்கள் தல..
ஜிகர்தண்டா Karthik said...
இதுவல்லவோ லட்சியம்...
இதுதான் உங்க லட்சியம்ன்னா, யார் உயிரை வேணாலும் பணயம் வெச்சாவது நிறைவேத்துங்க..//
Repeetu.!
நீ ஒரு சிந்தனைச் சிற்பி, சயனைடு குப்பி என்பது ஊருக்கே தெரியும். பிஞ்சு நெஞ்சக்காரனாய் இருந்தாலும் எதற்கும் அஞ்சும் நெஞ்சம் கொண்டவனல்ல., எத்தனை இடர் வரினும் மொக்கைகளைக் குறைப்பதில்லை என்ற முடிவெடுத்திருப்பதன் மூலம் நீ இன்று முதல் “முடிசூடா மொக்கை மன்னன்” என்று அழைக்கப்படுவாய்!
///இந்த வருடம் அண்ணாச்சி நினைவு வைத்திருந்தது போல் தப்பு தவறிக்கூட ஒரு பதிவையும் எழுதிடக்கூடாது, மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன். வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே! //
செம டச்சிங் மாம்ஸ்...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனந்த கண்ணீர் வருதுங்க...
அன்பின் குசும்பா - மொக்கை உலக முடிசூடா மன்னா
வாழ்க உன் கொற்றம்
நல்வாழ்த்துகள்
ஒரு வேளை எல்லாம் குடும்பஸ்தர்களும் இப்படிதானோ, ஏதோ வயதாவது போல் ஒரு உணர்வு...//
வேணாம்.. அழுதுடுவேன்....
இதுவல்லவோ லட்சியம்...
இதுதான் உங்க லட்சியம்ன்னா, யார் உயிரை வேணாலும் பணயம் வெச்சாவது நிறைவேத்துங்க.//
repeattuuuu:)))
//என்னடான்னு கேட்டா, புதுவருடத்தில் சுத்தமாக இருக்கனுமாம்//
என்ன ஒரு கொள்கை!!!
//உங்களை பற்றி பெருமையா பேசிக்கிட்டு இருந்தேன்//
இன்னுமா உலகம் நம்பிக்கிட்டு இருக்கு.
//மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன்.//
தண்ணில மெதக்குது தக்கை
தலையில மாட்டனும் விக்கை
அண்ண போடுவாரு மொக்கை
- இது உங்களுக்கு காணிக்கை.(ஏதோ ஏழையால் முடிந்த எள்ளுருண்டை)
//ஏதோ வயதாவது போல் ஒரு உணர்வு...
சேம் ப்ளட் :)
அண்ணே இப்போ எழுதற மாதிரியே எழுதுங்க.
மொக்கையெல்லாம் வேணாம்.
நன்றி ஆயில்
நன்றி ஹாலிவுட் பாலா, இதென்ன அக்கபோரு அப்புறம் நான் உலகபடம் விமர்சனம் எழுத ஆரம்பிச்சிடுவேன் அது உங்களுக்குதான் ரொம்ப கஷ்டம்:)
நன்றி G6:)
நன்றி ஜிகர்தண்டா, யாரை பலி கொடுக்கலாம்
என்று சொல்லுங்க.
நன்றி ஜெகதீசன், வர வர டைப் செஞ்சு எல்லாம் கமெண்ட் போடுறீர்:)
நன்றி நிஜமா நல்லவன்
நன்றி கலகலப்பிரியா
நன்றி ஆரூரன், ஏதோ ரெண்டு நாளாக அப்படி ஒரு உணர்வு:(
நன்றி நாஞ்சில், உங்கள் தலமையில் ஒரு உண்ணாவிரதம் இருப்போம்:)
நன்றி ஆதீ
நன்றி பரிசல், இது இம்சை அரசனில் வரும் பாட்டு பாடும் புலவர்கள் போல்
இல்லையே:)
நன்றி அகல்விளக்கு
நன்றி சீனா அய்யா
நன்றி மயில்
நன்றி அரங்கப்பெருமாள் கவுஜ கவுஜ ஆவ்வ்வ்வ் ஆனந்த கண்ணீர்
நன்றி பின்னோக்கி
நன்றி அக்பர், அப்ப இதுவரை எழுதிய 350 சொச்சம் பதிவை என்னான்னு சொல்லுறது.
தமிழ் மணம் "மொக்கை"க்கு என்று பிரிவு வைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம்.
என் தமிழ் மனம் "மொக்கை" என்றாலே, உங்கள் பதிவுகளைத்தான் நினைக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, என் தமிழ் மனம் உங்கள் எல்லா பதிவுகளையும் "மொக்கை" பிரிவில் முதல் இடத்துக்கு தேர்வு செய்கிறது.
வாழ்த்துகள், "மொக்கை" மன்னரே!
(அட அங்க யாருப்பா, "மரண மொக்கை" பரிசு கேக்கறது....அது நம்ம தல பாணியில் எனக்கு நானே வழங்கிக் கொண்டேன்)
ஆம் மன்னா.. ரொம்மம்பபப முக்கியம்!!
//மொக்கை மட்டுமே நம்ம நோக்கமாக இருக்கனும் என்று முடிவு செய்திருக்கிறேன்//
அப்ப.. இதுக்கு முன்னாடி சீரியசா எல்லாம் எழுதியிருக்கீங்களா???
சொல்லவேயில்ல..?
கார்ட்டூன் பிரிவில் முதலிடம் உனக்குத்தான் தம்பீ.. இது உறுதி..!
புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
கும்மி முடிஞ்சிடுச்சா....
any start mujic........?
சரியான முடிவுதான்...புத்தாண்டு வாழ்த்துக்கள்...
லட்சியப் புருசண்டே நீயி.
வாழ்க உன் லட்சியம்.
Post a Comment