Monday, February 15, 2010

புத்தகம் எழுதிய பதிவர்கள் யாரும் படிக்கவேண்டாம்!

1)புருனோ எழுதிய புத்தகம்?
அ) கொக்கு காய்ச்சல்
ஆ) குதிரைக் காய்ச்சல்
இ) பன்றிக் காய்ச்சல்
ஈ) ஆடு காய்ச்சல்

2)நர்சிம் எழுதிய புத்தகம்?
அ) அய்யனார் கமா
ஆ)காத்தவராயன் புல்ஸ்டாப்
இ) முனியாண்டி கொட்டேசன்
ஈ) அய்யனார் கம்மா

3)அய்யனார் எழுதிய புத்தகங்களில் ஒன்று?
அ) உரையாடலினி
ஆ) ஓட்டவாயினி
இ) ஊத்தவாயினி
ஈ) நாரவாயினி

4)அய்யனார் எழுதிய புத்தகங்களில் இதுவும் ஒன்று?
அ) கும்பலின் இசை
ஆ)தனிமையின் இசை
இ) புல்லாங்குழல் இசை
ஈ) கித்தார் இசை

5)கேபிள் சங்கர் எழுதிய புத்தகம்?
அ) புளியம் ட்ரீயும் ஒரு கல்ப்பு பட்டை சாராயமும்
ஆ) கோக்கனட் ட்ரீயும் இரண்டு மக் கள்ளும்
இ) பணை ட்ரீயும் ஒரு சட்டி சுண்ட கஞ்சும்
ஈ) லெமன் ட்ரீயும் ரெண்டு சாட் டக்கிளாவும்

6)பரிசல் எழுதிய புத்தகம்?
அ) கணக்கு நோட்டும் வாத்தியார் பொண்ணும்
ஆ) வீட்டு பாட குறிப்பும் பக்கத்து வீட்டு சிட்டு காதல் மறுப்பும்
இ) பால்குறிப்பும் பால்காரி காதல் மறுப்பும்
ஈ) டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்

7)தமிழ்நதி அவர்கள் எழுதிய புத்தகம்?
அ) கானல் வரி
ஆ) கோனல் வரி
இ) வருமான வரி
ஈ) எதுவும் இல்லை

8)சுப்பையா வாத்தியார் எழுதிய புத்தகம்?
அ) செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள்
ஆ) செட்டிநாட்டு குழிபணியார வாசனைக் கதைகள்
இ)செட்டிநாட்டு சிக்கன் கிரேவி வாசனைக் கதைகள்
ஈ) செட்டிநாட்டு காரக்குழம்பு வாசனைக் கதைகள்

9)வா.மணிகண்டன் எழுதிய புத்தகம்?
அ) கண்ணாடியில் ஓடும் நிழல்
ஆ)மூக்கு கண்ணாடியில் படும் வெயில்
இ) கண்ணாடியில் நகரும் வெயில்
ஈ) கண்ணாடியில் படுத்திருக்கும் வெயில்

10)லக்கி எழுதிய புத்தகம்?
அ) போண்டா மணி
ஆ) குள்ள மணி
இ) விஜயகாந்த்
ஈ)உசிலமணி

11)மாதவராஜ் தொகுத்த வலைப்பதிவர்களின் கவிதை புத்தகம்?
அ)கிளிஞ்சல்கள்
ஆ) புறாஞ்சல்கள்
இ) காக்காஞ்சல்கள்
இ) குருவிஞ்சல்கள்

12)மாதவராஜ் தொகுத்த வலைப்பதிவர்களின் சிறுகதை புத்தகம்?
அ) மரப்பாச்சியின் சில ஆடைகள்
ஆ) கும்மாச்சியின் சில உள் ஆடைகள்
இ) மரப்பாச்சியின் பல ஆடைகள்
ஈ) எதுவும் இல்லை (சாய்ஸை சொன்னேன்பா)

டிஸ்கி: பதில் தெரியாதவர்களுக்கு அண்ணன் உண்மை தமிழன் எழுதிக்கொண்டு இருக்கும் குறும்படத்தை 7 மணி நேரம் எடுப்பது எப்படி என்ற புத்தகம் அனுப்பப்படும்!

2) பதில் தெரிஞ்சவங்களுக்கு சஞ்சய் எழுதிக்கொண்டு இருக்கும் சிறுகதை தொகுப்பு வழங்கப்படும்

3) பதிலே சொல்லாமல் போறவங்களுக்கு இரண்டும் அனுப்பப்படும்.

58 comments:

  1. ஹஹஹஹ இனி எந்த பதிவர்களாவது புத்தம் வெளியிடுவாய்ங்க???
    ஏன் குசும்பா இந்த கொலை வெறி???

    ReplyDelete
  2. ஏ அய்யா ராசா, ஏம்டே இம்புட்டுக் கொலவெறி?

    ReplyDelete
  3. கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  4. அனைத்து புத்தகங்களும் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும். அப்படியே எனக்கு அனைத்து புத்தகங்களின் பார்சல் ஒன்று பதிவு தபாலில் அனுப்பிவைக்கவும்.

    ReplyDelete
  5. யப்பே.... முடியல....

    அல்லாத்துக்கும் சரியா ஆன்சர் சொன்னா என்ன மாம்ஸ் கிடைக்கும்...

    :-)

    ReplyDelete
  6. \\இ) பால்குறிப்பும் பால்காரி காதல் மறுப்பும்\\

    சூப்பரு ;))

    ReplyDelete
  7. //முனியாண்டி கொட்டேசன்//

    super boss

    ReplyDelete
  8. புத்தகத்தை படிக்கிறது போதாதுன்னு இது வேறயா குசும்பா?

    ReplyDelete
  9. யோவ் இனிமே உம்ம பதிவுக்கு ஆஃபீஸ் நேரத்திலே வர மாட்டேன்

    ReplyDelete
  10. எப்படி பதில் சொன்னாலும் தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ணியாச்சா.

    கலக்கல் பாஸ்.

    ஆமா உங்க புத்தகத்தை லிஸ்டில் காணோம்.

    ReplyDelete
  11. /ஆ) செட்டிநாட்டு குழிபணியார வாசனைக் கதைகள்
    இ)செட்டிநாட்டு சிக்கன் கிரேவி வாசனைக் கதைகள்
    ஈ) செட்டிநாட்டு காரக்குழம்பு வாசனைக் கதைகள்/

    :-)))

    ReplyDelete
  12. :))) கலக்கல்

    வினவு புத்தகத்தை சேர்க்காமல் விட்டது ஏன் குசும்பரே?

    ReplyDelete
  13. சமையல் புத்தகம் கோல புத்தகங்களை பற்றி எழுதாதது ஏனோ?

    குசும்பன் ஒரு ஆனாதிக்காவாதி என்பது இந்த பதிவிலிருந்து தெரிகிறது

    ReplyDelete
  14. எப்படி பதில் சொன்னாலும் தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ணியாச்சா.

    கலக்கல் பாஸ்.

    ஆமா உங்க புத்தகத்தை லிஸ்டில் காணோம்.//


    :)))கன்னாபின்னா ரிப்பீட்டு

    ReplyDelete
  15. பதில் தெரிஞ்சவங்களுக்கு சஞ்சய் எழுதிக்கொண்டு இருக்கு சிறுகதை தொகுப்பு வழங்கப்படும்//

    எனக்கு பதில் தெரியுமே.. அப்போ எவ்ளோ பெரிய தண்டனை.. டமால்.!

    ReplyDelete
  16. நான் இந்த பக்கத்துக்கு வரவேயில்ல, நான் குசும்பனோட பதிவுகள படிச்சதில்ல, படிச்சுட்டும் இல்ல, படிக்கப் போறதுமில்ல. அதுனால எனக்கு தண்டணையில இருந்து விலக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இதையும் மீறி சஞ்செய் எழுதுற சி.க தொகுப்ப அனுப்சு உங்கூட படிச்ச நண்பண கொன்ன குத்தத்துக்கு ஆளாகிறாத.

    ReplyDelete
  17. தம்பீ..

    மறக்காம இருக்குறதுக்கு நன்னி..!

    இனி பதிவர்கள் யார் புத்தகம் எழுதினாலும் உனக்குக் கொஞ்சம் கமிஷன் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண வைக்கலாம்..!

    ஓஹோன்னு ஓடும் எங்க பொழைப்பு..!

    ReplyDelete
  18. //) பதில் தெரிஞ்சவங்களுக்கு சஞ்சய் எழுதிக்கொண்டு இருக்கு சிறுகதை தொகுப்பு வழங்கப்படும்//

    தாங்க முடியலை :)

    ReplyDelete
  19. பதில் தெரியும் ந்னு சொன்னா தான் சேஃப் .. ஏன்னா சஞ்சய் தான் புக் போடமாட்டாராமே.. ;)

    கலக்கலா இருக்கு குவிஸ்..

    ReplyDelete
  20. சென்ஷி இந்தவயசிலேயேவா?:((

    நன்றி பாலாஜி

    நன்றி பிரதாப்

    வேலன் அண்ணாச்சி இது பாசம் அண்ணாச்சி பாசம்!
    நாட் கொலவெறி:)

    நன்றி நர்சிம்

    நன்றி மஞ்சூர் ராசா

    நன்றி அகல்விளக்கு, உங்களுக்கு பதில் பதிவில் சேர்த்து இருக்கேன்:)

    கோபிநாத் எது? பால்காரியா?

    நன்றி கலகலப்ரியா

    நன்றி பாஸ்கி

    நன்றி தண்டோரா அண்ணாச்சி, படிச்சா டெஸ்ட் எழுதுவதுதானே முறை:)

    நன்றி அக்பர், நான் மதன் என்ற புனைப்பெயரில் வந்தார்கள் வென்றார்கள்
    புக்கு எழுதியிருக்கேன் அதை எல்லாம் வெளியில் சொல்லமுடியுமா பாஸ்:)

    நன்றி ரவிச்சந்திரன்

    ஏலேய் ஆதவா உனக்கு நன்றி கிடையாதுலே!
    வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்க
    நான் என்ன லூசா? அப்ப சட்டைக்குள் விட்டுக்க என்று சொன்ன
    படுவா ராஸ்கோல்ஸ் பிச்சு பிச்சு! என்ன கேட்ட?
    "வினவு புத்தகத்தை சேர்க்காமல் விட்டது ஏன் குசும்பரே?"
    பே பே பே பெப்ப்பே:(

    நன்றி Gulf Tamilan

    நன்றி அசோக்

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி ஆதி

    சோசப்பு நாலு பேர் நாசமாக போக உன்னை கொல்லுவதில்
    தப்பே இல்ல:)

    உ.த உங்கள் குறும்படத்தைதான் மறக்கமுடியுமா?

    சின்ன அம்மிணி அவரு எழுதிய சிறுகதையை படிச்சதிலிருந்து
    என்னால தூங்க முடியல நீங்க வேற:)

    சஞ்சய் புக்கு போட மாட்டாராமா? ஆமா அவரு புக்கை
    யாரு போடுறேன் என்று இவரிடம் கேட்டாங்களாமா?

    ReplyDelete
  21. பட்டைய கிளப்பீட்டீங்க :)))))))

    வாழ்த்துகள்

    ReplyDelete
  22. கொலை வெறித்தாக்குதலுக்கு வாழ்த்துகள், தொப்பி தொப்பி

    ReplyDelete
  23. நான் இந்த ஆட்டைக்கு வரல!

    ReplyDelete
  24. குசும்பனா??அதுயாரு?? அவர் பதிவெல்லாம் நான் படிச்சதே கிடையாது.

    ReplyDelete
  25. அடப்பாவி.. அடப்பாவி.. மனுஷனா மாமா நீ? :)))))

    முதல் பதில் படிக்கும் போது ஆரம்பிச்சது.. இப்போ வரைக்கும் சிரிச்சிட்டே இருக்கேன்.. நிஜமாவே வயிறு வலிக்கிது.. அவ்வ்வ்வ்வ்வ்..

    என்னை எதுக்குய்யா சிங்கங்களோட குகைக்குள்ள தள்ளி விடறிங்க.. இதுக்காகவே நான் ஒரு கொலைவெறிப் பதிவுப் போடப் போறேன்.. அதுக்கு குசும்பனே காரணம்.. :))

    ReplyDelete
  26. அய்யய்யோ... எனக்கு ரெண்டு கண்ணும் இந்த பதிவு பாத்தா மட்டும் தெரிய மாட்டேங்குதே ஏன் ?

    ReplyDelete
  27. சிரிச்சி மாளல...


    நீங்க மதன்ங்கற பேர்ல எழுதுன வந்தார்கள் வென்றார்களும் படிச்சிருக்கேன், அப்புறம் சுஜாதாங்கற புனைப்பேர்ல எழுதுன ஏன் எதற்கு எப்படிங்கற புக்கும் படிச்சிருக்கேன். ஏன் நீங்க இப்பல்லாம் தொடர்ந்து எழுதுறதில்ல?

    ReplyDelete
  28. தலைப்புகள் அனைத்தும் அருமை..மற்ற பதிவர்களுக்கு பின்னாளில் பயன்படும்..

    ReplyDelete
  29. //பதில் தெரிஞ்சவங்களுக்கு சஞ்சய் எழுதிக்கொண்டு இருக்கும் சிறுகதை தொகுப்பு வழங்கப்படும்//

    இதுக்கு பதிலா தூக்குதண்டனையே குடுங்க.. சந்தோஷமா ஏத்துக்கறேன்

    ReplyDelete
  30. //பதிலே சொல்லாமல் போறவங்களுக்கு இரண்டும் அனுப்பப்படும். //

    avvvvvvvvvvvvvvvvv!

    ReplyDelete
  31. முடியல சத்தியமா முடியல..இனிமே யாராவது புத்தகம் எழுதுவாங்களான்னு சந்தேகமா இருக்கு...

    ReplyDelete
  32. //சென்ஷி said...முடியலை//

    // குசும்பன் said... சென்ஷி இந்தவயசிலேயேவா?:(( //

    தம்பீ.. குசும்பா... இது கொஞ்சமில்ல.. அதிகமா ஓவரு! :(

    ReplyDelete
  33. எனக்கு எதுவும் வேண்டாம் பாஸ்.. ஆளை விடுங்க படிச்சு படிச்சு சிரிச்சேன்

    ReplyDelete
  34. ஹா! ஹா!!..நல்ல பதிவு..கலக்குறீங்க! இந்த குசும்பு இல்லைன்னா குசும்புஒன்லி ன்னு ப்ளாக் நடத்த முடியாதே!!

    ReplyDelete
  35. குசும்பன் எழுதப்போகும் புத்தகம்:-

    1) வலைப்பதிவர்களை கலாய்ப்பது எப்படி?

    2) பிரபலங்களை கலாய்ப்பது எப்படி?

    3) வலிக்காமலே ஒருத்தனை அடிச்சுக் காயப்போடுவது எப்படி?

    4) அடி வாங்கினவனே அடிச்சவனைப் பாராட்ட வைப்பது எப்படி?

    5) மேலே கண்ட நான்கும்.

    ReplyDelete
  36. :-))))


    // பரிசல்காரன் said...
    குசும்பன் எழுதப்போகும் புத்தகம்:-//

    வல்லவனுக்கு வல்லவன்?

    ReplyDelete
  37. அய்யோ, சிரிச்சு சிரிச்சு முடியல! வெரி ஆஃப் த டூ மச்!

    ReplyDelete
  38. laugh riot! ஆனாலும் ஒரு ம‌னுச‌னுக்கு இவ்வ‌ள‌வு குசும்பு ஆகாதய்யா..

    ReplyDelete