Tuesday, May 27, 2008

சென்னை பதிவர்களை எந்த எந்த விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்??? + கிசு கிசு

போட்டோவில் மட்டுமே பார்த்து இருந்த பால பாரதியை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார். அவருக்கு 45 வயது என்று யாராலும் சொல்ல முடியாது. இவரை கோத்ரேஜ் ஹேர் டை அல்லது கார்னியர் கலர் நேச்சுரல்ஸ் விளம்பரத்துக்கு உபயோகபடுத்திக்கலாம்.

லக்கி மிகவும் கெச்சலாக இருக்கிறார் இவர் பேசும் பேச்சில் சென்னை வாடை இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இவர் உடம்பு குறைஞ்சா எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் இவரை சூரியன் மறைந்த பின்பு பார்த்ததால் எவ்வித பிரச்சினையும் இன்றி இவர் முகத்தை பார்க்க முடிந்தது கிளார் அடிக்கவில்லை, இவரை ஆயுர்வேதிக் ஹேர் டானிக் விளம்பரத்தில் நடிக்கவைக்கலாம்.

(இவரை பார்க்கும் பொழுது எல்லாம் ஹேராமில் கமல் பிரண்டாக நடித்து இருப்பவர் போல் இருக்கிறார் ஷாருக் அல்ல .

சந்தோஷ் இவரை பஞ்சதந்திரத்தில் இதயத்தில் ஓட்டை என்று நடித்து இருக்கும் குழந்தைக்கு அண்ணனாகவும் அல்லது அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.

வரவனையான் பார்க்க குட்டி வில்லன் போல் இருப்பதால் இவர் ரிஜெக்டெட்

இந்த விளபரத்தை எல்லாம் எடுக்க போவது அகில உலக தமிழன் டீவி புகழ், குறும்பட வித்தகர், நெடுந்தொடர் பிதாமகன் அகில உலகத்தையே தன் பெரும் பதிவுகளால் பயமுறுத்திவைத்து இருக்கும் ஹாலிவுட் டைரக்ட்டர் உண்மை தமிழன்.





கிசு கிசு

பெல்ட்டால் அடிப்பேன், உருட்டு கட்டையால் அடிப்பேன் என்று பதிவில் சண்டை போட்டுக்கிட்டு இருந்த இருவரும் சந்திப்பு முடிந்ததும் இருவரும் கிளாஸ்மேட் ஆகிவிட்டனர். கேட்டால் அது கருத்து மோதல் அது வேறு இது வேறு என்று சொல்கிறார்கள்.

சரியாக 100% தப்பா ஜோதிடம் சொல்வார் என்று சொல்லபடும் பதிவர், அவர் பெயர் கூட மான் என்று முடியும் அவர் என்னை பார்த்து சரியாக 100% தப்பா உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் தானே என்றார். பின்பு நான் இல்லை என்றதும் இல்லை நானா உங்க கல்யாணம் லவ் மேரேஜா என்று கேட்க கூடாது என்பதற்கா இப்படி சொன்னதாக சமாளித்தார்.

அதிஷ்டபார்வை பதிவருக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தை இருப்பதாகவும்
வீட்டில் மதுரை ஆட்சி என்றும் பாபா என்பவர் சொன்னார்.

பைத்தியகாரன், ஆடு மாடு எல்லாம் சீரியஸ் ஆசாமிகளாக இருப்பதால் அவுங்களுக்கு மாப்பு.

55 comments:

  1. எப்பா மீ த பஸ்டூஊஊஊஊஊஊஊஊ.

