Tuesday, October 21, 2008

டரியல் டக்ளஸ்! + தன்னிலை விளக்கம்

டரியல் டக்ளஸ்: பழய வீட்ட இடிச்சு புதுவீட்டை பழய வீடு மாதிரியே கட்டுறானுங்க கேட்டாக்கா புதுமையா ஏதும் செய்கிறார்களாம்!

டரியல் டக்ளஸ்: போன் செஞ்சா கஸ்டமர் நீங்கதான் எங்கள் தெய்வம் உங்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்கிறது ரெக்கார்ட் செஞ்ச ஒரு பெண் குரல் ஒரு அவசரத்துக்குபோன் செஞ்சப்ப 200 முறையாக!

டரியல் டக்ளஸ்: 300 யூனிட்டுக்கு மேல உபயோகிச்சா 50% அதிகம் வசூலிக்கப்படுமாம், முதலில் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் கொடுத்தா நாங்க 50% அதிகம் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுக்கிறோம்!

*********************************************************************
நண்பர் ஒருவர் நேற்று ஆன் லைனில் வந்தார் அடிக்கடி வராதவர் வந்து இருக்காரே என்று ஒரு ஹாய் சொன்னேன், அவர் உடனே என்னய்யா குசும்பா இன் விசிபிள் மோடில் இருக்க யாருக்கு பயந்துக்கிட்டு என்றார்?

நான் சொன்னேன் பயம் எல்லாம் இல்லை நான் ஆன் லைனில் இருந்தாலும் யாரும் என்னிடம் பேசபோவது இல்லை, ஆன் லைனில் இருந்தும் யாரும் பேசமாட்டேங்கிறாங்களே என்று எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு அதான் இன் விசிபிளில் இருந்தாலாவது அதனால் தான் பேச மாட்டேங்கிறாங்க போல என்று மனச தேத்திப்பேன் என்றேன்.

நண்பன் என்னது யாரும் உன்னிடம் பேசமாட்டேங்கிறாங்களா என்றார்?

இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.

அதன் பிறகு அவரும் பேசவில்லை:((

என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))

***************************************************************
இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன்.

22 comments:

  1. //என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))//

    Achachoo naan varala anna indha vilaiyaattukku..!! :)))))))))

    ReplyDelete
  2. //300 யூனிட்டுக்கு மேல உபயோகிச்சா 50% அதிகம் வசூலிக்கப்படுமாம், முதலில் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் கொடுத்தா நாங்க 50% அதிகம் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுக்கிறோம்!//

    :))))))))

    ReplyDelete
  3. //இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.

    அதன் பிறகு அவரும் பேசவில்லை:((//

    அச்சோ பாவம் :(((

    ReplyDelete
  4. //இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன்.//

    அத தேடி தான் அலைஞ்சுகிட்டு இருக்கேன்... தேங்க்ஸ் பார் த இன்பர்மேஷன்..!! ;))))))

    ReplyDelete
  5. //என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))//

    அதான் சொல்லிட்டீங்கள இனிமே கண்டிப்பா இந்த ஐ.டி பார்த்தா எஸ்கேப் தான்.

    எவ்ளோ நேரமா அந்த ப்ளீச்சிங் பவுடர் பதிவ ட்ரை பண்ணினேன் தெரியுமா... இப்பவாவது சொன்னீங்களே

    ReplyDelete
  6. குசும்பா,

    நீங்க டெலீட் பண்ணமுன்னே அது எனக்கு பார்வேர்ட் ஆகி வந்திருக்கு. நல்லாத்தானே இருக்கு ஏன் டெலீட்?

    வொய் வொய் வொய்?

    ReplyDelete
  7. //இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.

    அதன் பிறகு அவரும் பேசவில்லை:((//

    நான் அவனில்லை :-)))))))

    ReplyDelete
  8. //
    இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.
    //

    நானும் அப்படித்தான். ஆனா சாட் பண்னதே இல்லையே? கும்மி இருக்கும் போது சாட் எதுக்கு?

    ReplyDelete
  9. //இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன். //

    என் பதிவுல இருந்ததைவிட ப்ளீசிங் பவுடர் உங்க பதிவுல அழகா, கலரா இருந்தார் ..

    ஏன் அதை டெலிட் செய்ஞ்சீங்க ...

    வேணும்னா நான் என்பதிவை தூக்கிடுகிறேன் ...
    மீண்டும் பதிவிடுங்கள்

    -பக்கி

    http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_20.html

    ReplyDelete
  10. குசும்பன்,

    பக்கிலுக் யாருனு தெரிஞ்சு போச்சு.

    நாளை பரிசல்காரன் பதிவில் பக்கிலுக்கின் படம் வெளியாகிறது :)

    ReplyDelete
  11. //நாளை பரிசல்காரன் பதிவில் பக்கிலுக்கின் படம் வெளியாகிறது :) //


    படம் புடிச்சா ஆயுசு கொரஞ்சிடும்னு என் அப்பாத்தா அடிக்கடி சொல்லும் ...

    அதனால் படமே புடிக்கல ...

    என்படம் எனக்கு தெரியாமலா ?.. எனக்கும் ஒரு காப்பி அனுப்பி விடுங்கள் ..

    ReplyDelete
  12. ஸ்ரீமதி நன்றி, யேய் எனக்கும் மீ த பர்ஸ்ட் போட ஆள் இருக்கு! :))

    ***************************
    ஸ்ரீமதி ஹி ஹி பசங்களதான் திட்டுவேன்:))

    ***************************
    நான் ஆதவன் இப்படி எல்லாம் எஸ்கேப் ஆனா எப்படி?:))

    ******************************
    வடகரை வேலன் அண்ணாச்சி அதுபோல் நேற்றே பக்கி லுக் பதிவு போட்டுவிட்டார் என்று காலையில் கோவி கண்ணன் அண்ணாச்சி சொன்னார் அதான் டெலிட், ஒரே கான்செப்ட்டில் பலர் பதிவு போட்டா படிப்பவங்களுக்கும் போர் அடிக்கும்.
    அதான் அப்படி டெலிட்!
    (ஆமா எதுக்கு இத்தனை ஒய் ஒய் ஒய்? பார்த்திபன் ஸ்டைலில் படிக்கவும்)
    *******************************
    என்ன சிவா உங்களை போய் வேலை வெட்டி இல்லாதவன் என்று திரும்ப திரும்ப சொல்லமுடியுமா?:) எனக்கே போர் அடிக்குது!

    **********************************
    கார்க்கி அப்படியா சேதி, அப்ப இனி உங்க பதிவில் நோ கும்மி!!!
    ********************************

    ReplyDelete
  13. பக்கி லுக் ... said...
    வேணும்னா நான் என்பதிவை தூக்கிடுகிறேன் ...
    மீண்டும் பதிவிடுங்கள்//

    அவ்வ்வ் வேண்டாம் வேண்டாம்!

    ****************************
    வெயிலான் said...
    குசும்பன்,

    பக்கிலுக் யாருனு தெரிஞ்சு போச்சு.//

    என்ன வெயிலான் டெல்லியில் குண்டு வெச்சது யாருன்னு தெரிஞ்சு போச்சுன்னு சொல்வது போல் சொல்றீங்க:)) அவரும் பதிவர்தானே!!!:))

    //நாளை பரிசல்காரன் பதிவில் பக்கிலுக்கின் படம் வெளியாகிறது :)//

    முன்பதிவு செய்யமுடியுமா?:))

    ReplyDelete
  14. //என்ன வெயிலான் டெல்லியில் குண்டு வெச்சது யாருன்னு தெரிஞ்சு போச்சுன்னு சொல்வது போல் சொல்றீங்க:)) //

    ஆஹா போற போக்க பாத்தா இவன்தாண்டா அவன்னு சொல்லிடுவாங்க போலயே...

    அய்யா சாமி எனக்கு குன்டூசினாலே பயம் ....ஆள உடுங்கப்பா..

    //அவரும் பதிவர்தானே!!!:)) //
    அப்பாடா ... என்ன ஒரு ஆறுதலான வார்த்தை .....இதுக்கே ஒரு .."ஓ" போடணும் ...

    ReplyDelete
  15. டரியல் டக்லஸ் கலக்கல்...

    ஹி..ஹி.. நானும் உங்க ஐடியை ச்சாட்ல சேத்திட்டேன்..

    ReplyDelete
  16. Asathapoovadhu yaarunnu thedi thedi pathutu irundhen.....inga vandhapuram thaan therindhadhu....
    adhigamana...asathal mannargal ...inga irukaanganu! Asathunga! Asathunga! lol!!

    ReplyDelete
  17. மூன்றாவது டரியல் உண்மையிலேயே ஆட்சிக்கு டரியல் தான்

    ReplyDelete
  18. உண்மையில் மற்றவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் நான் தொந்தரவு செய்யாதர்த்திர்க்கு காரணம் என்னை போலவே நீங்களும் வேலை செய்து கொண்டிருப்பீர்கள் என்று தான்.

    நீங்கள் சும்மா தான் இருப்பீர்கள் என்று தெரிந்தால் நான் சும்மா இருக்கும் போது சாட் செய்திருப்பேன்.

    ReplyDelete
  19. வெண்பூ said...
    டரியல் டக்லஸ் கலக்கல்...

    ஹி..ஹி.. நானும் உங்க ஐடியை ச்சாட்ல சேத்திட்டேன்..//

    அவ்வ்வ் நீங்க ரொம்ப நல்லவருங்கோ:)))

    ***********************
    நன்றி அனானி
    ***********************
    வால் என்னமா சமாளிக்கிறீங்க
    ***************************

    ReplyDelete