லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.
எனக்கு இந்த பாடத்தில் வரும் Chor Bazaari பாட்டை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு சந்தோசம் வரும். பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள். அது ரோடாக இருந்தாலும் சரி கவலையே பட மாட்டார்கள். பஞ்சாபி பெண்களும் அதுமாதிரிதான், அவர்களையும் ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும்? அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை.
ஊருக்கு வரும் பொழுது தேணாம்படுவை தப்பு செட்டு காரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிட்டு ஆடனும் என்று ஆசை...(முன்னாடி துண்டு விரிச்சி கூட வைக்கலாம் தப்பு இல்ல)
*********
போன வாரம் நண்பன் ஒருவன் போன் செஞ்சான், மச்சான் நீ மாமா ஆக போற டா என்றான். அட பாவி வேலையில் பிரச்சினை அதுக்காக இப்படியாடா சொல்லுவ என்றேன். ச்சே லூசு நான் அப்பா ஆகபோறேன் டா என்றான். அடங்கொன்னியா கல்யாணம் ஆகி 50 நாள் கூட ஆகவில்லையே டா என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.
முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க வாழ்க என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.
குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன்.
**********
கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது.
மச்சான் முதல் ராத்திரியே பாஞ்சிடாத..பொறுமையா டீல் செய்யனும் என்று சொல்லுவான் ஒருத்தன்.
இன்னொருத்தன் மச்சான் முதல் ராத்திரியே சக்சஸ்புல்லா முடிச்சிடு அப்புறம் காலம் முழுக்க நம்ம சொன்ன பேச்சிதான் கேட்பாங்க என்று சொல்லுவான் இன்னொருத்தன். (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).
குறைந்தது ஒருவருசம் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக்குங்க. என்று சொல்லுவானுங்க.
மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா அப்புறம் காலம் முழுக்க ஆமாம் சாமி போடவேண்டியிருக்கும். கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளோதான் ஆளை காலி செஞ்சிடுவாங்க. இது இன்னொருத்தன்.
மச்சான் இன்னும் மூனு மாசம் டைம் இருக்கு, ஜிம்முக்கு எல்லாம் போ...பிட்டா வெச்சிக்க. ஜல்லி கட்டுக்கு போய் காளைய அடக்க ட்ரைனிங் கொடுப்பது மாதிரியே டிப்ஸ் கொடுப்பாய்ங்க.
எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?
*****
இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...
அனுஜன்யா திரும்பி வாங்க...
62 comments:
::))
// நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன்,
//
லாம்சி பிளாசாவுக்கு பக்கத்துல இருக்குற ஆபிஸூக்குதான அப்பப்ப போவ??!
hahaha :)))
// மால் நடுவில் ஸ்டேஜ் போட்டு இருந்தார்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு என்ன விசயம் என்றேன்...
//
எங்க கூட்டம் அதிகமா இருந்துச்சு?? மால்லயா?? இல்லை ஸ்டேஜ்லயா??
பின்னூட்டம் போட்ட ரைட்ஸ்ல கேக்குறேன். டீட்டெயில் பிளீஸ்..
// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு,
//
ஓ..சாப் ஹிந்தி படமெல்லாம் பாக்குது :))
தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.
//
ஏன் பாஸ் முழுக்க மூடி இருந்தாங்களா :))
// கல்லூரியில் படிக்கும் பொழுது //
கல்லூரியில் இருந்தபோதுன்னு சொல்லு..படிச்ச போதுன்னு சொல்லாத.. பிளடி ஃபூல்.
// படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...
//
எப்படி?? மாஸ்டர் சுத்துவாருன்னுதான் சொன்னேன்,கம்பு சுத்தும்னு சொல்லலைன்னு சார்லி சொல்லுவாரே அந்த மாதிரியா??
மின்னல் :))
அப்து அண்ணே, அண்ணாச்சியும் நானும் டீச்சர்ஸ் டேவுக்கு அங்க போனதிலிருந்து அப்படி ஆயிட்டேன்:)))
பிரபு நன்றி!:)
அண்ணே நாம எல்லாம் 10 வதுலேயே மலையாளப்படம் பார்த்தோம், அப்புறம் ஆங்கிலம் என்று எல்லாம் பார்த்தோம் இது என்ன ஜுஜுப்பி ஹிந்தி...ஏக் காவுமே ஏக் கிசான் ரகுதாத்தா...ரொம்ப சிப்பிள்.
