Monday, July 19, 2010

பொண்ணுங்கன்னா இப்படிதான்!

முன்குறிப்பு: இந்த பதிவுவை எழுத காரணமாக இருந்த நண்பர் சஞ்சய்க்கு நன்றி! ஊக்கமும் தைரியமும் கொடுத்த நண்பர் ஆதிக்கு நன்றி, அப்ப அப்ப பல ஆலோசனைகள் சொன்ன நண்பர் அப்துல்லாவுக்கும் நன்றி. வரப்போகும் திட்டுகளையும் பாராட்டுகளையும்(வந்தாதானே?:)) இவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன். மூவரும் சரி சமமாக பிரிச்சுக்குங்கோ. (பேரை போல்ட் செஞ்சு எல்லாம் போட்டு இருக்கேன் குறிபார்த்து தாக்குங்கப்பா)

இவர் எழுதிய இந்த பதிவுக்கு எதிர் பதிவுதான் இது.

1)யாராவது டைம் கேட்டா, வேண்டுமென்றே என்னிடம் வந்து டைம் கேட்கிறான் பாரு என்று சொல்லுவாங்க, (ஆனா வேறு யாரும் டைம் கேட்கமாட்டாங்களான்னு உள்ளுக்குள் நினைப்பாங்க)

2)எந்த புத்தகத்தோட அட்டையில் அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.

3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.

4)எங்கயாவது 9 மணிக்கு போகணும் என்றால் முதல் நாள் 9 மணியில் இருந்து எந்த ட்ரஸ் போடனும் என்ற ஆராய்சியில் இறங்கிடுவாங்க. 8.55 வரை முடிவு செய்ய மாட்டாங்க.

5)பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று மொட்டை மாடிக்கு போனா, செல்போன் பேட்டரி லோ ஆகி கத்தும்வரை கீழே வரமாட்டாங்க. வந்ததும் என்ன மொபைல் இது ஒரு 3 மணி நேரம் கூட தொடர்ந்து பேச முடியல என்று திட்டுவார்கள்.

6)பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

7)டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும் பொண்ணோட தோடு, நெக்லஸ், புடவை கலரை நோட் செஞ்சுக்கிட்டு மேட்சிங்கா இருக்குல்ல இதுமாதிரி ஒரு செட் வாங்கனும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

8)எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா அதை தவிர மீதி எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு அடுப்பில் சட்டிய வெச்ச பிறகு நினைப்பு வந்து நம்மை கடைக்கு அனுப்புவாங்க.

9)திடிர் என்று புது புது வெரைட்டியா சமைக்க ஆரம்பிப்பாங்க எல்லாம் நாலு வேலைக்குதான், திரும்பவும் போன வாரம் வெச்ச சாம்மாரை பிரிஜில் இருந்து எடுத்து சூடு செஞ்சு கொடுப்பாங்க.

10)குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க சொன்னா எல்லா சீரியலும் முடிஞ்ச பிறகு பத்து மணிக்கு நம்மையும் தூங்க விடாம, குழந்தையையும் தூங்க விடாம சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

11)அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான், இதெல்லாம் ஒரு மூஞ்சி இதை எல்லாம் எப்படிதான் ரசிக்கிறார்களோ என்று திட்டிக்கிட்டே, அசின் வரும் சேனலை மாத்துவாங்க.

12) நாம என்னைக்காவது கிரிக்கெட் மேட்ச் அல்லதும் புட் பால் மேட்ச் பைனல் இருக்குன்னு சீக்கிரம் வந்து டீவி முன்னாடி உட்காந்தா, பாருங்க புள்ளை சாப்பிடமாட்டேங்கிறான் கார்ட்டூன் நெட் ஒர்க் வையுங்க என்று சொல்லி குழந்தைக்கு ரொம்ப பொறுப்பா சாப்பாடு ஊட்டுவாங்க.

13) சாம்பார் வைப்பதுக்கே அம்மாவுக்கு போன் போட்டு டவுட் கேட்டு போன் பில்லை ஏத்துவாங்க, ஆபிஸ் வேலையா ஒரு போன் செஞ்சாபோன் பில் நம்மால் ஏறுவது போல் முனுமுனுப்பாங்க.

14) ஒன்னுவிட்ட சித்தி பொண்ணு கல்யாணம் என்றால் ஒருவாரம் லீவ் போட சொல்லியாவது அழைச்சிக்கிட்டு போய்டுவாங்க, நம்ம தம்பி கல்யாணத்துக்கு LKG படிக்கும் பையனுக்குஸ்கூல் லீவ் எடுத்தா பிரச்சினை என்று ஒரு நாள் லீவ் எடுப்பாங்க.

15) அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க.

பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

பங்கு பிரிக்க முடியாத படி வரும் எதிர்பதிவுகளை அல்லது திட்டுகளை கீழே இருப்பவர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிடவும்.

