Sunday, November 25, 2007

ஜெயலலிதா+ சாய்பாபா+ எட்டியூரப்பா+ காங்கிரஸ் கிருஷ்ணசாமி எல்லோரும் ஒரே இடத்தில்.









படம் பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

Wednesday, November 21, 2007

விருப்பம் இல்லை என்றாலும் ரேஷ்மாவுக்காக இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?

சரியாக தேதி நினைவில்லை ஆனால் அன்றுதான் அவள் என்னிடம் முதன் முதலாக பேசினாள், லைக்யூ லைக்யூ என்ற சிட்டிசன் பாடலை ரிங் டோனாக கொண்ட என் மொபைல் சினிங்கியது, புதிய நம்பராக இருந்ததால் யாராவது கிளைண்ட் தான் போன் போட்டு திட்ட போகிறான் என்ற பயத்திலேயே எடுத்து ஹலோ என்றேன், மறு முனையில் நாய் போல யாராவது கத்துவார்கள் என்று நினைத்தஎனக்கு இனிய ஒரு பெண் குரல் ஹலோ என்றது சரி ராங் நம்பர் தான் போல என்று நினைத்த எனக்கு சராவா என்று கேட்டவுடன்மிகவும் ஆச்சர்யமாக போய்விட்டது.

மொபைலில் லோவாக இருந்த பேட்டரி கூட சர் என்று எகிறி புல் ஜார்ஜ் ஆனது, இருக்காத பின்னே முதன் முதலில் என் மொபைலுக்கு ஒரு பெண் குரல் அதுவும் என் பெயரை சுருக்கமா யாரும் சரா என்று கூப்பிட்டால் உருகி போய்விடுவேன்.மொபைலும் அது பங்கு விசுவாசம் காட்டியது. அழகாய் பேசினாள் மிகவும் இனிய குரல் கேட்டுகொண்டே இருக்கலாம் போன்று இருந்தது. எப்படி என் நம்பர் உங்களுக்கு கிடைத்தது என்னை எப்படி உங்களுக்குதெரியும் என்ற என் கேள்விக்கு சிரிப்பு ஒன்றையே பதிலாக தந்தாள்.

என் பிறந்த நாளை கூட சரியாக சொன்னாள் எதிர் பார்கவில்லை அதை. அவள் பேச்சில் திக்கு முக்காடி போனேன்.

சரி மறுநாள் கூப்பிடுகிறேன் என்று சொன்னால் மனசுக்குள் பட்டாம் பூச்சு பறக்கும் என்றார்கள் அது எல்லாம் வெளியே வந்து பறந்தது. அன்றைய தினம் மிகவும் மகிழ்சியாக தூங்கினேன் எங்களுக்கு இடையேயான பேச்சு மிகவும் நெருங்கியது கடந்த ஒரு வாரமாக இப்பொழுது எல்லாம் ஹாய் டியர் என்றே கூப்பிடும் அந்த இனிய குரலுக்காகவே காத்திருக்க தொடங்கினேன். தினம் ஒரு முறையாவது அவள் என்னிடமும் நான் அவளிடமும்பேசுவது வழக்கம் ஆனது.

என்னிடம் கடைசியாக அவள் கேட்டால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்காக அதை செய்தேன், அதன் பிறகு அவளுக்கும் எனக்குமான உறவு சடார் என்று நின்றுவிட்டது.

இதோ அவள் நினைவாக கையில் ஒரு கிரிடிட் கார்டு.

Sunday, November 18, 2007

நன்றி நன்றி நன்றி

ரொம்ப சந்தோசமாக இருந்தது நேற்று தினமணி கதிரில் உங்க பிளாக் என்று பாஸ்டன் பாலாவின் பின்னூட்டத்தை பார்த்தபொழுது, சரி என்று கிளிக் செஞ்சு பார்த்தா முதல் முதலாக இருந்தது தஞ்சாவூர் குசும்பு சரி ஊர் பேரும், நம்ம பிளாக் பேரும் ஒன்றாக இருந்ததால் தவறுதலாக என்னை சொல்லிவிட்டார் என்று நினைச்சேன் பிறகுதான் கீழே என் பெயரும் இருந்தது.


