Wednesday, March 31, 2010

அகில உலக தமிழ்வலைபதிவர் சங்கம் இனிதே ஆரம்பம்!

சென்னை வலைப்பதிவர்கள் ஆரம்பிக்க நினைத்த தமிழ் வலைப்பதிவர்கள் சங்கத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாதமாதிரி தோன்றுகிறது. ஆகவே அமீரகத்தில் இருக்கும் பதிவர்களின் பேராதரவோடு அமீரக மார்கண்டேயன் தலைவர் ஆசிப் அண்ணாச்சியின் சீரிய தலமையில் இன்றே உதயம் ஆகிறது. அகில உலக தமிழ்வலைப்பதிவர் சங்கம்.
சங்கம் கொள்கைகள் நோக்கங்கள் பின்வருமாறு...

இங்க பாருங்க ஐயா எங்க சங்கத்தில் சேர்ந்து இந்த அடையாள அட்டைய வாங்கி மாட்டிக்கிட்டா, அர்த்த ராத்திரியில் கூட அய்யனார் பதிவுக்கு போகலாம்,விடிய காலையில் வினவு பதிவுக்கு போகலாம். நான் ஏன் டா அங்க எல்லாம் போகபோகிறேன் என்று யாராச்சும் கேட்டால் அவன் ரத்தம் கக்கி சாவான்.

எங்க சங்கத்தில் சேர்ந்தா உங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் கிடைக்கும், நீங்க உச்சாபோகனும் என்றால் கூட எங்களிடம் சுண்டு விரலை காட்டி அனுமதி வாங்கவேண்டியஅவசியம் இருக்காது. நீங்களே சுதந்திரமாக போய் வரலாம்.

சங்கத்துக்கு என்று ஆரம்பிக்கும் வலைப்பதிவில் பாலோயரா ஆவும் அனைவரையும் நாங்கபாலோ செய்வோம், அனைவரும் சமம், ஒரு சிலரை மட்டும் பாலோ செய்ய மாட்டோம் என்று சொல்வதன் மூலம் எங்களுக்கு சிகப்பு சாயம் யாரும் பூச நினைத்தால் அவர்கள் முகத்தில் கரி பூசுவதுபோல் திராவிட கொள்கையான இலவச திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஆகும் அனைவருக்கும் லேப் டாப் வழங்கபோகிறோம்.* (ஒரு லட்சம் கட்டி மெம்பர் ஆகும் ஆட்களுக்கு மட்டும்).

வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வர நினைக்கும் ஆட்களின் சொந்த செலவில் அமீரகம் வந்து செல்ல சங்கம் நடவடிக்கை எடுக்கும்,மேலும் வரும் நபர்களுக்கு நாங்களே சுத்தி காட்டுவோம், அவருக்கு முன்னாடி போய் சங்கத்து ஆட்கள் நின்னு நின்ன இடத்திலேயே எங்களை நாங்களே சுத்தி காட்டுவோம்.

சங்கத்து தலைமைக்கு தேர்தல் நடத்துவோம் அதில் அண்ணாச்சி மட்டுமே போட்டியிடுவார், இருந்தாலும் இடைத்தேர்தல் அளவுக்குஅண்ணாச்சி செலவு செய்து 1லட்சம் ஓட்டு வாங்கி வெற்றியடைவார் என்று சொல்வதன் மூலம் எங்களுக்கு பதவி ஆசை இல்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.

ஒரு குடையின் கீழ் செயல்பட முடியாது என்று சொல்லும் பாலாபாரதி போன்றோர்களுக்காக இரண்டு மூன்று குடைகளை இணைத்து மெகா குடையை தயார் செய்து இருக்கிறோம், அதன் கீழும் வரமுடியாதவர்கள் அட்லீஸ் ரெயின் கோட் கீழாவது வரமுடியுமா என்று பார்க நாங்கள் ரெயின் கோட்டையும் தயார் செய்து வெச்சிருக்கோம். என்று சொல்வதன் மூலம் அனைவரையும் ஒருங்கினைக்க நாங்க முயல்கிறோம் என்று தெளிவுபடுத்துகிறோம்.

உன் பெயர் என்ன? உன் உயரம் என்ன? உன் ஊர் என்ன? என்ற ரீதியில் சுதந்திரமான கேள்விகளை பைத்தியக்காரன் போன்றோர் பயம் இன்றி கேட்கலாம் அவர்களை கட்டம் கட்டமாட்டோம், வட்டம், செவ்வகம் கூட கட்டமாட்டோம் என்று சொல்வதன் மூலம் சங்கத்தில் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை தெளிவு செய்கிறோம்.

பதினெட்டில் இருந்து 21 வயது வரை உடைய திருமணம் ஆகாத பெண்கள் சங்கத்தில் இலவசமாக இணைந்துக்கலாம் 33% மட்டும் அல்ல 75% ஏன் வேண்டும் என்றால் சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை காலி செஞ்சுட்டு கூட அந்த இடங்களில் பெண்களை சேர்த்துவிடுகிறோம் என்று சொல்வதன் மூலம் பெண்களுக்கு சங்கம் சம உரிமை கொடுக்கும் என்று சொல்லிக்கிறோம்.

இதை இன்று அதுவும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஆரம்பிப்பதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. (சங்கதலைவர் அண்ணாச்சி வாழ்க).


FAQ:
1)என் பேரில் பேங்கில் இருக்கும் நகை கடன் 2 லட்சம், கூட்டுறவு பேங்கில் இருக்கும் ஆட்டுகுட்டி லோன் ஒரு லட்சத்தையும் "சங்கமே" கலை நிகழ்ச்சி நடத்தி அடைக்குமா?

அண்ணாச்சியே அடைப்பார், கலை நிகச்சியும் நடத்தி அட்வான்ஸ் லோனும் தரப்படும்.

2) கலைநிகழ்ச்சியில் மல்லு டான்ஸ் இருக்குமா?
உப்பில்லா பண்டம் குப்பையிலே, மல்லு டான்ஸ் இல்லாத நிகழ்ச்சி மக்கள் டீவியிலே என்ற பழமொழிக்கு ஏற்ப கலைஞர் டீவியின் மானாட மயில் ஆட நிகழ்ச்சியினை போலவே கலைநிகழ்ச்சி நடக்கும்.

