Thursday, September 6, 2007

ஒரு முடியின் கதை

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்

தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்

இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.

அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...

இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்

இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து

புன்னகைக்கவும் மறந்து போய் இன்று

ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறது

காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்

ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து

அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்

இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!

ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்

அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என

ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என

ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது

காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்

கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி

ஆராயவும் முடியவில்லை அது போல் முடி

எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது

இருப்பை மறந்த தேடலில்

கரைந்து ஓடும் கால வெளியில்

தொலைந்து போவது

என் சுயம் மட்டுமே

வெளுப்பை மறைக்கும் முயற்சியில்

கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்

மற்றவர்களுக்கு தெரிந்து போவது

என் சொட்டை தலையும்

அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!

டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.

13 comments:

  1. //மற்றவர்களுக்கு தெரிந்து போவது

    என் சொட்டை தலையும்

    அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!

    //


    :)))))))))))

    தாங்க முடியல!!

    ReplyDelete
  2. \\போவதுஎன் சொட்டை தலையும் அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!\\

    அதனால தான் உங்களை எல்லோரும் "குசும்பு தாத்த"ன்னு கூப்பிடுறாங்களா! :))

    ReplyDelete
  3. :))))

    பேசாம பேர கெசட்ல குசும்பன்னே மாத்திக்குங்குங்கய்யா ... உங்க ரவுசு தாங்கமுடியல

    ReplyDelete
  4. கண்மனி மனசாட்சி said. . .

    இனிமே கவிதை எழுதுவியா. . .?
    இனிமே கவிதை எழுதுவியா. . .?

    அதுவும் குசும்பன் கண்ல படுற மாதிரி கவிதை எழுதுவியா. . ?

    ReplyDelete
  5. டிஸ்கிய பாத்ததும்தான் மேட்டர் புரிஞ்சது.....

    ReplyDelete
  6. காயத்ரி said...
    "தாங்க முடியல!!"

    இறக்கு வெச்சுடுங்க:))


    delphine said...
    "தாங்க முடியல!! "

    நீங்களும்தான்

    ReplyDelete
  7. கோபிநாத் said...
    "அதனால தான் உங்களை எல்லோரும் "குசும்பு தாத்த"ன்னு கூப்பிடுறாங்களா! :)) "

    யாரும் கூப்பிடுவது இல்லை எல்லாம் உன் பேர புள்ளைங்கதான் என்னை அப்படி கூப்பிடுது:)))))

    ReplyDelete
  8. பொன்வண்டு said...
    :))))

    பேசாம பேர கெசட்ல குசும்பன்னே மாத்திக்குங்குங்கய்யா ... உங்க ரவுசு தாங்கமுடியல "

    ஹி ஹி ஹி:))) உங்களையும் கலாய்ச்ச பிறகு மாற்றிடலாம்:))))

    ReplyDelete
  9. வெங்கட்ராமன் said...
    கண்மனி மனசாட்சி said. . .

    இனிமே கவிதை எழுதுவியா. . .?
    இனிமே கவிதை எழுதுவியா. . .?

    அதுவும் குசும்பன் கண்ல படுற மாதிரி கவிதை எழுதுவியா. . ? "

    வெங்கட் நீங்க கூட ஒரு கவிதை எழுத போவதாக கேள்வி பட்டேன்:)))

    ReplyDelete
  10. J K said...
    டிஸ்கிய பாத்ததும்தான் மேட்டர் புரிஞ்சது.....

    என் பிளாக்கில் கவிதை என்று ஒன்றுமே வராது!!! அப்படி இருந்தால் அது எதிர் கவுஜயாக தான் இருக்கும்:))))

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருந்தது உங்க எதிர் கவிதை.

    மங்களூர் சிவா

    ReplyDelete
  12. என் சொட்டை தலையும்

    அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!
    kusumbar photo vai paarthaal
    wig vaithirukiramathiri theriyavillai but avar eluthi irukirathai parthal paavam wig aaa
    original mathiriye irukirathu
    enakkontu vanki kodungkalen..

    ReplyDelete
  13. அன்னாச்சி உங்க கவி திறமை இம்புட்டு நாளா கவனிக்காம விட்டுப்புட்டேனுங்க:))
    மன்னிச்சிடுங்கண்ணா.

    ReplyDelete