Tuesday, March 25, 2008

தற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வினை + எச்சரிக்கை + நன்றி நன்றி நன்றி

தற்காலிக பிரிவு

சில பல பிரச்சினைகளுக்கு விடிவாக இருந்தது இந்த குசும்பு ஒன்லியும், கும்மி அடிப்பதும் அதற்க்கு எல்லாம் தற்காலிகமாக விடுப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது,வரும் ஏப்ரல் 16 திருமணம் என்பதால் வரும் 28 ஆம் தேதி இந்தியா வருகிறேன். சென்னையில் இரு தினங்கள் இருந்து சக பதிவுலக நண்பர்களை எல்லாம் சந்தித்துவிட்டுஊருக்கு போக போகிறேன்.

ஊர் பெருமை

இந்த தற்காலிக விடுப்பு, பதிவுலகுக்கு டாட்டா என்று எல்லாம் பதிவு போட்டால் அதில் 1% கூட உண்மையாக இருக்காது ஆனால் நம்முடைய விசயத்தில் அப்படி எல்லாம் கிடையாதுஏன்னா நம்ம ஊரில் இந்த ரொம்ப பழய டெக்னாலாஜியான இண்டர் நெட் எல்லாம் கிடையாது .லேட்டஸ் டெக்லாஜியான போஸ்ட் மேன் மட்டும் தான்(பக்கத்து ஊரை விட நாங்க கொஞ்சம் பிபின் தங்கி தான் இருக்கோம் ஏன் என்றால் அவுங்க புறா டெக்னாலஜி யூஸ் செய்கிறார்கள்).இன்னொரு முக்கியமான விசயம்மொபைலில் பேசனும் என்றாகே வீட்டை விட்டு வெளியே வந்துதான் பேசனும், ஏன்னா வீட்டுக்குள்ள எல்லாம் சிக்னல் கிடைச்சா அனைவருக்கு தொந்திரவு என்று அப்படி ஒரு விசேச ஏற்பாடு. ஆகையால் மொபைலுக்கு கால் செய்ய நினைத்து தொடர்பு கொள்ளும் பொழுது “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்று மெசேஜ் வந்தால் நான் வீட்டுக்குள்ள இருக்கிறேன் என்று அர்த்தம்:)

அடங்கொய்யாலே அப்படியா பட்ட ஊரா உன் ஊரு என்று கேள்வி கேட்கனும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. எங்க ஊரின் இந்த கடைசியில் இருந்து பார்த்தால் முப்பது வீடு இருக்கும் அப்படியே ஓடி போய் அந்த கடைசியில் இருந்தா பார்த்தால் ஒரு முப்பது வீடு இருக்கும்.. அப்படியே மரத்து மேல ஏறிக்கிட்டு டாப் ஆங்கிலில் இருந்து பார்த்தா ஒரு முப்பது வீடு இருக்கும் அம்புட்டு பெரிய ஊரு. ஊரில் வந்து ஒரு சின்ன புள்ளைக்கிட்ட கேட்டாலும் எங்க வீட்டை காட்டும். (இருக்கிற முப்பது பேருல இதுகூடவா தெரியாம இருப்பாங்க). கேட்கும் பொழுது துபாய் சரவணன் என்று கேட்கவும்.

இப்படியா பட்ட ஹை பை ஊரில் இருந்து இந்த ஓல்ட் டெக்னாலாஜ் ஆன இண்டர் நெட் யூஸ் செய்யனும் என்றால் பஸ் புடிச்சு கும்பகோணம் அல்லது திருவாருர் போகனும் இரண்டுமேகுறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம்...(யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது). ஆகையால் கல்யாணம் முடிஞ்சு இருக்கும் பல வேலைகளில்இந்த பதிவு போடுவது, கும்மி அடிப்பது என்பது எல்லாம் இயலாத காரியம்.

ஆகையால் உங்களுக்கு எல்லாம் 40 நாட்கள் விடுப்பு கொடுக்கிறேன். (***அதன் பிறகு மனைவி அனுமதி கொடுத்தால் அப்ப அப்ப கைப்புள்ள மாதிரி எட்டி பார்த்துவிட்டு போகிறேன்).