121 comments:

  1. மீ த பர்ஸ்ட்.....அடுத்து வருகிறவர்களுக்கு 'வட போச்சே' !

    ReplyDelete
  2. FAQ: சங்கத்தில் சேர்ந்தா பாம் ஜூமைரால வீடு கிடைக்குமா?

    ReplyDelete
  3. // .....அடுத்து வருகிறவர்களுக்கு 'வட போச்சே' ! //

    அதுனால என்ன கோவி அண்ணா, நான் சங்கத்துல சேர்ந்தா குசும்பன் பீர், வடை எல்லாம் வாங்கித் தர்றதா பின்னூட்ட குல தெய்வ சாமி மேல சத்தியம் பண்ணீருக்கார். சங்கத்துல வண்டி லோன் எல்லாம் கூட குடுப்பாங்களாம். நாம சும்மா கூட்டம் சேர்த்து காமிச்சா போதும்.

    அண்ணாச்சி நாமம் வாழ்க. குசும்பன் புகழ் ஓங்குக.
    (அண்ணே பீர் மட்டும் மறந்துடாதிங்க).

    ReplyDelete
  4. மேலும் சில குறிப்புகள்..

    சங்கத்தில் யாருக்கும் முதல் பெஞ்ச் கிடையாது. இனிமேல் பதிவர்கள் அனைவரும் வரிசையில் வட்டமாகவோ சதுரமாகவோ மாத்திரமே உக்கார அனுமதிக்கப்படும். இதனால் கடைசி பெஞ்ச் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

    (தொடரும்)

    ReplyDelete
  5. இங்கு கும்மி அடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சொல்லிக்க விரும்புவது, மொக்கை, டம்மி பதிவில் கும்முவது வேறு, இதுபோல் பிரச்சினையினை நடுநிலையோடு சொல்லும் பதிவில் கும்முவது வேறு.
    உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருக்கனும் கும்மி நண்பர்களே.

    இப்படிக்கு
    சாத்தான் வேதம் ஓதுகிறது.

    (நான் பல பதிவுகளில் கும்மி அடிச்சிருக்கிறேன்,ஆனால் பதிவினை நீர்த்துபோகசெய்ததில்லை)

    ReplyDelete
  6. //அவருக்கு முன்னாடி போய் சங்கத்து ஆட்கள் நின்னு நின்ன இடத்திலேயே எங்களை நாங்களே சுத்தி காட்டுவோம்.//

    பத்தலைன்னா ஆதவன் இப்ப ஆணி பிடுங்கிட்டு இருக்கற சுத்தியை தூக்கிட்டு வந்து காட்டு காட்டுன்னு காட்டுவோம்.

    ReplyDelete
  7. ஆமாங்க சாமி..

    கும்மி அடிங்க வேணாங்கல. தயவு செஞ்சு பதிவு சொல்ற உள்நோக்கத்தை புரிஞ்சுக்கிட்டு கும்மி அடிங்க.. இல்லைன்னா பதிவு உருகி நீர்த்துப்போய் வெயில்ல காய்ஞ்சுடும்.

    (கண்ணா: சென்ஷி, பதிவு என்ன கருத்து சொல்லுது..

    சென்ஷி: சார்! இது மொக்கைப்பதிவு சார்.)

    ReplyDelete
  8. இங்கும் கும்மியா? நகைச்சுவையுணர்வு அற்புதம்.

    மிக வெளிப்படையான நல்ல வாதங்களைக் கொண்ட பதிவில்.. வாதங்களை முன்னெடுத்துச் செல்வதை விட்டு கும்ம ஆரம்பித்ததில், ஸாரி குசும்பா, விடை கிடைக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

    (வாழ்க காப்பி பேஸ்ட்)

    ReplyDelete
  9. அண்ணாச்சி(க்கு) நாமம் வாழ்க.

    ReplyDelete
  10. கண்ணா! ப்ளீஸ் என்னைக் கிள்ளேன் ;)

    ReplyDelete
  11. அப்ப சவுதி கிளை எனக்குத்தான் சொல்லிட்டேன் ஆமா. எனக்கும் பதவி ஆசையெல்லாம் இல்லை அண்ணே.

    ReplyDelete
  12. //சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை காலி செஞ்சுட்டு//

    எங்களை காலி செஞ்சப்பிறகு சங்கத்துல சம உரிமை எப்படிய்யா வரும்?

    ReplyDelete
  13. எங்களை கலந்து ஆலோசிக்காமல் தனிச்சையாக முடிவெடுத்த சங்கத்தை எதிர்த்து போட்டி சங்கம் ஆரம்பிக்க இருக்கிறோம். அதில் சேர விரும்புவர்களெல்லாம் கையை தூக்கவும்

    ReplyDelete
  14. என்னங்க இது!! படமே இல்லாத பதிவாக ஆகிவிட்ட்டதே!!

    ReplyDelete
  15. // கண்ணா.. said...

    எங்களை கலந்து ஆலோசிக்காமல் தனிச்சையாக முடிவெடுத்த சங்கத்தை எதிர்த்து போட்டி சங்கம் ஆரம்பிக்க இருக்கிறோம். அதில் சேர விரும்புவர்களெல்லாம் கையை தூக்கவும்//

    ஆ ஊன்னா கையை தூக்க சொல்றீங்களே நீங்க எல்லாம் அந்த பார்ட்டீ குரூப்பா?

    ReplyDelete
  16. சங்கம் ஆரம்பிப்பதன் நோக்கம் என்ன? இவ்வளவு அவ ரசமாக சங்கத்தை அமீரகத்தில் கூட்டிப் பெருக்க வேண்டிய அளவு குப்பைகள் இருக்கிறதா?

    ReplyDelete
  17. உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைண்ணே. ஆனா எனக்கென்னவோ கண்ணா உங்களுக்கு போடியா வந்துடுவாரோன்னு பயமா கிடக்குது. பார்த்து சூதனமா இருந்துக்கிங்க.

    ReplyDelete
  18. //அகில உலக தமிழ்வலைப்பதிவர் சங்கம்//

    தமிழ்வலைப்பதிவர் ???????????
    தமிழ் வலைப்பதிவர் ???????
    ????????

