Monday, October 15, 2007

யாரும் உங்களை போடா(டி) .......................அப்படி திட்டினா???

யாரும் உங்களை பார்த்து போடா(டி) .......................................அப்படி திட்டினா நீங்க என்ன செய்யனும் என்று சொல்லவே இந்த பதிவு.

அப்படி என்னா அந்த ........................................வரும் என்றுதானே நினைக்கிறீங்க. இருங்க இருங்க சொல்றேன். அந்த டேசில் "டியுப் லைட்" என்று வரும்.

அப்படி திட்டினா என்ன தெரியுமா சொல்லனும்.

சிரிச்சிக்கிட்டே நான் பூமியோட சூட்டை குறைக்கிறேனாக்கும் என்று சொல்லுங்க.

என்ன டா லூசு மாதிரி ஏதோ சொல்றானேன்னூ பார்க்குறீங்களா இல்லீங்க இந்த தகவலை நம்ம ஆயில்யன் தான் அவரோட பதிவில் சொல்லி இருக்கிறார்.

"முதல்ல குண்டு பல்புகள ஆப்(பு) பண்ணுங்க அப்பத்தான் 4% விகிதம் வரைக்கும் வர்ற கார்பன் டை ஆக்சைடு கட்டுபடுத்தலாம்"

இதனால் பூமி சூடாவதை தடுக்கலாம் என்று சொல்லி இருக்காருங்க.


டிஸ்கி1: என்னை யாரும் அப்படி திட்டுவது இல்லை இதைவிட மோசமாகதான் திட்டுவார்கள் என்றும் அப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றும் நீங்க தெரிஞ்சுக்க ஆசைபட்டா நம்ம அபி அப்பாவை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

டிஸ்கி2: காலையில் இருந்து பார்த்துக்கிட்டு இருப்பேன் யாரும் பதிவு போடாம நேற்று போட்ட பதிவு மேலேயே இருக்கும், சரி இதுதான் தக்க சமயம் என்று நானும் பதிவு போட்டா ...டபுக்கு டபுக்குன்னு எங்கிருந்துதான் பதிவு போடுவாங்களோ தெரியாது எல்லோரும் பதிவு போட்டு என் பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கிடுவாங்க இப்படிதான் நேற்று நான் ஒரு பதிவு போட்டா பதிவே போடாத சந்தோஷ் பழய பதிவு எல்லாம் மீண்டு வந்து என் பதிவை முதல் பக்கதில் இருந்து தூக்கிடுச்சு... எங்க போய் சொல்வது இந்த கொடுமையை!!!

28 comments:

  1. பதிவு நல்லாருக்கு...

    அதவிட டிஸ்கி நல்லாருக்கு..

    ReplyDelete
  2. kusumba..
    unmai than.. parunga.. ovvaru pathiva varuthu....

    ReplyDelete
  3. முத்துலெட்சுமி said...
    பதிவு நல்லாருக்கு...

    அதவிட டிஸ்கி நல்லாருக்கு..///

    நன்றி:)

    ReplyDelete
  4. Anonymous said...
    kusumba..
    unmai than.. parunga.. ovvaru pathiva varuthu....///

    ஆமாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் பதிவு போட்டு என்னை தூக்கிடுவாங்க:(

    ReplyDelete
  5. குசும்பர் மாமா,

    //என்ன டா லூசு மாதிரி ஏதோ சொல்றானேன்னூ பார்க்குறீங்களா//

    இதெல்லாம் சொல்லனுமா, எங்களுக்கு ஏற்கனவே தெரியுமில்ல.
    ஹி ஹி ஹி ஹி வேற ஒண்டுமில்லை சிரிக்கிறனுங்க மாமா.

    ReplyDelete
  6. //நம்ம அபி அப்பாவை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.//

    திட்டு வாங்கிட்டு எப்படி அத பதிவா போடறதுன்னா? இல்ல திட்டு வாங்கும்போது எப்படி ரியாக்ஷன் கொடுக்கறதுங்கறத பத்தியா?
    இல்ல எப்படி பதிலுக்கு திட்ட ஆயத்தமாகணுமுங்கற பத்தியா கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்?

    ReplyDelete
  7. மருதமூரான். said...
    ///இதெல்லாம் சொல்லனுமா, எங்களுக்கு ஏற்கனவே தெரியுமில்ல.
    ஹி ஹி ஹி ஹி வேற ஒண்டுமில்லை சிரிக்கிறனுங்க மாமா.////

    திருப்தியா? நல்லா சிரிச்சிட்டீங்களா!!! போங்க போய் நல்லா தூங்குங்க.
    என்னை கலாய்கிறதுன்னா எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது போல இருக்கும் போல,ஒரு அப்பாவி கிடைச்சா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுடுவீங்களே.

    ReplyDelete
  8. delphine said...
    :)
    nice one.
    //

    நன்றிம்மா!!!

    ReplyDelete
  9. ஆயில்யன் said...
    ///திட்டு வாங்கிட்டு எப்படி அத பதிவா போடறதுன்னா? இல்ல திட்டு வாங்கும்போது எப்படி ரியாக்ஷன் கொடுக்கறதுங்கறத பத்தியா?
    இல்ல எப்படி பதிலுக்கு திட்ட ஆயத்தமாகணுமுங்கற பத்தியா கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்?///

    எங்களுக்கு வாங்கிதான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்ல சோ உங்க மூனாவது கேள்வி அவுட்.

    வாங்கிய திட்டு எல்லாத்தையும் பதிவா போடனும் என்றால் அவர் ஒரு 10 நிமிசத்துக்கு ஒரு முறை பதிவு போட வேண்டி இருக்கும்

    இந்த இரண்டாவதாக சொல்லி இருப்பதுக்குதான் அவர் குரு,... திட்டு வாங்கும் பொழுது எப்படி ரியாக்ஷன் கொடுக்கனும் என்று...

    நீங்க அப்படி என்னா அவரு செஞ்சுடுவார் என்று டவுட் இருந்தா மெயில் செய்யுங்க போன் நம்பர் தருகிறேன் திட்டி பாருங்க உங்களுக்கே புரியும்...(மிகவும் ஜாலியாக இருக்கும் ஒரு தபா டிரை செஞ்சு பாருங்களேன்).

    ReplyDelete
  10. அப்பாடா இன்னோரு பதிவப் போட்டு "யாரும் உங்களை போடா(டி) .......................அப்படி திட்டினா???" ஒரு படி கீழ இறக்கியாச்சு.
    ஏதோ நம்மால முடிஞ்சது அவ்வளவு தான்

    ReplyDelete
  11. //
    //என்ன டா லூசு மாதிரி ஏதோ சொல்றானேன்னூ பார்க்குறீங்களா//

    இதெல்லாம் சொல்லனுமா, எங்களுக்கு ஏற்கனவே தெரியுமில்ல.
    ஹி ஹி ஹி ஹி வேற ஒண்டுமில்லை சிரிக்கிறனுங்க மாமா.
    //
    ரிப்பீட்டேய்

    //
    வாங்கிய திட்டு எல்லாத்தையும் பதிவா போடனும் என்றால் அவர் ஒரு 10 நிமிசத்துக்கு ஒரு முறை பதிவு போட வேண்டி இருக்கும்
    //
    அவ்ளோ நல்லவரா அவர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. வித்யா கலைவாணி said...
    அப்பாடா இன்னோரு பதிவப் போட்டு "யாரும் உங்களை போடா(டி) .......................அப்படி திட்டினா???" ஒரு படி கீழ இறக்கியாச்சு.
    ஏதோ நம்மால முடிஞ்சது அவ்வளவு தான்/////


    நல்லா இருங்க!!! இப்ப பாருங்க என்னுடைய பதிவை காக்கா தூக்கி கிட்டு போச்சு:((((

    ReplyDelete
  13. .:: மை ஃபிரண்ட் ::. said...
    :-))))))

    நன்றி:)))

    ////////வாங்கிய திட்டு எல்லாத்தையும் பதிவா போடனும் என்றால் அவர் ஒரு 10 நிமிசத்துக்கு ஒரு முறை பதிவு போட வேண்டி இருக்கும்
    //
    அவ்ளோ நல்லவரா அவர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

    டவுட் வேறயா? நீங்க வேண்டும் என்றாலும் போன் போட்டு திட்டலாம்!!! எந்த அளவு கோலும் கிடையாது..

    ReplyDelete
  14. ஓ குசூம்பன் மாமாவ பொலம்ப விடனும்ன்னா அவர் பதிவு போட்ட உடனே நாம ஒரு பதிவு போடனுமா? அடுத்த தடவை செய்துட்டாப்போச்சு.வெருமனே குசும்பன் test அப்படீன்னு ஒரு போஸ்ட் வரும் அப்போ பாருங்க.

    ReplyDelete
  15. //எங்கிருந்துதான் பதிவு போடுவாங்களோ தெரியாது எல்லோரும் பதிவு போட்டு என் பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கிடுவாங்க //

    அட எல்லாருக்கும் நம்மள மாதிரிதான் எண்ணமா..?

    ReplyDelete
  16. பளீர்னு மின்னுறீங்க....

    ReplyDelete
  17. \\முத்துலெட்சுமி said...
    பதிவு நல்லாருக்கு...

    அதவிட டிஸ்கி நல்லாருக்கு..\\

    நல்லா இருங்கப்பா!!:-))

    ReplyDelete
  18. \\மருதமூரான். said...
    குசும்பர் மாமா,

    //என்ன டா லூசு மாதிரி ஏதோ சொல்றானேன்னூ பார்க்குறீங்களா//

    இதெல்லாம் சொல்லனுமா, எங்களுக்கு ஏற்கனவே தெரியுமில்ல.
    ஹி ஹி ஹி ஹி வேற ஒண்டுமில்லை சிரிக்கிறனுங்க மாமா.\\

    மருதமூரான்! உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! என் ஸ்டார் வார நன்றி பதிவிலே உங்க பேர் விட்டு போச்சு, தங்கமணி சொல்லித்தான் தெரிஞ்சுது, நன்றி நன்றி நன்றி!!

    ReplyDelete
  19. மங்களூர் சிவா! நான் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை போடனுமா பதிவு நல்லா இருங்கப்பா!:-))

    ReplyDelete
  20. புலிசாரே! என்னவோ உள்குத்து மாதிரி இருக்கே!!!!

    ReplyDelete
  21. குசும்பன் பதிவைக் கண்டால் உடனே உடனே உடனே உடனே இன்னொரு பதிவை இடவேண்டும் . இதுதான் பின்னூட்டங்களின் ஏகோபித்த முடிவு. அம்முடிவுக்கு கட்டுப்படுகிறேன்.

    ReplyDelete
  22. நிலவு நண்பன் said...
    //அட எல்லாருக்கும் நம்மள மாதிரிதான் எண்ணமா..?///

    சேம் பிளட்:)))))அப்ப மகிழ்ச்சி!!!


    ///நாகை சிவா said...
    பளீர்னு மின்னுறீங்க....///

    உஜாலாவில் குளிச்சேன்!!!

    (அங்க யாருப்பா அப்பா ஒரு வழியா குளிச்சிட்டான் என்று சொல்வது)

    அபி அப்பா said...
    //மருதமூரான்! உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! என் ஸ்டார் வார நன்றி பதிவிலே உங்க பேர் விட்டு போச்சு, தங்கமணி சொல்லித்தான் தெரிஞ்சுது, நன்றி நன்றி ///

    மரூதமூரான் என்ன காப்பாத்துன்னு கத்தினா கூட அவருக்கு கேட்காது சொல்லிபுட்டேன் ஆமா!!!


    cheena (சீனா) said...
    குசும்பன் பதிவைக் கண்டால் உடனே உடனே உடனே உடனே இன்னொரு பதிவை இடவேண்டும் . இதுதான் பின்னூட்டங்களின் ஏகோபித்த முடிவு. அம்முடிவுக்கு கட்டுப்படுகிறேன்.////

    அவ்வ்வ்வ் நீங்களுமா? நல்லா இருங்கப்பா நல்லா இருங்க:(((

    ReplyDelete
  23. ஓஹ், டிஸ்கி வெச்சே ஒரு பதிவா? ஆமா அதுக்கு மேல என்னமோ எழுதி இருக்கீங்களே? அதெல்லாம் தேவையா?

    ReplyDelete
  24. குசும்பையே காணுமே அப்பு?
    நல்ல விசயந்தாஞ் சொல்லி யிருக்கீங்க.. :)

    ReplyDelete
  25. ILA(a)இளா said...
    ஓஹ், டிஸ்கி வெச்சே ஒரு பதிவா? ஆமா அதுக்கு மேல என்னமோ எழுதி இருக்கீங்களே? அதெல்லாம் தேவையா?////

    சும்மா அதெல்லாம் லொலாங்காட்டிக்கும் மலையாள படத்துக்கு போனோம் என்றால் இடைவேளைக்கு பிறகு வரை காத்திருப்பது இல்லையா? பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உட்கார்ந்து இருக்கோமே! அது மாதிரி:))))

    ************
    தஞ்சாவூரான் said...
    குசும்பையே காணுமே அப்பு?
    நல்ல விசயந்தாஞ் சொல்லி யிருக்கீங்க.. :)//////


    நல்ல விசயமா எங்க எங்க என் பதிவிலா? தஞ்சாவூரான் நம்ம ஊர் ஆளுங்கிறது காட்டுறீங்க பார்த்தீங்களா:)))

    ReplyDelete
  26. உங்களுடைய இந்தப் பதிவை நான் சுட்டு நம்ம இது நம் பூமி பதிவுல போடப் போகிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    (உங்க பதிவ எடுக்க நான் அனுமதி வாங்கனுமா என்ன. .)

    ReplyDelete
  27. என் மகள்கள்தாம் என்னை அந்த ( ) ............. இல்லாமல் போடாடி என்று செல்லமாகத் திட்டுவர்.

    ReplyDelete