Sunday, August 19, 2007

கொஞ்சமா நான் வெஜ் --- அடல்ஸ் ஒன்லி

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசை செல்லா ஒரு நான் வெஜ் பதிவு போட்டார் அவர் எப்படி அப்படி போடலாம் என்று கும்மு கும்மு என்று கும்மி கொண்டு இருக்கிறார்கள். அது அடங்கும் முன்பு நானும் ஒரு நான் வெஜ் பதிவு போட்டு அந்த சூட்டை இன்னும் கொஞ்சம் அதிகபடுத்தலாம் என்று முடிவு செய்து இந்த பதிவு. முட்டை மசலா

தேவையான பொருட்கள்:

முட்டை : 6
பெரிய வெங்காயம்: 4
பச்சை மிளகாய் : 3
பூண்டு :பெரியது 1
இஞ்சி: சிறிதாக ஒன்று
தக்காளி: 3
கொத்தமல்லி: தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள்: இரண்டு சூபுன்
உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை:
முதலில் வெங்காய்தை நறுக்கி கொள்ளவும், பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்டிக்கவும் (கிட்னியில் கல் உள்ளவர்கள் தவறாமல் செய்யவும்). பின் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். பூண்டு , இஞ்சை அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் வாணலியை சூடாக்கி ஆயில் விட்டு வெங்காயத்தை வதக்கவும் (சிறிது உப்பு போட்டு வதக்கினால் வெங்காயம் உடனே வதங்கி விடும்). பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு. அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுதை போடவும், கூடவே மிளகாய் தூள் ,பச்சை மிளகாய் எல்லாம் போட்டு சூடாக்கவும். பின் வேக வைத்த முட்டையை ஆங்காங்கே கீறி விட்டு
அதில் போடவும். மிளகாய் தூள் வாடை போகும் வரை சூடுபடுத்தவும்.
பின் அறிந்து வைத்த கொத்தமல்லியை போட்டு பறிமாறவும்.


டிஸ்கி: இப்ப தலைப்பு விளக்கம் சொல்லிவிடுகிறேன் முட்டை முழு நான் வெஜ் இல்லை அதனால்தான் கொஞ்சம் நான் வெஞ் என்றேன்.
பிறகு அடல்ஸ் ஒன்லி எதுக்கு என்றால் நான் அடல்ட்தானே நாம் மட்டுமே இதை சமைத்தேன் அதான் அடல்ஸ் ஒன்லி.

29 comments:

  1. நீங்க அடல்ட் தானே? அப்புறம் என்ன அடல்ஸ் ஒன்லி? அடல்ட் ஒன்லி ன்னு தானே போடணும்?

    ReplyDelete
  2. "Anonymous said...
    நீங்க அடல்ட் தானே? அப்புறம் என்ன அடல்ஸ் ஒன்லி? அடல்ட் ஒன்லி ன்னு தானே போடணும்?"

    ஆமாம் அனானி ஒரு சிறு பிழை நடந்து விட்டது:)

    ReplyDelete
  3. குசும்பன் said...

    நான் தனி ஆள் இல்லை.

    துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட 650 பேரின் ஆத்மா.

    ReplyDelete
  4. yenga oorla yellam Egg is vegetarian...

    ReplyDelete
  5. நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..

    ReplyDelete
  6. //நான் அடல்ட்தானே//

    உண்மையாகவா?


    கொஞ்சம் இருங்க.
    மெடிகிளைய்ம் பாலிசி எடுத்துட்டு வர்றேன்.

    ReplyDelete
  7. போங்காட்டம் -என் சமையல் குறிப்பை எப்படி திருடி இங்கே வெளியிடலாம்? நேத்து சமைக்கலாம்னு என் ச.கு. புத்தகம் காணலையேன்னு தேடிக்கிட்டிருந்தேன், அங்க இருக்காக்கும். சரி சரி பத்திரமா நீங்களே வச்சிக்கிடுங்க அது காணாமப் போச்சுன்னு சாக்கு சொல்லி நேத்து சமைக்கலை :-))

    ReplyDelete
  8. முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும் பிடிக்கும். இந்த அணுகுண்டு மட்டும் நமக்கு பிடிப்பதேயில்லை. கொடுத்தால் கஷ்டப்பட்டுதான் - அப்போதும் சுற்றுமுற்றும் பார்த்து முடிந்தால் மஞ்சளை வீசி விடுவேன். சத்தம் கேட்டால் - அதை கஷ்டப்பட்டுதான் லபக்குவேன்.

    ReplyDelete
  9. //yenga oorla yellam Egg is vegetarian...//
    அதானே முட்டை சைவம் என்று தெரியா இவரை எப்படி அடல்ட் நு ஒத்துக்க முடியும்!

    ReplyDelete
  10. தேவையான பொருட்கள்:

    முட்டை : 6
    ///


    படத்தில் 4 முட்டைதான் மீதி 2 முட்டையை விழுங்கிய கருங்காலி யாரு..??

    ReplyDelete
  11. பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்டிக்கவும் (கிட்னியில் கல் உள்ளவர்கள் தவறாமல் செய்யவும்).
    //

    தக்காளியில் கிட்னி கல் ஏற்படுத்துகின்ற மூலகூறுகள் அதிகம் அதனால தக்காளியை தவிர்க்க சொல்லுவாங்க

    விதையை சாப்பிட கூடாது போயி அடைச்சிக்கும் தண்டை சாப்பிட கூடாதுனு சொல்லிகிட்டு கல்லு பெருசாகும்னு சொல்லி சின்ன புள்ளையை குழப்ப கூடாது சரியா...

    ReplyDelete
  12. ஆமாம் அனானி ஒரு சிறு பிழை நடந்து விட்டது:)
    //

    யோவ் ரெண்டு முட்டையை முழுங்கிட்டு சிறு பிழையா தெரியுதாய்யா..???

    ReplyDelete
  13. நந்தா said...
    குசும்பன் said...

    நான் தனி ஆள் இல்லை.

    துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட 650 பேரின் ஆத்மா.


    எப்பங்க நான் சொன்னேன்:((

    இம்சை said...
    yenga oorla yellam Egg is vegetarian...

    எங்க ஊர்லையும் அப்படிதான்:))))

    முத்துலெட்சுமி said...
    நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..

    செய்துபார்த்து விட்டு சொல்லுங்க :)))

    ReplyDelete
  14. விஜயன் said...
    "கொஞ்சம் இருங்க.
    மெடிகிளைய்ம் பாலிசி எடுத்துட்டு வர்றேன். "

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((


    ஜெஸிலா said...
    போங்காட்டம் -என் சமையல் குறிப்பை எப்படி திருடி இங்கே வெளியிடலாம்? நேத்து சமைக்கலாம்னு என் ச.கு. புத்தகம் காணலையேன்னு தேடிக்கிட்டிருந்தேன், அங்க இருக்காக்கும். சரி சரி பத்திரமா நீங்களே வச்சிக்கிடுங்க அது காணாமப் போச்சுன்னு சாக்கு சொல்லி நேத்து சமைக்கலை :-))

    அட ராமா இன்னும் புக்கை பார்த்துதான் சமையலா:(((( உங்களை நம்பி எப்படி உங்க வீட்டுக்கு விருந்துக்கு வருவது? (கூப்பிடவே இல்லைன்னு நீங்க இங்க சொல்லிடாதீங்க)

    ReplyDelete
  15. குசும்பன் said...


    முத்துலெட்சுமி said...
    நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..

    செய்துபார்த்து விட்டு சொல்லுங்க :)))

    //

    பார்க்க மட்டும் செய்யுங்க த்தப்பி தவறி சாப்பிட்டிங்க அவ்வளவுதான் ரெண்டு ஸ்பூன் மிளாகாய் போட்டா "பின்னாடி" பிரச்சனை வரும் ஆமா :)

    ReplyDelete
  16. சுல்தான் said...
    "முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும் பிடிக்கும். இந்த அணுகுண்டு மட்டும் நமக்கு பிடிப்பதேயில்லை. "

    ஹாஹா:)))

    மின்னுது மின்னல் said...
    "படத்தில் 4 முட்டைதான் மீதி 2 முட்டையை விழுங்கிய கருங்காலி யாரு..??"

    அவரு பேரு காத கிட்ட கொண்டு வா சொல்றேன்....

    ReplyDelete
  17. நீங்க அடல்ட் தானே? அப்புறம் என்ன அடல்ஸ் ஒன்லி?


    ///

    நான் தனி ஆள் இல்லை.

    துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட 650 பேரின் ஆத்மா.

    ReplyDelete
  18. ஏய்யா எங்க மின்னல் காதை கடிச்ச நீ

    ReplyDelete
  19. எங்கே எனது பின்னுட்டம்

    வெளியிடாவிட்டால் கடும் பின்னுட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவித்து கொல்கிறேன்

    ReplyDelete
  20. சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொலை செய்ய இருக்கிறேன்.




    ஆவலாய் வந்து ஏமாந்து போன

    வரவனையான்

    ReplyDelete
  21. வரவனையான் said...
    "சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொலை செய்ய இருக்கிறேன்."

    நான் தனி ஆள் இல்லை, தோப்பு:)

    "ஆவலாய் வந்து ஏமாந்து போன
    வரவனையான்"

    :(((

    ReplyDelete
  22. //நான் தனி ஆள் இல்லை, தோப்பு:)//

    சீக்கிரமே எங்க தல அபி அப்பா உங்களுக்கு வைக்க போறாரு ஆப்பு ;)

    ReplyDelete
  23. நல்ல ரெசிப்பி...

    மைண்ட்ல வெச்சிருக்கேன்.

    யூஸ் பண்ணிக்கிறேன் :)

    ReplyDelete
  24. இன்னும் எத்தன பேருய்யா இப்டி கெளம்பி இருக்கீங்க?

    ஏமாந்து போன எல்லோருடைய வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாது ஆமா..

    :)

    ReplyDelete
  25. வெட்டிப்பயல் said...
    "சீக்கிரமே எங்க தல அபி அப்பா உங்களுக்கு வைக்க போறாரு ஆப்பு ;)"

    அவர நம்பிதான் நான் தோப்பு என்றேன்:)

    ReplyDelete
  26. அரை பிளேடு said...
    "நல்ல ரெசிப்பி...

    மைண்ட்ல வெச்சிருக்கேன்.

    யூஸ் பண்ணிக்கிறேன் :)"

    தங்கள் வருகைக்கு நன்றி

    விதி வலியது:)))))

    ReplyDelete
  27. தஞ்சாவூரான் said...
    "இன்னும் எத்தன பேருய்யா இப்டி கெளம்பி இருக்கீங்க?

    ஏமாந்து போன எல்லோருடைய வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாது ஆமா..
    :)"

    என்னங்க நம்ம ஊரு ஆளு நீங்க ஏமாந்து போகலாமா? உங்களுக்காக ஒரு புல் நான்-வெஜ் பதிவு போட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  28. சும்மா அதிருதுல்ல நல்லா பாருங்க ப்பா நான் என்ன எழுதி இருந்தேன் செய்து பாக்கிரேன்னு தானே சாப்பிடறேன்னு சொல்லலயே :)

    ReplyDelete
  29. ஏமாத்திட்டீங்களே.. (என்ன இருந்தாலும் பிரஷ் படங்கள் மாதிரி வராது.. ஹி... ஹி..)

    ReplyDelete