Thursday, June 3, 2010

பதிவர் சந்திப்பு!- பாலபாரதி!- மர்மம்!

யார் இந்த பால பாரதி? இத்தனை நாள் எங்கு போய் இருந்தார்? இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம்.நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் எழுதிய பதிவு http://tinyurl.com/36ejnz5

முதல் கேள்வி யார் இந்த பாலபாரதி?
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே பிளாக் எழுதி தமிழ் வளர்த்தவர் ரொம்ப சீனியர்.பில்லா ரேஞ்சுக்கு இவரு பெரிய பிஸ்தா! பில்லாவுக்கு இவருக்கும் ஒரே வித்தியாசம், பில்லாபயங்கர கருப்பா இருப்பான், இவரு கருப்பா பயங்கரமா இருப்பார்.

இத்தனை நாள் எங்கு போய் இருந்தார்?
ஹி ஹி அண்ணனுக்கு கல்யாணம் இரண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு, அதுக்கு முன்னாடி கொஞ்சமா வீட்டு வேலை இருந்துச்சு, இப்ப வீட்டு வேலை ரொம்ப அதிகம் ஆகிவிட்டதால் எழுத்து உலகு பக்கம் வரமுடியவில்லை. (வேற ரகசியங்கள் பொதுவில் வெளியிடப்பட மாட்டாது!)

இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம் ?
இதுவரை அவர் பெயரை குயில்பாலான்னு வெச்சிருந்தார்! கலர் ஒற்றுமைக்காகதானே ஒழியே குரல் ஒற்றுமைக்காக இல்லை என்பதை ஆழமாக பதிவு செய்கிறேன், பேசினாலே தகரடப்பாவை தேய்ப்பது போல் இருக்கும் குரலை வைத்துக்கொண்டு பாடினால் கேட்கவே வேண்டாம், நான் கூட ஒரு முறை இவர் மகிமை பற்றி தெரியாமல் குயில்பாலா என்றால் குரல் இனிமையாக இருக்குமோ என்று நினைத்து பாட்டு பாட சொல்லி கேட்டதில் இருந்து என் இடதுகாது கொஞ்சம் மந்தமாகவே கேட்கிறது. இதுவரை குயில்பாலாவாக இருந்தவர் இப்பொழுது யெஸ்பாலா என்று பெயரை மாற்றிக்கிட்டார், யெஸ்பாலா என்றால் வேறு ஒன்னும் இல்லை வீட்டில் அண்ணி எது சொன்னாலும் யெஸ் சொல்வதால் இவர் இனி யெஸ்பாலாவாகிவிட்டார். ஆகவே பெயர் சூட்டும் வைபோகம் நடைபெற போகிறது.

என்ன செய்யவேண்டும்?
குழந்தை பிறந்தால் பெயர்வைக்கும் பொழுது நாக்கில் தேனால் பெயர் எழுதுவார்கள், அண்ணன் யெஸ்பாலா லெவலுக்கு கோணி ஊசியில் கொஞ்சம் ஆசிட் தொட்டு அவர் நாக்கில் அல்லது அவரவர் விருப்பப்படி "யெய்பாலபாரதி அறிவுடை நம்பி அகப்பெருமாள் சிவசந்திரன்" என்று எழுதலாம். இவரிடம் இருக்கும் ஆண் ஜொள்ளர் லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை என்று நிருபிக்கவேண்டும் என்றால் தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்.

டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது.

35 comments:

said...

//டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது.//

:)

said...

பார்பன பாலான்னு மாத்திட்டங்கன்னு கேள்விப்பட்டேன் :))

said...

//தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்//

யார் தலையில.. ? உங்க தலைன்ன்னா எங்களுக்கு ரொம்ப செளகரியமாக இருக்கும்..

ஆனா 5 பக்கத்துல ஒரு சைபர் சேத்துக்கிட்டு ஏத்தறோம்.. :)

said...

;-)


அருமை

வாழ்த்துக்கள்............

said...

நன்றி சீனு

நன்றி சங்கர், அவரை முஸ்லீமா கன்வெர்ட், "கட்" செய்வதாக நாகூர் தர்காவுக்கு பா.க.ச சார்பில் வேண்டியிருக்கிறோம்:))

கவிதா இது பா.க.ச பதிவு, ஒன்லி நம்ம டார்கெட் பாலாதான்.

நன்றி உலவு! (நல்லா பெயர் வெச்சி கிளப்புறீங்க பீதிய:))

Anonymous said...

பதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னால உன்னை மட்டும்தாண்டா குசும்பா கண்டிக்க முடியும் :-(

said...

//டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது. //

அதானே பார்த்தேன்... இது மட்டும் பேட்டியா இருந்திருந்தா...
ரத்தம் ஆறே ஒடியிருக்கும்...:))

said...

அடடா பாகச பதிவு வந்து எவ்ளோ நாள் ஆச்சு. நேத்துதான் வவாச, பாகச பத்தி பேசிட்டு இருந்தோம். 100 ஆயுசு..

said...

என்னண்ணே,

ரிலாக்ஸ் மூடுக்கு வந்தாச்சா?

இப்படித்தான் நல்ல புள்ளயா லெட்சணமா இருக்கணும்.

புரிஞ்சுதா?

said...

////பதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னால உன்னை மட்டும்தாண்டா குசும்பா கண்டிக்க முடியும் :-( ///

:))

said...

அண்ணே,

பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்?

said...

ha haa!!

said...

arumai :)))))

said...

எப்ப அனுப்ச மெயிலுக்கு இப்ப பதிவெழுதியிருக்க ராஸ்கோல்?
இனிமே உடனுக்குடன் பதிவெழுதுடே.

ஆனாலும் யெஸ்பாலா அப்டிங்கிற பேர ஆராய்சி செஞ்சு உண்மைய கண்டுபுடிச்சவனுக்கு சரியான மரியாதை செய்தமையால் குசும்பனை கண்டித்து அந்த க்ரூப்புல சொல்லி எழுத வைக்கனும்டே.

said...

குசும்பாஆஆஆஆஆ...

said...

ம்ம்ம்ம்...

said...

கலக்கல்னு

பதில் போட்டா நானும் குழு மனப்பான்மை உள்ள பதிவரா பாஸ்

:))

said...

பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்?
//


தல கிட்டதான்
அத்துடன் தல தன் ரெத்தத்தால் போட்ட கையெழுத்தும் 5000 ரூபாய் பணமுடிப்பும் குடுப்பாரு

said...

பால பாரதியோட குரல் நெஜமாவே குயில் மாதிரி இருந்துச்சு குசும்பா. அதனால இந்தப் பதிவர் சந்திப்புக்கு போறவங்க எல்லாம் ஆளுக்கொரு ஆஸிட் பாட்டலோட போயி அவர் நாக்குல கோலம் போடச் சொல்லனும்

said...

தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்
//

ஊதுவதை விட தலையில் தேங்காய் உடச்சி சத்தியம் பண்ணலாம்

::))

said...

ஒரு பேட்டிக்கே பதிவுலகம் ஆடிடுச்சு பாஸ்.திரும்பவுமா?
.ஹி..ஹி

said...

//மின்னுது மின்னல் said...
பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்?
//


தல கிட்டதான்
அத்துடன் தல தன் ரெத்தத்தால் போட்ட கையெழுத்தும் 5000 ரூபாய் பணமுடிப்பும் குடுப்பாரு
//


அப்படின்னா எனக்கு ஒரு அப்ளிகேஷன் பார்ர்ர்ர்ர்ர்ர்சல்.......

said...

:-))))))))))))))))))))))))))))

said...

சிரிச்சு மாளலைங்க.. சூப்பர்:-)

said...

ஆதாரத்தை குடு லிஸ்ட்டைக்குடுன்னு நான் கேட்டுகிட்டே இருக்கிறதால

அடுத்து பாலாபாய்து என்ன
"ஆப்புரேசன் கில்மாவா?????"

said...

பதிவுலகப் பிரச்னையை நீர்த்துப்போகச் செய்யும் கோமாளி குசும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ANNachi kavalai vendam duabi address detailsoda oru poratam arivichidalam kusumbarkku :)))))))))))

said...

அண்ணன் குசும்பர்.. வாழ்க..வாழ்க

said...

அப்படியே ஆகட்டும், ஆமென்!

said...

நான் தமிழன்

//பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்?//

ரொம்ப மெனக்கெட வேண்டாம். சர்தார்ஜி ஜோக் மாதிரி நீங்க ஒரு பாலா-ஜி ஜோக் அடிச்சாலே நீங்க 'ஆட்டோ'மேட்டிக்கா உருப்பினர் ஆகிடுறீங்க...

said...

நான் தமிழன்

//பாகச வுல மெம்பரா சேர யாருக்கிட்ட அப்ளிகேஷன் வாங்கணும்?//

ரொம்ப மெனக்கெட வேண்டாம். சர்தார்ஜி ஜோக் மாதிரி நீங்க ஒரு பாலா-ஜி ஜோக் அடிச்சாலே நீங்க 'ஆட்டோ'மேட்டிக்கா உருப்பினர் ஆகிடுறீங்க...

said...

டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது
//


::))

இப்புவெல்லாம் யார்ராவது எழுதி கொடுத்து தான் அதை தான் எழுதியதாக போட்டு கொல்லிறார்கள்

said...

ஆசிட்டுக்கு ப‌ய‌ந்த‌வ‌ர் இல்லை எங்க‌ள் அண்ண‌ன் என்ப‌தை இந்த‌ இட‌த்தில் குசும்ப‌னுக்கு சொல்லிக் கொள்கிறேன்... தின‌மும் காலையில் காபிக்கு ப‌திலாக‌ ஆசிட்டு குடிக்கும் அவ‌ரை வெறும் இர‌ண்டு சொட்டு ஆசிட்டை நாக்கில் த‌ட‌வ‌ச் சொல்லி சிறுமைப்ப‌டுத்தும் குசும்ப‌னை க‌ண்டிக்கும் அதே வேளையில்...

உஸ்ஸ்ஸ்... சோடா ப்ளீஸ்..

said...

//
சங்கர் said...
பார்பன பாலான்னு மாத்திட்டங்கன்னு கேள்விப்பட்டேன் :))
//

ச‌ங்க‌ர்... பாக‌ச‌ ப‌திவுன்னா நீங்க‌ளே அண்ண‌னை அடிக்க‌ணும்.. ஆள் எல்லாம் ஏற்பாடு ப‌ண்ண‌ப்ப‌டாது..ஹி..ஹி.. :)

said...

ஆரம்பிச்சிட்டீங்களா:)

said...

அனைவருக்கும் நன்றி