Tuesday, June 2, 2009

எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

இது சந்தோஷ் கடன்...

நமக்கு இந்த கடன் என்றாலே அலர்ஜிங்க அதன் பாதிப்பு ரொம்ப அதிகம் என்பதால் சில மாதங்களுக்கு முன் சந்தோஷ் மாப்பி என்னை தொடர் பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார். சிலபல காரணங்களால் எழுதமுடியவில்லை இருந்தாலும் அவர் அழைப்பை ஏற்காமல் இருப்பது சரி இல்லை என்பதால் முதலில் அவர் கடனை முடித்துவிடுகிறேன். இளைஞர்கள் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து எழுதியிருந்தார் அதுமாதிரி நானும் எழுதனும் என்றார்...



ஓட்டு போடுவது என்பது ரொம்ப முக்கியம், அதுவும் நல்ல பதிவுகளுக்கு ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழ்மணத்திலும், தமிழிஸிலும் ஓட்டு போடுவதால் பதிவுகளை அதிகம் பேர் படிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க , ஓட்டு போடுங்க:))(மாப்பி நீ சொன்னது மாதிரியே அனைவரையும் ஓட்டு போட சொல்லிட்டேன் மாப்பி)



********************
இனி சஞ்சய் கடன்...
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னமோ கூரியரில் வந்தமாதிரி கேள்வி கேட்குறீங்க, என் முழு பெயரான சரவணவேல் முருகனின் பெயர் என்பதாலும் அழகு என்ற சொல்லுக்கு முருகா என்ற மீனிங் இருப்பதாலும் இந்த பெயர் வந்தது. பிடிக்கும்


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அம்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்துக்காக அலைந்த அன்று...


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கல்லூரியில் விழுந்து விழுந்து படிக்கும் நண்பர்களை விட அதிக மார்க் வாங்கும் பொழுது அவர்கள் சொல்வார்கள், டேய் உனக்கு ஏன் மார்க் அதிகம் கிடைக்குது தெரியுமா? உன் கையெழுத்தால் தான் என்பார்கள்.

பெயில் ஆக்கினா திரும்ப இந்த கையெழுத்தை பார்க்கவேண்டி இருக்குமே என்பதால் அதிகமார்க் போட்டு பாஸ் ஆக்கிவிடுகிறார்கள் என்பார்கள்.

அப்படி இருக்கும் என் கையெழுத்து இன்று எழுதியதை இரண்டு நாள் கழிச்சு பார்த்தா எனக்கே புரியாது...


4).பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் விரால் மீன் வறுவல்


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

மேல்தட்டு மக்களுடன் என்றால் மிகவும் யோசிப்பேன்... நம்மை மாதிரி பய புள்ளைங்க என்றால் உடனே வச்சுக்குவேன்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சுற்றிலும் கோபியர் கூட்டம் என்றால் குட்டையில் கூட குளிக்க பிடிக்கும் :)


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணா பெண்ணா என்பதை பொருத்து பதில் மாறும். ஆண் என்றால் மோட்டுவளைய பார்ப்பேன். பெண்ணாக இருந்தால் நான் சொல்லும் பதிலை பார்த்து சிரிக்காம இருக்கனும் சரியா! ஆபிஸ்க்கு பிரிண்ட் செய்யவரும் லெபனிஸ் பெண்களையும், ரஸ்ய அழகிகளையும் கண்களை மட்டுமே பார்ப்பேன். (ஒவ்வொரு ஊருக்கும் ஒன்னு ஒன்னு ஸ்பெசல் போல! இருந்தாலும் நான் நல்ல பிள்ளை சாமியோவ்வ்வ்வ்)


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது---கோபம்

பிடிக்காதது---கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

கமலை ஏன் பிடிக்கும் என்றால் நடிப்புக்காக என்று சொல்லலாம், மனைவிக்கிட்ட பிடித்த விசயம் ஏன் அவர்களை பிடிக்கும் என்று ஆராய்வது அபத்தமாக தோன்றும்... ஓஷோ சொன்னது ...”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

குடும்பத்தோடும் நண்பர்களோடும்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

எப்படி இப்படி எல்லாம்? முடியல...