என்னாடா நம்மளை பத்தி சொல்லி இருக்காங்கன்னு பார்த்தா UAE வரும் முன் என்று எழுதிய பதிவை பற்றிசொல்லி இருக்காங்க. (இந்த பதிவு ஜமாலன் பதிவை படிச்ச பிறகுதான் எழுதனும் என்று தோனியது, அவருக்கும் வித்யாகலைவாணிக்கும் நன்றி)



அட நம்ம பிளாக்கையும் கவனிக்கிறாங்களா என்று என்னும் பொழுது வரும் சந்தோசம் தனிதாங்க. நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை என்னுடைய வலை பதிவை பற்றி இருக்கும் பதிவுகளில் 99.9999% எல்லாம் யாரையாவது கலாய்ச்சது தான். நாம என்னா இலக்கியம் ,தமிழ் வளர்கவா பிளாக் ஆரம்பிச்சு இருக்கோம் படிக்கும் பொழுது ஏதோ ரெண்டு பேர் சத்தம் போட்டு அல்ல லேசாக புன்முறுவல் செஞ்சா கூட போதும் என்றுதான் ஆரம்பிச்சோம்.இதுவரை யாரிடம் இருந்து திட்டோ, அல்லது குட்டோ வாங்காமல் நிறைய பேரை கலாய்ச்சாச்சு, நிச்சயமாக இது வரை யாரையும் மனம் நோகும் படி செய்தது இல்லை, சம்மந்த பட்டவரே மிகவும் ரசிச்சு சிரிச்சேன் என்று சொல்லும் பொழுது மிகவும் மகிழ்சியாக இருக்கும்.


இதுவரை ஆனந்தவிகடனில், தினமலரில் அவரை பற்றி வந்து இருக்கு இவுங்களை பற்றி வந்து இருக்கு என்று பார்க்கும் பொழுது எல்லாம்ராசா ரொம்ப ஆசை படாத உன் லெவலுக்கு எல்லாம் நெட்டில் எழுத இடம் கொடுத்ததே பெருசு இதுல உங்க பேரு புக்கில் வேறவரனுமா என்று ஒரு குரல் ஒலிக்கும். அதுக்காக ஒழுங்கா உருப்படியா எழுதனும் என்ற தப்பான என்னம் மட்டும் வரவே இல்லை, இப்பொழுது வந்துவிட்டதாலும்வ்அது போல் என்னம் வரபோவதும் இல்லை எப்பொழுதும் போல நாம் கலாய்போம் .
சரிதானே:)



நான் ஏதோ என் லெவலுக்கு துறைசார்ந்த பதிவில் என் பதிவு வர என்ன செய்யலாம் என்று யோசிச்சு பதிவு போட்டுக்கிட்டு இருக்கிறேன்.


பிறகு தஞ்சாவூரானுக்கும் ஜோ / Joe வாழ்த்துக்களை தகவலை சொன்னது மட்டும் அல்லாமல் தனி பதிவாக போட்ட பாலாவுக்கும் முக்கியமாக தினமணிக்கும், பாசகார குடும்பம் தனி பதிவு போட்டு கொண்டாடுகிறது அவர்களுக்கும் நன்றியை சொல்லிக்கிட்டு நன்றி உரையை முடிச்சுக்கிறேன்.

Saturday, November 17, 2007

இன்று முதல் உதயம்----நீங்க ரெடியா?

என்னோட குரு அல்லது ரோல்மாடலா யாரை நினைக்கிறாய் என்று கேட்டால் டக் என்று சொல்லும் பதில் ஜொள்ளுபாண்டி தான் என்று அவரை மானசீக குருவாக ஏற்றுக்கிட்டு பல நாள் ஆச்சு ஆகையால் அவரை கேட்காமலே அவரை கெளரவ தலைவராக போட்டு நிஜ தலைவராக நம்மோட அண்ணாச்சியை போட்டு அவரின் தலைமையில் இன்று முதல் இனிய உதயம் அகில உலக ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம். வெள்ளி கிழமை அவுங்க இங்க வந்து சீனி கம் சீன் கம் என்று பாடி என் நெஞ்சில் கம் போல ஒட்டிக்கிட்டாங்க.


