Saturday, April 4, 2009

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

61 comments:

  1. dubai mattum illa mapi.. world wide ithu than statussss.. enga epo epadi mudiyum nu theriyala :(

    ReplyDelete
  2. துபாய்க்கு இந்த நிலைமை வந்தது துரதிருஷ்டமே.... எத்தனெஇயோ லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு ஒரு பாதை போட்டுத் தந்த நாட்டுக்கு அகலக்கால் வைத்ததினால் வந்த வினை.... உற்பத்தி என்றி எதுவுமில்லாமல் trading and tourism மட்டுமே தொழிலாக கொண்டிருந்தது மற்றொரு அம்சம். பல நாடுகளுக்கு துபாய் ஒரு பாடம்.

    ReplyDelete
  3. But I hope things will turn around for good soon. Insha allah !!

    ReplyDelete
  4. குசும்பன் சொல்லியிருப்பது நெஞ்சு கனக்கும் உண்மை. மற்ற நாடுகளை விட அதிகமாய் சுற்றுலாப்பயணிகளை நம்புகின்ற நாடு இது. :-((

    ReplyDelete
  5. மாம்ஸ் இப்பதான் தினமலர்ல துபாய் பற்றி ஒரு செய்தி படிச்சேன் தொடர்ச்சியா உன் இந்த பதிவை பார்த்ததும் ரொம்ப வருத்தமாவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கு.

    ReplyDelete
  6. http://www.dinamalar.com/worldnewsdetail.asp?News_id=2754&cls=row4&ncat=INL

    ReplyDelete
  7. /
    வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.
    /

    நம்ம ஊருல இரு பழமொழி சொல்லுவாங்க "குதிரை *** காஞ்சா வைக்கோலையும் தின்னும்" அப்படினு அதே மாதிரி இருக்கு.

    ReplyDelete
  8. /
    அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.
    /

    :(((

    ReplyDelete
  9. /
    டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!
    /

    well said. Very nice & informative post

    ReplyDelete
  10. காக்றான் மேக்ரான் கம்பெனி என்னாச்சுங்க..
    :)
    *****
    Jokes apart, நெஜமாவே மனம் கனக்க வைக்கும் பதிவுங்க..

    ReplyDelete
  11. என்ன செய்யிறது....அப்பவே சிங்கப்பூர்ல வேலை கிடைச்சுது. துபாய் தான் வேணும்ன்னு அடம் புடிச்சு வந்ததுக்கு அனுபவச்சு தான் ஆகனும் :((

    ReplyDelete
  12. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்!

    ReplyDelete
  13. ஆகா.. நல்ல வேலை பண்ணீங்க...

    வருத்தமான சேதி தான்..

    நிலைமை சரியாகும்னு நம்புவோம்..

    ReplyDelete
  14. இந்த நிலைமை இப்போது வந்தது அல்ல குசும்பன். கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். விசா சார்ஜை ஏற்றினார்கள். அது தான் முதலில் ஆரம்பித்தது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வெளி நாடுகளில் இருந்து அங்கு வேலைக்குச் சென்றவர்களுக்கு துன்பம் தர ஆரம்பித்தது துபாய் அரசு. பூகம்பம் வந்த அன்றே முதலீட்டாளர்கள் அரண்டு போய் கிடந்தார்கள். கட்டப்பட்ட கட்டிடங்களை வாங்க நாதியில்லை. இரும்புக்கர ஆட்சியால் செய்திகள் வெளி உலகுக்கு தெரியவில்லை. இன்றைய நாட்களில் வேறு வழியின்றி செய்திகள் கசிய ஆரம்பிக்கின்றன. என் நண்பர் ஒருவரிடம் அவரின் நன்பர் சொன்னது : துபாய் ஏர்போர்ட்டில் எண்ணிலடங்கா கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். காரின் ஓனர்கள் அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டார்களாம்....

    ReplyDelete
  15. என்னடா! இன்னும் இந்த பதிவை காணுமே என்று காத்திருந்தேன்.
    குசும்பன் சொன்னதெல்லாம் உண்மையா? ஒரே ஒரு சாம்பிளை பார்ப்போமா?
    என்னுடைய வேலை இந்த சாலை போக்குவரத்துக் கழகத்துகானது...முதல் ஒரு கடிதம் மறு நாள் சைட்டை காலி பண்ணிட்டோம்.சத்தம் போடாமல் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன்.பல குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொண்டு அதற்கு தகுந்தாற் போல் மாறி வருகின்றனர்.
    கொஞ்ச வருடத்துக்கு இங்கு தலைக்காட்டாமல் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது.அதுவும் முகவர்களிடம் பணம் கட்டிவருவதை தவிர்ப்பது நலம்.
    போன வாரம் செய்தித்தாளில் ஒரு செய்தி,இந்தியாவில் இருந்து வாகன ஓட்டுனர் வேலைக்காக கூட்டிவரப்பட்டு ஒரே ஒரு டெஸ்ட் வைத்து நிராகரிக்கப்பட்டு இப்போது அனைவரும் அடுத்து என்ன செய்வது என்ற நிலையில் இருக்கிறார்கள்.

    குசும்பன் இந்த டிரைவிங் டெஸ்ட் பற்றி ஒரு பதிவை போட்டு முடித்து வையுங்கள்.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவும் உருப்படியான டிஸ்கியும்.

    ReplyDelete
  17. வருந்ததக்க பதிவு

    நிலமை மாறும் என்ற நம்பிக்கையில் நிறைய எம்ப்ளாயர்

    ReplyDelete
  18. //என் நண்பர் ஒருவரிடம் அவரின் நன்பர் சொன்னது : துபாய் ஏர்போர்ட்டில் எண்ணிலடங்கா கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். காரின் ஓனர்கள் அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டார்களாம்....//

    அப்படியெல்லாம் இல்லை, ஒன்னு ரெண்டு அப்படிஆனது அதை திரித்து பெரிதாக்கிவிட்டார்கள் நம்மக்கள்

    ReplyDelete
  19. //டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!///

    இது சரியான டிஸ்கி

    முழு உண்மையும் கூட‌

    இதையும் மீறி செல்வேன் என்றால் அது அவர்களின் தலைவிதி

    ReplyDelete
  20. //இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.
    ///


    சரிதான்

    ReplyDelete
  21. பதிவை பத்தி ஒன்னும் சொல்ல முடியல..என்னென்னா அந்த அளவுக்கு வலி..;(

    ஆனா ஒன்னே ஒன்னுங்க தயவு செய்து டிஸ்கியை நன்றாக படிங்க...யாரும் ஏமாந்துடாதிங்க.

    ReplyDelete
  22. முன்னாடி எல்லாம் சம்பளம் இவ்வளவு வருமுன்னு தெரியும் அதுக்கு தகுந்தாற் போல நாமும் கணக்கு போட முடியும்.

    ஆனால் இப்போ சம்பளம்னு ஒன்னு ஒழுங்க வருமான்னு தெரியல..;(

    ReplyDelete
  23. சில மாதங்களுக்கு முன்புதான் அமீரகம் வந்துவிடலாமோ என்று ஆர்வத்தோடு இருந்தேன்!

    இப்ப இருக்கற நிலைமையை பார்த்தா....????

    (என்னமோ சொல்லுவாங்க தந்தி வேகத்துக்கு தரித்திரம் போய் முன்னாடி நிக்குதுன்னு அது மாதிரிதான் போல...!)

    ReplyDelete
  24. இதையும் சேத்துங்க
    விடுமுறையில் ஊருக்கு போனவங்கள
    திருப்பி கம்பெனி கூப்பிடுற வரையும்
    வரவேணாம் சொல்றாங்க,
    விசா ரெனிவல் கிடையாது,
    வலுகட்டாயாம விடுமுறைக்கு அனுப்புறதும் நடக்குது. இருக்கறவங்களுக்கு சம்பளம் எப்ப கிடைக்கும்னு தெரியாது சரி கிரெடிட் கார்டு வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு பாத்தா அதுக்கும் ஆப்பு வைச்சிட்டாங்க பர்சேஸ் பண்ணதோட கூட அதிகபட்சம் 500 வைச்சு கிரெடிட் லிமிட் குறைச்சிருக்காங்க

    ReplyDelete
  25. Dear Saravanan

    I can tell you how bad is the situation by givng the part of the circular I recieved today from our department
    ''Considering the current economic situation it is necessary for us to contain and control
    our expenses. Therefore with immediate effect the following measures should be taken:
    1. Recruitments : Freeze on all recruitments, including previously approved positions
    should be put on hold. In exceptional cases it has to be approved by the Chairman
    of the respective Boards or region, with full justification.
    2. Salary Increases : No salary increases or allowances will be granted in 2009 to any
    employee.
    3. Overtime : The current overtime levels has to be reduced considerably and brought
    down to 'Zero' level wherever possible.
    4. Travel : All travel within GCC should be on "Economy Class" and should avoid
    staying in expensive hotels.
    5. Entertainment: This should be reduced to minimum possible.

    Leo Suresh

    ReplyDelete
  26. //துபாய்க்கு இந்த நிலைமை வந்தது துரதிருஷ்டமே.... எத்தனெஇயோ லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு ஒரு பாதை போட்டுத் தந்த நாட்டுக்கு அகலக்கால் வைத்ததினால் வந்த வினை.... உற்பத்தி என்றி எதுவுமில்லாமல் trading and tourism மட்டுமே தொழிலாக கொண்டிருந்தது மற்றொரு அம்சம். பல நாடுகளுக்கு துபாய் ஒரு பாடம்.//---ரிப்பிடெய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  27. வருந்தக்க உண்மை!

    ReplyDelete
  28. இது துபாயில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் துபாய் அரசரிடமே கிட்டத்தட்ட பணம் இல்லை என்ற நிலை கொஞ்சம் பேஜார்தான்

    ReplyDelete
  29. பெரும்பாலான விசயங்கள் உண்மைதானென்றாலும்,சமீபத்தில் ந்டந்த உலகக் கோப்பை குதிரைப் பந்தயத்தின் கோலாகலங்களைப் பார்த்தபோது பழைய துபாயின் சாயலில் துளி கூடக் குறையாத பளபளப்பையும் பணக்காரத் தனைத்தையும் காண முடிந்தது. துபாய் தனது நெருக்கடிகளுக் கிடையிலும் எழுந்து நிற்கும் போராட்டத்தைத் துவங்கி விட்டதென்றே தோன்றுகிறது

    ReplyDelete
  30. Feels so sad… most NRI peoples are helping for Indian economy growth, peoples are layoff not only from Dubai all over the world. What these peoples are going to do? Really its bad situation. Thanks for nice advice.

    -Mastan

    ReplyDelete
  31. ///டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!///

    அடப்பாவி..

    அப்போ என் வேலைக்காக உன்கிட்ட கொடுத்த துட்டு அவ்ளோதானா..?

    எனக்கு எப்படி துபாய்ல வேலை வாங்கித் தருவ..?

    ReplyDelete
  32. காலத்திற்கேற்ற தரமான பதிவு.
    நீ சொல்லியிருக்கது துபாய்க்கு மட்டும் பொருந்தும் விசயமல்ல.
    சிங்கப்பூருக்கும் நிலைமை இதுவே.
    ஆனாலும் சிலர் சொல்ல சொல்ல கேட்காம விஸிட் விசால இங்க வந்துட்டு வேலை வாங்கிக் கொடுறான்னு உசுர எடுக்குறானுங்க மாப்பி.

    ReplyDelete
  33. சவுதியிலும் இதேதான் கதை. புரிஞ்சிகோங்கோ தமிழ் ஜனங்களே! சில நல்ல (?) கம்பெனிகளும் இதே காரணத்தை சொல்லி ஊரை ஏமாத்துகிறார்கள்! உஷார் !

    ReplyDelete
  34. சவுதியிலும் இதேதான் கதை. புரிஞ்சிகோங்கோ தமிழ் ஜனங்களே! சில நல்ல (?) கம்பெனிகளும் இதே காரணத்தை சொல்லி ஊரை ஏமாத்துகிறார்கள்! உஷார் !

    ReplyDelete
  35. Dear kusumban,

    your post is good bird view of the situation.

    Good alert for the people. But fyi this is world wide issue. Country like singapore also similiar.

    Good call from u

    ReplyDelete
  36. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக நிலைமை சீரடைந்து விடும் என்று நம்பிக்கையில்தான் கதை ஓடுகிறது.
    டிஸ்கி முக்கியம் நண்பர்களே.
    டிஸ்கி முழுவதையும் தடித்த எழுத்துக்களால் ஆக்குங்கள் குசும்பு.

    ReplyDelete
  37. மனம் கனக்கும் பதிவு :((

    அநேகர் இங்க பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, துபாய் மட்டும் இல்லை ... எல்லா நாட்டிலும் இதே நிலை தான் :(((

    காலங்கள் சீக்கிரம் நல்ல நிலைக்கு மாறும் என்று நம்புவோம் !!!

    ReplyDelete
  38. அன்பு நண்பர்களே குவைத்திலும் இதே நிலைமை தான்.

    ஒவ்வொரு நாளும் காலையில் மின்மடல் பார்த்தப்பிறகே வேலை இருக்கிறதா இல்லையா என அறிந்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இப்பொழுதெல்லாம் எல்லோருமே விளைவுகளை எதிர்க்கொள்ள தயாராகவே இருக்கின்றனர் என்பதே கசப்பான உண்மை.

    ReplyDelete
  39. \\ஆசிப் மீரான் said...
    பெரும்பாலான விசயங்கள் உண்மைதானென்றாலும்,சமீபத்தில் ந்டந்த உலகக் கோப்பை குதிரைப் பந்தயத்தின் கோலாகலங்களைப் பார்த்தபோது பழைய துபாயின் சாயலில் துளி கூடக் குறையாத பளபளப்பையும் பணக்காரத் தனைத்தையும் காண முடிந்தது. துபாய் தனது நெருக்கடிகளுக் கிடையிலும் எழுந்து நிற்கும் போராட்டத்தைத் துவங்கி விட்டதென்றே தோன்றுகிறது\\

    அது என்னவோ சரி தான் அண்ணாச்சி! ஆனா ரேஸ்க்கு போயிட்டு சனிகிழமை ஆபீஸ் போனா 10% சம்பளம் குறைச்சு லெட்டர் கொடுத்தாங்க. சத்தமே போடாம வாங்கி பாக்கெட்ல வச்சிகுட்டு வெளியே வரும் போது போன வருஷம் இதே மேனேஜர் கிட்ட 30 சதம் ஊதிய உயர்வு வேண்டும்ன்னு "மிரட்டி"தை நினைச்சுகிட்டேன். கூடவே நான் ஆதவன் பதிவும் நியாபகம் வந்துச்சு. சிரிச்சுகிட்டேன்!

    குசும்பன் டோட்டல் டேமேஜ்ன்னு இந்த பதிவிலே சொன்ன 3 கம்னனியில் ஒன்னு தான் என் கம்பனி என்பது உபரி தகவல்!

    ReplyDelete
  40. கைப்புள்ள: ஏண்டா...நம்ம துபாயப்பத்தி ஊருக்குள்ள என்னமோ பேசிக்கிறாய்ங்களே என்ன?
    ஜெய்சுக்கு: நம்ம கட்டதொர துபாய்க்கு போயிட்டானாம்ணே...அதனால துபாய் சேக்குங்கல்லாம் பயந்து போயி நம்ம கிட்ட உதவி கேட்டு வந்திருக்காங்கண்ணே...
    கைபுள்ள: கட்ட தொரைக்கி கட்டம் சரியில்ல...நம்ம கூட வெளயாடுரதே அவனுக்கு வேலையாப் போச்சு...டேய்...பூட்றா..வண்டிய...அமுக்குடா ஆரன...
    ஜெய்சுக்கு: டேய்னு சத்தம் போட்டு சொல்லாதீங்கண்ண... அப்பறம் கட்ட தொர ஆளுங்க வீடியோ கீடியோ ஏதாவது ரீமிக்ஸ் பண்ணி மானத்த வாங்கிட போறனுங்க... டேய்னு சொல்ரதுக்கு இப்போ தமிழ்நாட்லே வேர ஒரு இருக்காருண்ணே...
    கைபுள்ள: டேய்னு சொன்னது ஒரு குத்தமாடா....அவ்......

    ReplyDelete
  41. So what you are telling is, you will stay and earn there (or your friends) and we shall stay back in India! ;-)

    Also, what if I came there on visit visa and got a job, and survive through this turmoil at a decent salary?

    I feel that talent alone can make a person survive anywhere including Antarctica or Space.

    ReplyDelete
  42. பக்கத்துல இருக்கிறதால கேள்விப்பட்ட விசயம்தான்,
    ஆமா பல பேருக்கு வாழ்க்கை கொடுத்த நாடும் கூட இப்பொழுது இப்படியாகி இருக்கிறது சரி செய்து விடுவார்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  43. நல்ல தகவல் !!!

    Very informative post !

    ReplyDelete
  44. ithu than amaricavai nambi irunthal nadappathu. munpe communist like ppl (not communist) commented this would happen. manmohan and sithambaram are the best economists but those assholes know this. but they are under the illusion created by usa. every govt was. now all suffer. u know cuba is not much affected by this economic crisis. because they dont depend on amarican economy. inta kevalathila sri lankavuku 2000 cores vattilla kadan and indian army to kill tamils.

    ReplyDelete
  45. not only india most of the countries suffer. lets wait and see. agriculture is the best.

    ReplyDelete
  46. My friend from USA said it will take 2,3 years to outcome form this problem. lets see.

    ReplyDelete
  47. தமிழ்மண நட்சத்திர வாரத்தின் வைரப் பதிவு!

    நன்றி குசும்பா!

    ReplyDelete
  48. சீரியஸான பதிவு என்றாலும் இந்தப் பின்னூட்டத்தை போடாமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

    மீ த 50!

    ReplyDelete
  49. //இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது//

    நச் வரிகள்..

    ReplyDelete
  50. மகேஷ் அவர்கள் சொல்லிய மாதிரி, இது ஏற்பட்டதற்கு காரணம் அகலக் கால் வைத்ததுதான்.

    இப்போதுள்ள சூழ்நிலையில், அடுத்த வேலைக்கு மாறாமல், இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வதுதான் நல்லது.

    ReplyDelete
  51. Pls donot think "Canada Immegration" is great! Things are worse here in Canada. Do not get trapped by it.-sriram

    ReplyDelete
  52. சந்தோஷ்

    Mahesh

    சென்ஷி

    மங்களூர் சிவா

    லோகு

    நான் ஆதவன்

    ரங்கன்

    பாலகிருஷ்ணா

    வடுவூர் குமார்

    ராஜ நடராஜன்

    அபுஅஃப்ஸர்

    கோபிநாத்

    ஆயில்யன்

    புன்னகை

    Leo Suresh

    Venkatesh subramanian

    நாகை சிவா

    சின்ன அம்மிணி

    ஆசிப் மீரான்

    Mãstän

    உண்மைத் தமிழன்--என்ன நம்பியும் பணம் கொடுக்கும் பொழுதே
    தெரிஞ்சுது நீங்க எம்புட்டு விவரமானவர் என்று அப்படி பட்ட ஆட்களுக்கு
    எல்லாம் துபாயில் வேலை இல்லை:)

    ஜோசப் பால்ராஜ்

    MUTHIAH

    கடைசி பக்கம்

    சுல்தான்

    சதங்கா

    மஞ்சூர் ராசா

    அபி அப்பா

    பனங்காட்டான்

    தமிழன்-கறுப்பி

    வெண்காட்டான்

    பரிசல்காரன்

    Cable Sankar

    இராகவன் நைஜிரியா

    E.S.Sriram

    அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  53. Raju உங்களுக்கு தனியாக பதில் சொல்லவேண்டி இருக்கிறது, அய்யா சாமி அங்கிருந்து வருபவர்களால் என் வருமானம் பாதிக்கப்படபோவதும் இல்லை, அவுங்க இங்க வந்து சம்பாரிப்பதால் நான் பொறாமை பட போவது இல்லை, இங்கு புதியவர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை சொல்லி இருக்கிறேன். அதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம். நண்பர்களும் நான் படும் கஷ்டங்களை பொதுவில் வைக்க விருப்பம் இல்லாததால் தான் யாரையும் குறிப்பிட்டு எழுதாமல் பொதுவாக எழுதி இருக்கிறேன்.

    தாராளமாக நீங்க வாங்க விசிட்டில் வாங்க ஏன் கள்ள தோணி புடிச்சு கூட வாங்க வந்து வேலை தேடி நல்லா வேலை வாங்க என் வாழ்த்துக்கள்.

    திறமை இருந்தா எங்கு வேண்டும் என்றாலும் வேலை கிடைக்கும் என்ற உங்கள் கருத்தை ஒத்துப்போகிறேன், அண்டார்டிக்காவில் கூட வேலை வாங்கும் திறமை இருக்கும் உங்களை துபாய் இருகரம் கூப்பி வரவேற்க்கிறது:)

    ReplyDelete
  54. //அண்டார்டிக்காவில் கூட வேலை வாங்கும் திறமை இருக்கும் உங்களை துபாய் இருகரம் கூப்பி வரவேற்க்கிறது:)//

    LOL!
    நம்பிக்கை வைப்பதாக நினைத்து ஆழம் தெரியாமல் குதிக்கும் சில அறிவாளிகளுக்கு அவர்கள் அனுபவம் கூட பாடமாவது இல்லை. மற்ற எல்லாவற்றையும் குறை கூறி கொண்டு காலம் போக்குவர்!

    ReplyDelete
  55. Dear Saravanan,

    Whatever may be... Dubai was providing good job oppurtunities. But ur picturization is portraying UAE as aftermath of World War II in Germany. Anyway, If we have the will power to face this economic crisis, we can win and am sure that you wont be affected. I felicitate ur boldness and frankness in portraying the real situation in Dubai. I will be forwarding this blog post to my friends and save them from wicked hands!

    Regards,
    Ferdin Joe J
    http://www.ferdin.co.nr

    ReplyDelete
  56. வலிக்கும் உண்மையென்றாலும், நடப்பதெல்லாம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  57. //Raju உங்களுக்கு தனியாக பதில் சொல்லவேண்டி இருக்கிறது, அய்யா சாமி அங்கிருந்து வருபவர்களால் என் வருமானம் பாதிக்கப்படபோவதும் இல்லை, அவுங்க இங்க வந்து சம்பாரிப்பதால் நான் பொறாமை பட போவது இல்லை, இங்கு புதியவர்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை சொல்லி இருக்கிறேன். அதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம். நண்பர்களும் நான் படும் கஷ்டங்களை பொதுவில் வைக்க விருப்பம் இல்லாததால் தான் யாரையும் குறிப்பிட்டு எழுதாமல் பொதுவாக எழுதி இருக்கிறேன்.

    தாராளமாக நீங்க வாங்க விசிட்டில் வாங்க ஏன் கள்ள தோணி புடிச்சு கூட வாங்க வந்து வேலை தேடி நல்லா வேலை வாங்க என் வாழ்த்துக்கள்.

    திறமை இருந்தா எங்கு வேண்டும் என்றாலும் வேலை கிடைக்கும் என்ற உங்கள் கருத்தை ஒத்துப்போகிறேன், அண்டார்டிக்காவில் கூட வேலை வாங்கும் திறமை இருக்கும் உங்களை துபாய் இருகரம் கூப்பி வரவேற்க்கிறது:) //

    I worked at the Word Trade Center, Dubai for an MNC for few years, just after 6 months of experience after my B.E.,

    Right now I am handling projects for many Gulf companies. Not seeing any drop in work, as oil rules.

    In fact, when I posted the comment, I was at client site at Doha, Qatar.

    I think your post is very isolated, only to Dubai and Abu Dhabi based on the rising prices.

    Anyway thanks for the detailed reply. :)

    ReplyDelete
  58. இன்னும் நிலைமை மோசமடையும் என்றார் போன மாதம் துபாயிலிருந்து திரும்பிய நண்பர் ஒருவர்.

    இன்னும் குறைந்த பட்சம் 2 வருடங்கள் ஆகும் என்கிறார்.

    American based MNC கம்பெனிகள் கை வசம் நிறைய பிராஜக்ட் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும் சொன்னார்.

    டீ கடைகளில் கூட வருமானம் இல்லாததால் நிறைய மலையாளிகளும் திருப்பி அனுப்பி விட பட்டதாக தெரிகிறது.

    இத்தனைக்கும் அவர் கடந்த 8ஆண்டுகளாக துபையில் இருந்தவர்.



    டிஸ்கி: நானும் 4 ஆண்டுகள் கரமாவில் இருந்தவன் தான்.

    ReplyDelete