Monday, March 30, 2009

கனவுகள் விற்பனைக்கு--- விளம்பர உலகம்!

மருத்துவம் முதல் அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களை கவர தேவைப்படுவது விளம்பரம்,விளம்பரம் என்றவுடன் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது டிவியில் வரும் விளம்பரங்கள்,டிவியில் வரும் விளம்பரங்கள் கடல் போன்றது அதில் நாம் வித விதமான வித்தியாசங்கள் கொடுக்கலாம், பிடித்தமானஹீரோயினோ, அல்லது ஹீரோவோ அல்லது நல்ல மியூசிக்கோடு கொஞ்சம் கற்பனை சேர்த்தால் போதும் விளம்பரம் நம்மை கவர்ந்து விடும். ஆனால் கொஞ்ச நாட்களாக கற்பனை வறட்சி போல விளம்பர உலகிலும் போட்டிகள் பொறாமைகள் இதுவரை மற்ற போட்டியாளர்களின் பொருட்களை நேரடியாக தாக்கி விளம்பர வந்தது இல்லை ஆனால் சமீபத்தில் காம்ப்ளான் ஹார்லிக்ஸ் விளம்பரம் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது,அதுபோல் பைக் விளம்பரத்தை அப்படியே காப்பி அடித்து வரும் சன் டி.டி.எச் விளம்பரம் ஆகியவை கொஞ்சம் எரிச்சலை தருகின்றன.

சிலசமயங்களில் விளம்பரங்கள் நம் நினைவில் நிற்கும் ஆனால் எந்த கம்பெனிக்கான விளம்பரம் என்று மறந்துவிடும் அந்த கான்செப்ட் மட்டும் நினைவில் இருக்கும், ம்ம்ம் அந்த சின்னபையன் உண்டியலை எடுத்துக்கிட்டு போவானே என்பது மட்டும் நினைவு இருக்கும் அந்த பேங்கின் பெயர் மறந்துவிடும்அந்த வகையில் ஒரு விளம்பரமும் இருந்தால் அது ஒரு தோல்வியடைந்த விளம்பரமே.

டிவியில் வரும் விளம்பரத்தை விட கஷ்டமாக நான் நினைப்பது புத்தங்கங்களில் அல்லது வெளியில் வைத்து இருக்கும் ஹோர்டிங்ஸ் விளம்பரங்கள். புத்தகத்தில் இருக்கும் நூறு பக்கத்தில் நாற்பது பக்கம் விளம்பரம் இருக்கும், படிப்பவர் சுலபமாக அந்த குறிப்பிட்ட விளம்பரம் வந்த பக்கத்தைதவிர்க்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கு, தொடர்ந்து ஒரு கதை படித்து வரும் பொழுது அடுத்த பக்கத்தில் விளம்பரம் இருந்தால் டக்கென்று புரட்டிகதையை படிக்க ஆரம்பித்துவிடுவார்! அந்த சமயத்தில் அவர் அப்படி கடந்து செல்லாமல் இருக்க, அங்கு வரும் விளம்பரம் மிகவும் சிரத்தையோடுதயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டியது மிக அவசியம், அதே போல் ரோட்டு ஓரத்தில் வைக்கப்படும் விளம்பர ஹோர்டிங்ஸ் அடுத்த முறை அந்த பக்கம் போகும் பொழுது பாரேன் அந்த விளம்பரத்தை என்று நண்பனிடம் சொல்லும் அளவுக்கு இருக்கவேண்டும்.அப்படி என்னை கவர்ந்த சில விளம்பரங்கள்!

Axe ஸ்ப்ரேவுக்கு டிவியில் வரும் விளம்பரம் எப்பொழுதும் Axe ஆணை பெண்கள் துரத்துவது போலவே இருக்கும் அதை எப்படிபிரிண்டிங்கில் கொண்டுவருவது? கீழே இருக்கும் விளம்பரத்தை பாருங்கள்.
Van Heusen வெளியிட்ட இந்த விளம்பரத்தில் அந்த கம்பெனி சட்டைகளை காட்டாமலேயே நம்மை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும்விளம்பரம்!
டயட் பெப்ஸியின் இந்த விளம்பரம், பூனை பெப்ஸி குடிக்குமா..? என்ற லாஜிக்கை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு யோசித்தால்எலியின் வலைக்குள் நுழையும் இளைத்த பூனை!
கையை மட்டும் காட்டி அந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத உருளை கிழங்கையும் பீளரையும் காட்டி நம்மை ஒரு நிமிடம் யோசிக்கவைக்கும் இந்த விளம்பரம், அடுத்த கையில் இருக்கும் மொபைலை காட்டி இருந்தால் இது ஒரு சாதாரண விளம்பரமாக ஆகி இருக்கும்!
பிளே யுவர் செல்ப்,9 இன்ச் பிளசர் என்று கொஞ்சம் விவகாரமாக இந்த வெர்ஜின் பிளைட் விளம்பரங்கள் வந்தன
உரத்துக்கான இந்த விளம்பரம்


இதன் பிறகு வருபவை நான் செய்தவை! பல இருக்கின்றன அதில் கொஞ்சம்...இவை அனைத்தும் என் கற்பனைகள்! என் கனவுகள்! யாரும் என் அனுமதி இன்றி உபயோகித்துவிடாதீர்கள் என்பதை மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


வோடபோன் போல் இதையே கண்டினியுவாக எடுக்கலாம் செஸ் போர்ட், டைல்ஸ் என்று கருப்பு வெள்ளை சேரும் இடங்களில் எல்லாம் இனி கருப்பு வெள்ளை காம்பினேசனுக்கு வாய்பு இல்லை என்று இந்த சாயத்தை காட்டலாம்.


டிஸ்கி: இது சும்மா ஒரு ஆர்வத்தில் போட்ட பதிவு நீங்க எதிர்பார்க்கு ஆப்பு பதிவுகள் இனி...இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:)

55 comments:

  1. விளம்பரங்கள் மீது எனக்கும் கொள்ளை பிரியம்.. இனி உங்களை அடிக்கடி தொல்லை பண்றேன்

    ReplyDelete
  2. சூப்பர் போஸ்ட் குசும்பா!

    ReplyDelete
  3. //மருத்துவம் முதல் அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களை கவர தேவைப்படுவது விளம்பரம்,//

    கரெக்ட் தலைவா..

    ReplyDelete
  4. மாஸ்ட்ரோ

    ரொம்ப நல்லா வந்திருக்கு :-)
    இன்னும் நிறைய வரட்டும் மாஸ்ட்ரோ

    ReplyDelete
  5. அட்டகாசப் பதிவு குசும்பா. மொபைல், உர கம்பெனி இரண்டுமே சூப்பர். கோத்ரேஜ் ஐடியா - வாவ்? hats off.

    அப்போ கருப்பு கேசம்/வெள்ளை மனதுடன் இருக்கும் என்னோட காம்பினேஷன் தப்பா?

    அனுஜன்யா

    ReplyDelete
  6. நட்சத்திரப் பதிவரனாவுடனே போட்டோவை போட ஆரம்பிச்சதிலேயே தெரியுதே நீங்க எவ்வளோ "விளம்பரப்" பிரியர்னு...

    ஆப்பு வைக்கிறவருக்கே வச்சம்பாருங்க ஆப்பு...

    ReplyDelete
  7. நட்சத்திரப் பதிவரனாவுடனே உங்க போட்டோவை போட ஆரம்பிச்சதிலேயே தெரியுதே நீங்க எவ்வளோ "விளம்பரப்" பிரியர்னு...

    ஆப்பு வைக்கிறவருக்கே வச்சம்பாருங்க ஆப்பு...

    ReplyDelete
  8. ஆகா..அருமை! உரம் - அசத்தல்!!

    ReplyDelete
  9. மிக அருமை குசும்பன். கம்பெனி விளம்பரங்களும் உங்கள் கற்பனைகளும்

    ReplyDelete
  10. கலக்கல் குசும்பா.

    உன் விளம்பரங்கள் சூப்பர். உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  11. ***
    இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:)
    ***

    இதெல்லாம் எப்போலேந்து ?

    ReplyDelete
  12. ஹலோ... உங்க கிரியேட்டிவிடி சூப்பர்...

    கொஞ்ச நாள் முன்னாடி நானும் என் அனுபவங்களை ஒரு பதிவு போட்டேன்... http://thuklak.blogspot.com/2008/11/blog-post_08.html

    ஹி...ஹி.. உங்க விளம்பரத்துல நம்ம விளம்பரமும்... ஹி ஹி....

    ReplyDelete
  13. //இது சும்மா ஒரு ஆர்வத்தில் போட்ட பதிவு நீங்க எதிர்பார்க்கு ஆப்பு பதிவுகள் இனி...இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:) //

    ஓ சும்மா ஆர்வத்திலயே இம்புட்டுன்னா

    டெரரர் ஆர்வத்தோட வந்தா....?! (நட்சத்திர வாரத்துல கண்டிப்பா வரும்ல!)

    கலக்குங்க :)))

    ReplyDelete
  14. கோத்ரஜ்கான உங்க யோசனை அழகு :)

    வாழ்த்துகள் இனும் ஜொலிக்க..

    ReplyDelete
  15. அருமையான அறிமுகம்! வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  16. எல்லாமே நல்லா இருக்கு. உன்னோடதும் நல்லாவே இருக்கு குசும்பா!நடு நடுவே உன் வேலையை காமிச்சுட்டியே:-))

    ReplyDelete
  17. கலக்கிட்டீங்க :))

    ReplyDelete
  18. இந்தப்பதிவு விளம்பர உலகத்துல இருக்க பல நல்ல கண்கள்ல படனும்.அதன் மூலமாகவும் உங்க திறமைக்கு ஒரு நல்ல அங்கிகாரம் கிடைக்கணும்.கிடைக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தல.

    ReplyDelete
  19. வெற்றி பெற தகுதியான கனவுகள்.. வாழ்த்துக்கள்..
    ( அட வாழ்த்து வளர்ந்துகிட்டே போகுதே)

    ReplyDelete
  20. //இது சும்மா ஒரு ஆர்வத்தில் போட்ட பதிவு நீங்க எதிர்பார்க்கு ஆப்பு பதிவுகள் இனி...இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:) //

    இதுவும் ஒரு நல்ல பதிவு தான். நீங்கள் செய்துள்ள கோத்ரெஜ் ஹேர் டை விளம்பரங்கள் மிக நேர்த்தி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. இதுவரை நான் பார்க்காத விளம்பரங்களும் கூடவே உங்கள் திறமை படங்களும் நல்ல கலையுணர்வு.

    சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள் நகைச்சுவை பற்றி சொல்ல வந்தேன்.வந்ததுக்கு கண்ணுக்கு விருந்தான விளம்பரங்கள்.

    ReplyDelete
  22. \\\
    //மருத்துவம் முதல் அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களை கவர தேவைப்படுவது விளம்பரம்,//

    கரெக்ட் தலைவா..
    \\\
    @நர்சிம்

    தல குசும்பனுக்கே குசும்பா!

    *****************
    \\
    அப்போ கருப்பு கேசம்/வெள்ளை மனதுடன் இருக்கும் என்னோட காம்பினேஷன் தப்பா?
    \\

    அனுஜன்யா அண்ணே அது 25 வருஷத்துக்கு முன்னாடி..

    **********

    பதிவை விட உங்கள் கைநேர்த்தியால் உருவான அந்த படங்கள் கலக்கல் ரகம் அண்ணே!

    ReplyDelete
  23. குசும்பன் நல்ல பதிவு, விளம்பர உதாரணங்கள் அருமை ...

    ReplyDelete
  24. நல்ல கிரியேட்டிவிட்டி:)

    ReplyDelete
  25. குசும்பா...

    இப்படிக்கூட யோசிக்க முடியுமா?? கலக்கிட்டப்பா...

    ReplyDelete
  26. குசும்பா.. ஒரு தொழிலதிபரிடம் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் விளம்பர ஐடியாக்களையும் அதை எப்படி எப்படியெல்லாம் எழுதி சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்றும் சொன்னார்.

    இவை ஒரு சோறு!

    கலக்கல்!

    ReplyDelete
  27. Blogger ஆசிப் மீரான் said...

    மாஸ்ட்ரோ

    ரொம்ப நல்லா வந்திருக்கு :-)
    இன்னும் நிறைய வரட்டும் மாஸ்ட்ரோ


    கரெக்ட் தலைவா.

    ReplyDelete
  28. //.இடை இடையே சில நல்ல பதிவுகளும் வரும்:) //

    எங்க! எங்க!

    எப்போ? எப்போ/

    ReplyDelete
  29. விளம்பரம்ங்கள் என்னிக்குமே கவர்ந்து இழுக்கும் ஒரு மீடியா தான். நீ சொன்ன மாதிரி சில விளம்பரங்களை கண்டால் செம கடுப்பாகும்...

    கருப்பு வெள்ளை கான்செப்ட் சூப்பர்

    ReplyDelete
  30. எல்லாமே அருமையா இருக்கு!

    ReplyDelete
  31. நல்ல போஸ்ட்ங்கிறதால தான் கும்மி குறைவா இருக்கோ? :)

    ReplyDelete
  32. விளம்பரங்கள் அனைத்தும் அருமை,
    இந்த axe சிரிப்போ சிரிப்பு, போன், பிளைட், உங்கள் கற்பனையான டை
    எப்பிடி இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ,,,,,,

    ReplyDelete
  33. நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு

    தமிளிஷ்ல வோட்டு போட்டதுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  34. //டிஸ்கி: இது சும்மா ஒரு ஆர்வத்தில் போட்ட பதிவு//

    யோவ் லூசு மாமா.. உண்மையிலேயே இந்தப் பதிவு அபாரம். இது போன்ற உங்கள் துறை சார்ந்த உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த விளம்பரத் துறை பத்தி தொடர்ந்து எழுதுங்க. உங்களுக்கு பிடித்தமான இந்த துறையில் நீங்கள் பிரபலமாக இந்த இடம் கூட காரணமாக இருக்கலாம்.

    உங்களுக்கு பல நல்ல வாய்ப்பைப் பெற்றுத் தரும். தொடரவும்.

    இது வேண்டுகோள் இல்ல.. கட்டளை.

    ReplyDelete
  35. // கோத்ரேஜ் ஐடியா - வாவ்? hats off.//

    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  36. இப்பொவெல்லாம் கம்பெனிகள் பொருள் தயாரிப்பில் காட்டும் ஆர்வத்தை விட விளம்பரங்களின் மீது அதீத ஆர்வம் காட்டுகின்றன.

    தொரை, துறை சார்ந்த பதிவா?

    ReplyDelete
  37. என் கண்ணுல ஆனந்த கண்ணீரு வந்துருச்சு மாப்ள, நம்ம சரவண வேலுக்குள்ளற இம்புட்டு திறமை இருக்கது அவன் கூடப்படிச்ச காலத்துல தெரியாம போயிருச்சேன்னு ஒரே ஃபீலிங்ஸ் மாப்பி.

    அந்த ஹேர் டை விளம்பரம் ரொம்ப கலக்கலான யோசனை.
    உன் தலைக்கு சாயம் பூசுறப்ப கூட நீ யோசிக்கிற பாரு, அந்த சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.

    ReplyDelete
  38. Axe ஸ்ப்ரே and உரம் super ! சட்டை விளம்பரம் வித்தியாசமாக யோசிக்க வைத்தது.

    உங்களின் கோத்ரேஜ் ஐடியாக்களில் கருப்பு-வெள்ளை படங்கள் அருமை. கேசத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் Black & white wins hands down against color.

    //ஜோசப் பால்ராஜ் said...
    என் கண்ணுல ஆனந்த கண்ணீரு வந்துருச்சு மாப்ள, நம்ம சரவண வேலுக்குள்ளற இம்புட்டு திறமை இருக்கது அவன் கூடப்படிச்ச காலத்துல தெரியாம போயிருச்சேன்னு ஒரே ஃபீலிங்ஸ் மாப்பி.

    அந்த ஹேர் டை விளம்பரம் ரொம்ப கலக்கலான யோசனை.
    உன் தலைக்கு சாயம் பூசுறப்ப கூட நீ யோசிக்கிற பாரு, அந்த சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு//

    உங்க காலேஜ்ல நகைச்சுவையையும் ஒரு பாடமா எடுத்தாங்களா ?

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  39. விளம்பரங்கள் மீது எனக்கும் கொள்ளை பிரியம்.. இனி உங்களை அடிக்கடி தொல்லை பண்றேன்

    //

    repeateeeeyyyyy

    ReplyDelete
  40. செம போஸ்ட்... நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  41. தலை'மை' சூப்பர்..சொந்த அனுபவமா? :P

    ReplyDelete
  42. அட, அட, அட எனக்கு பென்சில் விளம்பரம் ரொம்ப பிடித்திருக்கிறது..

    நீங்கள் பகிர்ந்துகொண்ட எல்லா விளம்பரங்களும் அருமை நண்பரே!

    ReplyDelete
  43. ஆக்ஸுக்கான விளம்பரம் சூப்பர். அருமையான கற்பனை.. உங்கள் பதிவும் மிக அருமை குசும்பன்.

    ReplyDelete
  44. நன்றி கார்க்கி

    நன்றி சிபி அண்ணாச்சி

    நன்றி நர்சிம்

    நன்றி ஜமால்

    நன்றி அண்ணாச்சி அது மாஸ்ட்ரோ இல்லை அண்ணாச்சி டீ மாஸ்டர்!

    நன்றி அனுஜன்யா தங்களின் பாராட்டுக்கு!

    நன்றி நாஞ்சில் பிரதாப் -ஒருவாரம் மட்டுமே பயமுறுத்தலாம் என்று ஒரு நல்ல எண்ணம் தான்!

    நன்றி ஸ்ரீமதி

    நன்றி சந்தனமுல்லை

    நன்றி முரளிகண்ணன்

    நன்றி வெடிகுண்டு முருகேசா

    நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

    நன்றி மணிகண்டன் எப்போதாவதுதான்:))

    நன்றி மகேஷ் உங்க பதிவு உங்கள் வேலையும் அருமை!

    நன்ற் ஆயிலு

    நன்றி அப்துல்லா அண்ணாச்சி

    நன்றி தம்பி பிரியன்

    நன்றி அபி அப்பா

    நன்றி G3

    நன்றி கார்த்திக் உங்க வாக்கு பலிச்சா உங்களுக்கு ஸ்பெசல் கவனிப்புதான்!

    நன்றி லக்கி- வசிஸ்டர் வாயால்...:)


    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி கைப்புள்ள தங்கள் பாராட்டுக்கு

    நன்றி ராஜ நடராஜன்

    நன்றி அதிஷா தங்கள் பாராட்டுக்கு

    நன்றி கவிதா

    நன்றி வித்யா

    நன்றி அகமது சுபைர் இன்னும் எப்படியும் யோசிக்கலாம் காண்டம் பற்றி
    யோசிச்சு வைத்து இருப்பதை எல்லாம் சொன்னா அடிவிழும்:))

    நன்றி பரிசல் அந்த தொழிலதிபர் நன்றாக ஊக்கம் கொடுப்பவர்.

    நன்றி nvnkmr

    நன்றி புலி தங்கள் பாராட்டுக்கு

    நன்றி காயத்ரி உங்க பல போஸ்டுக்கு கும்மி இருக்குமே அப்ப அதுஎல்லாம் ??ஹி ஹி:)

    நன்றி யாத்ரா

    நன்றி சுரேஷ் தங்கள் ஓட்டுக்கு

    நன்றி மாமா உன் வாக்கு பலிக்கட்டும் மாமா

    நன்றி ச்சின்னப் பையன்

    நன்றி புருனோ

    நன்றி வெங்கட்ராமன் துரை!

    நன்றி சோசப்பு உன் கூடப்படிச்சதால் தான் இப்படி
    யோசிக்கவே முடியுதுன்னு சொல்லுறேன் நீ வேற!

    நன்றி மாசற்ற கொடி அது ஊர் மண்ணின் மகிமை!

    நன்றி பூர்ணிமா சரவணகுமார்

    நன்றி ஜி

    நன்றி ரிஷான்

    நன்றி ஷீ-நிசி

    நன்றி கேபிள் சங்கர்

    ReplyDelete
  45. விளம்பரங்கள்ல எவ்வளவு க்ரியேடிவிட்டி இப்ப. உங்க விளம்பர ஐடியாக்களை எல்லாம் வெளில சொல்லிராதீங்க. காப்பி அடிச்சிருவாங்க

    ReplyDelete
  46. நல்லா வந்துருக்கு தல!

    ReplyDelete
  47. கோத்ரேஜ் விளம்பரமும், உர விளம்பரமும் அசத்துது.

    ReplyDelete
  48. சூப்பர் போஸ்ட் குசும்பா!

    ReplyDelete
  49. நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

    எதிர்பார்த்த மாதிரி கலக்கறீங்க அண்ணே.

    ReplyDelete
  50. சூப்பர்..உண்மையிலேயே நல்லா இருக்கு!
    அந்த கோத்ரெஜ் யோசனை அசத்தல்!

    ReplyDelete