Wednesday, October 29, 2008

சிக்ஸ் பேக் முயற்சியில் சில ஸ்டார்ஸ்- ஒரு காமெடி!!!

பொல்லாதவனில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச தனுசை பார்த்து விசால், அர்ஜூன், சூர்யா என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் இனி சில சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்

அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...

ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!

இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!

ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?

அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.

ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..

இதோ பாருடா சிக்ஸ் பேக்

1) இது ஸ்கூல் பேக்

2) இது டிராவல் பேக்

3) இது ஹேண்ட் பேக்

4) இது ஷோல்டர் பேக்

5) இது லெதர் பேக்

6) இந்தாடா கடைசியா கேரி பேக்

எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!

மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)

ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ் (2011 முதல்வர் நம்பர் 12).

***********************************************************************
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..

என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...

தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு ”சீன்” வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...

மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...

இது நமீதா ”பேக்”..

இது ஸ்ரேயா ”பேக்”...

இது அசின் ”பேக்”...

இது திரிஷா ”பேக்”...

இது நயன் தாரா ”பேக்”...

இது பிரியாமணி ”பேக்”... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் ”பேக்”கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...

ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.

********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...

டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...

சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...


டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.

அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.

எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.

ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!

Tuesday, October 28, 2008

சும்மா டைம் பாஸ் மச்சி!!!

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்


தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்


இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.


அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...


இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்


இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து


புன்னகைக்கவும் மறந்து போய் இன்று


ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறது



காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்


ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து


அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்


இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!


ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்


அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என


ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என


ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது


காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்


கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி


ஆராயவும் முடியவில்லை அது போல் முடி


எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது




இருப்பை மறந்த தேடலில்


கரைந்து ஓடும் கால வெளியில்


தொலைந்து போவது


என் சுயம் மட்டுமே



வெளுப்பை மறைக்கும் முயற்சியில்


கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்


மற்றவர்களுக்கு தெரிந்து போவது


என் சொட்டை தலையும்


அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!



டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.



*************************************************************************




சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.

தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.

இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.

இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.


கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது


கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.


இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்

***************************************************

முதல் முறையாக சும்மா ஒரு மீள் பதிவு.

Friday, October 24, 2008

தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்!!!

இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்

1) பாலபாரதி-மலர்வனம் லஷ்மி

2) அய்யனார்-கல்பனா

3) குசும்பன் - மஞ்சு

4) மங்களூர் சிவா- பூங்கொடி

5) இம்சை அரசி - மோகன்

அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம் வாங்கோ!

டிஸ்கி : வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)

மற்றும் அனைத்து வலையுலக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். (நன்றி பைத்தியக்காரன்)

துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசு
அனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர் பயிற்சிக்காக வந்தவர் என்று சொல்வார், அங்கு அவர் அண்ணன்,அண்ணி இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. மேலும் அங்கு நடக்கும் சண்டைகள் பற்றி விளக்கமாக சொல்வார். அவர் கண் புருவத்தின் மேல் கருப்பாக காச்சி போய் இருக்கும் என்ன என்றால் துப்பாக்கி டிரிகர் குறிபார்க்கும்
பொழுது அது கண்ணை அழுத்தி அழுத்தி அந்த இடம் காய்சிபோய்விடும் என்றார். இதனால் தான் பலரும் போலீஸில் பிடிபடுவார்கள் என்று சொல்வார்.

துபாயில் இருந்து டிராண்சிட் பிளைட்டில் வந்த பொழுது 4 மணி நேரம் ஸ்ரீலங்காவில் இருக்க நேரிட்டது, தாழ்வாக விமானம் பறந்த பொழுது அந்த நாட்டின் அழகு ஈடு இனை இன்றி இருந்தது. சண்டை மட்டும் இல்லை என்றால் சுற்றுலா தலங்களில் முதன்மையாக வருவாய் ஈட்டும் வாய்பு உள்ள நாடு!

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழம் சீக்கிரம் மலரவேண்டும் ஆனால் அப்படி மலரும் பொழுது தமிழ் மக்கள் அதை கொண்டாட இருக்கவேண்டும்,இப்பொழுது நடக்கும் சண்டைகளை பார்த்தால் குறைந்தது அதிகார பகிர்வு மூலம் அதிகாரத்துக்கு வந்தாவது உயிர்பலியை தடுக்கவேண்டும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

http://www.lankasrinew.com/

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரசியல் அரசியல் அரசியல்!, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கொடுக்கும் குரல்கள் சீசன் பிஸினஸ் போல் சீசன் அரசியல்!

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

சொல்ல வார்தைகள் ஏதும் இல்லை! காலேஜில் படிக்கும் பொழுது பிரபாகரன் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அந்த அளவுக்குஅவரை பிடிக்கும், சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின் பொழுது அவருடைய செக்யூரிட்டி இருவர் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்தார்கள் அது எக்ஸ்ரே கிளாஸ் என்றும் அது போல் இந்திய தலைவர்களுக்கு கூட பாதுக்காப்புகிடையாது என்றும் சொன்னார்கள், அப்பொழுதும் முதன் முதல் வான் வழி தாக்குதல் நடத்திய பொழுதும் இருந்த மகிழ்ச்சி, பெருமை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது, இப்பொழுது எதைப்படித்தாலும் புலிகளுக்கு பின்னடைவு என்றே செய்திகள் வருகிறது.தமிழ்ச்செல்வன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது. பழயபடி புலிகளின் கை விரைவில் ஓங்க வேண்டும்.

மூன்று பேரை அழைக்கவேண்டும் என்பது தூயாவின் கட்டளை!

1) இலங்கை அரசியலை பற்றி மிகுந்த அனுபவம் உடையவரும், பிரபாகரனை நேரில் சந்தித்தவருமான ஆசிப் அண்ணாச்சியின் அப்பா திரு. அப்துல் ஜப்பார் http://smabduljabbar.blogspot.com/ (அண்ணாச்சி அப்பாவுக்கு கேள்வியை அனுப்பி பதில் வாங்கி போடுங்க, அவுங்க அனுபவத்தில் சொல்வது சிறந்ததாக இருக்கும்).

2) பினாத்தல் சுரேஸ் அவர்கள் இவரின் அரசியல் நிலைப்பாடு வித்தியாசமாக இருக்கும்.

3) பாரி அரசு அரசியல் பதிவுகளில் அதிரடி போடும் இவர் கொஞ்சம் நாட்களாக எழுதாமல் இருக்கிறார் அவரும் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

Tuesday, October 21, 2008

டரியல் டக்ளஸ்! + தன்னிலை விளக்கம்

டரியல் டக்ளஸ்: பழய வீட்ட இடிச்சு புதுவீட்டை பழய வீடு மாதிரியே கட்டுறானுங்க கேட்டாக்கா புதுமையா ஏதும் செய்கிறார்களாம்!

டரியல் டக்ளஸ்: போன் செஞ்சா கஸ்டமர் நீங்கதான் எங்கள் தெய்வம் உங்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்கிறது ரெக்கார்ட் செஞ்ச ஒரு பெண் குரல் ஒரு அவசரத்துக்குபோன் செஞ்சப்ப 200 முறையாக!

டரியல் டக்ளஸ்: 300 யூனிட்டுக்கு மேல உபயோகிச்சா 50% அதிகம் வசூலிக்கப்படுமாம், முதலில் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் கொடுத்தா நாங்க 50% அதிகம் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுக்கிறோம்!

*********************************************************************
நண்பர் ஒருவர் நேற்று ஆன் லைனில் வந்தார் அடிக்கடி வராதவர் வந்து இருக்காரே என்று ஒரு ஹாய் சொன்னேன், அவர் உடனே என்னய்யா குசும்பா இன் விசிபிள் மோடில் இருக்க யாருக்கு பயந்துக்கிட்டு என்றார்?

நான் சொன்னேன் பயம் எல்லாம் இல்லை நான் ஆன் லைனில் இருந்தாலும் யாரும் என்னிடம் பேசபோவது இல்லை, ஆன் லைனில் இருந்தும் யாரும் பேசமாட்டேங்கிறாங்களே என்று எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு அதான் இன் விசிபிளில் இருந்தாலாவது அதனால் தான் பேச மாட்டேங்கிறாங்க போல என்று மனச தேத்திப்பேன் என்றேன்.

