Sunday, July 27, 2008

ரோபோவில் அதிரடி மாற்றம் + புதிய ஸ்டில்ஸ்

ரோபோவில் ஷங்கர் போட்டோ ஷூட்டிங் முடிந்த பிறகு சில அதிரடி மாற்றங்களை எடுத்து இருக்கிறார், போட்டோக்கள் அவ்வளோ திருப்தி அடையாத ஷங்கர் இது பல கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்பதால் ரஜினியை மாற்றிவிட்டு புது ஹீரோவை போட போகிறார்.

இவை எல்லாம் புதிய ரோபோ ஸ்டில்ஸ். கூகிளில் தேடினால் இவைதான் வருகின்றன.






இவர்தான் புதிய ரோபோ ஹீரோ என்று கோடம்பாக்கம் பட்சிகள் சொல்கின்றன. ஜோடியாக நடிக்க ஸ்ரேயா, அசின், நமீதா, ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், போன்றோர்கள் போட்டி போடுகிறார்கள் என்றும் பட்சி சொல்கிறது.

53 comments:

said...

கல்யாணம் ஆனத்துக்கப்புறம் இப்படித்தான் ரோபோவா மாறிட்டேன் சொல்ல வர்றீங்க கரெக்ட்தானே!

:)))))))))

said...

என்ன கொடுமை சரவணா இது???

said...

அப்பூ ஊட்டுக்காரம்மா போடும் சாப்பாடு நல்ல ஊட்டமோ? முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?

கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்

said...

அண்ணே நீ ஒரு பெரிய நடிகன் அண்ணே ;))


வீட்டுல வீட்டு வேலை செய்துக்கிட்டும், பூரி கட்டையில் அடிய வாங்கிட்டும், எத்தனை ஆப்புகளை வாங்கியும் எப்படிண்ணே உன்னால மட்டும் சிரிச்சிக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுது....அவ்வ்வவ்வவ்வ்வ்வ்வ்வ்வ் நீ சிறந்த நடிகன்...;))

said...

//நந்து f/o நிலா said...
அப்பூ ஊட்டுக்காரம்மா போடும் சாப்பாடு நல்ல ஊட்டமோ? முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?//

ஹா ஹா ஹா ஹா

said...

ஆயில்யன் said...
கல்யாணம் ஆனத்துக்கப்புறம் இப்படித்தான் ரோபோவா மாறிட்டேன் சொல்ல வர்றீங்க கரெக்ட்தானே!

:)))))))))///

ஹி ஹி இப்படி எல்லாம் தப்பா பேச கூடாது.


*******************************

ஜெகதீசன் said...
என்ன கொடுமை சரவணா இது???//

இந்த டயலாக் சந்திரமுகியில் வந்துவிட்டதால் வேறு டயலாக் ரோபோவில் எனக்கு வைக்கபடும்

****************************
நந்து f/o நிலா said...
அப்பூ ஊட்டுக்காரம்மா போடும் சாப்பாடு நல்ல ஊட்டமோ? /////

தாங்கள் மங்குனிபாண்டியர் என்பதை மணிக்கொரு முறை நிருபித்து கொண்டே இருக்கிறீர்கள்...

இது கல்யாணத்துக்கு முன்பு எடுத்த போட்டோ:)))

//முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?//

மங்குனி பாண்டியரே கொசுவை உருட்டு கட்டையால் அடிக்க முடியுமா..அதுபோல் என்னை பூரிகட்டையால் எல்லாம் அடிக்க முடியுமா?

//கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்///

இப்பயும் தெரியாம மாட்ட போகும் பொடியனையும், மங்களூர் மைனர் குஞ்சு சிவாவையும் காப்பாத்தும்.

said...

கோபிநாத் said...
அண்ணே நீ ஒரு பெரிய நடிகன் அண்ணே ;))///

நன்றி தம்பி!


///வீட்டுல வீட்டு வேலை செய்துக்கிட்டும், பூரி கட்டையில் அடிய வாங்கிட்டும், எத்தனை ஆப்புகளை வாங்கியும் எப்படிண்ணே உன்னால மட்டும் சிரிச்சிக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுது....அவ்வ்வவ்வவ்வ்வ்வ்வ்வ்வ் நீ சிறந்த நடிகன்...;))//

வீட்டு வேலை செய்வது, அடிவாங்குவது எல்லாம் ஒரு நல்ல புருசனின் கடமை தம்பி. இந்த கடமைய எல்லாம் தவம் போல் செய்யனும்... உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை.ஆகையால் இன்னும் பல வருடம் உனக்கு கல்யாணம் கிடையாது.