    ReplyDelete
  19. //இங்கும் கும்மியா? //

    இங்க‌ தான் கும்மி

    ReplyDelete
  20. //எங்க சங்கத்தில் சேர்ந்தா உங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் கிடைக்கும், நீங்க உச்சாபோகனும் என்றால் கூட எங்களிடம் சுண்டு விரலை காட்டி அனுமதி வாங்கவேண்டியஅவசியம் இருக்காது. நீங்களே சுதந்திரமாக போய் வரலாம்.//

    அப்ப‌ ச‌ங்க‌ம் உத‌வி செய்யாதா???

    ReplyDelete
  21. எத்தனை அரிய கருத்துக்களோடு அண்ணன் குசும்பன் அளித்த பதிவில் கும்மிகளா? ஐயகோ மனம் வெம்புகிறது [வெம்புகிறதே’வா அல்லது வெதும்புகிறதேவா-அட்வைஸ் ப்ளீஸ்]

    ReplyDelete
  22. @ ஆயில்யன்,

    என்னை நீங்கள் சந்தேகப்பட்டால் பஸ்ஸில் நீங்கள் சங்கத்துக்கு எதிராக பங்கம் ஆரம்பித்து ஊறு விளைவித்ததை காப்பி பேஸ்ட் செய்ய நேரிடும் என போட்டி சங்கத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்

    ReplyDelete
  23. // கண்ணா.. said...

    @ ஆயில்யன்,

    என்னை நீங்கள் சந்தேகப்பட்டால் பஸ்ஸில் நீங்கள் சங்கத்துக்கு எதிராக பங்கம் ஆரம்பித்து ஊறு விளைவித்ததை காப்பி பேஸ்ட் செய்ய நேரிடும் என போட்டி சங்கத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்///


    அடப்பாவி மக்கா பஸ்ஸுல கொஞ்சம் ஃப்ரீயா பேசமுடியலயே ப்ளாக்மெயிலுறாங்களே :(((


    பங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கோணும்!

    ReplyDelete
  24. பதிவு :))
    பின்னூட்டங்கள் :))

    ReplyDelete
  25. ஹலோ சங்கத்துல மகளிர் அணியெல்லாம் இல்லியா?

    இங்க ஒரு பெரிய கூட்டமே இருக்கோம், ஆமா!

    ReplyDelete
  26. திரும்பவும் முதலேருந்தா...ஆனா இந்த டீல் நல்லாருக்கு அண்ணாத்த...

    ReplyDelete
  27. //மல்லு டான்ஸ் இல்லாத நிகழ்ச்சி மக்கள் டீவியிலே//
    :)
    Anputan
    சிங்கை நாதன்

    ReplyDelete
  28. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது குறும்பா..!

    ReplyDelete
  29. ஆத்தீ

    சிரிச்சு சிரிச்சு கண்ணுல நீர் கோர்த்துடுச்சு சார்

    ReplyDelete
  30. //உப்பில்லா பண்டம் குப்பையிலே, மல்லு டான்ஸ் இல்லாத நிகழ்ச்சி மக்கள் டீவியிலே என்ற பழமொழிக்கு ஏற்ப
    //
    ஹா ஹா சிரிச்சி முடியலை

    ReplyDelete
  31. குருவி முட்டையிலேயே ஆம்லெட் போடுபவனுக்கு வாத்து முட்டை கிடைச்சா சும்மா இருப்பானா.?

    இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.

    ReplyDelete
  32. //சங்கத்து தலைமைக்கு தேர்தல் நடத்துவோம் அதில் அண்ணாச்சி மட்டுமே போட்டியிடுவார், இருந்தாலும் இடைத்தேர்தல் அளவுக்குஅண்ணாச்சி செலவு செய்து 1லட்சம் ஓட்டு வாங்கி வெற்றியடைவார் என்று சொல்வதன் மூலம் //

    மேற்படி தேர்தல் வாரம் ஒருமுறை நடந்தால் வாரம் முழுக்க மூக்குத்தி பொதிந்த லட்டு வாங்கியும், வார இறுதியில் வெற்றிவிழாக் கொண்டாட்டங்களினாலும் அமோகமாக அமீரகம் ஆகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    வரவேற்கிறேன்
    வழிமொழிகிறேன்
    காத்திருக்கிறேன் அந்த நன்னாளுக்காக!

    ReplyDelete
  33. காப்பியும் பேஸ்ட்டும் ழாவ்க..

    ReplyDelete
  34. 2வது பத்தியில சிரிக்க ஆரம்பிச்சது கலக்கல் குசும்பன் பின்னூட்டம் எல்லாம் அதைவிட கலக்கல்

    ReplyDelete
  35. போட்டி சங்கம் பெயர் முடிவாகி விட்டது

    ”அகிள உளக தமில்கொலைபதிவற்கல் சங்கம்”

    இதன் சங்கத்து உறுப்பினர்களை ஏன் தவறாக டைப்பிகிறாய் என கேட்டால் கேட்டவர்களின் மூக்கில் குத்த ஆட்கள் நியமிக்கப்படும்.

    ஏதேனும் பிரச்சனை என்றால் எஸ்ஸாவது எப்பிடி? யாராவது மானம் கெட்ட கேள்வி கேட்டாலும் கொஞ்சம் கூட சூடு, சொரணையில்லாமல் இருப்பது எப்படி? போன்றவைகள் பதிவர்பட்டறையில் சொல்லிதரப்படும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் ஆலோசனைகள் தற்போது சங்கத்துல எவனுமே சேராததால.. சேர்ந்தஉடன் ஆலோசித்து பிறகு சொல்லப்படும்.

    உடனே முந்துங்கள். முதலில் வரும் 10 அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு பஸ்ஸுல் ஜன்னலோர சீட் வழங்கப்படும் என்பதையும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்

    ReplyDelete
  36. //ஒரு குடையின் கீழ் செயல்பட முடியாது என்று சொல்லும் பாலாபாரதி போன்றோர்களுக்காக இரண்டு மூன்று குடைகளை இணைத்து மெகா குடையை தயார் செய்து இருக்கிறோம்,//

    *********

    கண்ட குடை வேண்டாம்ப்பு.... எனக்கு எப்போவுமே மான் மார்க் குடை தான்.....

    ReplyDelete
  37. //பீர் | Peer said...
    FAQ: சங்கத்தில் சேர்ந்தா பாம் ஜூமைரால வீடு கிடைக்குமா?//

    டெய்லி ஈவினிங் வந்து காத்து வாங்கிட்டு போகலாம்.... அது ஃப்ரீ..

    ReplyDelete
  38. //சென்ஷி said...
    மேலும் சில குறிப்புகள்..

    சங்கத்தில் யாருக்கும் முதல் பெஞ்ச் கிடையாது. இனிமேல் பதிவர்கள் அனைவரும் வரிசையில் வட்டமாகவோ சதுரமாகவோ மாத்திரமே உக்கார அனுமதிக்கப்படும். இதனால் கடைசி பெஞ்ச் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.//

    சென்ஷி...

    வட்டமோ, சதுரமோ... நீங்க இந்த பிரச்சனைய இங்க கிளப்புனதால, பெஞ்சு மேல ஏறி நில்லுங்க... நம்ம கீழை ராசா சொல்ற வரைக்கும்...!!

    ReplyDelete
  39. கடைசியா நாம சொன்ன பெற தான் வச்சிருக்காங்க எல்லா பெருமையும் உனக்கு தாண்டா சசி கலக்குடா (யாரும் கண்டுக்காதீங்க சசி ஜாலி மூடில்)http://pulavanpulikesi.blogspot.com/2010/03/blog-post_26.html

    ReplyDelete
  40. குசும்பா நீ கிள்ளேன்..

    சென்ஷி நீ கிள்ளேன்..

    ஏய்..கண்ணா நீ கிள்ளேன்..

    ஏய் நீ கிள்ளேன்...

    :))))

    ReplyDelete
  41. //அட்லீஸ் ரெயின் கோட் கீழாவது வரமுடியுமா என்று பார்க நாங்கள் ரெயின் கோட்டையும் தயார் செய்து வெச்சிருக்கோம்//

    புலன் விசாரணையில அண்ணன் விஜயகாந்த் போட்டிருப்பாரே.. அதுபோல ஃபுல்லா கவர் பண்ணுவதாக இருந்தால்... மட்டுமே ஆலோசிக்கலாம்.

    ReplyDelete
  42. புரிந்துண்ர்வோடு கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி! :))

    ReplyDelete
  43. அ.க.ச தோற்று வித்த தம்பி.. குசும்பன் வாழ்க!

    குசும்பனார் பேரவை.
    மடிப்பாக்கம் கிளை

    ReplyDelete
  44. /♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    குசும்பா நீ கிள்ளேன்..

    சென்ஷி நீ கிள்ளேன்..

    ஏய்..கண்ணா நீ கிள்ளேன்..

    ஏய் நீ கிள்ளேன்...

    //

    ஆஹா.. கவுஜ கவுஜ..

    ReplyDelete
  45. நல்ல பதிவு போட்டு இருக்கீங்களே.. ;-)

    ReplyDelete
  46. //
    புலன் விசாரணையில அண்ணன் விஜயகாந்த் போட்டிருப்பாரே.. அதுபோல ஃபுல்லா கவர் பண்ணுவதாக இருந்தால்... மட்டுமே ஆலோசிக்கலாம்.//

    கூட நமீதா டான்சும் உண்டா தல :)

    ReplyDelete
  47. சென்ஷி said...

    /♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    குசும்பா நீ கிள்ளேன்..

    சென்ஷி நீ கிள்ளேன்..

    ஏய்..கண்ணா நீ கிள்ளேன்..

    ஏய் நீ கிள்ளேன்...

    //

    ஆஹா..
    கவுஜ
    கவுஜ..
    //

    வாவ் சூப்பர் :))))

    ReplyDelete
  48. //Blogger ஆதிமூலகிருஷ்ணன் said...

    குருவி முட்டையிலேயே ஆம்லெட் போடுபவனுக்கு வாத்து முட்டை கிடைச்சா சும்மா இருப்பானா.?//

    ஆதிமூலகிருஷ்ணா..

    எங்க ஆளு முட்டையே இல்லாம ஆம்லெட் போடுவாரு..!

    :))))

    ReplyDelete
  49. இந்த சங்கத்தில் கத்தாரில் இருப்பவர்களும் உறுப்பினர் ஆகலாமா?.. ;-)

    ReplyDelete
  50. // ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    அ.க.ச தோற்று வித்த தம்பி.. குசும்பன் வாழ்க!//

    எச்சூச் மீ.. எம்புட்டு காசுக்கு வித்தாருன்னு தெரிஞ்சா குசும்பரை டெர்ரராக்க வசதியா இருக்கும்.

    ReplyDelete
  51. ஹைய்யா.. மீ த 50!

    ReplyDelete
  52. //வாவ் சூப்பர் :))))//

    oilயன்... சங்கத்துல இருந்து நீங்கப்படுவீர்கள்.. ஏதுனாச்சு எழுதுங்க..

    ReplyDelete
  53. //தமிழ் பிரியன் said...

    இந்த சங்கத்தில் கத்தாரில் இருப்பவர்களும் உறுப்பினர் ஆகலாமா?.. ;-)//

    ராசா என்ன உறுப்பினர் கேக்குறீங்க டைரக்டா போஸ்டிங்க கேளுங்க!

    ReplyDelete
  54. பா.க.ச.. பின்னூட்டங்கள் போட இங்க அனுமதி இருக்கா?

    அளவில்லா டவுட்டுடன்
    தமிழ் பிரியன்

    ReplyDelete
  55. //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    //வாவ் சூப்பர் :))))//

    oilயன்... சங்கத்துல இருந்து நீங்கப்படுவீர்கள்.. ஏதுனாச்சு எழுதுங்க.///

    அவ்வ்வ்வ் எழுதணுமா அப்ப சங்கம் எழுதுறவங்களுக்கு மட்டும்தானா :((

    ReplyDelete
  56. //யெஸ்.பாலபாரதி ♠ said...
    குசும்பா நீ கிள்ளேன்..

    சென்ஷி நீ கிள்ளேன்..

    ஏய்..கண்ணா நீ கிள்ளேன்..

