Monday, December 28, 2009

நாட்டாமைகள் அங்கீகார ஆணையம்



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் வலைப்பதிவு உள்ள அனைவரும் நாட்டாமைகள் ஆகலாம் என்ற போக்கு சமீப காலமாக அதிகரித்துவருவதால் வரும் ஆண்டு முதல் நாட்டாமைகள் அங்கீகார ஆணையம் என்றுஉருவாக்கப்படுகிறது சாமீயோவ்...டும் டும் டும்


பொதுசனம்: என்னது நா.அ.ஆ வா? அது எதுக்கு அதனால் என்ன பயன்?


நா.அ.ஆ குழு: சமீப காலமாக இனையத்தில் ஏதும் பிரச்சினை என்றால் குபீர் குப்பம் போல் குபீர் குபீர் என்று நாட்டாமைகள் தோன்றுவதால் யார் திறமையான நாட்டாமை? யார் சொல்லும் தீர்புக்கு 18 பட்டியும் கட்டுபடனும் என்ற குழப்பங்கள் நிலவுகிறது, ஆகவே நாட்டாமை ஆகவிருப்பம் இருப்பவர்கள், எங்கள் அங்கீகார ஆணையம் மூலம் அங்கிரீக்கப்பட்டவராக இருப்பின் அந்த தீர்ப்பில் ஒரு நியாயம் இருக்கும், மக்களுக்கும் அதனால் யார் தீர்ப்பை ஏற்பது என்ற குழப்பம் இருக்காது. இப்படி பலவிதமான பயன்கள் எங்கள் நா.அ.ஆவினால் ஏற்படும்.


பொதுசனம்: நா.அ.ஆ வினால் யார் யார் எல்லாம் அங்கிகாரம் பெறலாம் அதுக்கு அடிப்படை தகுதி என்ன?


நா.அ.ஆ குழு: முதலில் வலைப்பதிவு இருப்பது ஒரு பேசிக் தகுதியாக இருந்தாலும் அதுமட்டுமே தகுதியாகிவிடாது, ஆகவே விருப்பம் உள்ளவர்கள் அப்ளிகேசன் அனுப்பினால் அவர்களின் வயது, பொறுமை, ஆகியவற்றை சோதித்து பார்த்துவிட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுப்போம். பின்அவர்கள் நாட்டாமைகள் ஆகலாம்.


பொதுசனம்: என்னவிதமான பயிற்சி?


நா.அ.ஆ குழு: முதலில் அவர்களுக்கு எங்கிருந்து பிரச்சினை ஆரம்பம் ஆனது பிரச்சினையின் மையப்புள்ளி என்ன என்பதை கண்டுபிடிக்க பயிற்சி வழங்குவோம்,அவர்கள் அதில் நிபுணர் ஆனபிறகு சம்மந்தப்பட்ட பதிவுகளில் போய் முதலில் ஆஜர் ஆகி இவர் தரப்பு வாதங்களை எடுத்துவைக்க ட்ரைனிங் கொடுப்போம். படிபடியான பயிற்சிகளை முடித்தபின்பே அவர்கள் தீர்ப்பு வழங்கும் நாட்டாமைகளாக உலா வருவார்கள்.


பொதுசனம்: அவர்களுக்கு வேறு என்ன தகுதிகள் எல்லாம் இருக்கனும்?


நா.அ.ஆ: முக்கியமாக மொக்கை பதிவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அவரை சிரிப்பு போலீஸ் என்பது போல சிரிப்பு நாட்டாமையாக ஆக்கிடுவார்கள், ஆகவே அவர் சீரியஸ் பதிவராக இருக்கனும், பினா.வானாவாக இருப்பது கூடுதல் தகுதி.


பொதுசனம்: பலர் இதில் சேர்ந்தால் அவர்கள் அனைவரும் நாட்டாமைகள் ஆகிவிடுவார்கள் ஒரு பிரச்சினைக்கு எப்படி பல நாட்டாமைகள் இருக்கமுடியும்?


நா.அ.ஆ: பிரச்சினை என்று வந்ததும் அங்கு முதலில் யார் சொம்பு, துண்டோடு போய் ஆஜர் ஆகிவிடுகிறார்களோ அந்த நாட்டமையே இறுதி தீர்பு சொல்வார், மற்ற நாட்டாமைகள் அதில் குறிக்கிடமாட்டார்கள்.இதுபோல் பல விதிகள் இருக்கின்றன.


பொதுசனம்: வேறு ஏதும் சர்டிபிகேட் கோர்ஸ் எல்லாம் இருக்கா?


நா.அ.ஆ: பிரச்சினைக்கு தகுந்தமாதிரி சர்டிபிகேட் வழங்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறோம், இப்பொழுது "நற்குடி" சர்டிபிகேட் வழங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம்.


பொதுசனம்: மக்களுக்கு ஏதும் புத்தாண்டு மெசேஜ் இருக்கா?
நா.அ.ஆ: குடி குடியை கெடுக்கும் "நற்குடி" பதிவரின் பெயரை கெடுக்கும். நா.அ.ஆவில் சேருவோம் நாடு முன்னேற நல்ல தீர்பை வழங்குவோம்.
டிஸ்கி: பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையா யூஸ் செஞ்சு வரும் சொம்போடு வகுப்புக்கு வரவும்.

155 comments:

  1. நான் இங்க துண்டைப் போட்டுட்டேன்... ;-))))

    ReplyDelete
  2. என்ன கொடும சரவணன் இது,,, :)

    ReplyDelete
  3. //பொதுசனம்: அவர்களுக்கு வேறு என்ன தகுதிகள் எல்லாம் இருக்கனும்?
    நா.அ.ஆ: முக்கியமாக மொக்கை பதிவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அவரை சிரிப்பு போலீஸ் என்பது போல சிரிப்பு நாட்டாமையாக ஆக்கிடுவார்கள், ஆகவே அவர் சீரியஸ் பதிவராக இருக்கனும், பினா.வானாவாக இருப்பது கூடுதல் தகுதி.//

    :)

    //நா.அ.ஆ: குடி குடியை கெடுக்கும் "நற்குடி" பதிவரின் பெயரை கெடுக்கும். நா.அ.ஆவில் சேருவோம் நாடு முன்னேற நல்ல தீர்பை வழங்குவோம்.//

    "நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா ?

    ReplyDelete
  4. யாரந்தப் பொதுசனம்... அவருக்கு ப்ளாக் இருக்கா...

    ReplyDelete
  5. //"நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா//

    ஆசை..அதே டவுட்டுதான் எனக்கும்

    ReplyDelete
  6. இந்த பஞ்சாயத்துக்கு துண்டுதான் போடணுமா? இல்ல பர்தா போடணுமா?

    ReplyDelete
  7. //முதலில் அவர்களுக்கு எங்கிருந்து பிரச்சினை ஆரம்பம் ஆனது பிரச்சினையின் மையப்புள்ளி என்ன என்பதை கண்டுபிடிக்க பயிற்சி வழங்குவோம்,அவர்கள் அதில் நிபுணர் ஆனபிறகு சம்மந்தப்பட்ட பதிவுகளில் போய் முதலில் ஆஜர் ஆகி இவர் தரப்பு வாதங்களை எடுத்துவைக்க ட்ரைனிங் கொடுப்போம். படிபடியான பயிற்சிகளை முடித்தபின்பே அவர்கள் தீர்ப்பு வழங்கு நாட்டாமைகளாக உலா வருவார்கள்.//

    கெக்கே பிக்கே கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருக்கேன் பாஸ்!

    ReplyDelete
  8. நாட்டாமை நாட்டாமைன்னு சொல்றீயளே.. அது எந்த நாட்டு ஆமைன்னு சொல்லவே இல்லியே பாஸ்?

    ReplyDelete
  9. @ கார்க்கி

    சூப்பரப்பு.....

    ReplyDelete
  10. இங்கே ஆணையம் என்பது ஆண்+ஐயம் என்பதாக சிலர் அர்த்தம் சொல்கிறார்களே.. அபப்டியென்றால் நீங்க ஒரு ஆணாதிக்கவாதியா? உங்க மதம் என்ன சொல்கிறது? பெண்கள் நாட்டாமை ஆகவே முடியாதா? வீட்டாமையோடு நிற்க வேண்டுமா?

    ReplyDelete
  11. //அது எந்த நாட்டு ஆமைன்னு சொல்லவே இல்லியே பாஸ்//

    சுனைனான்னா..ச்சே.. மிஸ்டேக் ஆயிடுச்சு...

    சொல்லலைன்னா ஃபெயில்தானே? எப்படி பாஸ்ன்னு சொல்றீங்க?

    ReplyDelete
  12. அன்புடையீர்,
    உங்கள் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எங்களிடம் அங்கீகரம் வாங்காத எந்த ஆணையமும் சட்டவிரோதமானது. எனவே எங்கள் அங்கீகாரத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கவும்.
    இப்படிக்கு
    ஆணைய அங்கீகார ஆணையம்.

    ReplyDelete
  13. // பிரச்சினை என்று வந்ததும் அங்கு முதலில் யார் சொம்பு, துண்டோடு போய் ஆஜர் ஆகிவிடுகிறார்களோ அந்த நாட்டமையே இறுதி தீர்பு சொல்வார், மற்ற நாட்டாமைகள் அதில் குறிக்கிடமாட்டார்கள்.இதுபோல் பல விதிகள் இருக்கின்றன//

    எப்பிடிய்யா இது.....


    எங்க கேப் கிடைச்சாலும் சைக்கிள் ஓட்டுறே..


    ரசிச்சேன்

    சாரி விழுந்து விழுந்து சிரிச்சேன் (அடி ஓண்ணும் படலை... ஏன்னா நான் விழுந்தது பக்கத்துல உள்ள பிலிப்பைனி மேல)

    :))))))))))))

    ReplyDelete
  14. //தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் வலைப்பதிவு உள்ள அனைவரும் நாட்டாமைகள் ஆகலாம் என்ற போக்கு சமீப காலமாக அதிகரித்துவருவதால் வரும் ஆண்டு முதல் நாட்டாமைகள் அங்கீகார தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் வலைப்பதிவு உள்ள அனைவரும் நாட்டாமைகள் ஆகலாம் என்ற போக்கு சமீப காலமாக அதிகரித்துவருவதால் வரும் ஆண்டு முதல் நாட்டாமைகள் அங்கீகார ஆணையம் என்றுஉருவாக்கப்படுகிறது சாமீயோவ்...டும் டும் டும் என்றுஉருவாக்கப்படுகிறது சாமீயோவ்...டும் டும் டும்//

    இந்த‌ ஆணையத்துக்கு எந்த‌ நாட்ட‌மை அங்கீகார‌ம் கொடுத்த‌து சாமீ

    ReplyDelete
  15. //(அடி ஓண்ணும் படலை... ஏன்னா நான் விழுந்தது பக்கத்துல உள்ள பிலிப்பைனி மேல)
    //

    பிலிப்பைனி சரி கண்ணா.. அது ஆணா பொண்ணான்னும் சொல்லிடு..

    ReplyDelete
  16. @ சென்ஷி,

    //பிலிப்பைனி சரி கண்ணா.. அது ஆணா பொண்ணான்னும் சொல்லிடு..//

    யோவ் ..புரியாத ஆளா இருக்கியே...

    ஆணா இருந்தா போய் விழ எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?

    ReplyDelete
  17. ஆ(னா)ணாலும் நீ ரொம்ப அப்பாவியாச்சேன்னு கேட்டுட்டேன்ய்யா :)

    ReplyDelete
  18. //பிலிப்பைனி சரி கண்ணா.. அது ஆணா பொண்ணான்னும் சொல்லிடு..//


    என்ன‌ கொடுமை சென்ஷி இது

    பிலிப்பைனி ஆண் தான் பிலிப்பினா தான் பொண்ணு இன்னும் பேசிக்கே கோர்ஸே முடிக்க‌லையா

    ReplyDelete
  19. //ஆ(னா)ணாலும் நீ ரொம்ப அப்பாவியாச்சேன்னு கேட்டுட்டேன்ய்யா :)//


    அப்பாவி இல்ல பாவி

    ReplyDelete
  20. யோவ் கரிசலு,


    உங்க முதலாளி இப்ப எங்கய்யா இருக்கான்...?

