Friday, May 23, 2008

நன்றி + கிர்ர்ர்ர்ர்ர் + அடி உதை + சந்தோசம் = விடுமுறை

நன்றி
இங்கிருந்து ஊருக்கு போனவுடன் என்னையும் சந்திக்க வந்து இருந்த அனைத்து சென்னை பதிவர்களுக்கும் ஏற்பாடு செய்து இருந்த அழகு குட்டி பாலபாரதி + லக்கிக்கும் நன்றி.

கல்யாணத்துக்கு நேரில் வந்தும், தான் வரமுடியாவிட்டாலும் தன் மனைவி, மாமா போன்றவர்களை அனுப்பியும் ,போனிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

உங்கள் வாழ்த்தும் அன்பும் எங்களை வளமோடு வாழவைக்கும்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சொந்த காரங்க வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க போனா பொண்ணு நம்ம சாதி இல்லையாமே என்று கேட்கும் பெருசுங்களும், அப்பா, அம்மாவிடம் வீட்டு பண்ணையாளா வேலை பார்த்தவர் பொண்ணு எங்கசாதியாமே! அந்த ஊரில் எனக்கு சொந்த காரங்க இருக்காங்க பார்க்க போனா அந்த பொண்ணும் எனக்கு சொந்தமா வருவாங்க போல என்று சொல்லி அவர் இனி நீங்களும் எனக்கு சொந்தம்தான் என்று சொல்லாமல் சொல்லிஅம்மாவை டென்சன் ஆக்கி விட்டு இரண்டு மூன்று நாள் கல்யாணவேலையை நிறுத்திவிட்டு போன பெருசுங்க இவுங்களால் ஆன டென்சன் கொஞ்சம் நஞ்சம் இல்லை.இது முதல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அட என்ன கொடுமைங்க எந்த டீவி சேனலை திருப்பினாலும் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் இதுக்கு ஒரு முடிவே கிடையாது போல. இது அடுத்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அட டீவி நிகழ்ச்சிகள் தான் இப்படி என்றால் இடையில் வரும் விளம்பரங்களும் கும்பலாக ஆட்டம் தான் இதை முதன் முதலில் சென்னை சில்க்ஸ் ஜிகு ஜிகு ரயிலு என்று ஒரு பத்து ”ஜிகிடிங்க” ரயில் ஓட்டியதாக நினைவு (ம்ம் அந்த ரயிலில் ஒரு சீட்டையாவது புக் செய்ய முடியுமா என்று அப்ப அப்பாவியா கேட்டுக்கிட்டு இருந்தேன்).

இப்ப வரும் கும்பலோடு ஆட்டம் விளம்பரங்களில் சம்மர் என்றால் ஜாலிக்கே சரவணா சாப்பிங் ஜாலிக்கே என்று பச்சை கலர் குட்டை பாவாடையை லேசாக கையில் பிடித்துக்கொண்டுஆடும் பெண்கள் விளம்பரமும். பாம் பாம் (இப்படிதான் கடைசியா சவுண்ட் வருது),
ஸ்ரீதேவி டெக்ஸ்டைலுக்கு ஒரு இட்டலி குண்டனோடு 3 பெண்கள் ஆடும் ஹாட் மச்சி ஹாட் விளம்பரமும் அருமையாக இருக்கு என்ன அந்த இட்டலி குண்டன் இரண்டு பெண்கள் ஆடும் இடத்தை ஆக்கிரமிச்சதால் கொஞ்சம் வருத்தம் தான்.

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் பஸ் ஸ்டாண்டு அருகில் இருக்கும் சுவர்களில் உங்கள் ஊரில் அதிரடியாய் தோன்றுகிறார் J.K. ரித்தீஸ் என்று எல்லா இடத்திலும் விளம்பரம்.உலக காவியம் கானல் நீர் என்ற படத்தில் நடிச்சிட்டு இவரு கொடுக்கும் அலப்பரைக்கு அளவே இல்லை. யாராவது உங்க ஊரில் அதிரடியாய் தோன்றினாரா என்று சொல்லுங்கப்பா.

அடி அடி அடி

வெள்ளி அன்று ஊருக்கு போன நான் ஞாயிறுதான் சென்னை பதிவர்களை சந்திக்க முடியும் என்று லக்கி சொன்னதால் இரண்டு நாட்கள் நண்பர்கள் ரூமில் தங்கி இருந்தேன்,அங்கு அவர்களிடம் டாய்லெட் போய்விட்டு வந்து என்ன கொடுமை டா பாத்ரூமுல கூட ஏசி இல்ல பரவாயில்லை அட்ஜெஸ் செஞ்சுக்கிறேன் அட்லீஸ்ட் சிட்டிங் பேசினுக்காவதுஏசி வையுங்க ரொம்ப அங்க வேர்க்குது என்று சொல்லி வாங்கிய அடி.

கோல்ட் பிளாக் கிங்ஸ் வாங்கி ஊதும் நண்பனிடம் இது எல்லாம் எங்க ஊரில் பீடி என்று சொல்லி அடி வடிவேலு மாதிரி சொல்லி முடிக்கங்காட்டியும் சட சட சடன் அடி மழை.

ஆமாம் படுத்து இருக்கும் பொழுது கொய்ங்ங்ங்ங் என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. எல்லாத்துக்கும் கோப படுறானுங்க கோப கார பசங்க. ச்சே என்ன உலகம் இது.

சந்தோசம்

ச்ச்சீ போங்க வெட்கமா இருக்கு.

20 comments:

  1. பிரசண்ட் சார்

    ReplyDelete
  2. வாங்க வாங்க ஆட்டத்தை ஆரம்பிங்க

    ReplyDelete
  3. //ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. ///
    நானும் இப்படித்தான் கேட்டு அடி வாங்குனேன் ஆனா கடைசி வரைக்கும் அது இன்னாதுன்னு சொல்லவே இல்லையே :((

    ReplyDelete
  4. annathey!!!ippovachum antha manju yaarunnu solli irukkallamulla.....anyway!!WELCOME BACK!!!pudhu mappillayai ellorum pinnoottathila nalla kavaningappa!!!!!1

    ReplyDelete
  5. மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? :-)

    வாங்க ஆட்டையில ஜாய்ன் ஆய்க்கோங்க!!!

    ReplyDelete
  6. இம்சை எங்க எஸ் சார் சொல்லிட்டு எஸ் ஆகுறீங்க ம்ம்ம் முடியாது பதிவை படிக்கனும் ஆமா!!!!

    **********************

    முரள் கண்ணன் ஆட்டத்தை ஆரம்பிப்பதா? ஆடி அடங்கிடும் வாழ்கையடா என்று ஒரு பாட்டு இருக்கே அது தெரியாத உங்களுக்கு.

    **********************
    ஆமாம் ஆயில்யன் எனக்கும் கடைசி வரை சொல்லவே இல்லை.

    **************************
    சிஸ்டர் இன்னும் எத்தனை நாளைக்குதான் புது மாப்பிள்ளை?::))))
    ***************************

    ஆமாம் லக்கி ஜாயின் ஆகியாச்சு:))

    **************************
    நன்றி கோபி

    ***************************

    ReplyDelete
  7. வருங்கால உலக நாயகன் ரித்தீஸ் தொல்லை தாங்கலப்பா.

    ReplyDelete
  8. ///ஆயில்யன். said...
    //ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. ///
    நானும் இப்படித்தான் கேட்டு அடி வாங்குனேன் ஆனா கடைசி வரைக்கும் அது இன்னாதுன்னு சொல்லவே இல்லையே :((///


    அடப்பாவிகளா எல்லோரும் என்னைய மாதிரி தானா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க மக்கா:(

    ReplyDelete
  9. நீ இன்னும் திருந்தலையா மாமா? :(

    ReplyDelete
  10. //இரண்டு மூன்று நாள் கல்யாணவேலையை நிறுத்திவிட்டு போன பெருசுங்க இவுங்களால் ஆன டென்சன் கொஞ்சம் நஞ்சம் இல்லை.//

    இதையும் மீறி சாதிச்சதுக்கே சிறப்பு வாழ்த்துக்கள் திரு. குசும்பன்.

    ReplyDelete
  11. சேட்டா நன்னாயிட்டு இருக்கியா?தங்கமணி வந்திட்டில்லோ இனியெங்கிலும் ஒழுங்கா இருப்பியோ
    தங்கமணிக்கு வாழ்த்துக்கள் .ஆமா தங்கமணியும் தமிழ்மணம் வருமோ?

    ReplyDelete
  12. /
    இரண்டு நாட்கள் நண்பர்கள் ரூமில் தங்கி இருந்தேன்,அங்கு அவர்களிடம் டாய்லெட் போய்விட்டு வந்து என்ன கொடுமை டா பாத்ரூமுல கூட ஏசி இல்ல பரவாயில்லை அட்ஜெஸ் செஞ்சுக்கிறேன் அட்லீஸ்ட் சிட்டிங் பேசினுக்காவதுஏசி வையுங்க ரொம்ப அங்க வேர்க்குது என்று சொல்லி வாங்கிய அடி.

    கோல்ட் பிளாக் கிங்ஸ் வாங்கி ஊதும் நண்பனிடம் இது எல்லாம் எங்க ஊரில் பீடி என்று சொல்லி அடி வடிவேலு மாதிரி சொல்லி முடிக்கங்காட்டியும் சட சட சடன் அடி மழை.

    ஆமாம் படுத்து இருக்கும் பொழுது கொய்ங்ங்ங்ங் என்று சத்தம் கொடுத்துக்கிட்டு ஒரு பூச்சி சுத்தி வருதே இது பேரு என்னா இது கடிச்சா ஏதும் வருமா என்று அப்பாவியா கேட்டா கூட அடிக்கிறானுங்க. எல்லாத்துக்கும் கோப படுறானுங்க கோப கார பசங்க. ச்சே என்ன உலகம் இது.
    /

    கட்டி வெச்சு உதைக்காம விட்டாங்களே சந்தோஷப்படு

    ReplyDelete
  13. Hi Kusuban,

    First of all my best wishes for your happy marriage life. Its nice to see your blog post again. keep writting.

    Actually I called that no u have given when u reach chennai. But some lady were picked-up my call and said no-one is like that (சரவணவேல்). anyhow I believe u had good time in India.

    Please write some interesting think which you met and share your marriage photographs.

    ReplyDelete
  14. தனிப் பதிவே போட வெச்சிட்டியேப்பா
    www.lathananth.blogspot.com

    ReplyDelete
  15. சரக்கடிச்சாதா கிர்ர்ர்ர்னு சுத்தும் உனக்கு கோவம் வந்தாலே கிர்ர்ர்ர்ர்னு இருக்கா? நல்ல விஷயம், காசுமிச்சம்.

    உன்ன பாத்துமா இந்த ஊர நம்புறாங்க... :)))))))))))))))

    மானாடா மயிலாட, அற்புத நீர்வீழ்ச்சி நடனம் இதெல்லாம் பாத்துட்டியா. மிட்நைட் மசாலா போடாம. குட் ஈவ்னிங் மசாலாவே போடறாங்க. கனெக்சன் வாங்கி பாருய்யா... நம்ம ஊர்லல்லாம் அதத்தான் பாக்குறாங்க.

    ReplyDelete
  16. நன்றி ஜெகதீசன்


    நிஜமா நல்லவன் said...
    வருங்கால உலக நாயகன் ரித்தீஸ் தொல்லை தாங்கலப்பா.//

    அவரு இப்பயே உலகநாயகனாகதான் நினைச்சுட்டு இருக்கார்.

    ***************************
    SanJai said...
    நீ இன்னும் திருந்தலையா மாமா? :(//

    ஆமாம் மாம்ஸ்:))

    ***************************
    கையேடு said...
    சாதிச்சதுக்கே சிறப்பு வாழ்த்துக்கள் திரு. குசும்பன்.//

    மிக்க நன்றி கையேடு

    ******************************

    கண்மணி said...
    சேட்டா நன்னாயிட்டு இருக்கியா?//

    நன்னாயிட்டு உண்டு சேச்சி, தங்கமணி தமிழ் தமிழ் மணம் பக்கம் ஒதுங்குவது கிடையாதே அதனால் நீங்க ஒன்னும் என்னை மிரட்ட முடியாது :)))

    *******************************
    மங்களூர் சிவா said...
    கட்டி வெச்சு உதைக்காம விட்டாங்களே சந்தோஷப்படு///

    இப்ப கட்டிவெச்சுட்டாங்க உதைப்பாங்களா மாட்டாங்களான்னு இனிமேல் தான் தெரியும்:))

    *******************************
    வாரேன் சென்ஷி

    *******************************
    நன்றி Sunny பத்திரிக்கையில் இருக்கும் அதே நம்பருக்கு என்றால் அப்படி சொல்ல வாய்ப்பு இல்லை ஏதும் தவறு நடந்து இருக்கும் போல.

    ********************************

    தம்பி said...
    சரக்கடிச்சாதா கிர்ர்ர்ர்னு சுத்தும் உனக்கு கோவம் வந்தாலே கிர்ர்ர்ர்ர்னு இருக்கா? நல்ல விஷயம், காசுமிச்சம்.//

    வாங்க குபீர் இலக்கியவாதி தம்பி மிக்க நன்றி:))

    ReplyDelete
  17. ஆரம்பிச்சிடுச்சு...(அதாம்பா குசும்பு)

    ReplyDelete