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒரு பிகரை பார்த்துக்கிட்டு இருக்கேன்...


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இப்பொழுது இருக்கும் அதே கருப்பு கலரில்...எல்லா பொருட்களிலும் கருப்புக்கு ஒரு கம்பீரம் இருக்கும் BMW கருப்பு கலர் கார், கருப்பு கலர் பைக், கருப்பு கலர் பேனா இப்படி பல ... ஆனால் தோலில் மட்டும் கருப்புக்கு மரியாதை கிடையாது.


14.பிடித்த மணம்?

தலைகுளித்துவிட்டு பெண்கள் தலையில் வைக்கும் சந்தனமுல்லையோடு மரிக்கொழுந்து வாசம் இருந்தாலே...ம்ம்ம்ம்ம்ம் நரம்பு எல்லாம் முறுக்கேறும்!


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

இதை அவர்களும் படிப்பார்கள் அந்த காரணம் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் நேசிப்பதற்கு அழகு


நாமக்கல் சிபி

அனுஜன்யா

மகேஷ்

ஆதிமூலகிருஷ்ணன்


மற்றவர்களை பரிசலும் மற்ற நண்பர்களும் கூப்பிட்டுவிட்டார்கள்...


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?



17. பிடித்த விளையாட்டு?

உள்ளேவா வெளியேவா?


18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, ஆனால் போஸ் கொடுப்பவர்:)


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கருத்து கந்தசாமியாக இல்லாமல் இருக்கும் படங்கள் பிடிக்கும்...


20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்


21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம்---சிலு சிலுக்கும் காற்றோடு வரும் சாரல், மழை விட்டதும் தேங்கி கிடக்கும் தண்ணியில் ஆட்டம் போடும் குழந்தைகள்., கரண்ட் இல்லாமல் அரிக்கேன் வெளிச்சத்தில் சாப்பிடும் சாப்பாடு, படுக்கும் தரையில் இருக்கும் ஒரு வித சிலீர் சில்லுப்பு, குளித்து முடித்து தலை துவட்டாத மரங்கள் என்று பல காரணங்களுக்காக மழைகாலம் ரொம்ப பிடிக்கும்.


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புலிநக கொன்றை


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பொழுதும் ஓஷோ


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ச்ச்ச்!

குழந்தையின் அழுகை சத்தம், தகரத்தை டர டரன்னு அறுக்கும் சத்தம்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

துபாய்


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சமா கிரியேட்டிவாக யோசிக்கும் திறமை...


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நடத்தையில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு பெண் இவன் தான் காரணம் என்று முழு பழியையும் ஆடவனின் மீது போடும் பொழுது. உதாரணம் கொடுக்கலாம் ஆனால் விரும்பவில்லை.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

மை டியர் குட்டிசாத்தான்


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிம்லா


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை!


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி ஒன்றும் இல்லை...


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

:) :(


நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

******************
இது கண்ணன் கடன்
அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் அவர்கள் சந்தோசத்துக்காக நண்பர்களும் வாசகர்களும் கராமா சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் இருக்கும் பார்க்குக்கு வந்துவிடவும்.
நாள்: வெள்ளி கிழமை
நேரம்: மாலை 6 மணி

36 comments:

  1. நண்பரே !!!
    தங்களுடைய முந்திய பதிவு மிகவும் நன்றாகா இருந்தது !!!

    ReplyDelete
  2. நண்பரே !!!
    தங்களுடைய முந்திய பதிவு மிகவும் நன்றாக இருந்தது !!!

    ReplyDelete
  3. // Kurai Ondrum Illai said...

