Saturday, March 28, 2009

ஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை!

வீடு மாறியதால் கடந்த ஒரு மாதமாக நெட் வீட்டில் இல்லை, மனைவி படிக்க என்று மிகவும் அருமையாக இருக்கும் பதிவுகளை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம், இந்த வார ஸ்டாராக இருக்கும் மாதவராஜ் அவர்களின் “எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!பதிவை எடுத்து சென்றேன் பதிவை படிச்ச மனைவி நம்ம காதல் மாதிரியே இருக்குல்ல என்றார்கள், ம்கும் உங்க அப்பா பெரிய ஜெயகாந்தன் பாரு என்று நக்கல் அடிச்சேன். ச்சே நம்மளோடதும் ஸ்கூலிலேயே ஸ்டார்ட் ஆகியது இவரோடதும் ஸ்கூலிலேயே ஸ்டார்ட் ஆகி இருக்கு என்று சொன்னார்கள்.

ம்ம்ம் அவரோட மனைவி ஸ்கூல் முடிச்சு கல்லூரிக்கும் போய் இருக்காங்க நீதான் சார் அழகில் மயங்கி படிப்பை ஸ்கூலோட விட்டுவிட்டீயே என்றேன்.
அருந்ததீ அனுஸ்கா மாதிரி எரிக்கும் பார்வை பார்தார்கள்.

சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடின்னு வேறு பேச்சை மாற்றினேன்!

நேற்று திரும்பவும் அவர் போட்டு இருந்த பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி” என்ற பதிவை எடுத்துக்கிட்டு போனேன் படிச்சுட்டு ரொம்ப நல்லா இருக்கு என்றவர்கள், உடனே சிரித்தார்கள் ஏன் என்று கேட்டதற்கு இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...

என்னா ஒரு வில்லத்தனம்!

***********************
நேற்றோடு குசும்பு ஒன்லி ஆரம்பிச்சு இரண்டு வருடம் முடிந்துவிட்டதால் ஒரு கூடை கேக் மேல் 2 என்று இருக்கும் மெழுகுவத்தி போட்டு போஸ்ட் போட்டு இருந்தால் ஆள் ஆளுக்கு கல்யாண நாள் என்று வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாங்க, ஏனுங்க கல்யாணநாள் என்றால் கேக் போட்ட போட்டோவா போடுவாங்க? ஆடு கழுத்தில் மாலை மாட்டி இருக்கும் போட்டோல்ல போடனும்.
***********************
ப்ரூட்டிக்கு விளம்பரத்தில் வரும் வளராதோ கண்ணா ஏன் இடம் மாறி இருக்கு என்று தெரியவில்லை ஒருவேளை விளம்பத்தை பற்றி பேச இது ஒரு யுத்தியா என்று தெரியவில்லை என்று பேசிக்கிட்டு இருந்த பொழுது சொன்னது ஒருவேளை உங்க கூட படிச்சவரா இருக்கும், உங்க பிரண்டும் உங்கள மாதிரிதானே இருப்பார்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில் ஐயாவ தட்டிக முடியாதுல்ல:)

விஜய் நடிக்கும் குளிர் பானவிளம்பரத்தில் பின்னாடி போக்கிரி பட ஸ்டில் இருப்பது போல் வந்தது மனைவி சொன்னாங்க இது ரொம்ப பழய விளம்பரமோ என்று, நான் சொன்னே இல்லை இல்லை கடைசியா ஓடிய படம் அவருக்கு போக்கிரிதானே அதான் போக்கிரி போஸ்டர் வெச்சு இருக்காங்க என்று, என்ன நான் சொன்னது சரிதானே?
*************************
நண்பன் ஒருவனும் வீடு தேடிக்கிட்டு இருந்தான் அவனும் ஷேரிங் டைப்பில் வீடு பார்த்ததால் அவன் என்னிடம் டேய் நீயும் நானும்சேர்ந்து ஒரு வீடு எடுத்துடலாமா டா என்றான்?

டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.

ஒரு நிமிடம் குழம்பி போய் யோசித்தவன் ஏன் டா, ஏன் இப்படி என்றான்...

விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!

67 comments:

  1. hehe.. neenga damage aana kadhaiya poi padichittu varen :))

    ReplyDelete
  2. //இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...
    //

    adutha vaara star neengala?? !! Vaazhthukkal :)))

    ReplyDelete
  3. //உடனே சிரித்தார்கள் ஏன் என்று கேட்டதற்கு இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...

