Sunday, October 19, 2008

கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும் ஆண்களுக்காக இந்த பதிவு.


சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?

மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.


ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?

நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).


புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.


******************************************************************************

சாதம் வகைகள்


சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).


ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.

புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.

லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.

ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.

முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

******************************************************************************

இதர சில குறிப்புகள்

சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)

ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!

கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)

**********************************************************************

சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் ”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற” என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.

இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!

72 comments:

  1. என் பங்குக்கு கல்யாணம் ஆகப்போற பசங்களுக்கு...

    கல்யானம் ஆகி முதல் மூணு மாசத்துக்கு மனைவி எதை எப்படி சமைத்தாலும் நல்லாத்தான் தெரியும்.

    மூணு மாசத்துக்கு அப்புறம்
    .
    .
    .
    .
    .

    பழகிபோயிடும்

    ReplyDelete
  2. ஆஹா..ஆஹா.. தங்கமணியிடம் நல்ல பெயர் வாங்க உதவி செய்த குசும்பன் அவர்களை பாராட்டி அவர் தங்கமணி இன்று ரசம் வைத்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ஹி..ஹி.. ஆனா லேபிள் எல்லாம் சூப்பர்..

    ReplyDelete
  3. குசும்பா எங்க ஊர் பக்கம் சொந்தமா பொங்கிதின்னவனுக்கு பொண்ணு கொடுக்காதேன்னு பழமொழியே உண்டு தெரியுமா?

    உன் விசயத்துல அதான் நடக்குது.

    ReplyDelete
  4. //
    நந்து f/o நிலா said...
    என் பங்குக்கு கல்யாணம் ஆகப்போற பசங்களுக்கு...

    கல்யானம் ஆகி முதல் மூணு மாசத்துக்கு மனைவி எதை எப்படி சமைத்தாலும் நல்லாத்தான் தெரியும்.
    //

    என் கேஸ்ல கொஞ்சம் வித்தியாசம். மொத மூணு மாசம் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி, அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன். அப்புறம் பழகிடுச்சி.. :)))

    ReplyDelete
  5. மவனே தனியா சோத்துக்கு சிங்கி அடிச்ச காலத்த மறந்துடாத.

    எங்க அம்மா அப்படி சமைக்கும் இப்படி சமைக்கும்ன்னு டார்ச்சர் பண்ணி புள்ள ஸ்ட்ரைக் பண்ணுச்சுன்னு வெச்சுக்கோ..

    கொய்யால அப்ப அடிச்ச சிங்கிய விட இப்ப சிங்கி அடிக்க உட்டா இன்னும் மோசமா இருக்கும்.

    அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோ..

    ReplyDelete
  6. //வெண்பூ said...
    என் கேஸ்ல கொஞ்சம் வித்தியாசம். மொத மூணு மாசம் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி, அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன். அப்புறம் பழகிடுச்சி.. :)))//

    எனக்கும் அப்போ கஷ்டம்தேன். சொல்லவா முடியும். நல்லா வாயோட எண்ட் ரெண்டையும் காது வரைகும் இழுத்துகிட்டு...

    கொழம்பு சூப்பர் கண்ணு. கொஞ்சம் புளி, கொஞ்சம் காரம், கொஞ்சம் உப்பு மட்டும் லேசா பத்தலன்னுதான் ஓட்டுனோம் காலத்த..

    ReplyDelete
  7. நான் படிக்கலைப்பா.. எனக்கு இன்னும் கல்யாணம்)மட்டும்) ஆகல‌..

    ReplyDelete
  8. உங்க மனைவிய ரொம்ப பாராட்டனுங்க.. வந்த கொஞ்ச நாளிலே இத்தனை வகையை செய்து பார்த்திருக்காங்க பாருங்க..:)

    ReplyDelete
  9. வீட்டில சமைக்க ஆரம்பிச்சிட்டேன்னு தெரியுது.... எஞ்சாய் !
    :)

    ReplyDelete
  10. இங்கு தன் சோகம் முழுவதையும் கொட்டிக்கொண்டு இருக்கும் தோழர் நந்துவுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் இல்லை என்னிடம்!!!

    ?******************************
    வெண்பூ said...
    ரசம் வைத்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.//

    என்னது மீண்டும் ரசமா????:(((

    ஹி..ஹி.. ஆனா லேபிள் எல்லாம் சூப்பர்../// பதிவு கஷ்டப்பட்டு(தால்) எழுதினா லேபிள் சூப்பரா ஒய் உமக்கு:((
    *******************************

    ReplyDelete
  11. நந்து f/o நிலா said...
    எங்க அம்மா அப்படி சமைக்கும் இப்படி சமைக்கும்ன்னு டார்ச்சர் பண்ணி புள்ள ஸ்ட்ரைக் பண்ணுச்சுன்னு வெச்சுக்கோ..//

    எப்போ எப்போ எப்போ என்று ஆவலுடன் காத்திருக்கும் அப்பாவி கோயிந்து:((

    உப்பு கம்மி,உறைப்பு கம்மின்னா கூட சாப்பிட்டுவிடலாம் ஆனா அதிகம் என்றால்:)))
    ********************************

    கார்க்கி உங்களுக்கும் தேவைப்படும்!!!

    *******************************
    முத்துலெட்சுமி-கயல்விழி said...
    உங்க மனைவிய ரொம்ப பாராட்டனுங்க.. வந்த கொஞ்ச நாளிலே இத்தனை வகையை செய்து பார்த்திருக்காங்க பாருங்க..:)//

    நான் சொல்லி இருப்பது மூன்று வகை குழம்பு இருவகை சாம்மார், கல்யாணம் ஆகி ஆறுமாசம் ஆவுது அப்ப இதுவே அதிகமா? அவ்வ்வ்வ் அப்ப நான் கொடுத்துவெச்சவன்:))))

    ReplyDelete
  12. //
    கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது
    //

    :)))))))))))

    ReplyDelete
  13. //
    தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி!
    //

    நல்ல வேளை சொன்னீங்க!!
    :))

    ReplyDelete
  14. //
    சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம்.
    //
    (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலே அது ஏதோ வெரைட்டி சாதம்).
    //

    ஓ இதுல இவ்ளோ விசயம் இருக்கா!?
    :))))

    ReplyDelete
  15. //
    சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
    //

    :)))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  16. //
    ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
    அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.
    //

    u mean kuskaa??

    ReplyDelete
  17. //
    சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?, தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல் சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி இருந்தாலும் என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுங்க.
    //

    கண்ணை தொறந்துட்டண்ணா கண்ணை தொறந்துட்ட
    :))))

    ReplyDelete
  18. முதல் பத்தி அப்படியே என் வீட்டில்.:-)
    படத்தில் உள்ளவை எல்லாம் உங்கள் கை வண்ணமா?

    ReplyDelete
  19. //
    டிஸ்கி: சில சமயம் உப்பு, உரைப்பு,புளிப்பு எதுவும் இருக்காது இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன என்று கண்டுபிடிக்கனும்.
    //

    இப்பிடி கண்டுபிடிக்கிறதுக்கு இன்னும் ரொம்பா எக்ஸ்பீரியன்ஸ் ஆகணும்
    :((((

    ReplyDelete
  20. //
    நந்து f/o நிலா said...

    என் பங்குக்கு கல்யாணம் ஆகப்போற பசங்களுக்கு...

    கல்யானம் ஆகி முதல் மூணு மாசத்துக்கு மனைவி எதை எப்படி சமைத்தாலும் நல்லாத்தான் தெரியும்.
    //
    இல்லியே


    //
    மூணு மாசத்துக்கு அப்புறம்
    .
    .
    .
    .
    .

    பழகிபோயிடும்
    //

    அப்பிடித்தான் நடக்கும் போல
    :)))))))))))))))))

    ReplyDelete
  21. //
    வெண்பூ said...

    ஆஹா..ஆஹா.. தங்கமணியிடம் நல்ல பெயர் வாங்க உதவி செய்த குசும்பன் அவர்களை பாராட்டி அவர் தங்கமணி இன்று ரசம் வைத்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  22. லேபிள் எல்லாம் சூப்பரோ சூப்பர்!

    ReplyDelete
  23. கோவி.கண்ணன் said...
    வீட்டில சமைக்க ஆரம்பிச்சிட்டேன்னு தெரியுது.... எஞ்சாய் !
    :)//

    குக்கிங் மீ?? ஹா ஹா மனைவி சமயல் அருமையா இருக்கும் பொழுது நான் ஏன் சமைக்கனும்::))

    ***********************************

    ReplyDelete
  24. மங்களூர் சிவா said...
    //
    கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது
    //

    :)))))))))))//

    யோவ் சிவா இதுக்கு தில் இருந்தா ரிப்பீட்டேய் போடு பார்க்கலாம்!!!

    ReplyDelete
  25. //
    நந்து f/o நிலா said...

    மவனே தனியா சோத்துக்கு சிங்கி அடிச்ச காலத்த மறந்துடாத.

    எங்க அம்மா அப்படி சமைக்கும் இப்படி சமைக்கும்ன்னு டார்ச்சர் பண்ணி புள்ள ஸ்ட்ரைக் பண்ணுச்சுன்னு வெச்சுக்கோ..

    கொய்யால அப்ப அடிச்ச சிங்கிய விட இப்ப சிங்கி அடிக்க உட்டா இன்னும் மோசமா இருக்கும்.

    அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோ..
    //

    இதை எனக்கும் சொன்ன எச்சரிக்கையா எடுத்துக்கிறேன்.
    :)))

    ReplyDelete
  26. //
    முத்துலெட்சுமி-கயல்விழி said...

    உங்க மனைவிய ரொம்ப பாராட்டனுங்க.. வந்த கொஞ்ச நாளிலே இத்தனை வகையை செய்து பார்த்திருக்காங்க பாருங்க..:)
    //

    இதுக்கு குசும்பனை இல்ல பாராட்டணும் இவ்ளோவும் ட்ரயல் பாத்துட்டு தெம்பா எழுந்து பதிவு வேற போடறாரே!!

    :))))))))))

    ReplyDelete
  27. //
    குசும்பன் said...

    மங்களூர் சிவா said...
    //
    கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில் செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது
    //

    :)))))))))))//

    யோவ் சிவா இதுக்கு தில் இருந்தா ரிப்பீட்டேய் போடு பார்க்கலாம்!!!
    //

    வீட்டுல மொத நாள் (கிச்சனை பார்த்து) இது என்ன பாத்திரம் எல்லாம் இங்க போட்டு வெச்சிருக்கீங்கன்னு கேட்டாளே
    :)))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  28. பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!//

    ஆகா இப்ப விஷயம் விளங்குது..

    ஆனாலும் அண்ணே இவ்வளவும் சொன்ன உங்களுக்கு ஸகிப்புலக சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கும்படி பதிவுலக நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.

    ReplyDelete
  29. //பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே//

    அடப்பாவி இப்ப இதப்போட்டுட்டியா?

    பயபுள்ள என்ன எப்படி இழுத்து கோத்துவிட்டிருக்கான்னு பாருங்க மக்களே.

    ReplyDelete
  30. டிஸ்கி: என்னுடைய கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.

    எஸ்கேப்டா சாமி

    ReplyDelete
  31. //
    நந்து f/o நிலா said...

    டிஸ்கி: என்னுடைய கமெண்ட்ஸ் அனைத்தும் கற்பனையே.

    எஸ்கேப்டா சாமி
    //

    ரிப்ப்ப்ப்ப்பீட்ட்டு

    நானும் எஸ்க்கேப் ஆகிக்கிறேன்.

    ReplyDelete
  32. கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப தெளிவா ஆயிட்டிங்க போல. . . .
    கலக்கல் பதிவு.

    ReplyDelete
  33. Labels: ஆதங்கம், ஆராய்சி, சோதனை, தண்டனை, வேதனை

    என்ன இதெல்லாம், உங்க தங்கமணி கண்ல படாம பார்த்துக்குங்க. . . . .

    ReplyDelete
  34. அனுபவப் பாடத்துல் போட்ட பதிவு...

    ரொம்ப நல்லா இருக்கு குசும்பன்.

    :)))))))

    ReplyDelete
  35. அப்படியே, இதெல்லாம் எப்படி பாராட்டறதுன்னும் கொஞ்சம் சொல்லிக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.

    விடுமுறை தினங்களில், தினமும் நீ எவ்வளவு கஷ்டப்படுற அப்படின்னு சொல்லிட்டு, நாமளே சமைச்சிட்டா, அன்னைக்காவது கொஞ்சம் வாய்க்கு ருசியா நீங்க சாப்பிட ஒரு வாய்ப்பு கிடைக்கும்!!;-)(தங்கமணி இதெல்லாம் படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியம்தான்!!)

    ReplyDelete
  36. Ivlo kashtapadaradhukku ozhunga pudhu maapillaingalae kitchenla poondhu samaikka aarambichidalaamilla...

    Oh.. oruvela appadi edhaavadhu nadandha indha tips kalyaanamaana pudhu ponnungalukku mattumnu title maathi podanumo :P

    ReplyDelete
  37. உங்க பேச்சிலர் லைப் சமையலை அப்படியே தலைப்பை மாத்தி போட்டுடீங்களோ?. குசும்பு ஜாஸ்திதான்

    ReplyDelete
  38. குசும்பன் : எங்க வீட்டில் ரசம் அருமையாக இருக்கும்
    கோவி: அப்படியா...உங்க வீட்டில் நல்லா சமைப்பாங்களா ?
    குசும்பன் : இல்லை, இல்லை, அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கிறிங்க, ரசம் மட்டும்தான் சாப்பிடும் லட்சணத்தில் இருக்கும்.

    ReplyDelete
  39. இதையெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எலிக்கு குடுத்து பாக்கனுமா? :))

    ReplyDelete
  40. //
    புதுகை.அப்துல்லா said...
    இதையெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எலிக்கு குடுத்து பாக்கனுமா? :))
    //

    கல்யாணம் பண்ணிகிட்டது நீரு.. எலி என்னவோய் பாவம் பண்ணிச்சு??

    வேணும்னா நம்ம சாப்பிட்டு பாத்துட்டு ஒண்ணும் ஆகலன்னா எலிக்கு குடுக்கலாம். :)))

    ReplyDelete
  41. ஏதோ கல்யாணம் ஆனவங்க புலம்பல். நான் என்னத்த சொல்ல...

    ReplyDelete
  42. ம்... குறுகியகாலத்தில் நிறைய அனுபவம்.....
    முழுவதையும் சொல்லவிலைப்போலிருக்கிறது.. (போட்டோ வைத்து முடிவுசெய்வது..)

    ReplyDelete
  43. அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கறேன். மனசுல தோணறத கமெண்டா போட்டு, இன்னைக்கு கஞ்சிக்கு சிங்கி அடிக்கத் தயாரில்ல!

    ReplyDelete
  44. குசும்பன்,

    உங்களுடைய எல்லா பதிவுகளையும் விடாம வாசிக்கிறனான். இப்பயெல்லாம் ஏதவாது பிரச்சனை எண்டா உங்கட வலைப்பதிவுக்கு வந்து ஒரு பதிவை வாசிச்சா போதும்.

    ReplyDelete
  45. எல்லாமே அனுபத்தில வந்து இருக்கு! உங்களால இதையெல்லாம் தைரியமா எழுத முடியாது.. நம்மால முடியல.. அம்புட்டு தான் வித்தியாசம்.

    ReplyDelete
  46. கடமை ! (நண்பா என் கடன் கமெண்ட் செய்து செல்வதே! மத்தபடி பதிவு நான் படிக்கல! )

    ReplyDelete
  47. //சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)//

    நண்பா! மறுபடியும் அவுரு வீட்டுப்பக்கம் போய் நல்லா தின்னுட்டுவரணும்ன்னு கொஞ்சம் கூடவா எண்ணம் இல்ல :(

    ReplyDelete
  48. /குசும்பன் said...
    இங்கு தன் சோகம் முழுவதையும் கொட்டிக்கொண்டு இருக்கும் தோழர் நந்துவுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் இல்லை என்னிடம்!!!
    //


    எனக்கும்தான் பாவம் நினைச்சு நினைச்சு பீல் பண்ணுறாருப்பா!

    அவருக்கு தனியா போன் பண்ணியாச்ச்சும் ஆறுதல் சொல்லுப்பா :(

    ReplyDelete
  49. ஹய்யா நாந்தான் 50 :)))

    ReplyDelete
  50. இந்த ஆராய்ச்சிக்கு உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்

    ReplyDelete
  51. நண்பா என்னிய மன்னிச்சுடு!

    இப்பவும் நான் சொல்லிக்கிறது,
    நீ ரொம்ப ஓவராத்தான் போற, ஆமாம் இப்பிடியே போனீனா அப்புறம் ஸ்ட்ரைக்கு கண்டிப்பா வீட்ல நடக்கும், அப்புறம் நீ தெருவுல கிடக்க வேண்டியதுதான் :))))))

    ReplyDelete
  52. இத படிச்சிட்டு உங்க மனைவி நீங்க பண்ற சமையலை கரைட்டா கண்டுபுடிக்கிராங்க்களா

    ReplyDelete
  53. //ஜே கே | J K said...
    ஏதோ கல்யாணம் ஆனவங்க புலம்பல். நான் என்னத்த சொல்ல...
    //


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))

    ReplyDelete
  54. இத இப்ப சொல்லி என்ன பண்ணுறது..:(

    ReplyDelete
  55. புதுகை.அப்துல்லா said...

    இதையெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எலிக்கு குடுத்து பாக்கனுமா? :))
    //


    நாம எதுக்கு இருக்கோம்..???

    ReplyDelete
  56. நான் தலைப்பை பார்த்து வந்தேனா இல்லை ரெகுலராக வருவது போல் வந்தேனா? இந்த பதிவை படித்தேனா இல்லை படிக்கலையா...? கண்டுபிடிங்க பார்க்கலாம்... ஆனா சுவாமி ஓம்காரிடம் கேட்டு சொல்ல கூடாது...

    ReplyDelete
  57. தினம் தினம் விஷபரிச்தான் சொல்லுங்க.
    நாங்க யூத்....

    ReplyDelete
  58. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    உங்க மனைவிய ரொம்ப பாராட்டனுங்க.. வந்த கொஞ்ச நாளிலே இத்தனை வகையை செய்து பார்த்திருக்காங்க பாருங்க..:)
    //

    நியாயமா குசும்பன் அண்ணனத்தான் பாராட்டணும். இத்தனையையும் சாப்பிட்டு மறக்காம அதோட பேர் வரைக்கும் ஞாபகம் வச்சிருக்காரே :)

    ஏன்ணே.. இந்த சமைச்சப்புறம் பேர் வைக்குற வேலை உங்களோடதா.. இல்ல அண்ணியோடதா :)

    ReplyDelete
  59. //வெண்பூ said...
    //
    புதுகை.அப்துல்லா said...
    இதையெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எலிக்கு குடுத்து பாக்கனுமா? :))
    //

    கல்யாணம் பண்ணிகிட்டது நீரு.. எலி என்னவோய் பாவம் பண்ணிச்சு??

    வேணும்னா நம்ம சாப்பிட்டு பாத்துட்டு ஒண்ணும் ஆகலன்னா எலிக்கு குடுக்கலாம். :)))
    //

    சூப்பர் கமெண்டு :))

    ReplyDelete
  60. //இதையெல்லாம் சாப்பிடுறதுக்கு முன்னாடி எலிக்கு குடுத்து பாக்கனுமா? :))//

    இப்பல்லாம் எலி எங்க வீட்லே நுழையாமெ - Take Diversion - அப்படின்னு பாதை மாறி போயிடுது... ருசி கண்ட எலி.....

    ReplyDelete
  61. குசும்பரே -> பதிவு சூப்பர்... லேபிள்கள் சூப்பரோ சூப்பர்... :-))

    ReplyDelete
  62. ரொம்ப முக்கியாமான 3‍இன்1 டிஷ் தெரியுமா? ரசம், சாம்பார், கூட்டு மூன்றும் சேர்ந்தது. ரொம்ப சிம்பிள். சாம்பாரில் இரண்டு, மூன்று காய்கறிகள், கொஞ்சம் பருப்பு கூட போட வேண்டும். தண்ணீரும் சற்று கூட்தலாக விட வேண்டும். இதில் மேலாக, தெளிவாக ஊற்றினால் அது ரசம், அதற்கு அடுத்த ஸ்டேஜ் சாம்பார். அடியில் தங்குவது எல்லாம் கூட்டு. இது எப்படி இருக்கு? இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  63. குசும்பா,

    கோவிச்சுகிட்டு விமானம் ஏறி வரமாட்டங்கன்ற தைரியத்துல போட்டுட்ட.

    நாங்கெல்லாம் இப்படிக் கிண்டல் பண்ணா பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு போயிருவாங்களோன்ற கிலிலேயே காலத்த ஓட்டீட்டம்.

    ஒருதடவை அவங்க அம்மா அரைச்ச தக்களிச் சட்னீன்னு பரிமாறுன்னாங்க. சூபர்னு சொல்லி சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் மாமியார் வந்து அது அடைதோசை மாவுன்னாங்க.
    எவ்ளவு வீரத்தழும்பு இருக்கு எங்ககிட்ட. ஹ்ம்.

    ReplyDelete
  64. //பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும் பயந்து சொல்லவில்லை!!!//

    இது.... :))
    ஏன்னா, இப்ப கிடைக்கிறதும் அப்புறம் கிடைக்காது. கொஞ்ச நாளைக்கு கிண்டலாத்தான் இருக்கும்டி. நாங்கெல்லால், சமச்சு முடிச்ச அப்புறம் தங்கமணிகிட்டே கலந்து ஆலோசிச்சுட்டுதான் சாம்பாரா ரசமான்னு பேரையே வைப்போம் :)

    ReplyDelete
  65. //பழகிபோயிடும்//
    மாமன் சொன்னா தட்டாம தலையாட்டுற மாப்பிள்ளை

    இளா

    ReplyDelete
  66. கவலையை விடுங்கோ
    வாங்க இந்த இனையதளத்திர்க்கு
    இதனை பார்த்து நல்ல சாப்பாடு நீங்களே சமைக்கலாம்

    WWW.TAMILKUDUMBAM.COM
    பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

    ReplyDelete
  67. அண்ணா வீட்ல நீங்க தான் சமையல் போல... ;)) வகை எல்லாம் கரெக்ட்டா சொல்றீங்க... :)) எனக்கு ஒரு சந்தேகம் நீங்க சமைச்சத நீங்களே ஏன் பாராட்டிக்கணும்?? ;)) அதுக்கு இவ்ளோ பெரிய பதிவா?? :P

    ReplyDelete
  68. ஏன் இந்த கொலைவெறி?
    அண்ணி வலைப்பூ பக்கம் வருவதில்லை எனும் தைரியமா?

    ReplyDelete
  69. பேச்சிலரா இருந்தாலும், எனக்கு இப்பவே கிலியா இருக்கு...

    நான் ஒரளவுக்கு சமைப்பேன்(நண்பர்கள் பாராட்டுர அளவுக்கில்லைனாலும், அவங்க பசியாருர அளவுக்கு). வருங்கால தங்கமணிக்கு நல்லா சமைக்கத்தெரியலன்னா, நான் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனா சமையலே தெரியலைன்னா, அவ்வ்வ்வ்வ்வ்வ்.........

    குசும்பன், நந்து f/o நிலா, வெண்பூ, சிவா, மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் !

    ReplyDelete