Saturday, June 12, 2010

போபால் கார்ட்டூன்ஸ் 13-6-2010

என்னமோ ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சம்பவம் நடந்த மாதிரி இவிங்க கொடுக்கும் பில்டப்பு! தாங்க முடியலடா சாமி!

டக்கு புக்குன்னு ஏதாவது செஞ்சு நியுஸ் டாப்பிக்கை மாத்திடனும்!

சார் இப்பதான் நடந்தது என்னன்னு படிச்சிக்கிட்டு இருக்கார்! பாவம் இவருக்கு இதுமாதிரி ஒன்னு நடந்ததே தெரியாது போல!
எது விலை ஏறினா என்ன? குறைஞ்சா என்ன? கிரிக்கெட் மூலம் பணம் வருதா அது போதும்!
செய்தி: கொலை செய்த தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா பத்திரமாக கொழும்பு போய் சேர்ந்தார்.
டரியள் டக்ளஸ்: இது எல்லாம் என்னா மேட்டர்! 20 ஆயிரம் பேர் இறந்ததுக்கு காரணமான ஆண்டர்சனை தனி விமானத்திலேயே அனுப்பிய ஆளுங்க நாங்க, இது தெரியாம டக்ளஸ் அவசரப்பட்டு போய்விட்டார். கொஞ்சம் சொல்லியிருந்தா நாங்களே தனி விமானத்தில் கொண்டு போய்விட்டிருப்போம்!

29 comments:

  1. கார்ட்டூனை நினைத்து சிரிப்பதா?
    கார்ட்டூனை உருவாக்கிய சூழலை நினைத்து கொதிப்பதா?

    ReplyDelete
  2. அன்பின் குசும்பா

    நகைச்சுவையின் உச்சம் - ஆதங்கம் - இயலாமை - அனைத்தும் வெளி வருகிறது.

    ReplyDelete
  3. இந்த முறை என்னால் சிரிக்க முடியவில்லை ...

    முதன் முறையாக உங்கள் தளத்தில் நெஞ்சம் கனக்கிறது குசும்பா ...

    ReplyDelete
  4. கனமான நகைச்சுவை. கொஞ்சம் இதழ்கள் சிரித்தன - பின் இதயம் கனத்தது.

    ReplyDelete
  5. சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

    ReplyDelete
  6. அண்ணே சொல்றதுக்கு ஒன்னுமில்லை

    ReplyDelete
  7. நறுக்குனு இருக்குங்க...கார்டூன்...

    ReplyDelete
  8. செருப்படி.. வெல்டன்..

    ReplyDelete
  9. சிரிக்க முடியலை மாப்பி :(..

    ReplyDelete
  10. செருப்ப மஞ்சப் பையில போட்டு அடிக்கிற மாதிரி இருக்குடே இந்த பதிவு.

    ஆனா நம்மாளுக்களுக்கு செருப்பால அடிச்சாலும் உறைக்காது. இதுல மஞ்சப் பையில எல்லாம் போட்டி அடிச்சா எங்க ? போய்ட்டேயிருப்பாய்ங்க.

    ReplyDelete
  11. இந்த லட்சணத்துல இவங்கே இந்தியா வல்லரசு ஆயிடும்னு வேற சொல்றாங்கே!........ங்கொய்யால!..

    ReplyDelete
  12. இத நெனச்சி சிரிச்சி வெந்தபுண்ணுக்கு மருந்துப்போட்டுக்க வேண்டியதுதான் :)

    ReplyDelete
  13. கோபத்தின் வெளிப்பாடு.. பாராட்டுக்கள் தோழா..

    ReplyDelete
  14. குசும்பா ,

    கடைசி படம் மற்றும் கமெண்ட்ஸ் கார்டூனிஸ்ட் மதி டச்

    ReplyDelete
  15. :-(

    (பை த வே.. நாட்டு நடப்புகளை பத்தி உன்னை மாதிரி சீரியஸான பதிவு எழுதறவங்க யாருமே இல்ல நண்பா.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!)

    ReplyDelete
  16. /////சார் இப்பதான் நடந்தது என்னன்னு படிச்சிக்கிட்டு இருக்கார்! பாவம் இவருக்கு இதுமாதிரி ஒன்னு நடந்ததே தெரியாது போல!
    ///////

    அனைத்தும் அசத்தல் . அதிலும் இது டாப்!

    ReplyDelete
  17. சிரிக்க, சிந்திக்க!
    நகைச்சுவை அல்ல
    இம்முறை நகை அவலம்!

    அன்புடன்

    ReplyDelete
  18. கருணாசிங் அமெரிக்காவுக்கு கடிதம் எழுதுவாரோ? அதுக்கு ஸ்டாம்ப் ஒட்டாம அச்சரப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ்ல போஸ்ட் செய்வாரோ?

    ReplyDelete
  19. கோணியா : மிஷ்டர் பன் மோகன், போபால் பிரச்சனை பெருசாகுதே, என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க??

    பன் மோகன் : இதென்னம்மா கேள்வி? இலங்கைப் பிரச்சனையில எடுத்த அதே நடவடிக்கையைத்தான் இப்பவும் எடுக்கப்போறேன்.

    கோணியா : அப்பாடா இப்பதான் நிம்மதி!! நீங்க எதாவது செஞ்சுருவீங்களோன்னு பயந்துட்டேன்.

    ReplyDelete
  20. பன்மோகன்June 13, 2010 at 11:02 PM

    இந்த பிளடி பெக்கர் பீப்பிள்சை யாரு பேக்டரி பக்கத்துல குடி இருக்க சொன்னது???

    ReplyDelete
  21. செட்டிநாட்டு சீமான்June 13, 2010 at 11:04 PM

    நல்லவேளை, அந்தாளை அமெரிக்காவுக்கு பத்திரமா வழி அனுப்பி வச்ச வருஷத்துல நான் தான் உள்துறை இணையமைச்சர்னு ஒரு மீடியா பயபுள்ளைக்கும் இதுவரைக்கும் ஞாபகம் வரலை.தப்பிச்சோம்.

    ReplyDelete
  22. போபால் வெட்டியான்June 13, 2010 at 11:13 PM

    ஏதோ அமெரிக்கா புண்ணியத்துல 5000 பொணத்தை எரிச்ச காசைவச்சு இன்னும் வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கேன். ஓபாமா அய்யாகிட்ட சொல்லி இன்னும் 10 பேக்ட்டரி வரச் சொல்லணும்.

    ReplyDelete
  23. திருக்கழுக்குன்றம் கழுகுJune 13, 2010 at 11:14 PM

    இந்த ஊருல பொறந்து இந்தக் கோயிலுல உண்டக்கட்டி வாங்கி தின்னு பொழைக்கிறதுக்கு பேசாம போபால் பேக்ட்டரி மாதிரி இடத்து போயிட்டா வயிறாற பொனம் தின்னு பொழச்சிக்கிடலாம்.

    ReplyDelete
  24. போபால் 28 வது வார்டு கவுன்சிலர்June 13, 2010 at 11:15 PM

    தப்பிச்சுபோன நாயி எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டாமப் போயிருச்சே.

    ReplyDelete
  25. நீதிபதிJune 13, 2010 at 11:17 PM

    நமக்கு பிரச்சனையில்லை.யாராவது எதாவது கேட்டா சட்டமியற்றிய அம்பேத்கார் மேல பழியை போட்டுறலாம்.

    ReplyDelete
  26. யூனியன் கார்ப்பைடு ஓனர்June 13, 2010 at 11:23 PM

    அடப்பாவிகாளா! நீங்களா என்னைய பத்திரமா அனுப்பி வச்சுட்டு நான் தப்பிச்சு போய்ட்டேன்னு உங்க ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியிறீங்களா?? என் இமேஜ் என்னாகுறது???

    ReplyDelete
  27. யூனியன் கார்பைடு ஓனர்June 13, 2010 at 11:25 PM

    அடப்பாவிகளா! நீங்களா என்னைய பத்திரமா அனுப்பி வச்சுட்டு நான் தப்பிச்சு போய்ட்டேன்னு உங்க ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியிறீங்களாமே?? என் இமேஜ் என்னாகுறது???

    ReplyDelete