நண்பன் என்னது யாரும் உன்னிடம் பேசமாட்டேங்கிறாங்களா என்றார்?

இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.

அதன் பிறகு அவரும் பேசவில்லை:((

என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))

***************************************************************
இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன்.

Sunday, October 19, 2008

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.


சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.


ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).


புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.


******************************************************************************

சாதம் வகைகள்


சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).


ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

******************************************************************************

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

**********************************************************************

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!

Tuesday, October 14, 2008

தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!

பரிசல்காரன் தாங்கள் அருமையாக எழுதுவது அனைவரும் அறிந்ததே, ஆனால் தாங்கள் எழுதிய கடந்த சில பதிவுகள் என்னை மட்டும் இன்றி பலரையும் கஷ்டப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!

1) தாங்கள் எழுதும் பதிவுகள் வர வர பெரிதாகிகொண்டே போகிறது.
2) அப்படி எழுதிய பதிவை என்னை படிக்க வெச்சது( என்னை எழுத அழைத்ததால்)
3)படிக்க வெச்சது மட்டும் இன்றி இம்மாம் பெரிய பதிவை என்னை எழுத வெச்சது.

பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.

இனி உங்கள் கேள்விகளுக்கு பதில்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது நினைவு இல்லை வீட்டுக்கு அருகிலேயே சித்தப்பாவின் டூரிங் டாக்கிஸ் இருந்ததால் தினம் படம் தான்.நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை. தியேட்டரில் மூட்டைபூச்சி கடி அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து பொல்லாதவன் படம் ஒரிஜினல்பிரிண்டில் பார்த்தேன். என்ன உணர்ந்தேன் என்றால், வயிறு புல் ஆனது போல் உணர்ந்தேன் மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு- எப்படி தாக்கினுச்சின்னு சொல்றேன். அன்று வழக்கம் போல் காலேஜ்க்கு போய் எல்லா புரொபசரும்ஒழுங்கா வந்து இருக்காங்களான்னு ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம். நான் பேசிக்கா நடக்க அலுப்பு படும் சோம்பேறி,அதனால் ரயிலை விட்டு இறங்கியதும் தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இருக்கும் ராஜராஜன் தியேட்டருக்கு போகலாம் விஜயகாந்து படம் ரிலீஸ் ஆகி இருக்கு போகலாம் என்றேன், நாங்க மொத்தம் 20 பேர் சரி என்று வந்தார்கள் படம் போட்டு அரை மணி நேரம் கூட ஓடவில்லை,அத்தனை பேரும்போட்டு கும்மி எடுத்தானுங்க. அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன். நம் பிளாக்கர் தமிழ் சினிமா அவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்கிறேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன். சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை) பாட்டை பற்றி விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேட்டாலே பேபேன்னு முழிக்கும் ஆள் இப்படி வரிசையா கேட்டா எப்படி?)

நேரடி தொடர்பு இருந்தது, சேது படத்து தயாரிப்பாளர் குடும்ப நண்பர் அதுக்காக படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா? பாலா திரும்ப எங்க ஊருக்கு படம் எடுக்க வந்தால் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? இப்ப தமிழ் மேம்பட பிளாக் எழுதுவது போலவா!!!:)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள். ராகுவில் ஜே.கே ரித்திஸ் இருப்பதால் அடிக்கடி நல்ல காமெடி படம் கிடைக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நோ பிராபளம், யாரடி நீ மோகினி படத்தில் நடிச்ச அந்த குட்டி பொண்ணு போட்டோவை வெச்ச ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம்.தமிழர்களுக்கு என்ன ஆகும் பணம் மிச்சம் ஆகும், பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.

இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்

1)அகில உலக குறும்பட வித்தகரும், குறும்பதிவரும் ஆன -- அண்ணன் உண்மை தமிழன் (உங்க பெயருக்கு பின்னாடி நீங்க போடும் நம்பர் தெரியவில்லை கோச்சுக்காதீங்க)

2) சிங்கப்பூர் தமிழ்குடிதாங்கியும், அநியாயத்துக்கு எதிரா பொங்கும் பொங்கல்பாண்டியும், பதிவர் மாநாடு ஆர்கனைசரும், சிங்கப்பூர் பதிவர் சங்க போர் வாளும் ஆன நண்பர்- ஜோசப் பால்ராஜ்

3) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மது மதி

4) ஷங்கரின் அடுத்தப்படத்துக்கு கேமிரா மேன் ஆக வேலை செய்யப்போகிறவரும், நோய்யினில் விழுந்தவரும், வலையுலக மார்கண்டேயனுமான நந்து தாத்தா of நயன்தாரா

5) ஆராய்சி கட்டுரையும், அறிவியல் சிறுகதையும் எழுதும் இளம் சைன்டிஸ்டும் ,விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன்

Sunday, October 12, 2008

கார்ட்டூன்ஸ் + செய்திகளும் டவுட்டும்









ஆற்காடு. வீராச்சாமி:மின் தட்டுப்பாடால் வரும் தேர்தலில் தி.மு.க தோற்றுவிடுமோ என்று என்னும் பொழுதுஇரவிலும் தூக்கம்வரமாட்டேங்குது!

பொதுசனம்: நாங்ககூட எங்களுக்கு ஒழுங்கா கரண்டு கொடுக்கமுடியாததையும், நாங்கள் படும் கஷ்டத்தையும் நினைச்சுதான் தூங்கமாட்டேங்கிறீங்ளோன்னுநினைச்சோம்!
****************************************************************
எப்பொழுதும் சென்னை வெளியீட்டு உரிமையை நாங்கள் வைத்துக்கொள்வோம், ஆனால் குருவியில் அது பற்றி பேசிய பொழுதுமுடியாது என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர், எங்களை விட அதிக அக்கறை எடுத்து படவிளம்பரங்கள் செய்தார்கள். --குருவி 150வது நாள் (?????)விழாவில் விஜய்.

பொதுசனம்: படம் ரிலீஸ் ஆகி ரிசல்டை கேட்டப்பிறகு நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று பாட்டுபாடி இருப்பீங்களே!!!
****************************************************************
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் எப்படி இருக்கவேண்டும்என்று கிரேக் சேப்பல் சொல்லும் யோசனை மிகவும் உதவியாக இருக்கிறது, அவர் நீண்ட காலம் எங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ரிக்கிபாண்டிங்!

கங்குலி: நீண்ட கால உங்களுக்கு அவர் உதவியாக இருக்கவேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம்! சீரியஸ் முடிஞ்சதும் எனக்கு ஒரு கூட்டாளி கிடைக்கபோறான் டா டோய்!!!

Thursday, October 9, 2008

என்னோட பாஸ்க்கு எல்லோரும் தந்தி அனுப்புங்க!!!

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வலைப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை, புதுசாக என்னை நம்பி Kodek NexPress s3000 என்ற மெசினை வாங்கி இருக்கிறார் என் டைரக்டர். அதன் மதிப்பு சுமார் 4 1/2 கோடி ஒரு 7 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் உள்ள மெசின் மூன்று பகுதியாக வந்தது அதை பிக்ஸ் செய்ய வந்தது ஜெர்மனியில் இருந்து ஒரே ஒரு ஆள். அதை பற்றி தனி பதிவாக எழுதுகிறேன். வேறு இடத்தில் இதை வைக்கலாம் என்ற பொழுது அழுது அடம்புடிச்சு இங்கேதான் வைக்கனும் என்று சொல்லி வாங்கி வைத்த பிறகு வைக்க இடம் இல்லாமல் என் ரூமையும் இடித்தார்கள், வைத்த பிறகு அதுக்கு டிரைனிங் அது இதுன்னு ஆப்பு மேல் ஆப்பு, இதுக்கு பேருதான் சொ.செ.சூ போல! என்னை வேலை மேல் வேலை வாங்கும் என் பாஸ்க்கு என்னை பிரியாக விடும் படியும் கும்மி அடிக்க கை குறைகிறது என்றும் உடன்பிறப்புகளே தந்தி அனுப்புங்க.

இரு நாட்களுக்கு முன்பு காலை 5 மணிக்கு எல்லாம் டாக்ஸி பிடிச்சு ஆபிஸ் வரும் பொழுது டாக்ஸி டிரைவருக்கு பணம் கொடுத்துவிட்டு பர்ஸை உள்ளே வைக்கும் பொழுது அது தவறி டாக்ஸியிலேயே விழுந்துவிட்டது, கவனிக்காமல் பஸ் ஏற போன பிறகுதான் பர்ஸ் இல்லாதது தெரியவந்தது அதுக்குள் டாக்ஸியும் போய் விட்டது.பஸ் ஸ்டாண்டில் இருக்கும் அலுவலகத்தில் போய் சொல்ல போனேன் அங்கு இருந்தவனுங்களுக்கு ஆங்கிலத்தில் டாக்ஸி என்ற வார்த்தை மட்டும் தான் தெரியும் போல இருக்கு, டாக்ஸி???? அங்கே போ என்று டாக்ஸி நிறுத்தத்தை காட்டினார்கள் காலையிலேயே பர்ஸ் காணாமல் போனது ஒரு சோதனை என்றால் இவனுங்களுக்கு புரியவைப்பது பெரும் சோதனை போல் என்று ஒன்னியும் இல்ல என்று சொல்லிவிட்டு சட்டையில் இருந்த சில்லறைய வைத்து ஆபிஸ் வந்து, எல்லா கிரிடிட் கார்டையும் பிளாக் செஞ்சேன்.

அதில் 475 திர்ஹாமும் (சுமார் 6000ரூபாய்), என்னோட கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட், லேபர் கார்ட் என்ற சகல வஸ்துக்களும் இருந்தன, லேபர் கார்ட் திரும்பபுதுசாக வாங்கனும் என்றால் சுமார் 15,000ரூபாய் ஆகும் என்றார்கள் என்ன கொடுமை இது என்று வேலைய பார்க்க ஆரம்பித்தேன்.

மதியம் 12 மணி போல் ஒரு போன் வந்தது எடுத்தவர் ஹிந்தியில் பேசினார் ஒன்னும் புரியாமல் என் டிரைவரிடம் கொடுத்தேன் அவர் பேசிவிட்டு சார் உங்க பர்ஸ் கிடைச்சிடுச்சு, அதை ஒருவர் எடுத்துவெச்சுக்கிட்டு போன் செய்கிறார் என்றார், சரி என்று அவரை பார்க்க போனோம், பேக்கரியில் டெலிவரி வேலை பார்க்கும் ஒரு பஞ்சாபி பர்சை கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், உள்ளே 475 திர்ஹாம் இருக்கு வேறுஎல்லாம் சரியாக இருக்கா பாரு என்றார், பிரித்து கூட பார்க்காமல் எல்லாம் சரியாகதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பரிசல்காரனிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பதிவில் அவர் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லமுடியவில்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை, அவர் போட்டு இருந்த பின்னூட்டம் மூலம் மேன்மக்கள் மேன்மக்களே என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சாரி பரிசல்!

அபி அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனது இங்கு இருக்கும் அனைவரும் அவர் பதிவை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம், ஒவ்வொருவரும் அவருக்கு என்ன ஆச்சு பக்கத்தில்தானே இருக்கீங்க போய் பார்க்கலையா என்று கேட்கும் பொழுது கோவம் தான் வந்தது. ISD போன் செஞ்சு பேச முடிஞ்சவருக்கு ஒரு லோக்கல் மிஸ்டுகால் கொடுக்கமுடியாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை.

இங்கு அமீரகத்தில் தினமலர்,மாலைமலர் போன்ற தளங்களை தடைசெய்துவிட்டார்கள், அதனால் அதில் இருந்து படங்களை எடுத்து கார்ட்டூன் போட முடியவில்லை, யாரும் அனுப்பி வைத்தீர்கள் என்றால் நல்லது.


என்னை காணவில்லை என்று தேடிய கார்க்கிக்கு நன்றி:))