Saturday, August 9, 2008

பாலபாரதிக்கு கல்யாணமுங்கோ!!!! பா.க.ச பதிவு

தல நேற்று ஒரு பதிவு போட்டு இருந்தார் அதில் கடைசியாக இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் செஞ்சுடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

நானும் இதை உண்மை என்று நம்பி அவருக்கு போன் செஞ்சு தல சீக்கிரம் தேதியை சொல்லுங்க என்று சொன்னேன் அதுக்கு என்னய்யா சொல்லிடலாம் என்றார்.


பின்பு ஆசிப் அண்ணாச்சியுடன் பேசும் பொழுது இதுபோல தல கல்யாணத்தை பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கிறார் என்றேன். அதுவரை ஒழுங்கா பேசிக்கொண்டு இருந்த அண்ணாச்சி எலேய் உனக்கு ஒழுங்கா பதிவுதான் எழுத வராது என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா படிக்கவும் வராதாடா என்றார் கோபமாக:((


ஏன் என்று கேட்டதற்கு எலேய் குழந்தைக்கு காது குத்துன்னு சொல்லி இருப்பாரு ஒழுங்கா பாரு என்றார்.

நானும் திரும்ப ஒரு முறை பார்த்துவிட்டு இல்லை அண்ணாச்சி கல்யாணம் என்றுதான் போட்டு இருக்கிறார் என்றேன்.


அண்ணாச்சி டென்சன் ஆகி எலேய் ஒருத்தருக்கே எத்தனை முறைதான் டா கல்யாண மொய் வைக்கிறது. என்று டென்சன் ஆனார்.
(இருந்தாலும் அத்தனை டென்சனுக்கு இடையில் சென்னையில் லக்கியிடம் சொன்ன ஜோக் போல பாலபாரதியை பற்றியும் ஒன்னு சொன்னார், அது என்ன என்று தெரியவேண்டுபவர்கள் அண்ணாச்சியை கேளுங்க!!!)

பின்புதான் அதே பதிவை படிக்கும் பொழுது அதில் ஒரு உள்குத்துவை தல சூசகமாக சொல்லி இருக்கிறார்.

கீழே இருக்கும் போட்டோவை பாருங்க




அதாவது பதிவின் முதல் பத்தியிலேயே சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒரு வரியை சேர்த்து அதை போல்ட் ஆக்கி, பின் கடைசி பத்தியில்
இந்த வருட இறுதிக்குள் தேதியை சொல்கிறேன் என்றால் என்ன அர்த்தம்.
மீதியை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன் இம்புட்டுதான் குறிப்பா சொல்லமுடியும்....
பா.க.ச வெறியர்களுக்காக கமெண்ட் மாடுரேசன் நீக்கப்படுகிறது.

33 comments:

  1. //கமெண்ட் மாடுரேசன் நீக்கப்படுகிறது.//



    //Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//


    :(

    ReplyDelete
  2. ///பா.க.ச வெறியர்களுக்காக கமெண்ட் மாடுரேசன் நீக்கப்படுகிறது.///
    ///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.////
    என்ன கொடும இது சரவணன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. குசும்பன் சாரே! எங்க தல இரத்ததில் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை பதிவில் இடாத வரை இந்த பதிவை பா.க.ச. பதிவாக ஒத்துக் கொள்ள முடியாது.

    ReplyDelete
  4. சூட்சுமத்தைக் கண்டுபிடித்த சூட்சம பதிவர் குசும்பன் வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  5. சாரி நிஜமா நல்லவன், தமிழ்ப்பிரியன்
    டெக்னிக்கல் பால்ட்:)))

    ReplyDelete
  6. தமிழ் பிரியன் said...

    குசும்பன் சாரே! எங்க தல இரத்ததில் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை பதிவில் இடாத வரை இந்த பதிவை பா.க.ச. பதிவாக ஒத்துக் கொள்ள முடியாது.//

    முதன் முதலாக அப்படி கையெழுத்துவாங்கியவன் நான் என்பதால் அதை ப்ரேம் செஞ்சு வீட்டில் மாட்டிவைத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  7. //குசும்பன் said...
    சாரி நிஜமா நல்லவன், தமிழ்ப்பிரியன்
    டெக்னிக்கல் பால்ட்:)))//

    என்ன பால்ட்டோ...இதை வச்சி நான் ஒரு பதிவு போட்டுட்டேன்....நன்றி குசும்பரே:)

    ReplyDelete
  8. ///குசும்பன் said...
    தமிழ் பிரியன் said...

    குசும்பன் சாரே! எங்க தல இரத்ததில் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை பதிவில் இடாத வரை இந்த பதிவை பா.க.ச. பதிவாக ஒத்துக் கொள்ள முடியாது.//

    முதன் முதலாக அப்படி கையெழுத்துவாங்கியவன் நான் என்பதால் அதை ப்ரேம் செஞ்சு வீட்டில் மாட்டிவைத்து இருக்கிறேன்.//


    எனக்கு ஒரு சுமால் டவுட்.....கையெழுத்து போட்ட ரத்தம்....உண்மைலேயே தலயோட ரத்தம் தானா?

    ReplyDelete
  9. //தமிழ் பிரியன் said...
    சூட்சுமத்தைக் கண்டுபிடித்த சூட்சம பதிவர் குசும்பன் வாழ்க! வாழ்க!//

    பட்டங்களை வாரி வழங்கும் ''எலக்கிய செம்மல்'' தமிழ் பிரியன் வாழ்க...வாழ்க!

    ReplyDelete
  10. //(இருந்தாலும் அத்தனை டென்சனுக்கு இடையில் சென்னையில் லக்கியிடம் சொன்ன ஜோக் போல பாலபாரதியை பற்றியும் ஒன்னு சொன்னார், அது என்ன என்று தெரியவேண்டுபவர்கள் அண்ணாச்சியை கேளுங்க!!!)//

    குசும்பரே....அண்ணாச்சி பழக்கம் இல்லாத என்னைய மாதிரி ஆளுங்க எப்படி தெரிஞ்சிக்கிறது:)

    ReplyDelete
  11. நிஜமா நல்லவன் said...

    எனக்கு ஒரு சுமால் டவுட்.....கையெழுத்து போட்ட ரத்தம்....உண்மைலேயே தலயோட ரத்தம் தானா?//

    அந்த ரத்தத்தை சோதிச்சதில் HIV+ என்று வந்தது அப்ப ..அவருதுதான்

    ReplyDelete
  12. //அண்ணாச்சி டென்சன் ஆகி எலேய் ஒருத்தருக்கே எத்தனை முறைதான் டா கல்யாண மொய் வைக்கிறது. என்று டென்சன் ஆனார்.//

    ஹிஹி... நாட்ல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை :P

    ReplyDelete
  13. நாரதரே ! இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ ?

    :)

    ReplyDelete
  14. //நிஜமா நல்லவன் said...

    எனக்கு ஒரு சுமால் டவுட்.....கையெழுத்து போட்ட ரத்தம்....உண்மைலேயே தலயோட ரத்தம் தானா?//

    தலையோட ரத்தம் தானாம்.. ஆனா அது பால பாரதியோட தல இல்லையாம்.. மூலக் கடை பாயோட கடைல தொங்கிட்டு இருந்த ஆட்டு தலையோட ரத்தமாம். :))

    ReplyDelete
  15. அந்தப் படத்திலே இருக்கிறவர்தான்
    பாலபாரதியா?
    ந்ல்லாதான் கீறாரு

    ReplyDelete
  16. இப்ப என்னா சொல்றீங்க?? அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா? இல்லையா? கல்யாணம் ஆனதை மறைக்கிறீரா? இல்லை இனிமேத்தான் பண்ணிக்கப் போறாரா? இல்லை கல்யாணம் ஆனதை மறைச்சி இன்னொருக்கா பண்ணப்போறாரா?

    குசும்பா, என்னா சொல்றீரு நீரு???

    ReplyDelete
  17. //SanJai said...
    ஹிஹி... நாட்ல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை :P//

    ஆமாம் சஞ்சய் எனக்கு என்னா கவலை என்றால் கல்யாண சாப்பாட்டை எப்படி போய் சாப்பிடுவது என்று!!!

    ReplyDelete
  18. //குசும்பன் said...

    ஆமாம் சஞ்சய் எனக்கு என்னா கவலை என்றால் கல்யாண சாப்பாட்டை எப்படி போய் சாப்பிடுவது என்று!!!
    //

    ஆசிப் அண்ணாச்சி செலவுல அமீரகத்துல ஒரு ரிசப்சன் வெச்சிட சொல்லுங்க.. பொண்ணு மாப்பிள்ள வர முடியாட்டி பரவாயில்ல...

    ReplyDelete
  19. // கோவி.கண்ணன் said...
    நாரதரே ! இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ ?

    :)//

    நீங்களும் லக்கியும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிக்கிட்டு இருப்பதால் :)))
    அந்த இடம் இரத்த பூமியாக இருக்கிறது. அதான் அங்க ஓடி போய்விட்டேன்!!!

    ReplyDelete
  20. SanJai said...
    தலையோட ரத்தம் தானாம்.. ஆனா அது பால பாரதியோட தல இல்லையாம்.. மூலக் கடை பாயோட கடைல தொங்கிட்டு இருந்த ஆட்டு தலையோட ரத்தமாம். :))//

    தலையையும் , ஆட்டு தலையையும் ஒன்று படுத்தி பேசிய குற்றத்துக்காக நீங்க பாலபாரதிக்கு பைத்தியகாரன் போல முத்தம் கொடுக்கவும்.

    ReplyDelete
  21. siva gnanamji(#18100882083107547329) said...
    அந்தப் படத்திலே இருக்கிறவர்தான்
    பாலபாரதியா?
    ந்ல்லாதான் கீறாரு//

    இரண்டாவது படத்தைதானே சொன்னீங்க!!!

    ReplyDelete
  22. வெண்பூ said...
    குசும்பா, என்னா சொல்றீரு நீரு???///

    வெண்பூ என்றைக்குமே உண்மை ரொம்ப சிம்பிளாகதான் இருக்கும் நாமதான் பூ வெச்சு,பொட்டு வெச்சு சடை பின்னி சீவி சிங்காரிச்சு டெக்கரேசன் எல்லாம் செஞ்சு சூப்பரா வெளியே எடுத்துவரனும்.
    அதுபோல நான் குறிப்புதான் கொடுக்க முடியும் அதை வெச்சு வீடுகட்டி ரவுண்டு அடிக்கவேண்டியது உங்க பொருப்பு.

    ReplyDelete
  23. குசும்பன் said...
    வெண்பூ said...
    குசும்பா, என்னா சொல்றீரு நீரு???///

    வெண்பூ என்றைக்குமே உண்மை ரொம்ப சிம்பிளாகதான் இருக்கும் நாமதான் பூ வெச்சு,பொட்டு வெச்சு சடை பின்னி சீவி சிங்காரிச்சு டெக்கரேசன் எல்லாம் செஞ்சு சூப்பரா வெளியே எடுத்துவரனும்.
    அதுபோல நான் குறிப்புதான் கொடுக்க முடியும் அதை வெச்சு வீடுகட்டி ரவுண்டு அடிக்கவேண்டியது உங்க பொருப்பு.
    \\\

    பொதுவா பொய்க்குத்தான இதெல்லாம் பண்ணுவாங்க...:)

    ReplyDelete
  24. தமிழ் பிரியன் said...
    \
    குசும்பன் சாரே! எங்க தல இரத்ததில் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டையை பதிவில் இடாத வரை இந்த பதிவை பா.க.ச. பதிவாக ஒத்துக் கொள்ள முடியாது.
    \

    ஒரு முடிவாத்தான் இருக்காப்புல...:)

    ReplyDelete
  25. /
    எலேய் உனக்கு ஒழுங்கா பதிவுதான் எழுத வராது என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா படிக்கவும் வராதாடா என்றார் கோபமாக:((
    /

    ரிப்ப்ப்ப்ப்ப்பீட்ட்டு

    ReplyDelete
  26. /
    குசும்பன் said...

    நிஜமா நல்லவன் said...

    எனக்கு ஒரு சுமால் டவுட்.....கையெழுத்து போட்ட ரத்தம்....உண்மைலேயே தலயோட ரத்தம் தானா?//

    அந்த ரத்தத்தை சோதிச்சதில் HIV+ என்று வந்தது அப்ப ..அவருதுதான்
    /

    பாகச பின்னூட்டம் பதிவை விட சூப்பர்

    :))))))))

    ReplyDelete
  27. எப்படி இப்படியெல்லாம்?

    ReplyDelete
  28. இப்ப்டித்தான் எப்பவுமேயா.. இல்ல எப்பவுமே இப்படித்தானா?

    ReplyDelete
  29. இந்தப்பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்

    இவண்
    பா பா ச
    153 வது வட்டம்
    தென்சென்னை மாவட்டம்

    ReplyDelete
  30. //siva gnanamji(#18100882083107547329) said...
    அந்தப் படத்திலே இருக்கிறவர்தான்
    பாலபாரதியா?
    ந்ல்லாதான் கீறாரு//

    சாரே! டைமிங்லே கலக்குறேள்... சான்ஸே இல்லை :-))))

    ReplyDelete