பயோடேட்டா

பெயர் : சரவணவேல்

வயது : திருமணம் செய்யும் வயதுதான்

தொழில் : கும்மி அடிப்பது

உப தொழில் : வெப் டிசைன் செய்வது

பிடித்த இடம் : கும்மியும் கும்மி சார்ந்த பகுதியும்

பிடிக்காத இடம்: சண்டைகளும், சண்டை சார்ந்த பகுதியும்

நண்பர்கள் : பதிவுலகில் அனைவரும்

எதிரி : அய்யனாரை ரொம்ப நல்லா எழுதுறீங்கன்னு சொல்பவர்கள்

சாதனை : ஒருவரிடமும் திட்டு வாங்காமல் நக்கல் அடித்தது

சோதனை : சமீபத்தில் தமிழச்சி வைத்தது

வேதனை : கொசு கடித்தால் சின்னதாக வீங்கி இருப்பது போல் இருக்கும் சின்ன தொப்பை, லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.

பிடித்த பாடல்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...

முனு முனுக்கும் பாடல் : எல்லோரும் மாவாட்ட கத்துகிடனும்...

போன் நம்பர் : 9486614890

எதிர்வினை

எப்பொழுதும் அய்யானார் பதிவு போடும் பொழுது எதிர் பதிவு போடுவது அவரை கலாய்பது என்று இருந்த நான் அவர் திருமணம் செய்யும் பொழுது மட்டும் எதிர் வினை செய்யாமல்இருந்தால் நாளை வரலாறு தவறாக பேசும் என்பதால் அவர் திருமணம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் செய்ய போகிறேன். இதைவிட சிறந்த எதிர் வினை எதுவும் இருக்கமுடியாது.

எச்சரிக்கை
என் மெயில் லிஸ்டில், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மறக்காமல் தனி தனியாக பத்திரிக்கை அனுப்பி இருக்கிறேன், யாருடையதாவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும்,இதையே கல்யாண அழைப்பாக வைத்துக்கவும். முக்கியமான விசயம் சிலர் மெயிலில் தானே பத்திரிக்கை அனுப்பினேன் என்பதால் மொய்யைய்யும் மெயிலிலே அனுப்பிடலாம்என்று நினைத்து பல பேர் மெயிலில் பல நாட்டு கரண்சிகளை அனுப்புகிறார்கள் அவுங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..எங்க சின்னம்மா ஊரில் மொய் வைக்கவில்லை என்றால் மைக் செட்டில் முதலில் சொல்லுவாங்களாம் அப்படியும் வந்து மொய் வைக்காதவங்க வீட்டுக்கு அந்த ஊர் தலையாரி போய் வசூல் செய்வாராம்... அப்படியா பட்ட சொந்தகாரர்களை உடைய ஆள் நான், அம்புட்டுதான் என்னால சொல்ல முடியும் அதன் பிறகு உங்க இஷ்டம்:))) **** முக்கியமாக இம்சை, TBCD,கோவி.கண்ணன்,மங்களூர் சிறுசு, பொடியன் ,நந்து, ஸ்ரீதருக்காக.

நன்றி நன்றி நன்றி

பத்திரிக்கை அனுப்பும் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்த நண்பர்கள்,எதுவும் கேட்காமலே தானே முன்வந்து உதவிசெய்த சிவா அண்ணன், ராமசந்திரன் (இரவு கவி), அய்ஸ், ஆசிப் அண்ணாச்சி, பிரகாஷ் , சிவா மற்றும் பல நண்பர்களுக்கும்.

திருமணத்துக்காக வெள்ளி அன்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்து
வாழ்த்தி விடைகொடுத்த திரு. அப்துல் ஜாபர், திரு. சுல்தான் , ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், லொடுக்கு,இஷாக், முத்துகுமரன்,ஜெஸில்லா, வாசி, கோபி, சென்ஷி,தம்பி, அசோக் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.


நாளை இரவு 10.30 க்கு பிளைட். வெள்ளி காலை சென்னை வருகிறேன்.
சென்னையில் பாலபாரதியும், லக்கியும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் ஞாயிறு மாலை காந்தி சிலைக்கு அருகில்.

மீண்டும் சந்திக்கும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை.

41 comments:

said...

வாழ்த்துக்கள்:)

said...

வாழ்த்துக்கள்!!!!!

said...

நல்லபடியா கல்யாணம் பண்ணி நம்ம குரூப்புல வந்து சேருப்பா, வாழ்த்துக்கள்... நேர்ல பார்ப்போம்....

said...

கல்யாணத்துக்கு முன்னாடி கடைசி ஆசை எதாவது இருந்தா சொல்லுப்பா நிறைவேத்தரோம்

said...

// “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்று மெசேஜ் வந்தால் நான் வீட்டுக்குள்ள இருக்கிறேன் என்று அர்த்தம்:)//
சும்மா லொலலொலா சொல்லாதீங்க:)

சிக்னல் சூப்பரா இருக்குதாம் அங்க :)

said...

தொழில் : கும்மி அடிப்பது

உப தொழில் : வெப் டிசைன் செய்வது

பிடித்த இடம் : கும்மியும் கும்மி சார்ந்த பகுதியும்

இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான், அப்பாலிக்கா எல்லாமே ஆப்பு வாங்கரது மட்டும்தான் தொழில்...

said...

டெய்லி காலையிலேர்ந்து மாலை வரைக்கும் ஊருக்கு மிஸ் கால் கொடுக்கும்போது உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே ??? :)))

said...

வாழ்த்துக்கள் !!!! :)

said...

கடைசியா ஒரு தரம் சிரிச்சிக்கப்பா பின்னாடி அனுமதி வாங்கினப்புரம் தான் சிரிக்க முடியும்

said...

//யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது)//

நண்பா!

இப்ப பஸ்ஸெல்லாம் விட்டிருக்காங்களா.....?

said...

//லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.//

என்னது லேசாவாஆஆஆஆஆஆஆஆஅ???

ஆண்டவன் தான் அண்ணிக்கு ஆறுதல் கூறணும்?!

said...

////////////////
//யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது)//

நண்பா!

இப்ப பஸ்ஸெல்லாம் விட்டிருக்காங்களா.....?
////////////////////////
ஆமாம்... வாரத்துக்கு ஒரு பஸ் வரும் ஊருக்கு வெளிய... அங்கருந்து 50 மைல் தான் நடக்கனும்..

said...

//ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...//


பரவாயில்ல நண்பா!

நல்லவே ஃபீல் பண்ணியிருக்கீங்க!

said...

எதிரி : அய்யனாரை ரொம்ப நல்லா எழுதுறீங்கன்னு சொல்பவர்கள்

ஆகா அப்ப நான் உனக்கு எதிரி இல்லயா. அய்யனார் அண்ணன் எழுதரது ஒன்னுமே புரியரது இல்லயே ஏன் ?

said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

ஏன் நண்பா வாட் ஹாப்பண்ட்????

said...

//////////
//யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது)//

நண்பா!

இப்ப பஸ்ஸெல்லாம் விட்டிருக்காங்களா.....?
////////////////
ஆமாம்... வாரத்துக்கு ஒரு பஸ் வருமாம் ஊருக்கு வெளிய... அங்கருந்து 50 மைல் தான் நடக்கனும்..

said...

Your comment has been saved and will be visible after blog owner approval.ஏன் ஏன் ஏன் ஏன் ?

said...

தோழா!

ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு குறித்து தனி பதிவிட்டால் நன்று :-)

அன்புடன்
லக்கி

said...

// டாட்டா பை பை.
//

பை
பை
பை
பை
பை
பை
பை
பை
:)))

said...

மாமா என்ன இது? இடையில செண்டிமெண்ட்லாம் எட்டிபாக்குது?

நோ நோ நமக்குள்ள நோ செண்டிமெண்ட்ஸ்.

கல்யாணம் ஆவறதுக்கு முன்னாடி இப்படித்தான் பயம்மா இருக்குமாம்.

பாப்பா நான் சப்போர்ட்டுக்கு இருக்கேன். பயப்படாம போய் கல்யாணம் பண்ணுங்க

கல்யாணத்துல பாக்கலாம்

said...

ஓ கும்பகோணம் 20 கி மீ தானா?

Anonymous said...

என்ன கடைசில ஏமாத்திட்டாரே

Anonymous said...

ஊர் பேருல இருந்து எல்லா விஷ்யமும் நோட்டடு.

கல்யாணதப்போ நேருல வந்து நியாயம் கேப்பேன்

said...

குசும்பன் அவர்களின் இல்லற வாழ்கை இனிதே அமைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

congrats saravanan.hearty wishes.not able to wish in tamil as typing this from offie:-).have a nice time at home

said...

welcome to chennai

said...

வாழ்த்துக்கள் குசும்பா..

சென்னை அதிர அதிர பதிவர் சந்திப்பில் அடி விழும் என்ற செய்தி காதுக்கு வந்தது.

என் சார்பாக யார் வேண்டுமென்றாலும் (முடிஞ்சா எல்லாருமே சேர்ந்து) குசும்பன் முதுகில் (மட்டுமே) 2 அடி அடிக்கலாம்..(வேற எங்கேயும் கை/கால் வைச்சிடாதீங்க)

said...

வாழ்த்துக்கள் !

கொசு நெறைய கடிச்சிடுச்சோ...
:)

said...

நல்லபடியாக ஊருக்கு சென்று திருமணம் முடித்து 2 பூரிக்கட்டை வாங்கி வர வாழ்த்துக்கள் . :-)

said...

வாழ்த்துகள் நண்பரே......


Senthil
Bangalore..

said...

வாழ்த்துக்கள்!!

said...

//வேதனை : கொசு கடித்தால் சின்னதாக வீங்கி இருப்பது போல் இருக்கும் சின்ன தொப்பை, லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.//

சிறுசுக்கே வேதனையா? கவலை வேண்டாம் மாம்ஸ்.. என்னை பார்த்து சந்தோஷ பட்டுக்கோங்க :P

//இதைவிட சிறந்த எதிர் வினை எதுவும் இருக்கமுடியாது.//
இதை விட பெரிய ஆப்பை யாரும் சொருகிக் கொள்ள முடிய்யாது. :)).. புலியை பார்த்து பூனை...:P

//எங்க சின்னம்மா ஊரில் மொய் வைக்கவில்லை என்றால் மைக் செட்டில் முதலில் சொல்லுவாங்களாம் //
உங்க சின்னம்மா ஊரில் எங்களுக்கு என்னய்யா வேலை?

//அப்படியும் வந்து மொய் வைக்காதவங்க வீட்டுக்கு அந்த ஊர் தலையாரி போய் வசூல் செய்வாராம்//

அட போய்யா.. நாங்கல்லாம் கடன் வாங்குற எடத்துலையே நிஜ அட்ரஸ் தந்ததில்ல. சின்ன புள்ளத் தனமா பேசிகிட்டு :)))

//பத்திரிக்கை அனுப்பும் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்த நண்பர்கள//
அதுகேத்த மாதிரி கிட்சன் சைஸ் இருக்கனும்டி.. பாத்துக்கோங்க.. ;)

//மீண்டும் சந்திக்கும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை.//
என்ன அவசரம்? பாத்து மெதுவா டைப் பண்ண மாட்டியளா? " மீண்டும் சந்திக்கு வரும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை" னு இருக்கனும்.


---------------

வாழ்த்துக்கள் மாம்ஸ்.. சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேர உறுதுணையாய் இருப்பார்... இனி நீங்கள் தான் வாழ்க்கை என்று உங்களை நம்பி வரும் என் அன்பு சகோதரியின் முகமும் மனமும் வாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மச்சானின் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். எல்லா செல்வங்களும் பெற்று நல் வாழ்வு வாழ்க!!!

said...

நயந்தாரா அபியப்பாவுக்கு போன் பண்ணா..." நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறொரு பெண்ணின் தொடர்பில் இருக்கிறார்"னு வருதாமே.. அப்போ அவர் எங்க இருக்கிறார்னு அர்த்தம்? :(

said...

திருமண நல் வாழ்த்துக்கள் !!!

said...

வாங்க..! நல்லபடியா ஊர் வந்து சேந்து...இந்த செல்போன், பதிவு, கும்மி
சச்சரவு, பம்மல் :) எதுவுமில்லாம...கொஞ்ச :) நாளாவது சந்தோஷமா இருங்க!

(இதில் உள்குத்து எதுவுமில்லைங்கோ...)

said...

வாழ்த்து சொன்ன

ஆயில்யன்

ஜெகதீசன்

இம்சை

பொன்வண்டு

லக்கிலுக்

நிலா

ஸ்ரேயா கோசல்

அப்துல் குத்தூஸ்

வருத்தப்படாத வாலிபன்

முரளி கண்ணன்

TBCD

Pondy-Barani

மை ஃபிரண்ட்

Sen22

கப்பி பய

SanJai

nathas

சுரேகா

அனைவருக்கும் நன்றி

said...

வாழ்த்துக்கள் நண்பா !

said...

ஹாஹ்ஹா,... மாம்ஸ்... லீவுக்கு அப்ளை பண்ணியிருக்கோம்ல்ல...
திடீருன்னு வந்து கலக்கிடலாம்.
ஆமாம்..எங்களையெல்லாம் அழைச்சுப்போக பஸ்ஸ்டாண்டுக்கு லாரி அரேஞ்ச் பண்ணியிருக்கிங்கன்னு ஒரு புரளி உலவுதே:))))

said...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

வாழ்த்துக்கள் குசும்பன்...

said...

உங்களுக்காக ஒரு பதிவிட்டிருக்கிறேன். பார்வையிடவும்.

said...

எங்க ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.கல்யாண வாழ்த்துக்கள்.