Tuesday, September 29, 2009

சிரிக்க! சிந்திக்க அல்ல!

புளியமரத்துக்கு பக்கத்துல இருக்குற ஒத்த கீத்துக்கொட்டாதான் எங்கூரு பஸ்ஸ்டேண்டு. அதுல இத்துப்போன தகரத்துல எந்த காலத்திலயோ எழுதுன பயணியர் நிழற்குடை போர்டுங்கற பேர சொமந்துக்கிட்டுருக்குது.போனமுறை தேர்தலப்போ வச்ச தண்ணிக்குடம் மண்பானை ஒடஞ்சு அங்கயே கிடக்கும். ஆனா ஒருநாளைக்கு நாலு தரம் ரோட்டுல மண்ணள்ளி தூத்திக்கிட்டு வர்ற பஸ்ஸுல ஏறதுக்கு எவனும் இருக்கறதுதான் கெடயாது.

பஸ்டேண்டுக்கு எதிர்க்க இருக்கற பொட்டிக்கடையை தண்டல்ல எடுத்து, சக்தி சின்னதா கெரசின் ஸ்டவ் வச்சு டீக்கடையும் சேத்து நடத்திட்டு இருக்கான். ராத்திரில படுத்துக்கறதுக்காக வச்சிருக்கற ரெண்டு கட்ட பெஞ்சுல ஒண்ண எடுத்து வெளில டீ சாப்பிட வர்றவங்களுக்குன்னு போட்டு வச்சிருப்பான். சில சமயம் சும்மா உக்காந்து பெஞ்சை தேச்சுட்டு போறவங்கள அடுத்த முறை உக்காரும்போதே எவனையோ திட்டுற கணக்கா சக்தி காறித்துப்புறதால அங்க உக்கார்றதுக்கு முன்னாடியே டீ சொல்லிட்டுத்தான் பெஞ்சுல உக்காருவாங்க.

சக்தியோட கடைக்கு தவறாம வர்ற ஆளுங்கள்ல முக்கியமானவன் கா.கா.பீ அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு சுரேஸ்.ஆனா காலோஜூக்கு படிக்கப்போன பொறவுதான் ”ஸ்” வட மொழி எழுத்து என்பதை கண்டுபிடிச்சு இவனா இவனுக்கு வச்சுக்கிட்ட புதுப்பேரு. காகாபீ.

பழைய பேரு தேவலையா இருக்குதேன்னு யோசிக்கறவங்க காகாபீயோட அர்த்தம் கேட்டு மூக்குல விரலை வச்சு மூடிக்கிட்டு போவானுங்க. கார்லஸ் கார்மன் பீக்ஸ்கன் என்று மூன்று வெளிநாட்டு புரட்சி கதை எழுதறவங்க பேர சேத்து வெச்சுக்கிட்டு சுருக்கமா கேகேபீன்னு சொல்லிக்குவான். கே.கே.பீன்னாலும் காகாபீன்னாலும் மூஞ்சை சுளிக்குற ஊரா இருக்குறதால இவன் வருத்தப்படாதது ஆச்சரியம்தான். சிலசமயம் K.K.P சொன்னேன் என்று ஒரு சிகரட் வாங்கி வான்னு அடிக்கடி சின்னப்பசங்கள அனுப்பி வைக்கறப்ப அவங்க மூலமா கே.கே.பீ காக்காப்பீயா கொடி கட்டி பறந்துச்சு.

காகாபீ என்றதும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றது அவன் கையில் தெனமும் வச்சிருக்கற விதவிதமான தடியான பொஸ்தவம். ஒருநா கருப்பு சட்டை, தலையில் தொப்பி போட்டு தாடியோடு வாயில் அப்பத்தா குடிக்கும் சுருட்டோடு ஸ்டைலா போஸ் கொடுக்கும் ஒருவரோட அட்டை படம் இருக்கும், அடுத்த நாள் தொங்கு மீசை, வெட்டருவா மீசை என்று வித விதமான வெளிநாட்டுக்காரங்க போட்டோ அட்டை படமாக இருக்கும் புத்தங்கள் கையில் தவறாமல் இருக்கும். பேசுறப்ப சாதாரணமா வார்த்தையால த்தோயோளி, மானா பூனான்னு வார்த்தையை போட்டுத்தான் ஆரம்பிப்பான்.அந்த வகையில் முதல் புரட்சிக்கி வித்திட்டவன்.

