Sunday, June 7, 2009

ராமன் சைக்கிள் --சிறுகதை போட்டிக்கு!

ஒழுங்கான ஒரு ரோடு கிடையாது, பக்கத்துல ஒரு கடைகண்ணி கிடையாது, நல்ல ஊரு இது. இந்த ஊருக்கு ஒரு போஸ்ட் ஆபிஸ், அதுக்கு ஒரு போஸ்ட் மேன் ஒண்ணுதான் குறைச்சல் என்று கருஞ்சாபுதூருக்கு மாற்றல் ஆகிவரும் பொழுது புலம்பிக் கொண்டே வந்தார் ராமன்.

கருஞ்சாபுதூரைப் பற்றி உங்களுக்கு சொல்லிவிடுவது நல்லது. கருப்பூரில் இறங்கி அங்கிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தூரம். ஒரு நாளைக்கு இருமுறை வரும் அந்த வெள்ளை தகர பேருந்தை தவிர ரோட்டின் நடுவில் யாரும் போக மாட்டார்கள் கப்பிகல் கிளம்பி கிளம்பி கிடக்கும். ரோட்டில் இரண்டு ஓரத்திலும் ஒத்தயடி பாதை அகலத்துக்கு செம்மண் இறுகி போய் இருக்கும். அதில் ஒருபக்கம் போக இன்னொருபக்கம் வர.



ஒரு ஓட்டு வீட்டின் சைட் போர்சனை 75 ரூபாய்க்கு வாடகைக்கு பிடிப்பதில் ராமனுக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு டெம்போ வைத்து ஒரு கட்டில், ஒரு மர பீரோ, அதோடு கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்களோடும், தன் ஒரே மகனோடு வந்திறங்கினார். மனைவி எவ்வளவோ சொல்லியும் தன்னுடைய சைக்கிளை அந்த வண்டியில் ஏற்ற மறுத்துவிட்டார். தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் வாங்கிய இங்கிலாண்ட் ரலே சைக்கிள். அதில் ஒரு கோடு விழுந்தாலும் துடிதுடிச்சு போய்விடுவார் என்பது சந்திராவுக்கு தெரியும். அதானால் அதுக்கு மேல் பேசவில்லை.


”இரவு போய் நானே ஓட்டிக்கிட்டு வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு, எல்லா சாமான்களையும் இறக்கி வைத்துவிட்டு, டேம்போவிலே சென்று அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டே காலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். கருப்பூரில் இருந்து கப்பிகல் ரோட்டில் வரும்பொழுது சைக்கிளுக்கு ஒன்னும் ஆகிவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஓட்டிவந்தார். இரவு முழுவதும் சைக்கிள் மிதித்த களைப்பில் அடித்து போட்டது போல் தூங்கியவரை காலை சாப்பிட கூட எழுப்பவில்லை. மதியம் எழுந்தவருக்கு அப்பொழுது சூடாக வடிச்ச சாதத்தை போட்டு மிளகு பொடி நல்லெண்ணெயும் சுட்ட அப்பளம் அதோடு வடகதுவையல் வைத்து மனைவி சந்திரா போட்ட சாப்பாடை நன்றாக சாப்பிட்டார்.வீட்டை எல்லாம் ஒழுங்குப்படுத்திவிட்டு, மகன் சம்மந்தப்பட்ட டி.சி எல்லாம் எடுத்து R.Kமுதலியார் சன்ஸ் ஜவுளி கடை மஞ்சள் பையில் வைத்துவிட்டு மனைவி சுட்ட கோதுமை தோசை சாப்பிட்டு படுக்க 9 மணி ஆனது.


