Friday, February 29, 2008

சென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசு

சண்டை, அதிரடி திருப்பம், அழுகாச்சி, இரங்கல் என்று எல்லாம் கலந்த வாரமாக இருந்ததாலும் , சண்டைகளே அதிகம் இருந்ததால் ஒரு வாரம் முழுவது ஒரே சண்டை காட்சிகள் கொண்ட படத்தை பார்த்தது போல் ஒருவித சலிப்பை தந்தது. இனி அது பற்றிய ஒரு பார்வை...

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கருந்து கந்தசாமி என்று வந்த பதிவுகளால் யார் அது என்று தெரியாமல் முழித்தவர்களுக்கு விடை கிடைத்தது. கடந்த வாரம்அனைவரும் நேரடி தாக்குதலில் இறங்க குழப்பம் இன்றி எல்லாம் புரிந்தது.

அதிரடி திருப்பமாக திரும்பவும் வெற்றிகரமாக எத்தனாவது முறை என்று தெரியவில்லை ...ஓசை செல்லாவில் ரீ- என்ட்ரி.

True-known னிடம் இருந்து மெயில் ஏதும் வராததால் சிலரின் மெயில் பாக்ஸ் புதிய மெயில் ஏதும் இல்லாமல் காத்து வாங்கியது.

ஓசை செல்லாவின் வலைப்பூ ஹாக் செய்யபட்டு சில மணி நேரத்தில் முற்றிலுமாக மீட்கப்பட்டது. பலருக்கும் தெரிவதுக்கு முன்பு பிரச்சினை முடிந்ததால் அதன் பிறகு இது சம்மந்தமாகவந்த பதிவுகளால் பலர் ஏன் ஏதற்க்கு என்று புரியாமல் விழித்தனர்.

ஒரு வாரமாக நடந்த சண்டையினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு கோவி.கண்ணன் ஒரு வருடம் இனி பதிவு எழுத போவது இல்லை என்று சென்றது யாரும் எதிர்பாராத முடிவாக அமைந்தது.

கும்மி அடிக்க பயன்பட்டு வந்த அமுக கூட்டுவலைபூ தாக்குதல் களமாக மாறியதால் அதில் இருந்த கும்மி பதிவர்கள் பலர் வெளியேறினர்.

இப்படி பல சண்டைகள் நடந்தாலும் ஆங்காங்கே சில நகைச்சுவை சம்பவங்களும் நடைப்பெற்றது.

நண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சியால் யோணி கொண்டான் என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது, இது யாருக்கும் கிடைக்காத பட்டம் என்பதால் அதன் அருமை உணர்ந்த பல பதிவர் ஒன்று சேர்ந்து தீவு திடலில் அவருக்கு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.

குசும்பனின் ஒரு பதிவால் கோபம் அடைந்த தமிழச்சி எதிர்பதிவு போட அதற்காக இனி குசும்பன் காலி என்று அய்யனார் & கோ இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

கிசு கிசு

சரம் தொடுக்கும் துபாய் பதிவருக்கு புரூப் ரீடிங் மட்டும் செய்துவந்தவர் இப்பொழுது பதிவும் எழுதி நூலகமும் ஆரம்பிச்சு கொடுத்து இருக்கிறார்களாம் அவர் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு அவர் கையில் எப்பொழுதும் குச்சி இருக்கும்.

ஊருக்கு சென்று திரும்பி வந்த அபிதாபி பதிவர் வரும் பொழுது ஒரே ஒரே வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கி கொண்டு வந்ததால் காத்திருந்த பாலைவன எல்லை காவல் தெய்வம் + சகாக்களின் தாக சாந்தி குறையுடனே முடிந்தது தாகசாந்தி நடந்த இடம் எல்லை காவல் தெய்வத்தை கலாய்க்கும் ஒருவரின் வீடு, எப்பொழுதும் எங்கு தாகசாந்தி நடைப்பெற்றாலும் ஆம்லேட் போட்டுவிடும் நபருக்கு(ஊருக்கு சென்று வந்தவர்) அருகிலேயே பிளாஸ்டிக் பையோடு வீட்டு உரிமையாளர் காத்திருந்தாராம்.


ஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பதிவரிடம் மப்பில் உளர அவர் சூரியன் FMல் தோன்றி சொல்லாதது மட்டும் தான் செய்யவில்லை, மறதியில் சம்மந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு இது போல் விசயம் தெரியுமா அவனுக்கும் அவுங்களுக்கும் ஒரு இதுவாம் என்று சொல்ல சம்மந்தப்பட்ட பதிவர் கொடுத்த அர்சனையில் ஒரு பக்க காது தீஞ்சி போச்சாம் அப்பா பதிவருக்கு.

வலையை ஹாக் செய்வதை தவிர்ப்பது பிஷ்சிங் பற்றி எல்லாம் குமுதம் ரிப்போட்டரில் பேட்டி கொடுதவரின் வலைப்பூவே ஹாக் செய்யப்பட்டதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர் இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.

37 comments:

  1. புரியல்ல... தயவு செய்து விளக்கவும்
    நான் ஒரு பின்னூட்டம் தான போட்டேன்? எப்படி 2 முறை வந்தது??

    ReplyDelete
  2. மைக் டெஸ்ட்டிங் 1..2...3.....

    ReplyDelete
  3. நன்றி பொன்வண்டு:)

    நன்றி1 ஜெகதீசன்:)

    நன்றி2 ஜெகதீசன்:)

    ஜெகதீசன் எனக்கும் தெரியவில்லை அது எப்படி என்று, ஐயா எதுக்கு இந்த டெஸ்டிங் எல்லாம்.

    ReplyDelete
  4. நான் போட்ட பின்னூட்டம் எல்லாம் ஏன் ரிலீஸ் பண்ணலை?

    ReplyDelete
  5. எச்சு கிச்சு மீ.... கருத்து கந்தசாமி யாரு?

    ReplyDelete
  6. //
    ஜெகதீசன் எனக்கும் தெரியவில்லை அது எப்படி என்று, ஐயா எதுக்கு இந்த டெஸ்டிங் எல்லாம்.
    //
    அய்யா குசும்பரே... அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க... கமெண்ட் போட்டவர் கிட்ட கேளுங்க..

    ReplyDelete
  7. யோவ்... வேகமா கமெண்ட் ரிலீஸ் பண்ணுய்யா...

    ReplyDelete
  8. உறுதிமொழி சூப்பரா இருக்கே!

    ReplyDelete
  9. தலைப்புச் செய்திகளில் வராமல் அமைதியாக இருக்கும் பதிவர்களுக்கு (அதாவது என்னைய மாதிரி) ஒரு சின்ன நன்றியும் சொல்லியிருக்கலாம்...

    ReplyDelete
  10. நல்ல பதிவு...

    // :)) //

    அருமையான வரிகள்..

    தேர்ந்தெடுத்த எழுத்தாளர் மாதிரியே எழுதுறாங்க..

    ReplyDelete
  11. குசும்பன் அண்ணா, பதிவு சூப்பர்...

    ReplyDelete
  12. ”குசும்பன் போன பாதையிலே மறந்தும் போகலாமா?” என்று பாலைவனப் பதிவர்கள் எல்லாம் பாடிக்கொண்டிருப்பதாகச் சென்னைச் சானல் ஒன்றில்
    செய்தி!

    ReplyDelete
  13. ஏன் ஒரு பார்வை...இரு பார்வை பார்க்ககூடாதா...

    ஒரு வாரம் முழுக்க ஒரே பார்வையிலா..

    தமிழ் மணத்தை திறந்தா மூடவே மாட்டிங்களா.

    ReplyDelete
  14. ஹா..ஹா.. ஆப்பு வைச்சாலும்,நகைச்சுவையா ரசிக்கும் படியா இருக்குங்க மாம்ஸ்.. முன்னெல்லாம் தினமலர் கிசுகிசு படிக்க ,ஆர்வமா ஞாயிற்றுக்கிழமை காத்திருக்கிறப் போல.., இப்பெல்லாம் நம்ம குசும்பன் மாம்ஸ் வலையுலக செய்திகளுக்கு காத்திருக்க வேண்டியதாயிருக்கு:) சூப்பரு..

    ReplyDelete
  15. //ஊரில் காதல் வலை வீசிய பெண் பற்றி துபாய் அப்பா பதிவரிடம் மப்பில் உளர அவர் சூரியன் FMல் தோன்றி சொல்லாதது மட்டும் தான் செய்யவில்லை, மறதியில் சம்மந்தப்பட்ட நபருக்கே போன் போட்டு இது போல் விசயம் தெரியுமா அவனுக்கும் அவுங்களுக்கும் ஒரு இதுவாம் என்று சொல்ல சம்மந்தப்பட்ட பதிவர் கொடுத்த அர்சனையில் ஒரு பக்க காது தீஞ்சி போச்சாம் அப்பா பதிவருக்கு.//

    :))))))))))
    கரைட்டு. நானும் கூட அவர் சாட் ஸ்டேட்டஸ் பாத்தேன்..:))))

    ReplyDelete
  16. இந்தப் பதிவர் கும்மி/அனானி கமெண்ட்டுகளை வெளியிடத் தாமதம் செய்வதால் இந்தப் பதிவு கும்மி அடிக்க ஏற்றது இல்லை. எனவே இங்கு யாரும் கும்மவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  17. மாமா நீங்க அடங்கவே மாட்டீங்களா?

    ReplyDelete
  18. vaaravaaram thodarungal.. nakaichuvaiyodu vimarsipathaal vithayaasapaduthi irukkireerkal. sila nalla pathivukalaiyum serungal.. vaara ithal maathiri seekiram pirabalaamukum saathiyam ithodarukku undu... loved your style of writing vimarsanam.

    anbudan
    osai chella

    ReplyDelete
  19. வித விதமான பெயரில் கும்மிய நல்லவருக்கு நன்றி!!!

    ****************************

    நன்றி கவிதாயினி காயத்ரி

    ****************************

    என்ன இருந்தாலும் உங்கள மாதிரி எழுதமுடியுங்களா TBCD சார்!:)))

    ****************************

    சுப்பையா ஐயா நீங்களும் உங்க பங்குக்கு ஒரு கிசு கிசுவா:)))

    ****************************

    ரசிகன் என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலீயே:)))

    ****************************

    நிலா இன்னும் ஒரு மாதம் மட்டும் அட்ஜெஸ் செஞ்சுக்க அதன் பிறகு உங்க அப்பா மாதிரி அடங்கிடுவேன்:))

    *****************************

    நன்றி ஓசை செல்லா அண்ணாச்சி, அடுத்த முறை நீங்க சொல்வது போல் இன்னும் பலரை சேர்த்துவிடலாம்.

    ******************************

    அண்ணே வவ்வால் அண்ணே ஏன்னே இம்புட்டு கொல வெறி இப்பதான் அடிவாங்கி கிடக்கிறேன் உங்க பின்னூட்டத்தை ரிலீஸ் செஞ்சா திரும்ப சேதாரம் அதிகம் ஆகும் சாத்திய கூறு அதிகமா இருக்கு நான் பாவம்ல்ல மன்னிசிடுங்க:(((

    அப்புறம் கரகாட்டகாரனில் கவுண்டர் கேட்பது போல் அந்த கேள்விய என்னை பார்த்து ஏன்னே கேட்டீங்க??:)))

    ReplyDelete
  20. அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா) குசும்பா ....:-)

    இருக்கிறத தானே அடுத்தவருக்கு கொடுக்க முடியும் அதான் இதுக்கு முன்ன யார் கிட்டே இருந்தது கேட்டேன் அது தப்பா?

    //அப்புறம் கரகாட்டகாரனில் கவுண்டர் கேட்பது போல் அந்த கேள்விய என்னை பார்த்து ஏன்னே கேட்டீங்க??:)))//

    அண்ணே அதல்லாம் ஒண்ணுமில்லண்ணே... கிசு கிசுவெல்லாம் போடுறிங்க நாலு விஷயம் தெரிஞ்சிருக்கும்னு தான்ணே கேட்டேன்...அதுக்கு போய் இப்புடி சொல்லிட்டிங்களே அண்ணே... விவரம் புரியாத என்னைப்போல ஆளுங்களுக்கு நீங்க தான்ணேஎ நாலு நல்லது கெட்டதும் சொல்லித்தரணும் :-))

    ReplyDelete
  21. வவ்வால் said...
    அவ்வ்வ் இம்புட்டு நல்லவரா(பயந்தவரா) குசும்பா ....:-)///

    அவ்வ்வ் ஆப்பு மேல் ஆப்பில் உட்கார்ந்து பாருங்க அப்புறம் தெரியும் வலி:))

    ///இருக்கிறத தானே அடுத்தவருக்கு கொடுக்க முடியும் அதான் இதுக்கு முன்ன யார் கிட்டே இருந்தது கேட்டேன் அது தப்பா? ///

    தப்பே இல்லை:) ஆனா வாங்கியவரிடமும் கொடுத்தவரிடமும் கேட்டால் சரி:))) சும்மா வேடிக்கை பார்த்தவனிடம் கேட்டால் நான் என்ன சொல்வது:((((

    //அதுக்கு போய் இப்புடி சொல்லிட்டிங்களே அண்ணே... விவரம் புரியாத என்னைப்போல ஆளுங்களுக்கு நீங்க தான்ணேஎ நாலு நல்லது கெட்டதும் சொல்லித்தரணும் :-))//

    நானும் வெவரம் தெரியாதவன்தான்னே ஆனா உங்கள போலன்னு சொல்ல முடியலை:)))

    ReplyDelete
  22. எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப் 16 தேதிக்குப் பிறகு பார்ப்போம்
    ஆமாம் கிசுகிசுவில் கையில் குச்சியோடு யாரு அவ்வைப் பாட்டியா?
    அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா தமிழைத் திருத்த அவ்வையே வந்துட்டாளா?
    [கொஞ்சம் உண்மை கலப்பா எழுது அப்பு]

    ReplyDelete
  23. //நண்பர் வலையுலக சுனாமி லக்கி லுக்குக்கு தமிழச்சியால் யோணி கொண்டான் என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது, இது யாருக்கும் கிடைக்காத பட்டம் என்பதால் அதன் அருமை உணர்ந்த பல பதிவர் ஒன்று சேர்ந்து தீவு திடலில் அவருக்கு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.//

    கடந்த ஒரு வாரம் பதிவுகள் அனைத்தையும் பார்த்து விட்டேன். தமிழச்சி அப்படி எழுதியதாக தெரியவில்லை எந்த பதிவு என்று தலைப்பு கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  24. அண்ணே...அண்ணே குசும்பு அண்ணே இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யான்னு சொல்றாங்க..அப்படியா!! ;;))

    ReplyDelete
  25. /தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.
    //

    :)

    Idhuthanya enakku pidichathu ummagitte!

    ReplyDelete
  26. //கண்மணி said...
    எப்படியிருக்கே குசும்பா...ம்ம் ஏப் 16 தேதிக்குப் பிறகு பார்ப்போம்
    ஆமாம் கிசுகிசுவில் கையில் குச்சியோடு யாரு அவ்வைப் பாட்டியா?
    அவ்வ்வ்வ்வ் அபிஅப்பா தமிழைத் திருத்த அவ்வையே வந்துட்டாளா?
    //

    Yaru Adhu kuchiyoda nnu kuzhambinen! ippathan therinjsathu!

    :)

    ReplyDelete
  27. இவ்வளவு நடக்கிறதா துபாயில:))))

    ReplyDelete
  28. உறுதி மொழி அருமையா இருக்கு... :))

    ReplyDelete
  29. //தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//


    சப்பையா போயிடுச்சாமேப்பா :)))

    ReplyDelete
  30. //இதனை தொடர்ந்து பலரும் கடவுசொல்லை ஒரு முழநீளத்துக்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//

    :-)))


    //தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//

    ஓ... இதான் பிரச்சினையா? நான் ஏதோ தற்செயலா ஏதோ சொல்ல போக, வவ்ஸ் நமக்கும் ஆப்புக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாரப்பா போன வாரம் :)

    அப்ப, பம்மல் பாண்டியாயிட்டா ஆப்பு அப்புறம் போயிடுமா? நல்ல தகவல் :)

    ReplyDelete
  31. //
    தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.
    //

    இது கிசு கிசு இல்லைய்யா உண்மை உண்மை உண்மை.

    ReplyDelete
  32. //குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//

    அதுவும் நல்லதுக்குத்தானே..!

    கிசு..கிசு..இல்லை..! வடிகட்டாத உண்மை..!

    சிவாவும் இதத்தான் சொல்லியிருக்காரு!
    அப்ப ரிப்பீ......!

    ReplyDelete
  33. //தமிழச்சியின் பதிவு தலைப்பை குசும்பு செய்த நபர் பம்மல் பாண்டியாக மாறி பம்மியதாலே பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்றும் பலராலும் கிசு கிசுக்கப்படுகிறது.//

    ஃபைனல் டச்.. செம நச்.. :P

    கிசுகிசு எல்லாமே சூப்பர்.. நம்ம தலையோட காது தீஞ்ச மேட்டர் இவ்ளோ லேட்டா தெரிஞ்சிகிட்டது தான் ஒரே குறை. :)))

    ReplyDelete