    என்னா ஒரு வில்லத்தனம்!//

    //உங்க பிரண்டும் உங்கள மாதிரிதானே இருப்பார்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில் ஐயாவ தட்டிக முடியாதுல்ல:)//

    :))))))))))))))))))))))))))))))

    Chancae illa.. ammani rommmmmmmmmmmba theliva irukkaanga :D

    ReplyDelete
  4. //நேற்றோடு குசும்பு ஒன்லி ஆரம்பிச்சு இரண்டு வருடம் முடிந்துவிட்டதால்//

    idhukkum innoru vaazhthu.. Treat eppo kudukka poreenga? [Indha kelviya kettu kettu salichu ponaalum marubadiyum keppomilla :P ]

    ReplyDelete
  5. தம்பி குசும்பா..

    மாதவராஜ் ஸார் பாவம்.. அப்பிராணி.. கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவர்.. நிறைய படிப்பாளி.. இலக்கியவாதி.. விட்டுர்றா கண்ணா..

    ஏதோ கொஞ்சம், கொஞ்சம் தமிழ்மணம் போரடிக்காம இருக்குதுன்னு அவரை மாதிரி ரெண்டு, மூணு பேர் புதுசா வந்திருக்கிறதாலதான்..

    விரட்டி விட்டுறாதடா.. உனக்குத்தான் ஆயிரம் கும்மியாண்டவர்கள் இருக்கிறார்களே.. அவர்களைப் பிடித்துக் கொள்ளேன்..

    ReplyDelete
  6. //இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க//

    கரீக்ட்டு.. தங்கச்சி நல்லாத் தெளிவாத்தான் சொல்லியிருக்காங்க.. இனிமேலாச்சும் திருந்துடா ராசா..

    ReplyDelete
  7. ஆமா.. அதென்ன? ஜி3 அக்கா உலக அதிசயமா இங்கிட்டெல்லாம் பின்னூட்டம் போட வந்திருக்காங்க..

    துபாய்ல மழை வரப் போகுதுடோய்..!

    ReplyDelete
  8. 2 வருஷத்துக்குள்ளேயே இத்தனை பேரை நீ காலி பண்ணியிருக்கியே.. இன்னும் இருக்குற வருஷத்துல எத்தனை பேர் உன்னைப் பார்த்து ஓடப் போறாங்கன்னு தெரியல..

    இருந்தாலும் ரகசியமாச்சும் உன்னைப் படிச்சுக்குறாங்கப்பா..

    ReplyDelete
  9. //விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!//

    :))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  10. அடுத்த வார ஸ்டாருக்கு அட்வான்ஸ் வாழ்துக்கள்..

    ReplyDelete
  11. //ம்ம்ம் அவரோட மனைவி ஸ்கூல் முடிச்சு கல்லூரிக்கும் போய் இருக்காங்க நீதான் சார் அழகில் மயங்கி படிப்பை ஸ்கூலோட விட்டுவிட்டீயே என்றேன்.
    அருந்ததீ அனுஸ்கா மாதிரி எரிக்கும் பார்வை பார்தார்கள்.//

    அடப்பாவி.. நல்லாப் படிச்ச புள்ளையையும் இப்படி படிக்க விடாம பண்ணிப்புட்டு அதுக்கு உன் அழகை வேற காரணமா சொல்ற..

    நிசமா நீ அழகாடா தங்கம்..?

    தங்கச்சியை மொதல்ல கண்ணாடி போடச் சொல்லு..!

    ReplyDelete
  12. //அறிவிலி said...

    அடுத்த வார ஸ்டாருக்கு அட்வான்ஸ் வாழ்துக்கள்..//

    அடுத்த வார ஸ்டாரா..? ஐயையோ.. எனக்கு நிறைய வேலையிருக்கு சாமி..

    இவன் பாட்டுக்கு டெய்லி 5 கும்மி போட்டு கும்முவானே..

    இப்பவே சொல்லிட்டேன்.. நோ பின்னூட்டம்.. ஒன்லி படிப்பு மட்டும்தான்..1

    ReplyDelete
  13. //ஏனுங்க கல்யாணநாள் என்றால் கேக் போட்ட போட்டோவா போடுவாங்க? ஆடு கழுத்தில் மாலை மாட்டி இருக்கும் போட்டோல்ல போடனும்//

    :):) Ha Ha Ha!!!
    அப்போ அடுத்த வாரம் முழுவதும் ஒரே சிரிப்புத்தான்.
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. /
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    //அறிவிலி said...

