Tuesday, October 26, 2010

என்னா பாஸ்டா ஓடுது....

ஏய் ஓடிவா ஓடிவா உன் புள்ள உள்ள இருந்துக்கிட்டு என்னை உதைக்கிறான் பாரு என்று கைய புடிச்சு வயித்து மேல வெச்சிக்கிட்டு தெரியுதா...உன்னை மாதிரியே வாலா இருக்கும் போல உள்ள அந்த உதை உதைக்குதுன்னு சொல்லியது...


ஸ்கேன் செய்யும் பொழுது என்னையும் உள்ளே வரசொல்லி இதோ பாருங்க கைய கால எப்படி ஆட்டுது பாருங்க அப்பாவுக்கு ஹாய் சொல்றான் போல என்று டாக்டர் சொல்லியது...


என்னங்க டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னாடியே வந்துடுங்க, உங்களை பார்த்துட்டுதான் நான் வார்டுக்குள்ளே போவனும், அதுமாதிரி புள்ளைய நீங்கதான் கையில வாங்கனும், சீக்கிரம் வந்துடுங்க என்று ஏர்போர்ட்டில் சொல்லிவிட்டு சென்றது...


அக்டோபர் 20 ஆம் தேதி காலை 4 மணிக்கு குழந்தைய எடுத்துக்கிட்டு வந்து என் கையில் கொடுத்தது, எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கு. நாட்கள் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது. போனவாரம் பையனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினோம். நண்பர்கள் பலரும் வந்து வாழ்த்த நல்லபடியாக நடந்து முடிந்தது.


குடும்பத்தோடு வந்திருந்த நண்பர்களிடம் ஒரு 15 கேள்வி அடங்கிய பேப்பரை கொடுத்து பதில் சொல்ல சொல்லியிருந்தோம்... அதில் ஒரு கேள்வி எந்த கிழமையில் திருமணம் நடந்ததுன்னு, அதுக்கு நண்பர் ஒருவர் வியாழக்கிழமை என்றும், அவரோட மனைவி ஞாயிறு என்றும் சொல்லியிருந்தார். அப்ப வியாழக்கிழமை கல்யாணம் செஞ்ச பொண்டாட்டி எங்கேன்னு ஆசிப் அண்ணாச்சி புடிச்சி ஓட்டிக்கிட்டு இருந்தார். இன்னொருவர் முதன் முதலாக கொடுத்த கிப்ட்டுக்கு தப்பா பதில் சொல்லியிருந்தார் அவர் முதலிரவின் பொழுது ஒரு கோல்ட் ரிங் வாங்கி கொடுத்திருக்கிறார் அதையே மறந்துட்டாரே வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிக்கிறேன் என்று ஒருவர் சொல்லிக்கிட்டு இருந்தார்... ஏதோ நம்மளால் முடிஞ்சது என்று சந்தோசமாக இருந்துச்சு.


வந்திருந்த கிப்ட்டில் இருந்த ஒரு மீன் பொம்மைய வெச்சி பயபுள்ள விளையாண்டுக்கிட்டு இருந்தான் அந்த மீன் வாய திறந்து திறந்து மூடும் நானும் அவனை அந்த மீன் கடிக்க வரமாதிரி விளையாட்டு காட்டிக்கிட்டு இருந்தேன் சிரிச்சி விளையாண்டுக்கிட்டு இருந்தான்... மீன் குஞ்ச கடிக்கபோவுதுன்னு கடிக்க வுட்டேன் அதன் பிறகு குஞ்சான மூடிக்கிட்டு ஓடி வந்து என் மேல உட்காந்துக்கிட்டு அந்த பொம்மைய வெச்சி விளையாடவே மாட்டேன்னுட்டான்:))


என் பிறந்தநாளாகட்டும்,திருமணநாளாகட்டும், பையன் பிறந்தநாளாகட்டும் எல்லாத்துக்கும் இன்றுவரை முதல் ஆளாக வாழ்த்துவது காயத்ரி சித்தார்த். இந்த முறை அவன் பிறந்தநாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பே இங்கிருக்கும் quickdubai என்ற ஆன்லைன் கிப்ட் ஷாப்பிங் மூலம் ஒரு கிப்ட் வவுச்சர் அனுப்பியிருந்தார்கள், அந்த ஆளும் போன் செய்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது அட்ரஸ் சொல்லுங்க என்றான், என்னடா பார்சல் யார் அனுப்பியதுன்னு சொல்லு என்றேன் அதெல்லாம் சொல்லமுடியாது உங்க அட்ரஸ் சொல்லுங்க என்றான், அப்ப அந்த பார்சலை நீயே வெச்சிக்க எனக்கு வேண்டாம் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டேன், பிறகு திரும்ப இரண்டு முறை அதே நம்பரிலிருந்து கால் வந்தது எடுக்கவில்லை, கொஞ்ச நேரம் கழித்து வேற மொபைல் நம்பரிலிருந்து கால் வந்தது எடுத்தேன், சார் உங்களுக்கு உங்க நண்பர் ஒருவர் கிப்ட் அனுப்பியிருக்கிறார் சர்பிரைஸாக இருக்கட்டும் என்றுதான் பேரை சொல்லவில்லை அட்ரஸ் சொல்லுங்கள் என்றான், பிறகு சொன்னேன். வந்து கொடுத்துவிட்டு சென்றான்.

***********



வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கதவை திறக்கங்காட்டியும் ஓடி வந்து காலை கட்டிக்கிட்டு ஷூவை கூட அவுக்க விடமாட்டான், தூக்கி கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு கீழே விட்டால் தான் பேசாமல் இருக்கிறான், அதுமாதிரி தூங்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அப்பா மேல லவ்வுன்னா லவ்வு அப்படி பொங்குது பயபுள்ளைக்கு, சாப்பிடும் பொழுது மடிமேல ஏறி நின்னு வாயை புடிச்சு நோண்டி கைய தட்டிவிட்டு ஒருவழி செஞ்சிடுவான், ஏதும் அவனுக்கு திங்க வத்தல் அல்லது அப்பளம் கொடுத்தா ஆசையா வாயில் கொண்டு வந்து ஊட்டி விடுவான், ஆவ்வ்வ்ன்னு கவ்வி அதை தின்னுட்டா கை விரலை திருப்பி திருப்பி பார்ப்பான் கையில் கானும் என்றதும் அவ்வ்வ்ன்னு அழ ஆம்பிச்சிடுவான் திரும்ப கையில் ஒரு பீஸ் வத்தலை கொடுக்கனும் சரி நாம தின்னாதானே அழுவுறான்னு திங்காம சும்மாச்சுக்கும் திங்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தா அதுக்கும் அழகை ....பாசக்கார பய உட்டுட்டு சாப்பிட மாட்டேங்கிறானேன்னு சொல்லிக்கிட்டு சாப்பிடுவேன்.

நைசா கப்போர்டை திறந்து வெச்சிட்டு அவனுக்கு வா வான்னு சைகை காட்டிட்டு வெளியில் வந்துடுவேன் பயபுள்ள போய் கிளி ஜோசியக்காரன் கிளிமாதிரி மடிச்சி வெச்சிருக்கும் டிரசை ஒன்னு ஒன்னா எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த ட்ரே காலியானதும் சமத்தா வந்துடுவான், அவன் அம்மா வந்து பார்த்துட்டு காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கும் நாங்க சமத்தா சாஞ்சாடம்மா சாஞ்சாடு விளையாண்டுக்கிட்டு இருப்போம். இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்.

43 comments:

said...

பிலேட்டேட் விஷ்சஷ்

said...

அருமையான பகிர்வு:)!

குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

said...

சூப்பர்

said...

சூப்பர் :)) ஒரு பொறுப்பான டாடியா பகிர்ந்திக்கிட்டிருக்கீங்க பெருசு! :))


குட்டீஸ்க்கு வாழ்த்துகள்

said...

::)))

said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டி பையனுக்கு.

கடைசி பாரா. வேண்டாம்ங்க. தங்கமணி சாபம் பொல்லாதது:) இங்க இன்னும் எண்ணைய கலக்கி விளையாடற விளையாட்டு நடக்குது:((

said...

ஹஹஹ ...அந்த மீனை பொம்மையை வாங்கிகொடுத்தது யாருன்னு சொலலவே இல்லையே...?:)) பச்சைப்புள்ளையை.. நல்லா பயமுறுத்துறிங்கய்யா... :))

said...

:) ஹாப்பி பர்த்துடே டூ ஹிம்.


அந்த கேள்வி பதில் மேட்டரு என்னா வெளையாட்டு? எல்லா கேள்வியையும் பகிரவும். நாங்களும் வெளையாடுவோம்ல.

said...

இனியன் அவர்களூக்கு வாழ்த்துக்கள்

இனி இனியன் அழுதால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும்



இனியன் ரசிகர் மன்ற்ம்
இனியன் பாதுக்காப்பு பேரவை
அல் அய்ன் கிளை
யூ ஏ இ

said...

அட அட தவற விட்டுட்டேனே. இனிய இனியனைப் பற்றி படிக்கும்போது மனது மகிழ்கிறது. பிறந்த நாளுக்குதான் கூப்பிடணுமா. வேற சும்மா நாளில் சொந்தங்களை கூப்பிடக்கூடாதா? நமக்கு பிறந்த நாள், கேக் வெட்டல், கல்யாண நாள் எல்லாம் அலர்ஜியா! ஒத்துக்காது.

said...

ஆயில்யன் said...

சூப்பர் :)) ஒரு பொறுப்பான டாடியா பகிர்ந்திக்கிட்டிருக்கீங்க பெருசு! :))
//

ஆனா ஒரு பொறுப்பான டாடி செய்யுற காரியமா இவரு செஞ்சியிருக்காரு ஆயில்ஸ்??

கண்டிக்காம சூப்பருனு சொல்லிட்டு போயிட்டீங்க

இனியனிடம் உங்கள் பின்னுட்டம் காட்டபடும் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதன் படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

said...

சுல்தான் பாய் இனியனை வேட்டி கட்ட சொல்லி கொடுமை படுத்தி இருக்கிறார்

இவரு மட்டும் கோட்டுசூட்டு கண்ணாடி போடுவாறாம் ஆனா எங்க மருமவனுக்கு வேட்டியாம் கேட்க ஆளு இல்லைனு நினைச்சாரா குசும்பன்??

said...

நல்ல பதிவுங்க.......குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

said...

ஆப்பி பர்த்டே மருமகனே :)

said...

:))

said...

பிறந்த நாள் வாழ்துக்கள் நண்பா!

என்ன பாக்குறீங்க நானும் சின்ன பையன் தான் :)

said...

அரிசி பருப்பு கலத்தல்...அஞ்சறை பெட்டியினை கவிழ்த்தல்,தண்ணீரில் மஞ்சாப்பொடி இன்னும் பல பொருட்களையும் கரைத்தல்..நிறைய பாடங்கள் இருக்கு சார்..

said...

என்னது சீக்கிரம் ஓடிருச்சா.. அப்ப நடுவில் தூக்கமில்லாம இருந்த நாளெல்லாம் மறந்துட்டீங்களா..குட் குட்..
நல்ல மலரும்நினைவுகள்..
இனியனுக்கு வாழ்த்துக்கள் .

said...
This comment has been removed by the author.
said...

என்னடா இது? குசும்பனோட கட்டுரையா இது?

ஆரம்பமும் சரியில்லே.. முடிவும் சரியில்லே..

ஆனால் உள்ளடக்கம் மட்டும் நல்லாயிருக்கு..

பயபுள்ளை அவுக அம்மாகிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லுடே தம்பி.. தப்பித் தவறி உன்னை மாதிரியே வளர்த்துறாத..!

said...

குட்டீஸ்க்கு வாழ்த்துகள்

said...

//மீன் குஞ்ச கடிக்கபோவுதுன்னு கடிக்க வுட்டேன் அதன் பிறகு குஞ்சான மூடிக்கிட்டு ஓடி வந்து என் மேல உட்காந்துக்கிட்டு அந்த பொம்மைய வெச்சி விளையாடவே மாட்டேன்னுட்டான்:))//

பயபுள்ள ரொம்ப அலர்ட்டாதான் இருக்கு :)

இனியனுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்!

said...

இனியனுக்கு வாழ்த்தச் சொல்லிடு மாப்பி.

ரொம்ப பீலிங்கா வந்திருக்குடா பதிவு! ம்ம்ம்!!

said...

ஊர் கண்ணு. ஒறவு கண்ணு. நல்ல கண்ணு. நாற கண்ணு, கொள்ளிக் கண்ணு, கோடாரிக் கண்ணு குசும்பன் கண்ணு.. எல்லாக் கண்ணும் பட்டிருக்கும்.. சுத்தி போடு மாமா..

//என் பிறந்தநாளாகட்டும்,திருமணநாளாகட்டும், பையன் பிறந்தநாளாகட்டும் எல்லாத்துக்கும் இன்றுவரை முதல் ஆளாக வாழ்த்துவது காயத்ரி சித்தார்த். //

இப்டி ஒரு பாசக்கார பொண்ணு வாய்க்க நாம குடுத்து வச்சிருக்கனும்.. இப்போ சித்தார்த் என்று ஒரு பாசக்காரரும் சேர்ந்துட்டார்.. எனக்கும் முதல் வாழ்த்து இவங்க தான்.. அதான் நல்லா இருக்கோம்.. :)

said...

:)) KALAKKAL KUSUMBANஊர் கண்ணு. ஒறவு கண்ணு. நல்ல கண்ணு. நாற கண்ணு, கொள்ளிக் கண்ணு, கோடாரிக் கண்ணு குசும்பன் கண்ணு.. எல்லாக் கண்ணும் பட்டிருக்கும்.. சுத்தி போடு மாமா..

said...

வாழ்த்துகள்!

அன்புடன்
ஆசாத்

said...

குசும்பு குட்டிக்கு வாழ்த்துகள் :)) மாமா சந்தோசம்யா

said...

மொதல்ல ரொம்பவே சென்ட்டியா இருக்கவே ...குசும்பன் பதிவுதானேனு சரி பார்த்தேன். கடசில உன்னோட டச் :)

இனியனுக்கு வாழ்த்துகள்.

அனுஜன்யா

said...

பயபுள்ளை அவுக அம்மாகிட்ட கொடுத்து வளர்க்கச் சொல்லுடே தம்பி.. தப்பித் தவறி உன்னை மாதிரியே வளர்த்துறாத..!

said...

நெகிழ்ச்சியான பதிவு....... குசும்பருக்கு நன்றி....

என் வாழ்க்கைக்குள் ஊடுருவி அதை அப்படியே எழுதின மாதிரி இருக்கு...ம்ம்ம்....... எல்லா அப்பன்களும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.....

said...

நைசா கப்போர்டை திறந்து வெச்சிட்டு அவனுக்கு வா வான்னு சைகை காட்டிட்டு வெளியில் வந்துடுவேன் பயபுள்ள போய் கிளி ஜோசியக்காரன் கிளிமாதிரி மடிச்சி வெச்சிருக்கும் டிரசை ஒன்னு ஒன்னா எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த ட்ரே காலியானதும் சமத்தா வந்துடுவான், அவன் அம்மா வந்து பார்த்துட்டு காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கும் நாங்க சமத்தா சாஞ்சாடம்மா சாஞ்சாடு விளையாண்டுக்கிட்டு இருப்போம். இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்.



patttaasu brooo:)

said...

சூப்பர் :) குட்டி பயபுள்ளைக்கு வாழ்த்துகள் ...

said...

Belated Happy Birthday kutties

said...

/ஊர் கண்ணு. ஒறவு கண்ணு. நல்ல கண்ணு. நாற கண்ணு, கொள்ளிக் கண்ணு, கோடாரிக் கண்ணு குசும்பன் கண்ணு.. எல்லாக் கண்ணும் பட்டிருக்கும்.. சுத்தி போடு மாமா..//

ம்ம்க்கும்.. சஞ்சய், சுத்தி போடுங்கன்னு மெயில் அனுப்பினா.. கண்டிப்பா சுத்தி போடறேங்க.. யாரை மஞ்சுவை சுத்தி போடனும்மா ன்னு கேக்கறாரு..

அப்புறம் அதே மாதிரி செய்துட்டு நீங்களும் நானும் தான் சுத்தி போட சொன்னோம்னு சொன்னாலும் சொல்லுவாரு. .ஜாக்கறதை..!!

said...

இனியனுக்கு வாழ்த்துகள்.

/கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்/

ஏன்? அதைப் பிரிக்கறது உனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கா என்ன?

said...

வாழ்த்துக்கள்.

//இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும். //

வேண்டங்கா. ஒட்டுக்கா போட்டு ஊர வெச்சு இட்லிக்கு ஆட்டிடுவாங்க... இட்லியும் நல்லா இருக்காது... எல்லாம் அனுபவம் தான்.

said...

சூப்பர்டா மாப்பி.. kids are always fun.. எங்க வீட்லையும் இன்னமும் ஒரு வாரத்துல குட்டி பாப்பா வரப்போவுது...(தங்கச்சியோட பாப்பா)

said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

இனியனின் அடுத்த பிறந்த நாளுக்கு இப்போதே வாழ்த்துகிறோம்.

said...

வாழ்த்துக்கள் இனியன் குட்டி. இந்த அத்தை யாருப்பான்னு இனியன் பெரிய பய்யன் ஆனப்புறம் கேட்டா, சொல்லுங்க !! :)

said...

இளைய குசும்பன் இனியனுக்கு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - குசும்பு பத்தாது - அப்பனை உரிச்சி வச்சு வளர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

said...

நன்றி சிவசங்கர்

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி கோபி

நன்றி ஆயில்

நன்றி மின்னல்

நன்றி வித்யா, ஆஹா புதுவிளையாட்டை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி:))

நன்றி நாஞ்சில், பயமுறத்தவில்லை நாங்க விளையாண்டோம்:))

நன்றி சர்வேசன், ரைட்டு தனிபதிவாகவே போட்டு விடுகிறேன்

நன்றி சுல்தான் பாய்

மின்னல் வேஷ்டி சட்டை அவன் கட்டினா போலீஸ்
புடிக்காது நான் கட்டினா புடிக்குமே:))

நன்றி நித்திலம்

நன்றி விஜி

நன்றி சென்ஷி

நன்றி பொன்கார்த்திக்

நன்றி அமுதா ஒன்னு ஒன்னா சொல்லிக்கொடுத்துவிடுவோம்:))

நன்றி முத்துலெட்சுமி அவ்வ்வ் இப்ப மட்டும் என்ன அதே கதிதான் என்ன பழகிட்டு:)))

நன்றி உ.த

நன்றி பிரபு

நன்றி தஞ்சாவூரான்

நன்றி பரிசல்

நன்றி மாம்ஸ், மாமா அந்த பொண்ணுக்கு
அப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சதால் தான்
நம்மை மறக்காம இருக்கு:))

நன்றி ஜெகன்

நன்றி ஆசாத் பாய்

நன்றி கென்

நன்றி அனுஜன்யா அண்ணாச்சி

நன்றி மங் சிங் (இப்ப எல்லாம் காப்பியையும் டெக்னிக்கா அடிக்க
ஆரம்பிச்சிட்டியா?)

நன்றி வின்

நன்றி வெறுமை

நன்றி அப்துல்மாலிக்

நன்றி கவிதா

நன்றி ராம்சுரேஷ், அவ்வ் பின் விளைவு அப்படியிருக்குமா? அப்ப உசாரா இருக்கவேண்டியதுதான்.

நன்றி அகில்

நன்றி சந்தோஷ்

நன்றி அன்பரசன்

நன்றி பாலராஜன்கீதா

நன்றி மணிநரேன்

நன்றி பிரதீபா சொல்லிடுறேன், இவிங்க
தான் இன்விட்டேசன் கிரியேட்டர்ன்னு
சொல்லிடுறேன்:))

நன்றி சீனா அய்யா

said...

ரொம்ப நல்ல இருக்கு உங்க பதிவும் உங்க குழந்தையோட செட்டையும் சிரிச்சுகிட்டே இருந்தேன் சூப்பர்