    ReplyDelete
  2. //பெல்ட்டால் அடிப்பேன், உருட்டு கட்டையால் அடிப்பேன் என்று பதிவில் சண்டை போட்டுக்கிட்டு இருந்த இருவரும் சந்திப்பு முடிந்ததும் இருவரும் கிளாஸ்மேட் ஆகிவிட்டனர். கேட்டால் அது கருத்து மோதல் அது வேறு இது வேறு என்று சொல்கிறார்கள்.//
    அட ஆமாம் மாப்பி.. நான் கூட ஒரு அக்னிநட்சத்திரம், கிழக்குச்சிமையில ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஒரளவுக்காவது எதிர்ப்பார்த்தேன்.. ஆனா வா மாப்பி தம் அடிக்க போவலாமுன்னு ரெண்டு பேரும் தோள் மேல கை போட்டுட்டு போனதை பாத்து நம்மளை வெச்சி காமெடி கீமெடி பண்ணலையேன்னு தோணிச்சு...

    ReplyDelete
  3. //சந்தோஷ் இவரை பஞ்சதந்திரத்தில் இதயத்தில் ஓட்டை என்று நடித்து இருக்கும் குழந்தைக்கு அண்ணனாகவும் அல்லது அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.//
    ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பாஆஆஅ.. பொழச்சேன்டா சாமி.. டேமேஜ் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு...

    ReplyDelete
  4. //சந்தோஷ் அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.//
    infact எனக்கு இது மாதிரி நிறையா ஆபர் வந்தது.. ஆனா இந்த மாதிரி விளம்பரங்களில் நடிச்சா கொஞ்சம் வயசான மாதிரி இருக்குமேன்னு நான் தான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்சம் இளமயா தடுப்பூசி போட்டுகிற பொறந்த குழந்தை மாதிரியான வேடங்களை prefer பண்றேன்..

    ReplyDelete
  5. இன்னும் ஒரு நிமிசத்துல பின்னுட்டம் வெளியே வராட்டி.. காந்தி சிலைக்கு கீழே நின்னுட்டு இருந்த பிகரை நீ சைட் அடிச்ச விஷயம் அண்ணிக்கு தெரிஞ்சி அதனால நீ அடிவாங்குன விஷயத்தை வெளியே சொல்லிடுவேன்.

    ReplyDelete
  6. ஹீஈஈஈஈஈஈஈஈ...... டப்.....

    ReplyDelete
  7. //சந்தோஷ் = Santhosh said...
    டேமேஜ் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு...//

    டேமேஜ் செய்யுற உடம்பாய்யா அது?

    ***************************

    சந்தோஷ் = Santhosh said...
    தடுப்பூசி போட்டுகிற பொறந்த குழந்தை மாதிரியான வேடங்களை prefer பண்றேன்..//

    இப்ப தடுப்பூசி போட்டு இறந்த குழந்தைகளுக்கு பதிலா இதுக்கு போட்டு இருக்கலாமே ஆண்டவா?

    இருடி அந்த மருந்து ஸ்டாக்கில் இருந்து ஒரு ஊசி போட சொல்றேன்.

    **************************
    லக்கிலுக் said...
    ஹீஈஈஈஈஈஈஈஈ...... டப்.....//

    என்ன ஆச்சு தல

    *****************************

    ReplyDelete
  8. ////சந்தோஷ் = Santhosh said...
    டேமேஜ் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு...//

    டேமேஜ் செய்யுற உடம்பாய்யா அது?//
    உனக்கு பொறாமை.. மாப்பி கள்ளம்கபடம் இல்லாதவங்க தான் கொழுக் மொழுக்குன்னு இருப்பாங்க.. இதை நான் சொல்லலை.. வாழைப்பழ அறிஞர் செந்தில் சொல்லி யிருக்காரு...

    ReplyDelete
  9. தல, என் தலையை வச்சு காமெடி பண்ணிட்டீங்களே... :))

    உங்களுக்கும் இப்பவே வழுக்கை விழ ஆரம்பிச்சிருச்சு. பத்து வருஷம் கழிச்சுப் பார்ப்போம்.. (நற நற).

    ReplyDelete
  10. ////சந்தோஷ் = Santhosh said...
    டேமேஜ் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு...//

    டேமேஜ் செய்யுற உடம்பாய்யா அது?//
    அடியேய்.. Making of Arnold படத்தோட 5ஆவது ரீலை பாத்துட்டு பேசப்படாது.. படம் முடியும் போது பாடியை பாருடீ..

    ReplyDelete
  11. சந்தோஷ் = Santhosh said...
    வாழைப்பழ அறிஞர் செந்தில் சொல்லி யிருக்காரு...//

    அவரு எப்படி அடி வாங்குவாருன்னு தெரியுமுல்ல...ஒழுங்கா கம்முன்னு கிட.

    ******************************

    ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    உங்களுக்கும் இப்பவே வழுக்கை விழ ஆரம்பிச்சிருச்சு. பத்து வருஷம் கழிச்சுப் பார்ப்போம்.//

    நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் நீங்க சொல்வது போல் 10 வருடம் வரையாவது எனக்கு தலையில் முடி இருந்தால். போற போக்க பார்த்தா பிளாட் போட்டு வித்துடலாம் போல :(((

    ReplyDelete
  12. //இந்த விளபரத்தை எல்லாம் எடுக்க போவது அகில உலக தமிழன் டீவி புகழ், குறும்பட வித்தகர், நெடுந்தொடர் பிதாமகன் அகில உலகத்தையே தன் பெரும் பதிவுகளால் பயமுறுத்திவைத்து இருக்கும் ஹாலிவுட் டைரக்ட்டர் உண்மை தமிழன்.//

    Kusumbu..

    Thanks for your nice comments..

    suratha.com open aakattum.. Appurama Vanthu Comment poderaen..

    ReplyDelete
  13. அப்பாடா...சென்னையோட போச்சு...

    ReplyDelete
  14. //லக்கிலுக் said...
    ஹீஈஈஈஈஈஈஈஈ...... டப்.....//

    என்ன ஆச்சு தல///
    டோட்டலா டேமேஜ் பண்ணிட்டு அப்புறமென்னய்யா ஒரு கேள்வி??

    ReplyDelete
  15. உங்க திருமணத்தின் போது எடுத்த
    ஒரு போட்டோ சுரேகாவின் பதிவில் இருக்கு.

    அந்த போட்டாவைப் பார்த்துட்டு
    ஆன்லைன் திருமண தகவல் நிலைய விளம்பரங்களுக்கு உங்களுடைய அந்த போட்டோவும், அதில் நீங்க நடிக்கலாம் என்றும் நான் சொல்றேன்.

    (கல்யாணத்துக்கு அப்புறம் முழிக்கிற முழிக்காகவே)
    :))))))))))))))

    ReplyDelete
  16. ஹா ஹா ஹா..
    எப்போ பார்க்கலாம் இந்த விளம்பரங்களை?

    ReplyDelete
  17. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    Kusumbu..

    Thanks for your nice comments..//

    மிக்க நன்றி

    ReplyDelete
  18. //நந்து f/o நிலா said...
    அப்பாடா...சென்னையோட போச்சு...//

    சென்னையில் ஹீரோக்கள் கம்மி ஆனா உங்க ஊரில் அதிக வருவோம் பொறுமையாக!!! அதுவும் உங்க ஊர் ஹீரோயின் இருக்காங்களே அட அட அட அவுங்கள பத்தி எழுதனும் என்றாலே ஒரு நாள் போதாது.:)))

    ReplyDelete
  19. ஆயில்யன் said...
    என்ன ஆச்சு தல///
    டோட்டலா டேமேஜ் பண்ணிட்டு அப்புறமென்னய்யா ஒரு கேள்வி??//

    அப்படியா அவரு டேமேஜ் எல்லாம் ஆகமாட்டார்.

    *******************************

    புதுகைத் தென்றல் said...
    உங்க திருமணத்தின் போது எடுத்த
    ஒரு போட்டோ சுரேகாவின் பதிவில் இருக்கு.

    அந்த போட்டாவைப் பார்த்துட்டு
    ஆன்லைன் திருமண தகவல் நிலைய விளம்பரங்களுக்கு உங்களுடைய அந்த போட்டோவும், அதில் நீங்க நடிக்கலாம் என்றும் நான் சொல்றேன்.

    (கல்யாணத்துக்கு அப்புறம் முழிக்கிற முழிக்காகவே)
    :))))))))))))))//

    அட பாவி சுரேகா கையில மாட்டும் ஒய்..

    அப்புறம் நீங்கள் சொல்லும் விளம்பரத்தில் நடிச்சா திரும்ப எனக்கு கல்யாணத்துக்கு பெண் கிடைக்குமா:)))))))))

    ************************
    நன்றி கோபி

    எப்பொழுதும் போல் இதுவும் கடமையா?:)))

    ***************************
    எம்.ரிஷான் ஷெரீப் said...
    ஹா ஹா ஹா..
    எப்போ பார்க்கலாம் இந்த விளம்பரங்களை?//

    டைரக்டர் உண்மை தமிழனாச்சே எப்படியும் ஒரு விளம்பரம் எடுக்க 10 வருடம் ஆகும்

    ReplyDelete
  20. அப்புறம் நீங்கள் சொல்லும் விளம்பரத்தில் நடிச்சா திரும்ப எனக்கு கல்யாணத்துக்கு பெண் கிடைக்குமா:)))))))))//

    ரொம்ப ஆசைதான்.

    நான் சொன்னது திருமணம் ஆகிடுச்சுன்னு சொல்லி மாடலாக நடிக்கதான்.

    ReplyDelete
  21. புதுகைத் தென்றல் said...
    ரொம்ப ஆசைதான்.

    நான் சொன்னது திருமணம் ஆகிடுச்சுன்னு சொல்லி மாடலாக நடிக்கதான்.///

    சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி பட டைட்டில் இல்லை:))

    ஹீரோ தற்சமயம் ரொம்ப பிஸியாக்கும்:))) நோ கால் சீட் கிடையாது. புது ஹீரோயின் என்றால் மட்டும் கொஞ்சம் பரிசீலனை செய்யபடும்.

    ReplyDelete
  22. அடுத்த பகுதிய எதிர்பாக்குறோம்...

    [குசும்பனை கோத்து விடுறதில அப்பிடி ஒரு சந்தோசம்...:):))) ]

    ReplyDelete
  23. குசும்பன்...said...

    ///சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி பட டைட்டில் இல்லை:))

    ஹீரோ தற்சமயம் ரொம்ப பிஸியாக்கும்:))) நோ கால் சீட் கிடையாது. புது ஹீரோயின் என்றால் மட்டும் கொஞ்சம் பரிசீலனை செய்யபடும்.///

    இது பெருங்கொடுமை...

    ReplyDelete
  24. தமிழன்... said...
    அடுத்த பகுதிய எதிர்பாக்குறோம்...//

    அடுத்தது கோவை, ஈரோடு பதிவர்கள்.

    [குசும்பனை கோத்து விடுறதில அப்பிடி ஒரு சந்தோசம்...:):))) ///

    சந்தோசமா சந்தோசம் உங்களயும் ஒருநாள் பார்க்காமலா இருக்கபோகிறேன்.

    ReplyDelete
  25. தமிழன்... said...
    இது பெருங்கொடுமை...///

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  26. நல்லா இருங்கய்யா.. உங்களுக்கு சரின்னு பட்டத செய்யுங்க

    ReplyDelete
  27. குசும்பு, என்னைய விட்டுட்டீங்களே?

    ReplyDelete
  28. //போட்டோவில் மட்டுமே பார்த்து இருந்த பாலபாரதியை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார்.//

    மொதல் வரியிலேயே பொய்யா..? இதை மட்டும் அந்தாளு நேர்ல கேட்டிருந்தாரு.. அப்படியே அந்தாண்டை ஓடி கடல்ல குதிச்சிருப்பாரு..

    ReplyDelete
  29. //அவருக்கு 45 வயது என்று யாராலும் சொல்ல முடியாது.//

    நாங்க 55-ன்னுல்ல நினைச்சுக்கிட்டிருக்கோம்.. 10 வயசைக் குறைச்சிட்டியே குசும்பு..

    ReplyDelete
  30. //இவரை கோத்ரேஜ் ஹேர் டை அல்லது கார்னியர் கலர் நேச்சுரல்ஸ் விளம்பரத்துக்கு உபயோகபடுத்திக்கலாம்.//

    தப்புத் தப்பா உளறாத குசும்பா.. இந்த விளம்பரத்துக்குப் பொருத்த இருந்த ஆளு ஜ்யோவ்ராம் சுந்தர்தான்..

    எப்படி இருக்கு என் செலக்ஷன்..?

    ReplyDelete
  31. //லக்கி மிகவும் கெச்சலாக இருக்கிறார்.//

    சாப்பிடறதே ஒரு வேளைதானாம்.. இருக்காதா பின்ன..?

    ReplyDelete
  32. //இவர் பேசும் பேச்சில் சென்னை வாடை இருக்கிறது.//

    அவன் சொத்தே அதுதான் குசும்பா..

    ReplyDelete
  33. //இன்னும் கொஞ்சம் இவர் உடம்பு குறைஞ்சா எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விளம்பரத்தில் நடிக்க வைக்கலாம்.//

    இப்பவே அப்பப்ப இப்படித்தான் நடிச்சிக்கிட்டிருக்கானாக்கும்..

    ReplyDelete
  34. //ஜ்யோவ்ராம் சுந்தர் இவரை சூரியன் மறைந்த பின்பு பார்த்ததால் எவ்வித பிரச்சினையும் இன்றி இவர் முகத்தை பார்க்க முடிந்தது கிளார் அடிக்கவில்லை, இவரை ஆயுர்வேதிக் ஹேர் டானிக் விளம்பரத்தில் நடிக்கவைக்கலாம்.//

    அதென்ன ரெண்டு பேருக்கு ஆயுர்வேத டானிக்..?

    வந்துட்டுப் போகும்போது வாங்கிட்டுப் போனது இன்னும் நாக்குல இருந்து இறங்க மாட்டேங்குதாக்கும்.. அதான்..

    ReplyDelete
  35. //(இவரை பார்க்கும் பொழுது எல்லாம் ஹேராமில் கமல் பிரண்டாக நடித்து இருப்பவர் போல் இருக்கிறார் ஷாருக் அல்ல)//

    ஆமா.. பக்கத்துல இருக்குற எங்களுக்கே வராத எண்ணம் உங்களுக்கு வந்திருச்சு..?

    ம்.. இதையெல்லாம் நேர்ல சொல்லிருக்கணும்ப்பூ..

    ReplyDelete
  36. //சந்தோஷ் இவரை பஞ்சதந்திரத்தில் இதயத்தில் ஓட்டை என்று நடித்து இருக்கும் குழந்தைக்கு அண்ணனாகவும் அல்லது அமுல் பேபி, செரிலாக் போன்ற விளம்பரங்களில் நடிக்கவைக்கலாம்.//

    பஞ்சதந்திரத்துல ரம்யா கிருஷ்ணன், சிம்ரனைவிட உமக்கு அந்த குழந்தை பிடிச்சுப் போய் இருக்கா.. முருகா.. முருகா..

    ReplyDelete
  37. //வரவனையான் பார்க்க குட்டி வில்லன் போல் இருப்பதால் இவர் ரிஜெக்டெட்//

    ஏன் மில்க் பிஸ்கட் விளம்பரத்தில் நைட்ரஸ் ஆக்ஸைடை சுவாசித்து கபகபவென வயிறெரிய சிரிக்கும் தீவிரவாதியாக நடிக்க வைக்கலாமே..?

    ReplyDelete
  38. //இந்த விளம்பரத்தை எல்லாம் எடுக்க போவது அகில உலக தமிழன் டீவி புகழ், குறும்பட வித்தகர், நெடுந்தொடர் பிதாமகன் அகில உலகத்தையே தன் பெரும் பதிவுகளால் பயமுறுத்திவைத்து இருக்கும் ஹாலிவுட் டைரக்ட்டர் உண்மை தமிழன்.//

    பட்டப் பேர் பத்தாது சாமி.. இன்னும் ஏதாவது கொஞ்சம் சேர்த்துக்க..

    ReplyDelete
  39. நான் மக்கள் டிவின்னா நீங்க தமிழன் டிவிங்கிறீங்களே சாமி..

    ReplyDelete
  40. //குறும்பட வித்தகர்//

    தேவையா எனக்கு..?

    அதிஷா பதிவுல அனானி கமெண்ட்டா போட்டது யாருன்னு இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு..

    ReplyDelete
  41. //நெடுந்தொடர் பிதாமகன்//

    அந்தப் பட்டத்தை என்கிட்டேயிருந்து நிறைய பேர் இதுவரைக்கும் பிடுங்கிட்டுப் போயிட்டாங்க.. உதாரணம், சிறில் அலெக்ஸ், மோகன்தாஸ், நந்தா..

    கும்மியை மட்டுமே படிச்சிக்கிட்டிருந்தா இப்படித்தான் தெரியாமப் போகும்ப்பூ..

    ReplyDelete
  42. //ஹாலிவுட் டைரக்டர்//

    உள்ளூர்ல ஒரு நாயும் மதிக்க மாட்டேங்குது.. இதுல ஹாலிவுட் டைரக்டர்ன்னு நானே உச்சி வெயில்ல மல்லாந்து படுத்து கனவு காண வேண்டியதுதான்.. வயித்தெரிச்சலை கிளப்பாதய்யா..

    ReplyDelete
  43. //பெல்ட்டால் அடிப்பேன், உருட்டு கட்டையால் அடிப்பேன் என்று பதிவில் சண்டை போட்டுக்கிட்டு இருந்த இருவரும் சந்திப்பு முடிந்ததும் இருவரும் கிளாஸ்மேட் ஆகிவிட்டனர். கேட்டால் அது கருத்து மோதல் அது வேறு இது வேறு என்று சொல்கிறார்கள்.//

    இதை நானும் என் நெடும் பதிவுல போட்டிருந்தனே.. பாக்கலே..?

    நிசந்தான்.. உலகத்தில் எல்லா ஜாதிக்காரர்களையும், எல்லா கருத்து உடையவர்களையும் ஒன்றாக்கும் ஒரே ஆயுதம் 'தண்ணி'தான்..

    ReplyDelete
  44. //சரியாக 100% தப்பா ஜோதிடம் சொல்வார் என்று சொல்லபடும் பதிவர், அவர் பெயர் கூட மான் என்று முடியும்.//

    ஏன்? ஊருக்கு வந்து குமுதம், குங்குமம், விகடன்னு நிறைய படிச்சாச்சோ.. அதியமான்னு ஒத்தை வார்த்தைல சொல்லி முடிக்க எம்புட்டு நேரமாயிருக்கும்..?

    ReplyDelete
  45. //அவர் என்னை பார்த்து சரியாக 100% தப்பா, "உங்க கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ்தானே?" என்றார். பின்பு "நான் இல்லை.." என்றதும், "இல்லை.. நானா 'உங்க கல்யாணம் லவ் மேரேஜா?' என்று கேட்கக் கூடாது என்பதற்காக இப்படி சொன்னதாக" சமாளித்தார்.//

    உன்னைப் பத்தி சரியாத் தெரியாம போயிருச்சு.. அதான்..

