Monday, December 21, 2009

எத்தனை பேரு திட்டப்போறாங்களோ?

போன வாரம் வந்த பிறந்தநாள் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது, இரண்டரை வருடமாக முயற்சி செய்து வந்த டிரைவிங் லைசன்ஸ் சரியாக பிறந்த நாளுக்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு கிடைத்தது, டிரைவிங் லைசன்ஸ் கிடைப்பது என்ன அவ்வளோ பெரிய சந்தோசமா என்று நினைக்கலாம், துபாயில் டிரைவிங் லைசன்ஸ் கிடைப்பது என்பது மிக மிக மிக கடினமான ஒன்று, இதுவரை 8 டெஸ்ட்டுக்கு போய் தோல்வியடைந்து, குறைந்தது நம்ம ஊர் காசுக்கு 1.5 லட்சம் வரை செலவு செய்துகிடைத்தது. அன்று இரவு முழுவதும் சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை. மறுநாள் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துக்களால் நெஞ்சம் நிறைந்தது, போனில் மனைவி பேசும் பொழுது மகன் கொய்ங் கொய்ங் என்று ஏதோ சத்தம் கொடுக்க அப்பாவுக்கு குட்டி பர்த்டே விஸ் செய்கிறான் என்று மனைவி சொல்லும் பொழுது மட்டும் என்னமோ மாதிரி இருந்தது...
(பயபுள்ள அவன் தூங்கும் பொழுது வீட்டில் இருக்கிறவங்களை சைலண்ட் மோடிலும், முழுச்சிருந்தா வைப்ரேசன் மோடிலும் தான் வெச்சு இருக்கான். முழுச்சிருந்தாலே அழுகைதான்:)
******************
நண்பர் ஒருவர், KVR பதிவில் போட்டு இருந்த என் போட்டோவை பார்த்துவிட்டு என்னங்க Half Hand சட்டை போட்டு டை கட்டியிருக்கீங்க, வித்தியாசமாக இருந்தது என்றார், நான் அப்படி எல்லாம் இல்லை எல்லோரும் கட்டுவதுதான் என்றேன், இல்லீங்க இதுவரை நான் எங்கேயும் அப்படி பார்த்தது இல்லை என்றார் விடாப்பிடியாக, நானும் இல்லீங்க சிலர் வலது கையில் வாட்ச் கட்டுவது போல் சிலர் அரைக்கை சட்டை போட்டும் டை கட்டுவார்கள் நல்லாவும் இருக்கும் என்றேன். இல்லீங்க இப்படி டை கட்டி பார்ப்பதுதான் முதல் முறை என்றார்... அவரிடம் சொல்லமுடியுமா? நாங்க எல்லாம் போட்டோ என்றால் பனியனோட இருந்தாலும் மேலே டை கட்டி போஸ் கொடுக்கும் ஆளுங்க என்று:)
*********************
லைசன்ஸ் வாங்கிட்டு நேற்று(21-12-2009) அண்ணாச்சி காரை அவரை அருகில் வைத்துக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தேன், பிறகு ஆபிஸ் காரை எடுத்துக்கிட்டு தனியா போய் பார்ப்போம் என்று மெயின் ரோட்டுக்கு போனேன். ஒரு ட்ராக்கில் இருந்து அடுத்த ட்ராக் மாறனும் என்றால் இன்டிகேட்டர் போட்டு சென்டர் மிரரில் பின்னாடி கார் ரொம்ப அருகில் வருதான்னு பார்த்து, பின் சைட் மிரரில் ட்ராக் கிளியரா இருக்கான்னு பார்த்து அடுத்து ஷோல்டர் வழியா திரும்பி ஒருமுறை பார்த்து பிறகு திரும்ப சென்டர் மிரரில் கிளியரான்னு பார்த்துவிட்டு ட்ராக் சேஞ் செய்யனும் இதுதான் ரூல்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க, நானும் ட்ராக் சேஞ் செய்ய இதை எல்லாம் செஞ்சா..பின்னாடி வேகமாக வந்து பப்பரப்பான்னு ஹாரன் அடிச்சு பயமுறுத்தி ஒருவழி செஞ்சுட்டானுங்க.. ஏனோ அன்நியன் படத்தில் விக்ரம் வண்டி ஓட்டுவது நினைவுக்கு வந்தது. இங்க ஹாரன் ஒருவன் அடிக்கிறான் என்றால் மானெங்கெட்ட தனமாக திட்டுக்கிறான்என்று அர்த்தம். ம்ம் இன்னும் எத்தனை பேரு திட்டபோறானுங்களோ:)
**********************
உறவினர் ஒருவர் உடல் நலம் இன்றி இருக்கும் பொழுது அவரோட மனைவி திருப்பதிக்கு அங்கபிரதஸ்னம் செய்வதாக வேண்டியிருக்காங்க, அவரும் உடல்நலம் தேறி வந்ததும் சிலமாதம் கழித்து கோயிலுக்கு நேர்த்திகடன் செலுத்த போய் இருக்காங்க, இவரு அங்க போறவரைக்கும் என்ன இப்படி எல்லாம் வேண்டிக்கிட்டுஇது எல்லாம் தேவையான்னு சொல்லிக்கிட்டே வந்திருக்கிறார். அங்க போய் மனைவி அங்கபிரதஸனம் செய்ய அவங்களுக்கு உதவ இவரு குனிஞ்சு இருக்கிறார், அங்கவந்த ஆளுங்க ஆண்கள் எல்லாம் இங்க அங்கபிரதஸ்னம் செய்ய கூடாது என்று அவரை அங்கிருந்து நகர்த்தி அழைத்து சென்று பக்கத்தில் கொண்டு போய் படுக்க வெச்சு உருட்டி உருட்டி அவரை விளையாண்டு இருக்காங்க...எப்பொழுது நினைச்சாலும் சிரிப்பு வருகிறது


**********************
சாப்பிடும் பொழுது வைக்கப்படும் பதார்த்தங்களில் ஏதும் ஒன்று ரொம்ப பிடித்துவிட்டது என்றால் அதை கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு மீதி வைத்துவிட்டு எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சதும் கடைசியாக அதை சாப்பிட்டு விட்டு அந்த சுவை கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் என்று நினைப்பது போல், நேற்று I-MAX ல் 3D எபக்ட்டோடு அவதார் திரைப்படம் முடிஞ்சதும், அப்படியே கண்ணை மூடி அந்த அனுபவத்தை திரும்ப திரும்ப அசைபோடனும் என்று தோன்றியது.அப்படிப்பட்ட ஒரு படமாக இருந்தது.

2154 ஆம் ஆண்டு நடக்கும் கதை, பண்டோரா என்ற கிரகத்துக்கு அங்கு இருக்கும் கனிமத்துத்தை எடுத்து வர அனுப்பப்படும் படைக்கும், அந்த கிரகத்து மக்களுக்கும் நடக்கும் சண்டை. யார் வெற்றிபெற்றார்கள் என்ற கதைதான் அவதார். படம் பார்க்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அந்த பண்டோரா கிரகத்தில் ஓரமாக நின்று நடப்பவை அனைத்தையும் பார்ப்பது போல் ஒரு உணர்வை கொடுத்தது. ஜேக் அந்த படுக்கையில் படுத்ததும் அது நகரும் பொழுது நம்மை நோக்கி வந்து நம் மூக்குக்கு முன்னாடி நிற்பதை போன்றும், வெள்ளை கலரில் பறக்கும் பூ நம்மை சுற்றி பறப்பதுபோலும் இருந்தது இப்படியே படம் முழுவதும் ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. பார்த்தா 3Dயில் பாருங்க.
**********************

சித்தப்பு ஒருவர் கழக உடன்பிறப்பு, அவரை சீண்டுவது எப்பொழுதும் என் வழக்கம், இந்த முறை பேசிக்கிட்டு இருக்கும் பொழுது ஊழல் இல்லாத ஆட்சி, எங்கள் கட்சி ஆளுங்க யாரும் ஊழல் செய்வது இல்லை இது தலைவர் கட்டளை என்றார். அப்புறம் ஏன் சித்தப்பூ T.R.பாலுவுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றேன். அதுக்கு அவரு சொன்னாரு, பாலு மந்திரியா இருந்தப்ப 5 மாநிலங்களில் செலவு செய்து போடவேண்டிய ரோடு பாலத்தை எல்லாம் தமிழ்நாட்டுக்கே கொண்டு வந்துட்டாரு, அதனால் மற்ற மாநில ஆளுங்க பிரஸர் கொடுத்து இந்த முறை அவருக்கு மந்திரி பதவி கொடுக்கவிடாம அடிச்சுட்டாங்க என்றார். என்னா பேச்சு!!! உடன்பிறப்பா ஆவதுக்கு மெயின் தகுதியே இந்த "வாய் பேச்சுதான் போல"

***********************

50 comments:

  1. ஒரு வேளை இந்த ஃபோட்டோவைக் காட்டினதும் பயந்துபோய் லைசன்ஸ் கொடுத்துட்டாங்களா?

    லைசன்ஸுக்கு வாழ்த்துகள் மக்கா.

    ReplyDelete
  2. // உடன்பிறப்பா ஆவதுக்கு மெயின் தகுதியே இந்த "வாய் பேச்சுதான் போல"//
    ஹிஹி.. பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா.. இப்ப கூட யாரோ ஒரு மந்திரியோட ஊழலை தலிவரு அமைச்சரவை கூட்டத்துலையே படிச்சாராமா விசாரிச்சீரா?


    டிரைவிங் லைசென்ஸ் மேட்டரு அய்யோ துபாய் பாவம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இன்னும் ஒரு நாலு ஜந்து வருசத்துல துபாய் சனத்தொகை பாதி ஆயிடும்.. பில்டிங்க எல்லாம் செறி வந்த நாய் மாதிரி கார் இடிச்ச தடமா இருக்கும்... என்னே துபாய்க்கு வந்த சோதனை..

    ReplyDelete
  3. [[[பயபுள்ள அவன் தூங்கும் பொழுது வீட்டில் இருக்கிறவங்களை சைலண்ட் மோடிலும், முழுச்சிருந்தா வைப்ரேசன் மோடிலும்தான் வெச்சு இருக்கான். முழுச்சிருந்தாலே அழுகைதான்]]]

    ங்கொய்யால..!

    உன் புள்ளை உன்னை மாதிரிதானடா இருப்பான்..!

    உன் கமெண்ட்டுக்கு அப்புறம் பதிவோட கலரே மாறுதுன்னு இங்க அவனவன் அலறிக்கிட்டிருக்கான்..!!!

    ReplyDelete
  4. //நாங்க எல்லாம் போட்டோ என்றால் பனியனோட இருந்தாலும் போட்டோன்னா மேலே டை கட்டி போஸ் கொடுக்கும் ஆளுங்க என்று:)//

    இதை தான் திருவள்ளுவர் அன்னைக்கே சொன்னாரு

    டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    கைகட்டி சேவகம் செய்வர்

    ReplyDelete
  5. உன் கமெண்ட்டுக்கு அப்புறம் பதிவோட கலரே மாறுதுன்னு இங்க அவனவன் அலறிக்கிட்டிருக்கான்..!!!
    //

    யூத் நீங்களே இப்படி சொல்லலாமா..?
    ::))

    ::)))))

    ReplyDelete
  6. இனி துபாய் ரோட்ல தினம் தினம் ஹாரன் சத்தம் கேக்கும்னு சொல்லுங்க.. :)

    ReplyDelete
  7. //உடன்பிறப்பா ஆவதுக்கு மெயின் தகுதியே இந்த "வாய் பேச்சுதான் போல"//- ;-) :-)

    ReplyDelete
  8. உன் கமெண்ட்டுக்கு அப்புறம் பதிவோட கலரே மாறுதுன்னு இங்க அவனவன் அலறிக்கிட்டிருக்கான்..!!!
    //


    ஹாஹாஹா :)))))

    சூப்பர் கமெண்டு உ.த. அண்ணாத்த..

