தமிழ்மணத்தில் புதிதாக எழுத வந்து இருப்பவர்களுக்குக்கும் , எழுத வரலாமா வர வேண்டாம என்றவர்களுக்கும் இந்த பதிவு.
தமிழ்மணத்தின் நீண்ட நாள் வாசகராக இருப்பீர்களேயானால் உங்களுக்கு இப்பொழுது நடந்து வரும் சண்டைகள், கருத்து மோதல்கள், அறிக்கை போர்கள் உங்களுக்கு புரியும்.
சில வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் சாதி மோதல் நடந்தது, பின் கொஞ்ச நாட்கள் மத சண்டை, பின் தனி நபர் தாக்குதல், பின் குழு சண்டை, என்று தொடர்ந்து சண்டைகள் இருந்துதான் வருகிறது.
இந்த சண்டைகள் சீசன் பிசினஸ் போல ஒரு சில காலம் தொடர்ந்து வந்து பின் மறைந்து விடும். சிலருக்கு இது ”சீன்” பிசினசாக இருப்பதால் இது போல் இன்னும் பல சண்டைகள் வரும்.
இதோ இப்பொழுது தமிழ்மணம் அதிகார மையமாக செயல் படுகிறதா என்று சுந்தர் எழுதிய காமகதைகளை தூக்கியதால் வந்த பிரச்சினை, செல்வராஜ் அவர்கள் எழுதிய பதிவுக்கு பின் சூடு குறைய தொடங்கி விட்டது என்று நிம்மதிபெரு மூச்சு விட்டீர்கள் என்றால் நீங்கள் இன்னும் கற்றுக்க வேண்டியது நிறைய இருக்கு. அனைந்த நெருப்பையும் ஊதி ஊதி நெருப்பாக்கும் பலர் இங்கு இருக்கிறார்கள்.
நமக்கு வரும் பத்து பின்னூட்டத்துக்கே பதில் சொல்ல நேரம் இல்லாமல் நாம் அடுத்த வேலையை பார்க்க போகும் பொழுது நிர்வாகிகளின் நிலையை நாம் உணர்ந்தோம் என்றால் பிரச்சினை இல்லை.
இதோ செல்வராஜ் பதிவில்
கருத்து மோதலில் ஈடுபட்ட நண்பர்கள் சுந்தர், அய்யனார், வளர் அவர்களின் பின்னூட்டம்
//7வளர்மதி
நன்றி திரு. செல்வராஜ்,
உங்களது விளக்கம் முதல் வாசிப்பில் திருப்தி தருவதாகவே இருக்கிறது.
சுந்தரின் கதைகளுக்கு மூன்று ஸ்டார்கள் வைத்தது triple x என்று பட்டம் கட்டுவதுபோல இருந்ததாலேயே நான் உடனடியாக எதிர்வினையாற்றுவது என்று முடிவு செய்து எழுதினேன்.
மற்றது உங்களதும் பிற நிர்வாகத்தினரது சூழல்கள், வேலைப்பளுக்கள் அனைத்தும் புரிந்துகொள்ளக் கூடியதே. எனினும் இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால், நீங்களே குறிப்பிட்டதுபோல குட்டையைக் குழப்புவர்களது அவதூறுகளைத் தவிர்த்திருக்கலாம்.
என் போன்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்ததையும் தடுத்திருக்கலாம்.
மிகுந்த நன்றிகள்.
அன்புடன்வளர் …//
//அய்யனார்
/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..//
//ஜ்யோவ்ராம் சுந்தர்
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே… உங்கள் உணர்வை (போலவே சுந்தரவடிவேலின் பின்னூட்டத்தையும்).
நான் தமிழ்மணம் குறித்தோ அல்லது அதன் நிர்வாகிகள் குறிந்தோ ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்… சில சமயம் கோபத்தில் / ஈகோவில் இம்மாதிரித் தவறுகள் நிகழ்வது சகஜம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்தானே… மற்றபடி, யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கமில்லை.
