Monday, April 19, 2010

குஜித் நடிக்கும்- பல்லா குசல் பார்ட்2

தல குஜித்தின் அடுத்த படத்துக்கு கதை சொல்ல போகிறார் நம்ம வலையுலக சகலகலா வல்லவன் பேதிமூலம்கிருஷ்ணன்.(சற்குணராஜ்க்கு அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்)(இமேஜ் நேம் என்னன்னு பார்த்து ஷாக் ஆவுறவங்களுக்கு இந்த போட்டோ 10 அனுப்பி மயக்கம் தெளியவைக்கப்படும்)

பேதிமூலகிருஷ்ணன்: தல நம்ம பல்லா குசல் ரெண்டையும் மிக்ஸ் செஞ்சு புதுசா தல குஜித் நடக்கும் பல்லா குசல் பார்ட் 2ன்னு பேர் வெச்சி அதிரிபுதிரியா ஒரு படம் செய்யுறோம்.

குஜித்: சூப்பர், அப்ப இத்தாலி போறோம்.

பேதி: எதுக்கு தல இத்தாலி? இன்னும் பட கதையையே சொல்லவில்லை அதுக்குள்ள இத்தாலிங்கிறீங்க?

குஜித்: அங்கதான் கோட் சூட் எல்லாம் ரொம்ப அருமையாகவும், அழகாகவும் கிடைக்குமாம் இப்பதான் அந்த டீடெயில் தெரிஞ்சுது, படம் கதை எப்படி இருந்தா என்ன கோட் சூட் தவிர இனி வேற காஸ்டியூமில் என்னை பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டாங்க.

பேதி: ரைட்டுதான் தல இத்தாலி போறோம், 400 கோட் சூட் வாங்குறோம்.ஒரு ஸ்டெப் வெச்சி நடந்ததும் ரெஸ்ட் எடுக்குறீங்க கோட் மாத்துறோம் அடுத்த ஸ்டெப் வைக்கிறீங்க!

குஜித்: சரி கதையை சொல்லுங்க.

பேதி: ஓப்பனிங் சீன் ஒரு பெண் கையை புடிச்சு நாலு ரவுடிங்க இழுக்கிறாங்க, நீங்க அப்படியே வேகமா ஓடி வர்றீங்க..

குஜித்: என்னது வேகமாகவா நானா? நெவர்...

பேதி: பரவாயில்லை தல கேமிராவை நாங்க வேகமா நகர்த்திக்கிறோம். ரவுடிங்களை நீங்க அட்டாக் செய்ய மெதுவா நடந்து வருகிறீர்கள், ரவுடிங்கஎல்லாம் வேக வேகமா ஓடி வந்து உங்க கிட்ட அடி வாங்கிக்கிட்டு தூரமா போய் விழுறாங்க..டக்குன்னு ஒரு டவுடி ஹீரோயினை நோக்கி கத்தியை வீசுறான், நீங்க ஹீரோயினை கைய புடிச்சு இழுந்து காப்பாத்திடுறீங்க, ஹீரோயின் உங்க மேல பட்டதும் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி டூயட் பாடபோறீங்க...டான்ஸ் மாஸ்டர் நம்ம பிரபுதேவா தல.

குஜித்: பிரபுதேவா? யாருக்கு ஹீரோயினுக்குதானே டான்ஸ் மாஸ்டர்!

பேதி: புரியலையே தல...

குஜித்: எனக்கு ஏதும் பேசன் ஷோ கொரியோ கிராப்பர் போதும், நான் வித விதமா கோட் போட்டு நடந்து வர ஹீரோயின் டான்ஸ் ஆடுவாங்க, பிரபுதேவா ஹீரோயினுக்கு மட்டும் டான்ஸ் சொல்லிகொடுத்தா போதும்.

பேதி: சரிதல அப்படியே செஞ்சிடலாம்.

குஜித்: ம்ம்ம் மேல சொல்லுங்க..

பேதி: பாட்டு முடிஞ்சதும் அந்த ஹீரோயினை தொரத்திக்கிட்டு ஒரு கும்பல் ஜீப்பில் வருது? நீங்க ஹீரோயின் கைய புடிச்சுக்கிட்டு ஓடுறீங்க...

குஜித்: என்னது நானா ஓடுறேனா???

பேதி: நீங்க ஓடுற மாதிரி கிராப்பிக்ஸில் செஞ்சிக்கிறோம் தல!

குஜித்: நோ நோ எதா இருந்தாலும் ரியலா இருக்கனும், நான் வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேகமா நடக்கிறேன், நீங்க உங்க கேமிராவையும் வேகமா நகர்த்துங்க ஓடுறமாதிரி காட்டிக்கலாம்...

பேதி: அப்படியே ஆகட்டும் தல..அப்படியே வேகமா கைய புடிச்சுக்கிட்டு நடக்குறீங்க.. எதிரே ஒரு பெரிய சுவர் வந்துடுது, அதுக்கு மேல நீங்க நடக்க முடியல, ஆளுங்க நெருங்கிவந்துட்டாங்க...இண்டர்வெல் விடுறோம்... பிறகு டக்குன்னு நீங்க உங்க தலையால சுவரை முட்டுறீங்க சுவர் உடையுது...

குஜித்: நானா???

பேதி: சரி விடுங்க, வில்லன் ஆளுங்க வேகமா ஓடிவருகிறார்கள் நீங்க டக்குன்னு நகருகிறீர்கள், அவுங்க மோதி சுவர் உடைஞ்சுதுன்னு வெச்சிக்கலாம்..

குஜித்: டக்குன்னு நான் நகரனுமா? என்னா மேன் வந்ததில் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன் என்னை ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்க வைப்பதிலேயே குறியா இருக்க, இது சரிவராது நீ கிளம்பு..

(பேதி சோகத்துடன் வெளியே வருகிறார், அங்க வரும் குப்துல்லா அண்ணே இந்த படத்தில் நான் பாட்டு பாடுறேன் எனக்கு சான்ஸ் கொடுங்க என்று கேட்கிறார்)

பேதி: அட போங்க குப்துல்லா குஜித் ரொம்ப ரிஸ்கான சீன் நிறைய இருக்கு என்று படத்தை ட்ராப் செஞ்சுட்டார் இனி வேற ஆள் புடிக்கனும்.

குப்துல்லா: அட நீங்க வேற இந்த கதைக்கு ஏத்த மாதிரி விக்ரம் மாதிரி ரொம்ப நாளா நடைபழகும் ஒரு ஆளை தெரியும் அவரை ஹீரோவா நடிக்க வெச்சாரொம்ப ரியலா இருக்கும்.

பேதி: யாருன்னே அவரு? கால்சீட் கிடைக்குமா?

குப்துல்லா: ஈசியா கிடைக்கும், ரொம்ப ஃபிரியாதான் இருக்கார், பேரு பைகோ! அடிக்கடி இதுமாதிரி நடைபழகிட்டு இருப்பார் அவரை வெச்சி எடுத்தா அவருக்கும் ரீ எண்ட்ரி கொடுத்தமாதிரி இருக்கும் உங்க கதைக்கு ஏத்த ஒரு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்.

பேதி: அம்மே...!

குப்துல்லா: ம்ம்ம் கரெக்ட் அங்கதான் எப்பொழுதும் இருப்பார் போய் பாருங்க.

32 comments:

said...

அல்டிமேட் :)

said...

//(சற்குணராஜ்க்கு அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்)//

மெய்யாலுமா.. அப்ப யு டியுபுக்கு அடுத்த ஆல்பம் ரெடி செஞ்சுடுவாரா :)

said...

:))))))))))
பேதி மூலம் கிருஷ்ணன் - நல்ல கலாய்ப்பு
குஜீத்தின் அடுத்த படத்தில் வில்லனின் பெயர் - குசும்பன்.
பைகோவின் அடுத்த நடை பயணம் கொடநாட்டிலிருந்து மயிலாடுதுறைக்கு
:))))))))

said...

//: எனக்கு ஏதும் பேசன் ஷோ கொரியோ கிராப்பர் போதும், நான் வித விதமா கோட் போட்டு நடந்து வர ஹீரோயின் டான்ஸ் ஆடுவாங்க, பிரபுதேவா ஹீரோயினுக்கு மட்டும் டான்ஸ் சொல்லிகொடுத்தா போதும்.//

lol :))))))

said...

//பிரபுதேவா? யாருக்கு ஹீரோயினுக்குதானே டான்ஸ் மாஸ்டர்!//

அவ‌ர் எப்ப‌வுமே ஹீரோயினுக்குதான்
மாஸ்டர்

said...

ஹலோ....

கத இப்படி போகுதா... அப்படின்னா, நீங்க எல்லாரும் இத பார்த்து தான் ஆகணும்... வேற வழி இல்ல...

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

said...

//பிரபுதேவா ஹீரோயினுக்கு மட்டும் டான்ஸ் சொல்லிகொடுத்தா போதும்.//

ஏன் பிரபுதேவா பொண்டாட்டி வந்து செருப்பால அடிப்பேன்னு சொல்லுறதுக்கா...

//(சற்குணராஜ்க்கு அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்)//


:)))))))

said...

Twins aa??

nadakkattum nadakattum...

said...

/
//பிரபுதேவா ஹீரோயினுக்கு மட்டும் டான்ஸ் சொல்லிகொடுத்தா போதும்.//

ஏன் பிரபுதேவா பொண்டாட்டி வந்து செருப்பால அடிப்பேன்னு சொல்லுறதுக்கா...
/

ஹா ஹா
:))

said...

டொண்டொடொய்ங்....

//குப்துல்லா: ஈசியா கிடைக்கும், ரொம்ப ஃபிரியாதான் இருக்கார், பேரு பைகோ! அடிக்கடி இதுமாதிரி நடைபழகிட்டு இருப்பார் அவரை வெச்சி எடுத்தா அவருக்கும் ரீ எண்ட்ரி கொடுத்தமாதிரி இருக்கும் உங்க கதைக்கு ஏத்த ஒரு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்.//

இவர் குஜித் விட அதிக சீன் போடுவாரே.. கேரளாவில் பந்த் நடக்கும் போது பார்டர்ல போராட்ட சீன் கேட்பார்.. சொந்த ஆபிசை பறி கொடுத்துட்டு 13 கிமீ தூரத்துல பாவமா மூஞ்ச வச்சிட்டு உண்ணாவிரதம் இருக்கிற சீன் கேட்பார்.. :)

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு சிரிச்சுட்டே இருக்கேன் :)

அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்)//

முடியலை :)))))))))))))))))))))))

said...

இன்னும் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன் தல :))

said...

////////பேதி: ஓப்பனிங் சீன் ஒரு பெண் கையை புடிச்சு நாலு ரவுடிங்க இழுக்கிறாங்க, நீங்க அப்படியே வேகமா ஓடி வர்றீங்க..

குஜித்: என்னது வேகமாகவா நானா? நெவர்...////////


ஏலே மக்கா அவசரப் பட்டுட்டியல .

said...

//படம் கதை எப்படி இருந்தா என்ன கோட் சூட் தவிர இனி வேற காஸ்டியூமில் என்னை பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டாங்க//

எப்ப பாத்தாலும் கோட் சூட் போட்டு போட்டோ எடுத்து போடறீங்களே நீங்க குஜீத் ரசிகரா

said...

கலக்கல்.

said...

:-))))))))))))))

said...

ரொம்ப நேரமா சிரிச்சுட்டு இருக்கேன்


//எப்ப பாத்தாலும் கோட் சூட் போட்டு போட்டோ எடுத்து போடறீங்களே நீங்க குஜீத் ரசிகரா//

எப்படி இப்படி ?

:)

said...

ஆதி சிக்கிட்டாரா இந்த வாட்டி? (எதாச்சும் குடுக்கல் வாங்கல் பாக்கியாங்க?) :-)

அப்புறம்ம்ம்ம், குஜித் துப்பாக்கிக்கு பதிலா கேமரா வெச்சிருக்கற மாதிரி கூட இருக்கலாம்..

said...

கலக்கல்!!

said...

நன்றி சென்ஷி, யூ டியுப்புக்கு மட்டும் இல்லை சைக்கிள் டியூப்,லாரி டியூபுக்கு எல்லாம் ரெடி செய்வார் நம்ம ஆதி!

நன்றி Monks

நன்றி ஆயில்யன்

நன்றி கரிசல்காரன்

நன்றி R.Gopi

நன்றி கண்ணா

நன்றி பிரபு

நன்றி மங் சிங்

நன்றி மாமோய்! சொந்த ஆபிசை புடுங்கிட்டாய்ங்களா?

நன்றி மயில்

நன்றி கார்க்கி :))

நன்றி பனித்துளி

நன்றி தாரணி பிரியா, கோட் சூட் போட்டு என் போட்டோவா? அவ்வ்வ் அப்படி ஏதும் என்கிட்ட ஸ்டாக் இல்லியே!

நன்றி மஞ்சூர்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி கார்த்திக்

நன்றி நேசமித்ரன்

நன்றி குட்டி (ஆதி ரொம்ப நல்லவர் எவ்வளோ அடிச்சாலும் தாங்குவார்:)))

said...

//சற்குணராஜ்க்கு அடுத்தபடியாக பல திறமைகளை சட்டை பேண்ட் போட்டு மூடி வெச்சிருக்கும் ஒரே ஆள்//

:-)))))))))))))))))))))))

இமேஜ் நேம் கலக்கல்

said...

:)))))))))))))))))

said...

யோவ்.. நீர் பேதில போக.!

ஒப்பிட வேற யாருமே கிடைக்கலையா.? வில்பரா.. தலை கிட்டல்லாம் என்னால பக்கத்துல கூட போகமுடியுமா?

கௌ ஷிட் இஸ் அவுட்கமிங்.!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

கிளைமாக்ஸ் கலக்கல்.!!

said...

போட்டோ தெரியலை. வீட்ல போய் பார்த்துட்டு கமெண்டு போடறேன்.

said...

கலக்ககல். இதுதான் அக்மார்க் குசும்பு.

said...

கலக்கல்.. சக்க லொள்ளுங்க ;))

said...

//டக்குன்னு ஒரு 'டவுடி' ஹீரோயினை //

ஒரு வேலை டவுட்டான ரவுடியா இருக்குமோ :))

நடு ராத்திரி உக்காந்து பேய் மாதிரி சிரிச்சுட்டு இருக்கேன்.. இந்த பதிவை படித்து..

said...

:)

பல்லா குசல் பார்ட்2
- திரைக்கதை வசனம்
குசும்பன்

said...

:)))))))))))

said...

lollu :))))))))

குசும்பா நீர் லொள்ளுசபாவிற்கு கதை எழுதப்போகலாம்யா

said...

ROTFL :)) auperb !!

said...

சரியான குசும்புய்யா உமக்கு! பின்னே குஜித்தெல்லாம் படத்துக்கு கதை கேட்குராருன்னு சொல்லிருக்கீக? அவர் படம்லாம் கதை கேட்டு நடிச்ச மாதிரியா இருக்கு? டாக்டர் தம்பியும் தறுதலயும் கதை கேட்டு நடிக்கிற காலம்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு!