Sunday, April 5, 2009

தமிழ்மணத்துக்கு ஒரு கோரிக்கை+ நன்றி நன்றி நன்றி

எந்த பதிவுக்கும் இத்தனை நேரம் யோசனை செய்தது இல்லை, இப்படி எழுதி, எழுதி அழித்தது இல்லை. ஒற்றை வார்தையில் நன்றி என்று சொல்லிவிடலாமா என்றால் ச்சே.. அது அவ்ளோ நல்லா இருக்காது, சரி தமிழ்மணத்துக்கு மட்டும் நன்றி சொல்லி ஒரு மெயில் அனுப்பிடலாம் என்றால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதுபோல தமிழ்மணத்தையும் பப்ளிக்கா கலாய்ச்சுவிட்டு ரகசியமாக நன்றி சொல்லி மட்டும் மெயில் அனுப்பினால் நல்லா இருக்காது என்று எழுதிய மெயிலும் டிராப்ட்டில் இருக்கு.

எப்பொழுதும் படிக்கும் அதே மக்கள் அதே நபர்கள் பின்னூட்டம் என்று ஸ்டார் வாரத்தில் முதல் இரு நாட்கள் ஓடிய பொழுது அதுக்கு முன்பு ஸ்டாராக இருந்த மக்களிடம் கேட்டதில் அவர்களும் அதையேதான் சொன்னார்புது ஆட்கள் மிகவும் குறைவு! அல்லது வருவது இல்லை என்று கொஞ்சம் உற்ச்சாகம் குறைந்தது. இருந்தும் சரி பரவாயில்லை என்று தொடர்ந்து எழுதியதில்,பல பல புதிய பதிவர்கள் வந்தபொழுது மிகவும் உற்சாகமாய் இருந்தது, டாக்டர் ருத்ரன் அவர்கள் பின்னூட்டம் போட்ட பொழுது அட..! நம் பதிவை கூட படித்து இருக்கிறாரே என்று மிகவும் சந்தோசமாக இருந்தது.

பின் புது புது ஆட்கள் ஃபாலோயராக ஆரம்பித்தவுடன் அட..! ஸ்டார் வாரத்திலேயே 200 தொட்டுவிட்டால் நன்றாக இருக்குமே! என்று மனம் பேராசை பட்டது.அது நடக்கவில்லை என்றாலும், ஹிட் கவுண்டர் சூடு வெச்ச மீட்டர் போல செம ஸ்பீடூ.

ஈ ஓட்டிக்கிட்டு இருந்த நம்ம கடை T-நகர் ரங்கநாதன் தெரு கடைத்தெரு போல் ஆனது,தினம் 500 பேர் வரும் இடத்தில் 3000பேர் வரை போனது ஒரே நாளில் இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த தமிழ்மணத்துக்கும்,ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

இது கொஞ்சம் பேராசைதான் இருந்தாலும் பரவாயில்லை, இதுபோல் தொடர்ந்து தங்கள் ஆதரவை தரும் படி கேட்டுக்கிறேன்.

தமிழ்மணத்துக்கு நான் வைக்கும் ஒரு கோரிக்கை
புதிதாக எழுத வரும் பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாய் இணைபவர்களுக்கு முதல் பக்கத்தில் ஒரு இடம் கொடுத்தால், அவர்கள் தனியாக கவனம் பெற வாய்ப்பு இருக்கிறது, முன்பு இருந்த அண்மையில் இணைந்தவர்கள் போல கடந்தவாரத்தில் இணைந்தவர்கள் அல்லது கடந்தமாதத்தில் இனைந்தவர்கள் என்று ஒரு சிறு பகுதி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்த ஏதுவாக இருக்கும். முதல் பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது அங்கு முடியவில்லை என்றாலும் புதிதாக வந்த சினிமா, தேர்தல் 2009 லிங்குக்கு அருகிலாவது புதியவர்களுக்கு என்று ஒரு இடம் கொடுங்கள் மிகுந்த ஆர்வமோடு எழுத வரும் பதிவர்களுக்கு பின்னூட்டம் மட்டுமே உற்சாகத்தை கொடுக்கும் அது இப்பொழுது கிடைக்க வழி இல்லை இருக்கும் கூட்டத்தில் யார் புதியவர்கள் என்பது கண்டுபிடிப்பது மிகவும்கடினம்.

முடிந்தால் செய்யவும்..
நன்றி...!

48 comments:

  1. சூப்பர் !!

    உங்க கோரிக்கை ரொம்ப தேவையானதுதான் !!

    ReplyDelete
  2. நியாயமான கோரிக்கை
    என் போன்ற இளம் பதிவர்களை ஊக்கப்படுத்தும் விதமாய் இருக்கும்.
    எங்கள் சார்பாக தமிழ்மணத்திற்கு கோரிக்கை வைத்த குசும்பணுக்கு இளம் பதிவர்கள் சங்கத்தின் சிங்கை கிளை சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

    ReplyDelete
  3. :-)

    நட்சத்திர வாரத்தை சிறப்பாக்கியதற்கு நன்றி குசும்பா.. தமிழ்மணத்தில் அண்மையில் இணைக்கப்பட்ட இடுகைகள் என்ற பக்கப்பட்டை முன்பு இருந்தது. ஆனால் சூடான இடுகைகள், ரசிக்கப்பட்ட இடுகைகள் என முகம் மாறிய பின்னர் அந்த நிரலை காணவில்லை. நல்ல கோரிக்கை உன்னுடையது.. !!

    ReplyDelete
  4. அதுக்குள்ள குசும்பனோட குசும்பு முடிஞ்சிருச்சா..? வருத்தமா இருக்கு..!

    குசும்பனின் கோரிக்கையை நான் வகை, தொகையில்லாமல் ஆதரிக்கிறேன்..

    தமிழ்மணத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன்..

    ReplyDelete
  5. அப்படியே அடிக்கடி தமிழ்மணம் கொஞ்சம் உறைஞ்சு போகுது அதையும் கவனிக்க சொல்லுங்க

    ReplyDelete
  6. சரிதான் தல...

    உங்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  7. குசும்பனின் கோரிக்கையை நான் வகை, தொகையில்லாமல் ஆதரிக்கிறேன்..
    -----ரிப்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
    அப்புறம் நட்சத்திர வாரத்தில் நிங்கள் எழுதிய சிரியஸ் & குசும்பு பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்துகள் நன்றி

    ReplyDelete
  8. அருமைங்க... குசுப்பரே நீங்க நல்லவரா கெட்டவரா .......

    ReplyDelete
  9. VIKNESHWARAN said...

    அருமைங்க... குசுப்பரே நீங்க நல்லவரா கெட்டவரா .......
    //

    இது தெரியாமல் தான் தமிழ்மணமும் கொழம்பி கிடக்கு


    :)

    ReplyDelete
  10. ரசிக்கப்பட்ட இடுகைகள் என முகம் மாறிய பின்னர் அந்த நிரலை காணவில்லை. நல்ல கோரிக்கை உன்னுடையது.. !
    //



    லக்கி ஸ்டெயில் கலக்கல்

    ReplyDelete
  11. சூப்பர் !!

    உங்க கோரிக்கை ரொம்ப தேவையானதுதான் !!

    குசும்பன் ...

    உங்கள் ஸடார் வாரம் :-) ஜொலித்தது
    நாங்களும் நல்ல நல்ல பதிவுகளை ரசித்தோம் :-)

    உங்களை follow panitaen

    கலக்குங்க தலைவா

    எனக்கு வாழ்த்துகள் சொன்னதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...

    உங்கள் அயராத பிஸி டைமில் என் கடைக்கும் வந்ததுக்கு நன்றி தலைவா

    தொடர்ந்து பல சாதணைகளை படைக்க வாழ்த்தும்

    சுரேஷ் - ~ சக்கரை ~

    ReplyDelete
  12. நன்றி குசும்பா

    என்னைய ரொம்ப கலாய்க்காமல் விட்டதற்கு :)



    அக்கொண்டில் பண்ம் வந்ததா..:)

    ReplyDelete
  13. குசும்பனின் கோரிக்கையை நான் வகை, தொகையில்லாமல் ஆதரிக்கிறேன்..

    தமிழ்மணத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன்..
    //


    நான் ஆட்சிக்கு வந்ததும் உன் கோரிக்கை நிறைவேற்றுகிறேன்
    :)

    ReplyDelete
  14. தல பதிவுகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. குசும்பனின் கோரிக்கையை நான் வகை, தொகையில்லாமல் ஆதரிக்கிறேன்..

    தமிழ்மணத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன்.
    //


    குசும்பன் : ஸ்சைலன்ஸ் தமிழ்மணதோடு பேசிகிட்டு இருக்கோமில

    ReplyDelete
  16. //எப்பொழுதும் படிக்கும் அதே மக்கள் அதே நபர்கள் பின்னூட்டம்//

    நானெல்லாம் கண்ணுல பதிவு பட்டா வரும் கேசு!

    ReplyDelete
  17. //இது தெரியாமல் தான் தமிழ்மணமும் கொழம்பி கிடக்கு


    :)//

    அவ மட்டும் கையில் கிடைக்கட்டும்
    மகனே வெச்சுக்கிறேன் அவளை:)

    நமி டார்லிங் நான் சொல்லலை குசும்பன் என்கிட்ட இப்படி சொன்னாரு...

    ReplyDelete
  18. புன்னகை said...

    அப்படியே அடிக்கடி தமிழ்மணம் கொஞ்சம் உறைஞ்சு போகுது அதையும் கவனிக்க சொல்லுங்க
    //


    நானே இங்க ஸ்சைலன்ஸ் பிரச்சனையில் மெல்டாயி மெண்டலாயிகிடிட்டு இருக்கேன்

    இங்க தமிழ்மணத்தை கொண்டு வந்தால் மெல்ட்டாக்கி தர்ரேன் :)

    ReplyDelete
  19. அவ மட்டும் கையில் கிடைக்கட்டும்
    மகனே வெச்சுக்கிறேன் அவளை:)
    //


    நான் வேண்டானா சொல்லுறேன்
    குசும்பன் தான் வீட்டுக்கு பயப்புடுகிறார்

    :)

    ReplyDelete
  20. நமி டார்லிங் நான் சொல்லலை குசும்பன் என்கிட்ட இப்படி சொன்னாரு...
    //


    விச்சு'க்கு என் மேல் இம்புட்டு ஆசையா

    பய புள்ள சொல்லவே இல்லை :(

    ReplyDelete
  21. அவ மட்டும் கையில் கிடைக்கட்டும்
    மகனே வெச்சுக்கிறேன் அவளை:)
    //


    என் உடல் மெத்தையும் சாரி மொத்தமும் அவருக்கு தானே..:)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் குசும்பா!

    ReplyDelete
  23. என்னை போன்ற சின்ன பசங்களை கைப்பிடித்து மேலே தூக்கி விடும் உங்கள் நல மனதுக்கு நன்றி..

    ReplyDelete
  24. மொத்தத்தில் அனைத்துப்பதிவுகளுமே சிறப்பாக இருந்தன.

    துபாய் பதிவு சமூக நலன் கொண்டு எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  25. முடிச்சுட்டியா!

    அப்பாடானு இருக்கும் பலருக்கு ;)

    ReplyDelete
  26. அட போச்சுடா! தமிழ்மணத்துக்கு நான்னும் ஒரு வேண்டுகோள்! குசும்பனுக்கு இன்னும் 1 வாரம் அதிகமாகொடுங்க சாரே! இன்னும் கொஞ்சம் சிரிச்சுக்கறோம்!

    அருமையான ஒரு நட்சத்திர வாரத்தை கொடுத்த குசும்பனௌக்கு வாழ்த்துக்கள்! தமிழ்மணத்துக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  27. இந்த வாரம் ரொம்ப நல்லா போச்சுண்ணே....உங்க கோரிக்கைய நானும் ஆமோதிக்கிறேன்..

    ReplyDelete
  28. நன்றி அண்ணே கலகலப்பான நட்சத்திர வாரத்துக்கு...

    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  29. குசும்பனின் கோரிக்கையை வழி மொழிகின்றேன். இப்பவும் சில நேரங்களில் தமிழ் மண கிளாசிக் பக்கம் சென்று புதியவர்களைப் பார்ப்பது உண்டு.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்!!! இன்றுதான் தங்களின் எல்லா பதிவுகளையும் படித்தேன். அருமையாக இருந்தது!! ஒரு ஸ்டார் மூலம் பப்ளிசிட்டியும் எனக்குக் கிடைத்தது!! நன்றி!!!

    உங்கள் கவனத்திற்கு!!

    எனது கவிதைக்கு எதிர்கவிதை பதிவுக்கு என் கருத்தை விட்டுச் சென்றுள்ளேன்..

    ReplyDelete
  31. நல்ல கோரிக்கை நண்பா.
    தமிழ்மணம் செவிமடுக்கும் என்று நம்புவோமாக.

    மிகச் சிறப்பான வாரம். நகைச்சுவை மட்டுமின்றி சீரியஸான சில விஷயங்களையும் எழுதி கலக்கிவிட்டீர்கள். (ஆனா என் ஓட்டு கொசு அடிச்ச பதிவுக்குதான்... ஹி..ஹி..)

    எழுதிய எல்லா நாளும் சூடான பகுதியில் மூன்று (குறைந்தது இரண்டு) ஸ்பாட்டை ஆக்ரமித்துக் கொண்டதற்கு பனிஷ்மெண்டாக புதிய பதிவர்களுக்குப் போய் நாலு பின்னூட்டம் போடவும்!

    ReplyDelete
  32. குசும்பன் அண்ணாச்சி, நட்சத்திர வாரத்தில அசத்திட்டீங்க.

    நம்பித்தான் ஆகனும் பக்கத்துக்கு லிங்க் கொடுங்க. தமிழ் மனத்திலும் சரியான லிங்க் இல்லை.

    ReplyDelete
  33. குசும்பன் அண்ணாச்சி, நட்சத்திர வாரத்தில அசத்திட்டீங்க.

    நம்பித்தான் ஆகனும் பக்கத்துக்கு லிங்க் கொடுங்க. தமிழ் மனத்திலும் சரியான லிங்க் இல்லை.

    ReplyDelete
  34. நல்ல ஒரு வாரத்திற்கு நன்றி

    ReplyDelete
  35. நல்ல கோரிக்கை கண்டிப்பாய் தமிழ்மணம் கண்டுக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. ஒரு வாரம் போனதே தெரியல...
    எல்லாமே கலக்கல் பதிவுகள்....

    :)))

    ReplyDelete
  37. \\அபி அப்பா said...
    அட போச்சுடா! தமிழ்மணத்துக்கு நான்னும் ஒரு வேண்டுகோள்! குசும்பனுக்கு இன்னும் 1 வாரம் அதிகமாகொடுங்க சாரே! இன்னும் கொஞ்சம் சிரிச்சுக்கறோம்!

    அருமையான ஒரு நட்சத்திர வாரத்தை கொடுத்த குசும்பனௌக்கு வாழ்த்துக்கள்! தமிழ்மணத்துக்கு நன்றிகள்!!!//
    Repeatttuuuu...

    ReplyDelete
  38. ///ஸ்டார் வாரத்திலேயே 200 தொட்டுவிட்டால் நன்றாக இருக்குமே! என்று மனம் பேராசை பட்டது.அது நடக்கவில்லை என்றாலும், ////

    me the 200th :)
    congrats!

    ReplyDelete
  39. நல்ல கோரிக்கை..

    வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  40. எங்களை மாதிரி புது பதிவர்களை உங்களைப் போன்ற நட்சத்திர பதிவர்கள் ஆதரிக்க வேணும்ணே. இது போல யோசனைகளை திரட்டிகளுக்கும் வழங்கி எங்களை ஊக்குவிப்பதில் ரொம்ப சந்தோஷம் அண்ணே! :D

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள்
    கண்ணா இது நான் சேத்த கூட்டம் இல்ல தானா சேந்தது (கேமராவ பாத்து நீங்க சொல்லணும் )

    ReplyDelete
  42. நல்லதொரு வாரம் குசும்பன். எல்லாத்துறைகளையும், துபாயையும் தொட்டு, செய்திகளை அறியக் கொடுத்தீர்கள்.


    அபிஅப்பா சொல்றது மாதிரி இன்னுமொரு வாரம் எழுதவும் உங்களிடம் விசயம் நிறைய இருக்கும். நன்றி.

    ReplyDelete
  43. வாழ்த்துகள் தல.. 200 ஆயிடுச்சு

    ReplyDelete
  44. நன்றி மகேஷ்

    நன்றி சோசப்பு

    நன்றி சென்ஷி

    நன்றி உ.த

    நன்றி புன்னகை

    நன்றி சுரேஷ்

    நன்றி வெங்கடேஷ் சுப்ரமணியன்

    நன்றி விக்கி

    நன்றி நமிதா & அனானியாரே:)

    நன்றி சுரேஷ்//உங்கள் அயராத பிஸி டைமில் என் கடைக்கும் வந்ததுக்கு நன்றி தலைவா//

    இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிக்கிட்டு இருக்கு:)

    நன்றி ராஜ நடராஜன்

    நன்றி ஆயிலு

    நன்றி லோகு

    நன்றி மஞ்சூரார்

    நன்றி புலி நீங்கள் சொல்வதும் சரிதான்

    நன்றி அபிஅப்பா

    நன்றி பனங்காட்டான்

    நன்றி கோபி

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி தமிழ் பிரியன்

    நன்றி ஆதவா தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாததுக்கு.

    நன்றி பரிசல், தாங்கள் சொல்வது போலவே செய்துவிடுகிறேன்!

    நன்றி வெங்கட்ராமன்

    நன்றி தருமி

    நன்றி கேபிள் சங்கர்

    நன்றி கதிர்

    நன்றி தேவகோட்டை ஹக்கீம்

    ஆஹா நடந்துவிட்டது சர்வேசன் மூலம் அது நடந்துவிட்டது:) நன்றி சர்வேசன்!

    நன்றி மை பிரண்ட்

    நன்றி வெங்கிராஜா

    நன்றி தஞ்சை ஜெமினி

    நன்றி வல்லிசிம்ஹன்

    நன்றி கார்க்கி

    ReplyDelete
  45. நன்றி குசும்பன்.

    ReplyDelete
  46. நட்சத்திர வாரம் கலக்கலா இருந்தது...உங்க சேது பாலா நினைவுகள் உட்பட! உங்கள் கோரிக்கை நியாயமானதே! (புதியபதிவுகள் விபரம் கிளாசிக் வியூ -ல பார்க்க கிடைக்கிறது)

    ReplyDelete
  47. கலக்கலாக ஆரம்பித்து, நெகிழ்ச்சிக் கலங்கலாக முடித்துவிட்டீர்கள் தலைவா..

    மிக நல்ல வாரம்..

    நன்றி

    ReplyDelete