Tuesday, August 18, 2009

எல்லோரும் வில்லன்கள் தான்!

பொம்மையை பங்கு போட
புதிதாய் வரும்
தம்பி ”பாப்பா”


மூங்கில் பிரம்போடு
எப்பொழுதும்
உலாவரும் கணக்கு
”வாத்தியார்”

சைட் அடிக்கும் பெண்ணுக்கு
பாடிகாட் மூனீஸ்வர் மீசையோடு
அவ கூடவரும் ”அப்பா”


பீர் அடிச்சு வீட்டுக்கு
வரும் பொழுது
வீட்டுக்கு அருகில் வந்ததும்
வரும் ”வாமிட்”

எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”

புது மனைவிக்கு முத்தம் கொடுக்க
ஆசையோடு நெருக்கும் பொழுது
ஓடி வந்து ரூமில் ஒளியும் ”குட்டீஸ்”

மல்லிகை பூ அல்வாவோடு
வீட்டுக்கு வரும் பொழுது
மூட்டை முடிச்சோடு
வீட்டில் டேரா போட
வந்திருக்கும் ”விருந்தாளிகள்”

மனைவி பிறந்த நாளுக்கு
புடவை எடுத்து கொடுக்க
கடைக்கு போகும் பொழுது
காஸ்ட்லி புடவையை மட்டும்
எடுத்து போடும் ”சேல்ஸ் மேன்”

முதல் மூன்று மாசம்
கடைசி மூன்று மாசம்
பிறகு இரண்டு மாசம்
என்று எல்லாம் முடிஞ்சு ஆசையோடு
மனைவி அருகில் போகும் பொழுது
பாலுக்கு அழும் கை ”குழந்தை”

தியேட்டரில் தனியாய் உட்காந்திருக்கும்
நேரம் “பாஸ் கொஞ்சம் கொஞ்சம் பின்னாடி அங்க உட்கார
முடியுமா நாங்க பிரண்ட்ஸா வந்திருக்கோம்?”
என்று நாலஞ்சு பிகரோட வந்து கேட்கும் ”அவன்”

பலான படம் பார்க்க போய்
இருக்கும் பொழுது
பிட்டு போடும் நேரம்
ரெய்ட் வரும் ”போலீஸ்”


கூட்டத்தில் முண்டி அடிச்சு கைய வுட்டு
ரெண்டு டிக்கெட் என்று கேட்கும் பொழுது
ஹவுஸ் புல் என்று போர்ட் மாட்டும்
”கவுண்டர் ஆள்”

சைட் அடிக்கும் பிகர் ஏறிய பஸ்ஸில்
ஏறி ரூட் விடும் பொழுது சில்லரை
இல்லை இறங்குன்னு
இறக்கிவிடும் ”கண்டெக்டர்”


லோன் போட்டு புதுசா வாங்கிய
பைக்கை ஓட்டி பழக
கேட்கும் ”மச்சினன்”

நடுராத்திரி போன்
போட்டு தூங்கிட்டியா
மாப்பிள்ளைன்னு மப்பில் அனத்தும் ”நண்பன்”

பக்கத்து தெரு ஆயா வூட்டு
அட்ரஸையும்
சூப்பர் பிகர் பீட்டரா
கேட்கும் பொழுது ”இங்கிலீஸ்”

பிகரை பின்னாடி இருந்து
பார்த்துவிட்டு சைக்கிளில்
துரத்தி கிட்டக்க போகும்
பொழுது சடார் என்று கழண்டு
போகும் சைக்கிள் ”செயின்”

புதுசா குடிவந்த பெண்ணை
சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
சாக்லெட் கொடும்மா
என்று சொல்லும் வீட்டு ”பெருசு”

கையில் காசு இல்லாமல்
நண்பர்களோடு
சாப்பிட போகும் பொழுது
கரெக்டா பில்லை நம்மிடம்
கொடுக்கும் ”சர்வர்”

டிஸ்கி: ஒன்றன் கீழ் ஒன்று இருப்பதால் கவிதையாக நினைச்சு விடவேண்டாம் அலைன்மெண்ட் பிராபிளம்!

58 comments:

  1. ரொம்ப காய்ஞ்சு போய்ருக்கிங்க போல :-)

    ReplyDelete
  2. நிறைய்ய விசயம் நமக்கு அவுட் ஆஃப் சிலபஸ்ஸாவே இருக்குது :-(

    ReplyDelete
  3. மச்சான் இதைப் பார்த்தியா!

    ReplyDelete
  4. ஒங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?

    ReplyDelete
  5. //ஒன்றன் கீழ் ஒன்று இருப்பதால் கவிதையாக நினைச்சு விடவேண்டாம் அலைன்மெண்ட் பிராபிளம்! ///

    நோ !

    நோ !!

    இது கவிதைதான் :)))))

    ReplyDelete
  6. //எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
    மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
    பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
    ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”//

    //பிகரை பின்னாடி இருந்து
    பார்த்துவிட்டு சைக்கிளில்
    துரத்தி கிட்டக்க போகும்
    பொழுது சடார் என்று கழண்டு
    போகும் சைக்கிள் ”செயின்”//



    ஸேம் பீலிங்க்ஸ்ஸ்ஸ் :(((

    ReplyDelete
  7. நிறைய்ய விசயம் என்னோட சிலபஸ்ஸில் இருந்து எடுத்த மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  8. மூங்கில் பிரம்போடு
    எப்பொழுதும்
    உலாவரும் கணக்கு
    ”வாத்தியார்”
    //


    வாத்தியாரா டீச்சரம்மாவா..?

    :)

    ReplyDelete
  9. //மின்னுது மின்னல் said...

    நிறைய்ய விசயம் என்னோட சிலபஸ்ஸில் இருந்து எடுத்த மாதிரி இருக்கு :)//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. பீர் அடிச்சு வீட்டுக்கு
    வரும் பொழுது
    வீட்டுக்கு அருகில் வந்ததும்
    வரும் ”வாமிட்”
    //


    ங்கொய்ய்யா பீரு’க்கேவா..?

    ReplyDelete
  11. //நடுராத்திரி போன்
    போட்டு தூங்கிட்டியா
    மாப்பிள்ளைன்னு மப்பில் அனத்தும் ”நண்பன்”//

    அப்போ நான் வில்லனா!?

    ReplyDelete
  12. ///புதுசா குடிவந்த பெண்ணை
    சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
    அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
    சாக்லெட் கொடும்மா
    என்று சொல்லும் வீட்டு ”பெருசு///
    இது ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க நேர்மையும் ரொம்ப பிடிச்சிருக்கு.
    :-)
    ஆனா என்ன நாங்க இந்தமாதிரி எழுதிட்டு ரொம்ப தைரியமா “கவிதை”ன்னு பேர் போட்டுக்குவோம், வேணா இங்க பாருங்க http://eniyoruvithiseivom.blogspot.com/2009/08/4.html

    ReplyDelete
  13. ஹி ஹி நன்றி KVR:)

    நன்றி டாக்டர்!

    நன்றி சென்ஷி,ஓக்கே அப்ப அந்த பீர் வாமிட் மேட்டரு?:))

    என்ன சிவக்குமரன் இப்படி சொல்லிடா எப்படி?:)

    ஆயிலு உரக்க சொல்லாதய்யா அப்புறம் கவிதாயினி காயத்ரி கவிதையோட வந்துடப்போறங்க!

    மின்னல் இருக்கும் இருக்கும்:) உங்க சிலபஸ்தான்!

    நன்றி நர்சிம்

    //ங்கொய்ய்யா பீரு’க்கேவா..?//
    யோவ் மின்னல் நமக்கு என்ன தெரியும் நாம தான் பெப்ஸி பார்டியாச்சே, ஆனா பீர் அடிச்சு என் ரூமில் வாமிட் எடுத்தவனை எல்லாம் பார்த்து இருக்கேன் ஆனா யாருன்னு சொல்லமாட்டேன்:)

    ReplyDelete
  14. பாஸ்...பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....:)))

    ReplyDelete
  15. இதுக்கு யாரு இன்ஸ்பிரேஷன்னு தெரியுமே..

    ReplyDelete
  16. அட்டகாசமாய் யோசித்து
    எழுதி வைத்த பதிவைப் போலவே
    இன்னொரு பதிவு எழுதி
    முந்திக் கொள்ளும் பதிவர்..

    ReplyDelete
  17. //புதுசா குடிவந்த பெண்ணை
    சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
    அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
    சாக்லெட் கொடும்மா
    என்று சொல்லும் வீட்டு ”பெருசு”//

    -இதான் Highlight..

    இப்படி நெறைய எழுதி எங்களுக்கும் பல யோசனைகளைக் கொடுக்கும் "குசும்பன்"..

    ReplyDelete
  18. பல விஷயங்களை ரசிக்கமுடிந்தாலும், நல்ல விஷயங்களையும், நொள்ளை விஷயங்களையும் மிக்ஸ் செய்திருந்ததால் பதிவே அம்பேலாகிவிட்டது.. ஹூம்..!

    ReplyDelete
  19. குறிப்பிட்டு இது தான் நல்ல இருக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாமே கலக்கல். ஆனா பீருக்கே "வாமிட்" ஆ?

    //ஆனா பீர் அடிச்சு என் ரூமில் வாமிட் எடுத்தவனை எல்லாம் பார்த்து இருக்கேன் ஆனா யாருன்னு சொல்லமாட்டேன்:)//

    ஒண்ணா நீங்க இருங்க, இல்லான பீர் வாமிட் பார்டிய இருக்க சொல்லுங்க ரூம் ல, ரெண்டு பெரும் சேந்து இருக்கறது அவ்வளவு நல்லா இல்ல.

    ReplyDelete
  20. இப்படி நெறைய எழுதி எங்களுக்கும் பல யோசனைகளைக் கொடுக்கும் "குசும்பன்"..
    //


    இங்கே வில்லன்களை பத்தி பேசிகிட்டு இருக்கோம் குசும்பன் வில்லனா ?

    பென்சில் மீசை வரைஞ்சவரெல்லாம் வில்லனாக முடியாது :)

    ReplyDelete
  21. குறிப்பிட்டு இது தான் நல்ல இருக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாமே கலக்கல். ஆனா பீருக்கே "வாமிட்" ஆ?

    ReplyDelete
  22. வெடிகுண்டு முருகேசன்August 18, 2009 at 6:13 AM

    ஆதிமூலகிருஷ்ணன் கமெடி பதிவுல டெரர் ஆவாதிங்க :)

    ReplyDelete
  23. ellaame rombaa palasu.. puthusaa ethaachum think pannunnunga kusumban.

    ReplyDelete
  24. 6,7,8,9 பத்திகள் மட்டும் சொந்த + நொந்த அனுபவம் போல இருக்கே பாஸ்?

    (உண்மையை சொன்ன எனக்கு யாரும் டிஜிட்டல் பேனர் வைக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!!)

    ReplyDelete
  25. //ellaame rombaa palasu..//

    யாருண்ணே இந்த பேரீச்சம் பழகடகாரன்?

    ReplyDelete
  26. பின்னூட்டம் போடாதவங்கள லிஸ்ட்ல விட்டுட்டீங்களே!!!

    ReplyDelete
  27. எவனெவன்லாம் வில்லன் யோசிக்கிறவைங்களே பெரிய வில்லனுங்கதான் :)

    ReplyDelete
  28. குசும்பண்ணா
    அனாலும் இந்த டிஸ்கி ஓவர்.
    //முதல் மூன்று மாசம்
    கடைசி மூன்று மாசம்
    பிறகு இரண்டு மாசம்
    என்று எல்லாம் முடிஞ்சு ஆசையோடு
    மனைவி அருகில் போகும் பொழுது
    பாலுக்கு அழும் கை ”குழந்தை”//
    மக்களே, இந்த கொலைவெறிக்கு அளவே இல்லையா.

    ReplyDelete
  29. அசத்தல் . கலக்கல்.

    ReplyDelete
  30. நோ... இது கவிதைதான். எனக்கு புரியற மாதிரி எழுதிட்டதால கவிதை இல்லைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்.

    ReplyDelete
  31. //சென்ஷி said...
    மச்சான் இதைப் பார்த்தியா!//

    "அதை"ப் பாத்தா எதையோ சொல்லாம இருக்கறதுக்காக லஞ்சம் குடுக்கறா மாதிரி தெரியுதே...

    ReplyDelete
  32. பலான பலான பட்ங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஆஃப் ஆகும் யுபிஎஸ்

    ReplyDelete
  33. கொன்னுட்ட போ..!

    அசத்தல்டா கண்ணா..!

    ReplyDelete
  34. //டிஸ்கி: அலைன்மெண்ட் பிராபிளம்! //

    இதுதான் நச்!!!

    ReplyDelete
  35. கலக்கல்

    ReplyDelete
  36. // cheena (சீனா) சைட்...
    பலான பலான பட்ங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஆஃப் ஆகும் யுபிஎஸ்
    //

    அய்யா ஒரு பெரிய மனுசன் பேசுற பேச்சா இது ?? என்ன இருந்தாலும் நீங்க சொன்ன matter ஓகே.

    உங்க நேர்மை ரெம்ப பிடிச்சு இருக்கு.

    ReplyDelete
  37. அசத்திட்டிங்க வாத்தியாரே..

    ReplyDelete
  38. வழக்கம் போல சிரிப்பு நிச்சயம். சூப்பர்.

    ReplyDelete
  39. வாழ்க்கையில் இவ்ளோ வில்லன்கள்.. எப்பிடித்தான் ஓட்டுறது...

    அடுத்துப் பதிவு,"நீங்கள் எப்போது ஹீரோ?"(என்பதாக இருக்கட்டும்)

    ReplyDelete
  40. //ஒன்றன் கீழ் ஒன்று இருப்பதால் கவிதையாக நினைச்சு விடவேண்டாம் அலைன்மெண்ட் பிராபிளம்! ///

    ரைட்டு
    :)))

    ReplyDelete
  41. கவிதை சூப்பர் !!!

    ReplyDelete
  42. பட்டயக் கிளப்பீட்டீங்க

    ReplyDelete
  43. ரசித்தேன்..

    :-D

    ReplyDelete
  44. வால் டவுட் வேற இருக்கா?

    முரளி சூப்பர் கவிதைகள்:) அடுத்தபதிவுக்கு
    மேட்டர் சிக்கிடுச்சு:)

    நன்றி நல்லவன்

    நன்றி கார்க்கி

    நன்றி கார்ல்ஸ்பெர்க்

    அண்ணே நொள்ளை எது எதுன்னு
    சொல்லுங்க அடுத்த தபா சரி செஞ்சுடுவோம்!

    ஜானி வாக்கர் நீங்க சொல்லிட்டா சரிதான்:)

    மின்னல் ஏன் யா ஏன்?

    ஜெகதீசன் என்ன எல்லாரும் பீருக்கேவான்னு
    கேட்டா பாவம் அந்த பதிவர் மனசு கஷ்டப்படும்:)

    வெடிகுண்டு ஏன் அவருக்கு சிலது பிடிக்கல போல
    ஏன் டென்சன்?

    அனானி புச்சா யோசிக்க தெரியலீங்கோ!
    முயற்சி செய்கிறேன் நன்றி

    கலை திரும்ப உங்களுக்கு தனியா நன்றி சொல்லனுமா?
    அதான் மேலே சொல்லிட்டேனே?:)

    அபுதுல்லா அண்ணாச்சி அப்படி பார்த்தா
    அனைவரும் வில்லன் ஆயிடுவாங்க:)

    பாலகுமாரன் ஆமாங்க அப்படிதான் பலபேரு
    கவிஞரா திரியிராங்க, ஹி ஹி அனுபவம் இருக்கு போல!:)

    நன்றி சந்தனமுல்லை

    நன்றி வானம்பாடிகள்

    நன்றி அறிவிலி

    நன்றி ஜமால்

    நன்றி ரஹ்மான்

    சீனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

    நன்றி சிநேகிதன்

    நன்றி உ.த

    நன்றி கதிர்

    நன்றி வேலன் அண்ணாசி

    நன்றி செந்தில்வேலன்

    நன்றி பீர்

    நன்றி ஜாக்கி

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி அரங்கப்பெருமாள்

    நன்றி சிவா

    நன்றி பித்தன்,ரெண்டு அடி அடிச்சுக்குங்க
    ஆனா கவிதைன்னு சொல்லாதீங்க!

    நன்றி கோஸ்ட்

    நன்றி பட்டிக்காட்டான்

    ReplyDelete
  45. முப்பது ஒன்றாம் ஓட்டு போட்டாச்சு..,

    ReplyDelete
  46. ////பின்னூட்டம் போடாதவங்கள லிஸ்ட்ல விட்டுட்டீங்களே!!!////

    :)))

    ReplyDelete
  47. //எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
    மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
    பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
    ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”//

    சூப்பர் பாஸ்...பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....:)))

    ReplyDelete
  48. சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
    அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
    சாக்லெட் கொடும்மா
    என்று சொல்லும் வீட்டு ”பெருசு”//

    எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க.

    நாமளும் ஜீப்லே ஏறியாச்சு.நாங்களும் ரவுடிதான்.

    ரவுடிதான்.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  49. very talented experiences, no no, very talented expressions....

    ReplyDelete