    ReplyDelete
  9. கிடைக்கிற இடைவெளியில எல்லாம் போட்டோவை போட்டு காமிச்சுக்கிட்டிருக்கீறே என்ன விசயம்? :)

    ReplyDelete
  10. //கிடைக்கிற இடைவெளியில எல்லாம் போட்டோவை போட்டு காமிச்சுக்கிட்டிருக்கீறே என்ன விசயம்? :)
    //

    ஆயில், வேற ஒண்ணுமில்ல “தங்கச்சி இல்லாத வீட்டில் மாப்பி துள்ளி விளையாடுது”

    ReplyDelete
  11. இந்தியா வந்திருந்தப்பவே இண்டர்நேஷனல் லைசென்ஸ் எடுத்துச்சென்று,துபையில் ஒரு டெஸ்ட் மட்டும் பாஸ் செய்திருக்கலாமே பாஸ்..
    செலவு மிகவும் குறைந்திருக்குமல்லவா?

    ஹாரனுக்கு நீங்க சொல்லியிருக்கும் விளக்கத்தையும் இங்கிருக்கும் நிலையையும் நினைத்து பார்த்தேன்..
    ஹாரன் தொடர்ந்து இரண்டாம் முறை அடித்தாலெ கொலைகாரனைப்போல பார்க்கும் ஊர் இது..
    நடந்து போகிறவைனை கூட சுற்றிக்கொண்டுதான் பஸ் போக முடியும்.

    சித்தப்பூ ஆனாலும் இம்புட்டு டகால்ட்டி விடக்கூடாது....லஞ்சம் ஊழல் மற்றும் தேர்தலுக்கு உலகுக்கே வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் இங்கே....அம்மாவே மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுமளவு ஆகிப்போச்சு நிலைமை..

    ReplyDelete
  12. லைசன்ஸ்க்கு வாழ்த்துகள்.

    நானும் அரைக்கையில் டை கட்டிய(டுப)வன் தான்.

    ReplyDelete
  13. /நாங்க எல்லாம் போட்டோ என்றால் பனியனோட இருந்தாலும் போட்டோன்னா மேலே டை கட்டி போஸ் கொடுக்கும் ஆளுங்க என்று:)//

    நாங்க எல்லாம் இல்லை மாப்பி.. நான் அப்படின்னு வரணும்.. பொருட்பிழையை கவனி!

    ReplyDelete
  14. //நாங்க எல்லாம் போட்டோ என்றால் பனியனோட இருந்தாலும் போட்டோன்னா மேலே டை கட்டி போஸ் கொடுக்கும் ஆளுங்க என்று//

    டை க‌ட்டி போட்டோ போட்டாலும் இல்ல‌ ஆறு பை(6 பேக்) க(கா)ட்டி போட்டோ போட்டாலும் ச‌ரி ஒன்னும் பிக்க‌ப் ஆகாது அண்ணாத்தே க‌ல்யாண‌ம் ஆன‌ விச‌ய‌ம் ஊரு உல‌க‌த்துக்கே தெரியுமுப்போய்

    ReplyDelete
  15. //உடன்பிறப்பா ஆவதுக்கு மெயின் தகுதியே இந்த "வாய் பேச்சுதான் போல"

    //

    உண்மையைச் சொன்னா எவன் நம்புறான் இந்தக் காலத்தில

    (இதைச் சொல்லும் போது எனக்கே சிரிப்பு வருவது ஒரு தனிகதை)

    ReplyDelete
  16. //போன வாரம் வந்த பிறந்தநாள் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது//

    நாற்பத்தியைந்தாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  17. // ட்ராக் மாறனும் என்றால் இன்டிகேட்டர் போட்டு சென்டர் மிரரில் பின்னாடி கார் ரொம்ப அருகில் வருதான்னு பார்த்து, பின் சைட் மிரரில் ட்ராக் கிளியரா இருக்கான்னு பார்த்து அடுத்து ஷோல்டர் வழியா திரும்பி ஒருமுறை பார்த்து பிறகு திரும்ப சென்டர் மிரரில் கிளியரான்னு பார்த்துவிட்டு ட்ராக் சேஞ் செய்யனும் இதுதான் ரூல்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க, //

    இப்பிடி செஞ்சிங்கன்னா... ட்ராபிக் பைன் 1 லட்சத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை..

    ReplyDelete
  18. முதல் போட்டோ அவதார் படத்துல நடிச்ச "நவி" மனிதன்தானே????
    அந்த படத்துல "டை" கட்டி ஒரு சீனும் வரலையே...ம்??

    சைலன்ட் மோட்.. வைப்பரேசன் மோட்.. ரசிச்சேன்!!

    ReplyDelete
  19. என்ன இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா? புரோக்கர்கிட்ட வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாம லைசன்ஸ வாரி வழங்குவாங்க. எல்லாரையும் பாஸ் போட்ட மனசாட்சி உறுத்தும்னுதான் ஒரே ஒரு ஆளுக்கு அன்னைக்கு லைசன்ஸ் கொடுக்க மாட்டாங்க. சம்பளம் கொடுக்குற அரசாங்கத்துக்கு விசுவாசமா இருக்காங்களாம். அதனாலதான் அவங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

    இதை நக்கல் அடிக்கிற வரிகளோட ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியான்னு ஒரு கதையை நம்ம ஊட்டுல சொல்லியிருக்கேன். நேரம் இருந்தா படிங்க பாஸ்.

    http://writer-saran.blogspot.com/2009/12/blog-post_6788.html

    ReplyDelete
  20. இந்த போட்டோல பாக்கும்போது.... எச்சூஸ் மீ.. இந்த அட்ரஸ் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்லமுடியுமான்னு ஒருத்தன் வடிவேல டார்ச்சர் பண்ணுவானே... அவன் மாதிரி இருக்கு நண்பரே! :-))

    திருப்பதி மேட்டர் செம காமெடி.

    உங்க உடன் பிறப்பு சித்தப்பா ... உடன் பிறப்பு கழகத்திற்கு மிக சரியான ஆள்.
    அண்ணன் அப்துல்லாவோட அடைப்புக்குறி வாசகம் ஒரு பெரிய ஆச்சர்யகுறி! (ஆனா நல்ல நக்கலான ஆளுயா அவரு)

    ReplyDelete
  21. ////ஒரு ட்ராக்கில் இருந்து அடுத்த ட்ராக் மாறனும் என்றால் இன்டிகேட்டர் போட்டு சென்டர் மிரரில் பின்னாடி கார் ரொம்ப அருகில் வருதான்னு பார்த்து, பின் சைட் மிரரில் ட்ராக் கிளியரா இருக்கான்னு பார்த்து அடுத்து ஷோல்டர் வழியா திரும்பி ஒருமுறை பார்த்து பிறகு திரும்ப சென்டர் மிரரில் கிளியரான்னு பார்த்துவிட்டு ட்ராக் சேஞ் செய்யனும் இதுதான் ரூல்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க, நானும் ட்ராக் சேஞ் செய்ய இதை எல்லாம் செஞ்சா.////

    இதை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா எப்ப வீடு போய் சேருவது? வண்டி வாங்கினதும் வண்டியோட தகவல் எல்லாம் குடுத்துடுங்க. நாங்க உஷாரா ஒதுங்கி போய் விடுகிறோம்.

    ReplyDelete
  22. ///இந்தியா வந்திருந்தப்பவே இண்டர்நேஷனல் லைசென்ஸ் எடுத்துச்சென்று,துபையில் ஒரு டெஸ்ட் மட்டும் பாஸ் செய்திருக்கலாமே பாஸ்..
    செலவு மிகவும் குறைந்திருக்குமல்லவா?///

    அதெல்லாம் வாய்ப்பே இல்லை. இன்டர்நேஷனல் லைசன்ஸ் இருந்தாலும் டெஸ்ட்-ல பாஸ் ஆகணுமே?

    ReplyDelete
  23. போட்டோபோட்டு இப்டியா பயமுறுத்தறது.. atleast கூளர்ஸயாவது கழட்டியிருக்கலாமே??? :)

    ReplyDelete
  24. லைசன்ஸ் கொடுத்துட்டாங்களா!?

    ReplyDelete
  25. ஹஹஹ... அண்ணாத்த பர்துபாய்ல தான இருக்கீங்க. இனி மீனாபஜார்ல உயிரை கையில பிடிச்சிட்டுதான் நடக்கனுமா??? அவ்வ்வ். நான் லைசன்ஸ் இனிதான் அப்ளை பண்ணப்போறேன்...

    போட்டோ செம டெரரு... அன்னிக்கு சொன்னாமாதிரி லிவிஸ்ங்டனக்கு கருப்புகண்ணாடி போட்டமாதிரி இருக்கு...

    ReplyDelete
  26. இப்போவெல்லாம் அடிக்கடி ஃபோட்டோ வருதே ஏதாவது விசேஷமா..

    லைசென்ஸ் அமீரகத்தை பொருத்தவரை ஒரு சர்டிஃபிகேட் மாதிரி, அதை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. :)))

    //
    உன் கமெண்ட்டுக்கு அப்புறம் பதிவோட கலரே மாறுதுன்னு இங்க அவனவன் அலறிக்கிட்டிருக்கான்..!!!//

    :))))))

    ReplyDelete
  28. வாழ்த்துகள் குசும்பரே

    இவண்
    ஷார்ஜா பக்கம் கார் ஓட்டிட்டு வர மாட்டீங்கன்ற தைரியத்தில் உயிர் வாழுவோர் சங்கம்

    ReplyDelete
  29. திருப்பதி + அங்க பிரதட்சணம்

    :)))))))) சிரிச்சு முடியல.

    ReplyDelete
  30. 8 போட்டு நம்மூர்ல லைசென்ஸ் வாங்கறது போல அங்க எட்டு தடவை டெஸ்டுக்கு போய் லைசென்ஸ் வாங்கணும் சொல்லிடுங்க. :)

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்.
    பாத்து வண்டிய ஓட்டுங்க.

    ReplyDelete
  32. //இங்க ஹாரன் ஒருவன் அடிக்கிறான் என்றால் மானெங்கெட்ட தனமாக திட்டுக்கிறான்என்று அர்த்தம்.//

    லைசென்ஸ்க்கு வாழ்த்துக்கள் தல.. இவனுங்களுக்கு மத்தியில வண்டி ஓட்டுறது பெரிய துயரம். சவுதியிலயும் எனக்கு இந்த மாதிரி அனுபவம் இருக்கு. ஆனால் லைசென்ஸ் எடுக்க துபாய் அளவுக்கு இங்க செலவு இல்லை.

    ஆமா லைசென்ஸ் எடுத்ததும் முதல்ல அண்ணாச்சி கார்தான் சிக்குச்சா? ஆஃபீஸ் கார எடுக்க வேண்டியதுதான? பாவம்யா அந்த மனுஷன். எவ்வளவு பேர்ட்டதான் அடிவாங்குறது.

    ReplyDelete
  33. ஏலே மக்கா....

    நீ லைசன்ஸ் எடுத்துட்டேன்னு சொன்னதும் இந்த உலகத்துலேயே நான் தாம்ல அதிகமா சந்தோசப்பட்டிருப்பேன். பின்ன.. ஒரு பார்ட்னர் கிடைச்சாச்சில்லா... துபாய்ல ரிசஷன்ல ஜனத்தொகை குறைஞ்சிடுச்சு... இன்னும் குறைச்சிடலாம்.. டென்சனே ஆவாத... ;-)

    ReplyDelete
  34. /ஒரு வேளை இந்த ஃபோட்டோவைக் காட்டினதும் பயந்துபோய் லைசன்ஸ் கொடுத்துட்டாங்களா?/
    ஹாஹாஹா!சூப்பர்!

    ReplyDelete
  35. சைலண்ட்,வைப்ரேசன் கலக்கல்

    ReplyDelete
  36. அப்படியே ஸ்டீவ் வொண்டர் மாதிரியே இருக்க சரவணா :-)

    ReplyDelete
  37. //ஆசிப் மீரான் said...
    அப்படியே ஸ்டீவ் வொண்டர் மாதிரியே இருக்க சரவணா :-)///

    :)))) அவுரு மாதிரியே பாட்டும் பாடுவாரா அண்ணாச்சி.

    ReplyDelete
  38. அப்பாடா, லைசன்ஸ் கிடைச்சுடுச்சா!!

    லைசன்ஸ ஒரு சாட்டா வச்சு, கெடச்ச கேப்ல படத்தையும் போட்ட்டாச்சா!!

    சைலன்ட் மோட்.. வைப்பரேசன் மோட்.. நல்ல காம்பினேஷன்.

    ReplyDelete
  39. துபாயில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்தமைக்கு பாராட்டுகள்

    நல்வாழ்த்துகள் குசும்பன்

    குட்டிக்குசும்பன் பிறந்த நாள் வாழ்த்து கூறினானா - பலே பலே

    ReplyDelete
  40. \\முழுச்சிருந்தாலே அழுகைதான்:)//

    Same blood boss .

    ReplyDelete
  41. //அவரை அங்கிருந்து நகர்த்தி அழைத்து சென்று பக்கத்தில் கொண்டு போய் படுக்க வெச்சு உருட்டி உருட்டி அவரை விளையாண்டு இருக்காங்க//
    சொல்ற விதத்தில் தான் எதுவும் சிரிப்பை வர வைக்கும். நீங்க இதோ எழுதிய விதம் ஒரு உதாரணம்

    ReplyDelete
  42. சித்தப்பு பக்கத்துல உட்காந்து
    என் முகத்தை பார்த்துமே கொடுக்கல:)

    சந்தோஷ் உன்னை எல்லாம்...

    உ.த ஒய் டென்சன்?:) எனக்கு
    சாயம் பூசாம இருக்கும் வரை நல்லது:)

    நன்றி மின்னல், யூத் இப்ப ரொம்ப பிஸி:)

    ஒய் மாமா உன் நாக்குல வைக்கோலை போட்டு
    கொளுத்த:)

    நன்றி கனாக் காலம்

    நன்றி சென்ஷி

    நன்றி ஆயில், சும்மா யாரும் ஏமாந்து போறாங்களான்னு பார்ப்போம் என்றுதான்:)

    நன்றி கும்க்கி, இந்த பப்பு எல்லாம் இங்க வேகாது:)
    எனக்கு பிறகு ஓட்டியவர் பக்கத்து நாட்டில்(கத்தார்) 15 வருடமாக
    டேக்ஸி டிரைவர், அவருக்கு அது 5 வது டெஸ்ட்:)

    நன்றி ஜமால், நல்லவேளை துனைக்கு ஒரு ஆள் இருக்கு.

    நன்றி சென்ஷி, ஊர் சிரித்தது என்றால் ஊரேவா சிரித்தது?
    அதுமாதிரிதான் நாம என்றால் நான்:) நான் என்றால் நாம:)
    இது புது இலக்கணகுறிப்பு மாமு:)

    நன்றி கரிசல்காரன், உங்களுக்கு அனுபவம் பத்தல:)

    நன்றி அப்துல்லா, என்னா பேச்சு:))

    நன்றி கண்ணா, ரூல்ஸ் பாலோ செய்வது குத்தம்மாய்யா?:)

    வா கலை, ஆங் அவரேதான் டைய கொஞ்சம் பின்னாடி கட்டியிருந்தார் பார்கவில்லையா?:)

    நன்றி சரண், நம்ம ஊரு நம்ம ஊருத்தான் இந்த விசயத்தில்.
    கொஞ்சம் காசு கூட கொடுத்தா டெஸ்டுக்கு கூட போகவேண்டியது இல்லை.

    நன்றி ரோஸ்விக் ஆஹா அப்படி தோனுதா உங்களுக்கு!

    நன்றி ஜேக், வண்டி வாங்கவேண்டியது இல்லை கம்பெணி கொடுக்கும்:)

    நன்றி அசோக், நெக்ஸ்ட் அப்படி ஒரு போட்டோ போட்டுவிடலாம்.

    நன்றி பிரதாப், என்னது லிவிங்ஸ்டென்னா அவ்வ்வ்வ்வ்

    இல்ல அபு அஃப்ஸர், சும்மா ஒரு ஜாலிக்குதான்.

    நன்றி ஆதவா, அந்த வீடியோவில் நீ ஷாக் அடிச்சமாதிரி
    உன்னை ஆடவிட்டுதான் மீதி எல்லாமே..

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, அவரிடம் கிண்டல் செய்வேன்
    கிழக்கு சீமையில் ...கிழக்கு சிவக்கயில பாட்டில் உருட்டுவது
    போல் உருட்டி உருட்டி விளையாண்டாங்களா என்று:)

    தாரணி பிரியா, சிலர் 15,16ன்னு போகிறவர்களும் உண்டு:)

    நன்றி கிருஷ்ணா

    நன்றி சரவணக்குமார்... புது சைக்கிளில் யாராவது ஓட்டி
    பழகுவாங்களா?:))

    சுபைர் எலே மால் ஆப் எமிரேட்ஸ் பார்க்கிங்கில்
    போய் பில்லரை இடிச்சவன்தான்லே நீ:)

    நன்றி அன்புடன் அருணா

    நன்றி வசந்த்

    அண்ணாச்சி நானே ஒரு வொண்டர், இதில அது ஆரு ஸ்டிவ்?:)

    அறிவிலி நான் பாடுவேன்.. ஆனா

    நன்றி மாயாவி

    நன்றி சீனா

    நன்றி ரோமியோ பாய்

    நன்றி மோகன் குமார்

    ReplyDelete
  43. BELATED HAPPY BIRTHDAY அண்ணா
    December -ல பிறந்த எல்லோரும் ரொம்ப நல்லவிங்களா, புத்திசாலிய திறமையனவங்களா இருப்பங்கலாமே உண்மையாவா ???????

    கீழே அமுத்தவம்
    http://nvnkmr.blogspot.com/

    ReplyDelete
  44. நம்மூர் மாதிரி ஏஜென்ட் எல்லாம் கிடையாதா அங்க.....என்ன ஊர்யா அது. நான் லைசன்ஸ் எடுக்க அரை நாள் லீவ் போட்டதோடு சரி, எல்லாம் ஏஜென்ட் தயவுல நல்லபடியா முடிஞ்சிடுச்சு. (செலவு நிச்சயமா ஆயிரதுக்குள்ளதான்) "எந்த ஊர் போனாலும் நம்மூரு போலாகுமா?"

    ReplyDelete
  45. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சரவணண்ணா :)

    லைசன்ஸுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  46. பதிவும் அனேக பின்னூட்டங்களும் கலக்கல்..

    ReplyDelete
  47. துபாய்ல ரிசஷன்ல ஜனத்தொகை குறைஞ்சிடுச்சு... இன்னும் குறைச்சிடலாம்.. டென்சனே ஆவாத... ;-)
    :))))))))))))))))))))

    ReplyDelete
  48. நல்ல பதிவு. குட்டிப் பையனுக்கு எனது வாழ்த்துக்கள். ஆமா நீங்க பிறவிக் குருடர் என்று சொல்லவேயில்லை. அப்புறம் எப்படி லைசன்சு கிடைக்கும். முதல்ல அந்தக் கண்ணாடியக் கழட்டுங்க தலை. நன்றி.

    ReplyDelete
  49. பார்த்து வண்டி ஓட்டவும் :-)

    ReplyDelete