Saturday, August 2, 2008

இலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங்களுக்கு???

வியாழன் அன்று குசேலன் கும்மியதில் தலைவலியோடு வெளியே வந்த பிறகு நல்லா செம சாப்பாடு சாப்பிட்டுவிட்டு படுத்தா நல்லா இருக்கும் போல இருந்ததால் ஆசிப் அண்ணாச்சிக்கு போன் போட்டு அண்ணே பதிவர் மீட்டிங் என்று சொன்னீங்கள்ள இதோ வருகிறோம் என்று பதிவர் சந்திப்பில் கலந்துப்பது போல் சென்றோம்.



விஜய் டாக்டர் பட்டத்தை திரும்ப வாங்கி கொண்டதாக அய்யனார் உரையாற்றினார். உரை முடிந்ததும் என்னை எழுப்பி சாப்பிட அழைத்து சென்றார்கள்.



மலையாளி கடையில் முதன் முறையாக அருமையான சாப்பாடு

நாங்கள் சாப்பிட்ட மெனு



ஸ்விட் கார்ன் சிக்கன் சூப்

டிராகன் சிக்கன்

சில்லி சிக்கன்

சிக்கன் தந்தூரி மசாலா

எக் புர்ஜ்

ஆப்பம்

பரோட்டா

7 UP



பின் வழக்கம் போல அண்ணாச்சி தன் நூலகத்தை பதிவர்களுக்காக திறந்து விட நான் 2 புத்தகம் என் மனைவிக்கு 4 புத்தகம் ஆகமொத்தம் 6 புத்தகம் அவருக்கு தெரிந்தும் அவருக்கு தெரியாமல் அய்யனாரை போல் சட்டைக்குள் மறைத்து 4 புத்தகம் என்று எடுத்துவந்தோம்.

பின் தம்பி உமாகதிரு போன் செஞ்சு சந்திப்பு பற்றி கேட்டான் நானும் நாங்க சாப்பிட்ட ஐட்டத்தை பற்றி ஒன்னுவிடாம கரெக்ட்டாக சொல்லிமுடித்தேன் பின்பு நான் எடுத்துவந்த புத்தங்களை பற்றி சொன்னேன், தம்பி டேய் நீ படிச்சு முடிச்சதும் புத்தகத்தை திருப்பி அவரிடம் கொடுத்து விடாதே என்றான்.

ஏன் என்று கேட்டதற்கு நீ திருப்பி கொடுத்து புது பழக்கத்தை ஆரம்பிச்சு வெச்சுடாதே பின் அதவெச்சு என்னிடம் கொடுத்த புத்தகத்தை எல்லாம் கேட்க ஆரம்பிச்சுடுவார். இந்த கோவிலுக்கு எல்லாம் வசூல் செய்யும் பொழுது இத பாருங்க பக்கத்துவீட்டுகாரர் 50 ரூபாய் கொடுத்து இருக்கார் நீங்களும் கொடுங்க என்பது போல் இத பாருடா குசும்பன் எடுத்து போன 6 புத்தகத்தில் 1 புத்தகத்தை திருப்பி கொடுத்து இருக்கான், நீயும் கொடு என்று கேட்பார் அதனால் கொடுத்துவிடாதே என்றார்.

அப்ப DVDயை கொடுக்கவா என்று கேட்டதற்கு அடேய் அண்ணாச்சி ரொம்ப நல்லவரு அடுத்த முறை போனாலும் புது புது புத்தகமும் DVDயும் கொடுத்துதான் அனுப்புவார் அதனால் நீ திருப்பி கொடுக்கவேண்டாம் என்றார்.


இந்த காலத்திலும் சாப்பாடும் போட்டு, படிக்க புத்தகமும் கொடுத்து, பார்பதற்கு DVDயும் கொடுத்து, வழி செலவுக்கு 1000 Dhs முன் பணமும் கொடுக்க இந்த காலத்தில் யாரு அண்ணாச்சி இருக்கா! அண்ணாச்சி நீங்க ரொம்ப நல்லவருங்க!!!

அதுக்கு நன்றிகடனாக உங்களுக்கு ஒரு ஐடியா!உங்கள் புத்தகங்களை காப்பாற்றுவதற்கு

இனி புத்தங்களை திருப்பி கொடுக்காதவர்களுக்கு தல பாலபாரதி எழுதிய புத்தகத்தை ஒரு பார்சல் அனுப்புவேன் என்றும் அதை படிக்காமல் அலட்சியம் செய்த பாலவாக்கம் பாலு இரத்தம் கக்கி செத்தான் என்றும்
படிச்ச சின்னமலை சித்தப்பு சித்தம் கலங்கி அலைகிறார் என்று மிரட்டுங்க அப்பதான் உங்க புத்தம் உங்களுக்கு திரும்பி வரும்.

32 comments:

  1. /
    இலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங்களுக்கு???
    /

    இதுக்காக துபாய்க்காய்யா வர முடியும்!?!?

    :)))))

    ஆனாலும் அவர் அநியாயத்துக்கு நல்லவர் போல!!!

    :)))))))))))))

    ReplyDelete
  2. /
    ஆகமொத்தம் 6 புத்தகம் அவருக்கு தெரிந்தும் அவருக்கு தெரியாமல் அய்யனாரை போல் சட்டைக்குள் மறைத்து 4 புத்தகம்
    /

    அய்யனார் வா'ல்'க
    :))))

    ReplyDelete
  3. /
    இத பாருடா குசும்பன் எடுத்து போன 6 புத்தகத்தில் 1 புத்தகத்தை திருப்பி கொடுத்து இருக்கான், நீயும் கொடு என்று கேட்பார் அதனால் கொடுத்துவிடாதே என்றார்.
    /

    அதானே உன்னால எவ்ளோ பேருக்கு கஸ்டமா போயிடும் அதனால அவிங்க சொல்ற மாதிரியே திரும்ப குடுத்து கெட்ட பழக்கம் எதும் பழக்கிடாத!!

    :)))))))))

    ReplyDelete
  4. //பின் வழக்கம் போல அண்ணாச்சி தன் நூலகத்தை பதிவர்களுக்காக திறந்து விட நான் 2 புத்தகம் என் மனைவிக்கு 4 புத்தகம் ஆகமொத்தம் 6 புத்தகம் அவருக்கு தெரிந்தும் அவருக்கு தெரியாமல் அய்யனாரை போல் சட்டைக்குள் மறைத்து 4 புத்தகம் என்று எடுத்துவந்தோம்.
    //

    :):):)

    ReplyDelete
  5. //
    /
    இலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங்களுக்கு???
    /

    இதுக்காக துபாய்க்காய்யா வர முடியும்!?!?
    //

    :):):)

    ReplyDelete
  6. மங்களூர் சிவா said...
    இதுக்காக துபாய்க்காய்யா வர முடியும்!?!?//

    அண்ணாச்சியின் சார்பாக இவை அனைத்தையும் செய்ய கூடிய ரொம்ப நல்லவர் பாலபாரதி இருக்கும் பொழுது என்னய்யா இப்படி ஒரு கேள்வி.

    ReplyDelete
  7. மங்களூர் சிவா said...
    அதானே உன்னால எவ்ளோ பேருக்கு கஸ்டமா போயிடும் அதனால அவிங்க சொல்ற மாதிரியே திரும்ப குடுத்து கெட்ட பழக்கம் எதும் பழக்கிடாத!!//

    அதுனாலதான் ஆறு புத்தகத்தில் ஒரு புத்தகத்தை திருப்பி கொடுக்கலாம் என்று ஒரு முடிவு எடுத்தேன் அதையும் கொடுக்க கூடாது என்கிறார் தம்பி.

    ReplyDelete
  8. rapp said...

    இதுக்காக துபாய்க்காய்யா வர முடியும்!?!?//

    தல பாலபாரதியை தொடர்புகொள்ளவும்.

    ReplyDelete
  9. அடப்பாவி,

    பதிவைப் பத்தி எழுதுடான்னா இப்படி எழுதி பேரைக் கெடுத்துடுவ போலிருக்கே.

    சாப்பாடு போட்டது நம்ம ஆசாத் அண்ணன். அவருகு நன்றி சொல்லுங்கபபா..

    மக்களே! நம்பாதீங்க. நான் நல்லவன் இல்ல.,நல்லவன் இல்ல நல்லவன் இல்லவே இல்ல

    ReplyDelete
  10. ஆசிப் மீரான் said...
    சாப்பாடு போட்டது நம்ம ஆசாத் அண்ணன். அவருகு நன்றி சொல்லுங்கபபா..///

    சாரி அண்ணாச்சி சுமால் மிஸ்டேக், சாப்பிடும் வரை மட்டும் இருந்து விட்டு பில் வரும் பொழுது,கரெக்ட்டாக கை கழுவ சென்றேனா அந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

    அதானால் என்ன ஆசாத ஜீ மிக்க நன்றி.

    அண்ணாச்சி அப்ப அடுத்த முறை உங்க கணக்கு!!!

    //மக்களே! நம்பாதீங்க. நான் நல்லவன் இல்ல.,நல்லவன் இல்ல நல்லவன் இல்லவே இல்ல//

    ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர்

    ReplyDelete
  11. ம்ம்ம் ... கொடுத்து வச்சனுங்கப்பா நீங்க ... அண்ணாச்சி மாதிரி ஒரு ஆள் கிடைப்பார்ன்னு நானும் இத்தன வரும் பாக்குறேன் ... ஒருத்தரும் சிக்கலையே :(

    மக்களே, அண்ணாச்சி சொல்லுறத நம்பிடாதீங்க ... அவரு ரொம்ப நல்லவருன்னு பல பட்சி சொல்லியிருக்கு ...

    ReplyDelete
  12. கடைசியில இது ஒரு பா க ச பதிவா?

    ReplyDelete
  13. // குசும்பன் said...
    rapp said...

    இதுக்காக துபாய்க்காய்யா வர முடியும்!?!?//

    தல பாலபாரதியை தொடர்புகொள்ளவும். //

    :-))))

    அப்படியே மத்த ஊருங்களுக்கும் கான்டாக்டு டீடெயிலு தாங்கங்கோவ்வ்!!!!!!!

    ReplyDelete
  14. ஹய்! நண்பா எனக்கும் கூட துபாய் வருணும்னு ஆசையாத்தான் இருக்கு! துண்டு போட்டு வையுங்க கூடிய சீக்கிரமே வந்துடறேன் :)))

    ReplyDelete
  15. இலவச சாப்பாடு சரி,DVD கூட சரி,புத்தகமும் இலவசமுன்னா அண்ணாச்சி எவ்வளவு நல்லவ்ரு,வல்லவரு.மெனு பேரெல்லாம் சொன்னீங்க,புத்தகப் பேரும் சொல்லியிருந்தீங்கன்னா எங்களுக்கு கொஞ்ச புத்தக தலைப்பு அறிவு வளர்ந்திருக்கும்.கூடவே அண்ணாச்சிக்கு தொலைந்துபோன புத்தக கணக்கும் கிடைத்திருந்த்ருக்கும்.

    குசேலன் பார்த்ததற்கு இலவசப் புண்ணியமாவது கிட்டியதே:)

    ReplyDelete
  16. //வெள்ளி அன்று குசேலன் கும்மியதில் தலைவலியோடு வெளியே வந்த பிறகு நல்லா செம சாப்பாடு சாப்பிட்டுவிட்டு படுத்தா நல்லா இருக்கும் போல இருந்ததால் ஆசிப் அண்ணாச்சிக்கு போன் போட்டு அண்ணே பதிவர் மீட்டிங் என்று சொன்னீங்கள்ள இதோ வருகிறோம் என்று பதிவர் சந்திப்பில் கலந்துப்பது போல் சென்றோம்.//

    சந்திப்பு நடந்தது வியாழக்கிழமை, நீ படம் பாத்தது வெள்ளிக்கிழமை என்னய்யா கலர் கலரா ரீல் வுடற...
    என்னமோ போ!

    ReplyDelete
  17. //டேய் நீ படிச்சு முடிச்சதும் புத்தகத்தை திருப்பி அவரிடம் கொடுத்து விடாதே என்றான்.//

    இஷ்டத்துக்கு ரீல் வுடுங்கடா...
    அண்ணாச்சிய சொல்லணும். பேச்சு பெரும்பேச்சா இருந்தாலும் உன்னையெல்லாம் நல்லவன்னு நம்பறார் பாரு.

    ReplyDelete
  18. //இந்த காலத்திலும் சாப்பாடும் போட்டு, படிக்க புத்தகமும் கொடுத்து, பார்பதற்கு DVDயும் கொடுத்து, வழி செலவுக்கு 1000 Dhs முன் பணமும் கொடுக்க இந்த காலத்தில் யாரு அண்ணாச்சி இருக்கா! அண்ணாச்சி நீங்க ரொம்ப நல்லவருங்க!!! //

    இதுக்காகவே நானும் துபாய்க்கு வரலாம்னு இருக்கேங்க...