    அடுத்த வார ஸ்டாருக்கு அட்வான்ஸ் வாழ்துக்கள்..//

    அடுத்த வார ஸ்டாரா..? ஐயையோ.. எனக்கு நிறைய வேலையிருக்கு சாமி..
    /

    :)))))))))))

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் குசும்பா.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் பாஸ்...

    ReplyDelete
  17. நேத்தும் வாழ்த்து இன்னிக்கும் வாழ்த்து நாளைக்கும் வாழ்த்து தான் போடனும் பதிவில்.. :)

    ReplyDelete
  18. வாழ்த்துகள்!

    இந்த வாரம் காமெடி வாஆஆஆரமா!! :-)) சூப்பர்!

    ReplyDelete
  19. நாளைக்கு வந்து பேசிக்குறேன்!

    ReplyDelete
  20. ஸ்டாருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. இரண்டு வருசம் வெற்றிகரமா முடிச்சதுக்கு வாழ்த்துக்கள் மாப்பி
    ( மனசாட்சி: அட்ப்பாவி, 2 வருசமா நீ எல்லாருக்கும் இம்சைய குடுத்துக்கிட்டு இருக்கியா?)

    ReplyDelete
  22. அடுத்தவாரம் தமிழ் மண நட்சத்திரமா?
    அதுக்கும் வாழ்த்துக்கள் மாப்பி

    ( அடக்கொடுமையே, ஒரு வாரம் தமிழ்மணம் பக்கமே போயிரக்கூடாது, இவன் முகப்புல இருந்துகிட்டு பயமுறுத்துவானே)

    ReplyDelete
  23. //ம்ம்ம் அவரோட மனைவி ஸ்கூல் முடிச்சு கல்லூரிக்கும் போய் இருக்காங்க நீதான் சார் அழகில் மயங்கி படிப்பை ஸ்கூலோட விட்டுவிட்டீயே என்றேன்.//

    மவனே, தங்கச்சி காலேஜ்க்கு எல்லாம் போகலையேன்னு சந்தோசப்படு, காலேஜ்க்கு எல்லாம் போயி படிச்சு விவரம் தெரிஞ்சுருந்தா உன்னைய கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சுருக்குமா?

    ReplyDelete
  24. G3 ரொம்ப சந்தோசமுங்க!

    *********************
    உண்மை தமிழன் அண்ணாச்சி அவரை நான் இங்க ஒன்னும் சொல்லவே இல்லீயே ஏன் நீங்க பதற்றம் அடைகிறீர்கள்!

    துபாயில் மூன்று நாட்களாக செம மழை!
    ****************************
    நன்றி மகேஷ்
    ****************************
    நன்றி அறிவிலி
    ****************************
    உண்மை தமிழன் அண்ணாச்சி
    //அடப்பாவி.. நல்லாப் படிச்ச புள்ளையையும் இப்படி படிக்க விடாம பண்ணிப்புட்டு அதுக்கு உன் அழகை வேற காரணமா சொல்ற.. //

    அவ்வ்வ் சும்மாச்சுக்கு அப்படி சொன்னேன் அவுங்க MCA படிச்சு முடிச்சபிறகுதான் கல்யாணமே நடந்தது!
    ***************************
    மங்களூர் சிவா கை வலிக்கபோவுது பின்னூட்டம் போட்டு பார்த்து! அயோடைக்ஸ் தடவ சொல்லுங்க
    **************************
    Sathananthan நன்றிங்கோ!
    ***************************
    நன்றி சென்ஷி
    *************************
    நன்றி வடகரை வேலன்
    ***********************
    நன்றி விக்னேஷ்வரன்
    ***********************
    நன்றி முத்துலெட்சுமி வாழ்த்துக்கள் போதும் இனி விமர்சனம் தான் வேண்டும்!
    ************************
    நன்றி சந்தனமுல்லை
    ************************
    புலி ஐ ஆம் யுவர் பிரண்ட்! ஓக்கே!
    ************************
    நன்றி ஆதவன்
    ***********************
    ஜோசப் பால்ராஜ் said...
    ( மனசாட்சி: அட்ப்பாவி, 2 வருசமா நீ எல்லாருக்கும் இம்சைய குடுத்துக்கிட்டு இருக்கியா?)//

    ஹி ஹி ஆமாம் மாப்பி!
    ********************
    //மவனே, தங்கச்சி காலேஜ்க்கு எல்லாம் போகலையேன்னு சந்தோசப்படு, காலேஜ்க்கு எல்லாம் போயி படிச்சு விவரம் தெரிஞ்சுருந்தா உன்னைய கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சுருக்குமா?//

    சத்தம்போட்டு காலேஜ் போகலை என்று சொல்லிடாத மாப்பி அடி தாங்க முடியாது!

    ReplyDelete
  25. அதெப்படிங்க! வேதாத்ரி மகரிஷிக்கு நேராக வரும் படி "தத்துவம்" சொல்லியிருக்கீங்க.
    எப்படியெல்லாம் நம் பதிவை பிரிச்சி மேயராங்க என்று முனுமுனுக்கிறீர்களா? :-)

    ReplyDelete
  26. உள்ளேன் நண்பா :)))

    ReplyDelete
  27. ரசித்தேன்.
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  28. அடுத்த வார நட்சத்திரம் குசும்பிற்கு எல்லாரும் ஒரு தபா ஜோரா கை தட்டுங்கோ!

    ReplyDelete
  29. //டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.//

    ராசா, இதுல ஏதாவது உள்குத்து இருக்குதா? எனக்கென்னமோ அப்படித்தான் தோணுது

    ReplyDelete
  30. நீ பில்டப்பு கொடுக்கும் போதே நினைச்சேன், இதுவாத்தான் இருக்குன்னு. சரி 1 வாரத்துக்கு தேர்தல் சூடு குறையட்டும். நகைச்சுவை சூடு அதிகமாகட்டும். என் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. குசும்பரின் அதே டச்:)வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  32. //விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!//
    சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.
    எவ்வளவுதான் விளையாட்டுப் பையனா இருந்தாலும், பொண்ணு மட்டும் சரியாத்தான் கட்டிருக்கே கண்ணா. அப்பப்ப சரிப்படுத்த வீட்டில் ஆளிருக்கில்ல. வாழ்க வாழ்க!.

    ReplyDelete
  33. //டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.

    ஒரு நிமிடம் குழம்பி போய் யோசித்தவன் ஏன் டா, ஏன் இப்படி என்றான்...

    விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்/

    எப்டி மாமா எப்டி? :))

    ReplyDelete
  34. //நான் சொன்னே இல்லை இல்லை கடைசியா ஓடிய படம் அவருக்கு போக்கிரிதானே அதான் போக்கிரி போஸ்டர் வெச்சு இருக்காங்க என்று, என்ன நான் சொன்னது சரிதானே?//

    மாம்ஸ் மொக்கை க்ரூப்ல போட்டு கார்க்கி கிட்ட கேட்ருவோமா? :))

    ReplyDelete
  35. வாழ்த்துகள்


    (குசும்பு இல்லை - மெய்யாலுமே)

    ReplyDelete
  36. அப்ப இனி ஒருவாரம் பெரிய கும்மி இருக்குன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  40. சந்தனமுல்லை said...

    வாழ்த்துகள்!
    இந்த வாரம் காமெடி வாஆஆஆரமா!! :-)) சூப்பர்!////

    ரிப்பீட்டு வாத்துகள் அண்ணே.!

    ReplyDelete
  41. //விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!//

    அது சரி :)

    ReplyDelete
  42. //"ஸ்டார் மாதவராஜால் நான் டேமேஜ் ஆன கதை!" //


    அண்ணே உன்னால டேமேஜ் ஆனவங்க கதயச் சொன்னா யுகம் பத்தாது :)

    ReplyDelete
  43. படிக்க ஆவலா இருக்கேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. நட்சத்திர வாழ்த்துகள் !

    மீ த பர்ஸ்ட் !

    ReplyDelete
  46. நட்சத்திர வாழ்த்துகள் !

    ReplyDelete
  47. //அருந்ததீ அனுஸ்கா மாதிரி எரிக்கும் பார்வை பார்தார்கள்.

    சரி சரி தண்ணிய குடி தண்ணிய குடின்னு வேறு பேச்சை மாற்றினேன்!//

    ம்ம்ம்!

    வாழ்த்துகள் குசும்பன்(,)ஐயா சரவணன் தெரியுமே!

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் தமிழ்மணம் ஸ்டார் :))

    ( மாமா இது ரண்டாவது ரவுண்டா? )

    ReplyDelete
  49. //தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா//
    நன்று.

    நட்சத்திர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. :)

    குசும்பா? தமிழ்மணத்துல உன் ஹியூமர் சென்ஸுக்கு ஏதும் ஆப்பு வெச்சிட்டங்களா?

    கலக்கணும் சொல்லிட்டேன்!

    இது எச்சரிக்கை அல்ல! கட்டளை!

    ReplyDelete
  51. //உடனே சிரித்தார்கள் ஏன் என்று கேட்டதற்கு இதுபோல் நல்லா எழுதுறவங்களுக்கு அடுத்தா நீங்க ...

    என்னா ஒரு வில்லத்தனம்!//

    இப்படித்தான் ரொம்ப தெளிவா இருக்கனும்!!

    ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்குள் !!
    2 வருடம் தொடர்ந்து எழுதி எங்களை இம்சை செய்வதற்கு வாழ்த்துக்கள்..!!

    //ஆடு கழுத்தில் மாலை மாட்டி இருக்கும் போட்டோல்ல போடனும்.//

    ஏன் எருமை மாடு மேல் எமன் பாசக்கயிற்றோட இருக்கிற படம் கூட போடலாம் :)) (இது குசும்பி சார்பாக) !!

    ReplyDelete
  52. //தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா//

    தத்துவம் !! தத்துவம் !! சூப்பரு..!!

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள் குசும்பு!!

    ReplyDelete
  54. ஆஹா....!! ஓஹோ....!!!





    பேஷ்......!!! பேஷ்......!!!!




    பிரமாதம்.....!!!




    சான்ஸே இல்ல......!!!





    மார்வலஸ்.........!!!







    மிராக்கில் .......!!!!!!






    பதிவுல உங்களைய அடுச்சுக்க ஆளே இல்லீங்கோ .....!!!!






    ஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............!!!!

    ReplyDelete
  55. //விடுடா விடுடா நான் எல்லாம் தமிழ் பிளாக்கர் என்றேன்!//

    :) :) :)

    ReplyDelete
  56. :))தல, வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  57. ///டேய் தெரியாதவங்க கூட போய் தங்கி தெரிஞ்சவங்களா மாறிக்கிட்டா பரவாயில்லை, தெரிஞ்சவங்க கூட போய் தங்கி தெரியாதவங்களா மாறிக்கிட்டா ரொம்ப தப்புடா என்றேன்.//

    கலக்கல்

    ReplyDelete
  58. நன்றி வடுவூர் குமார்

    நன்றி கவிதாயினி

    நன்றி ஆயில்யன்

    நன்றி பரிசல்

    நன்றி மாதவராஜ்- தங்கள் முதல் வருகைக்கு

    நன்றி பப்பு

    நன்றி ரவி தல

    நன்றி அண்ணாச்சி உள்குத்து எல்லாம் இல்லை இது எப்பொழுதும்
    சொல்வதுதான்.

    நன்றி ராஜ நடராஜன்

    நன்றி சுல்தான் பாய், நீங்கள் சொல்வது 100% சரி!:)

    நன்றி மாமா அதுபாட்டுக்கு தானா வருது! ஹி ஹி கேட்டாலும் கார்கி அதையேதான்
    சொல்வார்!

    நன்றி ஜமால்

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி ஜெகதீசன்

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி அண்ணே அப்படி யாரும் இல்லைன்னே!

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி முரளி கண்ணன்

    நன்றி கோவி கண்ணன் (ஊர்ல எத்தனை கண்ணன்:(

    நன்றி ஜோதிபாரதி

    நன்றி சஞ்சய்! ம்ம்ம்ம் ஏழாவது ரவுண்டு! இப்ப சந்தோசமா?

    நன்றி ஊர் சுற்றி

    நன்றி சிபி

    நன்றி கவிதா எல்லாம் நோட்டட் பதில் முறை செய்யப்படும்:)

    நன்றி புவனேஷ்

    நன்றி லவ்டேல் மேடி

    நன்றி டாக்டர்

    நன்றி நாட்டி

    நன்றி கேபிள் சங்கர்- தங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete