Tuesday, January 5, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

ஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.

எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.

தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர் டப்பா?

எடுபுடி: அது ஒரு 12 டப்பா இருக்குதுங்க...

தலைவர்: ம்ம்ம் அந்த மை...

எடுபுடி: அது மட்டும் 6 தாங்க இருக்கு.

தலைவர்: ம்ம்ம் சரி சரி ஆள் அனுப்பி வாங்கி வர சொல்லு. அப்படியே ஜிகினா பேப்பர், கொடி தோரணம் எல்லாம் வாங்கி வர சொல்லு.


டேய் குமாரு நீ அந்த பூவை சுத்த ஆரம்பி..

சரிங்கய்யா..

டேய் பாபு நீ அந்த பவுடரை அடிக்க ஆரம்பி...

சரிங்கய்யா...

தலைவர்: டேய் என்னடா பூ சுத்துர அங்க கொஞ்சம் கேப் இருக்கு பாரு நல்லா நெருக்கி ஒழுங்கா சுத்துடா..

டேய் பாபு என்னாடா செய்யுற? நல்லா சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் அடிக்கனும் சரியா?

பாபு: ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.

தலைவர்: பத்தாதுய்யா இன்னும் 4 கோட் அடி..

டேய் வாங்கிட்ட வர சொன்ன ஜிகினா பேப்பரை எல்லாம் வெட்டி பின்னாடி சடையில் கொடி போட கட்டுங்க... அந்த பச்ச ரிப்பனை ஒரு பக்கமும் அந்த சிகப்பு ரிப்பனை அடுத்த பக்கமும் கட்டுங்க.

ம்ம்ம் அந்த மை டப்பாவை இங்க கொடு...இப்படி பல மணி நேரம் டெக்ரேசனுக்கு பிறகு ரெடி செஞ்ச பிறகு நொங்கு நொங்குன்னு நொங்கி...

எடுக்கப்பட்ட படம்


ஹேப்பி பர்த் டே ஆயில்யன்!

டிஸ்கி: பழய பதிவுதான் இது, அதுக்காக கும்முவதில் குறை வெச்சிடாதீங்க மக்கா!

47 comments:

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்.

said...

:)திருவிழாவில் காணாப் போன குழந்தையை கண்டு பிடிச்சு கூட்டிப் போய் பக்கத்திலேயே புகைப்படம் எடுத்துவிட்டார்களா ?

said...

பிறந்தநாள் வாழ்த்து சொல்றேன் பேர்வழின்னு வெளுத்துல்ல வாங்கியிருக்கீங்க நீங்க!

அய்யோ பாவம் ஆயில்ஸ் :)

said...

:))))))))))))))))))))

said...

ஆஹா வெயிட்டிங்கல இருந்தீங்களோ? பாஸ் இன்னொருக்கா டேமேஜ் செய்ய! இருங்க இருங்க எனக்கு மேக்கப் செஞ்சவர்க்கிட்ட சொல்லி வைக்கிறேன் அடுத்தவாட்டி ஊருக்கு போறச்ச நல்லா கவனிப்பாரு :)

said...

@ க.பாலாசி

@ கோவி.கண்ணன்

@ அ.அம்மா

@ ஜெகதீசன்

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் :)

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)

said...

இது ஒரு எவர் கிரீன் பதிவு. வாழ்த்துகள் ஆயில்யன்.!

said...

அந்த மேக்கப் மேனைதான் கமல் தன்னோட தசாவதாரத்துக்கு கூப்பிட்டாராம் ஆனால் ஆயில்யன் என்ற "ஸ்டாரை" தவிர வேற யாருக்கும் செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டாராம். அப்படின்னு இந்த வார வாரமலரில் கிசுகிசு வந்து இருக்குங்க:)

said...

நண்பர் ஆயில்யனின் படத்தைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. பழக்கம் - நட்பு அதிகம் இல்லாத காரணத்தால் கலாய்க்கவில்லை. Controversy வேண்டாமே என விட்டு விட்டேன். இப்போது குசும்பனுடன் உடன் படலாமா என யோசிக்கிறேன். ஆயில்யன் தவறாக நினைக்க வேண்டாம்.

said...

எப்ப ஊருக்கு வற்ரீங்க? ஏர்போர்ட்டிலேருந்து தூக்கி கூவத்துக்குள்ள தூக்கி போட.....
எப்படித்தான் இப்படியெல்லாம் எழுத தோணுதோ!

said...

போஸ்ட்டை விட பின்னூட்டங்கள் சூப்பர்.. :-))))

said...

200 முழப் பூவில் மீதி எங்கே? குசும்பன் மீது மோசடி புகார். காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.

said...

:-))))

ஃபோட்டோக்கே இப்படின்னா ஆயில்ஸோட சடையை வளர்க்க அவங்கம்மா என்ன பாடு பட்டிருப்பாங்க...!! :-)

said...

வாழ்த்துக்கள் ஆயில்யா

எத்தனை அடிச்சாலும் எத்தனைப் பதிவுல இதே படத்தைப் போட்டாலும் அழ மாட்டார் ஆயில்யன்
ஏன்னா அவ்ளோ நல்லவர்ர்ர்ர்ர்ரு

said...

ஹஹஹஹ ஆயில்யன்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சின்னவயசுல இவ்ளவு அழகா இருக்கீங்க... இப்போ இதைவிடை அழகா இருக்கீங்கனு சொன்னேன்...
குசும்பன் கைல போட்டோ கொடுத்தான் இப்படித்தான்..

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா....


சின்ன வயசுலயே உன்னைய மத்த ஆளுங்க கும்ம விட்டியேண்ணே...

இப்ப பாரு....

said...

தலைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

@ ஆ.மூ.கிருஷ்ணன்

தாங்க்ஸ் பாஸ்

@ ஜெகதீசன்

என்னங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்கோ :)

@ கண்மணி டீச்சர்

:)))

@ நாஞ்சில் பிரதாப்

தாங்க்ஸ் பாஸ் - (நிசமாவா அவ்வ்வ்)

@ கண்ணா

நன்றி பாஸ் :)

said...

//வால்பையன் said...

தலைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

நன்றி பாஸ் :)

said...

boss-kku iniya pirandhanaal vaazhthukkal :))))

Aanalum sirandha make-up mankaana virudhu indha make-up pottavarukku kudukkalaam pola irukkae :P

Anonymous said...

ஆஆயில்ஸ் ::))))))))) ஹாப்பி :))))))))))) பர்த்டே....:)))))))))))))))))))))))))))0

said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன் பையா! சீ.. ஐயா!!

நல்லவேளை பிறந்தநாள் டிரஸ்ல எடுத்த போட்டோ குடுக்கல... அதுவரைக்கும் சந்தோஷம்!!

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்!!!

இது 43-தான???

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

//இது 43-தான???///

no its 34 aayils always youth.

:-)

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்..:)

said...

//
@ ஜெகதீசன்

என்னங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்கோ :)
//
பாஸ்.... எந்தக் கமெண்ட்டுக்கு இந்த பதில்....
நான் பழய பதிவுல இருந்த எல்லா கமெண்ட்டையும் இங்க பிரதி எடுத்துருக்கேன்... யாருக்கு பதில் சொல்லீருக்கீங்கன்னு தெரிய வேண்டாமா...

அப்படியே 4 வது முறையா பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிடுறேன்... வாழ்த்துகள்

Anonymous said...

ஹேப்பி பர்த்டே ஆயில்ஸ்

said...

ஆப்பி பர்த்டே ஆயில்ஸ்....

said...

நான் இப்ப குசும்பனோட எந்த பதிவுல இருக்கேன்னு எனக்கு புரிபடல :)

வாழ்த்திய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளுடன்....!

அன்புடன்
ஆயில்யன்

said...

many more happy returns of the day ayilyan..

said...

\\ஐய்யா இதுவரை 5 கோட் அடிச்சு இருக்கேன் போதுமா பாருங்க.//


கொக்கா மக்கா 5 கோட் அடிச்சும் இந்த ரேஞ்சு தானா ?? பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

ஆயில்யன்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நல்லா கமெண்டரி குடுத்தீங்க குசும்பன்

said...

ஹா ஹா என்ன ஒரு பதிவு பிறந்தநாளுக்கு போட்டோ ஹி ரொம்ப சூப்பர்.

அட என்ன ஒரு தொகுப்பு, இப்படி குமுறீங்க‌

:)திருவிழாவில் காணாப் போன குழந்தையை கண்டு பிடிச்சு கூட்டிப் போய் பக்கத்திலேயே புகைப்படம் எடுத்துவிட்டார்களா // hi hi

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! படம் ஹி ஹி :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்.

குசும்பா... 5+4 கோட்டு என்ன 50 கோட்டு அடிச்சாலும் வேளைக்கு ஆவாது... மேக்கப் மேன முதல்ல ஆயில்யன அலம்பிவிட (குளிப்பாட்ட) சொல்லுங்க

said...

வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!

குசும்பரே!

அதே ஆயில்யன்
அதே பிறந்தநாள்!
அதுனால
அதே பதிவா?
ரீலை மாத்துங்கப்பா!

said...

வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!

குசும்பரே!

அதே ஆயில்யன்
அதே பிறந்தநாள்!
அதுனால
அதே பதிவா?
ரீலை மாத்துங்கப்பா!

said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

said...

super..

said...

வாழ்த்துக்கள்
தமிழ்மணம் விருதுக்கு..::))

said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் குசும்பன்! :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்யன் ஜி :-)

said...

happy birthday Ayilyan.