Friday, August 1, 2008

குசேலன் - குப்பைமுத்துசாமி


படத்துக்கு இதுக்கு மேல் விமர்சனம் தேவை இல்லை என்பதால் நாம் படத்தின் பட்ஜெட் பற்றி பார்க்கலாம்.

படத்துக்கு மொத்தம் செலவான தொகை ரஜினி சம்பளம் இல்லாமல் 1 கோடி ரூபாய் என்றால் 98 லட்சம் ரஜினியின் மேக்கப்புக்கும் கிராப்பிக்ஸ்க்கும்
செலவு ஆகி இருக்கிறது.


மீதி ஒரு லட்சம் மீனாவுக்கு புது புடவை வாங்கவே செலவாகி இருக்கிறது.
சன் டீவியில் செய்தி வாசிப்பவர்கள் போல் காட்சிக்கு காட்சி புது புடவையில் வலம் வருகிறார் ஆனால் வீட்டில் சமைக்க அரிசியும் ,டீ போட சர்கரையும் இல்லையாம்.


வீட்டுக்கு வந்த சிஸ்டர்கள் சர்கரை இல்லாததால் பிளாக் டீ போட சொல்லிவிட்டு அதை மீனா எடுத்து வரும் பொழுது குடிக்காமல் சென்றவகையில் மூன்று பிளாக் டீ க்கான செலவு வீன்.

வாசுவை ஒரு இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும் மீனாவுக்கு காஸ்டியும் செலவு அதிகம் ஆனதால் நயன் தாராவுக்கான காஸ்டியும் செலவை குறைத்ததால் அவரை பாராட்டியே ஆகவேண்டும். நயன் தாராவும் பில்லாவில் நடிச்சதில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை போல, காரில் இருந்து இறங்கியதுமே தொடை தெரிய கார் மேல் காலை தூக்கிவைத்து கொண்டு கொடுக்கும் போஸ் அட போட வைக்கிறது.

முக்கிய குறிப்பு : படத்தில் நயன்தாராவுக்கு என்று ஒரு தனி பாடல் இருக்கிறது அந்த மழை பாடலை வெளியில் சூட் செய்ததுக்கு பதில் அதே டிரஸ் போட்டு பாத்ரூம் சவரில் குளிக்கவிட்டு இருந்தால் மலையாள பிட் படம் பார்த்தது போல் இருந்து இருக்கும் அது மட்டும் இன்றி மழைக்காக ஆன செலவும் அதிகம் ஆனதால் இங்கு வாசுக்கு ஒரு குட்டு.
இந்த பாடலின் பொழுது நான் கண்ணை மூடிக்கிட்டேன், மனைவி அருகில் இருந்ததால்.

மிகவும் இயல்பாகவும் அருமையாகவும் நடிக்க கூடிய எம் எஸ் பாஸ்கரை வீண் அடித்தது மட்டும் இன்றி அவருக்கு ஒரு விக் கொடுத்து மேக்கப் செலவை அதிகபடுத்தி இருக்கிறார்.

அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்ல மட்டும் நிழல்கள் ரவியை நடிக்க கூப்பிட்டது.

ரஜினிக்கு போட்ட மேக்கப்பை கொஞ்சம் கூடவோ அல்லது குறைச்சோ போட்டு இந்த பசுபதி போல நடிக்கவெச்சு இருந்தால் பசுபதிக்கான சம்பள
செலவை குறைச்சு இருக்கலாம். தேவை இல்லாமல் பசுபதி இந்த படத்தில் ஒரு இடைசொருகல்.

படத்தின் சில கமெடிகள் :
இந்த பாடல் 75 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு என்று டெடிகேட் செய்து தமிழ் சினிமாவையே அசிங்க படுத்தியது.

ரஜினி அரபி போல் டிரஸ் போட்டுக்கிட்டு, விஜயகாந் போல் ஒரு மேடை மீது நின்று கொண்டு பேசுவது போல் காட்டுவார்கள் அதை பார்க்கும் கூட்டம் வேஸ்டி, துண்டோடு நிற்க்கும்.
சந்திரமுகி வேட்டையன் தன் தலையை தானே அறுத்துகொண்டபின் தலை மட்டும் தனியாக சுற்றி வரும், தலை இல்லாத முண்டம் மட்டும் ஓடிவிளையாடும் அதை பார்த்த நயன் தாரா மயங்கி விழுவார் அப்படி விழுந்ததும் வாசு கட் டேக் ஓக்கே என்பார்.

படத்தின் காமநெடிகள்:
பேரிச்சை பழம் சாப்பிட கொடுத்து விட்டு டேய் கொட்டைய எடுத்துவிட்டு சாப்பிடு மூன்றாகி விட போகிறது என்று சொல்வது.

நயன் தாரா ரூமில் இருக்கும் வடிவேலு நயன் தாரா டிரஸ் சரி செய்யதை பார்த்துவிட்டு மீசை நீள்வது போல் காட்டுவது.

லிவ்விங்ஸ்டன் 9 வது அதிசயத்தை பார்கிறாயா என்று வேஸ்டியை தூக்குவது போன்ற காம நெடிகள் அதிகம்.

ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினி.
ரஜினியின் நண்பர் -வாசு

43 comments:

  1. இந்த படத்தின்மூலம் பார்ப்பவர்களுக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்து அதன் மூலம் எம்.ஆர்.ராதா அவர்களை நினைவூட்டிய பி.வாசு அவர்களுக்கு தங்கத் தலைவி ராதிகா ரசிகர் மன்றம் சார்பில் நூறு நன்றிகள் :)))

    ReplyDelete
  2. நான் எழுதியிருக்கிற விமர்சனத்தையும் பாருங்க...

    http://ahamedzubair.blogspot.com

    குப்பையில இருந்துகூட மின்சாரம் தயாரிக்கலாமாம்..வேறொரு பேர் தேடுறேன்..

    ReplyDelete
  3. // முக்கிய குறிப்பு : படத்தில் நயன்தாராவுக்கு என்று ஒரு தனி பாடல் இருக்கிறது அந்த மழை பாடலை வெளியில் சூட் செய்ததுக்கு பதில் அதே டிரஸ் போட்டு பாத்ரூம் சவரில் குளிக்கவிட்டு இருந்தால் மலையாள பிட் படம் பார்த்தது போல் இருந்து இருக்கும் அது மட்டும் இன்றி மழைக்காக ஆன செலவும் அதிகம் ஆனதால் இங்கு வாசுக்கு ஒரு குட்டு.
    இந்த பாடலின் பொழுது நான் கண்ணை மூடிக்கிட்டேன், மனைவி அருகில் இருந்ததால். //

    ஆங்ங்ங்ங்ங்.....

    ReplyDelete
  4. // அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்ல மட்டும் நிழல்கள் ரவியை நடிக்க கூப்பிட்டது. //

    நயன்தாரா காலில் விழ மட்டும் விஜய குமார்...ஒரு சீனில் மட்டும் சீன் சொன்ன மம்தா....

    ReplyDelete
  5. ஒரு பத்திரிகை ஆபிசில்
    சினிமா நிருபர் ஆசிரியரிடம்

    நிருபர் : சார் இந்த வாரம் குசேலன் விமர்சனம் எழுதவேண்டும்?
    ஆசிரியர் : ஓக்கே ஏதாவது தியேட்டரில் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுது.
    நிருபர் (தலையைச் சொறிந்தபடி) : படம் பயங்கர மொக்கையாம்? பார்த்தவங்கள் கீழ்ப்பாக்கத்தில் அலைகிறார்களாம்.
    ஆசிரியர் : (மனதிற்க்குள்) பி,வாசு படம்லே அப்படித்தான் இருக்கும், (நிருப‌ருக்கு) க‌தை ப‌றையும் விம‌ர்ச‌னம் இருக்கெல்லோ அதில் ம‌ம்முட்டி இட‌த்தில் ர‌ஜ‌னியைப்போட்டு விட்டு விம‌ர்ச‌ன‌த்தை எழுது. ர‌ஜ‌னிக்கு எதிராக‌ விம‌ர்ச‌ன‌ம் எழுதினால் பத்திரிகை விற்க‌முடியாது.
    த‌ப்பினேன் பிழைத்தேன் என‌ நிருப‌ர் ஓட்ட‌ம் எடுக்கின்றார்

    ReplyDelete
  6. //ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினிரஜினியின் நண்பர் -வாசு//

    :))))))))))))

    ReplyDelete
  7. சூப்பரு....
    இந்தப் படத்தையும் ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தரும் கோடானுகோடித் தமிழ்மக்கள், மாபெரும் வெற்றியடையச் செய்வார்கள் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....

    ReplyDelete
  8. ''பட'' விமர்சனம் சூப்பர்!!

    ReplyDelete
  9. :-))))))))))

    ஃபேமிலியோடு இதுபோல படத்துக்கு செல்பவர்களுக்கு டைவர்ஸ் ஆபத்து அதிகம் என்று உருது பேப்பரில் போட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. நானும் நீங்களும் ஒன்னாதான் யோசிச்சிருக்கோம்.. இத விட படத்தில வேற என்னா இருக்கு???

    அதே தான் நானும் சொன்னேன்...

    ReplyDelete
  11. இத விட்டுட்டீங்களே!!!!
    படத்தில் டைரடக்கரு டச் மிளிரும் இடங்கள் :

    பாக்கெட்டில் போட்ட கோழி முட்டை திருப்பி எடுக்கும் போது கோழி குஞ்சாயிருப்பது....(இந்தக்காட்சியில் டைரக்டர் முன், பின், நடு நவீனத்துவ பாணிகளின் கலவையில், கதைநாயகனின் குடும்ப நுண்ணரசியலை கருப்பொருளாக்கி, கோழி முட்டைக்குறியீடு மூலம், பார்வையாளனை வறுமைச்சூழலியல் சார்ந்த விளிம்பு நிலை வாழ்வியலின் மீட்சிமை பொருந்திய பூதாகார ரௌத்ரம் நிரம்பிய எண்ணிலடங்கா நுண்ம படிமங்களின் பல்வேறு பரிமாணங்களை படம் பிடித்து விளக்க முற்பட்டுள்ளார் - ஆனா, எனக்குதான் ஒரு மண்ணும் புரியல)

    ஏரிகுகரையில் துள்ளி விளையாடி குட்டிக்கரணம் போடும் டால்ஃபின்கள்

    ReplyDelete
  12. நான் படத்தைப் பத்தி மோசமா எழுத மனசில்லாம அளவாத்தான் எழுதீருக்கேன்!

    ReplyDelete
  13. // ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினிரஜினியின் நண்பர் -வாசு //

    சூப்பர் பன்ச்சு!!!!

    ReplyDelete
  14. //ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினி
    ரஜினியின் நண்பர் -வாசு

    நல்ல பஞ்ச்....

    ReplyDelete
  15. குசேலன் தரும் மெசேஜ் (குறிப்பா, ரஜினி ரசிகர்களுக்கு!!): பள்ளியின் மேலாண்குழு உறுப்பினரின் (R.சுந்தர்ராஜன்) 'அரசியலுக்கு வருவீங்களா?? மாட்டீங்களா??' கேள்விக்கு, அசோக் குமாரின் (ரஜினி) பதிலானது, குசேலனுக்காக திரு. P.வாசு எழுதிய, கதாபாத்திரத்திற்குண்டான வசனமே தவிர, சூப்ப்ப்பரு ஸ்ஸ்ஸ்டார்ர்ர்ரு ரஜினியின் சொந்த கருத்து அல்ல எனவும், ஆகக்கூடி இந்த வசன பதிலுக்காக யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாமெனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  16. //ரஜினிக்கு போட்ட மேக்கப்பை கொஞ்சம் கூடவோ அல்லது குறைச்சோ போட்டு இந்த பசுபதி போல நடிக்கவெச்சு இருந்தால் பசுபதிக்கான சம்பள
    செலவை குறைச்சு இருக்கலாம். தேவை இல்லாமல் பசுபதி இந்த படத்தில் ஒரு இடைசொருகல்.//

    உச்ச கட்ட நக்கலுங்கோவ்.

    ReplyDelete
  17. வாசு குப்பை

    ReplyDelete
  18. இனி வினியோகஸ்தர்கள் குசேலனா?

    ReplyDelete
  19. வெண்பூ said...
    தங்கத் தலைவி ராதிகா ரசிகர் மன்றம் சார்பில் நூறு நன்றிகள் :)))//

    அவ்வ்வ்

    ************************
    அகமது சுபைர் said...
    குப்பையில இருந்துகூட மின்சாரம் தயாரிக்கலாமாம்..வேறொரு பேர் தேடுறேன்..///

    அப்ப மக்காதகுப்பை என்று வெச்சுடலாம்!

    *****************************
    விஜய் ஆனந்த் said...
    ஆங்ங்ங்ங்ங்.....//

    இந்த ஆங்ங் சொல்லி பாதி விஜயகாந் ஆகி விட்டீர்கள்..:))

    ****************************
    வந்தியத்தேவன் said...

    ஒரு பத்திரிகை ஆபிசில்
    சினிமா நிருபர் ஆசிரியரிடம்

    நிருபர் : சார் இந்த வாரம் குசேலன் விமர்சனம் எழுதவேண்டும்?//

    இதன் பிறகு அவர் இந்த பொழப்புக்கு நான் குருவி படம் பார்த்து தற்கொலை செஞ்சுப்பேன் என்று சொல்லி இருக்கலாம்:)))

    ******************************
    நன்றி பாரதி
    ******************************
    ஜெகதீசன் said...
    மாபெரும் வெற்றியடையச் செய்வார்கள் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்:(((((((((

    *********************************
    நிஜமா நல்லவன் said...

    ''பட'' விமர்சனம் சூப்பர்!!//

    நான் எங்கங்க விமர்சனம் செஞ்சேன் பட்ஜெட் பற்றிதானே சொல்லி இருக்கேன்

    *******************************
    லக்கிலுக் said...

    :-))))))))))

    ஃபேமிலியோடு இதுபோல படத்துக்கு செல்பவர்களுக்கு டைவர்ஸ் ஆபத்து அதிகம் என்று உருது பேப்பரில் போட்டிருக்கிறார்கள்.//

    :((( தல உங்க நாக்கில் வசம்பை வெச்சுதான் தேய்க்கனும்:)) நான் ஃபேமிலியோடு போனேன் என்பதற்காக இப்படியா ஒரு குண்டு போடுவது:)))

    *****************************
    அகமது சுபைர் said...

    நானும் நீங்களும் ஒன்னாதான் யோசிச்சிருக்கோம்..///

    அதானே வேற என்ன இருக்கு?

    ********************************
    பரிசல்காரன் said...

    SAME BLOOD!//

    அப்பாடா சோடிக்கு ஒரு ஆள் கிடைச்சுட்டு:))

    யான் பெற்ற அடி பெருக இவ்வையக மக்களும்!!!!

    ***************************
    ஐய்யா விஜய் ஆனந்த் நீங்கள் போட்டு இருக்கு பின்ந்வீனத்துவ பின்னூட்டம் பெடரி மண்டையில் அடிக்கிறது.

    ****************************
    விஜய் , சரவணகுமரன் said...



    சூப்பர் பன்ச்சு!!!!//

    இது என்னா பன்ச்சு நேற்று உட்காரவெச்சு வாசு கொடுத்தாரு பாருங்க பன்ச்சு:)))

    ****************************
    வடகரை வேலன் said...
    செலவை குறைச்சு இருக்கலாம். தேவை இல்லாமல் பசுபதி இந்த படத்தில் ஒரு இடைசொருகல்.//

    உச்ச கட்ட நக்கலுங்கோவ்.///

    அட ஆமாங்க நயன் தாரா தொடை, ரஜினி நடைதான் படத்தில் 99% வருகிறது. அப்ப மீதி இடைச்சொருகல்தானே!!!

    ********************************
    நன்றி அனானி
    ******************************
    முரளிகண்ணன் said...

    இனி வினியோகஸ்தர்கள் குசேலனா?
    //

    படம் பார்த்தவர்கள் ---சேது
    வெளியிட்டவர்கள் ---குசேலன்

    ReplyDelete
  20. யப்பா...

    ரஜினிய வச்சு எப்படி எப்படி பதிவு.


    இப்பல்லாம், ரஜினி உங்க எல்லருக்கும், கேலியா பொருளா???

    உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  21. Kuselan is kuppiyel muthu?
    means in kuppai tamil film kuselan is muthu.

    ReplyDelete
  22. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.கொஞ்ச நஞ்சம் இருந்த ஆசையிலும் எல்லோரும் சேர்ந்து பதிவு அள்ளிப் போடறீங்களே:)

    ReplyDelete
  23. kalakitinga saga.....

    ReplyDelete
  24. ingeyum Same blood

    Kathir.

    ReplyDelete
  25. ரஜனி சிவாஜி படத்தோட நிப்பாட்டி இருக்கலாம்...;)

    ReplyDelete
  26. விமர்சனம் கலக்கலாருக்கு அண்ணே!

    ReplyDelete
  27. நயன்தாராவை பிட்டு பட ஹீரோயின் ரேஞ்சுக்கு விமர்சித்த குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன்...;)

    ReplyDelete
  28. "We know Rajini belongs to Karnataka and we are sure that he had been pressurised to make anti-Kannada statements. But now with this apology he has proved to be a golden hearted personality who is prepared to accept his mistake. Being an icon in the film industry, he has proved that he is also a great human being who can assuage the hurt feelings of people by a simple apology. He has really risen in our esteem," Gowda, president of Karnataka Rakshana Vedike said.

    ReplyDelete
  29. இது தேவையாண்ணே உனக்கு ;)))

    ReplyDelete
  30. சுப்பர் விமர்சனம்!!
    - பாலகுமார்

    ReplyDelete
  31. முக்கிய குறிப்பு ஜூப்பர்

    ReplyDelete
  32. முக்கிய குறிப்பு படம் பார்க்கும் ஆவலை தூண்டினாலும் மற்றவை பயமுறுத்துவதால் படம் பார்க்கும் ப்ளான் கேன்சல்

    :))))

    ReplyDelete
  33. //ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினிரஜினியின் நண்பர் -வாசு//

    நச்
    :))))))))))))

    ReplyDelete
  34. //ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினி. ரஜினியின் நண்பர் -வாசு//

    சூப்பரோ சூப்பர், இத மாதிரி நச் கமெண்ட்கள் வரவழைக்க வாசு சார் எம்புட்டு உழைக்க வேண்டி இருக்கு?????

    ReplyDelete
  35. சாம் ஆண்டர்சன் அவர டைரடக்கரா போட்டு படமெடுக்கணும்னு அவரைப் போய் பார்த்தப்ப, தன்னை சூப்பர் ஸ்டாருக்கு நிகரா ஆக்கனும்னு கேட்டுக்கிட்டாராம். அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு வாசு சார், வித்தியாசமாவும், சுலபமாவும் ஒரு வழிய சிந்திச்சி, இப்போ சூப்பர் ஸ்டார் படத்தை சாம் ஆண்டர்சன் பட ரேஞ்சுக்கு ஆக்கிட்டார் போல :):):)

    ReplyDelete
  36. //குசேலன் தரும் மெசேஜ் (குறிப்பா, ரஜினி ரசிகர்களுக்கு!!): பள்ளியின் மேலாண்குழு உறுப்பினரின் (R.சுந்தர்ராஜன்) 'அரசியலுக்கு வருவீங்களா?? மாட்டீங்களா??' கேள்விக்கு, அசோக் குமாரின் (ரஜினி) பதிலானது, குசேலனுக்காக திரு. P.வாசு எழுதிய, கதாபாத்திரத்திற்குண்டான வசனமே தவிர, சூப்ப்ப்பரு ஸ்ஸ்ஸ்டார்ர்ர்ரு ரஜினியின் சொந்த கருத்து அல்ல எனவும், ஆகக்கூடி இந்த வசன பதிலுக்காக யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாமெனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
    //


    :):):)

    ReplyDelete
  37. நல்ல வேளை மீ த எஸ்கேப்பு.. நீ ரொம்ப நல்லவண்டா மாப்பி.. இதே மாதிரி எல்லா படங்களையும் பாத்துட்டு எழுதி எங்களை எல்லாம் காப்பாத்துபா ராசா..

    ReplyDelete
  38. நயன்தாரா பாடல் மட்டும் திரையில் போட்டார்கள் என்றால் போய்ப்பார்க்கலாம்.

    அகில உலக நயந்தாரா ரசிகர் மன்றம்

    ReplyDelete
  39. //ஆண்டவா நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்--- ரஜினி. ரஜினியின் நண்பர் -வாசு//

    :) சூப்பரு பஞ்ச்!

    ReplyDelete
  40. குசும்பரே! உங்க பதிவுக்கான பின்னூட்டமே அரைசதம் அடிக்கும்போல் தெரிகிறது. ரஜனி ரசிகர்கள் படத்தை 50 நாளாவது ஓட்டி விடமாட்டார்களா?

    ReplyDelete
  41. நல்ல வேளை கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு போய்ட்டதால இந்த படம் பாக்காம தப்பிச்சிட்டேன். ஊர் மாரி தான் என்னை காப்பாத்தி இருக்கா.

    ..காமநெடிகள் படிச்ச பிறகு..

    அச்சச்சோ.. அநியாயமா ஊருக்கு போய் இந்த படத்த பாக்க முடியாம போச்சே.. சாமி கும்பிடாத எனக்கு கோவில்ல என்ன வேலை?. நெட்லயாவது இந்த படத்தை பார்த்தாகனும்.

    ReplyDelete