    ReplyDelete
  19. வளர்மதி said...
    ம்ம்ம் ... கொடுத்து வச்சனுங்கப்பா நீங்க ... அண்ணாச்சி மாதிரி ஒரு ஆள் கிடைப்பார்ன்னு நானும் இத்தன வரும் பாக்குறேன் ... ஒருத்தரும் சிக்கலையே :(//

    நம்ம அண்ணாச்சி தான் வருத்துக்கு 30 நாட்கள் சென்னை வருகிறாரே அப்பொழுது இதை எல்லாம் வாங்கிட்டா போச்சு:))) அடுத்த முறை அண்ணாச்சி இங்கிருந்து கிளம்பும் பொழுதே உங்களுக்கு சொல்லி விடுகிறேன் .

    ******************************
    முரளிகண்ணன் said...
    கடைசியில இது ஒரு பா க ச பதிவா?//

    அப்படியும் வெச்சுக்கலாம்!!!

    *****************************
    நன்றி நிஜமா நல்லவன்
    *****************************
    விஜய் ஆனந்த் said...
    அப்படியே மத்த ஊருங்களுக்கும் கான்டாக்டு டீடெயிலு தாங்கங்கோவ்வ்!!!!!!!///

    சிங்கபூருக்கு விஜய் ஆனந்த்,நிஜமா நல்லவன்

    கத்தாருக்கு ஆயில்யன்

    குவைத்துக்கு ராஜ நடராஜன்

    கோவைக்கு சஞ்சய் ராமசாமி

    மங்களூருக்கு சிவா

    ஜெர்மனிக்கும் சிவா

    இலங்கைக்கு எம்.ரிஷான் ஷெரீப்

    இவுங்க எல்லாம் மற்றவர்களுக்கு உதவுவதுக்கு என்றே இருக்கும் ஆட்கள்

    ReplyDelete
  20. ஆயில்யன்: பந்திக்கு என்றால் பாய் தான் போட்டு வைக்கனும், போட்டு வெச்சுடுறேன்.
    **************************
    ராஜ நடராஜன் said...
    புத்தகப் பேரும் சொல்லியிருந்தீங்கன்னா எங்களுக்கு கொஞ்ச புத்தக தலைப்பு அறிவு வளர்ந்திருக்கும்.கூடவே அண்ணாச்சிக்கு தொலைந்துபோன புத்தக கணக்கும் கிடைத்திருந்த்ருக்கும்.//

    அவரு நோட் செஞ்சுட்டாருன்னா என்னா செய்வது அதான் ஒரு பொய்யான நம்பர் சொன்னேன், இன்னும் எத்தனை புத்தகம் என்று கவுண்ட் செய்யவில்லை.:))

    ****************************
    தம்பி said...
    சந்திப்பு நடந்தது வியாழக்கிழமை, நீ படம் பாத்தது வெள்ளிக்கிழமை என்னய்யா கலர் கலரா ரீல் வுடற...
    என்னமோ போ!///

    அய்யா நெக்கீரர் நான் படம் பார்த்ததும் வியாழன் அன்றுதான் குசேலன் கும்மியதில் என்ன கிழமை என்று மறந்துவிட்டேன் பதிவர் சந்திப்பும் அன்றுதான் நடந்தது என்று எப்படி ஒய் உமக்கு தெரியும்:)))

    ****************************

    தம்பி said...
    இஷ்டத்துக்கு ரீல் வுடுங்கடா...
    அண்ணாச்சிய சொல்லணும். பேச்சு பெரும்பேச்சா இருந்தாலும் உன்னையெல்லாம் நல்லவன்னு நம்பறார் பாரு.///

    ஹி ஹி நான் நல்லவன் என்று அவரே சொன்னாரா? அப்ப சரியாதான் இருக்கும்.:)

    ஆமாம் தம்பி என்னை ஆராவது நல்லவன் என்று சொன்னா நீ ஏன் காண்டாவுற!!!!

    ***************************
    எம்.ரிஷான் ஷெரீப் said...
    இதுக்காகவே நானும் துபாய்க்கு வரலாம்னு இருக்கேங்க...//

    வாங்க வாங்க ஆனா இலங்கை நண்பர்களை கவனிச்சுக்க உங்களுக்கு பதில் ஒரு ஆள் வெச்சுட்டு வாங்க!!!

    ***************************

    ReplyDelete
  21. //வாங்க வாங்க ஆனா இலங்கை நண்பர்களை கவனிச்சுக்க உங்களுக்கு பதில் ஒரு ஆள் வெச்சுட்டு வாங்க!!! //

    அட..என்னங்க நீங்க..
    நான் சின்னப் பையன் தான்..அதுக்காக இப்படி பப்ளிக்காச் சொல்றீங்க..?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    அதான் என்னைக் கவனிச்சிக்க ஆசிப் அண்ணாச்சி இருக்கார்ல ? :P

    ReplyDelete
  22. // இதுக்காகவே நானும் துபாய்க்கு வரலாம்னு இருக்கேங்க...//

    வாங்க வாங்க ஆனா இலங்கை நண்பர்களை கவனிச்சுக்க உங்களுக்கு பதில் ஒரு ஆள் வெச்சுட்டு வாங்க!!!//

    மீண்டும் வந்தேன்....:)))))))))

    ReplyDelete
  23. /
    குசும்பன் said...

    அண்ணாச்சியின் சார்பாக இவை அனைத்தையும் செய்ய கூடிய ரொம்ப நல்லவர் பாலபாரதி இருக்கும் பொழுது என்னய்யா இப்படி ஒரு கேள்வி.
    /

    அடடா 'தல'ய மறந்துட்டேனே இதுக்கு என்ன தண்டனையோ!!

    :))))))))))))))

    ReplyDelete
  24. /
    குசும்பன் said...

    அதுனாலதான் ஆறு புத்தகத்தில் ஒரு புத்தகத்தை திருப்பி கொடுக்கலாம் என்று ஒரு முடிவு எடுத்தேன் அதையும் கொடுக்க கூடாது என்கிறார் தம்பி.
    /

    தம்பி உமாகதிரும் அநியாயத்துக்கு நல்லவர் போல நம்மளை மாதிரியே!!

    :)))

    ReplyDelete
  25. அண்ணாச்சி ரொம்ப நல்லவரு நாம அங்க போகனும்னு நெனைச்சா டிக்கெட் கூட வாங்கி குடுப்பாரு...
    ;)

    ReplyDelete
  26. // சிங்கபூருக்கு விஜய் ஆனந்த் //
    அண்ணே...ஏன்னே இப்பிடி??? நாந்தான் சிவனேன்னு ஒரு ஓரமா இருக்கணேண்ணே...அப்ப்புறம் ஏன்ன்ன்????

    ReplyDelete
  27. எம்.ரிஷான் ஷெரீப் said...
    அட..என்னங்க நீங்க..
    நான் சின்னப் பையன் தான்..அதுக்காக இப்படி பப்ளிக்காச் சொல்றீங்க..?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    இதுக்காக உங்களுக்கு ISD போட்டா சொல்ல முடியும்...:) உங்களிடம் பேசுவதுக்கு பதில் பழய ஜில்பான்ஸ்கிட்ட பேசினாலாவது பொழுது போகும்:)))

    //அதான் என்னைக் கவனிச்சிக்க ஆசிப் அண்ணாச்சி இருக்கார்ல ? ://

    ஆவோ ஆவோ ஆவோ!!!

    ****************************
    ராஜ நடராஜன் said...
    மீண்டும் வந்தேன்....:)))))))))//

    அவ்வ்வ் நீங்கதான் குவைத் பதிவர்களுக்கு ஸ்பான்சர் செய்பவர் என்று சொன்ன பின்னூட்டம் மட்டும் உங்க கண்ணில் பட்டு இருக்காதே!!!:)))

    *******************************
    மங்களூர் சிவா said...
    அடடா 'தல'ய மறந்துட்டேனே இதுக்கு என்ன தண்டனையோ!!

    :))))))))))))))//

    உன் நெஞ்சில் அவர் நினைவு இல்லாததால் இனி அவரை மறக்கமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கிட்டு தலைக்கு ஒரு சூடு நெஞ்சிலோ....அல்லது..... எங்கு வசதி படுகிறதோ அங்கே ஒரு சூடுபோட்டு விடவும்.

    ***************************
    மங்களூர் சிவா said...
    தம்பி உமாகதிரும் அநியாயத்துக்கு நல்லவர் போல நம்மளை மாதிரியே!!

    :)))///

    ஆமாம் ஆமாம்
    *********************************
    Syam said...
    அண்ணாச்சி ரொம்ப நல்லவரு நாம அங்க போகனும்னு நெனைச்சா டிக்கெட் கூட வாங்கி குடுப்பாரு...
    ;)///

    அட என்னங்க நீங்க வேற பிளைட் ஓட்ட தெரிஞ்சா பிளைட்டே வாங்கி கொடுப்பாரு!!!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. குசும்பன் said...
    விஜய் ஆனந்த் said...
    // சிங்கபூருக்கு விஜய் ஆனந்த் //
    அண்ணே...ஏன்னே இப்பிடி??? நாந்தான் சிவனேன்னு ஒரு ஓரமா இருக்கணேண்ணே...அப்ப்புறம் ஏன்ன்ன்????///

    என்னா இப்படி சொல்லிட்டீங்க வழி காட்டும் வழிகாட்டி பலகை, தொலைவு சொல்லு எல்லை கல் எல்லாம் கூட ஒரு ஓரமாகதான் இருக்கிறது அது எல்லாம் ஓரமாக இருப்பதால் அது முக்கியம் இல்லாம் ஆகிடுமா? அதுபோல்தான் நீங்களும்:)))

    ஓரமாக நின்றாலும், நடுவே நின்றாலும் சிங்கபூரில் தமிழ்வளர்கின்ற ஆட்களுக்கு நீங்கதான் ஸ்பான்ஸர்:)))

    ReplyDelete
  30. ஆஹா!!! குருவே...உங்க குசேலன் பதிவுக்கு நா போட்ட பின்னூட்டத்த பாத்து காண்டாயிட்டீங்களா??? நொந்து போயிதான் அப்படி போட்டேனுங்கோ...தப்பாயிருந்தா என்ன மன்னிச்சுடுங்கோ... விட்டுடுங்கோஓஓஓ!!!

    ReplyDelete
  31. குசும்பா,
    ஆசிப் அண்ணாச்சிக்கு சீக்கிரம் சிங்கப்பூர்ல வேலை வாங்கி அவர இங்க கொண்டுவர திட்டம் போட்டுகிட்டு இருக்கோம்.

    பின்ன என்ன நண்பா, இங்க கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜி கொண்டுவந்தாரு, நாதன் அண்ணண் கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் கொண்டுவந்தாரு, அதத்தவிர ஒன்னும் கிடைக்கலப்பா.

    ReplyDelete
  32. விஜய் ஆனந்த் said...
    தப்பாயிருந்தா என்ன மன்னிச்சுடுங்கோ... விட்டுடுங்கோஓஓஓ!!!//

    என்னது இது சின்ன புள்ளதனமா? ஸ்பான்சர் எல்லாம் எங்களை போன்ற சில்வண்டுகளிடம் மன்னிப்பு கேட்க கூடாது அது பதிவு குத்தமாகிடும்!!!

    ****************************
    ஜோசப் பால்ராஜ் said...

    குசும்பா,
    ஆசிப் அண்ணாச்சிக்கு சீக்கிரம் சிங்கப்பூர்ல வேலை வாங்கி அவர இங்க கொண்டுவர திட்டம் போட்டுகிட்டு இருக்கோம்.///

    என்ன பால்ராஜ் உலகம் தெரியாத புள்ளயா இருக்க, அண்ணாச்சி இங்கன என்னா வேலையா செய்கிறார், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறாரு...ஹம் உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.
    வேண்டும் என்றால் சொல்லுங்க அண்ணாசி ஆபிசை அங்கன ஒன்னு ஓப்பன் செய்யசொல்லிடுவோம்.


    // பின்ன என்ன நண்பா, இங்க கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜி கொண்டுவந்தாரு, நாதன் அண்ணண் கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் கொண்டுவந்தாரு, அதத்தவிர ஒன்னும் கிடைக்கலப்பா.///

    ரொம்ப கஷ்டம் தான் என்ன செய்வது:(( ம்ம் அடுத்தமுறை சாப்பிடும் ஐட்டங்கள் போட்டோவை எடுத்து போடுகிறேன்.பார்த்து மனச தேத்திக்க நண்பா!!!

    ReplyDelete