    ReplyDelete
  21. எவன் டா மாட்டுவான்னு ரூம் போட்டு வெயிட் பண்ண மாதிரி இருக்கு இந்தப் பதிவு. நடத்துங்க :-)

    ReplyDelete
  22. //உங்க முதலாளி இப்ப எங்கய்யா இருக்கான்...?//

    பிலிப்பினா கூட‌ மீட்டிங்ல‌ இருக்கார்

    ReplyDelete
  23. //பிலிப்பைனி ஆண் தான் பிலிப்பினா தான் பொண்ணு இன்னும் பேசிக்கே கோர்ஸே முடிக்க‌லையா//

    இப்ப கரிசல்தான் பிம்ப்ளிக்கி பிலாப்பியா :)

    ReplyDelete
  24. //க‌ரிச‌ல்கார‌ன் said...
    //உங்க முதலாளி இப்ப எங்கய்யா இருக்கான்...?//

    பிலிப்பினா கூட‌ மீட்டிங்ல‌ இருக்கா//

    இலியானா தெரியும். அது யாருங்க பிலிப்பினா?

    ReplyDelete
  25. //
    இலியானா தெரியும். அது யாருங்க பிலிப்பினா?//

    காம்னாவோட கசின் போல

    ReplyDelete
  26. ஜெகதீசனிடம் அனுமதி பெறாமல் தடியெடுத்தவனெல்லாம் ஆணையம் ஆரம்பித்ததை கடுமையாக கண்டிக்கிறோம்

    அங்கீகார ஆணையத்தின் ஆணைய செயற்குழு உறுப்பினர்

    ReplyDelete
  27. ---------------------------------
    க‌ரிச‌ல்கார‌ன் said...
    //உங்க முதலாளி இப்ப எங்கய்யா இருக்கான்...?//

    பிலிப்பினா கூட‌ மீட்டிங்ல‌ இருக்கார்
    -----------------------------------

    அதான் இன்னைக்கு எங்க போனாலும் உன் கமெண்டா இருக்கா..


    ராஸ்கோலு என்ன மாதிரி ஒழுங்கா வேலையை மட்டும் பாருடா..ங்கொய்யால.........

    ReplyDelete
  28. தம்பி, மேலே போட்டு இருக்கிற நாட்டாமை சொம்பு சூப்பராக இருக்கு, ஆனால் வெற்றிலை பாக்கு எச்சில் வழிசல் இல்லாமல் களையே இல்லை

    ReplyDelete
  29. //
    இலியானா தெரியும். அது யாருங்க பிலிப்பினா?//

    சுக‌ர்தோ ப‌க‌வானே காப்ப‌த்து. த‌ல‌ கொஞ்ச‌ம் ஆங்கில‌ம் தெரிஞ்சிருக்க‌ணும் அதே ச‌ம‌ய‌ம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்க‌ணும் அது மாதிரி ஆள‌ பாத்து ட‌வுட்ட‌ கிளிய‌ர் ப‌ண்ணிக்கோங்க‌


    மீ த‌ எஸ்கேப் பார் ல‌ஞ்ச்

    ReplyDelete
  30. // கோவி.கண்ணன் said...

    தம்பி, மேலே போட்டு இருக்கிற நாட்டாமை சொம்பு சூப்பராக இருக்கு, ஆனால் வெற்றிலை பாக்கு எச்சில் வழிசல் இல்லாமல் களையே இல்லை//

    அப்படியா சொல்றீங்க.. இப்ப பாருங்க..

    நாட்டாஆஆமை.. சொம்ப மாத்து..

    ReplyDelete
  31. //ராஸ்கோலு என்ன மாதிரி ஒழுங்கா வேலையை மட்டும் பாருடா..ங்கொய்யால.........//


    ந‌ம்ம‌ வேலையே இது தான் க‌ண்ணா

    ReplyDelete
  32. // க‌ரிச‌ல்கார‌ன் said...

    //ராஸ்கோலு என்ன மாதிரி ஒழுங்கா வேலையை மட்டும் பாருடா..ங்கொய்யால.........//


    ந‌ம்ம‌ வேலையே இது தான் க‌ண்ணா//

    ஆபிஸ்ல ஒழுங்கா வேலைப் பாக்கறது நான் மாத்திரம்தான் போல

    ReplyDelete
  33. //அப்படியா சொல்றீங்க.. இப்ப பாருங்க..

    நாட்டாஆஆமை.. சொம்ப மாத்து..//

    ரிப்பீட்டே !

    நாட்டமை சொம்ப மாத்து !

    ReplyDelete
  34. //ராஸ்கோலு என்ன மாதிரி ஒழுங்கா வேலையை மட்டும் பாருடா..ங்கொய்யால.........//

    இத‌ ம‌ட்டும் எங்க‌ முத‌லாளி ப‌டிச்சாரு அவ்ள‌ தான் சொம்ப‌ தூக்கிட்டு வ‌ந்துருவாரு ப‌ஞ்சாய‌த்துக்க‌யா

    அவ‌ருக்கு த‌மிழ்ல‌ பிடிக்காத‌ ஒரே வார்த்தை வேலை

    ReplyDelete
  35. -----------------------------------
    சென்ஷி said...

    ஆபிஸ்ல ஒழுங்கா வேலைப் பாக்கறது நான் மாத்திரம்தான் போல

    -----------------------------------

    அய்யோ முடியல மறுபடியும் பக்கத்துல உள்ள பிலிப்பைனி மேல விழுந்து விழுந்து சிரிக்க போறேன்..

    ReplyDelete
  36. க‌ண்ணா சென்ஷி
    வ‌ந்த‌ வேலை முடிஞ்ச‌தா
    அடுத்து எங்கே????

    ReplyDelete
  37. தம்பீ..

    வழக்கம்போல உன் குசும்பு..!

    நாட்டாமைகளின் தீர்ப்பை மாத்துற உரிமையுள்ள சூப்பர் நாட்டாமைகள் யாராவது இருக்காங்களா..?

    இருந்தாங்கன்னா சொல்லு.. அது யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா அப்ளிகேஷன் போடுறேன்..!

    ReplyDelete
  38. //அய்யோ முடியல மறுபடியும் பக்கத்துல உள்ள பிலிப்பைனி மேல விழுந்து விழுந்து சிரிக்க போறேன்..//

    எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது

    ReplyDelete
  39. பஞ்சாயத்து பண்றவனெல்லாம் பஞ்ச் வாங்கறதுக்கு ஆயத்தமா இருங்கன்னு சொல்றாரே ஒரு பெரியவரு.. அவர என்ன செய்யலா,?

    ReplyDelete
  40. //யோவ் கரிசலு,
    உங்க முதலாளி இப்ப எங்கய்யா இருக்கான்...?//

    ஏலே கண்ணா.. என் வென்று..
    உன் முதலாளி எங்க இருக்கான்னு முதல்ல சொல்லுடா என் டக்கு..