    நண்பரே !!!
    தங்களுடைய முந்திய பதிவு மிகவும் நன்றாகா இருந்தது !!!//

    அதனால் என்ன! குறை ஒன்றும் இல்லை :)

    ReplyDelete
  4. இன்னும் படிக்கலை :)

    ReplyDelete
  5. நமிதா இன்னைக்கு ஃபுல் பார்ம்ல இருக்காங்க போல. எல்லா இடத்துலயும் கமெண்ட் கொட்டி கிடக்குது :)

    ReplyDelete
  6. //தலைகுளித்துவிட்டு பெண்கள் தலையில் வைக்கும் சந்தனமுல்லையோடு மரிக்கொழுந்து வாசம் இருந்தாலே...ம்ம்ம்ம்ம்ம் நரம்பு எல்லாம் முறுக்கேறும்!//

    அடப்பாவி மாமா.. பெண்”களா”? :(

    ReplyDelete
  7. //ஓட்டு போடுவது என்பது ரொம்ப முக்கியம், அதுவும் நல்ல பதிவுகளுக்கு ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழ்மணத்திலும், தமிழிஸிலும் ஓட்டு போடுவதால் பதிவுகளை அதிகம் பேர் படிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க , ஓட்டு போடுங்க:))(மாப்பி நீ சொன்னது மாதிரியே அனைவரையும் ஓட்டு போட சொல்லிட்டேன் மாப்பி)/

    கொய்யால.. :)

    ReplyDelete
  8. ஏய் மச்சான் நீ கேளேன்..
    மச்சான் நீ கேளேன்..


    சரி சரி ஓட்டு போட்டுட்டேன் :)

    ReplyDelete
  9. //”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”//

    தொர இங்கிலீசெல்லாம் கோட்டு பண்ணுது.. :)

    ReplyDelete
  10. முருகன் அப்படின்னா அழகன் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்காக?

    நல்லா இருக்கு பதிலெல்லாம்.

    ReplyDelete
  11. //சுற்றிலும் கோபியர் கூட்டம் என்றால் குட்டையில் கூட குளிக்க பிடிக்கும்//

    இதுதான் குசும்பு டச்...

    கலக்கல் தல...

    ReplyDelete
  12. //இது கண்ணன் கடன்அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் அவர்கள் சந்தோசத்துக்காக நண்பர்களும் வாசகர்களும் கராமா சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் இருக்கும் பார்க்குக்கு வந்துவிடவும்.நாள்: வெள்ளி கிழமைநேரம்: மாலை 6 மணி //

    கடனை தீர்த்தற்கு நன்றி...

    ட்ரீட் தர சொல்லி என்னை கடனாளி ஆக்கலாமா...?

    சிம்ரன் ஆப்பகடைக்கு முன்னாடி வரசொன்னது தப்பா போச்சே...

    பேசாம ஏதாவது ஒரு பாலைவனத்திற்கு வரசொல்லிருக்கலாம்..:(

    ReplyDelete
  13. திரு சென்ஷி அவர்களே !!!
    நன்றி .. முதலில் தவறாக எழுதி பின்னர் பார்த்த போது தவறை உணர்தேன் . அதனால் தான் மீண்டும் எழுதினேன் ..

    ReplyDelete
  14. //அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் அவர்கள் சந்தோசத்துக்காக நண்பர்களும் வாசகர்களும் கராமா சிம்ரன் ஆப்ப கடைக்கு எதிரில் இருக்கும் பார்க்குக்கு வந்துவிடவும்.//
    கடைசியா ஒரு குசும்பு டச். பதிவு நல்லா இருக்கு சரவணன்

    ReplyDelete
  15. பதில்களில் பின்னி இருக்கீங்க...
    :)))

    ReplyDelete
  16. பேசும் போதே உண்மைகள சொல்லிறீங்க...
    //12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
    ஒரு பிகரை பார்த்துக்கிட்டு இருக்கேன்...
    //
    இதத்தான் சொல்லுறன்..
    இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....
    :)))

    ReplyDelete
  17. போலான்னா போலாம்!

    ReplyDelete
  18. \\27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

    நடத்தையில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு பெண் இவன் தான் காரணம் என்று முழு பழியையும் ஆடவனின் மீது போடும் பொழுது. உதாரணம் கொடுக்கலாம் ஆனால் விரும்பவில்லை.\\


    மிகவும் புடித்த பதில்

    (அடி பலமோ (என்னையே கேட்டுக்கிட்டது))

    ReplyDelete
  19. //இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை //

    தல என்கிட்ட ஒரு 2000 திர்ஹாம்ஸ் இல்லை......கிடைக்குமா..?

    ReplyDelete
  20. ஏனுங்கண்ணா என்னையெல்லாம் ஏன் யாருமே கூப்பிடமாட்டேன்றீங்க

    ReplyDelete
  21. //கடன்அமீரகத்தில் இருக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் சேர்ந்து பழய பதியவர்களுக்கு ட்ரீட் தரவிரும்புவதால் //

    நானும் பழைய ஆளுதான் என்னையும் சேர்த்துக்கங்கப்பூ

    ReplyDelete
  22. //சுற்றிலும் கோபியர் கூட்டம் என்றால் குட்டையில் கூட குளிக்க பிடிக்கும் :)//

    இப்புடி ஒரு நினப்பு இருக்கா...இதோ வர்ரேன் குட்டைய குழப்ப.

    ReplyDelete
  23. குசும்பரே!மறுபடியும் Sick leave எழுதிப் பழக நாந்தான் மாட்டினேனா:)

    ReplyDelete
  24. //”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”//

    எப்டிம்மா இதெல்லாம்?
    பதில்கள் எல்லாம் சூப்பரா இருக்கு மாப்பி

    ReplyDelete
  25. தல நிஜமாவே சிங்கப்பூர்ல இருக்கிங்கனு நினைச்சேன்..உங்க குசும்புக்கு அளவே இல்லையா..:))

    ReplyDelete
  26. \\

    இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை!

    \\

    அசத்தல் பதில்

    ReplyDelete
  27. Dear Mr. Kusumban, good to read your answers for all the questions. Prooving again and again as you are fun loving person. My humble request is, can you please alter the answer for the question no 6. It can be better if it is said as kanniar kootam than gopiar kootam. my humble request to change this.

    ReplyDelete
  28. :)) :()

    எல்லாமே நல்லா இருக்குங்க!

    ***
    கொஞ்ச நாள் அப்பா அங்கே துபாயிலே வேலை செஞ்சார். நான் அங்கு கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கேன்... கொஞ்ச வருஷம் முன்னாலே இருக்கும்.. இப்போ இந்தியாவிலே இருக்கார்... கோவை.

    லூலுஸ், பர் துபாய் மற்றும் கரமாவை மறக்க முடியுமா. ஷாபிங்... ஷாபிங் தான்.

    கராச்சி தர்பாரில் பெரிய பராட்டா மற்றும் கரம் சாய் இன்னும் கிடைக்கிறதா?

    ReplyDelete
  29. //2.கடைசியாக அழுதது எப்பொழுது?


    அம்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணத்துக்காக அலைந்த அன்று...//

    :(

    //9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


    கமலை ஏன் பிடிக்கும் என்றால் நடிப்புக்காக என்று சொல்லலாம், மனைவிக்கிட்ட பிடித்த விசயம் ஏன் அவர்களை பிடிக்கும் என்று ஆராய்வது அபத்தமாக தோன்றும்... ஓஷோ சொன்னது ...”If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.”
    //

    உங்க கிட்ட கேட்டா ஓஷோசொன்னத சொல்லுரிக :)


    30.எப்படி இருக்கணும்னு ஆசை?


    இல்லை என்று கேட்டபர்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கனும் என்று ஆசை!

    -:)

    ReplyDelete
  30. Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
    It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

    This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

    Top Tamil Blogs

    "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

    சிறந்த வலைப்பூக்கள்

    நன்றி.
    தமிழர்ஸ் டாட் காம்.

    ReplyDelete
  31. என்ன கொடும இது? இன்னும் இங்க நா பின்னூட்டம் போடலியா.?

    ReplyDelete
  32. நீங்க கூப்டதுக்கு நாங்குளும் போட்டுட்டம்ல? எப்பூபூபூபூடிடிடிடி?

    ReplyDelete