Friday, September 14, 2007

நான் இதில் எழுதுவது இன்றோடு கடைசி,--ஏன்? போட்டோ ஆதாரம்:(((

மிகுந்த மன வருத்தத்துடன் இனி இந்த பக்கத்தில் எழுதமுடியாது என்பதை சொல்லிக்கிறேன், இந்த முடிவை நானாக எடுக்கவில்லை. சூழ்நிலை அப்படி, யாரையும் குறை சொல்லவோ, குற்றம் சொல்லவோ நான் விரும்பவில்லை,
நானே இதை எதிர்பார்ததுதான் இந்த முடிவை நான் முன்பே எடுத்திருக்கவேண்டும்.


கடந்த 4 மாதமாக எழுதிவந்தேன், இனி இதில் எழுத முடியாது. ஆமாங்க படத்த பாருங்க நான் கடந்த நான்கு மாதமாக எழுதிவந்த நோட் புக் கடைசி பக்கமும் முடிஞ்சு போச்சு, இனி எப்படி இந்த பக்கத்தில் எழுத முடியும் சொல்லுங்க. பேனாவில் இருந்த ரீபிலும் முடிஞ்சு போச்சு.


நீங்க எந்தபக்கம் என்று நினைச்சீங்க...

டிஸ்கி: இந்த பதிவு இனி எழுதமாட்டேன் என்று சொல்லி விடைபெறும் நண்பர்கள் சுகுணாதிவாகர், அரைபிளேடு மற்றும் பலருக்காகவும். புச்சா நோட்டு வாங்கி திரும்ப வாங்க எழுதலாம்:)))

42 comments:

  1. ஹய்யோ.....ஹய்யோ.....என்னத்த சொல்ல???.........ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..

    ReplyDelete
  2. உன் நல்ல மனசுக்கு நீ எங்கியோ இருக்க வேண்டிய ஆளுய்யா!

    ReplyDelete
  3. ஆனா நினைச்சேன்! குசும்பன் பதிவுல வேற என்ன இருக்கும்னு!

    சரியா போச்சு!

    ("இந்த பதிவுல இனி எழுத முடியாது. ஏன்னா இந்தப் பதிவு இத்தோட முடிஞ்சு போச்சு! இனி அடுத்த பதிவுதான்" - இப்படி எதிர்பார்த்தேன்)

    ReplyDelete
  4. ஹய்யோ.....ஹய்யோ.....என்னத்த சொல்ல???.........ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.."

    ஹி ஹி ஹி:))

    ReplyDelete
  5. நாமக்கல் சிபி said...
    உன் நல்ல மனசுக்கு நீ எங்கியோ இருக்க வேண்டிய ஆளுய்யா!"

    அதான் துபாய் வந்தாச்சு, வேற எங்கன்னு நீங்களே சொல்லிடுங்க:)))

    ReplyDelete
  6. நாமக்கல் சிபி said...
    "ஆனா நினைச்சேன்! குசும்பன் பதிவுல வேற என்ன இருக்கும்னு"

    இப்படி எல்லாம் கரெக்ட்டா புரிஞ்சு வச்சிக்கிட்டா நல்லா இல்ல ஆமா!!!

    ReplyDelete
  7. //நாமக்கல் சிபி said...
    உன் நல்ல மனசுக்கு நீ எங்கியோ இருக்க வேண்டிய ஆளுய்யா!//

    ஆமா! ஆமா!
    எங்கியோ இருக்க வேண்டிய ஆளுதான். கொறஞ்ச பட்சம் லாக்கப்ல கம்பிங்க பின்னால இருக்க வேண்டிய ஆளுதான்னு சொல்லுங்க!

    அப்பப்பா, இம்ச தாங்க முடியலடா சாமி!

    நல்லாவே ஏமாந்தேன்!

    ;-D

    ReplyDelete
  8. ஓரமா அம்புட்டு இடம் இருக்கே. அங்க எல்லாம் ஏன் எழுத மாட்டேங்க? சரி நானே ஒண்ணுக்கு மூணு காரணத்த சொல்லவா?