    ReplyDelete
  41. //நாட்டாமைகளின் தீர்ப்பை மாத்துற உரிமையுள்ள சூப்பர் நாட்டாமைகள் யாராவது இருக்காங்களா..?
    //

    இருக்காங்க உ.த. அண்ணே.. மால்வேர் வைரஸாம். சேப்பு கலர்ல உள்ளே இருக்குமாம். கூட்டு சேர்ந்துக்கறீங்களா..

    ReplyDelete
  42. எலேய் கலை,

    அங்க உன் ப்ளாக்ல வந்த கமெண்ட்டுக்கு பதில் சொல்லாம இங்க ஏம்லே சொம்ப தூக்கிட்டு வாரே..?

    ReplyDelete
  43. டேய் சென்ஷி...
    நீ வேணுமுன்னா.. உனக்கு பக்கத்துல உள்ள "பாக்கிஸ்தான் பன்னி" மேல உழுந்து சிரிச்சிக்கோ!!

    ReplyDelete
  44. நற்குடி = பாரின் சரக்குயேல்லாம் நற்குடிதான்(signature, RC இதையும் சேர்த்துக்கலாம்).. அதிகமா நாறாது.. வயத்துக்கும் இதம்.....:)

    ReplyDelete
  45. //அங்க உன் ப்ளாக்ல வந்த கமெண்ட்டுக்கு பதில் சொல்லாம இங்க ஏம்லே சொம்ப தூக்கிட்டு வாரே..?//

    அதானே.. உன் பதிவுக்கு வாடா என் வெள்று..

    ReplyDelete
  46. //D.R.Ashok said...

    நற்குடி = பாரின் சரக்குயேல்லாம் நற்குடிதான்(signature, RC இதையும் சேர்த்துக்கலாம்).. அதிகமா நாறாது.. வயத்துக்கும் இதம்.....:)//

    ஃபாரின் சரக்குன்னா வெளிநாட்டுல உக்காந்து குடிக்கறத சேத்துக்கலாமா

    ReplyDelete
  47. //ஏம்லே சொம்ப தூக்கிட்டு வாரே..?//

    ஏலோ சவட்டு மூதி.. உன் ப்ளாக்குல பதிவை போடாம.. இங்க எதுக்குடா உன் "நசுங்குன ஜக்கை" தூக்கிட்டு வந்த??

    ReplyDelete
  48. \\சென்ஷி said...
    ஃபாரின் சரக்குன்னா வெளிநாட்டுல உக்காந்து குடிக்கறத சேத்துக்கலாமா\\

    ச்சே..ஒரே தண்ணி மனித தாக்குதலா இருக்கே..!
    :-)

    ReplyDelete
  49. உ.த. அண்ணாச்சியிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  50. நற்குடி, நல்லால்லாதகுடி என்று குடிகளுக்குள் பேதமுண்டாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!

    ReplyDelete
  51. இனி நாட்டாமை ஆகமுடியாதே என்று பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கனும் என்று வெறியாட்டம் ஆடிய சென்ஷிக்கும்,கண்ணாவுக்கு,கரிசலுக்கு நா.அ.ஆ சார்பாக கண்டனங்கள்!

    ReplyDelete
  52. //
    ச்சே..ஒரே தண்ணி மனித தாக்குதலா இருக்கே..!
    :-)//

    ஆமா ராஜூ.. சைட் டிஷ்ஷா எவனும் மாட்ட மாட்டேங்குறானுங்க..

    ReplyDelete
  53. //குசும்பன் said...
    இனி நாட்டாமை ஆகமுடியாதே என்று பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கனும் என்று வெறியாட்டம் ஆடிய சென்ஷிக்கும்,கண்ணாவுக்கு,கரிசலுக்கு நா.அ.ஆ சார்பாக கண்டனங்கள்!//

    நாட்டாம.............தீர்ப்ப மாஆஆத்தி சொல்லூஊஊஊஊஊஊஊஉ........

    ReplyDelete
  54. \\கார்க்கி said...
    உ.த. அண்ணாச்சியிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்\\

    ஊத்துறதுக்கு அண்ணாச்சி என்ன வச்சுருக்காரு..?

    ReplyDelete
  55. //நாட்டாம.............தீர்ப்ப மாஆஆத்தி சொல்லூஊஊஊஊஊஊஊஉ........//

    பாவம் யாரு பெத்த புள்ளையோ?? வாயி இழுத்துகிச்சு...

    ReplyDelete
  56. ஆமா ராஜூ.. சைட் டிஷ்ஷா எவனும் மாட்ட மாட்டேங்குறானுங்க..ஒரு கை கொறையுது வரியா???

    ReplyDelete
  57. நல்லாகுடிச்ச பொறவு.. தான் வூட்டு கதவ தட்றது நற்குடி...

    பக்கத்து தெருவு.... வூட்டு கதவ தட்றது நாற்குடி...

    ReplyDelete
  58. ஐயோ ...............காப்பாத்துங்க.................


    இங்க...எங்க முதலாளி என்னைய முறைச்சு பாத்துகிட்டே வார்றான்...

    ReplyDelete
  59. / குசும்பன் said...

    இனி நாட்டாமை ஆகமுடியாதே என்று பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கனும் என்று வெறியாட்டம் ஆடிய சென்ஷிக்கும்,கண்ணாவுக்கு,கரிசலுக்கு நா.அ.ஆ சார்பாக கண்டனங்கள்!//

    அப்ப எங்களுக்கு நாட்டாம பதவி கிடைக்காதா.... இதுக்காகவே பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருக்கும் . சாக்கிரத

    ReplyDelete
  60. இன்னமும் வெறியாட்டம் ஆடி கொண்டிருக்கும் டேஷ்.. டேஷ்.. டேஷ்.. க்கு நீங்கள் நிறுத்தவில்லை என்றால்...

    குசும்பனின் சொம்பை கொண்டு அடிக்கப்படும் என்பதை தாராளமாய் சொல்லி கொல்ல கடமைப்பட்டுயிருக்கிறேன்!!

    ReplyDelete
  61. ஆலமரம் இல்லாம சொம்பு படம் சரியில்லையே தல...

    ReplyDelete
  62. பஞ்சாயத்து பண்ற பெரிய பஞ்சாயத்து ஆட்களெல்லாம் யாரு பஞ்சாயத்து தலைவர் ஆகறதுன்னு போடற பஞ்சாயத்துக்கு எந்த பஞ்சாயத்து தலைவர் வந்து பஞ்சாயத்து பண்ணுவார்?

    ReplyDelete
  63. ஆரு நாயம் சொன்னாலும் தீர்ப்பு ஒருதலைப்பட்சமா இருக்கப்பிடாது. அப்புறம் நாயம் செத்துப்பூடும் ஆமாம். ஆரப்பா அங்க... எடுப்பா வண்டிய...ச்ச...தட்டுப்பா கீபோர்ட...

    ReplyDelete
  64. //"நற்குடி" சர்டிபிகேட் வழங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம்.//

    காப்பி ரைட் வழக்கு தொடரப்போகிறேன் :)

    ReplyDelete
  65. "பினா.வானாவாக இருப்பது கூடுதல் தகுதி."

    பினா.வானா என்ன சரவணா?

    ReplyDelete
  66. அடுத்தவாட்டி குசும்பன் இங்க வரசொல்லோ பாட்டில்களோடு நேராக D.R.Ashok ஆபிஸ்க்கு வந்தால் அது நற்குடி.

    தண்டோரா ஆபிஸ்க்கு போனால் அது நாலுபேர் குடி.

    இதே பதிவர் சந்திப்புக்கு பின்னர் நடந்தால் அது பெரியகுடி.

    போடா ...சாத்துக்குடி என்று யாரும் சொல்லக்கூடாது.

    ReplyDelete
  67. //முக்கியமாக மொக்கை பதிவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அவரை சிரிப்பு போலீஸ் என்பது போல சிரிப்பு நாட்டாமையாக ஆக்கிடுவார்கள், ஆகவே அவர் சீரியஸ் பதிவராக இருக்கனும், பினா.வானாவாக இருப்பது கூடுதல் தகுதி.//

    அப்ப நமகெல்லாம் அந்த தகுதியில்லயா தல!

    ReplyDelete
  68. //குசும்பனின் சொம்பை கொண்டு அடிக்கப்படும் என்பதை தாராளமாய் சொல்லி கொல்//

    குசும்பனை சொம்பு என்று சொன்னதற்கு மன்னிப்பு கேள்

    ReplyDelete
  69. //ஆலமரம் இல்லாம சொம்பு படம் சரியில்லையே தல..//

    ஆகா.. வந்துட்டாருய்யா "பசுமை புடுங்கி"...

    ReplyDelete
  70. கார்க்கி said...

    //"நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா//

    ஆசை..அதே டவுட்டுதான் எனக்கும்//


    எனக்கும்!

    ReplyDelete
  71. //குசும்பனை சொம்பு என்று சொன்னதற்கு மன்னிப்பு கேள்//

    மண்ணிச்சுக்கோ சொம்பு!!

    ReplyDelete
  72. //பினா.வானா என்ன சரவணா?//

    பினாயிலால வாய கழுவுறவங்கன்னு அர்த்தம்

    ReplyDelete
  73. //பெண்கள் நாட்டாமை ஆகவே முடியாதா? வீட்டாமையோடு நிற்க வேண்டுமா?//

    நல்ல கேள்வி!

    இதன் மூலம் கார்க்கி முதல் நாட்டாமை தகுதியை பெறுகிறார்!

    ReplyDelete
  74. வால்பையன் said...
    //கார்க்கி said...
    //"நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா//
    ஆசை..அதே டவுட்டுதான் எனக்கும்//
    எனக்கும்!//

    நக்கும்...

    ReplyDelete
  75. ////குசும்பனை சொம்பு என்று சொன்னதற்கு மன்னிப்பு கேள்//

    மண்ணிச்சுக்கோ சொம்பு!!//

    ஒரு சொம்பே
    இன்னொரு சொம்பிடம்
    மன்னிப்பு கேட்கிறதே!(அடடே)

    ReplyDelete
  76. குசும்பன் என்ற பெயரை “சொம்பன்” என மாற்ற முயற்சி செய்யப்படும்

    ReplyDelete
  77. // கலையரசன் said...

    வால்பையன் said...
    //கார்க்கி said...
    //"நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா//
    ஆசை..அதே டவுட்டுதான் எனக்கும்//
    எனக்கும்!//

    நக்கும்..//

    க்கும்...

    ReplyDelete
  78. யோவ் ..புரியாத ஆளா இருக்கியே...

    ஆணா இருந்தா போய் விழ //எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?//

    இந்த தலைப்புக்கு காப்பிரைட்ஸ் எங்கிட்ட இருக்கு!

    ReplyDelete
  79. ////
    ☀நான் ஆதவன்☀ said...

    ////குசும்பனை சொம்பு என்று சொன்னதற்கு மன்னிப்பு கேள்//

    மண்ணிச்சுக்கோ சொம்பு!!//

    ஒரு சொம்பே
    இன்னொரு சொம்பிடம்
    மன்னிப்பு கேட்கிறதே!(அடடே)

    ////

    அதை இன்னொரு சொம்பு கவிதையா எழுதுதே...
    இப்படிக்கு
    இன்னொரு சொம்பு
    :)

    ReplyDelete
  80. //குசும்பனின் சொம்பை கொண்டு அடிக்கப்படும் என்பதை தாராளமாய் சொல்லி கொல்ல //

    குசும்பன் : ஆஹா.. சொம்பு போச்சே!

    ReplyDelete
  81. //குசும்பன் என்ற பெயரை “சொம்பன்” என மாற்ற முயற்சி செய்யப்படும்//

    வழிமொழிகிறேன்.... எல்லாம் கையை தூக்குங்கப்பா...

    ReplyDelete
  82. //அதை இன்னொரு சொம்பு கவிதையா எழுதுதே...
    இப்படிக்கு
    இன்னொரு சொம்பு
    :)//

    இன்னொரு சொம்புன்னு சொல்லி மத்தவங்க தாக்குதல்ல இருந்து தப்பிச்சிட்டீங்க :)

    ReplyDelete
  83. //"நற்குடி" சர்டிபிகேட் வழங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம்.//
    தோடா.. இதுக்கெல்லாம் தனிப் பல்கலைக் ’கலகமே’ செயல்படுது. மொதல்ல நீங்க அங்க அங்கீகாரம் வாஞ்குங்க.

    ReplyDelete
  84. //
    அதை இன்னொரு சொம்பு கவிதையா எழுதுதே...
    இப்படிக்கு
    இன்னொரு சொம்பு
    :)//

    நல்லவேளை இன்னும் பல சொம்புகள் இதைப் படிக்குதேன்னு சொல்லாம போனாங்களே

    ReplyDelete
  85. // கலையரசன் said...

    //குசும்பன் என்ற பெயரை “சொம்பன்” என மாற்ற முயற்சி செய்யப்படும்//

    வழிமொழிகிறேன்.... எல்லாம் கையை தூக்குங்கப்பா...//

    ஏலேய் சென்ஷி....ராஸ்கல்....கை மட்டும் தூக்குலே

    ReplyDelete
  86. //நா.அ.ஆ: முக்கியமாக மொக்கை பதிவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அவரை சிரிப்பு போலீஸ் என்பது போல சிரிப்பு நாட்டாமையாக ஆக்கிடுவார்கள்,//

    அப்டின்னா எனக்கெல்லாம் வாய்ப்பே இல்லையா? :((

    ReplyDelete
  87. கு. சொம்பன் வாய்க்க.. வாய்க்க..

    ReplyDelete
  88. உங்கள் சேவை தொடரட்டும்.. :)... நான் ஏற்கனவே ஒரு இடத்துக்கு அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்..! இப்டி நிறைய பயிற்சி மையங்கள்... சங்கங்கள் உருவாகிடும் போலயே..! டிரெயினிங்கு இல்லாம நாட்டு ஆமை வேலை பார்க்க நினைத்தது எவ்வளவு தவறு... யப்பே..! too late gnanam..!(நான் கவிதையோட மட்டும் நிறுத்திக்கறேன் சாமியோ..=))

    ReplyDelete
  89. //வழிமொழிகிறேன்.... எல்லாம் கையை தூக்குங்கப்பா...//

    எல்லோரும் கையை மட்டும்தான் சொம்பை அல்ல..!!

    ReplyDelete
  90. //(நான் கவிதையோட மட்டும் நிறுத்திக்கறேன் சாமியோ..=))//

    அய்யய்யோ தல இதுக்காகவே இவங்களுக்கு நாட்டு ஆமை பட்டம் கொடுத்து கவிதை எழுதுறதை நிறுத்த சொல்லுங்க

    ReplyDelete
  91. நீண்ட நாட்களுக்குப் பிறகு கும்மிக்குத் தோதான நல்ல ப்ளாட்பார்ம் அமைத்துத் தந்துள்ள சொம்பன் ச்ச்சீசீசீ.. குசும்பன் அவர்களுக்கு சொம்புகள் ச்ச்சீ... நன்றிகள்!

    ReplyDelete
  92. /
    ஏலேய் சென்ஷி....ராஸ்கல்....கை மட்டும் தூக்குலே//

    நீ இம்புட்டு நேரம் எங்கடா ஒளிஞ்சுட்டிருந்தே.. கார்த்திக்கேயன் அறிவுத்தேடல் மாதிரியே வளர்றியே நீயும்

    ReplyDelete
  93. 100 அடிக்க இன்னும் 5 தான்....

    ReplyDelete
  94. இந்த வாட்டி நான் 100 அடிக்கபோறேன்.. ரெடி ஜூட்!!

    ReplyDelete
  95. ஸ்ப்பா... எவ்வளவு கஷ்டம்..???

    ReplyDelete
  96. ஓக்கேப்பா.. நாம பேசி வச்சா மாதிரி கலை 100 அடிச்சுட்டான்.. வாங்க வேற எடம் பாக்கலாம்.

    பை பை குசொம்பா...

    ReplyDelete
  97. //கலையரசன் said...

    ஸ்ப்பா... எவ்வளவு கஷ்டம்..???//

    பின்ன சொம்படிக்கிறதுன்னா சும்மாவா?

    ReplyDelete
  98. // சென்ஷி said...

    ஓக்கேப்பா.. நாம பேசி வச்சா மாதிரி கலை 100 அடிச்சுட்டான்.. வாங்க வேற எடம் பாக்கலாம்.

    பை பை குசொம்பா...//

    ஓக்கே டன்

    ReplyDelete
  99. //கார்த்திக்கேயன் அறிவுத்தேடல் மாதிரியே வளர்றியே நீயும்//

    ஏன் சென்ஷி??? ஓட்டு கேட்டுகிட்டே வர்றானா???

    ReplyDelete
  100. //ஏன் சென்ஷி??? ஓட்டு கேட்டுகிட்டே வர்றானா???//

    அட அது பரவால்லப்பா.. சோஷியல் மேட்டர் செஞ்சுக்கொடுத்துடலாம். பாய்க்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்யா இவன்.. ராஸ்க்கோலு..

    ReplyDelete
  101. டேய் என்னங்கடா.. தனியா விட்டுட்டு போறீங்க?? ஆமை மொறைக்குது.. இருங்க நானும் வர்றேன்!!

    பை பை குசொம்பா...

    ReplyDelete
  102. குசும்பு, மரியாதையா என் அக்கவுண்டில் பணம் போட்டுருங்க.. டாக்டர் செலவு அதிகம். பதிவ விட பின்னூட்டம் படிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ...:))

    ReplyDelete
  103. //குசும்பு, மரியாதையா என் அக்கவுண்டில் பணம் போட்டுருங்க.. டாக்டர் செலவு அதிகம். பதிவ விட பின்னூட்டம் படிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ...:))

    //

    வாய் வுட்டு சிரிச்சா நோய் வுட்டுப் போகும்ப்பாங்க.. இவங்களூக்கு உல்டாவா இருக்குது.

    ReplyDelete
  104. நீங்க சொல்லற தீர்ப்பெல்லாம் செல்லாது செல்லாது...
    மகளிருக்கு தனியாத்தான் ...:)))))))

    ReplyDelete
  105. //பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையா யூஸ் செஞ்சு வரும் சொம்போடு வகுப்புக்கு வரவும்.//

    தம்பி சொம்பை எல்லாம் வாங்கி போரிச்சம்பழத்த்து வித்துட மாட்டிங்களே ?

    ReplyDelete
  106. அடப்பாவி பாய்ஸ்..
    அதுக்குள்ள 112 ஆஆ..?

    ReplyDelete
  107. //பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையா யூஸ் செஞ்சு வரும் சொம்போடு வகுப்புக்கு வரவும்.//

    ஏற்கனவே அடிவாங்குன சொம்புகளுக்கு எதுவும் சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தப்படுமா..?

    ReplyDelete
  108. \\சென்ஷி said...
    வாய் வுட்டு சிரிச்சா நோய் வுட்டுப் போகும்ப்பாங்க.. இவங்களூக்கு உல்டாவா இருக்குது.\\

    ஏங்க..வாயை வுட்டுட்டு சிரிச்சா, அப்பறம் நாளப்பின்ன எப்புடி சிரிக்கிறது.

    நான் கேக்கலை..கலைதான் கேக்க சொன்னாப்ல.

    ReplyDelete
  109. சரியான நேரத்தில் சரியான பதிவு.

    (பரிசல் கோவிச்சுக்கமாட்டார் என்ற அளவில்லா நம்பிக்கையுடன்)

    ReplyDelete
  110. பொது ஜனத்தின் பொறுப்பான கேள்விகளும், ஆணையத்தின் புத்திசாலித்தனமான பதில்களும் வியக்கவைத்தன.! நாட்டாமை டிரெயினியாக என்னையும் சேர்த்துக்கொள்ளவும். பணிக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்களுக்கு ஏதும் தீர்வு வைத்திருக்கிறீர்களா? பாதுகாப்பு பற்றி கேட்கிறேன்.

    ReplyDelete
  111. //"நாட்டாமைகள் அங்கீகார ஆணையம்"//

    ஒரு நாட்டாமையையே சமாளிக்க முடியல!, இதுல இதுவேறயா?

    ReplyDelete
  112. //பணிக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்களுக்கு ஏதும் தீர்வு வைத்திருக்கிறீர்களா? பாதுகாப்பு பற்றி கேட்கிறேன்.//

    கவச உடை அணிந்து வர வேண்டியது நாட்டாமைகளின் பொறுப்பு!

    ReplyDelete
  113. //பணிக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்களுக்கு ஏதும் தீர்வு வைத்திருக்கிறீர்களா? பாதுகாப்பு பற்றி கேட்கிறேன்.//

    நாட்ட‌மை ப‌ட‌த்துல‌ வ‌ர்ர‌ மாதிரி ஒரு த‌ம்பி அனுப்பி வைக்க‌ப் ப‌டுவார்.ஆனா வ‌ண்டி உங்க‌ செல‌வு தான்

    ReplyDelete
  114. //
    ஏற்கனவே அடிவாங்குன சொம்புகளுக்கு எதுவும் சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தப்படுமா..?//
    நல்லா தட்டிவிட்டு கவுண்டரிடம் கொடுத்து ஈயம் பூசி எடுத்துவரலாம்

    ReplyDelete
  115. //நல்லா தட்டிவிட்டு கவுண்டரிடம் கொடுத்து ஈயம் பூசி எடுத்துவரலாம்//


    சின்ன‌ க‌வுண்ட‌ர் கிட்ட‌யா அவ‌ரு ப‌ம்ப‌ர‌ம் ஸ்பெச‌லிஸ்ட்

    ReplyDelete
  116. உங்கள் சேவை வாழ்க வளர்க.

    ReplyDelete
  117. பின்னூட்ட டைமிங் அண்ணாத்தைகளா!அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  118. //ராஜ நடராஜன் said...
    பின்னூட்ட டைமிங் அண்ணாத்தைகளா!அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    பாஸ் இங்க துபாய்ல 1-2 லஞ்ச் டைம் நாங்க பிஸியா இருப்போம்.

    எதா இருந்தாலும் ஆபிஸ் அவர்ஸ்ல வந்து சொல்லுங்க...நாங்க் ஃபீரியாத்தான் இருப்போம்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  119. என்னத்த சொல்லுறதுன்னு தெரியல பாஸ் . இவ்வளவு மொக்கை தங்காது .. :(((

    ReplyDelete
  120. ஒன்னும் சொல்றதுக்கில்ல...

    படை பரிவாரங்களோடு கலக்கிட்டீங்க..

    ReplyDelete
  121. /பணிக்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்களுக்கு ஏதும் தீர்வு வைத்திருக்கிறீர்களா? பாதுகாப்பு பற்றி கேட்கிறேன். //

    தலைமை சொம்பார் ஸ்வெட்டர் வாங்கித் தருவார்..

    ReplyDelete
  122. [[[சென்ஷி said...

    //நாட்டாமைகளின் தீர்ப்பை மாத்துற உரிமையுள்ள சூப்பர் நாட்டாமைகள் யாராவது இருக்காங்களா..?//

    இருக்காங்க உ.த. அண்ணே.. மால்வேர் வைரஸாம். சேப்பு கலர்ல உள்ளே இருக்குமாம். கூட்டு சேர்ந்துக்கறீங்களா..]]]

    டேய் அவனா நீயி..!

    ஆள் பார்க்க வைரஸ் காய்ச்சல் வந்தது மாதிரியிருந்திட்டு உலகமெல்லாம் வைரஸை பரப்புறியா..?

    மொதல்ல இந்த வைரஸை பரப்புற வில்லங்கங்களை என்ன பண்றதுன்னு அடுத்த நாட்டாமைகளின் பொதுக்குழுவில் முடிவு செய்யணும்..!

    ReplyDelete
  123. குசும்பா..

    இன்றைய உன் கலகம் நிறைவேறிவிட்டதா..?

    சந்தோஷமா..? திருப்தியா..?

    யாருடா ராசா உன்னோட இளிச்சவாய முதலாளி..!

    ஒரு போட்டோவையாவது அனுப்பேன்.. பார்த்துக் கும்பிட்டுக்குறோம்..!

    ஆயுசுக்கும் உனக்கு வேலை கொடுக்காம இப்படி விட்டு வைச்சிருந்தா எங்களுக்கும் நல்லா பொழுது போகும்..!

    ReplyDelete
  124. ஆனா..வரவேண்டிய டீ இன்னும் வரலையே தம்பி??

    ReplyDelete
  125. நெசமாலுமே எங்க தாத்தா, அப்பா எல்லாம் நாட்டாமைங்க. பரம்பரை தொழில் நமக்கு வராதுங்களா?

    ReplyDelete
  126. எனக்கு எதாவது உண்டா ...

    ReplyDelete
  127. 'இப்படி மூஞ்ச மூஞ்ச பாத்துட்டு இருந்தா எப்படி? யாராச்சும் ஆரம்பிங்கப்பா'னு ஒரு சைடு காரக்டர் இருக்குமே.. அது காலியா இருக்கா..

    ReplyDelete
  128. //பிரசன்னா said...

    'இப்படி மூஞ்ச மூஞ்ச பாத்துட்டு இருந்தா எப்படி? யாராச்சும் ஆரம்பிங்கப்பா'னு ஒரு சைடு காரக்டர் இருக்குமே.. அது காலியா இருக்கா..//

    அதான் கரெக்டா நீங்க வந்திருக்கீங்களே.. நீங்களே கூவிடுங்க :)

    ReplyDelete
  129. //நா.அ.ஆ: குடி குடியை கெடுக்கும் "நற்குடி" பதிவரின் பெயரை கெடுக்கும். நா.அ.ஆவில் சேருவோம் நாடு முன்னேற நல்ல தீர்பை வழங்குவோம்.//

    "நற்குடி" என்றால் என்ன ? மிக்ஸிங் இல்லாமல் குடிப்பதா ?//

    இதுக்கு எப்படிய்யா விளக்கம் சொல்ல?
    ஜாதி வெறி விட்டு எல்லாம் சமம்னு இருக்கோனும்வே,
    அது உனக்கு எங்கலே விளங்கும்?

    ReplyDelete
  130. என்னய்யா நடக்குது இங்கே.. துண்டை விரிச்சுப்போட்டு ஷார்ஜா கொலைவெறிப்படை தாண்டவமே ஆடுது...

    போட்டுருக்குற சொம்புபடத்தைப்பார்த்தா நாட்டாமை காத்தால தோட்டத்துல குத்தவைக்கிறதுக்கு கொண்டுப்போற சொம்பு மாதிரி இருக்கே....

    ReplyDelete
  131. ஆனா,, சைலண்டா இருந்துட்டு ஒவ்வொரு பிரச்சனை அப்பவும் செம அடி அடிக்கிறீங்க!

    ///நல்லாகுடிச்ச பொறவு.. தான் வூட்டு கதவ தட்றது நற்குடி...
    பக்கத்து தெருவு.... வூட்டு கதவ தட்றது நாற்குடி...////
    //
    ஆணா இருந்தா போய் விழ //எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?//

    யப்பா கொல கடி!
    இந்த தலைப்புக்கு காப்பிரைட்ஸ் எங்கிட்ட இருக்கு!//

    ReplyDelete
  132. //நாஞ்சில் பிரதாப் said...
    என்னய்யா நடக்குது இங்கே.. துண்டை விரிச்சுப்போட்டு ஷார்ஜா கொலைவெறிப்படை தாண்டவமே ஆடுது...//

    யோவ் நாஞ்சிலு...

    நான் ஷார்ஜா அல்ல ...துபாய் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.


    அது சரி நீ பிலிப்பைனி பத்தி ஓரு மேட்டர் போட்ருக்கேன்னு என் பாலோ அப் பாக்ஸ் சொல்லுது அங்க வந்தா ஒண்ணையும் காணோம்.

    உண்மைய ஒத்துக்கோ...அந்த பிலிப்பைனிய எங்க வச்சுருக்க..

    ReplyDelete
  133. சாரி குசும்பா. ரசிக்க முடியவில்லை :(

    ReplyDelete
  134. அடடே...

    இன்னிக்குதான் மேட்டரு தெரிஞ்சுது. இப்பல்லாம்.. நாமே கேட்டு நாமே சொல்லிக்கறதுதான்... ஃபேஷனா??

    நானும் ஒரு கேள்வி-பதில் போடுறேன்.

    நீங்க அடிச்சி வெளயாடுங்க.. குசும்பு!!

    ReplyDelete
  135. //
    ஜெகதீசன் said...
    அன்புடையீர்,
    உங்கள் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எங்களிடம் அங்கீகரம் வாங்காத எந்த ஆணையமும் சட்டவிரோதமானது. எனவே எங்கள் அங்கீகாரத்திற்கு விரைவில் விண்ணப்பிக்கவும்.
    இப்படிக்கு
    ஆணைய அங்கீகார ஆணையம்.
    //

    ஆணைய அங்கீகார ஆணையமா?? உங்களோட அப்ளிகேஷனையே நாங்க இன்னும் அப்ரூவ் பண்ணலை...பெண்டிங்ல இருக்கு...அப்புறம் எப்படி நீங்க விளம்பரம் செய்யலாம்??

    மக்களே...அங்கீகாரம் இல்லாத ஆணையங்களிடன் அங்கீகாரம் வாங்காதீர்கள்...அது செல்லாது..

    இப்படிக்கு,

    அனைத்துலக அங்கீகார ஆணையங்களின் தலைமை ஆணையம்.

    :0)))

    ReplyDelete
  136. //
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தம்பீ..

    வழக்கம்போல உன் குசும்பு..!

    நாட்டாமைகளின் தீர்ப்பை மாத்துற உரிமையுள்ள சூப்பர் நாட்டாமைகள் யாராவது இருக்காங்களா..?

    இருந்தாங்கன்னா சொல்லு.. அது யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா அப்ளிகேஷன் போடுறேன்..!

    //

    என்னோட ஈமெயில் அட்ரஸ் உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்....

    ReplyDelete
  137. //
    ஸ்வாமி ஓம்கார் said...
    //"நற்குடி" சர்டிபிகேட் வழங்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறோம்.//

    காப்பி ரைட் வழக்கு தொடரப்போகிறேன் :)

    //

    இன்னொரு வழக்கா?? இப்ப வேணாம் சார்....இங்க என் கிட்ட ரொம்ப கேஸ் பெண்டிங்ல இருக்கு...:0))))

    ReplyDelete
  138. //சென்ஷி said...
    அதான் கரெக்டா நீங்க வந்திருக்கீங்களே.. நீங்களே கூவிடுங்க//

    காரக்டர் ஆர்டிஸ்ட் ஆகியாச்சு..
    செம்மையா செஞ்சிடலாம் :)

    ReplyDelete
  139. //யோவ் நாஞ்சிலு...
    நான் ஷார்ஜா அல்ல ...துபாய் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.//

    வே... அப்ப இங்கதான இருக்கீராவே... ரொம்ப சந்தோசம்..

    என்னது பிலிப்பைனியா...அதுக்கு மேலதானவே நீர விழுந்தீரு.... இப்ப என்கிட்டகேட்டா....

    ReplyDelete
  140. குசும்பரே!

    :)))))))))))))))))))))


    :::::::::முடியல!


    ரூமே இல்லைன்னாலும் யோசிப்பீங்க போலிருக்கே!!

    ReplyDelete
  141. நான் தான் 154.
    இப்படி எதுவும் போட உங்களிடம் நாட்டாமை பயிற்சிப்பள்ளி இருக்கா?

    ReplyDelete
  142. ஆலமரத்துக்கு எங்கே போறது? ;-)

    ReplyDelete
  143. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  144. சொம்பு தண்ணி குடிக்கிற சொம்பா , இல்ல குண்டி கழுவுற சொம்பா?

    ReplyDelete