Sunday, October 7, 2007

பதிவர்கள்+ வாசகர்களுக்கு ஒரு போட்டி!!!

வலைபதிவர் என்றால் அட்லீஸ்ட் ஒரு போட்டியாவது நடத்தி இருக்கவேண்டுமாம், அப்படிதான் மூத்த வலை பதிவர்கள் சொன்னார்கள், ஒரு போட்டி ஒன்னு நடத்தி அதில் பங்கு பெறும் ஆட்களுக்கு பரிசும் கொடுக்கனுமாம், அப்படி கொடுத்தால் தான் வலைபதிவராக சேர்த்துக்குவாங்கலாம். நானும் எழுத ஆரம்பித்து 7 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இது வரை ஒரு போட்டி கூட வைக்கவில்லை எனவே என்னை வலைபதிவராக சேர்த்துக்கமாட்டேன் என்று சொன்ன மூத்த பதிவர்களுக்காக இந்த போட்டி!!!

அப்படி என்ன போட்டின்னு நீங்க எல்லாம் ஆர்வமாக இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்...

கேளடி கண்மணி படத்தில் SPB ஒரு பாட்டை பாடும் பொழுது இடையில் மூச்சுவிடாமல் பாடுவார் அது போல் நீங்க செய்யவேண்டியது ஒரு பதிவின் தலைப்பை நான் இங்கு கொடுத்து இருக்கிறேன் அதை நீங்க மூச்சு விடாமல் ஒரே தடவையில் படித்து அதுக்கு அர்த்தம் சொல்லவேண்டும்...

அப்படி என்னய்யா பெரிய புடலங்காய் தலைப்பு இங்க குடு நான் படிச்சு காட்டுகிறேன் என்று உதார் விட்ட அபி அப்பா, படிச்சு முடிச்சதும் மயக்க நிலைக்கு சென்று விட்டார். (முகத்தில் தண்ணி தெளித்து கோலம் போட்ட பிறகுதான் முழித்தார், என்ன தண்ணி தெளித்தோம் என்பது ரகசியம்)

இதோ அந்த தலைப்பு...


ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லை :

இதே தலைப்பை நானோ அல்லது அபி அப்பாவோ ரெண்டு பதிவுகளாக போட்டுவிடுவோம் இவர் என்னடான்னா இம்மாம் பெரிய தலைப்பை வைத்து இருக்கிறார்.... வாங்க வந்து கும்முங்க(குமுறுங்க).

டிஸ்கி: மேலே நான் கொடுத்து இருக்கும் தலைப்பு அய்யனாரின் பதிவு தலைப்பு. அது பார்க்க மட்டும், அதை கிளிக் செஞ்சு பதிவை நீங்க படிக்க நேர்ந்தால் அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல!!!

பரிசு: அய்யனார் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பும் மெயிலில் அனுப்ப படும்.

19 comments:

  1. அப்பவே நெனச்சேன் அய்யனார் மாமா குசும்பு மாமா கிட்ட சிக்க போறார்னு,
    மாட்டுனாரு வசமா

    ReplyDelete
  2. மொத்தமா அய்யனார பிரிச்சு மேய போரிங்க இன்னிக்கு

    ReplyDelete
  3. மீ த ஃப்ஸ்ட்டூ....

    ReplyDelete
  4. //மேலை நான் கொடுத்து இருக்கும் தலைப்பு அய்யனாரின் பதிவு தலைப்பு. அது பார்க்க மட்டும், அதை கிளிக் செஞ்சு பதிவை நீங்க படிக்க நேர்ந்தால் அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல!//

    அதுக்கு பேரு சொ. ஆ. சூ வச்சுக்கிறது.

    ReplyDelete
  5. //அய்யனார் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பும் மெயிலில் அனுப்ப படும்.//

    நான் போட்டிக்கே வரலை. என்ன விட்டுடுங்க சாமிஈஈஈஈஈஈஈஈஈ......

    ReplyDelete
  6. இது, நீங்க மூத்த வலைபதிவர் ஆவதற்காக எடுக்கும் முயற்ச்சியா?

    ReplyDelete
  7. நிலா said...
    அப்பவே நெனச்சேன் அய்யனார் மாமா குசும்பு மாமா கிட்ட சிக்க போறார்னு,
    மாட்டுனாரு வசமா////

    நிலா ஒழுங்கா சாப்பிட்டலேன்னா அய்யனார் கவிதையை அம்மாகிட்ட கொடுத்து உனக்கு படிச்சு காட்ட சொல்லிடுவேன் ஆமா!!!


    நிலா said...
    மொத்தமா அய்யனார பிரிச்சு மேய போரிங்க இன்னிக்கு..

    அல்ரெடி நிறைய முறை மேஞ்சாச்சு!!!

    ReplyDelete
  8. "J K said...
    //மேலை நான் கொடுத்து இருக்கும் தலைப்பு அய்யனாரின் பதிவு தலைப்பு. அது பார்க்க மட்டும், அதை கிளிக் செஞ்சு பதிவை நீங்க படிக்க நேர்ந்தால் அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல!//

    அதுக்கு பேரு சொ. ஆ. சூ வச்சுக்கிறது.////

    காலையில் அப்ப நீங்க வெச்சிக்கிட்டது பேரு என்னா JK.. அவரோட லிங் நீங்க கேட்டது மட்டும் இல்லாம படிச்சுவேற பார்தீங்களே!!!!

    ReplyDelete
  9. "delphine said...
    ஒரே மூச்சில் படிச்சுட்டேனே!"

    ஹலோ யாரும் நல்ல டாக்டர் இருந்தா டெல்பின் டாக்டருக்கு மூச்சு இருக்கான்னு டெஸ்ட் செய்யுங்க!!!

    அப்ப உங்களுக்கு கவிதை தொகுப்பு பரிசாக வழங்க படும் ஓக்கேவா?

    ReplyDelete
  10. பரிசை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. இல்லாவிட்டால் கலந்து கொண்டிருப்பேன்

    ReplyDelete
  11. இந்த வாரம் இருக்குடி உனக்கு

    ReplyDelete
  12. "J K said...
    இது, நீங்க மூத்த வலைபதிவர் ஆவதற்காக எடுக்கும் முயற்ச்சியா?"

    இல்லை இது நான் மத்தவங்களை பைத்தியம் ஆக்க எடுக்கும் முயற்ச்சி:)))


    முரளி கண்ணன் said...
    ///பரிசை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. இல்லாவிட்டால் கலந்து கொண்டிருப்பேன்////

    என்ன சின்னபுள்ள தனமா வாங்க வாங்க ஆப்பு வாங்க வாங்க:))))


    ///அய்யனார் said...
    இந்த வாரம் இருக்குடி உனக்கு////

    நாங்களும் கொலைவெறியில் தான் இருக்கோம், வாங்க ஒரு கை பார்த்திடலாம்!!!

    ReplyDelete
  13. அப்படி ஒரு தலைப்பு வைத்ததாலயே சூடான இடுகைல வந்துட்டாரு பாருங்க. அங்க இடமே பத்துல தலைப்புக்கு.

    ReplyDelete
  14. //இல்லை இது நான் மத்தவங்களை பைத்தியம் ஆக்க எடுக்கும் முயற்ச்சி:)))//

    அண்ணே, நீங்க நல்லவரா கெட்டவரா?...

    ReplyDelete
  15. //மேலை நான் கொடுத்து இருக்கும் தலைப்பு அய்யனாரின் பதிவு தலைப்பு. அது பார்க்க மட்டும், அதை கிளிக் செஞ்சு பதிவை நீங்க படிக்க நேர்ந்தால் அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல!//

    ச்சும்மா.... ஊதறுதுல்ல

    ReplyDelete
  16. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஒரே மூச்சியில் படிச்சதும் இல்லாம... புரிஞ்சு வேற தொலைச்சுடுச்சே....

    ReplyDelete
  17. \\பரிசு: அய்யனார் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பும் மெயிலில் அனுப்ப படும்.\\

    குசும்பா! இதுக்கு என்ன செக்ஷன் தெரியுமா?

    ReplyDelete
  18. அய்யனாரின் பதிவு ஆழ்மனதின் அடித்தளத்தில் விகஸித்த எண்ணங்களின் சீறிய வெளிப்பாட்டில் சிலிர்த்த பனித்துளியின் தகவாய் ஒளிர்ந்த ஆத்மப்ரஹாசத்தின் நிகழ்வினால்....

    ஹையோ...ஹையோ... நாக்கு சுளுக்கிகிச்சே...குசும்பா, சீக்கிரம் டாக்டர கூப்புடுப்பா.......

    ReplyDelete
  19. சித்தஆப்பு அய்ஸ் வந்ததும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டிங்க போல....;)))

    ReplyDelete