(நன்றி தலைப்பில் உதவி - ஆசிப் அண்ணாச்சி)

நன்றி முதல் பாயிண்ட் : பால பாரதி

நன்றி 2 வது பாயிண்ட்: பரிசல்

நன்றி 3 வது பாயிண்ட்: வடகரைவேலன்

நன்றி 4வது பாயிண்ட் : சென்ஷி

நன்றி 5வது பாயிண்ட்: அணில் குட்டி கவிதா

நன்றி 6வது பாயிண்ட்: வெண்பூ & ஜீவ்ஸ்

நன்றி 7 வது பாயிண்ட்: கென் & அய்யனார்

நன்றி 8 வது பாயிண்ட்: சுந்தர்ஜி

நன்றி 9வது பாயிண்ட்: கேவிஆர் ராஜா

நன்றி 10வது பாயிண்ட்: மயில் விஜி & ராம்

நன்றி 11 வது பாயிண்ட் : கண்ணா & சோசப்பு

நன்றி 12 வது பாயிண்ட்: மின்னுது மின்னல் & கார்க்கி

நன்றி 13 வது பாயிண்ட் சந்தோஷ் & மங்களூர் சிவா

நன்றி 14 வது & 15 வது: வலையுலக அனைத்து ஆண் நண்பர்களும்

76 comments:

  1. உண்மையை உரத்துச் சொல்லிய குசும்பனே... இனி அரசவைக் கோமாளி என்பதில் இருந்து சக்கரவர்த்தியவைக் கோமாளி என்ற பட்டம் பெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான்,
    //

    தீபிகா படுகோனே தானே அழகுனு சொன்னிங்க

    :))

    ReplyDelete
  3. வீட்டில்இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க.
    //

    ஆணாதிக்கவாதி குசும்பனை தனிமைபடுத்துவோம்

    ReplyDelete
  4. போன இடுகையைப் பார்த்துட்டு குசும்பன் இவ்வளவு சீரியஸா போய் கெட்டுப் போய்ட்டாரேன்னு ரொம்ப விசனப் பட்டேன். அப்பாடி! மீண்டு வந்ததுக்கு நன்றிங்ணாவ்.

    ReplyDelete
  5. same blood?
    இல்லல்ல...
    இது universal blood,
    பாருங்க எல்லா புருசங்களையும்...

    ReplyDelete
  6. இருக்குறதுலேயே இந்த பதினஞ்சாவது ஐட்டம்தானுங்க சூப்பர் :))

    ReplyDelete
  7. அட அட .. நம்ம சைடுலயும் ஆள் இருக்குன்னு நினைக்கறப்போ கண்ணுல ஆஆனந்த கண்ணீரேஎ வருதுங்க.. :‍‍‍-)))))

    ReplyDelete
  8. சீச்சீ தூத்தூ .. குசும்பா திருந்தவே மாட்டியா நீ ?

    ReplyDelete
  9. யோவ் உண்மைய சொல்லு ... வினவு உன்னைய பத்தி பதிவு எழுதினா எங்க பேரையெல்லாம் சேக்கணும்னுதானே அப்பாவிகளையெல்லாம் மாட்டி விட்டுருக்கே....

    அய்யா...கிசுகிசு எழுதற ஆசாமிகளா.. நல்லா கேட்டுகிடுங்க நானு ஆணாதிக்க குசும்பனுக்கு ஒண்ணும் சொல்லிகுடுக்கல...குடுக்கல...குடுக்கல....
    எல்லாம் அவரின் சொந்த செலவில வச்ச சூனியம்தான்

    து்ப்புறவங்கெல்லாம் இந்த பக்கமா க்யூல வாங்க.....


    ச்சீ...த்த்த்த்தூஊஊஊஊ

    ReplyDelete
  10. அட கடவுளே! எத்தனை பேர் இப்பிடி கிளம்பிருகீங்க ?இனி குட்டி சுவருதான்

    ReplyDelete
  11. //அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, //


    :::))))))))))))))

    ReplyDelete
  12. சுல்தான் said...
    போன இடுகையைப் பார்த்துட்டு குசும்பன் இவ்வளவு சீரியஸா போய் கெட்டுப் போய்ட்டாரேன்னு ரொம்ப விசனப் பட்டேன்
    //

    ஆஹா இப்படி ஏமாத்து போயிட்டீங்களே !!

    வினவு தான் கோமாளி பட்டம் குடுத்தது அதனால அவங்க லிங்க் எடுத்து போட்டு நான் கோமாளி இல்லை நானும் உங்க தோழர்தான் என்று அவர்களுக்கு காட்ட ஒரு வாய்ப்பு அதை குசும்பன் சரியா பயன் படுத்தி வினவுகிட்ட இருந்து போன பதிவுக்கு ஓட்டு வாங்கிட்டார்


    ஆனா இன்னைக்கி மறுபடியும் தனது ஆனாதிக்கத்தை காட்டியிருக்கிறார் குசும்பன் வினவுகிட்ட இருந்து எப்படி பட்ட ஆக்‌ஷன் வர போவுதோ,,.... :)

    ReplyDelete
  13. லிஸ்டில் மை பேர் மிஸ்ஸிங் :(

    ReplyDelete
  14. இந்த பதிவுவை எழுத காரணமாக இருந்த நண்பர் அப்துல்லா ஆதி சஞ்சய்
    //


    ச்சீ தூ இதெல்லாம் ஒரு பொழப்பு :)

    ReplyDelete
  15. தஞ்சாவூர் குசும்பு என்பது இது தானோ?

