Tuesday, June 29, 2010

பஸ்ஸ் மொக்கைகள்

கலைநயத்தை காட்ட இவிங்களுக்கு வேற இடமே இல்ல போல ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தேன், உச்சா போவ இடத்தை தேடி கண்டுபிடிச்சு கதவ திறந்துக்கிட்டு போனா படத்தில் வட்டம் போட்டு காட்டியது போல பானை நிறைய இருந்துச்சு என்ன டா இது இதுலயா ஒன்னுக்கு அடிக்கனும் அதுவும் உயரமா இருக்கே எக்கிக்கிட்டு முக்கி முக்கி அடிக்கனும் போலயேன்னு கொஞ்சம் உள்ளார எட்டிபார்த்தேன் அங்க இந்த வாஷ்பேசின் எல்லாம் இருந்துச்சு.. சரின்னு இன்னும் கொஞ்சம் உள்ளார போய் பார்த்தேன் அங்கதான் சரியான இடம் அதுக்கு பக்கத்துலேயும் அங்க அங்க இந்த பானை, அவசரத்தில் எவனாவது அதில் உச்சா அடிச்சு வைக்காம இருந்தா சரின்னு போன வேலைய நிம்மதியா முடிச்சுட்டு திரும்பி வந்தேன், கிரியேட்டிவா திங் செய்யுறேன் என்று நம்மள சுத்தவுடுறாய்ங்க ராஸ்கல்ஸ்!
*********************
மார்னிங் டவுட்#
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை எனக்கு சின்ன வயசிலேயே புரிய வைக்கதான் நான் எழுதிய எக்ஸாமில் எல்லாம் அப்படி மார்க் போட்டாங்களோ டீச்சர்?
****************

தாடி, மொட்டை தலை, லுங்கி ஆகியவற்றை தடை செய்தாலே தமிழ் படங்கள் வெற்றி பெற ஆரம்பிச்சிடும் போல! விட்டா திரிஷா, அசின் இவிங்களுக்கும் தாடி வெச்சி, குளிக்காத பரட்டை தலையோடு லுங்கியையும் கட்டிவிடுவானுங்க போல! என்ன கொடுமை சாமி!


# தமிழ் பட ட்ரைலர்ஸ் பாதிப்பு # நேட்டிவிட்டி கதை அலர்ஜி

*******************
செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் உலக கால்பந்தாட்ட போட்டியை நடத்தி அனைவரின் கவனத்தையும் அதன் மீது திருப்புவதன் மூலம் மாநாட்டு புகழை சீர்குலைத்துவிடலாம் என்று நினைத்தார்கள் அதையு ம் மீறி தமிழன தலைவர் வெற்றி முரசு கொட்டிவிட்டார் என்று "அரசவை கவிஞர்கள்" மாநாட்டில் கவிதை பாடவில்லையா?

**********************

டிக் டிக்!

யாரது?

திருடன்!

என்னவேண்டும்? (ங்கொய்யா திருடன் என்று சொல்லியும் என்னவேண்டுமா?)
நகைவேண்டும்
என்ன நகை

கலர் நகை

என்ன கலர்...

கருப்பு கலர்.........

அடியேய் நான் தான் உன்னை பிடிக்கனும் நீ ஏன்? என்னை பிடிச்ச? நீ அவுட்

நான் கருப்பு கலரைதான் தொட்டுக்கிட்டு இருக்கேன் நான் எப்படி அவுட் ஆவமுடியும்...

அவ்வ்வ்வ்

டமார்!

பொம்பள்புள்ளைங்க கூட விளையாடும் பொழுது அடா அடா என்னா ஜாலி என்னா ஜாலி! அப்ப அப்ப கைகலப்பில் முடியும்... ஒரு பொம்பள புள்ள கையால அடி வாங்கிட்டோமேன்னு ஈகோவினால் திரும்ப இழுத்துபோட்டு சாத்து சாத்துன்னு சாத்தியது எல்லாம் இப்பொழுதும் நினைவு இருக்கு...ஒரு வாரம் முறுக்கிட்டு பேசாம திரியுங்க...அப்புறம் பழம் உட்டுவிடும்.

டிஸ்கி: இதில் இருந்து தெரியும் நீதி 1) முளைக்கும் பொழுதே ஆண் என்ற ஈகோ இருக்கு.
2) பொண்ணுங்க கூட சண்டை பிடிக்காம ஒத்துமையா இருக்கவே முடியாது.

