Sunday, August 3, 2008

மக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது

இதுவரை மக்கள் கூடும் இடங்களில் மட்டுமே நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த தீவிரவாதிகள், உலகிலேயே முதல் முறையாக புதுவித வைரஸ் மூலம்...

மீதி செய்தி கடைசியில்

காட்சி 1- கதிர் வீடு

பரபரப்பாக அந்த அறை முழுவதும் தேடிக்கொண்டு இருந்தான் கதிர் எங்கே இங்க வெச்சு இருந்தது எங்கே போய் இருக்கும்? ராத்திரி எல்லோரும் படுத்த பிறகுதானே பார்த்துவிட்டு யாரு கண்ணிலும் பட கூடாது என்று இங்க ஒளிச்ச்ய் வைச்சிருந்தேன்.அப்படி இருந்தும் எப்படி? ச்சே விடியகாலையில எல்லோரும் கல்யாணத்துக்கு போறாங்களேன்னு அலட்சியமாக இருந்தது எவ்வளோ பெரிய தப்பாக போய் விட்டது!

ஒரு வேளை வேலைக்காரி எடுத்து போய் இருப்பாளோ இருப்பாளோ? பின் பக்கத்து வீட்டு ஸ்கூல் பையன் காலையில் பேப்பர் எடுக்க வந்தான் ஒருவேளை அவன் எடுத்து போய் இருப்பானோ!அய்யய்யோ அப்படின்னா அவன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்னை பற்றி என்னா நினைப்பார்கள்! அம்மாவோடு வேற நல்லா பேசிக்கிட்டு இருப்பார்களே!இல்லையே அவன் திரும்ப பேப்பர் கொடுக்கவரும்பொழுது ஒண்ணும் அவனிடம் ஒரு பதட்டம் இல்லையே!

காட்சி 2- பாபு வீடு

டேய் பாபு! உன்னை எல்லாம் என்னமோ நினைச்சுக்கிட்டு இருந்தேன்! நீ...! இப்படி மட்டமான பையனாக இருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை!
டேய்..! வயசுக்கு வந்த தங்கச்சி, இரண்டு வயசே ஆனா அக்கா குழந்தை, வயசான பாட்டி, தாத்தா எல்லாம் வீட்டில் இருக்கும் பொழுதுஎப்படிடா இப்படி செய்ய உனக்கு மனசு வந்துச்சு.

அம்மா.... தப்பா....நினை...

ச்சே பேசாதடா உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு.

தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்த பாபு ,கோபங்கொண்டு ஒரு முடிவோடு பையில் அதை எடுத்து வைத்துகொண்டு பாக்ஸரை ஒரு உதை உதைத்தான்... டுர்ர்ர்ர்ர்ர்ர் என்று பயங்கர வேகத்தோடு உறுமியபடி கதிர் வீட்டை நோக்கி சென்றான்.

காட்சி 3 - கதிர் வீடு

ச்சே..! உன்னை எல்லாம் நண்பன் என்று சொல்லிக்கவே வெட்கமாக இருக்கு,எப்படிடா இப்படி உனக்கு மனசு வந்தது என்று DVDயை கதிர் முகத்தில் தூக்கி எறிந்தான் பாபு. அட்டையில் "இருமுனை தாக்குதல்" குழந்தைகளுக்கான ஆங்கில படத்தின் தமிழ் பெயர், உள்ளே இருந்து கீழே விழுந்தது "அந்த" DVD.

மீதி செய்தி:



புதுவித வைரஸ் மூலம்... CD,DVDக்களை போட்டதும் டீவி, DVD பிளேயரை நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்கிறது அதனால் அந்த அந்த DVDக்களில் இருக்கும்படம் ஓடி முடியும் வரை சத்தத்தை குறைக்கவோ கூட்டவோ, அல்லது நிறுத்தவோ முடிவது இல்லை, இதில் கொடுமையின் உச்சகட்டமாக குருவி, குசேலன் ஆகிய படங்களை இரு முறை பதிவு செய்யப்பட்ட DVDக்களையும் மாற்று பெயர்களில் உலவ விட்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து தமிழகஅரசு போர்கால அடிப்படையில் கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்களையும் படுக்கைகளையும் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

22 comments:

  1. "இருமுனை தாக்குதல்" இப்படி ஒரு தலைப்ப குழந்தைகளுக்கான படத்தின் பெயரா எந்த புண்ணியவான் வெச்சான்?

    ReplyDelete
  2. நீ அண்ணாச்சி கூட சேந்து கெட்டு போயிட்ட சித்தப்பு.

    ReplyDelete
  3. அப்போ வெளிநாட்டில் பார்த்த உங்களை போன்ற தியாகிகளுக்கெல்லாம் ஒரு நிவாரணமும் கிடையாதா??????????????

    ReplyDelete
  4. கொலைவெறி பின்னூட்ட கயமை !

    ReplyDelete
  5. கொலைவெறி பின்னூட்ட கடமை, ஒரு எழுத்து முந்தைய பின்னூட்டத்தில் மாறிவிட்டது !:(

    ReplyDelete
  6. //கொடுமையின் உச்சகட்டமாக குருவி, குசேலன் ஆகிய படங்களை இரு முறை பதிவு செய்யப்பட்ட DVDக்களையும் மாற்று பெயர்களில் உலவ விட்டு இருக்கிறார்கள்.//

    :)))))

    ReplyDelete
  7. இப்பத்தான் DVD பற்றிக் கடிதாசு போட்டுவிட்டு இங்கே வந்தா உசார் உசார்ங்கிறீங்க:)

    ReplyDelete
  8. இப்படியாவது,
    திருடு விசிடி டிவிடி ஒழியுதான்னு பார்ப்போம்.

    ReplyDelete
  9. kuruvi kuselan veerasamy pazhani nnu thaane sonnangka

    ReplyDelete
  10. குருவி, குசேலனெல்லாம், நாங்க தியேட்டர்லயே ஆடாம அசையாம ஒக்காந்து பல தடவ பாத்தவங்க...இந்த வைரஸெல்லாம் எங்கள ஒண்ணியும் பண்ண முடியாது..அந்தத்தீவிரவாதிங்கள உருப்படியா எதாவது யோசிக்கச்சொல்லுங்க..தமிழங்கிட்ட வாலாட்டினா கேப்டன அனுப்பிருவோம்...

    ReplyDelete
  11. நன்றி ஜெகதீசன்

    *********************
    அப்படிங்களா தம்பி சார், சரிங்க சார்!

    *********************
    rapp said...

    அப்போ வெளிநாட்டில் பார்த்த உங்களை போன்ற தியாகிகளுக்கெல்லாம் ஒரு நிவாரணமும் கிடையாதா??????????????//

    அடுத்த காட்சிக்கு இலவச டிக்கெட் தருகிறேன் என்று சொல்கிறார்கள் அதை வேண்டும் என்றால் உங்களுக்கு கொடுத்துவிடவா?:))))

    *************************
    நன்றி விஜய் ஆனந்த்

    நன்றி கோவி கண்ணன்

    நன்றி வடகரை வேலன்

    நன்றி குரங்கு

    வெங்கட்ராமன் எப்படி செஞ்சாலும் திருட்டு வீசிடி ஒழியாது:(((
    ******************
    முரளிகண்ணன் அந்த கடைசி இருபடங்களும் அனு ஆயுதம் போல பயங்கர பவர் புல்
    *******************

    எங்க கடுதாசி போட்டீங்க, உங்க வீட்டுக்கு ஆட்டோ வரபோவுது ராஜ நடராஜன்

    ReplyDelete
  12. விஜய் ஆனந்த் said...
    அந்தத்தீவிரவாதிங்கள உருப்படியா எதாவது யோசிக்கச்சொல்லுங்க..தமிழங்கிட்ட வாலாட்டினா கேப்டன அனுப்பிருவோம்...//

    அவ்வ்வ்வ்வ் ஒன்னியும் சொல்லமுடியாது!!!
    ************************
    ஏன் இரவுகவி நண்பா ஏன்? முடியல:))

    ReplyDelete
  13. நான் சென்னையிலிருந்து ரயிலில் மங்களூர் வரும் போது வாங்கிய தமிழ் பட டிவிடி இது போல 'வைரஸ்' டிவிடி

    ஆனா அதுவும் நல்லாத்தான்யா இருக்கு!

    :))

    ReplyDelete
  14. ரெண்டு படமும் நான் இன்னும் பாக்கல. அந்த DVD ய அனுப்பி விடுங்க.

    ReplyDelete
  15. யாருக்கும் இதை படித்து நிஜமாவே இப்படி ஒரு ஐடியா வரக்கூடாது :)

    ReplyDelete
  16. unga mandaiyil mattum yaen thaan puthusu puthusa..

    why nga..

    aaa voooo nu

    cheeeee podaaaa

    ReplyDelete
  17. நல்ல குசும்பு தாங்க நீங்க!

    ReplyDelete