Thursday, September 13, 2007

ங்கொக்கமக்கா!!! ரவா தோசை --- (கொஞ்சம் வித்தியாசமாக)

மக்களே நான் கடந்த முறை செய்த முட்டை மசாலா சமையல் குறிப்பை யாரும் டிரை செஞ்சு பார்த்திங்களா இல்லையான்னு தெரியவில்லை, ஆனால் எந்த புகாரும் வரவில்லை அதனால் யாருக்கும் சேதாரம் இல்லை என்று நினைத்து தைரியமாக அடுத்த சமையல் டிப்ஸ்.

முதலில் வைரமுத்து பாடல் தோன்றிய கதை என்று சொல்வது போல், இந்த ரவா தோசை தோன்றிய கதை.


அன்னைக்கு செம பசி வீட்டில் போய் சாதம் வைத்து, குழம்பு வைத்து எல்லாம் சாப்பிடும் அளவுக்கு பொறுமை இல்லை.சரி நூடுல்ஸாவது செய்யலாம் என்று பார்த்தால் அதுவும் இல்லை, சரி என்னதான் செய்யலாம் என்று பார்த்தேன் ரவா இருந்தது சரி ரவா தோசை செஞ்சிடலாம் என்று முடிவு செய்து, அதில் போட என்ன காய்கறி இருக்கு என்று பார்த்தேன் கேரட் மட்டும் இருந்ததுஅதை சின்னதாக வெட்டும் அளவுக்கு பொறுமை இல்லை பக்கத்தில் பார்த்தேன் Knorr veg சூப் மிக்ஸ் இருந்தது, சரி சும்மா போட்டுதான் பார்ப்போமே என்று அதை எடுத்து போட்டு அரிசி மாவு, போட்டு கலக்கி தோசை ஊற்றினேன், ங்கொக்கமக்கா என்று இருந்தது. நண்பன் சொன்னா மச்சி டேய் உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவடா என்று எப்படி டா இப்படி புதுசு புதுசா என்ன என்னமோ செய்கிறாய் என்றான்...இது போல் ஒரு தோசையை சாப்பிட்டது இல்லை என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான்.


தேவையான பொருட்கள்:


ரவா : 3 கப்

அரிசி மாவு: 1 கப்

கடலை பருப்பு : ஒரு கை பிடி

பச்சை மிளகாய்: 3

இஞ்சி : சிறியது

Knoor வெஜ் சூப் மிக்ஸ்


செய்முறை:

ரவா, அரிசி மாவை தண்னீர் விட்டு கலந்து அதில் கடலை பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் வறுத்து போட்டுக்கவும்,பின் knoor வெஜ் சூப் மிக்ஸை போட்டு கலக்கவும். பின் தோசை கல்லை போட்டு தோசை ஊற்றவும்.


(குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்.)


சாப்பிடும் முறை:
பின் ஒரு பிஸை எடுத்து வாயில் போடவும், அங்கிருந்து ங்கொக்கமக்கா என்று சவுண்டு வரும்.


(குறிப்பு: தோசை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக ஊட்டியும் விடபடும்.)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க இந்த முறை உங்க சமையல் குறிப்பு புத்தகத்தை எடுத்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

24 comments:

  1. அட ங்கொக்கமக்கா!!!அட ங்கொக்கமக்கா!!! டிரை பண்ணி பாத்துட்டு சொல்லரென்.

    ReplyDelete
  2. //குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்//

    இதுல அடுப்பு பற்ற வைப்பது எப்டினு போடவே இல்ல. எல்லாரும் என்ன மாதிரி தெரிஞ்சவங்களா இருப்பாங்களா? அதுனால அதுக்கு தனியா டிரைனிங் குடுங்க. :)

    ReplyDelete
  3. //குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்//

    உங்க நல்ல மனச நெனச்சா எனக்கு.............
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    மங்களூர் சிவா

    ReplyDelete
  4. இம்சை said...
    அட ங்கொக்கமக்கா!!!அட ங்கொக்கமக்கா!!! டிரை பண்ணி பாத்துட்டு சொல்லரென்"

    அப்புறம் எங்கே நீங்க சொல்றது, யாராவது சொல்லிவிடுவாங்க.

    ReplyDelete
  5. //(குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்.)

    சாப்பிடும் முறை:
    பின் ஒரு பிஸை எடுத்து வாயில் போடவும், அங்கிருந்து ங்கொக்கமக்கா என்று சவுண்டு வரும்.

    (குறிப்பு: தோசை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக ஊட்டியும் விடபடும்.)//

    ங்கொக்கமக்கா .... ங்கொக்கமக்கா ...
    ங்கொக்கமக்கா ....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  6. அனுசுயா said...
    "இதுல அடுப்பு பற்ற வைப்பது எப்டினு போடவே இல்ல. எல்லாரும் என்ன மாதிரி தெரிஞ்சவங்களா இருப்பாங்களா? அதுனால அதுக்கு தனியா டிரைனிங் குடுங்க. :)"

    சூப்பர் ஐடியா அப்படியே செஞ்சிடலாம்:))

    ReplyDelete
  7. mglrssr said...
    "உங்க நல்ல மனச நெனச்சா எனக்கு.............
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

    நீங்களாவது என் மனச புரிஞ்சிக்கிட்டிங்களே!!!

    ReplyDelete
  8. J K said...
    "ங்கொக்கமக்கா .... ங்கொக்கமக்கா ...
    ங்கொக்கமக்கா ....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....."

    ஏன் JK கவலை படுறீங்க நீங்களும் விருப்பம் பட்டா 10000 பணம் கட்டி ஆசிரியர் ஆகிடலாம், மாணவிகளுக்கு இலவசம். ஆசிரியர்களுக்கு கட்டணம். எப்படி என் கல்லூரி.

    ReplyDelete
  9. //ஏன் JK கவலை படுறீங்க நீங்களும் விருப்பம் பட்டா 10000 பணம் கட்டி ஆசிரியர் ஆகிடலாம், மாணவிகளுக்கு இலவசம். ஆசிரியர்களுக்கு கட்டணம். எப்படி என் கல்லூரி. //

    இவ்ளோதானா கோர்ஸ்பீசு....

    அப்ளிகேசன் எங்க கிடைக்குது...

    ReplyDelete
  10. பேச்சிலர் வாழ்க்கையிலே இந்த மாதிரி சத்தியசோதனையெல்லாம் செஞ்சுதானே பார்க்கனும்... :)

    ReplyDelete
  11. இராம் said...
    பேச்சிலர் வாழ்க்கையிலே இந்த மாதிரி சத்தியசோதனையெல்லாம் செஞ்சுதானே பார்க்கனும்... :)

    ஆமாங்க தல.. என்ன செய்வது பசங்க இப்படி எல்லாம் செய்கிறோம், பொண்ணுங்க நோகாம பீசா சாப்பிட்டு விட்டு போகுதுங்க...:((((

    ReplyDelete
  12. J K said...

    "அப்ளிகேசன் எங்க கிடைக்குது... "

    (டிடி அனுப்ப வேண்டிய முகவரி)

    பிரின்ஸ்பால்: அழகு குட்டி குசும்பன்
    குசும்பன் சமையல் கலை கல்லூரி
    ஜொள்ளுபட்டினம்

    ReplyDelete
  13. நம்பி இத டிரை பண்ணலாமா. . .?

    ReplyDelete
  14. ஹாய் குசும்பன்,

    //என்ன செய்வது பசங்க இப்படி எல்லாம் செய்கிறோம், பொண்ணுங்க நோகாம பீசா சாப்பிட்டு விட்டு போகுதுங்க...:((((//

    அட, உங்களுக்கு தான் தலையெழுத்து, எங்களுக்கு என்னா...

    ReplyDelete
  15. வெங்கட்ராமன் said...
    நம்பி இத டிரை பண்ணலாமா. . .?

    பீரித்திக்கு நான் கியாரண்டின்னு ஒரு பேர் தெரியாத பொண்ணு சொல்லும் அது போல்...

    நானும் சொல்கிறேன் பேதிக்கு ச்ச்சி
    டேஸ்ட்டுக்கு நான் கியாரண்டி:)))

    ReplyDelete
  16. தமிழ்மணம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னாலஜி ல பதிவு பண்ணுங்க முதல்ல!

    http://kalaaythal.blogspot.com/2006/11/022-tmict.html

    ReplyDelete
  17. it may be a tasty one but for him
    pasila athuvum osila yaaruthan kurai solva

    ReplyDelete
  18. எனக்கு ங்கொக்கமக்கானு சொல்ல வரல...

    அடங் கொய்யால...னு தான் வருது...

    எங்கயோ தப்பு நடந்து இருக்குமோ????

    ReplyDelete
  19. //இது போல் ஒரு தோசையை சாப்பிட்டது இல்லை என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான்.//

    எப்படி முடியும்.... இத தோசை என்று கன்பார்ம் பண்ணின உங்க நண்பர நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு..... உணவின் சுவையை மறுந்துட்டாரோ?

    ReplyDelete
  20. நாகை சிவா said...
    "அடங் கொய்யால...னு தான் வருது...

    எங்கயோ தப்பு நடந்து இருக்குமோ????"

    நிஜமா நன்றாக இருக்கும் டிரை செஞ்சு பாருங்க:)))

    ReplyDelete
  21. நாகை சிவா said...
    "எப்படி முடியும்.... இத தோசை என்று கன்பார்ம் பண்ணின உங்க நண்பர நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு..... உணவின் சுவையை மறுந்துட்டாரோ?"

    ஆமாம் தெய்வம் கொடுத்தது...எப்படி தோசை ஆகும்!!! பிரசாதம் ஆகுமே!!!

    ReplyDelete
  22. chettan..chettan neengkal evvidaiyanu irrukee - enikky oottivida oru azhagana chettan venum...enda amme thaan ootividum but bore addikithu chetta...i want a young and handsome man to feed me. will u pl. pay a visit to kollam... enikku thosaiyum vaarka ariyilla,,, gnaan thosai vaarthu tharaan pinne..neengkal enikku ooti vidum....manasula aayo chettaa

    ReplyDelete
  23. ஆமாம் தெய்வம் கொடுத்தது...எப்படி தோசை ஆகும்!!! பிரசாதம் ஆகுமே!!!


    theyvame india vaangka .. ingku yeralamana beggers ungka prasaathathukkaka longing...

    appadiye enakku oru promotion prasadham podungka theyvame..

    ReplyDelete