**************************

கிரி said...
ஹா ஹா ஹா ஹா//

உங்க புரைபல் போட்டோ சூப்பர்:)))

**********************

said...

ஹீஹீ... புது போட்டோ விளம்பரமா? ;-)

said...

ஓ...ஷங்கர் புதுமுகத்தை போடப் போறாரா... ஆள் ஜெ.கே.ரித்தீஷ்க்கு பயங்கர போட்டியா வருவாரு போல.. :)

said...

மை ஃபிரண்ட் ::. said...
ஹீஹீ... புது போட்டோ விளம்பரமா? ;-)//

கும்மி அடிக்கனும் போல இருந்துச்சு அதான்:))

*******************************
வெண்பூ said...
ஓ...ஷங்கர் புதுமுகத்தை போடப் போறாரா... ஆள் ஜெ.கே.ரித்தீஷ்க்கு பயங்கர போட்டியா வருவாரு போல.. :)///

சாச்சுபுட்டாங்கய்யா சிங்கத்த சாச்சுபுட்டாங்க...அய்யா வெண்பூ உங்களுக்கும் எனக்கும் என்ன விரோதம்? ஏன் இப்படி?
அம்புட்டு கொலவெறியில் இருந்தா சொல்லுங்க உங்க இடத்துக்கு வந்து வாங்கிட்டு போறேன்! அதுக்கா இப்படி எல்லாம் பச்சபுள்ளய போட்டு இந்த அடி அடிக்க கூடாது:(((

said...

// வெண்பூ said...

ஓ...ஷங்கர் புதுமுகத்தை போடப் போறாரா... ஆள் ஜெ.கே.ரித்தீஷ்க்கு பயங்கர போட்டியா வருவாரு போல.. ://

ஹாஹா ஹாஹா

வெண்பூக்கு 1000 ரிப்பீட்டு.

said...

//நந்து f/o நிலா said...
கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்//


ரிப்பீட்டேய்....வேற வழி:(....

said...

//
வெண்பூ said...

ஓ...ஷங்கர் புதுமுகத்தை போடப் போறாரா... ஆள் ஜெ.கே.ரித்தீஷ்க்கு பயங்கர போட்டியா வருவாரு போல.. :)

//
என்னது??? அண்ணனுக்கு ஜெ.கே.ரித்திஸ் போட்டியா??
அவரெல்லாம் குசும்பன் அண்ணன் கால் தூசுக்குக் கூட வரமாட்டார்...
:P

Anonymous said...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு ரோபோ சொல்லற மாதிரி இருக்கு. அது சரி இதுல ஸ்ரேயா கோஷல் பாட்டு ஏதாச்சும் இருக்குமா?

said...

அப்பூ ஊட்டுக்காரம்மா போடும் சாப்பாடு நல்ல ஊட்டமோ? முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?



repeatu. embutu thadava pottukittalum thahum :))))))))))))

said...

//
என்னது??? அண்ணனுக்கு ஜெ.கே.ரித்திஸ் போட்டியா??
அவரெல்லாம் குசும்பன் அண்ணன் கால் தூசுக்குக் கூட வரமாட்டார்...
:P
//
அன்புள்ள குசும்பன் அவர்களுக்கு,
உங்களுக்கு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டால் SG$5000 என் வங்கிக் கணக்குக்கு உடனே அனுப்புவதாக உறுதியளித்திருந்தீர்கள்... பின்னூட்டமிட்டு சில மணிநேரம் ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் பணம் அனுப்பவில்லை.. விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்..

said...

ஷங்கர் என்ன வனவிலங்கு ரோபோ படமா எடுக்கிறார்? மனித ரோபோ படம்னு சொன்னாங்க?

said...

என்ன கொடுமை சரவணன் இது !?!?!
:))

said...

நந்து f/o நிலா said...
ஹாஹா ஹாஹா

வெண்பூக்கு 1000 ரிப்பீட்டு.///

இருங்க மிஸ்டர் நந்து உங்களுக்கு வைக்கிறேன் ரிவீட்டு!!!