    ஏய் நீ கிள்ளேன்...

    :))))

    April 1,
    //

    ஏய் எல்லாம் வரிசையில் வாங்கப்பா, வடிவேலுவை ஒரு படத்தில் ஹாஸ்டல் பசங்க கியுவில் வந்து குட்டுவது மாதிரி ங்கொக்காமக்கா இன்னைக்கு தலையை கிள்ளு கிள்ளுன்னு கிள்ளி தலையை சிவக்க வெச்சிடனும்:))

    ReplyDelete
  57. //ஆதிமூலகிருஷ்ணா..

    எங்க ஆளு முட்டையே இல்லாம ஆம்லெட் போடுவாரு..!

    :))))//


    மப்புலயா தல

    ReplyDelete
  58. அண்ணாச்சி கலாய்ப்போர் சங்கம்- அது தான்பா அ.க.ச..

    ஏற்கனவே சங்கம் நட்டதுல போதாம்.. உறுப்பினர்கள் குறைவாம்.. அதுநாள.. அண்ணாச்சி ரத்தத்துல கையெழுத்து போடாம.. படமே வரைஞ்சு கொடுக்கப்போறாராம்.

    ReplyDelete
  59. பாஸ்.. போஸ்ட்டில் இருந்தா நாம தான் லட்டுக்குள் மோதிரம், பிரியாணிக்குள் குத்துவிளக்கு எல்லாம் தரனும். உறுப்பினர்ன்னா நமக்கு எல்லாம் கிடைக்குமே?... ;-)))

    ReplyDelete
  60. //♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    //வாவ் சூப்பர் :))))//

    oilயன்... சங்கத்துல இருந்து நீங்கப்படுவீர்கள்.. ஏதுனாச்சு எழுதுங்க..//

    ஆமா பாகசவுல இருந்தாக்கா ஒரு ரிப்பீட்டேவாச்சும் போட்டுடுங்க...

    ReplyDelete
  61. //ஏற்கனவே சங்கம் நட்டதுல போதாம்.. உறுப்பினர்கள் குறைவாம்.. அதுநாள.. அண்ணாச்சி ரத்தத்துல கையெழுத்து போடாம.. படமே வரைஞ்சு கொடுக்கப்போறாராம்.//

    சங்கத்தை யாருப்பா அண்ணாச்சி முன்னாடி நட்டு வைச்சது.

    பாகச பேரவை ஷார்ஜா
    எங்களுக்கு வேறு எந்த சங்கங்களூடனும் தொடர்பு இல்லை.

    ReplyDelete
  62. /♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    குசும்பா நீ கிள்ளேன்..

    சென்ஷி நீ கிள்ளேன்..

    ஏய்..கண்ணா நீ கிள்ளேன்..

    ஏய் நீ கிள்ளேன்...

    //

    ஏய் சிக்கன் பீஸு அதுவா உள்ள வந்து மாட்டிருக்கு..

    அவசரபடாம பொறுமையா அடிச்சி ஆடுங்க....

    :))

    ReplyDelete
  63. \\\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது குறும்பா..!\\\

    எப்படி அண்ணாச்சி.. ஏன் இதையெல்லாம் படிச்சி வயித்தைப் ப்புண்ணாக்குக்கிறீங்க.. ;-)

    ReplyDelete
  64. இங்கேயும் கும்மியா? விளங்க மாட்டீங்கப்பா நீங்க? :(

    ReplyDelete
  65. இந்த ஷார்ஜா கும்மி குரூப் எல்லாம் எங்கப்பா போயிடுச்சு.. பொழுது போகாம சங்கம் அமைச்சுட்டு உட்கார்ந்து இருக்கோம்ல... ;-))

    ReplyDelete
  66. //எப்படி அண்ணாச்சி.. ஏன் இதையெல்லாம் படிச்சி வயித்தைப் ப்புண்ணாக்குக்கிறீங்க.. ;-)//

    ஆமாங்க உ.த. அப்புறம் உங்களுக்கு வயித்துல எ ரிச்சல்ன்னு சொல்லிடுவாங்க.. எச்சரிக்கை..

    ReplyDelete
  67. தமிழு...,

    என்னது பாகச பின்னூட்டமா...?
    கிர்ர்ர்ர்ர்ர்..
    என்ன சின்னபுள்ளத்தனாம் இருக்கு... அ.க.ச ஆரம்பிச்சு இருக்குற வேளையில... இங்கே அதுக்கு என்னா வேலை.

    சோ..call.. நோ.. பாகச!

    ReplyDelete
  68. \\\☀நான் ஆதவன்☀ said...

    இங்கேயும் கும்மியா? விளங்க மாட்டீங்கப்பா நீங்க? :(\\\

    ஆதவா? ஏன் ஏன் ஏனிப்படி? உங்க சூரிய வெளிச்சத்தைக் காட்டி கோபத்தில் சுட்டுடாதீங்க... சங்கத்துல இருந்து எங்களைத் தூக்கிடப் போறாக.. ;-(

    ReplyDelete
  69. // ☀நான் ஆதவன்☀ said...

    இங்கேயும் கும்மியா? விளங்க மாட்டீங்கப்பா நீங்க? :(//

    இந்த பயபுள்ள வேற எதோ சங்கடத்துல மாட்டிக்கிட்டு சங்கம் பக்கம் வரமாட்டிகிது உண்மையை அடிச்சு வெளியே கொண்டு வாங்கப்பா!

    ReplyDelete
  70. // தமிழ் பிரியன் said...

    இந்த ஷார்ஜா கும்மி குரூப் எல்லாம் எங்கப்பா போயிடுச்சு.. பொழுது போகாம சங்கம் அமைச்சுட்டு உட்கார்ந்து இருக்கோம்ல... ;-))//

    நாங்க சங்கம் வைக்கற இடத்துல கும்மறதில்ல.

    ReplyDelete
  71. நீ ஆதவா....,

    ஏனிந்த கொலைவெறி?

    ReplyDelete
  72. சட்டைக்கு போட இருந்த கஞ்சித்தண்ணிய குடிச்சுட்டேன். கொஞ்சம் வெறப்பா தான் இருப்பேன்

    ReplyDelete
  73. \\\ சென்ஷி said...

    // தமிழ் பிரியன் said...

    இந்த ஷார்ஜா கும்மி குரூப் எல்லாம் எங்கப்பா போயிடுச்சு.. பொழுது போகாம சங்கம் அமைச்சுட்டு உட்கார்ந்து இருக்கோம்ல... ;-))//

    நாங்க சங்கம் வைக்கற இடத்துல கும்மறதில்ல.\\\\

    எங்க சங்கமே சங்கம் அமைப்போரை கலாய்ப்போர் சங்கம் தானே.. ;-))

    ReplyDelete
  74. // ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    நீ ஆதவா....,//

    அவ்வ் தல அது நீங்க தானா?

    ReplyDelete
  75. // சென்ஷி said...

    // தமிழ் பிரியன் said...

    இந்த ஷார்ஜா கும்மி குரூப் எல்லாம் எங்கப்பா போயிடுச்சு.. பொழுது போகாம சங்கம் அமைச்சுட்டு உட்கார்ந்து இருக்கோம்ல... ;-))//

    நாங்க சங்கம் வைக்கற இடத்துல கும்மறதில்ல.//

    ஆளாளுக்கு ஒரு ரூல்ஸ் & ரெகுலேஷன் வைச்சுக்கிறீங்களேப்பா !!!

    ReplyDelete
  76. //சட்டைக்கு போட இருந்த கஞ்சித்தண்ணிய குடிச்சுட்டேன். கொஞ்சம் வெறப்பா தான் இருப்பேன்//

    எல்லாமுமே வெறப்பா இருந்தா கஷ்டமா இருக்காது..?

    :(

    ReplyDelete
  77. \\\☀நான் ஆதவன்☀ said...

    சட்டைக்கு போட இருந்த கஞ்சித்தண்ணிய குடிச்சுட்டேன். கொஞ்சம் வெறப்பா தான் இருப்பேன்\\\

    அப்ப பேஸ்மெண்ட் வீக்கோ??? பாவம்ய்யா அந்த பொண்ணு... வாழ்க்கை வீணாகப் போகுதே.. ;-))

    ReplyDelete
  78. // ☀நான் ஆதவன்☀ said...

    இங்கேயும் கும்மியா? விளங்க மாட்டீங்கப்பா நீங்க? :(//

    கைப்புள்ள கோவமா கெளம்பிட்டாரே.. இன்னிக்கு எத்தனை தல உருளப்போகுதுன்னு தெரியலையே

    ReplyDelete
  79. இவ்ளோ நேரம் காத்தாடிட்டு இருந்த கடை தல வந்து கமெண்ட் போட்ட உடனே டிராபிக் ஜாம் ஆகும் போதுதான் புரியுது பாகச வோட பவரு..

    ReplyDelete
  80. //
    நீ ஆதவா....,//

    அவ்வ் தல அது நீங்க தானா?//

    எங்கேயோ படிச்சது.. நினைவுக்கு வந்துச்சு.. ;)))

    ReplyDelete
  81. அடப்பாவிமக்கா குடிச்ச கஞ்சித்தண்ணிய வாந்தியெடுத்து லூசாகிடுறேன்... அதுக்காக புரளிய கிளப்பி விடாதீங்கப்பா

    ReplyDelete
  82. // ☀நான் ஆதவன்☀ said...

    சட்டைக்கு போட இருந்த கஞ்சித்தண்ணிய குடிச்சுட்டேன். கொஞ்சம் வெறப்பா தான் இருப்பேன்//

    ரைட்டு !

    ReplyDelete
  83. //☀நான் ஆதவன்☀ said...

    அடப்பாவிமக்கா குடிச்ச கஞ்சித்தண்ணிய வாந்தியெடுத்து லூசாகிடுறேன்... அதுக்காக புரளிய கிளப்பி விடாதீங்கப்பா//

    நீ வாந்தியெடுத்தாத்தான் லூசுன்னு எவன்ய்யா சொன்னான்.. முன்னெலேந்து நீ இப்படித்தான்.

    ReplyDelete
  84. குசும்பன் பதிவு நீர்த்து போச்சே! :(

    ReplyDelete
  85. \\\ ☀நான் ஆதவன்☀ said...

    அடப்பாவிமக்கா குடிச்ச கஞ்சித்தண்ணிய வாந்தியெடுத்து லூசாகிடுறேன்... அதுக்காக புரளிய கிளப்பி விடாதீங்கப்பா\\\\

    என்னது வாந்தியா? யோவ்.. நீ ஆதவனா? ஆதவியா? உண்மையைச் சொல்லுய்யா முதல்ல.. ;-))

    ReplyDelete
  86. //அப்ப பேஸ்மெண்ட் வீக்கோ??? பாவம்ய்யா அந்த பொண்ணு... வாழ்க்கை வீணாகப் போகுதே.. ;-))//

    யோவ்... அது நான் டீவிய வந்து லோசியமெல்லாம் விக்குறான்ல.. அப்புறன் என்னதுக்கு கஞ்சியை குடிச்சுகிட்டு அலையுற..! இப்ப இந்தமாதிரி சொல்லடி படனுமா.. கொஞ்சம் ரோசி..

    ReplyDelete
  87. //என்னது வாந்தியா? யோவ்.. நீ ஆதவனா? ஆதவியா? உண்மையைச் சொல்லுய்யா முதல்ல.. ;-))//

    :)))))

    ReplyDelete
  88. //நீ வாந்தியெடுத்தாத்தான் லூசுன்னு எவன்ய்யா சொன்னான்.. முன்னெலேந்து நீ இப்படித்தான்.//

    அண்ணே பப்ளிக் பப்ளிக்

    ரகசியம் சொல்லணும்ன்னா ஓவர்! ஓவர்!! சேர்த்துக்கிடணும் அதான் சங்கத்து ரூல்சு !

    ReplyDelete
  89. மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்

    ReplyDelete
  90. //Blogger ☀நான் ஆதவன்☀ said...

    மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்//

    ஆமா.. கவனிக்கவும்.. :)

    ReplyDelete
  91. \\\☀நான் ஆதவன்☀ said...

