Monday, May 11, 2009

அந்த ஆண் பதிவர் யார்? பினாத்தலாரின் க்ளு

தல போட்டாலும் போட்டார் ஒரு பதிவு பார்க்கிறவன் எல்லாம் எலேய் அவனா நீ அவனா நீ என்றே கேட்டுக்கிட்டு இருக்கிறார்கள். இங்கிருக்கும் நண்பர் ஒருவர் போன் போட்டு எலேய் குசும்பா தல சொன்ன ஆளு நீதானாடா?உனக்கும் கல்யாணம் ஆயிட்டு! அப்ப அவன் நீ தான் டா என்றார். அடபாவி பயலே அப்படியாவது ஊருக்குள்ள சொல்லுங்கடா எனக்கு அப்படியாச்சும் பெண் தோழிகள் இருப்பதாக ஊர் நம்பட்டும் என்றேன்.

ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட பேசும் பொழுது அண்ணாச்சி எலேய் யாருன்னு தெரியுமாலே என்றார். தெரியாது அண்ணாச்சி என்றேன் , எலேய் உனக்கும் எனக்கும் தெரிஞ்சவன் தான் நம்ம கூட தான் இருக்கான் என்றார். யாரு? அண்ணாச்சி என்றேன். நம்ம அய்யனாருதான்லே அது என்றார். போங்க அண்ணாச்சி அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆயி இருக்கு அந்த பதிவில் பதிவருக்கு குழந்தைங்க இருப்பது போல் அல்லவா சொல்லி இருக்கார் என்றேன். இப்ப கல்யாணம் ஆவதுக்கும் குழந்தைக்கும் என்னடா சம்மந்தம் ஊர் உலகம் தெரியாதவனா இருக்கியேடா என்றார். அதுவும் சரிதான்!

இருவருடங்களுக்கு முன்பு எங்க ஆபிஸில் ஒரு பிலிப்பினோ இருந்தா என்னிடம் கேட்டா எத்தனை குழந்தைங்க என்று இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றேன், அதனால் என்ன என்றாள்! அட சண்டாளி என்று நினைச்சுக்கிட்டு, உனக்கு எத்தனை குழந்தை என்றேன். இப்ப ஒன்னு இருக்கு கல்யாணத்துக்கு பிறகுதான் அடுத்த குழந்தை என்றாள். என்னது கல்யாணத்துக்கு பிறகா அப்ப அந்த குழந்தை என்றேன்? நான் 18வயசா இருந்தப்ப கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டேன் இனிமே கல்யாணத்துக்கு பிறகுதான் என்று முடிவு செஞ்சு இப்ப எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கிறேன் என்றாள். வெளங்கிடும் என்று நினைச்சுக்கிட்டேன்.

இப்ப என்னடான்னா இங்கிருக்கும் அமீரக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இரு முடிவு எடுத்திருக்கோம் ஒன்னு அனைவரது பெயரையும் சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் அவர் பெயரை எடுப்பது, அல்லது மை போட்டு பார்த்து கண்டுப்பிடிப்பது.

பின் கேள்விபதில் மூலமாக கண்டுப்பிடிக்கலாம் என்று முடிவெடுத்து ஆன் லைனில் யார் இருக்கிறார்கள் என்று பச்சை லைட் போட்டா ஒருத்தரும் வழக்கம் போல கண்டுக்கவே இல்லை சரி எப்படி ஆள் புடிக்கிறது என்று யோசிச்சு :((((( போட்டதும் ஆள் ஆளுக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என்றார்கள் அப்படி கேட்டவர்களை எல்லாம் விட்டு உருமீன் வர காத்திருக்கும் கொக்கு போல காத்திருந்தேன். வந்தாரு நம்ம பினாத்தல் சுரேஷ் என்னய்யா சோகம் என்றார். காரணத்தை சொன்னதும் அடப்பாவி இன்னைக்கு நானா என்றார் ஆமாம் என்றேன். சரி இனி நான் கேட்கப்போகும்
கேள்விகளுக்கு பதில் ஆம் இல்லை என்று மட்டுமே சொல்லனும் என்றேன் சரி என்றார்.


கேள்வி :பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கீங்களா?
பினாத்தல்: ஆம்

கேள்வி: குழந்தைகள் இருக்கிறதா?
பினாத்தல்: ஆம்

கேள்வி: கல்யாணம் ஆகிவிட்டதா?
பினாத்தல்: டேய்ய்ய்! அதான் குழந்தை இருக்குன்னு சொல்லிட்டேனே!

நான்: மன்னிக்கவும் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் சொல்லனும்.
பினாத்தல்: ஆம்

கேள்வி: எப்பொழுதாவது SMS, அல்லது மெயிலை பார்வர்ட் செஞ்சு இருக்கீங்களா?

பினாத்தல்: ஆம்

கேள்வி: உங்களுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களா?
பினாத்தல்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது கைய உடைப்பேன் படுவா என்றார்.

கடைசி கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் அதிக கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி இருப்பதால் உங்கள் பெயரும் டிஸ்டிங்சன் லிஸ்டில் ஏற்றப்படுகிறது என்றேன்.

பின் அவருக்கு அவனைப்பற்றி தெரியும் க்ளு மட்டும் கொடுக்கிறேன் என்றார்.

அவர் கொடுத்த க்ளு
அவர் பேரின் கடைசி இரண்டு எழுத்தை சாப்பிடலாம்முதல் இரண்டு எழுத்துக்கு முகம் சுளிக்கலாம் பேச்சாளர் தொடர ஊக்குவிக்க மூன்றாம் எழுத்தை பயன் படுத்துவார்கள்.

யார் அது?

43 comments:

said...

மீ த பர்ஸ்ட்டு!

said...

அவ்வ்வ்வ்வ்வ்/... நானில்லை அது. ;-))

said...

பன்
குசு
ம்


குசும்பன்!

said...

ஐயா, ஹாலி :) இனிமே யாரை வேணா சந்தேகிக்கலாம் :)

said...

நான் கண்டு புடிச்சிட்டேன், ஆனா சொல்ல மாட்டேன் ;)

வேணும்னா மேலும் ஒரு க்ளூ. இந்தா புடிச்சுக்கோங்க:

அவர் பெயரின் கடைசி இரண்டு எழுத்துக்களை டீயில் தொட்டும் சாப்பிடலாம் தொடாமலும் சாப்பிடலாம்; முதல் இரண்டு எழுத்துக்களை பெருங்காய வாசனையோடு ஒப்பிடும் தமிழ்ப் பழமொழி ஒன்று இருக்கிறது; நடு எழுத்து மெல்லினம்.

:)))))))))

said...

இதுலயுமா குசும்பு? பாவி மக்கா...

:-)

said...

முதல் இரண்டு எழுத்து: குசு (முகம் சுளிக்கத்தான் வேண்டும்)
கடைசி இரண்டு எழுத்து: பன் (டீல தொட்டு சாப்பிடலாம்)
ம்: சரிதான்

said...

வளரு மாப்ள...

பின்நவீனத்துவ சூழல்ல இதெல்லாம் சகஜமில்லையா?

said...

// வால்பையன் said...
பன்
குசு
ம்


குசும்பன்! //

ரிப்பிட்டு....................

said...

வளரு... அப்ப 'அது' நீங்க இல்லையா? நீங்களும் பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கீங்களே :-(

said...

அய்யய்யோ,,கண்டுபிடிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னு கீழ வந்தா, வாலு கண்டுபிடிச்சுட்டாப்லயே...!
வட போச்சே...!

said...

நானும் ரவுடி தான் டைப்புல வலிய வந்து வண்டியில ஏறுரவங்களுக்கு ஜிலேபி வாங்கி தரப்படும்!

அப்ப தான் சீக்கிரம் நிக்குமாம்!

said...

ரெண்டு போன் நம்பரும்,
ரெண்டு மெயில் ஐடியும் தலைவர் குசும்பன் தந்து வாழ்த்தி வழியனுப்புவார்!

said...

நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிகொண்டு திரிபவர்கள் இதில் சம்பந்தபட்டிருக்க வாய்ப்புண்டு என்பதால்! அம்மாதிரி ஆட்களை விசாரணை கமிசன் குறிவைத்து காய் நகர்த்துவது நல்லது, முடிந்தால் அப்படியே காயடித்துவிடுங்கள்

said...

ஒலக எலக்கியம், மொழி அறிவு இப்படியான அஜீரணக் கோளாறுகளை உருவாக்கக்கூடிய வஸ்துக்களைத் தேடி அலையும் மகாஜனங்கள் என்னோட க்ளூவின் முதல் பகுதியை இப்படியாக மாற்றிவாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

அவருடைய பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் குழந்தை இலக்கியமாகக் கருதப்படும் nursery rhyme - ஒன்றில் வரும் சாப்பிடு பொருள்.

க்ளூவுக்கு க்ளூ:

1) அந்த nursery rhyme -ல் வரும் ஒரு வரி: "one a penny two a penny ..."

2) கடைசி இரண்டு எழுத்துக்கள் பற்றிய முந்தைய க்ளூ சம்பந்தமான கதை ஒன்று கி. ராஜநாராயணின் நாட்டுப் புறக் கதைகளில் உண்டு.

3) அந்த நடு எழுத்தான மெல்லின எழுத்து மெல்லின வரிசையில் நடு எழுத்து இல்லை.

said...

முந்தைய கமெண்டி முதல் இரண்டு எழுத்துக்கள் என்று திருத்தி வாசிக்கவும்.

said...

இன்னொரு ஈசியான வழி யார் யாரு எல்லாம் வந்து பின்னூட்டம் போடலையோ எல்லாரையும் லிஸ்டில் சேர்த்துவிடலாம்:)

இது எப்படி இருக்கு?

said...

வளர், ஏன் இப்படிச் சுத்தி வளைச்சு சொல்றீங்க... நீங்க சொல்றது ------ தானே :)

said...

சில சமயம் மற்றவர்கள் பிளாக்கை வாடகைக்கு எடுப்பார் முதல் எழுத்தில் பொருட்களை எடுத்து செல்லலாம், கடைசி இரு எழுத்து மாதவன் படம்!

அப்பாடி நானும் க்ளு சொல்லிட்டேன்!

said...

நேரடியா சொல்லப்படாது சுந்தர் ... சுவாரசியம் கெட்டுடுமில்லே ... வெத்துரல இடிக்குற சுகமிருக்கே ... :))))))))

said...

//சில சமயம் மற்றவர்கள் பிளாக்கை வாடகைக்கு எடுப்பார் முதல் எழுத்தில் பொருட்களை எடுத்து செல்லலாம், கடைசி இரு எழுத்து மாதவன் படம்!

அப்பாடி நானும் க்ளு சொல்லிட்டேன்!//

உங்களுக்கே இது ஓவரா தெரியலை? வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்...

தோழமையுடன்
'பை'த்தியக்கா'ரன்'

said...

அய்யோ குசும்பன்,

என்னது வாடகை - சூட்கேசு - மிடில் க்ளாஸ் மாதவனா !!!

நான் எஸ்கேப்புபுபுபூ ... :))))))

said...

பாதியில் போகிறவர்கள் பெயரை மூன்று முறை எழுதப்படும்:)))

said...

//பாதியில் போகிறவர்கள் பெயரை மூன்று முறை எழுதப்படும்:))) //

இடையிடையில் மெயில் பார்வேர்டு பண்ணவேண்டாமா?

said...

/ஐயா, ஹாலி :) இனிமே யாரை வேணா சந்தேகிக்கலாம் :)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

said...

வந்துட்டேன் வந்துட்டேன் நேக்கும் ஒரு சீட்டு போஒடுங்கோண்ணா!

said...

//வந்துட்டேன் வந்துட்டேன் நேக்கும் ஒரு சீட்டு போஒடுங்கோண்ணா!//

வண்டியில ஏத்துங்கோ!
பில்டிங் ஸ்டாராங்கான்னு பார்த்துடலாம்!

said...

சும்பகுன்
பன்குசும்
சும்குன்ப
பகுன்சும்
குபன்சும்
சுகும்பன்
பன்கும்சு

said...

நானும் ரௌடிதான். நான் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போனதில்லை. என்னிடம் மொபைல் போன் இல்லை. sms என்றால் என்ன? போலவே பெண் பதிவர்கள் என்றால்?

அளவிலா பதட்டத்துடன்

அனுஜன்யா

said...

அண்ணே.. அப்படியே அந்த பாலா பதிவு லிங்கும் கொடுத்திருந்தீங்கன்னா உங்க ஃபாலோயர்ஸ் 234 பேரும் படிச்சு பலனடைய வசதியா இருந்திருக்குமுல்ல.. :-)))

said...

நம்பிட்டோம் குசும்பனுக்கு தோழிகள் இருக்கிறார்கள்.. :))

said...

ஒ.......

ஓஓஓஓஓஓஓஓஓ..........

said...

என்னது காந்தி செத்துட்டாரா....

said...

//இன்னொரு ஈசியான வழி யார் யாரு எல்லாம் வந்து பின்னூட்டம் போடலையோ எல்லாரையும் லிஸ்டில் சேர்த்துவிடலாம்:)

இது எப்படி இருக்கு//

இதுக்காகாக்வே நான் பின்னூட்டம் போடல..

ஆவ்வ்வ்வ்..போட்டேனா?

said...

அண்ணே இன்னுமா! உன்னை ஊரு நம்பிக்கிட்டு இருக்கு!!!

said...

பெனாத்த்ல கேள்விக்கு ஒரு பதில் நம்மகிட்ட இருந்து இல்லைன்னு சொல்லவேண்டி இருக்கு. ரவுடின்னு சொல்லிக்க அப்ளிகேசனே போட முடியாது போலிருக்கே

said...

:-) ஹீ ஹீ ;)

Anonymous said...

நாசமா போச்சு....

நானும் திருமணமான பதிவன்தான். நல்ல வேளையாக எந்தப் பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டதில்லை. எனக்கு பெண் நண்பர்களே கிடையாது, இருந்தாலும் அவர்கள் தமிழ்ப் பதிவர்களாக இருக்க முடியாது. என்னை நம்பி யாரும் போன் நம்பர் ஈ-மெயில் முகவரி எதையும் கொடுத்தது கிடையாது. அப்படியே என்னுடைய போனில் பெண்களின் நம்பர் ஏதாவது இருந்தாலும் நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவது கிடையாது. பேசிக்கலி ஐயாம் எ கஞ்சன்....

ப்ளீஸ், என்ன அந்த லிஸ்ட்லேந்து எடுத்துடுங்க. நான்தான் பின்னூட்டம் போட்டுட்டேன்ல... விட்ருங்கண்ணே.... :((

said...

//சென்ஷி said...
அண்ணே.. அப்படியே அந்த பாலா பதிவு லிங்கும் கொடுத்திருந்தீங்கன்னா உங்க ஃபாலோயர்ஸ் 234 பேரும் படிச்சு பலனடைய வசதியா இருந்திருக்குமுல்ல.. :-)))//

அண்ணே.. திரும்பவும் செந்தில்னே...

எந்த பதிவ பத்தின்னே பேசிக்கிறீங்க?
லிங்க் குடுங்கண்ணே...

said...

என்னா மாமா இது.. ஆசை ஆசையா அன்புத் தோழிய தேடி வந்தேன்.. ஆளை காணலையே.. :((

said...

//இல்லை சரி எப்படி ஆள் புடிக்கிறது என்று யோசிச்சு :((((( போட்டதும் ஆள் ஆளுக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என்றார்கள் //

அடப்பாவி மக்கா.. யோவ் மாமா.. இப்டி அடுத்தவன் சரக்கை சுட்டால் ,அதுக்கு பக்கத்துல டேங்க்ஸ் கார்டு போடனும்.. ஊருக்குப் போயி ஓட்டுப் போட்டு வரதுக்குள்ள என் சரக்கை சுட்டு பதிவே போட்டிட்டியே மாமா.. :))

said...

:))


பெருவாரியான கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதிலளித்த பெனாத்தலாரின் துப்பை சரியா துப்பலயே இங்க யாரும்.. அதாவது துப்பறியலையே.... என்ற ஆதங்கத்தால் தாமதமாக இந்தப் பின்னூட்டம்.

//அவர் பேரின் கடைசி இரண்டு எழுத்தை சாப்பிடலாம்//

’தல’க்கறி சாப்பிடதில்லையா நீங்கள்? ஆனா அவரால முழுவதும் சாப்பிட முடியாததால் ‘தல்’ மற்றும் சாப்பிடுவார் போல.

//முதல் இரண்டு எழுத்துக்கு முகம் சுளிக்கலாம்//

‘பேனா’ வச்சு சிரிக்கிற மாதிரியும் எழுதலாம்... சும்மா ’பெனா’த்தி முகம் சுளிக்கவும் வைக்கலாம். அதைத்தான் அப்படி நுணுக்கமா சொல்லியிருக்காரைய்யா.

//பேச்சாளர் தொடர ஊக்குவிக்க மூன்றாம் எழுத்தை பயன் படுத்துவார்கள்.//

ஊக்குவிக்க என்ன செய்யனும்? முதல்ல ஊக்கு தயார் பண்ணனும்னு காமெடி பண்ணாம நல்லா யோசிச்சுப் பாருங்க. ‘த்தா... பாடு... பேச வண்ட்டான் பாரு’ ரவுசு பண்ணினா ரோஷம் வந்து நிறையப் பேசுவாங்கப் பாருங்க. இப்பத்தான் உங்கள ஊக்குவிக்க தொடங்கறாரு... அதுக்குள்ள க்ளூவை மிஸ் பண்ணிட்டீங்களே. :))

கூட்டிக் கழிச்சிப் பாருங்க. கணக்கு எல்லாம் சரியாத்தான் வரும்.

said...

யோவ்...நான் போய் இருந்த போது...கேபிள் சங்கர் 'உங்களுக்கு கல்யாணம் ஆச்சான்னு' என்னைப் பார்த்துக் கேட்டார்.

அறுபதாம் கல்யாணம் ஆகப் போற ஆளுகிட்ட இப்படி கேட்பது தப்புதானே ?