அவுங்க இங்க பாடிய அந்த பாட்டில் இருந்து ஒரு வீடியோ.






யார் யார் எல்லாம் ரசிகர் மன்றத்தில் இனைய விருப்பமோ அவர்கள் எல்லாம் பேர் கொடுங்க.

Friday, November 16, 2007

அமீரகத்தில் இளையராஜா!

எனக்கு இளையராஜாவை விட ரஹ்மானை பிடிக்கும் ஆனால் அமீரகத்துக்கு வரும் பொழுது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, கண்ணுக்கு தெரியுதோ தெரியவில்லையோ அதை ஸ்டேடியத்தில் கூட்டத்தோடு அமர்ந்து கேட்பது, அல்லது பார்பது என்பது ஒரு தனி சுகம்.(சென்னையில் ஸ்டேடியத்தில் அமர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்த அனுபவம்).

6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று சொன்னாலும் 7.45க்குதான் ஆரம்பம் ஆனது ஆரவார டிரம்ஸ் இசைக்கு நடுவே இளையராஜா வந்தபொழுது அரங்கமே அதிர்ந்தது, எடுத்தவுடனே ஜனனி ஜனனி அகம் நீ... பாட்டு பாடி ஆரம்பித்தார் என்ன ஒரு குரல் அப்படியே எல்லாத்தையும் மறக்க செய்யும் இசை.

அடுத்து பவதாரனிக்கு அடுத்து SPB பாடிய இளைய நிலா பொழிகிறது...அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னும் அதே துள்ளல் அதே உற்ச்சாகம். ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பேச்சு மனுசனுக்கு வயசே ஆகாது போல.

அடுத்து ஸ்ரேயா கோசல் காற்றில் எந்தன் தீபம் காணத ... இனி நான் தனியாக ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடலாம் என்று இருக்கேன் என்ன ஒரு அழகு. சின்ன குயில் சித்ரா புன்னகை மன்னன் படத்தில் இருந்து ஒரு பாட்டு பாடினாங்க இப்படி எல்லாமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கலக்கினாங்க.


ஆனால் என்னை போல் ஆளுங்களுக்காக அப்ப அப்ப ஒரு ஒரு குத்து பாட்டு போட்டு இருந்தால் இன்னும் நிறைவாக இருந்து இருக்கும் தளபதியில் இருந்து பாட்டு என்றவுடன் அடி ராக்கமா கைய தட்டு என்று நான் உற்சாகமாக ஆட ரெடியாகும் பொழுது...சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று பாட்டு போட்டு ஏமாத்தினார்.

ஸ்ரேயா கோசல் சீனி கம் சீனி கம் என்று ஹிந்தி பாட்டை அந்த அழகு தேவதையும் SPB அதே பாட்டை மஞ்சம் வந்த தென்றலுக்கு அரங்கேற்றவேளை பட பாட்டை பாடும் பொழுது ஒரு கட்டத்தில் பொருமை இழந்து இளையராஜா ஸ்டாபிட் என்று கத்த அரங்கமே அமைதியானது பின்னனி இசை சரி இல்லாததால் கோப பட்டார் என்று SPB யால் விளக்கம் சொல்லபட்டது .அதன் பிறகு குஷ்பு வந்து ஸ்டேஜ் என்றாலும் ஒழுங்காக கொடுக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டிதான் உங்களிடம் பிடிச்சது என்று சொல்ல ஜெயராமும் ஆமா அதுதான் ராஜா என்று சொல்ல சின்சியாரிட்டி என்று நீங்க சொன்னா நான் அதுவாக இல்லை நான் அதுவாக இருந்தால் சின்சியாடிட்டி இருக்காது அதில் ஒழுங்கு இருக்காது ..இப்படி ஏது ஏதோ சொல்ல ஜெயராமுக்கும் ஒன்னும் புரியவில்லை எனக்கும் ஒன்னும் புரியவில்லை.

ஆனால் சங்கீதம் என்றால் என்னா சங்கீதாவா எவ அவ என்று கேட்கும் ஞானசூன்யம் ஆகிய எனக்கே இசையில் பட நெருடல்கள் பல தப்புகள் தெரிந்தது, உதாரனத்துக்கு அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது.. பாட்டு இசை செம சொதப்பல்.
இப்படி பல இருந்தாலும் கொடுத்த 100Dhs க்கு மிகவும் உபயோகமாக இருந்தது.


நான் ரசித்தபாடல்கள்
ஜனனி ஜனனி---- இளையராஜா

இளையநிலா பொழிகிறது-------SPB

காற்றில் எந்தன் கீதம், சீனி கம் சீனி கம்---- ஸ்ரேயா கோசல்

சொர்கமே என்றாலும்----இளையராஜா, சாதனா சர்கம்.

ராசாத்தி உன்னை காணாத (வைதேகி காத்திருந்தாள்)-- மஞ்சரி, விஜய் ஏசுதாஸ்.

அறியாதவயது புரியாதமனசு ரெண்டும் இங்கே காதல் செய்யுது---இளையராஜா
அந்திமழை பொழிகிறது--- SPB
மதுரை மரிகொழுந்து வாசம் ---- மனோ

சொதப்பிய பாடல்கள்
ஒளியிலே தெரிவது ,ராகம்மா கையதட்டு ---இது கடைசியாக கிளம்பும் பொழுது போட்டாங்க செம சொதப்பல் இசை.

ஒரு சிரி கண்டால் ஒரு கனி கண்டால் அது மதி--- மலையாள பாட்டு

இப்படி பல பாட்டு இசை சொதப்பலாக தெரிந்தது.

நான் ரசித்த பாடல் அல்லாத சில விசயங்கள்.
SPB யின் பேச்சு + குறும்பு
சின்ன குயில் சித்ராவின் சிரிப்பு

ஸ்ரேயா கோசல், மஞ்சரியின் அழகு.

என்னை கோப படுத்திய சில விசயங்கள்.
எல்லோரும் மாமேதை, உலகம் காணாத இசையமைப்பாளர் என்று எல்லாம் புகழ்ந்து கொண்டே இருந்தது(அரசியல் மேடை போல), எல்லோரும் அவர் காலில் விழுந்தது,SPB, சித்ரா எல்லாம் இருக்கும் பொழுது தேவை இல்லாமல் பவதாரனியை முன்நிலை படுத்தியது அந்த பெண் சொதப்பியது வேறு விசயம்.சர்ப்ரைஸாக வந்த யுவனும், கார்த்திக்கும் என் பாட்டை பாடு என்று சொன்னதையே திரும்ப திரும்ப 10 நிமிசம் சொல்லி டென்சன் ஆக்கி ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று அப்பாவுக்கு மேலும் புகழ் சேர்த்தார்கள்.

SPBயை தவிர மீதி அனைவரும் பாடும் பொழுதும் ஸ்கூல் HM முன்பு பயந்து நிற்க்கும் குழந்தை போல ஒரு வித இருக்கமாக இருந்தார்கள்.
சொர்கமே என்றாலும் பாட்டு வரியை மாற்றி சாதனா சர்கமும் இளையராஜாவும் பாடும் பொழுது பாட்டை நிறுத்தி சாதனா சர்கம் என்ன பாடுறாங்க புரியுதா அப்படின்னு கேட்டு விட்டு அவரே! மல்லி பூ போல பிச்சி பூ போல என்று பாடுறாங்க என்று இளையராஜா விளக்கம் கொடுத்தார் இதுபோல பல முறை செய்தார் அப்படி செய்து சாதனா சர்கத்தை அவமதிச்சு இருக்க வேண்டி இல்லை. தமிழ் உச்சரிப்பு சரி இல்லை என்றால் அவர்களை அழைத்து வராமலே இருந்து இருக்கலாம்.