    ReplyDelete
  16. ஆதியோட சேராதிங்கனு சொன்னா கேட்டாதானே

    ReplyDelete
  17. //இந்த பதிவுவை எழுத காரணமாக இருந்த நண்பர் அப்துல்லா ஆதி சஞ்சய்
    //


    ச்சீ தூ இதெல்லாம் ஒரு பொழப்பு :)

    //



    யோவ் முருகேசா இந்த ஆளோட ஆணாதிக்க வன்மத்தை முதலில் கண்டறிந்து இடுகைபோட்டு உலகக்குச் சொன்னவன் நாந்தான். பழிவாங்க என்னைப் போட்டுக் குடுக்கும் குசும்பனை நம்பாதிங்க

    ReplyDelete
  18. யோவ் முருகேசா இந்த ஆளோட ஆணாதிக்க வன்மத்தை முதலில் கண்டறிந்து இடுகைபோட்டு உலகக்குச் சொன்னவன் நாந்தான். பழிவாங்க என்னைப் போட்டுக் குடுக்கும் குசும்பனை நம்பாதிங்க
    //

    அட ஆமால்ல :(

    ReplyDelete
  19. தனியா திட்டம் போட்டு பெண்களைத் தாக்கி பதிவு போட்டுவிட்டு ஊர்ல இருக்குற எல்லாரையும் மாட்டிவிடுறயா நீ.? உனக்கு இருக்குது ஒருநாளைக்கு.!

    ReplyDelete
  20. இருந்தாலும் பதிவு சுவாரசியம். :-)

    ReplyDelete
  21. அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.
    /


    முக்கியமா அதுல நடிகை போட்டோ இருந்துட்டா அவ்வளவுதான்

    ReplyDelete
  22. அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.
    /


    முக்கியமா அதுல நடிகை போட்டோ இருந்துட்டா அவ்வளவுதான்

    ReplyDelete
  23. "நீங்கதான் என்ன 'கண்டுக்கவே' மாட்றீங்களே... எப்போதும் கம்ப்யுட்டர் கம்ப்யுட்டர்னு... பேசாம அதோடயே போய் 'படுத்துக்குங்க'..."
    என்று திடீரெண்டு கோபமாய் சொல்லிவிட்டு அந்தப்பக்கம் பார்த்து புரண்டு படுத்துக்கொள்வார்கள்.

    'ச்சே.., இப்படி இருந்துட்டோமே' என்று மனம் நொந்துபோய், குசும்பன் பதிவை அப்டியே பாதியில் குளோஸ் பண்ணிவிட்டு கணினியை ஷட்டவுன் பண்ணிட்டு, பனியனை கழட்டிவீசிட்டு பக்கத்திலே போய் படுத்து 'ஹாய் செல்லம்' என்றால், "ச்சீ, போங்க, எப்போதும் இதே நினைப்புத்தானா? பேசாம படுத்து அந்த பக்கமா பாத்து தூங்குங்க... பாதி ராத்திரியில வந்து தொல்லை பண்ணிக்கிட்டு..." '(!?)'
    எனும்போது, சத்தியமாய் கம்பியுட்டருக்கே தாலிகட்டிரலாமா என்று நினைக்கத்தோன்றாது?

    ReplyDelete
  24. ரங்க மணிகளின் வலையுலக பிரதி நிதி குசும்பன் வாழ்க

    ReplyDelete
  25. 3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.
    //

    ஏன் நீங்க சமைப்பது தானே

    ஆனாதிக்க புத்தி உங்களை விட்டு போகதே

    ச்சீ தூஉ

    ReplyDelete
  26. 3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.
    //

    தெரிஞ்சா சமைக்க மாட்டாங்களா??

    ReplyDelete
  27. // அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க. //

    சேம் பிளட் தல :-))

    ReplyDelete
  28. // தராசு said...

    ரங்க மணிகளின் வலையுலக பிரதி நிதி குசும்பன் வாழ்க

    //

    இந்தாளும் ஒரு ஆணாதிக்க வவ்வாள். என்னோட அடுத்த குறி நீதாண்டி :)))

    ReplyDelete
  29. எப்படிங்க வீட்டு ஹால்ல சேர் போட்டு உக்காந்து பார்த்த மாதிரியே எழுதுறீங்க ?

    சூப்பரப்பு ! அருமை அய்யா அருமை !

    எல்லா வூட்லையும் இதே கதைதானாட்ருக்கு

    :))))

    ReplyDelete
  30. இருந்தாலும் பதிவு சுவாரசியம். :-)

    ReplyDelete
  31. ம்ம்ம்.. நன்றியுரை ரொம்பவே பெருசே இருக்கே....

    ஓவரா பயத்துல இருக்கீங்கன்னு மட்டும் புரியுது... :))))

    இதை அப்படியே மெயின்டெயின் பண்ணிகோங்க.. :))

    (ஆனாலும் பயத்தை இப்படி வெளியில காட்டி இருக்கவேண்டாம்னு தோணது.. !! உங்களால இப்ப எங்க எல்லாருக்குமே இது ஒரு பெரிய மைனஸ் ஸா போச்சி... :( )

    ReplyDelete
  32. யோவ் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!?!?

    13வது பாயிண்ட்ல என் பேர் திடீர்னு எப்பிடி வந்தது????

    மொதல்ல நான் படிச்சி ஸ்மைலி போடறப்ப இல்ல

    இது அழுகுணி ஆட்டம் :((

    ReplyDelete
  33. //இது அழுகுணி ஆட்டம் :((//

    சிவா.. .நோ ஃபீலிங்கு...நன்றியுரை எல்லாமே.. அழுகுணி ஆட்டம்..தான்..

    ReplyDelete
  34. அட‌ப்பாவி குசும்பா.. த‌னியா பேசுன‌ ர‌க‌சிய‌த்த‌ இப்ப‌டி போட்டு உட‌ச்சிட்டியே... உன்ன‌ ந‌ம்பி இனிமே எப்ப‌டி ர‌க‌சிய‌ம் பேசுற‌து? :)

    ReplyDelete
  35. அவ்வ்வ்வ் பாயிண்டுக்கு ஹெல்ப் பண்ணினதுல பல கல்யாணம் ஆகாத பசங்களும் இருக்காங்களே! இவங்களுக்கு எப்படி இந்த மேட்டரெல்லாம் தெரியுது :)

    ReplyDelete
  36. பாருங்கப்பா நம்ம சென்ஷி மாமா கூட .... பாயிண்ட் எடுத்துக் கொடுத்துருக்காரு.. எந்த அனுபவத்துல பண்ணாருன்னுதான் தெரில....

    ReplyDelete
  37. இதுல உங்க பாய்ண்டு ஒன்னு கூட இல்லியா?
    இல்ல உங்க ஒய்ப் அடிப்பாங்கன்னு பயமா?

    ReplyDelete
  38. பதிவைப் படிக்கும்போது ஜாலியாத்தான் இருக்கு. ஆனா உண்மையை சொன்னா உலகத்துல யாருமே ஒத்துக்க மாட்டாங்களே...

    ReplyDelete
  39. இதில் உண்மையும் இருக்கு..நல்லாதானே இருக்கு ஏன் பாராட்டை பிரிச்சுக் கொடுக்கிறீங்க...

    ReplyDelete
  40. நான் பின்னூட்டம் போடுற மாதிரி பதிவு இல்லையே..?

    ReplyDelete
  41. உண்மையை சொல்லலைன்னா என்னை அந்த பாடிகார்ட் முனிச்வரன் மன்னிக்க மாட்டார்..இந்த 10 பாயிண்டும் ஆணாதிக்கவியாதி குசும்பு அண்ட் கோக்கு சமர்ப்பனம்... எதுனா டெலிட் பண்ணினா.... மவனே பேட்டி எடுத்து போட்டுடுவேன் :)))


    1)யாராவது அட்ரஸ் கேட்டா, தெரியாத மாதிரி ரொம்ப யோசிச்சிக்கிட்டே எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டவங்கள கண்ணால மேஞ்சிட்டு, பொறுமையா விவரமா அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்லுவாங்க..

    2) எந்த புத்தகத்தோட அட்டையில்
    அழகான பொண்ணு போட்டோ
    இருந்தாலும், அதை நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு வாங்கிட்டு வந்துடுவாங்க..

    3) காய்கறி வாங்க அனுப்பினா காய்கறிய பாத்து வாங்காம பக்கதுல நிக்கற பிகர்' களை பாத்து ஜொள்ளுவிட்டுட்டு,
    சொத்தலாவும், முத்தலாவும், அழுகி போனாதாவும் வாங்கிட்டு வந்து நிப்பாங்க..

    4) எங்கயாவது போகணும் என்றால் எப்படி பொண்டாட்டிய கழட்டி விட்டுட்டு போலாம் னு 3 நாளைக்கு முன்னமே யோசிச்சி ப்ளான் போட்டு வச்சிக்குவாங்க.

    5) பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று
    மொட்டை மாடிக்கு போனா,
    யார் கூட பேசறாங்கன்னு பாக்க பின்னாடியே கேவலமா வந்து நோட்டம் விடுவாங்க.

    6) ஆண் பாவம் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

    7) டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு
    போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும்
    பொண்ணு எப்படி இருக்கான்னு பாக்கற இடம் எல்லாம் போட் விடற ரேஞ்சுக்கு ஜொள்ளு விடுவாங்க. .(இதுல கொடுமை என்னான்னா அந்த மூஞ்சிய சும்மா கூட பாக்க சகிக்காது )

    8) எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா
    பொண்டாட்டி கூட இருக்கும் போதே.. பொண்ணுங்களையே பாக்காத மாதிரி அங்க இருக்கவங்களை பாத்து, கூட்டிட்டு போன பொண்டாட்டி மானத்தை வாங்குவாங்க..

    9) எவ்வளவு ருசியா பொண்டாட்டி சாப்பாடு செஞ்சி போட்டாலும், ஆபிஸ் ல யாராவது எவ்வளவு கேவலமான சாப்பாடு கொண்டு வந்தா கூட, அதை சூப்பர் னு சொல்லி வாங்கி சாப்பிடுவாங்க..

    10) குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க
    சொன்னா, ஃபுட் பால், கிரிக்கட்டு, நீயூச் சேனல் னு பார்த்து நேரத்தை செலவு செய்துட்டு, விடியகாலையில தூங்கற புள்ளைய எழுப்பி, நம்மையும் திட்டிக்கிட்டு சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

    பின் குறிப்பு: குறைந்தது இதில் 5 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் உங்க அந்த ஆணை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

    ReplyDelete
  42. எதிர்வினை, பதிவு போடும் எண்ணம் இருப்பவர்கள் டோக்கன் வாங்கி நம்பர் படி போடவும்.. ஃபாலோ பண்ண வசதியா இருக்கும் :)))))))))

    ReplyDelete
  43. அடப்பாவி குசும்பா, நான் என் இனத்துக்கு துரோகம் பண்ணுவனா? 10வது பாயிண்டை ராமிடம் இருந்து திருட்டுதனமா வாங்கித்தந்த சஞ்சய் தானே. ச்சீ.. தூ து.. (நேரா கேட்டிருந்தா இன்னும் 4 பாயிண்ட் கொடுத்திருப்பார் )))

    ReplyDelete
  44. ஆசிப் அண்ணாச்சி வர வர ரொம்ப சாதுவா மாறிட்டு வரார்.. இவ்ளோ சப்பையாவா தலைப்பு சொல்வார்.. கல்யாணம் ஆன எல்லா ஆம்பளைங்களும் பயந்தாங்கொள்ளிகள தான் போல.. :))

    ReplyDelete
  45. நான் ரெடி! நீங்க ரெடியா?
    அதாங்க நாங்க சமையல் பண்ண ரெடி! நீங்க சாப்பிட ரெடியா?

    அப்புறம் பிரிட்ஜெ நாங்கள் சுத்தம் பண்ணலாம் என்றால் அதுக்கு மட்டும் விடவே விட மாட்டார்கள். அப்படி அவர்களுக்கு தெரியாமல் ஒரு நாள் நீங்கள் சுத்தம் பண்ணிநீர்கள் என்றால் உலகத்தில் உள்ள எல்லா விதமான காளான்களையுய்ம் அங்கு பார்க்கலாம்.

    அது என்ன என்று கேட்டால் அவர்களுக்கே தெரியாது. காளான் உற்பத்தியில் முனைவர் பட்டம் பெற்ற விஞ்ஞானியே அசந்துடுவான். எப்படி இந்த வூட்டுக்கார அம்மா இப்படி வித விதமான் காளான்களை உற்பத்தி செய்கிறார்கள் என்று.

    அப்புறம் சொல்வார்கள் அது பிரிட்ஜு வாங்குனப்போ சமைத்து வச்சதுங்க....

    என்ன ஒரு ஆறு வருடம் என்று தோராயமாக வைத்துக் கொள்ளுங்களேன்!

    ReplyDelete
  46. //3) காய்கறி வாங்க அனுப்பினா காய்கறிய பாத்து வாங்காம பக்கதுல நிக்கற பிகர்' களை பாத்து ஜொள்ளுவிட்டுட்டு,
    சொத்தலாவும், முத்தலாவும், அழுகி போனாதாவும் வாங்கிட்டு வந்து நிப்பாங்க..//

    எதுக்கு சுத்தி வளைச்சிப் பேசறிங்க? அந்த பிகர் மாதிரியேன்னு சொல்ல வேண்டியது தான?

    ReplyDelete
  47. //1)யாராவது அட்ரஸ் கேட்டா, தெரியாத மாதிரி ரொம்ப யோசிச்சிக்கிட்டே எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டவங்கள கண்ணால மேஞ்சிட்டு, பொறுமையா விவரமா அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்லுவாங்க..//

    நிஜமாவா?