********************************

நிஜமா நல்லவன் said...
ரிப்பீட்டேய்....வேற வழி:(....//

:)))))))))))))

******************************
ஜெகதீசன் said...
என்னது??? அண்ணனுக்கு ஜெ.கே.ரித்திஸ் போட்டியா??
அவரெல்லாம் குசும்பன் அண்ணன் கால் தூசுக்குக் கூட வரமாட்டார்...
:P///

ஜெகதீசன் ஐ ஆம் யுவர் பிரண்ட்...ஓக்கே:(((

********************************

சின்ன அம்மிணி said...
அது சரி இதுல ஸ்ரேயா கோஷல் பாட்டு ஏதாச்சும் இருக்குமா?//

நானே பழச எல்லாம் மறக்கனும் என்று ரொம்ப கஷ்டப்பட்டு ஸ்ரேயா கோஷலை மறந்துக்கிட்டு இருக்கும் பொழுது ஏன் ஏன் ஏன்!!!

******************************
புதுகைத் தென்றல் said...
repeatu. embutu thadava pottukittalum thahum :))))))))))))///

நீங்களுமா அவ்வ்வ்

எல்லோருக்கும் குழந்தைய புடிக்கும் என்று சொல்லுவாங்க ஆனா குழந்தைமாதிரி முகம் உடைய போட்டோவ போட்டா ....ச்சே ச்சே என்ன உலகமடா இது!!!
**************************
ஜெகதீசன் said...
அன்புள்ள குசும்பன் அவர்களுக்கு,
உங்களுக்கு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டால் SG$5000 என் வங்கிக் கணக்குக்கு உடனே அனுப்புவதாக உறுதியளித்திருந்தீர்கள்... பின்னூட்டமிட்டு சில மணிநேரம் ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் பணம் அனுப்பவில்லை.. விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்..//

நல்லா எரியிற தீயில பெட்ரோலை ஊத்துகிறீர்ய்யா... நல்லா இரும் ஒய்!!!

said...

கல்யாணம் ஆனத்துக்கப்புறம் இப்படித்தான் ரோபோவா மாறிட்டேன் அப்படின்னு சொல்ல வர்ற கரெக்ட்தானே!

:)))))))))

said...

:-))

said...

/
நந்து f/o நிலா said...

அப்பூ ஊட்டுக்காரம்மா போடும் சாப்பாடு நல்ல ஊட்டமோ? முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?
/

ரிப்பீட்டு

/
கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்
/

ஆஹா இங்கயும் அதே ப்ளட்டா!?!?

said...

/
இப்பயும் தெரியாம மாட்ட போகும் பொடியனையும், மங்களூர் மைனர் குஞ்சு சிவாவையும் காப்பாத்தும்.
/

காப்பாத்துங்க! காப்பாத்துங்க!!
:)))

said...

/
குசும்பன் said...


வீட்டு வேலை செய்வது, அடிவாங்குவது எல்லாம் ஒரு நல்ல புருசனின் கடமை தம்பி. இந்த கடமைய எல்லாம் தவம் போல் செய்யனும்... உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை.
/

அடிவாங்கறதை என்ன கவுரமா சொல்றான்யா

:)))))

said...

/
வெண்பூ said...

ஓ...ஷங்கர் புதுமுகத்தை போடப் போறாரா... ஆள் ஜெ.கே.ரித்தீஷ்க்கு பயங்கர போட்டியா வருவாரு போல.. :)
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்

said...

/
நிஜமா நல்லவன் said...

//நந்து f/o நிலா said...
கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்//


ரிப்பீட்டேய்....வேற வழி:(....
/

யோவ் நல்லவா அங்கயும் அதே ப்ளட்டா!?!?!?

said...

/
எல்லோருக்கும் குழந்தைய புடிக்கும் என்று சொல்லுவாங்க ஆனா குழந்தைமாதிரி முகம் உடைய போட்டோவ போட்டா ....ச்சே ச்சே என்ன உலகமடா இது!!!
/

குழந்தை முகம் உடைய போட்டோவா அது எங்கயும் சீக்ரெட்டா போட்டிருக்கியா!?!?!?

:))))))))))))

said...

முரளிகண்ணன் said...
ஷங்கர் என்ன வனவிலங்கு ரோபோ படமா எடுக்கிறார்? மனித ரோபோ படம்னு சொன்னாங்க?///

இன்னும் கொஞ்சம்தான் பாக்கி டேமேஜ் செய்ய..என்ன விலங்கு என்று சொல்லி அதையும் டேமேஜ் செஞ்சுடுங்க.

**************************
கார்த்திக் :-)) ஏன் இம்புட்டு சிரிப்பு
***************************
யோவ் மங்களூர் மைனர் குஞ்சு
ரொம்ப அதிகமாக ரிப்பீட்டேய் போடாதய்யா...இன்னும் வெகு தூரம் இல்லை. சரியா

உனக்கு ஏன் இந்த பெயரை வைத்து இருக்கிறேன் தெரியும்ல்ல....
விவேக் சுட்ட இடத்திலேயே சுடதான்.
ஜாக்கிரதை!!!

***************************

said...

மங்களூர் சிவா said...
குழந்தை முகம் உடைய போட்டோவா அது எங்கயும் சீக்ரெட்டா போட்டிருக்கியா!?!?!?

:))))))))))))//

ஆங்மங்களூர் மைனர் குஞ்சு இப்ப எப்படி ஒய் உங்களுக்கு கண்ணுக்கு தெரியும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து தெரியும்.

Anonymous said...

கடைசி போட்டோவுல இருக்குறவர் நம்ம ரித்தீஷ் மாதிரியே இருக்காரு.

said...

கடைசி போட்டோ ரஜினி மாதிரியே இருக்கே...

கல்யாணத்துக்குப் பிறகு அநியாயமா ஊதிட்டீங்க குசும்பு.

said...

ஏற்கனவே கோட்டு போட்டு எடுத்த படத்தை பார்த்து காணாமப் போன ஆட்களெல்லாம் கண்டுபிடிக்க முடியலை... இதில அடுத்த ரவுண்டா... தாங்காதுப்ப்பா.... :))

said...

என்னபண்ண எப்பவும் தன் படத்தையே தானே போட்டு கலாய்ங்க வாங்கன்னு அழைப்பு வச்சாப்பலயே எல்லாருக்கும் தெரியுது..எல்லாரும் வந்துட்டாங்க. வெண்பூ நிஜம்மாவே படத்துல இருப்பவர் யாருன்னு தெரியாம சொல்லிட்டாரா...
ஜேகே ரித்திஷே முடியலன்ன்னு எல்லாரும் புலம்பும் போது அவரே குசும்பன் கால்தூசுக்கும் சமம் இல்லன்னா < > இதுல எது போடனும்.. :)

said...

///ஆசிப் மீரான் said...

கடைசி போட்டோவுல இருக்குறவர் நம்ம ரித்தீஷ் மாதிரியே இருக்காரு.///
அண்ணாச்சி! உங்க கமெண்டைப் படிச்சிட்டு எழுத வார்த்தை வரலை... சிறந்த ஆராய்ச்சி முடிவு.

said...

ithu ellam konjam overu appuram nan aluthuduven

said...

எங்க தல ஜே.கே.ரித்தீஷுக்கு சாம் ஆண்டர்சன் மட்டும்தான் போட்டின்னு நினைச்சேன். இப்ப இந்த புதுமுகம் ஒரு போட்டியா?

said...

ரோபோ காந்த் வாழ்க!வாழ்க.

வீட்டுல தஞ்சாவூரு பொம்மைங்கிறதத்தான் பெருமையா ரோபோன்னு சொல்லிக்கிறாரு:)

said...

பரமண்டலத்தில் இருக்கும் எல்லாப் பிதாக்களும் இந்த குசும்பரை மன்னித்தருள்வீராக..


ஓமென்

said...

//ஆசிப் மீரான் said...
கடைசி போட்டோவுல இருக்குறவர் நம்ம ரித்தீஷ் மாதிரியே இருக்காரு.//

இப்படி என்னை அசிங்கமாக திட்டியதால் உங்களுக்கு 1000Dhs அபராதம் விதிக்கப்படுகிறது. :)))

*******************************
ஆடுமாடு said...
கடைசி போட்டோ ரஜினி மாதிரியே இருக்கே...///

இது என்ன பாராட்டா? இல்லை ஆப்பா
எல்லாரும் ஏகத்துக்கு ரித்தீஸ் பேரை சொன்னதில் பயத்தில் எதுவும் புரியமாட்டேங்குது.

//கல்யாணத்துக்குப் பிறகு அநியாயமா ஊதிட்டீங்க குசும்பு.//

இல்லீங்க கல்யாணத்துக்கு முன்பு சரி பின்பும் சரி ஊதும் பழக்கம் இல்லீங்க:)))))))

*****************************
தமிழ் பிரியன் said...
ஏற்கனவே கோட்டு போட்டு எடுத்த படத்தை பார்த்து காணாமப் போன ஆட்களெல்லாம் கண்டுபிடிக்க முடியலை... ////

என்ன கொடுமைங்க இது காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க தான் போட்டோ போடுவாங்க. ஆனா போட்டோ போட்டதால் பலர் காணுமா?
யாருங்க அதுக்கு காரணம்.

**************************
முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்னபண்ண எப்பவும் தன் படத்தையே தானே போட்டு கலாய்ங்க வாங்கன்னு அழைப்பு வச்சாப்பலயே எல்லாருக்கும் தெரியுது..///

அதுக்குதான் போட்டதுக்கா சும்மா கும்மி அடிப்பாங்க என்பதற்காக போட்டது ஆனா இப்படி ரித்தீஸ் மாதிரி என்று சொல்லி கொலை செய்வாங்க என்று நினைச்சுகூட பார்க்கவில்லை:(((

******************************
இரவு கவி said...
ithu ellam konjam overu appuram nan aluthuduven///

என்னது இன்னும் அழுவ வில்லையா? அப்ப இன்னொரு போஸ்ட் போட்டுட வேண்டியதுதான்.

*******************************
rapp said...
எங்க தல ஜே.கே.ரித்தீஷுக்கு சாம் ஆண்டர்சன் மட்டும்தான் போட்டின்னு நினைச்சேன். இப்ப இந்த புதுமுகம் ஒரு போட்டியா?///

அவ்வ்வ் அவர் எங்கே நான் எங்கே அவரு மலை நான் மகடு.என்னது ரித்தீஸ் உங்க தலைவரா...ஹலோ மக்களே நாம தேடிக்கிட்டு இருந்த ஆள் சிக்கியாச்சு!!!

*******************************

ராஜ நடராஜன் said...
ரோபோ காந்த் வாழ்க!வாழ்க.

வீட்டுல தஞ்சாவூரு பொம்மைங்கிறதத்தான் பெருமையா ரோபோன்னு சொல்லிக்கிறாரு:)///

உங்க பங்குக்கா...சரி நல்லா இருங்க.

said...

//கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்//
maams sonna apeale kedaiyathu..

said...

என்னது உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா, அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கறோம். இருங்க இருங்க, நாயகன் ரிலீஸ் ஆகட்டும், தியேட்டர் சீட்ல கட்டிவெச்சி கண்ணுல க்லிப்ப மாட்டி திறந்து வெச்சி முழுப் படத்தையும் பாக்க வெக்கறோம்.

Anonymous said...

ஆமாம் உங்களுக்கு என்ன குறைச்சல்.

நீங்க நடிங்க தலைவா........

"வருங்கால சூப்பர் ஸ்டார் குசும்பன் மாமா" ன்னு Mount road ல பேனர் வெச்சிடலாம்.

Kathir.

said...

என்னது ரோபோவில கலாபவன் மணி ஹீரோவா?

said...

/வீட்டு வேலை செய்வது, அடிவாங்குவது எல்லாம் ஒரு நல்ல புருசனின் கடமை தம்பி. இந்த கடமைய எல்லாம் தவம் போல் செய்யனும்... //

ஹா..ஹா..ஹா...

//உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை//
ஹா..ஹா..ஹா...

இதையெல்லாம் கேட்டுட்டுத் தங்கமணி என்ன சொன்னாங்க?

said...

அடப்பாவி குசும்பா, இது நண்பணுக்கு செய்த நம்பிக்கை துரோகம் ...

ஷங்கருக்கு ரோபோல‌ ரஜினியின் நடிப்பு பிடிக்காமல் போனதால என்னைய கதாநாயகனாக்க முயற்சி செஞ்சுகிட்டு இருக்காரு குசும்பா, நான் நடிக்கிறதா வேணாமான்னு இன்னும் முடிவு செய்யல. ஷங்கர நம்பி நடிக்க போன பாய்ஸ் மாதிரி எனக்கு நேர்ந்துட கூடாதுன்னு இன்னும் யோசிச்சுகிட்டு இருக்கேன்னு உங்கிட்ட அன்னைக்கு ஜிடாக்ல சொன்னத இப்டி உல்டா அடிச்சி ஒரு மொக்கை பதிவ போட்டியே , இது நியாயமா?

ரஜினிய ரோபோல இருந்து ஷங்கர் தூக்கப்போற விசயம் வெளில தெரியவராதுனு நீ எனக்கு செஞ்ச சத்தியத்த வேற நீ மீறிட்ட.

said...

சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிற மாதிரி, இது என்ன சொந்த போட்டோவ போட்டு குத்து வாங்குறது ? இவ்ளோ பேரு அடிச்சும் குசும்பன் சமாளிக்கிறான். இவன் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன் பா.

said...

Jeeves said...
பரமண்டலத்தில் இருக்கும் எல்லாப் பிதாக்களும் இந்த குசும்பரை மன்னித்தருள்வீராக..///

மிக்க நன்றி எல்லா பாவமும் போச்சு சோ புதுசா நாளைக்கு ஒரு பாவம் செஞ்சுடலாம்


//ஓமென்// இங்க அருகில்தான் அந்த நாடு இருக்கிறது.

said...

ILA said...
//கல்யானம் ஆகிட்டாலே நாமல்லாம் ரோபோதான். இப்பத்தான் தெரியுதாக்கும்//
maams sonna apeale kedaiyathu..//

ரைட்டு அப்ப சரியாகதான் இருக்கும்

****************************
rapp said...
என்னது உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா, அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கறோம்.///

கண்டிக்கிறதோட நிப்பாட்டிக்குவோம் அவரு போஸ்டர் போட்டு அதிரடியாய் உங்கள் ஊரில் தோன்றுகிறார் என்று மட்டும் போட்டு போஸ்டர் ஒட்டிவிடாதீர்கள்:(((


///இருங்க இருங்க, நாயகன் ரிலீஸ் ஆகட்டும், தியேட்டர் சீட்ல கட்டிவெச்சி கண்ணுல க்லிப்ப மாட்டி திறந்து வெச்சி முழுப் படத்தையும் பாக்க வெக்கறோம்.///

அவ்வ்வ் அம்புட்டு நல்லவங்களா நீங்க!!!

said...

Anonymous said...
ஆமாம் உங்களுக்கு என்ன குறைச்சல்.

நீங்க நடிங்க தலைவா........

"வருங்கால சூப்பர் ஸ்டார் குசும்பன் மாமா" ன்னு Mount road ல பேனர் வெச்சிடலாம்.

Kathir.///

வருங்காலத்துக்கு பிறகு இருக்கு இரு வார்தைகளை மட்டும் விட்டு விட்டு பேனர் வெச்சுட போறாங்க பார்த்து பதுவிசா ஜாக்கிரதையா ஓக்கேவா!

said...

NewBee NewBee said...
இதையெல்லாம் கேட்டுட்டுத் தங்கமணி என்ன சொன்னாங்க?///

ஆஹா என்ன ராசா உலகம் புரியாத ஆளா இருக்கீங்க அவுங்க கண்ணில் இதுபட்டா தவம் இருக்கும் நேரத்தை அதிகபடுத்திட்டா என்னா செய்வது?

அதான் பிளாக் பக்கம் எல்லாம் எட்டி கூட பார்க்கமாட்டார்கள்.

said...

ஜோசப் பால்ராஜ் said...
ஒரு மொக்கை பதிவ போட்டியே , இது நியாயமா? //

இந்த பதிவில் என் ஒரே ஒரு போட்டோ தான் போட்டு இருக்கிறேன் என்ற கடுப்பில்தானே மொக்கை என்று திட்டுகிறீர்கள். அடுத்த பதிவில் நிறைய போட்டோ போட்டு விடுகிறேன்.

******************************

ஜோசப் பால்ராஜ் said...
இவ்ளோ பேரு அடிச்சும் குசும்பன் சமாளிக்கிறான். இவன் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன் பா.///

அழுவுறது ஈசி, ஆனா வலிக்காதது மாதிரி நடிப்பது கஷ்டம்.

said...

http://ganessh.blogspot.com/2008/08/blog-post_09.html


ச்சும்மா இன்ஃபர்மேஷன் தான் தல....


:)

said...

/முகமெல்லாம் உப்பிப் போய் இருக்கு. இல்ல பூரிகட்டை உபயமா?
//

இதான் அனுபவஸ்தன் பேச்சுங்குறது!