Sunday, August 19, 2007

பாலபாரதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா--- போட்டிக்கு

டாக்டர் பட்டம் நம்ம ஷில்பா செட்டிக்கு முதல்ல கொடுத்தாங்கபிறகு இப்ப நம்ம விஜய்க்கு, சங்கருக்கு இப்படி ஊர்ல இருக்கிற வீனாபோன பசங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் பொழுது நம்ம பாலபாரதிக்கு ஏன் கொடுக்க கூடாது? அப்படி எந்த விதத்தில்நம்ம பா.பா குறைஞ்சு போய்விட்டார்.(இதுக்கு ஏதும் உள் குத்து எல்லாம் கிடையாதுங்க).

எந்த வித்திலும் நம்ம தல விஜயைவிடவோ, அல்லது ஷில்பாவை விடவோகுறைந்தவர் அல்ல. அதற்காக அமீரக பா.க.ச சார்பில் டாக்டர் பட்டம் கொடுப்பது என்றுமுடிவு செய்யபட்டு உள்ளது.

இன்று மாலை ஆசிப் மீரான் முன்னிலையில், அபி அப்பா மேற்பார்வையில் திருமதி .டாக்டர் டெல்பின் அவர்கள் பட்டம் கொடுக்க, டாக்டர் பட்டம் பெறுகிறார் நம் பா.பா.

இந்த பட்டத்தை கொடுப்பது நிஜ டாக்டர் ஆகையால் இது டாக்டர் பட்டம்தானே?


நாங்கள் ஒரு பட்டம் அல்ல இரண்டு பட்டம் கொடுக்கிறோம் தல சந்தோசமா வச்சிக்க தல!!! வச்சிக்கிட்டு சும்மா ஜொய்ய்ய்ய்ன்னு பட்டத்தை விடு தல.
தொடரும்....

19 comments:

  1. குசும்பன் என்ன குசும்பு இது.

    திரு.டெல்பின்..இல்லை அவங்க திருமதி.டெல்பின்.

    அவங்க வீட்டுக்காரரு போலிஸ் அதிகாரி என்பதை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்..

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  2. இங்கிலீசுல பட்டத்துக்கு என்னன்னு எதுக்குய்யா கேட்ட??..

    அப்போ இனிமே டாக்டர் தல ன்னு கூப்பிடலாமா

    ReplyDelete
  3. அரவிந்தன் said...
    "குசும்பன் என்ன குசும்பு இது."

    கும்பகோணம் குசும்பு:)))

    "திரு.டெல்பின்..இல்லை அவங்க திருமதி.டெல்பின். "

    திருத்திவிட்டேன்:)

    "அவங்க வீட்டுக்காரரு போலிஸ் அதிகாரி என்பதை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.."

    நல்லா இருங்கப்பு:))

    ReplyDelete
  4. அய்யனார் said...
    இங்கிலீசுல பட்டத்துக்கு என்னன்னு எதுக்குய்யா கேட்ட??..

    ம்ம்ம் பட்டத்துக்கு இளவரசனாகலாம் என்று? வேற எதுக்குய்யா கேட்டேன் பட்டம் இமேஜ் தேடதான்...

    அப்போ இனிமே டாக்டர் தல ன்னு கூப்பிடலாமா

    இன்னும் நீ கூப்பிட ஆரம்பிக்கலயா????

    ReplyDelete
  5. உங்க பதிவை படித்து சிரித்ததை விட அய்யனார் கேள்விக்கும் அதற்கான உங்க பதிலுக்கும் தான் அதிகமா சிரித்தேன் :-)). அப்ப இத்தனை நாள் டெல்பின் விட்ட பட்டத்தை இரவல் வாங்கி பாலபாரதிக்கு தர போறீங்களா? பட்டம் கிழிஞ்ச பட்டமில்லையே :-))?

    ReplyDelete
  6. ஜெஸிலா said...
    "உங்க பதிவை படித்து சிரித்ததை விட அய்யனார் கேள்விக்கும் அதற்கான உங்க பதிலுக்கும் தான் அதிகமா சிரித்தேன் :-))"

    :))))))))))))

    அப்ப இத்தனை நாள் டெல்பின் விட்ட பட்டத்தை இரவல் வாங்கி பாலபாரதிக்கு தர போறீங்களா? பட்டம் கிழிஞ்ச பட்டமில்லையே :-))?

    பட்டொளி வீசி பறக்கும் புதிய பட்டமுங்கோ!!!!

    ReplyDelete
  7. அடப்பாவி.. நடுராத்திரி 12.41 க்கு இப்டி சத்தம் போட்டு சிரிக்க வெச்சி அம்மாட்ட டோஸ் வாங்க வெச்சிட்டியே! நல்லாயிரு!! :))

    (குசும்பா உன்னால மட்டும் எப்டி முடியுது?)

    ReplyDelete
  8. பட்டம் நல்லா இருக்கு அதிலையும்
    பாபாவை
    தொடாதே அபாயம்

    ரவுண்டு கட்டி அடி அபாயம் இல்லைனு அது சூப்பர் :)

    ReplyDelete
  9. ********************************
    இப்படி ஊர்ல இருக்கிற வீனாபோன பசங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் பொழுது நம்ம பாலபாரதிக்கு ஏன் கொடுக்க கூடாது?
    ********************************

    பாலா பாய வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணிடலயே. . . .?

    ReplyDelete
  10. குசும்பன் நானும் பா.க.ச போட்டிக்கு பதிவு போட்ருக்கேன். போட்டில எப்படி சேர்ரது என்ன பண்றதுன்னு தெரியல கொஞ்சம் தகவல் தர முடியுமா.

    அப்படியே பதிவு எப்படீன்னு சொல்லுங்க.

    http://sirippoo.blogspot.com/2007/08/blog-post.html

    ReplyDelete
  11. குசும்பா,

    சூப்பரு......:)

    ReplyDelete
  12. வெற்றி said...
    :-))

    நன்றி:))


    delphine said...
    "இரவும் பகலும் கண்விழித்து வாங்கிய பட்டம் குசும்பன்..."

    ஒரு பட்டம் வாங்க இவ்வளோ நேரம் ஆகுமா?

    "இப்படி பட்டம் விடுகிறீங்களேஎ! நியாயமா? "

    அதுசரி வாங்கிய பட்டதை விடமா என்ன செய்வது?

    ReplyDelete
  13. காயத்ரி said...
    அடப்பாவி.. நடுராத்திரி 12.41 க்கு இப்டி சத்தம் போட்டு சிரிக்க வெச்சி அம்மாட்ட டோஸ் வாங்க வெச்சிட்டியே! நல்லாயிரு!! :))

    (குசும்பா உன்னால மட்டும் எப்டி முடியுது?)


    டோஸ் மட்டும்தானா:(((((

    ReplyDelete
  14. குசும்பன் பா.க.ச போட்டியை பற்றிய பதிவு.

    http://whatiwanttosayis.blogspot.com/2007/08/blog-post.html

    ReplyDelete
  15. மின்னுது மின்னல் said...
    பட்டம் நல்லா இருக்கு அதிலையும்
    பாபாவை
    தொடாதே அபாயம்

    ரவுண்டு கட்டி அடி அபாயம் இல்லைனு அது சூப்பர் :)

    :)))))

    ReplyDelete
  16. வெங்கட்ராமன் said...
    "பாலா பாய வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணிடலயே. . . .? "

    கமெடிய தவிர வேறு எதுவும் செய்யல:)))))

    ReplyDelete
  17. கோபி(Gopi) said...
    :-))

    வாங்க கோபி நான் கூட நீங்க என் தம்பி பொறி கோபி என்று நினைத்து விட்டேன்:)))


    இராம் said...
    குசும்பா,

    சூப்பரு......:)


    நன்றி தல:)))

    ReplyDelete