கீழத்தெரு வடக்கு வூட்டுக்கார பய மாரி ஏழாவது வரைக்கும் படிச்சுட்டு அப்பனாத்தா பேச்ச கேட்டு படிப்ப விட்டவன். மாடுமேச்சுக்கிட்டு இருக்கான். சொந்தமா அடுத்த வருடத்திலாவது ஒரு எருமை மாடு வாங்கிடனும் என்று நோக்கத்துல இருக்கறதப் பாத்து அவன் மாமனே ஒரு மாட்டை இனாமா கொடுத்து அவர் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு. மாரி காகாபீயோட கொஞ்சம்நாள் ஸ்கோல்ல சேர்ந்து படிச்சதால நெறய்ய படிச்ச காகாபீக்கு ரசிகனாக மாறிட்டான்.

டீக்கடைக்கு காகாபீ வந்து உக்காந்திருக்கும்போது ஒடனே மாரி எழுந்து நின்னுப்பான். நிக்கலைன்னா டீ காசு மாரி தலையில வுழுந்துடும். ஆனா வுடாம காகாபீ, ”எலேய் மாரி! எதுக்கு எந்திருக்கிற.. நீயும் மனுசன். நானும் மனுசன். எதுக்கு இதெல்லாம், கைகட்டுறதுங்கறது அடிமைத்தனம்டா,குனியறது ஒரு குறீயிடுடா. அது இதுன்னு பேசிக்கிட்டே இருப்பான். ஒருதரம் மாரி கையில் வச்சிருந்து சினிமாப்படம் பாத்துட்டு இருந்த ஒத்தைப்பேப்பரை பார்த்துட்டு ”இந்த பேப்பர் பீ தொடைக்கக்கூட லாயக்கு இல்லை”ன்னு ஆரம்பிச்சு இந்தப்பேப்பரை நடத்துறவரை பத்தி அந்தப்பேச்சு பேசினான். அன்னிலேந்து வெறுங்கையில போண்டா தின்னாலும் திங்கறான் அந்த பேப்பரை வச்சி மடிச்சு கொடுத்தா தொடுறது போண்டாவை தொடுறது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதியாலதான் இந்தியா குட்டிச்சுவராப் போனதாவும் அவர்களை அடிச்சு துரத்தினால் தான் நாடு வெளங்கும்ன்னும் காக்காப்பீ அடிக்கடி சொல்லுவான்.

ஒருதரம் மாரி ”யாரு இவரு? சுருட்டு குடிக்கிறவரு” ஒரு பில்டர் சிகரெட் வாங்க கூட காசு இல்லாதவரும் இம்மாம் பெரிய புக்கு எழுதியிருக்கிறாரு என்று காகாபீ கையில இருந்த பொஸ்தக அட்டையில் இருக்கறவரைப் பத்திக் கேட்டதும் சத்தம் போட்டு சிரிச்சான் காக்காப்பீ. சிரிச்சுக்கிட்டே ”ம்ம்ம் இவரை பத்தி தெரியாததால் தான்டா இன்னும் உன் தெருவுல எல்லா வூடும் அப்படியே குடிசையா இருக்கு”ன்னான்.

”ஏனுங்க! இவரு இலவச வீடு கட்டிதர்றாரா”ன்னதும் காக்காப்பீ சிரிச்ச சிரிப்பு மாரியை என்னமோ செய்தாலும் அதுக்கப்புறம் அவன்கிட்ட பொஸ்தவம் பத்தி எதுவும் பேசுறது இல்லை.

காக்காபீக்ட்ட ஒரு பத்து நிமிசம் பேசினால் அதில் ஒரு நொடிக்கு குறைச்சல் இல்லாம ஈயம்,ஈசம்,அடிமை, இதுல்லாம வேறு ஏதும் இருக்காது.மாரிக்கு கா.கா.பீ என்றாலே ஒரு புரட்சியாளன் அல்லது தேவதூதன் ரேஞ்சுக்கு அவனை வைத்திருந்தான். காரணம் கா.கா.பீ ஒருதரம் பேசுறப்ப கட்டினா உங்க சாதி பொண்ணைதான்டா மாரி கட்டுவேன், இல்ல பைபாஸ் ரோட்டில் இராத்திரி நிக்கும் ஒருவளை சீக்கு இல்லாதவளா பார்த்துதான் கட்டுவேன் என்று சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.

நேத்தைக்கு மொத நாள், பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு இலை வாங்கிட்டு வரச்சொல்லி மாரியை டவுனுக்கு அனுப்பினாரு காரைவீட்டுக்காரர். மாரி சைக்கிளில் டவுனுக்குப் போனவன் வெய்யிலுக்கு சாஸ்தியா இருந்ததால சர்பத் குடிக்க ஒரு கடைக்கு போனான். அந்த நேரத்துல எதிர்க்க காகாபீ மெத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னாடி கையில் இருந்த தடி பொஸ்தவத்தை பக்கத்து பொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு வராண்டாவில் நின்னான்,நேர்ல பார்த்தா காறித்துப்பி செருப்பால அடிக்கணும்ன்னு சொன்ன சாதிக்கார ஆளு முன்னாடி கும்பிடு போட்டுட்டு, அவர் ஏதோ சொல்ல சொல்ல கை கட்டி குனிந்து நின்று கேட்டுக்கிட்டு தலையாட்டி இருந்தான் காகாபீ.

புரட்ச்சியாம் புண்ணாக்காம் போங்கடா மயிறாண்டிகளா...என்று முனுமுனுத்துக்கிட்டு சர்பத்தை குடிச்சு முடிச்சான் மாரி

39 comments:

said...

மொத அட்டெண்டென்ஸ்

said...

ஹி...ஹி..ஹி.. சிரிச்சாச்சு!

சிந்திகிறதா?.... அப்டின்னா????

said...

மீ த பர்ஸ்ட்

said...

அடக்கடவுளே, பர்ஸ்ட் இல்லியா?

said...

சகா, மூனு லட்சத்துக்கு வாழ்த்துகள்

said...

நல்லா இருக்கு குசும்பரே.

said...

3 லட்சத்துக்கு வாழ்த்துக்கள் குசும்பன்

said...

குட் ஒன் குசும்பா!

said...

செம காமெடி!!.. ஹி..ஹீ...ஹூ ஹூ....

said...

உங்களுக்கு இவ்ளோ நல்லா கதையெல்லாம் எழுதத் தெரியுமா? பொறவு ஏன் அடிக்கடி மொக்கைப்பதிவு போடுறீரு?

“தண்டல்”, “மெத்தை வீடு” - அடடா நம்மூரு வாசனை அடிக்குதப்பா

said...

கும்

said...

உள்குத்து புரியுது டே.
சும்ம பம்மாத்து புரட்சி பேசுற ம**ன் எல்லாம் இப்டித்தான் கும்பிட வேண்டிய இடத்துல கும்பிட்டுட்டு போயிட்டே இருப்பான். இவனுங்கள நம்பி பின்னாடி போறவன் தான் இடுப்புத் துண்டக் கூட இழந்துட்டு நிப்பான். சூப்பரா சொல்லியிருக்க.

அப்பறம் மச்சி அந்த 3 லட்சம் இதெல்லம் ஒரு அளவீடு கிடையாது. அதுக்கு நான் வாழ்த்தும் சொல்லப் போறதில்ல. இதையெல்லாமா கொண்டாடிட்டு இருப்பாங்க? அப்பறம் 5லட்சத்துக்கு பார்டி கொண்டாடுன எழுத்தாளருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும்.

said...

:))

said...

சும்ம பம்மாத்து புரட்சி பேசுற ம**ன் எல்லாம் இப்டித்தான் கும்பிட வேண்டிய இடத்துல கும்பிட்டுட்டு போயிட்டே இருப்பான். இவனுங்கள நம்பி பின்னாடி போறவன் தான் இடுப்புத் துண்டக் கூட இழந்துட்டு நிப்பான். சூப்பரா சொல்லியிருக்க.

said...

புரிஞ்சுடுச்சு.

said...

சிரிக்க மட்டும்னு சொல்லிட்டு சிந்திக்கவும் வெக்கறீங்க...என்ன பண்றது சிலர் அப்படி தான்...

said...

இந்தப் பதிவின் உள்குத்து எனக்குப் புரியவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் சாமியோவ்..

Anonymous said...

எல்லாம் சரி அந்த 5 லட்சத்துக்கு பார்ர்ட்டி கொன்டாடுனது யாருப்பா அதை மொதல்ல சொல்லுங்க ஜோசப்பு :-)

காகாபீ யாருன்னு நானா சொல்லட்டுமா நீயா சொல்லப் போறியா குசும்பா.

said...

வாழ்த்துக்கள்.. குசும்பரே.. பதிவுக்கும், 3லட்சத்திற்கும்..

said...

புரட்சி எழுத்தாளர் குசும்பன் வாழ்க :)

said...

ஹி..ஹி..ஹி

said...

உள்குத்துன்றாங்க. வெளிக்குத்துன்றாங்க. புரட்சின்றாங்க. சிந்திக்கன்றாங்க.

ஒண்ணுமே புரியல எனக்கு

said...

கா.கா.பீ உங்களை காமெடி பண்ணச்சொல்லி சொல்லியிருக்கலாம்!
ஆனால் நீங்கள் அவரை வச்சே காமெடி பண்ணுவது சரியா!

சரி களத்துல இருங்கியாச்சு இனி சாண், மொளம்னு அளக்கவா முடியும்!

said...

பதிவும், ஜோஸஃப் பின்னூட்டமும் அருமை

said...

வாழ்த்துக்கள்.. குசும்பரே.. பதிவுக்கும், 3லட்சத்திற்கும்..

said...

ஹா ஹா ஹா...

சிந்திக்கவும் கூட... :-)

said...

சிரிக்கவே வேண்டாம்.. சிந்திக்கலாம்!

பூரண கு(சு)ம்பனய்யா நீர் !

said...

அண்ணே சிரிக்கலாமா.. சிந்திக்கவும் வேணுமா? ;)

said...

நண்பர் குசும்பன் நல்லா எழுதுறீங்க.

said...

ஹாய் குசும்பு

நல்லாவே ஒருக்கு உங்க நாடகமெல்லாம் ..... ஓகே வாழ்த்துக்கள்..

அன்புடன் அகிலன் ...

said...

ஹாய் குசும்பு

கொஞ்சம் எனக்கு ஐடியா கொடுங்களேன் ...

என்னுடைய வலைப்பதிவை எல்லோரும் அறியும் படி செய்யவேண்டும் ......

சில தடங்கல்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை...

இனி தொடர்ந்து வலம் வருவேன்

said...

நீங்க உன்மையில மாகா பெரிய குசும்பு அப்ப அப்ப நிருபிக்றிங்க, நல்லா இருந்தது. கடைசி வரிகளை படிக்கும்போது நன்றாக சிரித்தேன். மிகவும் அருமை,உன்மை.

Anonymous said...

:) சிரிச்சுட்டோம். ஆனா சிந்திக்காம இருக்க முடியலை.

said...

சிந்திக்க வைக்கும் பதிவுதான்.

said...

என்னாச்சுன்னு தெரியலை. எம்மேலதான் மிஸ்டேக்கானு தெரியல.. முதல் தடவை இது நடக்குது.

ரெண்டு நாளா நானும் பல தடவை இந்தப்பதிவை படிக்க ஆரம்பிச்சு பாதி வர்றதுக்குள்ள கொட்டாவி கொட்டாவியா வந்துடுச்சுது. ஏதோ மிஸ்ஸிங்.!

said...

3 லாக்ஸ் வாத்துகள்.!

said...

அட்டகாசமான நடை நண்பரே... அசத்திட்டீங்க....

said...

சரவணா

நம்ம ஊரு கம்யூனிஸ்ட்டுக்காரங்கல்லாம் இப்படித்தான்..... தோலுரித்துக்கால்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

த.பாலா

said...

அருமை :))