இப்ப வந்து இறங்கியது போல் இருந்தது சந்திராவுக்கு. பன்னிரண்டு வருடம் ஓடியதே தெரியவில்லை மகனை காலேஜ் படிக்க ஹாஸ்டலில் சேர்த்துவிட்டபிறகு இருவருடைய சாப்பாட்டு அளவும், பேசிக்கொள்ளும் நேரமும் குறைந்து போனது. ஒவ்வொரு மழைக் காலத்தின் பொழுது வீட்டு ஓனரிடம் ஓடு மாற்ற சொல்வது இவர்களுடைய வழக்கம். அவரும் இதோ இதோன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஒழுகும் இடத்தில் எல்லாம் பாத்திரங்களையும், சாரல் அடிக்கும் சன்னலில் யூரியா சாக்கு போட்டு கட்டியும் அந்த மழைக்காலத்தையும் ஓட்டிவிட்டார்கள். மகன் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்கு போய்விட்டால் எல்லா கஷ்டங்களும் போய்விடும் என்று எல்லா தந்தையைப் போல நினைத்து கொண்டு இருந்தவருக்கு, மகன் ஒரு பொண்ணை இழுத்துக்கிட்டு வந்து, ”இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்” என்று நின்ற பொழுதே எல்லா நாடிகளும் அடங்கிவிட்டன. இருவாரங்கள் கூட ஆகவில்லை முனுமுனுத்துக்கிட்டு இருந்த புது பொண்ணுக்கிட்ட, ”என்னடி சொன்ன! இந்த கிழவிக்குன்னு ஏதோ ஆரம்பிச்ச, சொல்லுடி, என்ன சொன்ன?” என்று கேட்டுக்கிட்டு வந்த சந்திராவை, ”என்னமா தாண்டிக்கிட்டு வர, அவளும் எவ்வளோ தான் பொருத்து போவா?”என்று தள்ளினான் கோபி. இதை ஏதிர்பார்க்காததால் சந்திரா கீழே விழ, அதைப் பார்த்து ஓடிவந்த ராமன், சந்திராவை தூக்கிவிட்டு, கோபிக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தார். நினைவு தெரிந்து மகனை அடிக்கும் முதல் அடி, ”வயசானவரு என்று பார்க்கிறேன் இல்லேன்னா” என்று சொல்லிவிட்டு பொட்டியை கட்டினான் கோபி.


நினைவு தெரிந்த நாளாக ஆசைப்பட்டு எதுவுமே கேட்காத மனைவி காலை எழுந்ததும், ”என்னங்க ஆஞ்சனேயர் கோயிலுக்கு போய்ட்டு வரலாமங்க” என்றதுக்கு மறுபேச்சு சொல்லாமல்கிளம்பினார். அவருக்கு தெரியும் எதுக்கு இன்று கேயிலுக்கு போகனும் என்று சந்திரா கேட்டாள் என்று. இன்றோடு இருபத்து நான்கு வருடம் ஆகிறது கோபி பிறந்து. வீட்டைவிட்டு போய் ஒருவருடத்துக்கு மேல் ஆகுது. பிறசவ வலி வந்த பொழுது இதே சைக்கிளில்தான் தாராசுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் அங்கு தவிப்போடு நிற்றதும், தவழும் மகனே ஹேண்ட்பேரில் ஒயரால் பின்னிய கூடைய முன்னாடி மாட்டி அதில் கோபியை வைத்துக்கொண்டு கும்பகோணம் செல்வம் தியேட்டரில் தங்கபதக்கம் பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது. கோயிலில் மனைவி சாமிபேருக்கு அர்சனை என்றதும் உதட்டோரம் சின்னபுன்னகை தோன்றி மறைந்தது ராமனுக்கு.


”என்னங்க ஏதோ சுறு சுறுங்குது ஒரு சோடா வாங்கிவாங்களேன்” என்று தன் இடதுபக்க மார்பை புடிச்சுக்கிட்டு சொன்னதும், ஓடி போய் வாங்கிவந்து கொடுத்தார்.குடித்ததும் வியர்க்க ஆரம்பித்தது சந்திராவுக்கு. பயந்துபோனவர் தன் சைக்கிளில் உட்கார வைத்து ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்றார். பிரவவத்துக்கு பிறகு சந்திராவை ஆஸ்பத்ரிக்கு அழைத்து செல்வது இப்பொழுது தான். போன சிறிது நேரத்தில், ”சிவியர் ஹார்ட் அட்டாக்” ”சாரி ராமன் எவ்வளோ முயற்சி செய்துபார்த்துவிட்டோம். முடியல.சம்பிராதயமான டயலாக்கை சொல்லிவிட்டு போனார் டாக்டர்.


இறுதிகாரியத்துக்காவது புள்ள வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து தானே கொள்ளிவைத்துவிட்டு வந்தார். தேவையே இல்லாமல், சந்திராவை ஒழுங்கா வெச்சிருந்தேனா?ஒரு நல்ல புருசனா இருந்தேனா? உடம்பு முடியாமல் சுரம் என்று படுத்து இருந்தாலும் ஒருநாள் கூட ஆறிய சோறை போட்டது இல்லையே, ஆனா நான் என்ன செஞ்சேன்?என்று எல்லாம் தோனியது. கடைசியாக சந்திராவோடு வாழ்ந்த வீடு என்பதால் அங்கிருந்து எங்கும் மாற ராமனுக்கு பிடிக்கவில்லை.


சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக உயிர் விடும் பொழுதுதான் தனக்கு வயதாவதை உணர்ந்தார் கடைசியில் பெடல் இருக்கும் இடத்தில் ஒரு கம்பியும் ஒரு பக்க பெடலுமேஇருந்தது, மனைவி கடைசியா அமர்ந்து வந்த சைக்கிள் என்று யாரையும் தொடவிடாமல் வைத்திருந்தார். தானே எல்லா ரிப்பேரையும் செய்தார், பக்கத்து வீட்டு ஓனர் பேரபுள்ளைங்க விளையாட்டு அந்த சைக்கிள் தான். சன்னல் ஓரத்தில் இருக்கும் சைக்கிள் மேல் ஏறி கம்பிய புடிச்சுக்கிட்டு அது மேல ஏறி, குதிப்பது. கேரியரில் உட்காந்து கீங்கீன்னுஹாரன் அடிப்பது என்று அதுங்களுக்கு சைக்கிள் ஒரு விளையாட்டு சாமான். பலமுறை இதுமேல ஏறாதீங்க, ஏறாதீங்க என்று சொல்லி சொல்லி பார்த்துவிட்டு சைக்கிளைவீட்டுக்குள் போட ஆரம்பித்தார். ஏதோ நினைப்பில் அன்று சைக்கிளை உள்ளே போட மறந்து படுத்து இருந்தவர், வெளியில் டமார் என்று சத்தம் கேட்க ஓடி போய் பார்த்தார். பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் மேல் ஏறி விளையாடி கீழே தள்ளிவிட்டுவிட்டார்கள். கோவத்தில் நாலு முதுகில் போட்டு விரட்டியும் கோவம் அடங்காமல் கேரியரை கழட்டிவைத்தார். பசங்க விளையாட வருவது குறைந்தது.


ஞாயிறு காலை சைக்கிள் எடுத்துக் கொண்டு கடைக்கு இட்லி வாங்க போனவர் பெல் அடிக்க நினைத்து, அழுத்திய பொழுது சத்தம் வராமல் கிரிச், கிரிச் என்று சத்தம்தான் வந்தது.பார்த்தவருக்கு பெல்லு மேல் இருக்கும் கப்பு காணாமல் போய் இருந்தது. சைக்கிளை எடுக்கும் முன் பக்கத்துவீட்டு பசங்க சைக்கிள் கிட்ட விளையாடியது நினைவுக்கு வர,அது அவர்கள் வேலையாகதான் இருக்கும் என்று கோபமாக பக்கத்துவீட்டு பசங்களை தேடிக்கிட்டுவந்தார் தேடிவந்தவர் மாமரத்தடியில் மணலை குழைத்து அந்த சைக்கிள் மூடியில் வைத்து பூவரசு இலையில் கப்பு கப்பாக செஞ்சு இட்லி சுட்டுக்கிட்டு இருந்தார்கள்.


”ஏய் ஏன் இத்தனை இட்லி சுடுற போதும் போதும்” என்று சொன்னதும், ”உனக்கு ஒரு இட்லி, எனக்கு ஒரு இட்லி, அம்மாவுக்கு ஒன்னு,அப்பாவுக்கு ஒன்னு...”

“அப்படியும் இன்னும் மீதி ஒன்னு இருக்கே”


”அப்ப அது சாமிக்கிட்ட போன சந்திரா மாமிக்கு ஒன்னு” என்று குழந்தை சொல்வதை கேட்ட ராமன், வீட்டுக்கு வந்து தேடி எடுத்தார், கழட்டிபோட்ட கேரியரை!

60 comments:

  1. \\”அப்ப அது சாமிக்கிட்ட போன சந்திரா மாமிக்கு ஒன்னு” என்று குழந்தை சொல்வதை கேட்ட ராமன், வீட்டுக்கு வந்து தேடி எடுத்தார், கழட்டிபோட்ட கேரியரை!\\

    சோ டச்சிங் ...

    ReplyDelete
  2. வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மறுக்கா படிச்சேன்

    ரொம்ப நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  4. ம்ம்ம்...

    நீங்களுமா...?


    :)


    வாழ்த்துக்கள் சகா..:)

    கலக்கல்..!!

    சூப்பர் :!