நீ இப்ப என்ன சொல்ல வர்ர தீபிகா படுகோனாவை நேரில் பார்த்துட்ட அதை வீடுல சொல்ல முடியாது அதானே ?
// முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க
//
இப்பல்லாம் புள்ளை பிறந்த பிறகு கல்யாணம் செஞ்சுக்குறதுதான் ஃபேஷன் :)
படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...
//
நினைச்சி பார்க்கவே திகிலா இருக்கே இன்னுமா பார்த்தவங்க எல்லாம் உயிரோட இருக்க போறாங்க ?/
// (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).
//
கால்குலேஷன் மிஸ்டேக். 99.99%
// மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா
//
இந்த அட்வைஸ் எல்லா ஆம்பளைக்கும் தெரியும். ஆனா இந்த கிரிப்பு கிரிப்புங்குறாய்ங்களே அந்த எளவுதான் புரிய மாட்டேங்குது :)))
இப்பல்லாம் புள்ளை பிறந்த பிறகு கல்யாணம் செஞ்சுக்குறதுதான் ஃபேஷன் :)
//
தப்பு தப்பா சொல்லாதீங்க அப்து
பரபரப்பான லிவ்விங் டூகெதர் ப்த்தி சொல்லுங்க
::)))
கால்குலேஷன் மிஸ்டேக். 99.99%
/
அப்து அந்த 0.01 யாருனு இப்ப சொல்லனும்
பின்னூட்டம் போட்ட ரைட்ஸ்ல கேக்குறேன். டீட்டெயில் பிளீஸ்.. :)
// ஜிம்முக்கு எல்லாம் போ...பிட்டா வெச்சிக்க. ஜல்லி கட்டுக்கு போய் காளைய அடக்க ட்ரைனிங் கொடுப்பது மாதிரியே டிப்ஸ் கொடுப்பாய்ங்க.
//
அதானே!! பசுவை அடக்க எதுக்கு பிடென்ஸ் :)))
குறைந்தது ஒருவருசம் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக்குங்க. என்று சொல்லுவானுங்க.
//
கல்யாணம் ஆகி ”பத்து மாசம்” தள்ளி பெத்துகிட்டா தப்பா? அந்த நாலு மாசத்தில் என்ன வந்துட போகுது ::)
// அப்து அந்த 0.01 யாருனு இப்ப சொல்லனும்
பின்னூட்டம் போட்ட ரைட்ஸ்ல கேக்குறேன். டீட்டெயில் பிளீஸ்.. :)
//
மின்னலு பரிச்சையில் ஃபெயில் ஆகனும்னா பரிச்சை எழுதனும். 0.01% யாருன்னா பரிச்சை அன்னைக்கி பரிச்சை எழுதாதவன் :)))
// தப்பு தப்பா சொல்லாதீங்க அப்து
பரபரப்பான லிவ்விங் டூகெதர் ப்த்தி சொல்லுங்க
//
சாரி மின்னல். ரொம்ப நாள் கழிச்சு பதிவுலகம் வந்ததால கரெண்ட் டிரெண்டை மிஸ் பண்ணிட்டேன். இப்போ மைண்ட்ல வச்சுகிட்டேன் :))
முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க வாழ்க என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.
//
இவர மாதிரி ஆள்களை எல்லம் நாடு கடத்தனும்
டாக்டர்
காமராஜ்
வசந்த் டீவி
//குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன்.//
உங்களுக்கும் இருக்குத்தானெ? யாராவது சிரிக்காம பாத்துக்குங்க தல!!!
//
தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.
//
நல்லவேளை அவ உன்னய பாக்குல. பாத்திருந்தா டக்குன்னு கிளம்பி அவ போயிருப்பா...
//
லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.
//
அதுக்கு ஹார்ட்டிஸ்க்ல முதல்லயே காப்பி பண்ணி 30 தடவை பாத்திருந்தா டிவிடியும் தேயாம புதுசாவே இருந்திருக்கும்ல..
//
கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...
//
மாமா, நீ படிச்சிட்டு இருக்குறப்ப உங்க ஊர்ல ஒரு தியேட்டர் இடிஞ்சி போச்சி சொன்னியே, அது சாந்தி தியேட்டரா மாமா?
//
அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை
//
நீ ஏன் மாமா, மானாட மயிலாடல டிரை பண்ணக்கூடாது?
//
அடங்கொன்னியா கல்யாணம் ஆகி 50 நாள் கூட ஆகவில்லையே டா என்றேன்
//
50 days... Too late... :))))))))
//
இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்
//
பூனை கண்ணை மூடினா பூலோகமே இருண்டிருச்சின்னு நினைச்சிக்குமாம்.. சும்மா சொன்னேன்..
//
இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது
//
முதல் கவிதையே "குசும்பன் என்றொரு பிக்காலிப்பய"ன்னுதான் எழுதுவாறா இருக்கும்...
அதான் அப்துல்லா பதிவுல வேணுங்கற டேமேஜ் பண்ணியாச்சே. அப்புறம் தனிப்பதிவா வேற போட்டுத் தாக்கணுமா :)
ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை
//
50 வயசுலேயே மூட்டு வலியா குசும்பா :)))
தனிப்பதிவா வேற போட்டுத் தாக்கணுமா :)
//
நாளை அனுஜன்யா வந்து கேட்டால் போராட்டத்தில் குசும்பனும் பங்கு கொண்டது தெரியனுமே புவியியல் முக்கியமில்லையா ::))
துயரி அதுனாலதானே நானே சிரிச்சிக்கிட்டேன்:)))
*********
வெண்பூ ஒன்னு சொல்லிக்கிறேன்...தோட்டத்துல பூத்து இருக்கும் ரோஜாதான் டக்குன்னு கண்ணுக்கு தெரியும், அதுக்கு காரணமாக இருந்த மண்ணு கண்ணுக்கு தெரியாது...(சும்மா பஞ்ச் டயலாக் சொல்லனும் என்று தோனுச்சு)
//50 days... Too late... :)//
யோவ்வ் 50 நாள் லேட்டா? அவன் கல்யாணம் முடிஞ்சு துபாய் வந்து 20 நாளுக்கு மேல ஆவுது...:)))
*********
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அதான் அப்துல்லா பதிவுல வேணுங்கற டேமேஜ் பண்ணியாச்சே. அப்புறம் தனிப்பதிவா வேற போட்டுத் தாக்கணுமா :)
//
குருஜி அவரு திரும்பி வரும் பொழுது போன் செஞ்சு கூப்பிட்டவர்கள், பதிவு போட்டு கூப்பிட்டவர்கள், தனிமெயில் அனுப்பி கூப்பிட்டவர்கள் என்று லிஸ்ட் கொடுக்கும் பொழுது மாஸ் காட்டனுமுல்ல அதுவும் இல்லாம நம்ம பேரும் எல்லா இடத்திலும் இடம் பிடிக்கனும் குருஜி:))
எப்பூடி?
***********
அதுவும் இல்லாம நம்ம பேரும் எல்லா இடத்திலும் இடம் பிடிக்கனும் குருஜி:))
//
2 லட்சம் கோடி ஏப்பம் விட்டுடானுவோனு பதிவு போட்டா காமெடி பதிவு போட்டு அணைக்க பாக்குறீங்க # எடுத்து குடுத்தல்
(முன்னாடி துண்டு விரிச்சி கூட வைக்கலாம் தப்பு இல்ல)
//
இதுக்கு முன்னாடியும் நீ இததானே செஞ்சிகிட்டு இருந்தே இப்ப என்னமோ புதுசா செய்யுற மாதிரி சொல்லுற ??
// நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன் //
ஓ அதெல்லாம் வேற நடக்குதா.. வெரி குட்
// மால் நடுவில் ஸ்டேஜ் போட்டு இருந்தார்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு //
ஸ்டேஜ் மேலேயா... ஸ்டேஜ் கீழயா # டவுட்டு
//ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை.//
ஏன் கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சா..
// தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( //
நிழலை நிஜமென்று உங்களை யார் கற்பனை பண்ணி பார்க்கச் சொன்னது.
// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.//
ஹார்ட் டிஸ்க்குக்கு ஒன்னும் ஆகலையா?
// பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். //
இதைப் படிக்கும் போது எதாவது எழுத்தாளர் ஞாபகம் வந்தால் கம்பேனி பொறுப்பேற்க முடியாது என்று ஒரு டிஸ்கி போட்டுவிடு குசும்பா.. :-))
// ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள்.//
கொஞ்ச நேரம் கழிச்சு... நாக்கே.. நாக்கே என்று ஆட ஆரம்பிப்பார்களா? # டவுட்டு
// அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். //
திரும்பவும் எழுத்தாளர் ஞாபகத்துக்கு வந்தா கம்பேனி பொறுப்பில்லை..
// கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...//
ஆடிய ஆட்டம் என்ன... என்ன... என்ன... புல் டீடெயில் இங்க வேணும்...
// அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை. //
நல்லவேலை தமிழ் நாடு தப்பிச்சது..
// குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன். //
ஹி... ஹி... எல்லாரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான் போலிருக்கு
// கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது. //
அட்வைஸ் வாங்கியே நொந்து போனவர் சங்கம் என்னாச்சு...
இப்ப அட்வைஸ் கொடுத்தே நொந்து போனவர் சங்கம் ஆரம்பிச்சாச்சா?
// இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...அனுஜன்யா திரும்பி வாங்க.. //
ஆமாம் இங்க அடிச்ச கும்மி எல்லாம் அனுஜன்யா திரும்பி வாங்க என்பதற்காக...
அப்து அண்ணே சரியா கும்மி அடிச்சு இருக்கேனா?
// எம்.எம்.அப்துல்லா said...
// நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன்,
//
லாம்சி பிளாசாவுக்கு பக்கத்துல இருக்குற ஆபிஸூக்குதான அப்பப்ப போவ??! //
ரகசியத்தை எல்லாம் இப்படியா போட்டு உடைப்பது..
// எம்.எம்.அப்துல்லா said...
// லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு,
//
ஓ..சாப் ஹிந்தி படமெல்லாம் பாக்குது :)) //
சாப் ஒன்லி தீபிகா படுகோனே படம் மட்டும் பாக்குது.. :-))
ஹையா... மீ த 50..
இப்படி போட்டு எவ்வளவு நாளாச்சு..
// எம்.எம்.அப்துல்லா said...
// கல்லூரியில் படிக்கும் பொழுது //
கல்லூரியில் இருந்தபோதுன்னு சொல்லு..படிச்ச போதுன்னு சொல்லாத.. பிளடி ஃபூல். //
அண்ணே அது அப்படித்தான் சொல்லணும்... நாமதான் சரியான அர்த்தத்தை மனசுல வாங்கிக்கணும்..
// எம்.எம்.அப்துல்லா said...
// படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...
//
எப்படி?? மாஸ்டர் சுத்துவாருன்னுதான் சொன்னேன்,கம்பு சுத்தும்னு சொல்லலைன்னு சார்லி சொல்லுவாரே அந்த மாதிரியா?? //
அதே... அதே...
// மின்னுது மின்னல் said...
நீ இப்ப என்ன சொல்ல வர்ர தீபிகா படுகோனாவை நேரில் பார்த்துட்ட அதை வீடுல சொல்ல முடியாது அதானே ? //
அது எப்படி மின்னல் சரியா பாயிண்ட பிடிச்சீங்க..
// எம்.எம்.அப்துல்லா said...
// (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).
//
கால்குலேஷன் மிஸ்டேக். 99.99% //
கணக்கு பிள்ளைதான் கணக்க ஒழுங்கா சொல்லணும்...
// எம்.எம்.அப்துல்லா said...
// மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா
//
இந்த அட்வைஸ் எல்லா ஆம்பளைக்கும் தெரியும். ஆனா இந்த கிரிப்பு கிரிப்புங்குறாய்ங்களே அந்த எளவுதான் புரிய மாட்டேங்குது :))) //
அந்த எளவு புரிஞ்சு என்னா ஆகப் போகுது... இக்னோரன்ஸ் இஸ் ப்ளஸ்...
இராகவன் அண்ணே ரொம்ப நாள் கழிச்சி கும்மி போல...
வந்திருப்பது 5 பேரு மொத்தம் 56 கமெண்ட் ...வெளங்கிடும்:)))
// அப்து அண்ணே சரியா கும்மி அடிச்சு இருக்கேனா?
//
அண்ணே இதுக்கு அப்புறமும் அவரு வரலைன்னா பாம்பாய்க்கே நேரில போயி அவரைக் கும்முவோம் :))
எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?
ஹி..ஹி..ஹி...உண்மைதான்
//வெண்பூ said...
//
தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.
//
நல்லவேளை அவ உன்னய பாக்குல. பாத்திருந்தா டக்குன்னு கிளம்பி அவ போயிருப்பா...
//
இதுல "டக்குன்னு கிளம்பி"-ங்கிறதை நீக்கனும் வெண்பூ... :-)
//இதுல "டக்குன்னு கிளம்பி"-ங்கிறதை நீக்கனும் வெண்பூ... :-)//
இது டாப்பூ!
கிழிஞ்சது.. அந்த நல்ல மனுஷன் இதைப் படிச்சிட்டுத்தான் திரும்பி வரணுமாக்கும்..?
கொடுமை..!
Post a Comment