Wednesday, September 5, 2007

ரொம்ப நாடகளுக்கு பிறகு கண் குளிர குளிர சைட் அடித்தோம்

காலையில் அண்ணாச்சி ஆசிப்புக்கு போன் போட்டு என்ன அண்ணாச்சி ஆபிஸ் பக்கம் வாங்க லஞ்சுக்கு எங்கயாவது போகலாம் என்றேன்.
அவரும் சரிய்யா 1 மணிக்கு லேம்ஸி பிளாசா வந்துவிடுகிறேன் என்றார்.

மணி 12.30 யோவ் நான் இப்ப கிளம்புறேன் நீ எங்க இருக்க என்றார். ஒருத்தர பார்க்க போனேன் டிராபிக்கில் மாட்டிவிட்டேன் என்றேன், சரி ஒன்றும் அவசரம் இல்லை பொறுமையாக வா என்றார்.

சரி என்று அவரை போய் பார்க்கும் பொழுது மணி 1.20 ... இனி.

உள்ளே நுழைந்தா தத்தக்கா பித்தக்கான்னு நடக்க தெரியாம ஒரு பிகர் அண்ணாச்சிய நோக்கி நடந்து போய் கிட்டு இருந்துச்சு.. எங்க அண்ணாச்சி மேல மோதி அண்ணாச்சிக்கு அடிபட்டு விடுமோ என்ற நல்ல எண்ணத்தில் நம் மீது மோதி அடிப்பட்டாலும் பரவாயில்லை என்று நான் சொய்ங் என்று சறுக்கி ஓடி போனா அதுக்குள்ள டக்குன்னு ஒருத்தன் வந்து தாங்கி பிடிச்சி கூட்டிக்கிட்டு போனான்..புஸ்ஸ்ஸ்ஸ் (காதில் இருந்து புகை) .

என்னாடா என்று பார்த்தால் புடவை கட்டி நடக்க தெரியாம நடந்ததன் வினை.

ம்ம்ம் சரி வாங்க புட் கோர்ட் போகலாம் என்று உள்ளே போனால் திமு திமு திமுன்னு ஒரு 150 பிகர்ஸ் எல்லாம் புடவையில்... அய்யோ அய்யோ எதவிடுவது எத பார்ப்பது என்று தெரியாமல் முழிக்க, அண்ணாச்சி டேய் வாடா சாப்பிடலாம் என்றார்...

அண்ணே கண்ணுக்கு பிகர் இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவிட சொல்லி வள்ளுவர் சொல்லி இருக்காருண்ணே என்றேன்!!!
அண்ணாச்சி தலையில் அடுத்து கொண்டு போய்.. சாப்பாடு வாங்கி வந்தார்.

சாப்பிடும் பொழுது ரெண்டு மூனு பெண்கள் என் மீது மோதியதால் அண்ணாச்சி பக்கம் இருந்து லேசா கருகல் வாசனை அடித்தது...உடனே தண்ணி குடிச்சி நெருப்பை அடக்கினார்.

அவர்களுக்குள் ஏதோ போட்டி இருக்கும் போல யார் புடவையை இறக்கி கட்டுவது என்று... ஒழுங்கா கட்டவும் தெரியாமல் சும்மா சுத்திக்கிட்டு வந்து ஒரு கன்னி பையன் மனதை இம்சை செஞ்சுதுங்க...

அவுங்க புதுசா யாரும் வந்தால் கன்னத்தோடு கன்னம் வைத்து வரவேற்பு கொடுத்தாங்க (கை கொடுப்பது போல்) எனக்கும் ஒரு தபா என்றேன்!!! யாரும் கண்டுக்கவே இல்லை!!!

அண்ணாச்சி என்னை டேய் என்னாலா இங்க உட்கார முடியலை நீ இங்க வா என்றார்... அங்கே நான் கண்ட காட்சி (சென்சார்)....
அதன் பிறகு அண்ணாச்சி லிப்ஸ் மட்டும் அசைவது மட்டும் தெரிந்தது என் காதில் அவர் பேசியது எதுவும் விழவில்லை.

வெளியே வந்ததும் என்ன அண்ணாச்சி ஒன்னும் பேசவே இல்லை என்றேன்.. முறைத்தார் அது ஏன் என்றுதான் தெரியவில்லை!!!

எதுக்கு இப்படி எல்லாம் புடவையில் வந்து இருக்காங்க என்று தெரியாமல் குழம்பி போனோம், வெளியில் நின்று கொண்டு இருந்த பிகரிடம் எக்ஸ் கூயுஸ் மி ? எனி ஸ்பெஸல் டுடே என்று கேட்டேன்...

டீச்சர்ஸ் டே கொண்டாடுகிறோம் என்றார்கள்...

(அடிக்கடி இப்படி கொண்டாடுங்க என்று சொல்லிவிட்டு வர மனசு இல்லாமல் வந்தோம்)

டிஸ்கி: என்னதான் அறை குறையா அலைஞ்சாலும் புடவையில் இருக்கும் கிக்கே கிக்குதான்...அதுக்குதான் இந்த பதிவு.

18 comments:

  1. ஹி..ஹி...சேம் ப்ளட்...

    ReplyDelete
  2. புகைப்படங்கள் போடதா குசும்பனுக்கு என் கண்டனங்கள் :-(

    ReplyDelete
  3. பங்காளி ஏன்?

    கோபிநாத் said...
    புகைப்படங்கள் போடதா குசும்பனுக்கு என் கண்டனங்கள் :-(

    தம்பி கோபி நான் போட்டோ எடுத்த உள்ள தூக்கி போட்டுவிடுவானுங்க:(((

    ReplyDelete
  4. தெய்வத்திற்குசமமான டீச்சர்களை 'சைட்' அடித்த குசும்பனுக்கு அனைத்துலக டீச்சர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப் படுகிறது.
    அண்ணாச்சி [ஆசிப் தானே?]யூ டூ
    இப்படிக்கு
    டீச்சர் சங்கம்
    துபை கிளை

    ReplyDelete
  5. புகைப் படம் கேட்ட ஜொள்ளன் கோபிக்கும் சம்மன் அனுப்பப் படுகிறது

    ReplyDelete
  6. பெரிய கொண்டை போட்டு, சைடுல ஒரு டிஷ் ஆண்டனா அளவுக்கு பூ வெச்சு கையில குடை வேற வெச்சு இருந்தாங்களா?

    (சே, இளா இனிமே அதிகமா சினிமா பார்க்காத, அப்புறம் குசும்பன் மாதிரி கெட்டு போயிருவே)

    ReplyDelete
  7. அங்க கொண்டாடியது ஸ்கூல் பெண்கள், டீச்சர்ஸ் இல்லை....:))))

    ReplyDelete
  8. அவுங்க புடவ கட்டாம, பாவாடை தாவணியில வந்திருந்தா குசும்பன் அவ்வளவு தான் . . . . .

    ReplyDelete
  9. ILA(a)இளா said...
    பெரிய கொண்டை போட்டு, சைடுல ஒரு டிஷ் ஆண்டனா அளவுக்கு பூ வெச்சு கையில குடை வேற வெச்சு இருந்தாங்களா?


    இளா டீச்சருங்க யாரு ஸ்கூல் பெண்கள் யாரு என்று கண்டுபிடிக்க முடியவில்லை இளா!!!

    நிஜமா ஒன்னும்மே சொல்ல முடியவில்லை!!!

    ReplyDelete
  10. கண்மணி said...
    "தெய்வத்திற்குசமமான டீச்சர்களை 'சைட்' அடித்த குசும்பனுக்கு அனைத்துலக டீச்சர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப் படுகிறது.
    அண்ணாச்சி [ஆசிப் தானே?]யூ டூ
    இப்படிக்கு
    டீச்சர் சங்கம்
    துபை கிளை "

    டீச்சரை எல்லாம் சைட் அடிக்கிற வயசா எங்களுக்கு? நாங்க எல்லா ஸ்கூல் பெண்களை மட்டும்தான் சைட் அடிப்போம்!!! எங்களை விட வயது அதிகமான பெண்களை சைட் அடிக்க மாட்டோம்!!!!
    (LKG, UKG மிஸ்ங்க டீச்சர் கேட்டகிரியில் வரமாட்டாங்கல்ல!!!:)))

    ReplyDelete
  11. delphine said...
    "இது எங்க நடந்த விழா? துபாயிலா?
    தம்பி குசும்பா.. நீ இந்த பெண்களைப் பார்த்ததெல்லாம் சரிதான். ஆனாலும் தமிழை இவ்வளவு கொலை செய்யவேண்டாம். எத்தனை எழுத்து பிழை?"

    ஆமாம்:) செம குஜால் நேற்று!!! எங்க மிஸ்டேக் எங்கேயும் இல்லையே!!! எங்கன்னு சொல்லுங்க!!!!:)))))

    ReplyDelete
  12. Innikkuththaane
    Teachers da.
    ethukku neeththikke kondaadinaanga.
    adhuvum schoolukku mattam pottuttu.
    too much, TOO MUCH:))))
    SaravaNan neenga angeye kaNdiththu irukkaNum:)

    ReplyDelete
  13. வெங்கட்ராமன் said...
    "அவுங்க புடவ கட்டாம, பாவாடை தாவணியில வந்திருந்தா குசும்பன் அவ்வளவு தான் . . . . ."

    வெங்கட் பல விவசயம் பதிவுல போட முடியல!!! அவ்வ்வ்வ்!!!

    ReplyDelete
  14. வல்லிசிம்ஹன் said...
    Innikkuththaane
    Teachers da.
    ethukku neeththikke kondaadinaanga.
    adhuvum schoolukku mattam pottuttu.
    too much, TOO MUCH:))))

    இன்னைக்குமா? நான் இன்னைக்கு ஆபிஸ் லீவ் போட்டுவிட்டு அங்க போக போகிறேன்!!! அவுங்கள கண்டிக்கதான்:)))))

    SaravaNan neenga angeye kaNdiththu irukkaNum:)

    ReplyDelete
  15. //கோபிநாத் said...
    புகைப்படங்கள் போடதா குசும்பனுக்கு என் கண்டனங்கள் :-(
    //

    ரிப்பீட்டு.......

    ReplyDelete
  16. அண்ணாச்சிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete