Wednesday, May 6, 2009

ஒழுங்கா இந்த பதிவை படிக்கல அப்புறம் பாட்டுபாடிபுடுவேன்!!!

ஊரில் நம்ம பாட்டு பாடும் திறமைக்கு முதல் அங்கிகாரம் கொடுத்தது என் அம்மா, ஒரு நாள் குஜால் மூடில் அபூர்வ சகோதரர்கள் பட பாட்டு ”ராஜா கைய வெச்சா பாட்டை பெருகுரல் எடுத்து கத்திக்கொண்டு இருக்க அம்மா அங்கிருந்து தம்பி டேய் இதை எல்லாம் கொஞ்ச விரட்டி விட்டு போ நிறைய கழுதை வருது பாரு என்றார்கள்.

பின் ஸ்கூலில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலை பஜனை கூட்டத்தில் சரஸ்வதி நமஸ் துப்பியம் வரதே காமரூபினி..வித்யாரம்பம் கரீஸ்யாமி சித்தித்பவதுமேஸ்ததான்னு ஒரு பாட்டை பாடனும் அன்று என்னை பாட சொல்ல... பாக்கியராஜ் படத்தில் ஹீரோயின் பாடும் தேவனே தேவனே... மாதிரி பாட அப்படியே வாய் பொத்தி கடைசி வரிசையில் கொண்டு போட்டதும் இல்லாமல் இனி வெள்ளிகிழமை கடைசி பீரியடின் பொழுது நீ பஜனைக்கே வரவேண்டாம் வீட்டுக்கு போய்விடலாம் என்று அனுமதியும் கிடைத்தது.

பின் அக்காவீட்டில் அக்கா என் மாப்பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட ஒழுங்கா சாப்பிடுறீயா இல்லை மாமாவை பாட சொல்லவா என்று சொல்லி சொல்லியே சாப்பாடு ஊட்டும்.

கல்லூரி நாட்களில் நண்பர்கள் என்னை பாட சொல்லி கம்பல் செய்வார்கள், நானும் ரொம்ப குஜலாகி டாலாக்கு டோல் டப்பிமா...என்று பாடுவேன், கொஞ்ச நாட்கள் கழிச்சுதான் தெரிஞ்சுது நாம பாடும் பொழுது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் பிகருங்க நெருங்கி பயந்து போய் இறுக்கமா அவனுங்களை கட்டிபுடிச்சுக்கிட்டு வர நம்மளை பாட சொல்லி இருக்கானுங்க என்று. ...சரி இப்ப எதுக்கு இத சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா.

நம்ம புதுகை அப்துல்லா ”சொல்ல சொல்ல இனிக்குதே” படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார். காதல் ஒரு பள்ளிகூடம் நண்பான்னு செம கலக்கலா ஒரு கானா பாட்டு , நேற்று போன் போட்டு பாட்டை சத்தமாக பாட விட்டு கேட்கவைத்தார். பின் அண்ணாச்சி எப்படி இப்படி அருமையா பாடி இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் அதுக்கு சொன்னார் நீங்கதான் என் குருன்னு, கண்ணுல தண்ணிவந்துடுச்சு, அப்படியான்னே என்றேன் ஆமான்னே உங்கள மாதிரி பாடக்கூடாதுன்னு நினைச்சேன், நல்லபடியா வந்துட்டுன்னே என்று சொல்கிறார்.



Get this widget Track details eSnips Social DNA



நீங்களே கேட்டு பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நம்ம சக பதிவர் ஒருவர் பாடகராக அவதாரம் எடுத்திருக்கிறார், அடுத்த முறை ஒரு ஜோடி கூட பாட வாழ்த்துவோம் அதுவும் ஸ்ரேயா கோசல் கூட சேர்ந்து பாட வாழ்த்துவோம்.

டிஸ்கி: பாட்டினை கேட்டு முதலில் பின்னூட்டம் பாட்டின் நடு வரிகளோடு பின்னூட்டம் இடும் 100 நபர்களுக்கு (எப்பதான் நானும் அம்புட்டு பின்னூட்டம் வாங்குவது?) தலா 5 பவுன் தங்க சங்கிலி தருவதாக சொல்லி இருக்கிறார். பாட்ட கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

51 comments:

said...

பாட்டு சூப்பர்.. எங்க பரிசு.. எங்க் பரிசு..

said...

நூறு மார்க் வாங்கத் தேவையில்ல.. இங்க
நாப்பதுக்கே இருக்கு நூறு தொல்லை..

said...

ரொம்ப நல்லாயிருக்கு?? எங்க பரிசு?எங்க 5 பவுன் செயினு?

said...

கேபிள் அண்ணாச்சி செல்லாது செல்லாது...பாட்டு வரி எங்கே!!!

கார்க்கி முதல் பரிசு உனக்குதான்...
இனி மற்றவர்கள் வேறுவரியைதான் சொல்லனும்..

said...

//ஸ்ரேயா கோசல் கூட சேர்ந்து பாட வாழ்த்துவோம்.//

வாழ்த்திக்கிறேன் :))

said...

பாடுங்க

Anonymous said...

வாழ்த்துகள், அப்துல்லா பாடியதற்கும், நீ பாடாமல் இருப்பதற்கும்.

said...

//ஆமான்னே உங்கள மாதிரி பாடக்கூடாதுன்னு நினைச்சேன், நல்லபடியா வந்துட்டுன்னே என்று சொல்கிறார்.//

LOL :))))

அப்துல்லா கலக்கியிருக்காரு.. அட கலாய்க்கறதுல இல்லப்பா.. பாடறதுல :)))

வாழ்த்துக்கள் அப்துல்லா :)

நன்றி குசும்பனுக்கு.. பாடலை share பண்ணதுக்கு :)

said...
This comment has been removed by the author.
said...

அப்துல்லாஜி..

எனக்கு பாட்டை அனுப்புறேன்னு சொல்லிப்புட்டு எங்கயோ கடல் கடந்து கிடக்குறவனை போன்ல கூப்பிட்டு அவன்கிட்ட 4 நிமிஷ பாட்டைப் போட்டுக் காட்டி அதை மத்தவங்க கேட்டா.. கேக்க வைக்க வைச்சதுக்காக அந்த கடன்காரனுக்கு 5 பவுன்ல தங்கச் சங்கிலின்னு சொல்றீங்களே..

எங்களையெல்லாம் என்ன கேணையன்னு நினைச்சீங்களா..?

நானும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டேன். என் கம்ப்யூட்டர்ல பாட்டு ஓடவே மாட்டேங்குதே..

என்ன செய்ய..?

ஆனாலும் என்ன செய்யறது..? அப்துல்லாஜி உங்க முகத்துக்காக இவன் பட்டைல ஒரு குத்து குத்திட்டேன்..

said...

////கார்க்கி said...

நூறு மார்க் வாங்கத் தேவையில்ல.. இங்க
நாப்பதுக்கே இருக்கு நூறு தொல்லை..//

//குசும்பன் said...

கார்க்கி முதல் பரிசு உனக்குதான்...//

பாட்டை ரெண்டு பேருமே ஒழுங்கா கேட்கலை..

அந்த வரி
"செண்டம் இங்கே வாங்க தேவையில்லை நண்பா நாப்பதுக்கே இங்க நூறு தொல்லை" :P

said...

வலையுலக அறிவுநிதி அண்ணன் அப்துல்லா வாழ்க வாழ்கவே!

பாட்டு பாடுவது என்றால் என்னவென்று ‘வைகாசி பொறந்தாச்சி’ படம் பார்த்து தெரிந்துகொள்ளவும் குசும்பன் :-)

said...

////கார்க்கி said...

நூறு மார்க் வாங்கத் தேவையில்ல.. இங்க
நாப்பதுக்கே இருக்கு நூறு தொல்லை..//

//குசும்பன் said...

கார்க்கி முதல் பரிசு உனக்குதான்...//

பாட்டை ரெண்டு பேருமே ஒழுங்கா கேட்கலை..

அந்த வரி
"செண்டம் இங்கே வாங்க தேவையில்லை நண்பா நாப்பதுக்கே இங்க நூறு தொல்லை" :P

G3ய கன்னாபின்னானு ரிப்பிட்டுறேன்..!

said...

எம்.எம்.அப்துல்லா said...
ரொம்ப நல்லாயிருக்கு?? எங்க பரிசு?எங்க 5 பவுன் செயினு?//

அண்ணே பாட்டு வரி எங்கே?:)

ஆயிலு செயினு வேண்டாமா?

முரளிகண்ணன் ஒத்துக்கிறேன் நீங்க வீரமானவர் என்பதை ஒத்துக்கிறேன்.

வடகரைவேலன் அண்ணாச்சி விரைவில் வரும்:)

G3 சந்தோசமா:)

உண்மைதமிழன் அண்ணாச்சி
@எங்களையெல்லாம் என்ன கேணையன்னு நினைச்சீங்களா..?//

பப்ளிக்கா அவரை பதில் சொல்ல வைக்காதீங்க:))) இப்ப வடை வேண்டுமா வேண்டாமா?

G3 யாரும் கண்டுபிடிக்கிறாங்களான்னு நான் டெஸ்ட் செஞ்சேன்:)))

லக்கி அண்ணாச்சி உதாரணத்துக்கும் கட்சி ஆளா:) அவ்வ்வ்வ்வ் அந்த பாட்டு வேற அண்ணாச்சி:)

said...

வாழ்த்துகள் அப்துல்லா அண்ணா :))))))))

said...

Where can i Download that?

said...

அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள். :<})

said...

oh is it u???????
nice to touch u.......
sing the song.........

said...

// @வடகரை வேலன் said...
வாழ்த்துகள், அப்துல்லா பாடியதற்கும், நீ பாடாமல் இருப்பதற்கும்.//

Double Repeattttteyyyyyyyyyyyyy

said...

உமையிலெயே சூப்ரா பாடிருக்காரு.

படுத்தா படுத்தா தூக்கமில்ல,குடிச்சா எதுவும் ஏரவில்ல.

அருமையான வரிகள்.

said...

நா சும்மா எதோ அப்துல கலாட்டா பண்ணுறாங்க போலன்னு இருந்தேன். உண்மையிலேயே பாடியிருக்காரா அண்ணே? கலக்கல். அப்துல், அந்த அனுபவத்தை ஒரு பதிவா போடலாமே.

அனுஜன்யா

said...

வாவ்.. ரொம்ப அருமையா இருக்கே. அப்துல்லாவுக்கு டப்பிங் யாரு?

நாற்பதும் நமதேவை இப்டியா கிண்டல் பண்றது? :)

said...

நானும் இப்படி நல்லா தான் பாடினேன்! எவனும் சீந்த மாட்டேன்னு சொல்றான். சரி சரி நம்ம அப்து நம்ம ஆயில்யன் மச்சி ஸ்ரேயாகோஷல் கூட ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்!

said...

நன்றி குசும்பனாரே. உங்க தயவுலையவது கேட்க முடிஞ்சதே.

said...

//காப்பி அடிச்சவன் கூட டிகிரி வாங்கிறான் நண்பா!. படிச்ச நாம அரியர் ஆகிறோம்.. .. //
அப்ப நீங்களும் காப்பி அடிங்க!

said...

குரல் இனிமையா இருக்கு! வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள் அண்ணே.

said...

சூப்பர் :) :)

வாழ்த்துக்கள் :) :)

said...

நன்றி குசும்பர்.

சந்தோஷமாயிருக்கு அப்துல்லா அண்ணே,

பால் திரிஞ்சா அதுல மோர் கிடைக்கும்,
நம்ம கால் திரிஞ்சா கெட்ட பேர் கிடைக்கும்.

ஆஹா...

அண்ணன் அடுத்த தடவ அனுஷ்கா கூட சேர்ந்து பாட வாழ்த்துக்கள்.
(CC to Cable Sankar.)

said...

பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்.

said...

அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துகள், உங்களுக்கு நன்றி.

said...

படுத்தா படுத்தா தூக்கமில்ல
குடிச்சா போதை ஏறவில்ல...

said...

வாழ்த்துகள் அப்துல்லா அண்ணே

said...

ஃபோன்னு பில்ல கட்டுவோம்,
கரண்ட் பில்ல கட்டுவோம்
அப்புறமா பொண்ண கட்டுவோம்..

எனக்கு தான் அந்த 5 பவுனு ச்செயினு...

said...

நன்றி டக்ளஸ்! டக்ளஸ் டவுன் லோடு செய்யமுடியவில்லை புதுகை தென்றல் பதிவில் இருந்து லிங் எடுத்துபோட்டுக்கிட்டேன்! பாட்டு வேண்டும் என்றால் ஒரு 1000$ (அமெரிக்க டாலர்) அனுப்பவும்.

நன்றி ஸ்ரீமதி

நன்றி வேந்தன்

நன்றி negamam

நன்றி தராசு

நன்றி கார்த்திக்

நன்றி அனுஜன்யா

நன்றி சஞ்சய் மாமா டப்பிங் நான் என்று சொல்லிதான் உனக்கு தெரியனுமா?

நன்றி அபிஅப்பா

நன்றி மோகன்

நன்றி வித்யா

நன்றி சில் பியர்


நன்றி டாக்டர்

நன்றி அறிவிலி

நன்றி உருப்படாது அணிமா

said...

உங்களுக்கும் அண்ணே அப்துல்லாவுக்கும் பாட்டுக்கு நன்றி.

said...

குசும்பன்,
பாடல் நன்றாக உள்ளது.
அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்
பாடல் கேட்கும் வாய்ப்பளித்த உங்களுக்கும்தான்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

said...

பாட்டு சூப்பர்..:)




வாழ்த்திக்கிறேன்

said...

பாடல் கேட்க ரொம்ப நல்லா இருக்கு.

அப்துல்லாவோட குரல் பார்த்தேன் ரசித்தேன் படத்தில 'கிடைக்கல கிடைக்கல' பாட்டில் வரும் ஸ்ரீநிவாஸ் குரலை போல இருக்கு. (ஸ்ரீனிவாசின் குரல் இந்த பாட்டுல மட்டும் ரொம்ப வித்தியாசமா இருக்கும்).

பாடகராக மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அப்துல்லா.

said...

பால் திரிஞ்சா அதுல தயிர் கிடைக்கும்..!!

நம்ம கால் திரிஞ்சா கெட்ட பேர் கிடைக்கும் !!


பரிசு எனக்கும் தான் :)

said...

//பின் அக்காவீட்டில் அக்கா என் மாப்பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட ஒழுங்கா சாப்பிடுறீயா இல்லை மாமாவை பாட சொல்லவா என்று சொல்லி சொல்லியே சாப்பாடு ஊட்டும்.//

இதுவும் சூப்பர்

பாட்டும் கலக்கல்

said...

அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள் நன்றாகப் பாடியிருக்கிறார். பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.

said...

/
பாட்டினை கேட்டு முதலில் பின்னூட்டம் பாட்டின் நடு வரிகளோடு பின்னூட்டம் இடும் 100 நபர்களுக்கு (எப்பதான் நானும் அம்புட்டு பின்னூட்டம் வாங்குவது?)
/

50 கூட தேறலையே மாம்ஸ்

said...

/
வடகரை வேலன் said...

வாழ்த்துகள், அப்துல்லா பாடியதற்கும், நீ பாடாமல் இருப்பதற்கும்.
/

ரிப்பீட்டு

said...

//ஆமான்னே உங்கள மாதிரி பாடக்கூடாதுன்னு நினைச்சேன், நல்லபடியா வந்துட்டுன்னே என்று சொல்கிறார்./

:))))

said...

வாழ்த்துகள் அப்துல்லா

said...

//"செண்டம் இங்கே வாங்க தேவையில்லை நண்பா நாப்பதுக்கே இங்க நூறு தொல்லை" :P/////

எங்க பரிசு.???

லைனுக்கு தாங்ஸ் கார்க்கிண்ணே.!

said...

அண்ணாச்சி எப்படி இப்படி அருமையா பாடி இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் அதுக்கு சொன்னார் நீங்கதான் என் குருன்னு, கண்ணுல தண்ணிவந்துடுச்சு, அப்படியான்னே என்றேன் ஆமான்னே உங்கள மாதிரி பாடக்கூடாதுன்னு நினைச்சேன், நல்லபடியா வந்துட்டுன்னே என்று சொல்கிறார்.... enna irunthaalum intha innosence ellarkum varathu pa....

said...

வாழ்த்துகள் அப்துல்லா :)

said...

காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா அதில் வாத்தியாரு யாரும் இல்லை நண்பா

காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா அதில் வாத்தியாரு யாரும் இல்லை நண்பா

இரவில முழிச்சி முழிச்சி தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும் ஊமையா முழிக்கிறோம்

காப்பியடிச்சவன் கூட டிகிரி வாங்குறான் நண்பா
படிச்ச நாம அரியர் ஆகுறோம்

சென்டமுக்கே வாழ்க்கை தேவையில்லை நாப்பதுக்கே இங்க நூறு தொல்லை

said...

ரெண்டு மூணு ஆம்பிள்ளை வாய்ஸ் வார மாதிரி இருக்கு./ யார் அதில் அண்ணே?