டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி ஸ்கூலில் படித்ததை நினைக்கும் பொழுதே ஒரு சிறு புன்னகை வருகிறது, எத்தனை இனிமையான காலங்கள்.எங்கள் ஊரில் இருக்கும் சுத்துவட்டராத்துக்கும் அல்லது பதினெட்டு பட்டிக்கும் ஒரே ஸ்கூல் சுவாமி தயானந்தா மேல் நிலைப்பள்ளி சுருக்கமாக சு.த.மே.நி.பள்ளி சுற்றிலும் இருக்கும் கிராம மக்கள், ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்குதரமான கல்வி இலவசமாக வழங்கி வருகிறது.
ஒன்னாவது முதல் ஐந்தாவது வரை கீத்து கொட்டகைதான் அதன் பிறகு 6 வது முதல் ஒட்டு கட்டிடம் அதனால் எப்படா அந்த கிளாசுக்கு போவோம் என்று இருக்கும். கரு நீலகலர் டவுசர், வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்க சீருடை,ஆனால் எப்பொழுதும் அது வெள்ளை கலராக திரும்பி போனது இல்லை, சர்ப் எக்சலுக்கு வரும் விளம்பரத்தில் சிறுவன் மழை சேறு எல்லாம் அப்பி போவது போல் அது எப்பொழுதும் ஒரு வித காக்கி கலரில் தான் இருக்கும்.
காலையில் பள்ளிக்கூடத்துக்கு போவதும் திரும்ப வருவதுமே ஒரு ஜாலிதான் கொஞ்ச நாள் வரை ஆள் வைத்து சைக்கிளில் விட்டு வர செய்தவர்கள் இனி தேவை இல்லை இது ஊரை வித்துட்டு வந்துடும் என்பதாலோ என்னவோ கொஞ்ச நாட்களில் நிறுத்திவிட்டார்கள், அதனால் என்ன நடராஜாதான், ஜிப் வெச்ச ஜோல்னா பையை முதலில் முன்பக்கமாக கழுத்தில் தொங்கவிட்டு அதன் இரு பக்கத்தையும் கைகளுக்கு இடையில் அழுத்தி பிடிச்சுக்கிட்டு பையே அப்படியே பின்னாடி கழுத்து வழியா போட்டால் ஷோல்டர் பேக் மாதிரி ஆயிடும் அதுமாதிரி போட்டுக்கிட்டு போவோம் நடையில் ஒரு அலட்சியம் ஒரு ஸ்டைல் இருக்கும் அவை பெரும்பாலும் ரஜினியை இமிடேட் செய்வது போல் இருக்கும், சில சமயம் அந்த வழியாக வரும் மாட்டு வண்டியில் பைய மாட்டிவிட்டு அந்த வண்டி பின்னாடி வவ்வால் மாதிரி தொங்கிக்கிட்டு வருவோம்.
பள்ளிகூடத்தில் பேசிய பேச்சுக்கள்
டேய் நீ உட்டியாடா? இல்லடா, நீ உட்டியா?இல்லடா டேய் நீ உட்டியா?இப்படி ஒரு விசாரனை போகும், எவனும் ஒத்துக்கமாட்டானுங்கஇங்க வாங்கடா இப்ப பாரு கண்டுபிடிக்கிறேன் வட்டமா நில்லுங்கடான்னு நிக்க வெச்சு வரிசையா இப்படி சொல்லனும் ”ஆடு, மாடு, பசு,குசு” அவ்வ் என்னிடமே முடியும், இல்ல இல்ல திரும்ப கடைசியா ஒரு தடவை என்று இந்த முறை உசாரா அடுத்தவனிடம் இருந்து திரும்ப ஆரம்பிக்கும் ”ஆடு, மாடு, பசு, குசு” டேய் நீதான் டா விட்டவன் என்று யாரையோ ஒருவனை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம், லேசா சத்தம் மட்டும் வந்து இவன் தான் என்று தெரிஞ்சிடிச்சிஅவன் அவ்வளோதான் காலி அடுத்த ஒருவன் என்னைக்கு இவனை விட கொஞ்சம் சத்தமாக விட்டு மாட்டுறானோ அதுவரை அவன் பெயர் குசுவண்டி அல்லது குசுவுனி!