நிகச்சிக்கு வந்தவர்கள்:

இளையராஜா, SPB, சித்ரா, மனோ,பவதாரனி, மதுபால கிருஸ்னன், மஞ்சரி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோசல், விஜய் ஏசுதாஸ், திப்பு.

தொகுத்து வழங்கியவர்கள் ஜெயராம், குஷ்பு.
நிகச்சிக்கு வந்த வலைபதிவர்கள்:
துபாயில் இருந்து ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் போய் இரவு அங்கிருந்து திரும்பி வந்து காலையில் ஆபிஸ் கிளம்புவது என்பது இயலாத காரியம் என்று போகவேண்டாம் என்று முடிவு எடுத்தபின்பு நான் கொண்டுவந்து விடுகிறேன் டிக்கெட் எடு என்று சொன்னதாலே டிக்கெட் எடுத்து இந்த நிகழ்ச்சிக்கு போனேன் அதற்கு காரணமான லொடுக்குக்கு நன்றி. இவரு VVIP சீட்டில் உட்கார்ந்து இருந்ததால் தப்பிச்சார்.
முன்னாடியே போயாச்சே பினாத்தலார் குடும்பத்தோடு வருகிறேன் என்று சொன்னாரே என்று இரண்டு சீட் பிடிச்சு வெச்சிட்டு எப்ப வர்ரீங்க உங்களுக்காக 2 சீட் பிடிச்சு வெச்சு இருக்கேன் என்று போன் போட்டு சொன்னா 2 சீட் எல்லாம் பத்தாது ஒரு 10 சீட் புடிங்க என்கிறார் எனக்கு தூக்கி வாரி போட்டது என்ன டா wifelogy பாடம் எடுக்கும் வாத்தியாரே இப்படியா என்று? பிறகு நான் அதிர்ச்சி ஆனது தெரிஞ்சு அவரே நண்பர் குடும்பமும் வருகிறார்கள் என்றார்.
சுல்தான் பாய் வந்து இருக்கிறார் ஆனால் பார்கமுடியாமல் போய்விட்டது.

Thursday, November 15, 2007

முதன் முதலாக துறைசார்ந்த பதிவில் என்னுடைய பதிவு வர சிறு முயற்சி

முதன் முதலாக துபாய் பற்றியும் விசா பற்றியும் ஒரு பதிவு எழுதினேன் அது அனைவருக்கும் பிடித்துவிட்டது எல்லோரும் முதன் முதலாக ஒரு உருப்படியான பதிவு எழுதி இருப்பதாக சொன்னார்கள், எனக்கும் பல மாதமாக துறைசார்ந்த பதிவு பக்கத்தில் வருவது போல் ஒரு பதிவாது எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன் அந்த பக்கத்தில் எப்பொழுது மா.சிவக்குமார், தீபா, இப்படி ஒரு சிலரை மட்டும்தான் காணமுடிகிறது.
இனி அங்கும் என் பெயரை தெரியவைக்க ஒரு சிறுமுயற்ச்சி.


தமிழக போக்குவரத்து துறை கடந்த ஆட்சியில் செய்த நல்ல செயல்:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கட்டுபாட்டில் இயங்கும் அனைத்து போக்குவரத்து கழக்நிறுவனங்களின் சார்பாக வழங்கப்பட்ட மொத்த நன்கொடைத் தொகையான ரூ5,31,57,00 க்கான காசோலையை மாண்புமிகுபோக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் திரு இரா.விசுவநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம்4-1-2005 அன்று வழங்கினார். அவ்வமயம் அரசு போக்குவரத்து துறை செயலாளர் திரு.இரா,கற்பூரசுந்தரபாண்டியன் உடன் இருந்தார்.

http://www.tn.gov.in/transport/tpt-tsunami1.htm

இந்த பதிவு போக்குவரத்து துறை சார்ந்தது இது ஏதேனும் எதிரிகள் சூழ்சியினால் துறை சார்ந்த பதிவில் வராமல் போனால்,அடுத்து
படகு துறை
விமான போக்குவரத்து துறை
கப்பல் போக்குவரத்து துறை
பற்றி எல்லாம் எழுதவேண்டி இருக்கும்.

