Sunday, October 14, 2007

கற்றது தமிழ்

சபாஷ்: முதலில் ஒரு சபாஷ் இயக்குனர் ராம்க்கு முதல் படம் என்பதால் நாலு சண்டை, ரெண்டு குத்து பாட்டு என்று எல்லாம் சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்க வந்திருக்கிறார். அடுத்த சபாஷ் ஜீவாவுக்கு பஞ்ச் டயலாக் இல்லை, புகழ் பாடும் பாட்டு இல்லை என்று தெரிந்தும் நடிக்க ஒத்துக்கொண்டதுக்கு.

கதை கரு:
தமிழ் படிச்சா தமிழ்நாட்டில் நல்ல வசதியோடு வாழமுடியவில்லை என்பதற்காக சாக துணியும் ஒரு இளைஞன் அவன் காதல்.

கதை சுருக்கம்:
சின்ன வயதில் இருந்து உறவுகள் ஒவொன்றாக பலி கொடுக்கும் சிறுவன் பிரபாகராக ஜீவா, அவனுக்கு பிரியமான தோழி ஆனந்தியாக அஞ்சலி.தமிழ் ஆசிரியரால் வளர்க்கபடும் பிரபாகர் அவரும் இறந்து விட அவரை போல் தமிழ் ஆசிரியர் ஆக விருப்பபட்டு தமிழை படித்து முடித்து 2000 ரூபாய்க்கு வேலைக்கு சேருகிறான், ஒரு முறை சிகரெட் பிடிக்க போய் அதனால் போலீஸ் ஸ்டேசன் போகிறான், அங்கு அவன் படும் அவமானங்கள் அதனால் தற்கொலைக்கு முயற்சிக்கிறான் திரும்ப போலீஸ் பிடித்து கஞ்சா கேஸ் போட முயற்சிக்க அதில் இருந்து தப்பிக்கும் பொழுது டிரைன் டிக்கெட் எடுக்க 5 ரூபாய் இல்லாததால் சட்டென்று ஒரு கொலை , பின் மன நிலை சரி இல்லாதவன் ஆகிறான் தொடந்து பல கொலைகள் செய்ததாகவும் எதனால் செய்தேன் என்பதை கருணாஸை விட்டு ரெக்காட் செய்ய சொல்லி விட்டு எல்லாத்தையும் சொல்கிறான், சின்ன வயது காதல் முதல் கடைசி கொலை வரை. கடைசியில் அதை சன் டீவி ஒளிபரப்ப அதனால் மக்களிடம் ஏற்படும் மாற்றம் நல்லவேளை மக்கள் எல்லாம் போராடுவது போல் காட்டாமல் அதற்கு தீர்வாக எதையும் சொல்லாமல் நம்மிடமே முடிவை விட்டு விட்டது டச்சிங்.

அசத்தல் :
டங் டங் என்று தலையில் மணி அடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும் அப்படி கேட்க ஆரம்பித்தால் கொலை செய்ய வேண்டும் எனக்குஅதுதான் எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தரும் உடல் உறவை போல. என்று சொல்லும் ஜீவாவின் நடிப்பு அசத்தல்.

உனக்கு பூனை பிரண்ட் என்றால் எனக்கு புலி பிரண்ட் என்று சொல்லும் பொழுது "நிஜமாதான் சொல்றீயா" என்ற இடமாகட்டும்கடைசியில் நான் உன்னை கூட்டிக்கிட்டு போய்விடுகிறேன் என்று ஜீவா சொல்லும் பொழுதும் "நிஜமாதான் சொல்றீயா" என்று கேட்கும்பொழுதும் அஞ்சலி நடிப்பு அசத்தல். நடிக்க தெரிந்த ஒரு ஹீரோயின் கிடைச்சாச்சு.


நீ காதலிச்சு இருக்கியா என்று ஜீவா கேட்கும் பொழுது காதலிச்சா பொண்ணு கிடைக்கும் சார் பொருள் கிடைக்காது சார் என்று கருணாஸ் சொல்லும் பொழுது ஏன் என்று தெரியவில்லை தியேட்டரில் விசில் பறந்தது.

ஓளிபதிவு யார் என்று தெரியவில்லை மிக அருமையாக இருக்கிறது.

சொதப்பல்:

டயலாக்

B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாற்றிப்பீயா என்று கேட்பது.

இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூமீலேயே....
அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்
என்பது போல் கொலைக்கு காரணம் சொல்வது சரி சொதப்பல்.

நடிகர்கள்:

பிரபாகராக : ஜீவா

ஆனந்தியாக: அஞ்சலி

தமிழ் ஆசிரியராக: அழகன் பெருமாள் & கருணாஸ்


டிஸ்கி: படம் முழுவதும் பல நிறைகள் இருந்தும் சட்டென்று சூப்பர் படம் என்று சொல்ல முடியவில்லை அது ஏன் என்று தெரியவில்லை, நல்ல கதை கரு என்றுதான் சொல்ல முடிகிறது.

31 comments:

  1. நல்ல விமர்சனம்!! :-)

    ReplyDelete
  2. சினிமாக்கு போனா கூப்பிடமாட்டியா ராசா?

    ReplyDelete
  3. விமர்சனம் சூப்பர். அதைவிட போட்டோக்கள் சூப்பரோ சூப்பர். :-)

    ReplyDelete
  4. அப்ப திருட்டி சிடி ஓகே..:D

    ReplyDelete
  5. நிறைய ஒட்டைகள் இருந்தாலும் ஜீவாவின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துது...

    ReplyDelete
  6. விமர்சனம் சூப்பர் ;-)

    ReplyDelete
  7. குசும்பா படம் நல்லாயிருக்குன்னு நீ சொல்றது எந்த அர்த்தத்துல

    அதுதான் குழப்பமாயிருக்கு.

    ReplyDelete
  8. @பூக்குட்டி
    //
    அப்ப திருட்டி சிடி ஓகே..:D
    //

    உங்க ஊர்ல இன்னுமா DVD வற்றதில்ல

    :-)))))))

    ReplyDelete
  9. kusumbaridathil innum ethanai thiramaikal ozhinthu irukiratho

    .. it is Tamil Nadu miss pannukiratho

    ReplyDelete
  10. CVR said...
    நல்ல விமர்சனம்!! :-)/////

    நன்றி CVR:)

    ***********
    அய்யனார் said...
    சினிமாக்கு போனா கூப்பிடமாட்டியா ராசா?//////

    நண்பர் குடும்பத்தோடு போனேன் அதனால்தான் கூப்பிட முடியவில்லை, தனியா போனா கூப்பிடாம போவேனா மந்திரியாரே!!!

    **************

    .:: மை ஃபிரண்ட் ::. said...
    விமர்சனம் சூப்பர். அதைவிட போட்டோக்கள் சூப்பரோ சூப்பர். :-)
    //////

    நன்றி மை ஃபிரண்ட்:)

    ReplyDelete
  11. பூக்குட்டி said...
    அப்ப திருட்டி சிடி ஓகே..:D////

    இல்லை பூக்குட்டி, அதில் எனக்கு உடன்பாடு இல்லை, திருட்டு சிடியில் படம் பார்க்க கூடாது என்ற கொள்கையில் இருப்பவன்... அதனால் தியேட்டரில் பாருங்க அல்லது இரண்டு மாதம் கழித்து சிடி ரிலீஸ் செஞ்ச பிறகு பாருங்க!!! திருட்டு சிடி வேண்டாம் பிளீஸ்...

    ReplyDelete
  12. நாகை சிவா said...
    நிறைய ஒட்டைகள் இருந்தாலும் ஜீவாவின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துது...///

    ஆமாம் புலி!! நல்ல நடிப்பு!!

    ReplyDelete
  13. கோபிநாத் said...
    விமர்சனம் சூப்பர் ;-)///

    எல்லாம் பெரியவங்க உங்ககிட்டேருந்துதான்!!!

    ReplyDelete
  14. மங்களூர் சிவா said...
    குசும்பா படம் நல்லாயிருக்குன்னு நீ சொல்றது எந்த அர்த்தத்துல

    அதுதான் குழப்பமாயிருக்கு.///

    நீங்க ஒருத்தர்தான் தெளிவா இருக்கீங்க:)))) கரெக்டா கேட்கிறீங்க!!!

    நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதே அர்த்தத்தில் தான் சிவா!!!

    ReplyDelete
  15. மங்களூர் சிவா said...
    @பூக்குட்டி
    //
    அப்ப திருட்டி சிடி ஓகே..:D
    //

    உங்க ஊர்ல இன்னுமா DVD வற்றதில்ல

    :-)))))))//////////


    உங்களுக்கும் பூக்குட்டிக்கு சொன்ன பதில் தான்!!!!

    ReplyDelete
  16. Anonymous said...
    kusumbar idathil innum ethanai thiramaikal ozhinthu irukiratho

    .. it is Tamil Nadu miss pannukiratho////

    குசும்பர் இடத்தில் ஒரு பூனை கூட ஓளிய முடியாது ஏன்னா இடம் பற்றா குறை...அப்படி இருக்கும் பொழுது திறமை மட்டும் எப்படி ஒளிச்சு இருக்க முடியும்:)))

    மிஸ் தமிழ் நாடு யாரு????

    ReplyDelete
  17. good.

    DVD எப்ப வருமோ :)

    ReplyDelete
  18. SurveySan said...
    good.

    DVD எப்ப வருமோ :)///

    இங்கு எல்லாம் இரண்டு மாதத்தில் வருகிறது.

    ReplyDelete
  19. இன்னும் ஒரு ஆறு மாசத்துக்குள்ள எப்படியாவது பார்த்துடுவேன்.

    ReplyDelete
  20. வெங்கட்ராமன் said...
    இன்னும் ஒரு ஆறு மாசத்துக்குள்ள எப்படியாவது பார்த்துடுவேன்.///

    வாங்க வெங்கட் ஆணி எல்லாம் புடுங்கியாச்சா? ரொம்ப ஆணியோ!!!

    ReplyDelete
  21. "2000 வருசமா இருக்கும் தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபா சம்பளம். இப்ப வந்த பொட்டி தட்டுற உனக்கு 2 லட்சம் சம்பளம்.. எப்டி, எப்டி, எப்டி...?"

    அட லூசுப்பையா... 2000 வருசம் பழைய விசயத்தை இது வரைக்கும் எத்தன பேரு படிச்சிருப்பாங்க? ஒரே வேலைக்கு எவ்வளவு போட்டி இருக்கும்? இப்ப வந்ததை படிச்சா தானே போட்டி கம்மியா இருக்கும்? சம்பளம் அதிகமா இருக்கும்?

    இந்த அடிப்படை கூட தெரியாம ஒரு படம்/வசனம்.

    ReplyDelete
  22. படத்தோட பேரு'லே தமிழ்'ன்னு இருக்கிறதுனாலே இன்னும் பெங்களூரூ'லே இன்னும் ரிலிஸ் ஆகலை... :(

    ReplyDelete
  23. கோபி(Gopi) said...
    ///அட லூசுப்பையா... 2000 வருசம் பழைய விசயத்தை இது வரைக்கும் எத்தன பேரு படிச்சிருப்பாங்க? ஒரே வேலைக்கு எவ்வளவு போட்டி இருக்கும்? இப்ப வந்ததை படிச்சா தானே போட்டி கம்மியா இருக்கும்? சம்பளம் அதிகமா இருக்கும்?///

    வாங்க கோபி இது படத்தில் ஒரு
    அபத்தமான டயலாக் தான் அதை விடுங்க.

    வட பழனியில் வாடகை 1500 ரூபாய் இருந்தது கம்யூட்டர் காரனுங்க வந்தானுங்க இப்ப வாடகை 10000 ஆக்கிட்டானுங்க இப்ப பூந்தமல்லியில் இருந்து வருகிறேன் என்று ஒரு டயலாக் இருக்கே அதுக்கு என்ன பதில்.
    சிட்டி வாழ்கை என்பது கம்யூட்டர் படிச்சவங்களுக்கு மட்டும் தானா?

    உங்க கருத்துபடி தமிழை அதிகம் பேர் படிக்கிறாங்களா? இல்ல பொட்டி தட்ட நிறைய பேர் படிக்கிறாங்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க!!!

    ReplyDelete
  24. இராம்/Raam said...
    படத்தோட பேரு'லே தமிழ்'ன்னு இருக்கிறதுனாலே இன்னும் பெங்களூரூ'லே இன்னும் ரிலிஸ் ஆகலை... :(///

    என்ன கொடுமைங்க இது தமிழ் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகுது ஆனா இந்தியாவில் அடுத்த ஸ்டேட்டில் ரிலீஸ் ஆக முடியவில்லை!!! கேட்டா ஜனநாயக நாடு என்று சொல்வானுங்க... நீதி அரசர்கள்.

    ReplyDelete
  25. //வட பழனியில் வாடகை 1500 ரூபாய் இருந்தது கம்யூட்டர் காரனுங்க வந்தானுங்க இப்ப வாடகை 10000 ஆக்கிட்டானுங்க இப்ப பூந்தமல்லியில் இருந்து வருகிறேன் என்று ஒரு டயலாக் இருக்கே அதுக்கு என்ன பதில்.
    சிட்டி வாழ்கை என்பது கம்யூட்டர் படிச்சவங்களுக்கு மட்டும் தானா?//

    வாடகை உயர்ந்தது உண்மைதான். ஆனா கம்பியூட்டர் படிச்சவங்க மட்டும்தான் அதுக்கு காரணம்னு ஒத்துக்க முடியாது. ஒன்னுமேயில்லாத ஒசூரிலெல்லாம் சிப்காட் வந்தப்புறம் 10 மடங்கு வீட்டு வாடகை உயர்ந்தது. அதுக்கு யார் காரணம்?

    "ஒரு பொருள் வாங்கும் போது அதுக்கு குடுக்குற விலைக்குறிய தரம்/மதிப்பு இருக்குதான்னு பாக்கறவங்களை விட 'அவங்களால' அவ்வளவு பணம் குடுத்து வாங்க முடியுமான்னு மட்டும் பாக்கறவங்க அதிகமாயிட்டாங்க"ன்னு வேணா சொல்லலாம். இந்த மனநிலையை வடக்கத்தியர்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன்.

    //உங்க கருத்துபடி தமிழை அதிகம் பேர் படிக்கிறாங்களா? இல்ல பொட்டி தட்ட நிறைய பேர் படிக்கிறாங்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க!!!//

    இதுக்கு ஏங்க மனசாட்சியை எல்லாம் தொடனும். :-)

    என் கருத்துப்படி தமிழ் படிப்பு ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரை தமிழ் படிச்சவங்களை விட கணினிப் படிப்பு படிச்சவங்களோட (இரு படிப்பிலும் உயிரோட இருக்கறவங்களை மட்டும் கணக்கில் கொண்டால் கூட) எண்ணிக்கை குறைவு.

    இதுக்கு புள்ளிவிவரம் கேட்டீங்க எனக்குத் தெரியாது. பெங்களூருல இருந்து ஹைதராபாத்தை விட சென்னை பக்கம் அப்படிங்கற மாதிரி தான் இதையும் சொல்றேன்.

    ReplyDelete
  26. இல்லை பூக்குட்டி, அதில் எனக்கு உடன்பாடு இல்லை, திருட்டு சிடியில் படம் பார்க்க கூடாது என்ற கொள்கையில் இருப்பவன்...
    ///


    ஹா ஹா ஹா


    திருட்டு விண்டோசில் சேட்டீங் பேச்சி மட்டும் பெருசா வந்துட்டாரு..

    ReplyDelete
  27. இதுக்கு புள்ளிவிவரம் கேட்டீங்க எனக்குத் தெரியாது. பெங்களூருல இருந்து ஹைதராபாத்தை விட சென்னை பக்கம் அப்படிங்கற மாதிரி தான் இதையும் சொல்றேன்.////

    :)))) சரி லூசுல!! ஆனா நாமும் ஒரு காரணம்.

    ReplyDelete
  28. சும்மா அதிருதுல said...
    ஹா ஹா ஹா

    திருட்டு விண்டோசில் சேட்டீங் பேச்சி மட்டும் பெருசா வந்துட்டாரு..////

    என் ஜெனரல் மேனஜர் கிட்ட போய் எப்படிய்யா கேட்க முடியும்....:(

    நேற்று இதே கேள்வியை ஒருவர் கேட்டார், என்னிடம் பதில் இல்லை.
    தவறுதான்:(

    ReplyDelete
  29. I am a first timer here... from G3's blog :)

    Enakkoru unmai therinjaaganum :)

    sari sari sari.... potti thattaravan inniku niraya sambathikkaran tamil kathukaravanai vida... but atleast potti thattara pasanga etho kadano udano vaangi padichu than antha kaasu sambathikaranga... naatula ethanaiyo peru nogama Cine field la kodi kodi ya sambathikarangalae... avanga laam namma kadhanayakanukku theriyaathu :) enunga saare? :)

    intha padathu director ennamao solla vanthirukkaru..aanaa slip aagitaru.. there are better ways to communicate watever his intention were...is my humble opinion... oru 10 varushathukku munadi irunthathai vida inniku percentage of earning population koodirukku na athukku IT oru kaaranam... athai vachu kindal adikkarathukku bathila...innum konja varusham kalichu vera ethuna onnu varum to further reduce the rich poor divide...athai varaverkanume thavira, athu vara verukka koodathu :)

    Vanakkam thozha... welcome to my blog :D

    ReplyDelete
  30. rsubras said...
    I am a first timer here... from G3's blog :)

    Enakkoru unmai therinjaaganum :)

    //

    படம் பார்த்துவிட்டு செம டென்சனில் இருக்கீங்க போல, லூசுல விடுங்க:)

    அப்புறம் உங்கள் முதல் வருகைக்கு நன்றி:)

    ReplyDelete
  31. வணக்கம் சார், திரைப்ப்பட விமர்சனம் அருமையாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் பெயரைக்கூட சரியாக பார்க்காமல், விமர்சனம் எழுதும் உங்கள் திரைப்பார்வைகள் அருமை. வரவேற்கிறேன்.

    ReplyDelete