**********************

குழந்தை ஆம்பிள்ளை பிள்ளையா பிறப்பதில் ஒரு வசதி புதுசா பொம்மை எதுவும் வாங்க வேண்டி இருக்க மாட்டேங்குது, எது கொடுத்தாலும் அதை வைத்து விளையாடுவது இல்லை, பிறந்ததிலிருந்து கூடவே இருக்கும் அட்டாச் மெண்ட் டாயை வெச்சி விளையாட்டு, விட்டா பிச்சி எடுத்துடுவான் போல, ஆகையால் அதிகமான நேரம் மூடியே வெச்சிருப்பது மாதிரி ஆகிடுது. சின்னபுள்ளைக்கு இன்பெக்சன் ஆயிடும் என்பதால் அப்பப்ப காத்தோட்டமா விட்டா பய புள்ள கை டக்குன்னு அங்க போய்விடுது:)

ரெண்டு நாளைக்கு முன்னாடி கையில் கட்டி இருந்த முடி கயிறு லூசா இருந்ததால் கழட்டிவிட்டான் அதை எடுத்து சும்மா ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:) மனைவி வந்து பார்த்துட்டு செம திட்டு:((

************************
ஒரு குடும்ப தலைவனாய் என்னை உணரவைப்பது வைக்கிங் பனியன் ஜட்டிகள்!

#பொம்மிஸ் நைட்டி விளம்பரம் தாக்குதல் எபக்ட்#

31 comments:

said...

நல்லா பஸ் ஓட்ரீங்க மாம்ஸ்....

எல்லாமே சொந்த அனுபவமா இருக்குறதால டாப் கியர் தாண்டி போயிகிட்டு இருக்கு....

கலக்குங்க...

said...

::))

said...

:::)))

said...

Aura மசாஜ் செண்டர் பஸ்ஸை கானோமே :)

said...

ஒரு குடும்ப தலைவனாய் என்னை உணரவைப்பது வைக்கிங் பனியன் ஜட்டிகள்!
//


பாஸ் உன்மையை சொல்லு இந்த ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இருக்கா??

said...

ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:)


எப்படி?? உன் லுல்லாவில் டாக்டர் கயிறு கட்டி ’ ஆராரோ’பாடுன மாதிரியா? :-))---பஸ்ஸில் இருந்து
ஆசிப் மீரான்

said...

முளைக்கும் பொழுதே ஆண் என்ற ஈகோ இருக்கு.
//

அவங்களுக்கும் பெண் என்ற ஈகோ இருக்குமே :)
அதனால..
பொண்ணுங்க கூட சண்டை பிடிக்காம ஒத்துமையா இருக்கவே முடியாது.

said...

நிம்மதியா முடிச்சுட்டு திரும்பி வந்தேன்,
//

தெளிவா சொல்லுங்க

வாஷ்பேசனில் நிம்மதியா முடிச்சுட்டு திரும்பி வந்தேன்,

said...

பாஸ் மின்னுது மின்னல் பாஸ்வேர்டை களவாண்டு நீங்களே கமெண்ட்டிங்களா??? பஸ்ஸுலயும் இதுக்கு ரிப்ளை செஞ்சிட்டு இங்கன்யும் புதுசா படிச்ச மாதிரியே ஸ்மைலி போடுறாரே அதான் கேட்டேன்

# நேரங்காலம் தெரியாத டவுட்

said...

#பொம்மிஸ் நைட்டி விளம்பரம் தாக்குதல் எபக்ட்#



எங்கேயும் எப்போதும் எனில்
நைட்டிக்கு பொது வைக்க சொல்லி போராட்டம் நடத்த வேண்டும்

said...

பஸ்ஸுலயும் இதுக்கு ரிப்ளை செஞ்சிட்டு இங்கன்யும் புதுசா படிச்ச மாதிரியே ஸ்மைலி போடுறாரே அதான் கேட்டேன்
//


இவரு மட்டும் பஸ்ஸுல போட்டதை இங்கு போடலாம் நாங்க போட கூடாதா :))

said...

//அடியேய் நான் தான் உன்னை பிடிக்கனும் நீ ஏன்? என்னை பிடிச்ச? நீ அவுட்

நான் கருப்பு கலரைதான் தொட்டுக்கிட்டு இருக்கேன் நான் எப்படி அவுட் ஆவமுடியும்...

அவ்வ்வ்வ்//


:)))))))))))))))

said...

நாம எல்லாம் எங்க கருத்து சொன்னாலும் அது மொக்கைதான். பஸ்ல மட்டும் இல்ல # தெளிவு

said...

அச்சோ ஸ்மைலி விட்டு போச்சே :))))))))))

said...

//கலைநயத்தை காட்ட இவிங்களுக்கு வேற இடமே இல்ல போல....அங்க அங்க இந்த பானை//

அதையும் போட்டோ எடுத்துட்டு வந்தீங்களே, உங்க கலைநயத்தை எப்படிங்க பாராட்றது? :))

said...

::))

said...

//ரெண்டு நாளைக்கு முன்னாடி கையில் கட்டி இருந்த முடி கயிறு லூசா இருந்ததால் கழட்டிவிட்டான் அதை எடுத்து சும்மா ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:) மனைவி வந்து பார்த்துட்டு செம திட்டு:((/


மரண சிரிப்பு ஆபிஸே!

இதெல்லாம் கொலைமுயற்சி(சிரிக்க வைத்து கொல்லும் முயற்சி)

said...

//ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:) மனைவி வந்து பார்த்துட்டு செம திட்டு//

பெற்ற மகனிடமே குசும்பா. கயிறு அவிழ்ந்தால் அங்கேதான் கட்டணும் என்று நினைத்து விடப் போகிறான். பார்த்து விளையாடய்யா :))

"அடுப்பங்கரையிலிருந்து அறைக்குள் வரும்போது, அவசரத்துக்கு உதவுவது போல, கையில ஏதாச்சும் எடுத்துக் கொண்டே வாருங்கள்" என்று தங்கச்சிக்கு சொல்லித் தரணும். ;))

said...

ஹ ஹ ஹா .. யோவ் உனக்கு கயறு கட்ட அந்த இடம் தான் கிடச்சதா .. சிரி சிரின்னு சிரிச்சு விறு வலிக்குது..

said...

குசும்பு தூக்கல் தலவா..:))))))

said...

சே.,நீங்க நெம்ப மோசம்.

said...

என்ன தல, எப்ப பனியன் ஜட்டிக்கு மாறினே.. எப்பயும் கோவணம்தானே உடுத்துவ.? ஹிஹி..

said...

//என்ன தல, எப்ப பனியன் ஜட்டிக்கு மாறினே.. எப்பயும் கோவணம்தானே உடுத்துவ.? ஹிஹி..//
அண்ணன் ஆதியின் இந்தக் கேள்வியை கன்னா பின்னான்னு ரிபீட்டிக்கறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

நல்லாருக்குடா. அதுவும் அந்த க்ரியேட்டிவிட்டி மேட்டரை நீ எழுதின விதம் ரசிக்க வைச்சது!

said...

இன்னும் யாரும் நைட்டிக்கு தமிழ்ல பேர் வைக்கனும்னு போராட்டம் பண்ணலையே?
யாருக்குமே இங்க தமிழ் உணர்வு இல்லையே... :(

said...

நன்றி அகல்விளக்கு

நன்றி மின்னல் (விட்டாலும் தோண்டி துருவி கேட்கிறாய்ங்கய்யா
டீடெயிலு)

நன்றி மங் சிங்

நன்றி வெடிகுண்டு:)

நன்றி கண்ணா

நன்றி ஆயில்

நன்றி தாரணி பிரியா, ஸ்மைலி விட்டாலும் உண்மைய
சொன்னா யாரும் கோச்சுப்பாங்களா?

நன்றி பிரதீபா

நன்றி ஆரூரன்

நன்றி வால்பையன்

நன்றி சுல்தான் பாய்:)

நன்றி ♥ ℛŐℳΣŐ ♥ (என்ன பேரு முருகா இது?)

நன்றி Bavan

நன்றி கும்க்கி

நன்றி ஆமுகி, போன முறை அதையும் நீ ஆசையாக
கேட்டு வாங்கிக்கிட்டதால் இப்ப இதுக்கு மாறிட்டேன்:))
ஏலத்தில் விடனும் என்று சொன்னீயே எப்ப விடப்போற?

நன்றி ஸ்ரீராம்

நன்றி பரிசல்

நன்றி இளங்கோவன்

said...

தாடி, மொட்டை தலை, லுங்கி ஆகியவற்றை தடை செய்தாலே தமிழ் படங்கள் வெற்றி பெற ஆரம்பிச்சிடும் போல! விட்டா திரிஷா, அசின் இவிங்களுக்கும் தாடி வெச்சி, குளிக்காத பரட்டை தலையோடு லுங்கியையும் கட்டிவிடுவானுங்க போல! என்ன கொடுமை சாமி! //

ஹாஹாஹா.. இது டாப்பு.

said...

ஒரு நாளைக்கு மனைவியிடம் எத்தனை அடி வாங்குவீங்க???

said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


இன்னும் எதுக்கு துபாய்ல இருந்து வேஸ்ட் பண்றீங்க!!

சீக்கிரம் வந்துருங்கப்பு!!!!

said...

//
ரெண்டு நாளைக்கு முன்னாடி கையில் கட்டி இருந்த முடி கயிறு லூசா இருந்ததால் கழட்டிவிட்டான் அதை எடுத்து சும்மா ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:)
//

உங்களுக்கு மணி அடிச்சி விளையாட வேற இடமே கிடைக்கலையா?
ஒரு அப்பாவி பிஞ்சுமணியை துன்புறுத்திய குற்றத்திற்காக இ.பி.கோ. 123.45 பிரிவு A மற்றும் B யின் படி கடும் தண்டனை வழங்க படித்துறை (ஜட்ஜ் அய்யா : அது படித்துறை இல்ல, பரிந்துரை) ஆங்க்..... பரிந்துரை செய்கிறேன்.

said...

ஹிஹிஹிஹி