    குசும்பன் பதிவு நீர்த்து போச்சே! :(\\\

    நீர்த்துப் போகாத பதிவை எல்லாம் உடனடியா லிஸ்ட் போட்டு சொல்லலை.. உன்னை சங்கத்துத் தெருவில் கூட விட மாட்டோம்.. இப்பவே சொல்லிடு

    ReplyDelete
  92. //☀நான் ஆதவன்☀ said...
    மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்//

    ங்கொய்யால....அவன கும்ம ஆரம்பிச்சு உடனே எப்பிடி நேக்கா பேசுது பாரு..

    இன்னும் நல்லா கும்முங்கய்யா....

    ReplyDelete
  93. //Blogger ☀நான் ஆதவன்☀ said...

    மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்//

    பாஸ்.. மேட்டர் மேட்டர்ன்னு சொல்றீங்களே.. என்ன மேட்டர்ன்னு சொல்லவே இல்லையே பாஸ்.

    ReplyDelete
  94. //☀நான் ஆதவன்☀ said...

    மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்/

    கலங்கரை விளக்கமய்யா நீர் எம்புட்டு டிரிக்ஸா நழுவுறீயே ராசா!

    ReplyDelete
  95. //அகில உலக தமிழ்வலைப்பதிவர் சங்கம். //

    அகிலா யாருண்ணே? எதுக்கு அவங்க பேர்ல சங்கம்?

    ReplyDelete
  96. //☀நான் ஆதவன்☀ said...

    மக்களே கும்மி திசைமாறுது.... நோக்கம் குசும்பன் மட்டுமே. சிற்சில கும்மிகளை கலைந்து விட்டு மேற்படி மேட்டரை கவனிக்கவும்/

    கலங்கரை விளக்கமய்யா நீர் எம்புட்டு டிரிக்ஸா நழுவுறீயே ராசா!

    ReplyDelete
  97. மீ த 100ன்னு போட ஆச இருக்கு.. ஆனா.. கடமை அழைக்குது.. அதுனால இப்பவே சொல்லீட்டு போறேன்.. நான் தான் “மீ த 100”

    :)

    ReplyDelete
  98. ஆனது ஆச்சு. இன்னும் அஞ்சே அஞ்சு சதமடிச்சுடலாம். :)

    ReplyDelete
  99. நூறாவது கமெண்ட் போட்டா பா.க.ச. வின் வாழ்நாள் உறுப்பினர் பதவி தருவதாக தல அறிவித்துள்ளார் என்பதை மகிழ்வோடு தெரியப்படுத்திக் கொ’ல்’கிறோம்... ;-))

    ReplyDelete
  100. நன்றி கோவி

    நன்றி பீர், சின்ன வீடு கூட கிடைக்கும்:) சங்கம் ஏற்பாடு செய்யும்.

    பித்தனின் வாக்கு வண்டி வாங்க,பெட்ரோல் போட எல்லாம் அண்ணாச்சி
    அவரோட கிரிடிட் கார்டை கொடுப்பார்.

    சென்ஷி பல ஆலோசனைகள் சொல்வதால் உங்களை ஏன்
    ஆலோசனை குழு தலைவர் ஆக்க கூடாது?:))

    நன்றி கண்ணா

    சென்ஷி பதிவை அப்படியே அலேக்கா தூக்கி ப்ரிஜ்ஜில் வெச்சாலுமா
    நீர்த்து போகும்?

    நன்றி ஷாகுல்

    அக்பர் சவுதி தலமையே உங்களுக்கு கொடுக்கிறோம்
    முதலில் 10 லட்சம் டெப்பாசிட் கட்டவும்.

    வடுவூர் குமார், படத்துக்கு பஞ்சம்:)

    ஆயில் கைய தூக்குங்க வேண்டாங்கள, ஆனா ஸ்ப்ரே அடிச்சுட்டு
    தூக்குங்கன்னு சொல்லுங்க:))

    கரிசல்காரன் ரொம்ப கேள்விகேட்கிறார், ரத்தம் கக்கி விழுவார் சாக்கிரதை:)))
    செய்யும்யா செய்யும் "நறுக்" செஞ்சு உதவி செய்யும்:)

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி நாஸியா, சங்கத்தில் மகளீருக்கான ரூல்ஸ் நம்பர் 8 யை திரும்ப படிக்கவும்

    நாஞ்சில் நித்திமாதிரி இந்த வாரம் இது:)

    நன்றி சிங்கை நாதன் அண்ணாச்சி:))

    நன்றி உண்மைத் தமிழன்

    NESAMITHRAN நன்றி

    நன்றி குழலி

    நன்றி ஆதி, குருவி முட்டையா அவ்வ்வ் விஜய் முட்டை கூட போடுவாறா?

    நன்றி இராகவன் அண்ணா

    நன்றி பினாத்தலாரே, திரும்ப நான் கூட காது குத்திக்க ரெடி. மூக்கும் குத்திக்கிறேன்.

    நன்றி கும்க்கி

    நன்றி தாரணி பிரியா

    R.கோபி நன்றி

    நன்றி சசிகுமார்

    அண்ணே எங்களை பத்தி தெரியாம கிள்ள சொல்லிட்ட ரொம்ப பீல் பண்ண போற
    ஜாக்கிரதை, ரெயிண் கோட் உள்ளே சித்தெறும்புகளை புடிச்சு உள்ளே போட்டு வையுங்கப்பா!
    தல ஆசைபடுது.

    அண்ணே அண்ணாச்சியை கலாய்போர் சங்கமா? அல்லோ வீபரீத விளைவுகள் ஏற்படும்
    ஜாக்கிரதை.

    (அண்ணே நீ கலாய் அண்ணாத்தே நாங்க வேடிக்கை மட்டும் பார்க்கிறோம் ரகசியம் ஓவர் ஓவர்)

    நன்றி தமிழ் பிரியன்

    //தமிழ் பிரியன் said...
    பா.க.ச.. பின்னூட்டங்கள் போட இங்க அனுமதி இருக்கா?//

    வள்ளுவர் மாதிரி தல முதுகில் கூட நீங்க ஆணி வெச்சு எழுத அனுமதி உண்டு. எழுங்க
    எதுங்க எழுதிக்கிட்டே இருங்க:))

    ReplyDelete
  101. வெற்றி பெற்ற ஆயிலுக்கு வாத்துக்கள்!

    ReplyDelete
  102. எல்லாரும் இவ்ளோ நேரம் எஙகனதான் ஓளிஞ்சிருந்தாங்கலோ..?

    இப்போ .. குபீர் குபீர்னு கமெண்ட் வருது..


    இண்டு இடுக்கு சந்து பொந்துல இருந்தெல்லாம் ஆள்கள் வாறாய்ங்க

    ReplyDelete
  103. தலக்கு எப்பவுமே அவரசம்தான் 99லயே 100 அடிச்சிட்டு எஸ்ஸாகிடுறது :0

    ReplyDelete
  104. பாஸ் பயபுள்ள கேப்ல வந்து தாங்க்ஸ் சொல்லிக்கிட்டிருக்கு :)

    ReplyDelete
  105. //விடிய காலையில் வினவு பதிவுக்கு போகலாம்.//

    ’கக்கா’ போக பாத்ரூமுக்கு போற மாதிரி சொல்றீக? வினவு தோழர்களே இதை என்னென்னு கேட்க மாட்டீங்களா?

    ReplyDelete
  106. \\

    வெற்றி பெற்ற ஆயிலுக்கு வாத்துக்கள்!\\\

    தடங்களுக்கு வருத்தம்.. ஆயிலுக்கு வாத்துக் கறி பிடிக்காது என்பதால்.. ஒரு திருஷ்டி பூசணி மட்டும்..அதுவும் தோஹாவில் கிடைக்காது என்பதால்.. அதற்குப் பதிலாக ஆதவன் போட்டோ ஒன்று தரப்படும்.

    ReplyDelete
  107. பாஸ் டயர்டாகிடுச்சு இன்னிக்கு எதாச்சும் சங்க மீட்டிங்க் உண்டா?

    ReplyDelete
  108. ஆயில்யன் said...

    பாஸ் பயபுள்ள கேப்ல வந்து தாங்க்ஸ் சொல்லிக்கிட்டிருக்கு :)

    எந்த கேப்ல பாஸ்?

    ReplyDelete
  109. //ஆயில்யன் said...

    பாஸ் பயபுள்ள கேப்ல வந்து தாங்க்ஸ் சொல்லிக்கிட்டிருக்கு :)//

    கடமை உணர்ச்சி....!!!

    ReplyDelete
  110. // ☀நான் ஆதவன்☀ said...

    //விடிய காலையில் வினவு பதிவுக்கு போகலாம்.//

    ’கக்கா’ போக பாத்ரூமுக்கு போற மாதிரி சொல்றீக? வினவு தோழர்களே இதை என்னென்னு கேட்க மாட்டீங்களா?/

    சங்க தலைமையை காவு கொடுக்க முடிவு பண்ணி களமிறங்கியிருக்கும் ஆதவன் டவுன் டவுன் :)

    ReplyDelete
  111. //ஒரு குடையின் கீழ் செயல்பட முடியாது என்று சொல்லும் பாலாபாரதி போன்றோர்களுக்காக இரண்டு மூன்று குடைகளை இணைத்து மெகா குடையை தயார் செய்து இருக்கிறோம்,//

    இது பா.க.ச வா!?

    சொல்லவேயில்ல!

    ReplyDelete
  112. //சங்கத்துக்கு என்று ஆரம்பிக்கும் வலைப்பதிவில் பாலோயரா ஆவும் அனைவரையும் நாங்கபாலோ செய்வோம், அனைவரும் சமம், ஒரு சிலரை மட்டும் பாலோ செய்ய மாட்டோம் என்று சொல்வதன் மூலம் எங்களுக்கு சிகப்பு சாயம் யாரும் பூச நினைத்தால் அவர்கள் முகத்தில் கரி பூசுவதுபோல் திராவிட கொள்கையான இலவச திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஆகும் அனைவருக்கும் லேப் டாப் வழங்கபோகிறோம்.*///

    மூச்சு விடாம பேசுறயேப்பா! சங்கத்துக்கு வக்கீல் ரெடி.

    ReplyDelete
  113. கலக்கல் பதிவு

    டூர் கூட்டிட்டு போறது, பிரியாணி சாப்பிடறது, பிரியாணி அண்டா தூக்குவது, துபாய் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்பது போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி சங்க குறிக்கோள்களில் இல்லாதது பெரிய வருத்தமே.

    ReplyDelete
  114. // ராம்ஜி_யாஹூ said...

    கலக்கல் பதிவு

    டூர் கூட்டிட்டு போறது, பிரியாணி சாப்பிடறது, பிரியாணி அண்டா தூக்குவது, துபாய் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்பது போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி சங்க குறிக்கோள்களில் இல்லாதது பெரிய வருத்தமே.//

    கவலைப்படாதீங்க ராம்ஜி.. அதை நாங்க அமீரக கல்வெட்டுல பத்திரமா செதுக்கி வைச்சிருக்கோம்.

    ReplyDelete
  115. //அர்த்த ராத்திரியில் கூட அய்யனார் பதிவுக்கு போகலாம்,விடிய காலையில் வினவு பதிவுக்கு போகலாம். நான் ஏன் டா அங்க எல்லாம் போகபோகிறேன் என்று யாராச்சும் கேட்டால் அவன் ரத்தம் கக்கி சாவான்.//

    அப்போ குசும்பன் பதிவுக்கு எப்பவுமே வரவேணாம்னு சொல்ல வாரியலா

    கலக்கல்

    எனக்கு பொருளாதாரர் பதவி வேணும் சொல்லிபுட்டேன் ஆமா

    ReplyDelete
  116. //சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை காலி செஞ்சுட்டு//

    ம்க்கும் இதுக்கு மட்டும் குறைச்சல்ல...வீட்டுக்கு போங்க கிடைக்கிற 1%க்கும் ஆப்பு வைக்கிறேன் ;)

    ReplyDelete
  117. எல்லாருமே ஃபுல் ஃபார்முல இருக்காங்கப்பா... :))

    ReplyDelete
  118. தம்பிசெட்டிபட்டியில் செயல்படும் அண்ட சராசர அனைத்து கெரக தமிழ்ப் பதிவர்கள் சங்கம் உங்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறது..

    ReplyDelete