யாராவது மொட்டை போட்டுக்கிட்டு வந்துட்டா இந்த ரைம்ஸ் கண்டிப்பா இருக்கும்
“மொட்டையும் மொட்டையும்
சேர்ந்துக்கிச்சாம்
முருங்க மரத்துல ஏறிக்கிச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
வால் வால்ன்னு கத்துச்சாம்”
அதுபோல் எவனாவது டூ விட்டால் போடா இவரு பேசலைன்னா எங்க ஊட்டு கோழி முட்டைவுடாது பாரு போடா! அதுபோல் அடுத்த வார்த்தை ”டேய் அன்னைக்கு நான் வாங்கி கொடுத்த முறுக்கு, ஐஸ் எல்லாம் வாங்கி கொடுடா, சூடு சொரனை வெட்கம் மானம் இருந்தா எல்லாம் இப்ப வந்தாவனும்.”
”டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி” இது டூ விடும் பொழுது பாடப்படும் ரைம்ஸ்.
டூ விட்டவனோடு எவனும் சேரக்கூடாது டேய் அவன் என் கூட சண்டை இனி அவன் கிட்ட பேசுனா என்கிட்ட பேசாத! நீ என் ஆளா அவன் ஆளா? இப்படி கட்சி பிரிப்பது என்று ஜாலியாக இருக்கும்.
எவனாவது விளையாட்டில் தோற்றுவிட்டால்
”தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி தொட நடுங்கி
எறுமை மாட்டு மயிர் புடுங்கி” இப்படி ஒரு ரைம்ஸ்
சிலேட்டு குச்சி, பேனா கானும் என்றால் டேய் எடுத்தவன் கொடுத்துடுங்க இல்ல இப்ப வீட்டப்பத்தி கன்னாபின்னான்னு திட்டப்போறேன் என்றதும் வரும், அதுபோல் என்ன டா நீ எடுத்தியா என்று கேட்டா இல்ல வேணும்னா நீ எடுத்தவனை திட்டிக்க என்பார்கள்.
ஏப்ரல் ஒன்னாம் தேதி யாரு சட்டையிலாவது மை, காக்கா பீன்னு சொல்லி ஏமாற்றி விட்டு ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல் என்று கோரஸ் பாடுவது, எவன் மேலயாவாது காக்கா ஆய் போய்ட்டுன்னா மற்றவர்கள் கொடுக்கு வெச்சுக்கனும் இப்படி சின்ன சின்ன சேட்டைகள் நிறைந்தது பள்ளி நினைவுகள்.
தொடர் எழுத அழைத்த கலையரசனுக்கு நன்றி! மேலும் ஸ்கூல் சேட்டைகள் பற்றி முன்பு எழுதியது ஜாலியாக இருக்கும்
http://kusumbuonly.blogspot.com/2009/04/blog-post.html
http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_11.html
நானே மிகவும் தாமதமாக விளையாட்டில் பங்கெடுப்பதாலும், நண்பர்கள் பலர் தொடர்விளையாட்டால் டயர்ட் ஆகி இருப்பதாலும் நான் யாரையும் கூப்பிடவில்லை! மன்னிக்கவும்!

30 comments:
"குசு" வுட்டவனை கண்டுபிடிக்கறது சூப்பர்...நாங்க வேற மாதிரி கண்டுபிடிப்போம்..
ஆனா ஒண்ணு மட்டும் உலகத்துக்கே பொருந்தும்...கொலை செய்தாலும் ஒத்துக்குவாய்ங்க அனா "அது" வுட்டா மட்டும் ஒத்துக்கவே மாட்டாய்ங்க...
என்ன ஜி,
ஸ்கூலுக்கே மறுபடியும் போயிட்டு வந்த மாதிரி தெரியுது.
நல்ல அனுபவம்.
//நிக்க வெச்சு வரிசையா இப்படி சொல்லனும் 'ஆடு, மாடு, பசு, குசு' //
நீங்க அப்படியா. நாங்க
'சாக்கடா, பீக்கடா, கரைச்சான், குடிச்சான், விட்டான்' என்று சொல்வோம்
'விட்டான்'தான் மாட்டினவன்.
பழைய நெனப்புத்தான்
பேராண்டி......... பழைய நெனப்புத்தான்.
இங்கிலுபீஸு மீடியத்தில் படிச்சிப்புட்டு
இப்படி எதுவுமே இல்லையே ...
ஹையோ ஹையோ சொக்கா சொக்கா
தல 30 வருஷம் முன்பு நடந்தது கூட பசுமையா அபப்டியே ஞாபகம் இருக்கு உஙக்ளுக்கு.. :))
//ஒரு அலட்சியம் ஒரு ஸ்டைல் இருக்கும் அவை பெரும்பாலும் ரஜினியை இமிடேட் செய்வது போல் இருக்கும்,/
கொஞ்சம் மீசை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் வயதில் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு காதலின் தீபம் ஒன்று... நாம் ரஜினி மாதிரிதான் இருக்கோம். அவதான் மாதவி ரேஞ்சுக்கு இல்லைன்னு பண்ண அலப்பறை..
மறுபடியும் தலைவர் சொன்னதுதான்..
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கு சுகமாய் இருப்பது யார் காட்டு...
பட்டாசு பதிவு சகா
:))
//டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி//
ஹலோ பாசு.. அப்பவே போலீஸ்காரன் பொண்டாட்டிகிட்ட ரொட்டி கேட்டுறீங்க?
சொன்ன மாதிரி கடனை கரைக்டா கழிச்சிட்டீங்களே?
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!!
ஏதோ ஏக் தம்முல முடிச்ச மாதிரி இருக்கு..
ஆனா, எல்லாவற்றையும் சொன்ன மாதிரியும் இருக்கு!
மிக நல்ல பதிவு தல..மீட்டிவிட்டீர்கள்..கலக்கல்.
அருமையான பதிவுங்க நண்பர் குசும்பன்
ஆரம்ப பள்ளிக்கே போய் தரையில் உட்கார்ந்து பாடம் கேட்டு திரும்பி வந்தார் போல இருக்கு.நாங்க பைக்கட்டை முடிச்சி போட்டு தலையில் மாட்டிப்போம்.நாங்க நீங்க சொன்ன சேட்டைகளோட சேர்த்து நாயுருவி அடிப்பது.ஊமத்தங்காய் அறுத்து அடுத்தவர் சட்டையில் அச்சு வைப்பது.
காகிதத்தை நன்கு சவித்து அதை வகுப்பு சீலிங்கில் விசிறி ஒட்டுவது.(இன்னும் கூட இருக்க கூடும்)
பூனகஞ்சான் இலையை ஏமாந்தவர்கள் மீது தடவுவது என அநியாயம் பண்ணியிருக்கோம்.
சூபரா சொன்னீங்க.
// இவனை விட கொஞ்சம் சத்தமாக விட்டு மாட்டுறானோ அதுவரை அவன் பெயர் //
விளையும் பயிர்....... :)
:))
மாட்டுவண்டி மேட்டர், பை ஸ்டைலாக போடுவதுன்னு எல்லாம் நிறைய பழைய நினைவுகளை கிளறிடீங்க போங்க :)
அப்பவே நீங்க ‘குசு’ம்பரா தான் இருந்திருக்கீங்க போல :)
//வால் வால்ன்னு கத்துச்சாம்”//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!
///”டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி”///
ஐயோ..... ஐயோ.....
நான் இது போல பாடல் பாடி என் ஆசான் கிட்ட அடி வாங்கி கட்டி இருக்கேங்க....
நினைவுகள் அருமையாக இருந்தது. (பேசாம உங்க வகுப்பிலேயே படித்திருக்கலாம்னு தோனுது.....)
ச்சூ ச்சூ மாரிலே ஆரம்பிச்சு எல்லாத்தையும் புட்டு வெச்சிட்டீங்க
//மொட்டையும் மொட்டையும்
சேர்ந்துக்கிச்சாம்
முருங்க மரத்துல ஏறிக்கிச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
வால் வால்ன்னு கத்துச்சாம்”
//
ஹா ஹா இப்போவெல்லாம் இங்லீசுபிசு ஸ்கூலுலே சொல்றாங்களோ என்னவோ
அருமையான குசும்பான பதிவு, பள்ளிக்காலத்திற்கு மீண்டும் அழைத்துசென்றது என்னவோ உண்மைதான்
ஆனா ஒண்ணு மட்டும் உலகத்துக்கே பொருந்தும்...கொலை செய்தாலும் ஒத்துக்குவாய்ங்க அனா "அது" வுட்டா மட்டும் ஒத்துக்கவே மாட்டாய்ங்க...
//
இப்ப மட்டும் என்ன வாழுதாம் :)
ஆரம்ப பாடசாலை நினைவுகளை அப்படியே மறக்காம பதிவு செய்திருக்கின்றீர்கள். அருமையான பதிவு.:)
நல்ல பதிவு அய்யா.
பள்ளிக்கு திரும்ப நினைவு போட்டுது.
எங்க பள்ளில குசுமுட்டி எண்டு கூபிடுவம்
கலக்கல் பதிவுங்க..
அந்த மாட்டு வண்டில தொங்கீட்டுப் போரதல்லாம்... அடடா..
ஆடு, மாடு, பசு, குசு.. விளையாட்ட யாருமே தொடல..
அருமையான நினைவுகள் :)
நன்றி விமர்சகன் கரீட்டா சொன்னீங்க ஒத்துக்கவே மாட்டானுங்க:)
நன்றி குடிகாரன்
நன்றி சுல்தான் பாய், இதில் இருந்து ஒன்னு நல்லா தெரியுது பல காலமாக எப்படியாவது “விட்டவனை” கண்டுபிடிக்க முயற்சிகள் ஊர் முழுக்க நடந்திருக்கு:))
நன்றி ஜமான், இங்கிலீஸ் மீடியத்தில் இதுமாதிரி எல்லாம் கிடையாதா?:((
கார்க்கி இங்க இந்த 30 என்ற அரிய தகவல் சபைக்கு தேவையா? அவ்வ்வ்வ்வ்:) பாக்கெட் பலசமயம் ஓட்டையாக இருக்கும்:)
கோபி:))))
நன்றி கலையரசன் ஏக் தம்மோ தோ தம்மோ சொன்னா சொன்னப்படி எழுதிடுவோமுல்ல:))
நன்றி நர்சிம்
நன்றி கார்த்திகேயன் அந்த விளையாட்டுக்களும் உண்டு:)
நன்றி வெயிலான்
சென்ஷி:))
நன்றி ஆதவன்
இல்ல வால் அதை தவிர வேற எதுவும் செய்யல:)
மிக்க நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி அபுஅப்சர்
நன்றி முருகேசா
நன்றி வேந்தன்
நன்றி நிதா
நன்றி செந்தில்வேலன்
//வரிசையா இப்படி சொல்லனும் ”ஆடு, மாடு, பசு,குசு” அவ்வ் என்னிடமே முடியும், //
'குசு'ம்பு பெயர் காரணம் இதுதானா!!
நல்ல நினைவுகள்...
-அரசு
ஹை நாங்களும் ஸ்கூல் பேகை இதுபோலதான் மாட்டிக்கிட்டு போவோம்
தாரணி பிரியா said...
ஹை நாங்களும் ஸ்கூல் பேகை இதுபோலதான் மாட்டிக்கிட்டு போவோம்
டபுள் ரிப்பீட்
அழகா எழுதியிருக்கீங்க.
’குசு’ம்பு
நல்ல நினைவுகள்.
சூப்பர்ஆ எழுதியிருக்கீங்க.
ஸ்கூலுக்கே மறுபடியும் போயிட்டு வந்த மாதிரி இருக்கு.
சூப்பர்.
athukku ellam araichi panni kandupudiththa unkalin thiramai remba porisu sir
//நினைவுகள் அருமையாக இருந்தது. (பேசாம உங்க வகுப்பிலேயே படித்திருக்கலாம்னு தோனுது.....)
//
இவன் கூட படிச்ச என்னைய பார்த்துமா இவுருக்கு இப்டி ஒரு ஆசை?
really good article
rotfl
Post a Comment