    ReplyDelete
  5. கோயிலில் மனைவி சாமிபேருக்கு அர்சனை என்றதும் உதட்டோரம் சின்னபுன்னகை தோன்றி மறைந்தது ராமனுக்கு.
    //


    ம் சொல்லாமலே புரியுது


    இங்க தான் நிக்குறீங்க

    ReplyDelete
  6. சூப்பர் சென்டிமென்டல் கதை
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. :))))

    ஒண்ணும் சொல்லிக்க முடியல..

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கதை ரொம்ப நல்லா இருக்கு.உணர்வுகளை உணரமுடியும் கதை.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. மிக அருமையான கதை

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்லாருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நெஞ்ச உருக்குற கதை.
    என்ன சொல்றதுன்னு தெரியல.

    ReplyDelete
  12. 'தவமாய் தவமிருந்து' ஸ்கிரிப்டை ஒரத்திலிருந்து கிழித்து ஒட்டினது மாதிரி இருக்கிறது. நகைச்சுவையைக் கதையை முயன்றிருக்கலாம். அதை எழுதத்தான் இன்று பெரிதாய் ஆளில்லை. இதுமாதிரி 'சென்ட்டிமென்ட்' கதைகள் வாரப்பத்திரிகைகளில் கொட்டிக் கிடக்கு. எனிவே, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  13. நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் குசும்பன்

    ReplyDelete
  14. //சாப்பிட்டு படுக்க 9 மணி ஆனது.

    இப்ப வந்து இறங்கியது போல் இருந்தது சந்திராவுக்கு.
    பன்னிரண்டு வருடம் ஓடியதே தெரியவில்லை மகனை
    காலேஜ் படிக்க ஹாஸ்டலில் சேர்த்துவிட்டபிறகு//

    கதை நிகழ்காலமா, கடந்த காலமான்னு கொஞ்சம்
    குழப்பின மாதிரி இருக்குணே, மேல சொன்ன பத்தியில்!

    அட, கதையெல்லாம் எழுதுவீங்களா? சொல்லவே..யில்ல?
    சோகக்கதை.. அதனால,

    ReplyDelete
  15. ரொம்ப நல்லா இருக்கு ஓய்

    ReplyDelete
  16. 1500க்கு வாழ்த்துக்கள்.

    செண்டிமெண்ட் சூப்பர் :-)

    ReplyDelete
  17. கதையோட கடைசி வரியை முடிவு செஞ்சிட்டு கதை எழுத ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. ஒரு மனுஷனோட மொத்த வாழ்க்கையையும் ரெண்டு பக்கத்திலே அடைக்கிறது சரியான உத்தின்னு தோணல. ஒரு மாதிரி தடதடன்னு ஓடுற மாதிரி இருக்கு. கடைசி வரில மட்டும் சிறுகதைக்கான டச் இருக்கு, மத்தபடி தவமாய் தவமிருந்து படத்தின் ட்ரைலர் பார்க்கிற உணர்வு.

    உங்க கிட்டே இன்னும் சிறப்பான கதையை எதிர்ப்பார்த்து வந்தேன்.

    ReplyDelete
  18. ம்ம் சொல்ல மறந்துட்டேனே, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் (போட்டிக்கான கதைன்னா இதை சொல்லிடணுமாமே :-) )

    ReplyDelete
  19. கதையைப்பூரா ஒக்காந்து தனியா ஒருநாள் படிக்கிறதா ஐடியா.! நெக்ஸ்ட் மீட் பண்றேன்..

    ReplyDelete
  20. குசும்பு

    உங்களுக்கு குசும்பு மட்டும் தான் வருமுண்ணு நினைச்சேன். செண்டிமெண்டும் நல்லா வருது. இருந்தாலும் கும்மி மாதிரி இல்ல.

    பி.கு : சிறு கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. குசும்பு

    உங்களுக்கு குசும்பு மட்டும் தான் வருமுண்ணு நினைச்சேன். செண்டிமெண்டும் நல்லா வருது. இருந்தாலும் கும்மி மாதிரி இல்ல.

    பி.கு : சிறு கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. தல நீங்களும் களத்துல இறங்கியாச்சா..


    சொக்கா...சொக்கா...எனக்கில்ல...எனக்கில்ல.....
    :((

    ReplyDelete
  23. //”ஏய் ஏன் இத்தனை இட்லி சுடுற போதும் போதும்” என்று சொன்னதும், ”உனக்கு ஒரு இட்லி, எனக்கு ஒரு இட்லி, அம்மாவுக்கு ஒன்னு,அப்பாவுக்கு ஒன்னு...”


    “அப்படியும் இன்னும் மீதி ஒன்னு இருக்கே”



    ”அப்ப அது சாமிக்கிட்ட போன சந்திரா மாமிக்கு ஒன்னு” என்று குழந்தை சொல்வதை கேட்ட ராமன், வீட்டுக்கு வந்து தேடி எடுத்தார், கழட்டிபோட்ட கேரியரை!//


    நெகிழ செய்யுது பாஸ்...

    அருமையான கதை...

    வெற்றிபெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. நல்லாருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. குசும்பா! அது என்ன உனக்கு மட்டுமே பரிசுன்னு முடிவு பண்ணிட்டயா? கூல் கூல் உனக்கு 1500 உண்டு. டயப்பர் செலவு இருக்குல்ல!

    ராஜா சொன்ன மாதிரி கடைசி வரி வச்சி கதை எழுதின மாதிரி ஒரு தோற்றம்! இட்ஸ் ய மைல்ட் மிஸ்டேக்!

    ReplyDelete
  26. செண்டிமெண்ட் கதைன்னா புள்ளைங்க பெத்தவங்களை உதாசீனபடுத்தியே ஆகனுமா.......

    என்னை பொருத்தவரை பிள்ளைகளொட இந்த போக்கிற்கு பெத்தவங்கதான் காரம்னுமுன்னு நினைக்குறேன். ஏன்னா பிள்ளைகளுக்கு உணருரமாதிரி தங்களொட அன்பை செலுத்துலையொனு தோனுது. அதனாலதான்.............

    எதவது தப்ப இருந்த சுட்டி காட்டவும்

    ReplyDelete
  27. சோகம் தொட்டுசென்றது! :(

    வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. // சுரேஷ் கண்ணன் said...

    நகைச்சுவையைக் கதையை முயன்றிருக்கலாம். அதை எழுதத்தான் இன்று பெரிதாய் ஆளில்லை. //


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  29. நல்லாயிருக்குண்ணே ;)

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  30. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  31. என்ன தான் தெரிந்த கதை அல்லது, நாம் எதிர்பாத்த தளத்திலேயே போய் கொண்டிருந்தாலும், ..... கையை கொடுங்க, ரொம்ப நல்லா இருக்கு ..வாழ்த்துக்கள் ( பாலை ஊத்திட்டேன் !!!!)

    ReplyDelete
  32. வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. உங்க ஸ்டைல்ல பட்ட கெளப்புங்கண்ணே...இந்த சீரியஸ் டாபிக் எழுதறத்துக்கு நெறய பேர் இருக்காங்களே.....

    ReplyDelete
  34. ஒரு நாவல் எழுதுமளவு உள்ள விஷயத்த சிறுகதையா சுருக்கியிருக்கீங்க.

    ReplyDelete
  35. இறுதிவரி பூவே பூச்சூடவா திரைப்படத்தை நினைவுபடுத்தியது...

    வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  36. Finishing touch sema cute :)))))

    ReplyDelete
  37. vaazhthukkal.. vetri peruvadharku :)

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. ம்ம்ம்ம்ம்... கதை நல்லா இருக்கு.. நடை இன்னும் கொஞ்சம் மெருகேத்தி இருக்கலாம். இருந்தாலும் முதல் 20 இடத்துல வர்றதுக்கான தகுதி கண்டிப்பா இருக்கு, அதனால.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  41. தல கடைசி வரிகள் தான் அட்டகாசம்..
    கதை டச்சிங்கா இருந்துச்சு..
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  42. சுரேஷ் கண்ணன் பின்னூட்டத்தை இப்பவும்! வழிமொழிகிறேன் குசும்பன்.

    ReplyDelete
  43. நல்ல கதை
    நல்ல முடிவு
    வர்ணனை அருமை
    ராமன் சந்திரா மனநிலை நன்கு விளக்கப் ப்ட்டிருக்கிறது.

    முடிவு சூப்பர்

    ReplyDelete
  44. நல்லாயிருக்குங்க.(ரெடிமேட் பின்னூட்டம்தான்)

    ReplyDelete
  45. நல்ல கதை தல...

    நகைச்சுவை சிறுகதை என்பது அவ்வளவு சுலபம் இல்லை. முயற்சி செய்து பார்க்கலாம் :)

    ReplyDelete
  46. உணர்வுகளை உணரமுடியும் கதை.வெற்றிபெற வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  47. வெற்றி பெற வாழ்துக்கள்... கதை சூப்பர்.

    ReplyDelete
  48. Being from Kumbakonam, I enjoyed the story.

    ReplyDelete
  49. சூப்பர் சென்டிமென்ட.
    ரொம்ப நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  50. நல்லா இருக்குங்க,

    //கடைகண்ணி கிடையாது//

    இது மாதிரி இன்னும் நிறைய தஞ்சை வட்டார சொற்களை பயன்படுத்தியிருக்கலாம்.

    வெற்றிபெற வாழ்த்துகள் .

    ReplyDelete
  51. கடைசியா ஏதாவது காமெடி ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சு ஏமாந்துட்டேன் .. செண்டிமெண்ட் சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  52. நன்றி ஜமால்

    நன்றி மின்னல்

    நன்றி j

    நன்றி சென்ஷி

    நன்றி மங்களூர்

    நன்றி கார்த்திக்

    நன்றி வித்யா

    நன்றி சோசப்பு

    நன்றி சுரேஷ்கண்ணன், கதையில் காமெடி எழுத வரமாட்டேங்குது வெறும் காத்துதான் வருது. தவமாய் தவம் இருந்து சேரம் குமுறி குமுறி அழுது படுத்துவார் என்பதால் அந்த படத்தையும் பார்க்கவில்லை:))


    நன்றி ஜீவ்ஸ்

    நன்றி கலை

    நன்றி சித்து

    நன்றி கடைக்குட்டி

    நன்றி ராஜா, அப்படி எல்லாம் எதுவும் முடிவோட எல்லாம் எழுத ஆரம்பிக்கலங்க! ஒரே ஒரு முடிவுதான் எங்க வூட்டுகாரனும் கச்சேரிக்கு போனான் என்று சொல்லிக்கனும்:))


    ஆதி எஸ்கேப் ஆயிட்டீங்க:))


    நன்றி நாஞ்சில் நாதம்

    நன்றி கன்னா

    நன்றி சின்னப்பையன்

    நன்றி அபிஅப்பா

    நன்றி என் பக்கம் ! ரொம்ப இன்வால்வ் ஆகி படிச்சுட்டீங்களோ!
    இப்படி எல்லாம் என் கதைய படிச்சா தோனுது? அப்ப இது கதையே தானா?:)))

    நன்றி ஆயில்யன்

    நன்றி கோபி

    நன்றி விக்னேஷ்வரி

    நன்றி சுந்தர்

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி கும்க்கி வெறும் காத்துதான் வருது:(

    நன்றி பித்தன்

    நன்றி G3

    ராகுல் முயற்சிக்கலாம்!

    நன்றி வெண்பூ

    நன்றி ராம்

    நன்றி வினோத் கவுதம்

    நன்றி வெயிலான், முன்பு நீங்க சொன்ன மாதிரி காமெடி எழுத வரமாட்டேங்குது தல!

    நன்றி சீனா

    நன்றி T.V.ராதாகிருஷ்ணன்

    நன்றி வெட்டி, நீங்கதான் சரியா சொன்னீங்க!

    நன்றி thevanmayam

    நன்றி ரசீன் நிசாம்

    நன்றி RG

    நன்றி பட்டாம்பூச்சி

    நன்றி நாடோடி இலக்கியன்

    நன்றி புவனேஷ்

    ReplyDelete
  53. அன்பு குசும்பு...

    /*
    ஒரு மனுஷனோட மொத்த வாழ்க்கையையும் ரெண்டு பக்கத்திலே அடைக்கிறது சரியான உத்தின்னு தோணல. ஒரு மாதிரி தடதடன்னு ஓடுற மாதிரி இருக்கு. கடைசி வரில மட்டும் சிறுகதைக்கான டச் இருக்கு.

    உங்க கிட்டே இன்னும் சிறப்பான கதையை எதிர்ப்பார்த்து வந்தேன்.
    */

    /*உங்க ஸ்டைல்ல பட்ட கெளப்புங்கண்ணே...இந்த சீரியஸ் டாபிக் எழுதறத்துக்கு நெறய பேர் /இருக்காங்களே/ இருக்கோமே...!
    */

    நானும் இவற்றை ரிபீட்டிக்கிறேன்..!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. Romba touching aana story...... Superb.....

    ReplyDelete
  55. IPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/

    ReplyDelete