Wednesday, December 30, 2009

ரசித்து சிரிக்கவைக்கும் கலக்கல் பார்ட்டி!!!

ஒருவனை சிரிக்கவைப்பது சிரமம், அதுவும் ரசித்து திரும்ப திரும்ப சிரிக்கவைப்பது மிகவும் சிரமம் அப்படி என்னை அடிக்கடி ரசித்து சிரிக்கவைப்பவர் ரைட்டர் பேயோன், அதுவும் 140 எழுத்துக்களுக்குள்.

அவருடைய ட்விட்டுகளை பார்த்தால் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும், அவருடைய ட்விட்டுகள் சில கீழே இருக்கிறது, இவைகள் நான் மிகவும் ரசித்தவை... அவருடைய ட்விட்டர் முகவரி http://twitter.com/writerpayon


என் மகன் பகுத்தறிவுவாதியாகி விடுவானோ என்கிற பயத்தில் தினமும் அவனுக்கான காம்ப்ளானில் ஒரு சிட்டிகை விபூதி கலக்குகிறேன்.

பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை தூற்றாதீர்கள். உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

என் சமகால மனைவி எனக்களிக்கும் வேதனைகளை புரிந்துகொள்ள மட்டுமாவது இன்னொரு மனைவி இல்லாமல் வேலைக்கு ஆகாது போலிருக்கிறது.

சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தைகள் எழுத்தாளர் ஆகிவிடப் போகிறார்.

முட்டையிலிருந்து கோழியை படைப்பதா, கோழியிலிருந்து முட்டையை படைப்பதா? கடவுளின் முதல் சிக்கல்.

மாலை நேரங்களில் சற்று குளிராக இருக்கிறது. இருந்தாலும் உலகம் வெப்பமாதலை அலட்சியப்படுத்துவதற்கில்லை.

நாங்கள் சிறிது கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறோம். சும்மாவிற்காகவா சமுராய் படங்களை பார்க்கிறோம்?

மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.

மழை வந்தாலே வாசகர்கள் பயந்து சாகிறார்கள். நான் அதை வர்ணித்து மரண மொக்கை போடுவேனோ என்று.

காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.

இமய மலை உருகிப் போவதற்குள் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் இந்த மழையில் எங்கே போக முடிகிறது. #ஹோபன்கேகன்

புத்தக வெளியீடு என்றால் லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி

என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. "அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?" என்று கேட்கிறான்.

சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.

என் ரேஞ்சிற்கு எனது அறையை யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கென்று தனி சீதோஷ்ண நிலையை ஒதுக்கீடு செய்வதுதான் நியாயம்.

புத்தக கடையில் ஒரு சிறுவன் கையில் நான் எழுதிய ஒரு குழந்தைகள் புத்தகம். அவன் பின்னட்டையை திருப்பி என் படத்தை பார்ப்பதற்குள் நடையை கட்டினேன்.

இன்று என் திருமண நாள். கொண்டாட மனைவி என் மாமியார் வீடு செல்கிறார். மாமனாரோ இங்கு வருகிறார். நானும் அவரும் கோவிலுக்கு போவதாக திட்டம்.

எம்ஜிஆரும் ரஜினிசாரும் பல பத்தாண்டுகளில் எட்டிய உயரத்தை ஒரு பத்தாண்டில் எட்ட முயன்றால் என்ன ஆகும் என்பதற்கு அஜித்தும் விஜயும் படிப்பினைகள்.

இவை நான் ரசித்த சில ட்விட்டுகள் மட்டுமே. இன்னும் பல இருக்கிறது அவருடைய பக்கத்தில்!

33 comments:

said...

//மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.//


//புத்தக வெளியீடு என்றால் லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்?//

2 செம்மொழி பதிப்புக்களின் இணைப்புக்களையும் கொடுத்திருக்கலாம்!


:)))))

நன்றி

ரைட்டர்பேயோன் பேரவை

said...

//சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.
//

:)

அனைத்தும் நகைச்சுவையோடு சில புத்திகளும் சொல்லுகிறது....

said...

உலகப்படம் என்றால் லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி!!

ஸ்ப்பா.. நல்லவேளை தப்பிச்சோம்!! மேல சொன்னதுபோல சொல்லாமவிட்டாரு..

said...

//மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.//

காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.

:)))))))))))))))))))

said...

நானும் படிச்சிருக்கேன்.. செம கலக்கல் எல்லாம்.. :)

said...

//SanjaiGandhi™ said...
நானும் படிச்சிருக்கேன்.//

ஹலோ மாம்சு.. நானும் படிச்சவன்தான்!!

said...

அதுவும் நீங்க தானே!!! :-)

said...

அட... நீங்களுமா.. பதிவர் பீர் கூட போட்டிருந்தாரே பேயோன் ட்விட்டர் பத்தி... பாருங்க

http://jaihindpuram.blogspot.com/2009/12/blog-post_21.html

said...

:)) பகிர்ந்தமைக்கு நன்றி...

said...

//நானும் படிச்சவன்தான்!!//

ஆனா கலை நான் இப்பதான் படிக்கறன்
பட்சிகின்னே சிர்கிறேன்...சிர்ர்ர்ர்ர்கி....

said...

//மனைவி எனக்களிக்கும் வேதனைகளை புரிந்துகொள்ள மட்டுமாவது இன்னொரு மனைவி இல்லாமல் வேலைக்கு ஆகாது//

ஆண்கள் தைரியசாலிகள் என்று இது நிருபிக்கிறது

said...

//சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தைகள் எழுத்தாளர் ஆகிவிடப் போகிறார்//
குழந்தை வயசெல்லாம் இல்லப்பா... 28 வயசுதான் ஆகுது

said...

கலக்கல் பதிவு.....

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது....

புத்தாண்டு வாழ்த்துக்கள்...............

said...

தமிழ் : வெளியே நிற்கும் குருவிகள்.
English : Outstanding Twits

said...

எஸ்யூச்மீ...மே ஐ கம் இன்,

said...

நல்லாருக்கு குசும்பா

said...

15 கமெண்ட்தான் வந்திருக்கா...சென்ஷி, கலை வாங்க... 40 கு மேல கொண்டு போய்ருவோம்....

அப்புறம் போன பதிவுல வந்த 150 கமெண்டுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்ல..........!!!!!!!!

said...

நான் ரிலாக்ஸாக இருக்க இருவரைத் தேடுவேன். (இரு அவசரப்படாதே)

வலையுலகில் நீ
ட்விட்டரில் இவர்.

said...

படிக்கத்தான்ப்பா... சரியா?

said...

super..

thanx for sharing..

said...

நல்ல பகிர்வுக்கு நன்றி குசும்பன்...

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

said...

நானும் அவரோட பாலோயர்!

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

நல்ல தொகுப்பு...

<<<
காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.
>>>
ஒவ்வொன்னும் சூப்பர்... :)

நெக்ஸ்ட் எப்போ???

said...

super :_)..... I always surrender...as always !!!!!! ( like everybody else !!!!!)... and still say I will not !!!!!!!!!

said...

அவர் ட்வீட்டர் குசும்பர்!

said...

சூப்பர் மாம்ஸ்...

பகிர்ந்தமைக்கு நன்றி...

said...

சுவையான பதிவு


அன்புடன்

சூர்யா.

said...

நன்றி ஆயில்யன்

நன்றி வசந்த்

நன்றி கலை

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி சஞ்சய்

நன்றி வடுவூர் குமார், அது கொஞ்சம் அறிவு சார்ந்த நகைச்சுவையாக
இருந்துமா இப்படி ஒரு சந்தேகம்...:)

நன்றி நாஞ்சில்

நன்றி நாணல்

நன்றி அசோக்

நன்றி சங்கவை

நன்றி ஸ்வாமி, கலக்கல்

நன்றி கண்ணா

நன்றி சென்ஷி

நன்றி பரிசல் நல்லவேளை உடனே விளக்கம் சொன்ன..:))

நன்றி சூர்யா

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி தாரணி பிரியா, நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி வால்

நன்றி அக்னி

நன்றி மாஸ்டன்

நன்றி சுந்தர்

நன்றி செல்வேந்திரன்

நன்றி அகல்விளக்கு

நன்றி அத்திரி. உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி சூர்யா-மும்பை

said...

//என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. "அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?" என்று கேட்கிறான்.//

:-))

said...

//சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.
//
இதுக்கு ஒப்பான ஒரு கவிதை இங்கே இருக்கு:
http://ulagamahauthamar.blogspot.com/2009/12/blog-post_09.html

said...

//பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை தூற்றாதீர்கள். உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.//


ரூம் போட்டு யோசிப்ப்பாங்கலோ ?