    ReplyDelete
  48. //2) எந்த புத்தகத்தோட அட்டையில்
    அழகான பொண்ணு போட்டோ
    இருந்தாலும், அதை நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு வாங்கிட்டு வந்துடுவாங்க..//

    சரக்கடிக்கும் போது அந்த அட்டை மேல சைட் டிஷ் வச்சி சாப்டுவாங்க..

    ReplyDelete
  49. //4) எங்கயாவது போகணும் என்றால் எப்படி பொண்டாட்டிய கழட்டி விட்டுட்டு போலாம் னு 3 நாளைக்கு முன்னமே யோசிச்சி ப்ளான் போட்டு வச்சிக்குவாங்க.
    //

    அப்டின்னா எவ்ளோ இம்சையா இருப்பாங்கன்னு யோசிச்சிப் பாருங்க..

    ReplyDelete
  50. //5) பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று
    மொட்டை மாடிக்கு போனா,
    யார் கூட பேசறாங்கன்னு பாக்க பின்னாடியே கேவலமா வந்து நோட்டம் விடுவாங்க.//

    பிரண்டுகிட்ட பேசறவங்களுக்கு மொட்ட மாடில என்ன பேச்சு? வூட்டுக்குள்ளயே பேச வேண்டியது தான?

    ReplyDelete
  51. //7) டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு
    போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும்
    பொண்ணு எப்படி இருக்கான்னு பாக்கற இடம் எல்லாம் போட் விடற ரேஞ்சுக்கு ஜொள்ளு விடுவாங்க. .(இதுல கொடுமை என்னான்னா அந்த மூஞ்சிய சும்மா கூட பாக்க சகிக்காது )//

    அட்ரஸ் கேக்கறவங்க, காய்கறி வாங்க வரவங்க எல்லாம் தேவதைகளாம்.. நியூஸ் வாசிக்க வரவங்க மூஞ்சி சகிக்காதாம்.. பொண்ணுங்கள அசிங்கப் படுத்த பசங்க தேவையே இல்ல :)

    ReplyDelete
  52. //8) எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா
    பொண்டாட்டி கூட இருக்கும் போதே.. பொண்ணுங்களையே பாக்காத மாதிரி அங்க இருக்கவங்களை பாத்து, கூட்டிட்டு போன பொண்டாட்டி மானத்தை வாங்குவாங்க..//

    பொண்ணுங்க மேக்கப் போட்டு வெளிய வரதே பசங்க பார்க்கனும்னு தான்... அதுக்கு பசங்களுக்கு நன்றி தான் சொல்லனும்..

    ReplyDelete
  53. //
    9) எவ்வளவு ருசியா பொண்டாட்டி சாப்பாடு செஞ்சி போட்டாலும், ஆபிஸ் ல யாராவது எவ்வளவு கேவலமான சாப்பாடு கொண்டு வந்தா கூட, அதை சூப்பர் னு சொல்லி வாங்கி சாப்பிடுவாங்க..//

    அது ருசின்னு நீங்களே முடிவு பண்ணாக் கூடாது.. சாப்ட்டு நொந்துப் போனவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும்

    ReplyDelete
  54. இது என் பதிவுக்கு போட்ட
    எதிர் பதிவு தாங்க...

    ரொம்ப நல்லா இருக்கு..

    சரி எனக்கு ஒரு தகவல்
    கூட சொல்ல கூடாதா..??
    நான் என்ன உங்க கூட
    சண்டைக்கா வர போறேன்..??!!

    ReplyDelete
  55. ஆணாதிக்கவாதி வடகரை வேலன் என்று என் பெயரைப் போடாத அரசவைக் கோமாளி குசும்பனைக் கண்டிக்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறதென்பதை இங்கே சொல்லாவிட்டால் வரலாற்றில் ஆணாத்திக்கவாதி என்ற என் பட்டத்தை நிலைநிறுத்த சிவராமன் எடுத்த முயற்சிக்கு இது இடஞ்சலாக, இடையூறாக, தடைக்கல்லாக மட்டுமல்லாது முட்டுக்கட்டையாகவும் இருக்கும் என்பது வெள்ளிடை மலை எனவும் உள்ளங்கை நெல்லைக்கனி எனவும் சொல்லவேண்டி இருக்கிற்து என்பது ஒரு கசக்கும் உண்மை என்றாலும் சிலசமயம் உண்மை கசக்கத்தானே செய்யும் என்ற ஆறுதலளிக்கும் விதமான பதிவு இது என்பதில் உங்களுகேதேனும் சந்தேகம் இருப்பின் திரு விசராமனை அணுக என்ன வழி என்பதை இப்பதிவெழுதிய சரவணனைக் கேட்டால் கிடைக்கும் என்பதுமிங்கே கூடுதல் தகவல்.

    ReplyDelete
  56. ஹா ஹா குசும்பு அண்ணே சரியான ஃபார்ம்ல தான் இருக்கீங்க போங்க

    செமயான எதிர்பதிவு :)))

    ReplyDelete
  57. டேய் இதெல்லாம் எனக்கு எப்படிடா தெரியும்.. சஞ்சூ சூப்பர்மா.. கலக்கிட்டே..

    ReplyDelete
  58. ரொம்ப ரசிச்சேங்க !! அருமை !! எங்க வூட்டுக்காரர் மட்டும் இதப் படிச்சார், புல்லரிச்சிடும் அவருக்கு :))
    என்ன பண்றதுங்க, தங்கமணிகள் தன்னோட வேலையை யாராச்சும் பகிர்ந்துப்பாங்களான்னு நெனைக்கறதும் உண்மை, ரங்கமணிகள் தான் பண்றேன்னு அதை சொதப்பறதும் உண்மை, தங்கமணிகள் திருப்தியே இல்லாம ரங்கமணிகளை திட்டுவதும் உண்மை ...
    ஆனா அப்டியெல்லாம் இல்லாம இருந்தா இப்படியெல்லாம் நீங்க எழுத முடியுமா சொல்லுங்க !!

    ReplyDelete
  59. குசும்பரே நல்ல வேலை!!! உருமா மாஈஜி.

    ReplyDelete
  60. அருமையான தொகுப்பு... கலக்குடா நீ..

    ReplyDelete
  61. //நன்றி முதல் பாயிண்ட்....//

    அண்ணாச்சிக்கே பயம் இருக்கத்தான் செய்யுது :)

    ReplyDelete
  62. @சஞ்சய்.. எப்படி இப்படி எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கீங்க...

    இதெல்லாம் நிஜத்தில் அனுபவிக்க செயகுழு கூடி ஒரு பொண்ணு (ஏமாந்த) பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாத்தான் சரியாகும்...

    ReplyDelete
  63. அக்மார்க் குசும்பு இல்லை...
    அத்தனையும் உண்மை....

    இவ்ளோ உண்மைகளை சொல்லும் உங்களை போய் கோமாளி, ஆணாதிக்கவாதி என்பவர்கள்
    ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது

    ReplyDelete
  64. எம்.எம்.அப்துல்லா said

    //ஆணாதிக்க வவ்வாள்///

    நண்பா... வீட்ல தலைகீழ தொங்கவிட்டு அடிப்பாங்களோ...
    அடிக்கடி வவ்வாள்..வவ்வாள் நு புலம்புறீங்களே....
    அனுபவம்தான் வார்த்தையில் வரும்...

    ReplyDelete
  65. //எம்.எம்.அப்துல்லா said...
    // தராசு said...

    ரங்க மணிகளின் வலையுலக பிரதி நிதி குசும்பன் வாழ்க//

    இந்தாளும் ஒரு ஆணாதிக்க வவ்வாள். என்னோட அடுத்த குறி நீதாண்டி :)))////

    அண்ணே, என் பொட்டி கெட்டுப் போச்சு, இன்னைக்கு சரியாயிடுமாம். சரியானவுடனே முதல் பதிவே தங்க மணிகளுக்கு மறுபடியும் பத்து கேள்விகள்தான். மயிலக்கா கிட்ட டோக்கன் போட்டு வைங்க, அதென்னது ஆணாதிக்க வவ்வாள்?????, குறுவாள், போர்வாள், வீரவாள் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன வவ்வாள்??????

    ReplyDelete
  66. ஒய் பிளட் ... சேம் பிளட்...

    ReplyDelete
  67. என்னப்பா இது.. பின்னுட்டம் எழுதலாம்னு வந்தா.. இங்க ஒரே கும்மியா இருக்கு...
    உங்கள் பதிவும், மயில் பதிவும் அருமை... உன்மை....

    அன்புடன்..

    கருணா கார்த்திக்கேயன்

    ReplyDelete
  68. நன்றி மின்னல்

    நன்றி மங் சிங்

    நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

    நன்றி ஜீவ்ஸ்

    நன்றி மின்னல், அது அங்க இது இங்க?

    சுல்தான் பாய் அப்ப அப்ப ஒரு சொத்த
    கடலை மாதிரி அப்படி பதிவு வரும் அதுக்காக
    மொத்த கடலை மூட்டையையும் ஒதுக்குவது சரியா?
    நன்றி

    raman- Pages நன்றி:)))

    ஜீவ்ஸ்ஸ்ஸ் இப்படியே துப்பிக்கிட்டே இருந்தா?
    வழி விடுங்க திருந்த:))

    நன்றி கல்ப் தமிழன்

    நன்றி கன்னா:)நான் அப்ரூவரா மாறிட்டேன் இனி உன் சாட்சி எடுபடாது.

    நன்றி பத்மா?

    நன்றி அபு அஃப்ஸர்

    நன்றி வெடிகுண்டு முருகேசன்

    நன்றி மோகன் குமார்

    நன்றி அப்து:)இதுக்கு பேர் பழவாங்கல் இல்லை, பதில் மரியாதை.

    ஆதி என்ன ஆச்சு?பேசிட்டு இப்ப இல்லேன்னு சொல்லவில்லை என்று சொல்வது அழகா?

    வெடிகுண்டு எங்கிருந்துயா இப்படி கிளம்புற...சும்மா உன் பின்னூட்டம்
    எங்க பார்த்தாலும் அதிருது!

    வதூவசீ ஹி ஹி சூப்பரு:)

    தராசு அண்ணே ஏன் இப்படி கோத்துவிடுகிறீர்

    மின்னல் போதும்யா எம்புட்டு நாள்தான் துப்புவ?

    கார்த்திக் நன்றி

    அப்துல்லா அண்ணே ரெண்டு வரி போஸ்ட் போட்டு
    கும்ம போறீயா?

    நன்றி நேசமித்ரன் :)

    நன்றி அத்திரி

    நன்றி ஆயில்யன்

    கவிதா பயமா எனக்கா? ஹி ஹி ஹி ஆமாங்க:)

    யோவ் மங்சிங் அப்பொழுதில் இருந்தே உன் பெயர் இருக்கு:)

    ஆதவா உனக்கு விளக்கமா பதில் சொல்லனும் என்று நினைக்கிறேன்
    பப்ளிக்கா இருக்கேன்னு விடுறேன்:))

    நாஞ்சில் எல்லாமே அனுவத்துலதான் தெரிஞ்சுக்க முடியுமா என்ன?

    நன்றி வழிப்போக்கன், நான் ஒரு அப்பாவிங்க எனக்கு இது மாதிரி
    எல்லாம் சிந்திக்கவே தெரியாதுங்க.

    நன்றி ஜெகதீசன்

    நன்றி சரவணன்

    நன்றி அமுதா

    நன்றி உ.த

    நன்றி மயில், பசங்கன்னா அப்படிதான்:)

    நன்றி சஞ்சய், மாம்ஸ் உன் எல்லா கவுண்டரும் சூப்பர்.

    //பொண்ணுங்க மேக்கப் போட்டு வெளிய வரதே பசங்க பார்க்கனும்னு தான்... அதுக்கு பசங்களுக்கு நன்றி தான் சொல்லனும்..//

    இது டாப்பு டக்கரு:)) லைட்டா முன்னாடி எடுத்து விட்டுருக்கும் ஒரு பத்து முடிய
    நாம பார்க்கிறோம் என்று தெரிஞ்சா அப்ப அப்ப லைட்டா ஒதுக்குவாங்க, திரும்ப
    விழும், திரும்ப ஒதுக்குவாங்க திரும்ப விழும்..என்னா பில்டப் கொடுப்பாங்க.

    ஆட்டையாம்பட்டி ஒரு வருசத்துக்கு முன்னாடி அரைச்சு
    வெச்ச இட்லி மாவு புளிச்சு போய் ஒரு ஸ்மெல் வரும் பாருங்க, அதை
    கொஞ்ச நேரம் திறந்து வெச்சா விச வாயு கசிவு மாதிரி ஆயிடும்.

    வெங்கட் நன்றி, இதை சஞ்சய் உங்க பதிவை பஸ்ஸில் பகிர்ந்து இருந்தார்
    போய் படிச்சேன், முன்னாடி எழுதியதா இருந்துச்சு அதான், எதிர் பதிவு
    போட்டுவிட்டேன்.

    அண்ணாச்சி, ஜெயமோகன் கூட போட்டோ எடுத்தப்பயே
    நினைச்சேன், வர வர பேசுவது எல்லாம் அந்த ரேஞ்சில் இருக்கு:))

    நன்றி ஜில்தண்ணி

    நன்றி சந்தோஷ், நீ அந்த மும்பை பொண்ணோட
    ஒரு மாசம் தங்கி இருந்தியே அப்ப சொன்ன மச்சி, இப்ப
    டெல்லி பொண்ணு வந்ததும் மறந்துட்ட போல:)))

    நன்றி பிரதீபா, //ரங்கமணிகள் தான் பண்றேன்னு அதை சொதப்பறதும் //
    புதுசா வண்டி ஓட்டுனா நாலு இடத்தில் இடிபடதான் செய்யும், அதுக்காக
    எப்பொழுதும் அதையே சொல்லிக்கிட்டு இருந்தா?:))

    நன்றி பாலகுமாரன்

    நன்றி சீனிவாசன்

    நன்றி பிரசன்னா

    நன்றி சிவகாசி மாப்பிள்ளை

    நன்றி முருகானந்தம்

    நன்றி வெங்கட், உங்க லிங்கையும் பார்க்கிறேன்.

    நன்றி கார்த்திகேயன்

    ReplyDelete
  69. அண்ணே வணக்கம் நமக்கு எந்த ஊரு பாத்து பத்திரம் இப்படி உண்மைய போட்டு உடச்சிட்டீங்களே

    நன்றி

    ReplyDelete
  70. நமக்கு ஆதரவா ஆள் இருக்குப்பா.
    :)

    ReplyDelete