இனி நானும் சீரியஸ் பதிவர்தான் ஓய்!!! யாரு யாரு எல்லா போட்டிக்கு ரெடி!!!

Monday, November 12, 2007

UAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை!

1) விசா

2) சம்பளம்

விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு வந்து தங்கி இரண்டு மாதம் வேலை தேடுவார்கள் தகுதி இருப்பின் இரண்டு மாத காலத்துக்குள் வேலை கிடைத்துவிடும் இல்லை என்றால் ஒரு மாதம் 500Dhs பணம் கூடுதலாககொடுத்து விசாவின் ஆயுளை நீடிச்சுக்கலாம்.
ஆனால் இப்பொழுது அதுக்கும் ஆப்பு வைத்துவிட்டது விசிட் விசாவில் யாரும் தங்கி வேலை பார்பது தெரியவந்தால் 50000Dhs அபராதம் அந்த company.
ஆகையால் பல company விசிட் விசா ஆட்களை எடுக்கதயங்குகிறார்கள்.

விசிட் விசாவில் வேலைபார்பதின் நன்மை தீமைகள்.

நன்மை: இரண்டு மாத காலத்தில் company நிஜ முகம் தெரிந்துவிடும் சம்பளம் ஒழுங்கா வருமா வராதா? company எதிர்காலம் எப்படி, இல்லை மன்னாரன் companyயா என்று கண்டுபிடித்துவிட்டு ஈசியாக வேறு வேலை தேடிக்கலாம்.

தீமை: லேபர் லா படி எந்த பலனையும் அடைய முடியாது, சம்பளம் தரவில்லை என்றால் கூட ஒன்னும் செய்ய முடியாது.

அடுத்தது எம்ளாயிமெண்ட் விசா:
இதில் இரண்டு வகை இருக்கிறது

1) Free zone visa 2) LLC visa

Free Zone Visa:
இது நம்ம ஊரில் இருக்கும் தொழிற்பேட்டை போன்றது ஒரு இடத்தில் பல companyகள் இருக்கும் அவை அனைத்தும் வெளிநாட்டு முதளீட்டார்களுக்கானது , வெளிநாட்டவர் தனியாக பிசினஸ் செய்யவேண்டும் என்றால் அவர்கள் இது போல் Freezone இடத்தில் ஆரம்பிக்கவேண்டும், அப்படி ஆரம்பிக்கும் company விசாவுக்கு எந்த வித கட்டுபாடும் கிடையாது,
1) படிப்பு சான்றிதழ் சரிபார்பு தேவை இல்லை (இல்லை என்றால் அதுக்கு ஒரு 10000ரூபாய் செலவு ஆகும்)

2) வேலை பிடிக்கவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் ரிசைன் செய்யலாம்

3) எங்கு வேண்டும் என்றாலும் அடுத்த வேலைக்கு மாறலாம் எந்த தடையும் கிடையாது.

LLC visa:
Free Zone யை தவிர வேறு எங்கும் ஒரு சிறு டீ கடையோ அல்லது தொழிற்சாலையே ஆரம்பிப்பதாக இருந்தாலும் இங்கு இருக்கும் UAE குடிமக்களில் யாரேனும் ஒருவரை நீங்கள் பார்ட்னராக அவர் பெயரில் ஆரம்பிக்கதான் முடியும், அவர்கள் துனை இன்றி ஆரம்பிக்க முடியாது, ஏன் என்றால் இது அவர்கள் நாட்டில் தொழில் செய்வதால் அவர்களும் பயன் அடையனும், அதுக்கு என்று 40% அவருக்கு லாபத்தில் கொடுக்கவேண்டும் என்று அக்ரிமெண்ட் எல்லாம் போட்டவேண்டும் அப்படி ஆரம்பிக்கும் கம்பெணி LLC ஆகும். அதில் எம்ப்ளாயிமெண்ட் விசா கிடைக்க சான்றிதழ் சரி பார்த்தல் அவசியம்.
இதில் இருந்து அடுத்த company மாறுவது என்பது குதிரை கொம்பு.இந்தவிசாவை நீங்கள் கேன்சல் செய்துவிட்டுதான் அடுத்தவேலை மாறவேண்டும் அப்படி கேன்சல் செய்தால் அட்டோமேட்டிக்காக நீங்கள் ஆறுமாத காலம் இங்கு அமீரகத்தில் வேலை செய்ய முடியாதபடி லேபர் விசா தடை விழுந்துவிடும். ஆனால் நீங்கள் விசிட் விசாவில் வரலாம் அப்படி வந்தால் மேலே சொன்ன பல சிக்கல்கல் இருக்கிறது.
சில நல்ல உள்ளம் படைத்த company ஆட்கள் உங்களை ஒரு வருடம் உள்ளே நுழையமுடியாத படி Entrey Band போட்டுவிடுவார்கள்.

சில பெரிய company நினைத்தால் அல்லது கூடுதலாக 12,000Dhs பணம் கட்டினால் அந்த தடையை நீக்கமுடியும்.
முன்பு நான் இருந்தது Free Zone company ஆகையால் இரண்டு வருடம் கழித்து வேலை மாறினேன் இப்பொழுது இருப்பது LLC சில பல பிரச்சினைகளால் மாறனும் என்று நினைத்தாலும் மாறமுடியாமல் தவிக்கிறேன். நான் விளையாட்டக சொன்னேன் இனி அடுத்தவேலை என்றால் மலையாளி இல்லாத இடமாகதான் மாறனும் என்று தோழர் சொன்னார் அப்ப நீ எங்கயும் வேலை செய்யமுடியாது என்று.

அடுத்து சம்பளம்: துபாயில் ஒரு நான்கு பேர் மட்டும் இருக்கும் ரூமில் ஒரு பெட் ஸ்பேஸ் வேண்டும் என்றால் நீங்கள் கொடுக்கவேண்டியது குறைந்தபட்சம் 800 Dhs,வீட்டில் சமைத்து சாப்பிடும் ஆள் என்றால் பிரச்சினை இல்லை ஆனால் கிட்சனோடு ரூம் என்றால் குறைஞ்ச பட்சம் 1000Dhs கொடுக்கவேண்டும். நான் சொல்வது ஒரு ரூமில் நால்வராக தங்க.கல்யாணம் ஆனவர் மனைவியுடன் தனி ரூமில் தங்க வேண்டும் என்றால் வாடகை 4000Dhs துபையில், சார்ஜாவில் 1800ல் இருந்து கிடைக்கிறது. மற்றொரு குடும்பத்தோடு சேரிங் கிட்சன் என்றால் 2500dhs. முன்பு 25கிலோ அரிசி 45Dhs ஆக இருந்தது இன்று 68 Dhs. single பெட் ரூம் வீடு என்றால் துபையில் 6,000Dhs ஆகும்.

இப்படி எல்லாம் இங்கு விலை அதிகமாகிவிட்டது அதுக்கு தகுந்தபடி பிளான் செய்துப்பது சம்பளத்தை பேசிவிட்டு வருவது நலம்.

அதையும் மீறி பிரச்சினை என்றால் உதவி செய்ய இங்க பலர் இருக்கிறோம், பயப்படாமல் வாங்க.

இந்த பதிவு எழுத சிவாதான் காரணம் அவர் வித்யாகலைவாணி பதிவில்
"மங்களூர் சிவா said...
இங்கயே அப்ரைசல்ல எதிர்பாத்தது இல்லைனா அடுத்த வாரமே பேப்பர் போட்டுடறானுங்க!!!நான் GULF பத்தி ஆஹா ஓஹோன்னுல்ல நினைச்சேன்."


இதுக்காகதான் இந்த பதிவு.

ஜமாலன் அவர்களின் இந்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள். பதிவையும் படியுங்கள்.