என் பதிவை மொத்தமாக நீக்கியிருந்தாலும் இத்தனை மாதங்கள் என் இடுகைகளைத் திரட்டியதற்கு தமிழ்மணத்திற்கு நான் நன்றியுடையவனாகத்தான் இருப்பேன்.//
இதோ நாளை முதல் இவர்கள் அனைவரும் சகஜமாக எழுத ஆரம்பித்து விடுவார்கள், படித்து கொண்டு இருந்த நீங்களும் நானும் தான் ஏன் இப்படி அடிச்சிக்கிட்டாங்க என்று மண்டை குழம்பி போவோம்.
தமிழ்மண சண்டைகள் முடிந்த பின் தான் பதிவு எழுத வருவேன் என்று நீங்கள் இருந்தால் எப்ப அலை ஓய்கிறது எப்ப மீன் பிடிக்கிறது.
எழுத வாங்க அதுக்கு முன்
நான் இங்கு சாதி, மதம், தனி நபர் தாக்குதலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியோடு வாங்க.
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
அதென்ன லேபிளில் கருத்து கந்தசாமி, கோவி.கண்ணன்? ரெண்டுமே ஒருத்தரோட பேரா? ரெண்டு பேருன்னா அவங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?
By the time Kuselan approaches the theatres, all these issues would recede and focus would shift to Kuselan.
//குசும்பன் said...
உதயகுமார் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு வம்பில் மாட்டிவிட கூடாது:)))
***************************
நன்றி அனானி
/
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
/
ஜூப்பரு
புதிய கருத்து கந்தசாமி வாழ்க!!!!!!!
/மங்களூர் சிவா said...
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
ஜூப்பரு//
டபுள் ரிப்பீட்டேய்....
// மங்களூர் சிவா said...
/
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
/
ஜூப்பரு
//
டபுள் ரிப்பீட்டு...
:)
பதிவைவிட லேபிள் நன்றாக இருந்தது :)
ஏன்யா யாராவது சண்டை போட்டா கடைசி வரைக்கும் அடிச்சுகிட்டே இருக்கணுமா?? :)
சண்டையில் தலையிட்டு கும்மப்பட்ட அனுபவம் தான் கும்மிப்பதிவருக்கு இருக்கு.. :)
//Labels: கருத்து கந்தசாமி, கோவி.கண்ணன் //
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... லேபிளுக்கு என்ன பொருள் ?
விளக்கம் கொடுக்கவில்லை என்றால்
கும்மி பின்னூட்ட வெளிநடப்பு செய்துவிடுவேன்.
குசும்பா,
பதிவு சூப்பர் :)
//இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?//
இது நச்!
//தூக்கியதால் வந்த பிரச்சினை,//
காமம் காமம் கர்மம்
நன்றி மங்களூர் சிவா
*************************
ஜெகதீசன் said...
புதிய கருத்து கந்தசாமி வாழ்க!!!!!!!//
எங்கிருந்தாலும் வாழ்க அப்படின்னு சொல்லுங்க:))
*****************************
நன்றி Syam
****************************
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பதிவைவிட லேபிள் நன்றாக இருந்தது :)//
எனக்கு அடி வாங்கி கொடுக்காமல் போக மாட்டீங்க போல இருக்கு:))
///ஏன்யா யாராவது சண்டை போட்டா கடைசி வரைக்கும் அடிச்சுகிட்டே இருக்கணுமா?? :)///
அவ்வ்வ் நான் எங்கங்க அப்படி சொல்லி இருக்கேன், ஒரு மடலுக்கு இரு மடல் எழுதி விளக்கம் கேட்டு பின் பதில் இல்லை என்றால் சண்டையை ஆரம்பிக்கலாமே!!! அது தமிழ்மணத்துக்கும், தனிநபருக்கும் பொருந்தும்.
*************************
கயல்விழி முத்துலெட்சுமி said...
சண்டையில் தலையிட்டு கும்மப்பட்ட அனுபவம் தான் கும்மிப்பதிவருக்கு இருக்கு.. :)//
இரும்படிக்கும் இடத்துக்கு ஈ ஏன் போகனும்?
******************************
///கயல்விழி முத்துலெட்சுமி said...
சண்டையில் தலையிட்டு கும்மப்பட்ட அனுபவம் தான் கும்மிப்பதிவருக்கு இருக்கு.. :)
July 16, 2008 10:24 PM
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
கும்மப் பட்டு இல்லைங்க அதுக்கும் மேல
கோவி.கண்ணன் said...
//Labels: கருத்து கந்தசாமி, கோவி.கண்ணன் //
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... லேபிளுக்கு என்ன பொருள் ?
விளக்கம் கொடுக்கவில்லை என்றால்
கும்மி பின்னூட்ட வெளிநடப்பு செய்துவிடுவேன்.///
சூரியனுக்கே டார்ச் லைட் அடிச்சா ஊர் மக்கள் என்னை என்னா சொல்லும்?
//இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
//
நச்ன்னு இருக்கு நண்பா!
//இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?//
குசும்பே! உன்னைச் சரண் அடைந்தேன்:)
//அய்யனார்
/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..//
//
அய்யனார் எழுதியதில் இது ஒன்னு தான் புரியுது :)
Mr.x
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
////
குட் கொஸ்டின் அய்யனார் (பதில் சொல்வார் )போன்றவர்கள் யோசிக்கவேண்டி விசயம்..:)
வெடிகுண்டு முருகேஷன்
குசும்பரே, பதிவு அருமை..
//இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா//
இது சரியான கேள்வி.
சூரியனுக்கே டார்ச் லைட் அடிச்சா ஊர் மக்கள் என்னை என்னா சொல்லும்?
///
சூரியனுக்கே (இரவில்?) டார்ச் அடிச்சவண்டானு சொல்லும் :)
வெடிகுண்டு முருகேஷன்
அதென்ன லேபிளில் கருத்து கந்தசாமி, கோவி.கண்ணன்? ரெண்டுமே ஒருத்தரோட பேரா? ரெண்டு பேருன்னா அவங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?
//
சாட்டுல கோவி வாயா புடிங்கி போட்ட பதிவுனு அர்த்தம் ஹ ஹா ஹாஹா
வெடிகுண்டு முருகேஷன்
குசும்பன் said...
//குசும்பன் said...
உதயகுமார் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு வம்பில் மாட்டிவிட கூடாது:)))
//
யாரு..?
ஒன்னைய..?
வம்பில..?
ரைட்டுல கைய்ய காட்டி லெப்டுலையும் கைய்ய காட்டி குப்புற விழுறவனா நீ ?
வெடிகுண்டு முருகேஷன்
//டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?//
குசும்பன் ... உங்க செட்டுல யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லையே ... ஒரு பொழுதுபோக்குக்கு உங்களப் போன்ற ஆட்களும் பதிவுகளும் தேவைதானே :)
//என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?//
ஆரம்பிச்சு வச்சிடட்டுமா ;)
தலைப்பு இதோ: “சில பல வருடங்களாக அய்யனாரைத் தொடர்ந்து கும்மும் குசும்பனை கும்மப்போவது யார்?”

நேக்கு இப்போதான் அமெரிக்கல இருந்து சி.ஐ.ஏ ல வேலபார்க்குறவன் சொன்னான், குசும்பன் கூட தமிழ்மண நிர்வாகிகள்ல ஒருத்தராம். ஆனா, அவா அதை வெளில காட்டிக்காம இப்படி பதிவு எல்லாம் போட்றா.
நானும் , சந்த்ரலேகாவும் இதை எதிர்த்து பதிவு போடுவோம்.
சுப்ரமண்ய சுவாமி.
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஏன்யா யாராவது சண்டை போட்டா கடைசி வரைக்கும் அடிச்சுகிட்டே இருக்கணுமா?? :)
//
நீங்க சேர்ந்துட்டா நாங்க சும்மாயிக்க முடியுமா ?
சண்டனு வந்த்துட்டா சமாதனத்துக்கு ச்சான்சே கொடுக்க பிடாது
வெடிகுண்டு முருகேஷன்
சிறந்த முதல் பத்து கும்மிகளுக்கு தலா ரூ. 100 பரிசு.
தொகையை நேரிலோ காசோலையாகவோ/பணமாகவோ/அஞ்சல் மூலமாகவோ வழங்குபவர் அய்யனார்.
பரிசுப் பணம் வேண்டாம் என்பவர்களுக்கு அய்யனாரின் கவிதை ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
ஆயில்யன் said...
நச்ன்னு இருக்கு நண்பா!//
நண்பா அதுக்கு வளர் வெச்சுட்டாருய்யா ஆப்பு:))
கீழே பார்க்கவும்...அவ் நண்பா பின்னூட்டத்துக்கு கீழே பார்க்கவும் நண்பா
******************************
ராஜ நடராஜன் said...
குசும்பே! உன்னைச் சரண் அடைந்தேன்:)///
அவ்வ் மிக்க நன்றி
******************************
பைத்தியக்காரன் said...
குசும்பா,
பதிவு சூப்பர் :)
இது நச்!///
நன்றி நன்றி
*******************************
Anonymous said...
சாட்டுல கோவி வாயா புடிங்கி போட்ட பதிவுனு அர்த்தம் ஹ ஹா ஹாஹா
வெடிகுண்டு முருகேஷன்//
அய்யா வெடிகுண்டு முருகேஷன் உங்க பெயரி ஒரு சிறு மாற்றம் செஞ்சுக்குங்க
அனுகுண்டு முருகேசன் என்று
ஷனா வட மொழி எழுத்து:))
நல்லா இருங்கய்யா நல்லா இருங்க:))
**************************
Anonymous said...
ரைட்டுல கைய்ய காட்டி லெப்டுலையும் கைய்ய காட்டி குப்புற விழுறவனா நீ ?
வெடிகுண்டு முருகேஷன்///
எப்பொழுதும் விழுந்தே கிடப்பவன்
***************************
ஜீவன் said...
குசும்பரே, பதிவு அருமை..
நன்றி ஜீவன்
*****************************
வளர்மதி said...
குசும்பன் ... உங்க செட்டுல யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லையே ... ஒரு பொழுதுபோக்குக்கு உங்களப் போன்ற ஆட்களும் பதிவுகளும் தேவைதானே :)///
இது பாராட்டா ஆப்பான்னு ஒன்னுமே புரியவில்லையே, இருந்தாலும் உங்கள் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
//என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?//
ஆரம்பிச்சு வச்சிடட்டுமா ;)
தலைப்பு இதோ: “சில பல வருடங்களாக அய்யனாரைத் தொடர்ந்து கும்மும் குசும்பனை கும்மப்போவது யார்?”////
அவ்வ்வ்வ்வ்வ் கும்ம வேண்டாம் அய்யனார் ஒரு 10 நிமிடம் பினா வானாவை பத்தி பேசினா பேதும்.
இதுக்கு மேல் பெரிய தண்டனை எனக்கு யார் கொடுக்க முடியும்.
ஜோசப் பால்ராஜ் said...
நேக்கு இப்போதான் அமெரிக்கல இருந்து சி.ஐ.ஏ ல வேலபார்க்குறவன் சொன்னான், குசும்பன் கூட தமிழ்மண நிர்வாகிகள்ல ஒருத்தராம். ///
எல்லாரும் வாயலா சிரிக்க மாட்டாங்க இதை கேட்டா!!!
///ஆனா, அவா அதை வெளில காட்டிக்காம இப்படி பதிவு எல்லாம் போட்றா.
நானும் , சந்த்ரலேகாவும் இதை எதிர்த்து பதிவு போடுவோம்.
சுப்ரமண்ய சுவாமி.///
நல்லா இரு சாமி நல்லா இரு அவுங்க எல்லாம் ரிசைன் செஞ்சுட்டு போகனும் அதானே உங்க குறிக்கோள்:)))
*******************************
வளர்மதி said...
சிறந்த முதல் பத்து கும்மிகளுக்கு தலா ரூ. 100 பரிசு.//
இது ரொம்ப அழகு
///தொகையை நேரிலோ காசோலையாகவோ/பணமாகவோ/அஞ்சல் மூலமாகவோ வழங்குபவர் அய்யனார்.///
கொஞ்சம் டேஞ்சர்
///பரிசுப் பணம் வேண்டாம் என்பவர்களுக்கு அய்யனாரின் கவிதை ஒன்று இலவசமாக வழங்கப்படும்.///
பாயாசம் வேணுமா, இல்ல பாய்சன் வேண்டுமா என்றால் யாராவது பாய்சன் கேட்பார்களா? (தற்கொலை செய்ய போகிறவர்களை தவிர)
நான் இங்கு சாதி, மதம், தனி நபர் தாக்குதலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியோடு வாங்க.
நானும் இதை வழி மொழிகிறேன்.
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
குசும்பன் அண்ணாச்சி, மூத்த வலைப் பதிவர் ஆயிட்டீங்க.
//டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா? //
அப்டி போடு மாமு.. :)
//கயல்விழி முத்துலெட்சுமி said...
சண்டையில் தலையிட்டு கும்மப்பட்ட அனுபவம் தான் கும்மிப்பதிவருக்கு இருக்கு.. :)//
அக்கா.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க.. இதுக்கு சமீபத்திய உதாரணம் அடியேன்.. :)
//அய்யனார் எழுதியதில் இது ஒன்னு தான் புரியுது :)
Mr.x//
இந்த மிஸ்டர் எக்ஸ் குசும்பன் தான் என்பதற்கு என்னிடம் நம்பத் தகுந்த ஆதாரம் இருக்கு.. அய்யனார் கவனிக்க. :)
டிஸ்கி சூப்பர்:)
//
எழுத வாங்க அதுக்கு முன்
நான் இங்கு சாதி, மதம், தனி நபர் தாக்குதலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியோடு வாங்க.//
நான் இங்க வரும்போது அதே உறுதியோடதாண்ணே வந்தேன். கடைசிவரை அப்படித்தான் இருப்பேன்.
கும்மி பதிவர்கள் குறித்த வாக்கியம் நூற்றில் ஒன்று ... அருமை :)
\\\டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா? \\\
அண்ணே...நீ வாழ்க...கும்மி வாழ்க ;)))
வெங்கட்ராமன் said...
குசும்பன் அண்ணாச்சி, மூத்த வலைப் பதிவர் ஆயிட்டீங்க///
அவ்வ்வ்வ்வ்வ் ஏன் இம்புட்டு கொல வெறி:))
*****************************
நன்றி சஞ்சய்
//அக்கா.. ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க.. இதுக்கு சமீபத்திய உதாரணம் அடியேன்.. :)//
உங்கள யாராவது கும்மினாங்களா மாம்ஸ்?:((
***************************
SanJai said...
Mr.x//
இந்த மிஸ்டர் எக்ஸ் குசும்பன் தான் என்பதற்கு என்னிடம் நம்பத் தகுந்த ஆதாரம் இருக்கு.. அய்யனார் கவனிக்க. :)///
மாம்ஸ் ஏதோ முறை செய்யுற மாதிரி இருக்கு, பதிலுக்கு பதிலா?:))
***************************
நிஜமா நல்லவன் said...
டிஸ்கி சூப்பர்:)//
நன்றி நிஜமா நல்லவன்
**************************
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
நான் இங்க வரும்போது அதே உறுதியோடதாண்ணே வந்தேன். கடைசிவரை அப்படித்தான் இருப்பேன்.//
நன்றி அப்துல்லா உங்களு உறுதிக்கு.
******************************
பொன்வண்டு said...
கும்மி பதிவர்கள் குறித்த வாக்கியம் நூற்றில் ஒன்று ... அருமை :)//
மிக்க நன்றி
******************************
கோபிநாத் said...
அண்ணே...நீ வாழ்க...கும்மி வாழ்க ;)))//
நன்றி தம்பி.
Post a Comment