    நான் கரெக்ட்டா கேட்டேன் பாத்தியா..? போன் பில் எவ்ளோ ஆச்சுன்னு..?

    சில சமயம் ஜாதகமும், ஜோஸியமும் போட்டி போட்டுக்கிட்டு கவுத்துவிடுமாம்..

    ReplyDelete
  46. //அதிர்ஷ்டப் பார்வை பதிவருக்கு கல்யாணம் ஆகி இரு குழந்தை இருப்பதாகவும்//

    கிழிஞ்சது.. ஜமுக்காளத்துல வடி கட்டுன பொய்யாக்கும் இது..

    குழந்தை, குட்டி இருக்கிறவன் எவனாச்சும் இப்படி ஒரு நாளைக்கு நாலு பதிவு போட முடியுமா? லீவே எடுக்காம பிளாக்கை கட்டி அழுதுகிட்டிருக்க முடியுமா?

    ம்ஹ¥ம்.. 'ஜூனியர் விகடன் கழுகு' ரேஞ்ச்சுக்கு போயிட்ட குசும்பா..

    ReplyDelete
  47. //வீட்டில் மதுரை ஆட்சி என்று//்

    அந்தத் தங்கமணி அப்பாவில அப்படியொரு அப்பாவி சாமி..

    நம்மாளுதான் டான்ஸ், டிராமா, உடான்ஸ்னு எல்லாத்தையும் கலந்து கட்டி ஆடிக்கிட்டிருக்காரு..

    ReplyDelete
  48. //பாபா என்பவர் சொன்னார்.//

    ஆமா.. இது யாரு பாபா..?

    எனக்குத் தெரிஞ்ச 'பாபா' அமெரிக்கால இருக்காரு..

    இன்னொருத்தர் புட்டபர்த்தில இருக்காரு..

    இங்கனயும் ஒரு 'பாபா'வா..? கொடுமை..

    ReplyDelete
  49. //பைத்தியகாரன், ஆடு மாடு எல்லாம் சீரியஸ் ஆசாமிகளாக இருப்பதால் அவுங்களுக்கு மாப்பு.//

    அப்போ நாங்கள்லாம் இழிச்சவாயனுகளா..? இல்ல எங்களைப் பாத்தா மட்டும் எப்படித் தோணுது..? இவுகளே சீரியஸ்னா இவுகளுக்கு தோஸ்து ஜ்யோவ்ராம் சுந்தர் சீரியஸ் இல்லையா..?

    குசும்பா கூட்டணிக்குள்ளேயே கலகம் பண்ணாத..

    ReplyDelete
  50. ஹலோ யார் இது உண்மை தமிழன் அண்ணன் பேரில் கும்மி அடிப்பது அவர் பின்னூட்டம் என்றால் குறைந்தது பதிவை விட பெருசா இருக்கும் என்ற அடிப்படை கூட தெரியாத யாரோ புதியவர்தான் என்று நினைக்கிறேன்... இருங்க அவர் பதிவுக்கு போய் அவர் பேருக்கு பக்கத்தில் இருக்கும் நம்பரை செக் செய்துவிட்டு வருகிறேன்... எப்படியும் ஒரு 1 மணி நேரமாவது ஆகும் ஏன்னா ராமானுஜருக்கே அது என்னா மதிப்புன்னு தெரியாது அம்புட்டு நம்பர் இருக்கும்.

    ReplyDelete
  51. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    மொதல் வரியிலேயே பொய்யா..? இதை மட்டும் அந்தாளு நேர்ல கேட்டிருந்தாரு.. அப்படியே அந்தாண்டை ஓடி கடல்ல குதிச்சிருப்பாரு..///

    நிஜமாவா சொல்றீங்க பிளீஸ் பிளீஸ் போன் போட்டு அவரிடம் சொல்லிடுங்க.

    ****************************
    நாங்க 55-ன்னுல்ல நினைச்சுக்கிட்டிருக்கோம்.. 10 வயசைக் குறைச்சிட்டியே குசும்பு..//

    அப்ப உங்களை விட 5 வயசுதான் குறைஞ்சவரா?

    ********************************

    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தப்புத் தப்பா உளறாத குசும்பா.. இந்த விளம்பரத்துக்குப் பொருத்த இருந்த ஆளு ஜ்யோவ்ராம் சுந்தர்தான்.. ///

    அண்ணே என்ன ஆளு நீங்க பூசிய சுவருக்குதான் சுண்ணாம்பு , பெயிண்ட் அடிக்க முடியும்.... அதுபோல வெறும் மண்டையிலா டை அடிக்க முடியும் என்னா போங்க...

    *******************************

    ReplyDelete
  52. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆமா.. பக்கத்துல இருக்குற எங்களுக்கே வராத எண்ணம் உங்களுக்கு வந்திருச்சு..?

    ம்.. இதையெல்லாம் நேர்ல சொல்லிருக்கணும்ப்பூ..///

    ஏன் இம்புட்டு ஆசை என்மேல உங்களுக்கு?

    ******************************
    //பஞ்சதந்திரத்துல ரம்யா கிருஷ்ணன், சிம்ரனைவிட உமக்கு அந்த குழந்தை பிடிச்சுப் போய் இருக்கா.. முருகா.. முருகா..//

    அந்த படத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா?

    என்னை போன்ற குழந்தைகளுக்கு குழந்தை மீதுதான் கண் இருக்கும்:)))

    **********************************
    //பட்டப் பேர் பத்தாது சாமி.. இன்னும் ஏதாவது கொஞ்சம் சேர்த்துக்க..//

    பட்டப் பேர் இல்லை இது எல்லாம் பட்டம்... இப்ப இளய தளபதி என்று சொல்வது போல் ( இதுக்கு மேல உங்கள ஒன்னும் சொல்ல முடியாது)

    **************************

    ReplyDelete
  53. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஏன்? ஊருக்கு வந்து குமுதம், குங்குமம், விகடன்னு நிறைய படிச்சாச்சோ.. அதியமான்னு ஒத்தை வார்த்தைல சொல்லி முடிக்க எம்புட்டு நேரமாயிருக்கும்..?///

    சொன்னா அடி விழும் இனி எனக்கு என்ன கவலை அதான் உங்களுக்கு விழபோவுதே!!!

    *******************************
    உண்மைத் தமிழன்(
    அதிஷா பதிவுல அனானி கமெண்ட்டா போட்டது யாருன்னு இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு..//

    அனானியாக யாருக்கும் கமெண்ட் போட்டது இல்லை ஓடி போனவன், அப்படி இப்படின்னு ஏதும் பேரோடுதான் போடுவேன்.

    ****************************
    உள்ளூர்ல ஒரு நாயும் மதிக்க மாட்டேங்குது.. இதுல ஹாலிவுட் டைரக்டர்ன்னு நானே உச்சி வெயில்ல மல்லாந்து படுத்து கனவு காண வேண்டியதுதான்.. வயித்தெரிச்சலை கிளப்பாதய்யா..//

    என்ன இப்படி சொல்லிட்டீங்க ஊர்ல எல்லாம் இப்படிதான் சொல்லிக்கிறாங்க தெரியுமா?

    ReplyDelete
  54. /
    குசும்பன் said...

    //நந்து f/o நிலா said...
    அப்பாடா...சென்னையோட போச்சு...//

    சென்னையில் ஹீரோக்கள் கம்மி ஆனா உங்க ஊரில் அதிக வருவோம் பொறுமையாக!!!
    /

    :)))


    /

    அதுவும் உங்க ஊர் ஹீரோயின் இருக்காங்களே அட அட அட அவுங்கள பத்தி எழுதனும் என்றாலே ஒரு நாள் போதாது.:)))
    /

    :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete