Tuesday, August 18, 2009

ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊஹா ஊஹா!!!


யார் யாரிடமோ உன்
சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய். இது கவிதாயினியின் கவிதை

யார் யாரிடமோ
சில்லரை கேட்டபடி
வீடு வந்தேன்,
வீட்டிலிருந்த நீ
நீ கை நிறைய
சில்லரையோடு இருந்தாய்---ராபிச்சை


***********************

இனி கவிஞர் ஆதிமூலகிருஷ்ணன் கவிதைகள் கருப்பில் இருப்பவை!

ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!



உலர்ந்து விழும் சுண்ணாம்பை போல
நீ போகுமிடம் எல்லாம்
விழுந்துக்கொண்டிருக்கிறது
நீ முகத்தில் பூசிய பவுடர்!


***********************

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

மயக்கத்துக்கு உன் முகம்
பரலோகத்துக்கு உன் வாய்
இப்படி இம்சிக்கவும்
அப்படி கொல்லவும்
அழுக்கை
குளிக்காமல் சேமித்துவைத்திருக்கிறாய்


**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்


உன் அழுக்கு துணிகள்
ஒரு மலைப்போல்
குவிந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு கல்லால் அடிவாங்கிய நாயைபோல
தலைதெறிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
.

**********
காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

பூச்சு புடிச்ச கடலை மாவில் இருந்தும்
அழுகிபோன எலும்பிச்சை பழத்திலிருந்தும்
உன்னை அழகாக்க
முயற்சி செய்துக்கொண்டேயிருக்கிறாய்
முடியாது என்று தெரிந்தும்
எப்பொழுதும் போல் வாய் மூடி நான்!

55 comments:

  1. சபாஷ்!
    கவிமடத்துக்கு இன்னுமொரு கண்மணி :-)

    ReplyDelete
  2. தலைப்பே கவித்துவமா இருக்கு. கவித்துவம்ன்னாலும் கேணத்தணம்ன்னாலும் ரென்டும் ஒண்ணுதானே மக்கா! :-)

    ReplyDelete
  3. //ஆசிப் மீரான் said...
    தலைப்பே கவித்துவமா இருக்கு. கவித்துவம்ன்னாலும் கேணத்தணம்ன்னாலும் ரென்டும் ஒண்ணுதானே மக்கா! :-)

    //

    Repeat eeeeh

    ReplyDelete
  4. ஆஹா.. அண்ணாச்சியே பாராட்டிட்டாரு. இதை விட வேற என்ன கிரெடிட் வேணும் :-))))

    ReplyDelete
  5. இப்பதான் ஒரு சீனியர் வந்து பாராட்டிட்டுப் போனார். சந்தோஷப்பட்டு இளித்த வாய்கூட இன்னும் மூடவில்லை (எவ்ளோ நாளைக்குதான் ஈரம் காயவில்லைனு சொல்றது), அதற்குள் டோட்டல் டேமேஜ்.!

    நான் பதிவு போட்டே கொஞ்ச நேரம்தான் ஆகுது. இந்த மாதிரி நாசவேலைன்னா மட்டும் மின்னல் வேகத்துல நடக்குமே.! நடக்கட்டும்.. இதற்கெல்லாம் நாங்கள் கலங்குவதாயில்லை, ஜெய் அனுஜன்.! (கவனிக்கவும், அனுமன் இல்லை அனுஜன்)

    ReplyDelete
  6. //உலர்ந்து விழும் சுண்ணாம்பை போல
    நீ போகுமிடம் எல்லாம்
    விழுந்துக்கொண்டிருக்கிறது
    நீ முகத்தில் பூசிய பவுடர்!//

    புதுசா இருக்கு.....

    ReplyDelete
  7. ஸ்டேடஸ் மெசஜ்ல கவிதை போட்டது குத்தமாய்யா...

    ReplyDelete
  8. கவிதையெல்லாம் சூப்பர்...ஆனா தலைப்பு அதைவிட சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  9. தல இதெல்லாம் எங்க வொர்க் புக்கு...

    நீங்க இங்கே ஆடலாமா...

    நீங்க நம்ம எதிர் கூடாரத்திலே இருக்குற ஜ்யோராம், யாத்ரா, அனுஜன்யா போன்ற பெரிய பேராசிரியர்களின் தீசிச தீர்த்துட்டு வாங்க தல.

    அப்புறம் இங்கேயும் போய் பாருங்க

    ReplyDelete
  10. ரைட்டு,

    இன்னிக்கு பொழுது போயிடும் :-)

    குசும்பா, ஒரு பட்டறைய நடத்திடலாமா?

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  11. :-)))))))))))))))))))

    nice title


    :-))))))))))))))))))))

    nice kavithai

    ReplyDelete
  12. ஆதி.. தாம்பரத்தில் மிஷன் ஆஸ்பிட்டல் நல்லா பார்ப்பாங்க. செலவும் கம்மிதான். அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வேணும்ன்னா சொல்லுங்க.. ஓ நெகடீவ் தான் க்‌ஷ்டம். ஓல்ட்மன்க் நெகட்டிவ் ஈசியா கிடைக்கும்.. உடனே அட்மிட் ஆயிடுங்க..

    ReplyDelete
  13. என்னவோ போ மாமா.. பின்னி பெடலெடுக்கிற.. :)

    ReplyDelete
  14. /*இருந்தாலும் என்னை எதிரிங்க கூடாரத்துக்கு தனியா அனுப்பும் நீங்க எதிரியா நண்பனா:))*/

    நாங்க நண்பர்களே...
    பயப்பாடாதீங்க தல.... நாங்க பின்புலத்திலே நிற்போம்... எதிரிகளின் கவிக்கோட்டைய அனுஜகுண்டு போட்டு அழிப்போம்

    ReplyDelete
  15. எதிர்கவுஜ ஏகாம்பரம் வாழ்க!

    ReplyDelete
  16. /*குசும்பா, ஒரு பட்டறைய நடத்திடலாமா?

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்*/

    அண்ணே... அதெல்லாம்... அப்புறம் பார்துக்கலாம்னே... முதல்லே... உங்க பதிவுகளை படிச்சி எப்படி கரீட்டா பிரிஞ்சிகிரதுன்னு ஒரு பட்டறைய நடாதுங்கன்னே.... (யார்ரா அது, அதுக்கு பேரு தான் "கொல்லு பட்டறை"யான்னு சவுண்டு விடுறது...)

    நக்கலுடன்
    நையாண்டி நைனா.

    ReplyDelete
  17. //பூச்சு புடிச்ச கடலை மாவில் இருந்தும்
    அழுகிபோன எலும்பிச்சை பழத்திலிருந்தும்
    உன்னை அழகாக்க
    முயற்சி செய்துக்கொண்டேயிருக்கிறாய்
    முடியாது என்று தெரிந்தும்
    எப்பொழுதும் போல் வாய் மூடி நான்!//

    இது டாப் க்ளாஸ் :-))))))))))))))))

    ReplyDelete
  18. எதிர் கவிதைகள் சும்மா

    ஜலபுல ஜலபுல கும் கும் கும்

    ReplyDelete
  19. கலக்கல் கலாய்..கலக்கல் தலைவா..மிக ரசித்த பதிவு.

    ReplyDelete
  20. கலக்கலோ கலக்கல்

    ReplyDelete
  21. குசும்புலக்கடி கல கல கல.. ஊஹா! ஊஹா!!
    குசும்புலக்கடி கல கல கல.. ஊஹா! ஊஹா!!

    கும்தலக்கலடி கும்மாவா..
    குசும்பன்னா சும்மமாவா...


    டாப்புங்கண்ணோவ்....

    ReplyDelete
  22. ஜலபுல
    ஜலபுல
    கும்தலக்கா
    ஊஹா
    ஊஹா!!!

    சூப்பருண்ணே ;))

    ReplyDelete
  23. ஜலபுல
    ஜலபுல
    கும்தலக்கா
    ஊஹா
    ஊஹா!!!

    25 pottukkaren :D

    ReplyDelete
  24. இனிமே கவிதை எழுதனும்னாலே எல்லோரும் இந்தமாதிரி பின்விளைவுகளை யோசிப்பாங்கல்ல !! :))

    //யார் யாரிடமோ
    சில்லரை கேட்டபடி
    வீடு வந்தேன்,
    வீட்டிலிருந்த நீ
    நீ கை நிறைய
    சில்லரையோடு இருந்தாய்//

    யார் யாரிடமோ
    ஓசிச்சரக்கு
    வாங்கி
    குடித்தபடி
    அறைக்கு
    வந்தால்
    ஃபுல் பாட்டிலோடு
    அன்பு நண்பன்
    நீ


    //பூச்சு புடிச்ச கடலை மாவில் இருந்தும்
    அழுகிபோன எலும்பிச்சை பழத்திலிருந்தும்
    உன்னை அழகாக்க
    முயற்சி செய்துக்கொண்டேயிருக்கிறாய்
    முடியாது என்று தெரிந்தும்
    எப்பொழுதும் போல் வாய் மூடி நான்!//


    காலையிலும்
    மாலையிலும்
    மற்றும்
    மதியத்திலும்
    இரவு
    அடிக்க வேண்டிய
    சரக்கிற்கான
    சில்லறையை
    சேகரித்து
    கொண்டேயிருக்கிறேன்.

    எப்பூபூடி, நாங்களும் ரவுடிதான்டி.....
    :))

    ReplyDelete
  25. எதிர்க் கவுஜயா?... என்னமோ போங்க.. நல்லாதான் கலாய்க்குறீங்க

    ReplyDelete
  26. //எதிர்கவுஜ ஏகாம்பரம் வாழ்க!//

    -ரிப்பீட்ட்ட்ட்டு..

    ReplyDelete
  27. :-)))))))))))))))))))

    nice title


    :-))))))))))))))))))))

    nice kavithai

    ReplyDelete
  28. கவிமடத்தின் மற்றொரு கவியே வாழ்க..!

    இப்படி எதிர்ப்பாட்டு பாடியே பேர் எடுத்து விடுகிறார்களே..

    உங்களை உசுப்பி விடுபவர்கள்தான் பாவம்..!

    ReplyDelete
  29. அசத்தல் கவிதைகள் பாஸ்...

    உலர்ந்து விழும் சுண்ணாம்பை போல
    நீ போகுமிடம் எல்லாம்
    விழுந்துக்கொண்டிருக்கிறது
    நீ முகத்தில் பூசிய பவுடர்!//

    இது தான் டாப்...
    :)))

    ReplyDelete
  30. ஹா ஹா ஹா, 579 தான் சொல்லுஙக கலாய்கறதுக்கு உங்களை மிஞ்ச ஆளில்லை.

    ReplyDelete
  31. //.. கார்க்கி said...
    ஓ நெகடீவ் தான் க்‌ஷ்டம். ஓல்ட்மன்க் நெகட்டிவ் ஈசியா கிடைக்கும்.. ..//

    ஓல்ட்மன்க் நெகட்டிவா, ஓல்ட்மென் நெகட்டிவா
    ..??

    ReplyDelete
  32. நல்லாயிருக்கு......

    ReplyDelete
  33. குசும்பா, கலக்கல் எதிர்கவுஜ...

    ReplyDelete
  34. முடியடலடா சாமி..........

    :)))))

    ReplyDelete
  35. எதிர் கவித புகழ் சரவணன் அண்ணா வாழ்க.........

    ReplyDelete
  36. ஹா ஹா ஹா... கலக்கல் போங்க

    ReplyDelete
  37. அண்ணாச்சி நன்றி உங்க பக்கத்தில் கவிமடத்தில் அமர கொடுத்து வெச்சு இருக்கனும்:)

    //கேணத்தணம்ன்னாலும் ரென்டும் ஒண்ணுதானே மக்கா! :-)//

    அப்ப கேணத்தணமும் நானும் வேறு வேறா அப்ப ரைட்டு:))

    சோசப்பு பதிவுக்கு பின்னூட்டம் போடாம அண்ணாச்சிக்கு ரிப்பிட்டூ போடுற உன்னை....

    சென்ஷி ஏன் ஏன் ஏன்?

    ஆதி உங்கள் கவிதையை இப்படி டரியள் ஆக்க ஏதோ புண்ணியம் செஞ்சு இருக்கேன் போல தாங்கள் வாழும் காலத்திலேயே நானும் வாழ்ந்தேன் என்று சொல்லிப்பதில் பெருமை படுகிறேன் கவிஞரே! அனுஜன் அனுமன் வேற வேறயா ஆதி?

    நன்றி குடிகாரன்:)

    ஆதவா எதுவுமே குத்தம் இல்ல நாலு பேரு சிரிக்கனும் என்றால் ஆதி அழுதாலும் குத்தம் இல்லை:)

    நைனா இப்படி உசுப்பேத்தி ஆள காலி செய்ய திட்டமா? நான் அனுஜன்யா கோட்டைக்குள் தனியா போக மாட்டேன்:)

    பைத்தியகாரன் அண்ணே நான் பாவும் போனா போறேன் என்று விட்டு விடுங்க:)


    நன்றி யாசவி

    கார்க்கி ஆதி உடம்பில் ஓல்ட்மங் தான் ஓடுதா?

    நன்றி சஞ்சய் மாமோய்

    நைனா முதலில் அடி எப்படி விழுதுன்னு பார்க்க
    பின்னாடி நின்னா என்னா சைடில் நின்னா
    என்ன நைனா?:)

    வால் நீங்களே இப்படி சொல்லலாமா?

    நைனா அப்படி சொல்லுங்க நல்லா சத்தமா?

    நன்றி செகதீசன்

    நன்றி ராஜா

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி ஜமால்

    நன்றி நர்சிம்

    நன்றி ஜோதி

    நன்றி கலை, கரீட்டா அடுத்த வரிய புடிச்சுட்டீங்க:)

    நன்றி கோபி

    நன்றி G3

    நன்றி வேந்தன்

    நன்றி திகழ்மிளிர்

    நன்றி துபாய் ராஜா

    நன்றி கோஸ்ட்

    நன்றி சுந்தர்

    நன்றி கார்ல்ஸ்பெர்க்

    நன்றி சுப்பு

    நன்றி உ.த

    நன்றி வழிப்போக்கன்

    நன்றி சிவக்குமரன்

    நன்றி பட்டிக்காட்டான்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி சந்தனமுல்லை

    நன்றி பீர்

    நன்றி லெச்சுமி

    நன்றி வெண்பூ, ஊரில் தான் இருக்கீயா ராசா?

    நன்றி அகல் விளக்கு

    நன்றி வசந்த்

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி நிலா

    நன்றி தமிழன் கறுப்பி

    ReplyDelete
  38. கவிதாயினியை விட ஆதிக்குத்தான் டேமேஜ் ரொம்ப போல......
    :)

    ReplyDelete
  39. குசும்பா,
    மகுடிக்கு மயங்கிட வேண்டாம். இதுமாதிரி ஒரு பின்னூட்டம் போட்டுத்தான் அண்ணாச்சி என் வாழ்வைக் கெடுத்தார். "கவிமடம் நொறுங்கிக்கிடக்கிறது... வா என் இளவலே அதைச் செப்பனிட்டு செம்மை செய்வோம்...இருகரம் நீட்டி அழைக்கிறேன்..." என்றெல்லாம் பீலா உட்டார். அவர் கட்டியது மடம் அல்ல. ஆசிரமம்.

    ஜாக்கிரதையாக நடந்து கொள்.

    ReplyDelete
  40. /
    பூச்சு புடிச்ச கடலை மாவில் இருந்தும்
    அழுகிபோன எலும்பிச்சை பழத்திலிருந்தும்
    உன்னை அழகாக்க
    முயற்சி செய்துக்கொண்டேயிருக்கிறாய்
    முடியாது என்று தெரிந்தும்
    எப்பொழுதும் போல் வாய் மூடி நான்!
    /

    சான்ஸே இல்ல குசும்பா
    :)))))))))))

    ReplyDelete
  41. உருண்டு உருண்டு யோசிப்பீங்களோ?
    ஆல் கவித அட்டகாசம்..!!

    ReplyDelete
  42. anujan means thambi(udan piranthavan) hanuman means you kusumbu. thats you onle

    ReplyDelete