    1) அது பின்னூட்டம் வரும் என நினைத்து விட்ட இடம். (காலியாகவே இருப்பதால் ஒன்றும் வரவில்லை என்பதைத் தெரிந்து கொள்க.)

    2) விளிம்பு நிலை எழுத்துக்கள் என்றுமே எனக்குப் பிடிப்பதில்லை.

    3) படம் போடும் பக்கங்களில் எழுதுவதில்லை என்பது என் கொள்கை.

    ReplyDelete
  9. நன்றி தங்கள் வருகைக்கு மாசிலா!!!

    மாசிலா said...
    "ஆமா! ஆமா!
    எங்கியோ இருக்க வேண்டிய ஆளுதான். கொறஞ்ச பட்சம் லாக்கப்ல கம்பிங்க பின்னால இருக்க வேண்டிய ஆளுதான்னு சொல்லுங்க!"

    நீங்களே இப்படி சொன்னா என்ன செய்வது.:(((

    அப்பப்பா, இம்ச தாங்க முடியலடா சாமி!

    நல்லாவே ஏமாந்தேன்!

    ஹி ஹி நான் இன்னைக்கு நல்லா தூங்குவேன்... ஒரு பெரிய ஆளை ஏமாற்றியாச்சு என்ற மகிழ்சியில்:))))

    ReplyDelete
  10. இலவசக்கொத்தனார் said...

    தலைவா எப்படி இப்படி எல்லாம் என் மனச படிச்சீங்க.:)))
    சூப்பர் உங்க மூன்று காரணங்களும்!!!

    ReplyDelete
  11. delphine said...
    "எப்படிப்பா இப்படியெல்லாம் தோணுது...
    ஆணி அதிகமில்லையா.? பாவம் இந்த ஷேக்குங்க...உங்களை மாதிரி இவ்வளவு புத்திசாலிங்கள வச்சுக்கிட்டு???"

    ஆணி அதிகம் அதனாலதான் கடந்த வாரம் தப்பிச்சீங்க எல்லோரும்...


    பாவம் இந்த ஷேக்குங்க...உங்களை மாதிரி இவ்வளவு புத்திசாலிங்கள வச்சுக்கிட்டு???"

    ஷேக்குங்க எல்லாம்.......... ஹி ஹி ஹி

    ReplyDelete
  12. //ஹி ஹி நான் இன்னைக்கு நல்லா தூங்குவேன்... ஒரு பெரிய ஆளை ஏமாற்றியாச்சு என்ற மகிழ்சியில்:))))//

    அய்யய்யோ! குசும்பா! உங்க வாயில சக்கரைய கொண்ணாந்து கொட்டனும்பா. மொத மொத என்ன "பெரிய ஆளு"ன்னு சொன்னதுக்கு! உடனே இத வெச்சே எம்.எல்.ஏ. ஆயிடலாமான்னு ஒரு சின்ன நப்பாச வேற பொறந்துடுச்சி.

    குசும்பா நீங்க எனக்கு ஓட்டு போடுவீங்களா?

    ReplyDelete
  13. மாசிலா said...

    "குசும்பா நீங்க எனக்கு ஓட்டு போடுவீங்களா?"

    பிராண்ஸுக்கு வர எனக்கு ஒரு டிக்கெட் அனுப்புங்க, எத்தனை வோட்டு வேண்டுமானாலும் குத்துறேன்.

    ReplyDelete
  14. ஒரு பக்கத்துக்கு நாலு வரி எழுதினா, நோட்புக் சீக்கிரமா காலியாகாம வேறென்ன நடக்குமாம்? நெருக்கி எழுத கத்துக்கப்பா!

    //ஹி ஹி நான் இன்னைக்கு நல்லா தூங்குவேன்... "ஒரு பெரிய ஆளை" ஏமாற்றியாச்சு என்ற மகிழ்சியில்:))))//

    என்னுடைய ப்ரொபைல பாத்துட்டுமா இது போல சொல்றீங்க?

    இப்படி என்னை அவமரியாதை செய்வதிலும் கூட உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியா?

    நல்லா இருங்கய்யா!

    ;-D

    ReplyDelete
  15. //பிரான்சுக்கு வர எனக்கு ஒரு டிக்கெட் அனுப்புங்க, எத்தனை வோட்டு வேண்டுமானாலும் குத்துறேன்.//

    கடைசியில அடி மடியில கை வெக்கிறிய குசும்பா! ஆனா, பிரியாணி குவார்ட்டர்லாம் கெடையாது. ஓ.கேவா?

    அப்படியே நம்ம தோழியர் தமிழச்சிய அறிமுக படுத்தறேம்பா. கராத்தே பாடம் சொல்லி குடுப்பாங்க.
    சரியா?

    ReplyDelete
  16. "என்னுடைய ப்ரொபைல பாத்துட்டுமா இது போல சொல்றீங்க?"

    என்னங்க இப்படி சொல்லீட்டிங்க உங்கள தெரியாம இருக்கமுடியுமா?!!!

    தமிழச்சி கூட இருக்கும் போட்டோவில் பெரிய ஆள் மாதிரி இருந்தீங்க அதான் அப்படி சொல்லிட்டேன்.:))))

    ReplyDelete
  17. மாசிலா said...
    "கடைசியில அடி மடியில கை வெக்கிறிய குசும்பா! ஆனா, பிரியாணி குவார்ட்டர்லாம் கெடையாது. ஓ.கேவா? "

    பிரியாணி நான் வாங்கிக்கிறேன் உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை!!!:))) குவார்டர் பழக்கம் எல்லாம் இல்லை சோ நோ பிராபிளம்!!!

    "அப்படியே நம்ம தோழியர் தமிழச்சிய அறிமுக படுத்தறேம்பா. கராத்தே பாடம் சொல்லி குடுப்பாங்க.
    சரியா?"

    நான் கைப்புள்ளயால் டிரைனிங் கொடுக்க பட்ட ஆளு!!! எத்தன அடி அடிச்சாலும் அம்சமா மேக்கப் கலையாம நிப்போம்ல்ல!!!

    ReplyDelete
  18. இலவசம் இங்க வந்தும் கும்முது, அங்க போயும் கும்முது!

    ReplyDelete
  19. //நான் கைப்புள்ளயால் டிரைனிங் கொடுக்க பட்ட ஆளு!!! எத்தன அடி அடிச்சாலும் அம்சமா மேக்கப் கலையாம நிப்போம்ல்ல!!!//

    அருமை குசும்பு!

    ;-D

    இருந்தாலும் நீங்க பிரான்ஸ் வர்ற கேள்விய தமிழச்சிகிட்ட பேசி பாக்கிறேன். உண்மையில எனக்கு மட்டும் வசதிகள் இருந்தா, கட்டாயம் அத்தனை தமிழ் பதிவருகளையும் பிரான்சுக்கு வரவைப்பேன். ஏற்கனவே செந்தழல் ரவி கூட தான் வர்ற ஆசைய தெரிவிச்சி இருக்காரு. பேசாம இங்கயே ஒரு தமிழ் பட்டறய நடத்திடலாமா?

    ReplyDelete
  20. சரியான முந்திரிக் கொட்டை. (படத்துல) இன்னும் ஒரு கடைசி பக்கம் பின்னால காலியா இருக்குது. அவசரமா இருந்தா பின் அட்டை உள்பக்கமும் காலி. ஏன்யா அவசரப்படுறீங்க.

    ReplyDelete
  21. இப்படித்தான் எதாச்சும் இருக்குமுன்னு நம்பி வந்தவளை ஏமாத்தலை:-)))))

    ReplyDelete
  22. ungka rasikarlukku what happend to him entu irunthirukalam,, or ithil etho kusumbu irukkalam entirukkalam
    ennayaaa ithu vara vara ungkal lolu thangkalaappa

    ReplyDelete
  23. ஒரு சர்வே போடலாம்னு வந்தா, சப்புனு முடிஞ்சுடுச்சே.

    பி.கு: இனிமேல் சர்வே கிடையாது. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும். அரைப்ளேடுக்கு ஒரு ஆட்டோ அனுப்ப, பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது ;)

    ReplyDelete
  24. மாசிலா said...
    "ஏற்கனவே செந்தழல் ரவி கூட தான் வர்ற ஆசைய தெரிவிச்சி இருக்காரு. பேசாம இங்கயே ஒரு தமிழ் பட்டறய நடத்திடலாமா?"

    அவரு இங்கேயும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி டபாய்ச்சிக்கிட்டே இருக்காரு:)))

    ReplyDelete
  25. சுல்தான் said...
    "பக்கம் பின்னால காலியா இருக்குது. அவசரமா இருந்தா பின் அட்டை உள்பக்கமும் காலி. ஏன்யா அவசரப்படுறீங்க."

    பின் பக்கம் போன் நம்பர்ஸ் எழுதி வச்சு இருக்கேன்...அதான் அத போட்டோ எடுக்கல:)

    ReplyDelete
  26. துளசி கோபால் said...
    இப்படித்தான் எதாச்சும் இருக்குமுன்னு நம்பி வந்தவளை ஏமாத்தலை:-)))))

    ஆஹா இப்படி எல்லாம் கரெக்டா புரிஞ்சு வச்சுகிட்ட நமக்கு வியாபாரம் ஆகாது ஸோ ரூட்ட மாத்தனும்:))))

    ReplyDelete
  27. "Anonymous said...
    ungka rasikarlukk"

    அனானி உங்களுக்கு நல்லா கமெடி வரும் என்று நினைக்கிறேன் நீங்க ஏன் ஒரு பிளாக் ஆரம்பிக்க கூடாது????

    ReplyDelete
  28. //ஓரமா அம்புட்டு இடம் இருக்கே. அங்க எல்லாம் ஏன் எழுத மாட்டேங்க? சரி நானே ஒண்ணுக்கு மூணு காரணத்த சொல்லவா?

    1) அது பின்னூட்டம் வரும் என நினைத்து விட்ட இடம். (காலியாகவே இருப்பதால் ஒன்றும் வரவில்லை என்பதைத் தெரிந்து கொள்க.)

    2) விளிம்பு நிலை எழுத்துக்கள் என்றுமே எனக்குப் பிடிப்பதில்லை.

    3) படம் போடும் பக்கங்களில் எழுதுவதில்லை என்பது என் கொள்கை.///

    தெய்வமே!.....

    தெய்வம் தெய்வம் தான் அடியேர்கள் அடியேர்கள் தான்....

    ReplyDelete
  29. SurveySan said...
    ஒரு சர்வே போடலாம்னு வந்தா, சப்புனு முடிஞ்சுடுச்சே.

    கொஞ்சம் உப்பு காரம் போடுங்க:)))

    ReplyDelete
  30. நாகை சிவா said...
    "தெய்வமே!.....

    தெய்வம் தெய்வம் தான் அடியேர்கள் அடியேர்கள் தான்...."

    :))))))))))))

    ReplyDelete
  31. உங்க கவிதை மிகவும் நன்றாக இருந்தது. தொடருங்கள் உங்கள் சேவையை.

    வேறென்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறீங்க. நானும் ஏமாந்துட்டேன்னா?. போப்பு. நாங்களெல்லாம் ஊர்ல அடி வாங்காத தெருவே இல்ல. தொடச்சுக்கிட்டு போய்கிட்டே இருப்போம்.

    ReplyDelete
  32. //"Anonymous said...
    ungka rasikarlukk"

    அனானி உங்களுக்கு நல்லா கமெடி வரும் என்று நினைக்கிறேன்//

    இதிலென்னங்க காமெடி! உள்ளதைத்தானே சொல்லி இருக்காரு!

    உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு எங்க ஏரியாவுலே!

    உங்க பொஸ்ட் வெளியாகுற அன்னிக்கு மட்டும் எங்க தெரு பிரவுஸிங் செண்டர்லே கூட்டம் நெருக்கித்தள்ளும்!

    ReplyDelete
  33. தெய்வமே!.....

    தெய்வம் தெய்வம் தான் அடியேர்கள் அடியேர்கள் தான்....

    இதை நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  34. நாங்கள் செய்தது ஆயுதப் புரட்சி!

    நீங்கள் செய்வது காமெடிப் புரட்சி!

    தயவு செய்து இதோடு நிறுத்தி விடாதீர்கள் நண்பரே! (கவனிக்க தோழரே அல்ல)

    அடுத்த நோட்டுப் புத்தகம் வாங்கி விரைவில் எழுதவும்!

    (அமெரிக்க நிறுவனங்களில் உற்பத்தி செய்யும் நோட்டுப் புத்தகங்களை வாங்க வேண்டாம்)

    ReplyDelete
  35. அண்ணன் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  36. ஆயுதத்தை விட சிறந்தது அஹிம்சை!
    அதனினும் சிறந்தது காமெடி!

    தொடர்க உங்கள் காமெடி இம்சைகளை!

    இது பற்றி நான் சத்தியசோதனையின் கற்பனைப் பிரதியில் கூட குறிப்பிட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  37. உமையணன் said...
    "வேறென்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறீங்க. நானும் ஏமாந்துட்டேன்னா?. போப்பு. நாங்களெல்லாம் ஊர்ல அடி வாங்காத தெருவே இல்ல. தொடச்சுக்கிட்டு போய்கிட்டே இருப்போம்."

    நம்ம கூட்டாளி, வாங்க வாங்க சோடி போடுவோமா சோடி!!! நன்றி தங்கள் வருகைக்கு!!!



    "உங்க பொஸ்ட் வெளியாகுற அன்னிக்கு மட்டும் எங்க தெரு பிரவுஸிங் செண்டர்லே கூட்டம் நெருக்கித்தள்ளும்!"

    அய்யா அனானி உங்க கமெண்டை படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்:))

    ReplyDelete
  38. //"உங்க பொஸ்ட் வெளியாகுற அன்னிக்கு மட்டும் எங்க தெரு பிரவுஸிங் செண்டர்லே கூட்டம் நெருக்கித்தள்ளும்!"//

    உள்ள இருந்து வெளிய போறதுக்கா??

    //எங்கியோ இருக்க வேண்டிய ஆளுதான். கொறஞ்ச பட்சம் லாக்கப்ல //

    மீ ட்டூ ரிப்பீட்..

    குசும்பா உன் மேல் எவ்வளவு பிரியம் எல்லாருக்கும் தெரிந்துகொள்.

    ஏமாற்றாமல் எதிர் பார்த்தபடியே நிறைவாக இருந்தது இந்த பதிவு.

    மங்களூர் சிவா

    ReplyDelete
  39. நல்லாயிருங்க அப்பு...நல்லாயிருங்க

    ReplyDelete
  40. //அப்பப்பா, இம்ச தாங்க முடியலடா சாமி!//

    ரிப்பீட்டேய்...

    //"உங்க பொஸ்ட் வெளியாகுற அன்னிக்கு மட்டும் எங்க தெரு பிரவுஸிங் செண்டர்லே கூட்டம் நெருக்கித்தள்ளும்!"
    //

    அடப்பாவிகளா!! :)

    ReplyDelete
  41. //அய்யா அனானி உங்க கமெண்டை படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்:))//

    மனம் நிறைந்த சிரிப்பும் இறைவனை அடையும் ஒரு வழிதான்!

    இதுவும் ஆன்மீகம்தான்!

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete