பிரச்சினைகளுக்குள் போகும் முன்பு என்னை பற்றி, எழுதவந்து எல்லாம் கூட சொல்லமாட்டேன் மொக்கை போட ஆரம்பிச்சு நான்கு வருடம் ஆகிறது 400பதிவுகள், ஒரு பதிவில் கூட எங்கேயும் எந்த சகபதிவரையும் திட்டியோ அல்லது குட்டியோ எழுதியது இல்லை. அதுபோல் எனக்குபின்னூட்டமும். நான் மொக்கை போட வந்தது தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவோ அல்லது இணையம் மூலம் பிரச்சினைகளை சரி செய்யவோ அல்ல.முதலில் எனக்கு பிளாக் என்பது பொழுதுபோக்கு அது மற்றவர்களுக்கும் எனக்கும் சந்தோசத்தை தரனும். அந்த வகையில் நான்கு வருடமாக சரியாக இருந்திருக்கிறேன். எங்கேயும் எப்பொழுதும் எல்லை மீறியது இல்லை, ஒரு முறை தமிழச்சி, அடுத்த முறை சஞ்சய் இவர்கள் வருத்தப்பட்டார்கள் என்று எழுதிய பதிவையும் டெலிட் செய்து இருக்கிறேன். மற்றவர்கள் மனசு வருந்தும் படி என் பதிவில் எது இருந்து யார் என்ன சொன்னாலும் செவி கொடுத்து கேட்டு அந்த தவறை திருத்திக்கும் பக்குவத்தில் தான் இருக்கிறேன். இதுவரை இவன் இந்த குரூப் இவுங்களை இவனுக்கு பிடிக்காது என்று எல்லாம் பெயர் வாங்காமல் அனைவருடனும் நட்பாகதான் இருந்திருக்கிறேன்.
இனி வினவு அவர்களுக்கு...
இதுவரை பதிவுலகில் நடந்து வந்த பிரச்சினைகளின் பொழுது எல்லாம் அந்த அந்த சமயத்தில் பிரச்சினனகளள பற்றி பதிவு போட்டே வந்திருக்கிறேன், எவ்வித உள்நோக்கமும் இன்றி, இப்பொழுதும் அதன் படியே செய்திருக்கிறேன். சம்மந்தப்பட்ட நாட்டாமை பதிவு தோழர்களுக்கோ, அல்லது தோழிகளுக்கோ வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
அடுத்து நடந்த சம்பவங்களில் சம்மந்தப்பட்ட இருவர் பதிவிலும் "கும்மி அடிக்க குசும்பன்" இல்லையே என்று சம்மந்தப்பட்டவர்களே கூப்பிடும் அளவுக்கு அனைவரிடமும் நட்பாகதான் இருந்திருக்கிறேன். இரு நண்பர்கள் சண்டை போடும் பொழுது தவறு செய்த நண்பர்கள் நர்சிமையோ, கார்க்கியையோ நான் பொதுவில் திட்டனும் என்ற அவசியம் இல்லை அது எனக்கு வரவும் வராது. என் எதிர்ப்பை மூவரும் உறுப்பினராக இருக்கும் குழுமத்தில் நான் பதிவு செய்தேன் எதிர் வாதமும் செய்தேன், இதுக்கு மேல் இதில் கருத்து சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அந்த அளவுக்கு நான் ஒர்த்தும் இல்லை.
//நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள்//
அய்யா இதுவரை நகைச்சுவை என்ற லேபிளின் கீழ் குசும்பன் நகைச்சுவை மட்டுமே செய்து வந்திருக்கிறான், அதனால் தான் அவர்கள் சந்தோசத்தை தெரிவிச்சிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
//பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.//
அய்யா எனக்கு எவனும் அரசனும் இல்லை எனக்கு எவனையும் மகிழ்விக்கனும் என்ற அவசியமும் இல்லை, இதுவரை நான் மகிழ்விச்சதால் எந்த அரசுனும் எனக்கு பொற்கிழி என்ன பொறை டீ கூட வாங்கி கொடுத்தது இல்லை.என் வலைதளத்துக்கு வரும் ஒரு சிலர் சந்தோசமாக திரும்பனும் அதே சமயத்தில் அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்யனும் இதுதான் என் நோக்கமாக இருந்திருக்கிறதே தவிர எனக்கு எவனும் அரசனும் இல்லை படி அளக்கவும் இல்லை.நான் அரசர்களுக்கு கூஜா தூக்கவும் இல்லை.
//இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். //
இதுக்கு முன்பும் பலபிரச்சினைகளின் பொழுது இதைதான் செய்திருக்கிறேன், பெருந்தலைகள் பாலபாரதி, செந்தழல் ரவி கூட என்ன குசும்பா மொக்கை போட்டு ஆட்டத்தை கலைச்சிடுவோமாஎன்று கேட்பார்கள் சில சமயங்களில் அப்படி செய்திருக்கிறோம். அதுபோல் தான் இப்பொழுதும் செய்தேன். நர்சிம் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை பதிவுலக பிரச்சினையாகதான்பார்த்தேன்.
//ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள்//
சகோதரிகளை பற்றி இப்படி ஒரு புனைவு வந்திருந்தால் என்னால் இப்படி ஒரு நாட்டாமைகள் தேவை என்ற பதிவை எழுதியிருக்க முடியாது, என்னோடு தொடர்பில் இருந்த முல்லையின் மனநிலையை யோசிக்காமல் மொக்கக போட்டது தவறு. ஆகவே இப்படி ஒரு பதிவு எழுதியதுக்காக வருந்துகிறேன். நீங்கள் சொல்வதுபோல் வெட்கமும் படுக்கிறேன் இதில் மாற்று கருத்து இல்லை தோழர்களே. என்னை அரசனை மகிழ்விக்கும் அரசவை கோமாளி என்று சொன்னது எனக்கு வருத்தத்தை தந்தது அதுக்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பீர்களா?
//ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? //
இருமுறை அல்லது இதுவரை அனைத்து பதிவர்களையும் கலாய்த்துதான் எழுதியிருக்கிறேன், இதுவரை எந்த பதிவரும் வருந்தியது இல்லை, ஏன் என்றால் கலாய்த்தலை மட்டுமே நான் செய்துவருகிறேன், எங்கு பின்னூட்டம் போட்டாலும் கலாய்த்துதான் பின்னூட்டமும் போட்டு இருக்கிறேன் இதுதான் என் அடையாளம், எங்கயாவது நல்லபதிவுன்னு மட்டும்சொன்னால் என்ன குசும்பா உடம்பு சரி இல்லையா சும்மா போய்விட்ட என்று சம்மந்தப்பட்ட நபர்களே கேட்கும் அளவுக்குதான் என் அடையாளம் இருக்கிறது. அதை மீறி நான் எங்கும் எதிலும் கருத்து சொன்னது இல்லை.
//குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? //
இதுபோல் பிரச்சினைகள் வரும்பொழுது எல்லாம் பலரும் இதேயே சொல்கிறார்கள், என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவேளை நண்பர்களை மட்டும் கலாய்ப்பதால் அப்படிஒரு பிரச்சினை வந்தது இல்லை போல. அதுக்கு மேல் எதுவும் தெரியவில்லை.
கோமாளிகளை கோமாளிகளாகவே இருக்க விடுங்கள். எனக்கும் வருத்தங்கள் உண்டு, எனக்கும் சந்தோசங்கள் உண்டு அதை எல்லாம் மறைத்துதான் இந்த குசும்பன் என்ற தாங்கள் சொன்னது போல் கோமாளி வேடம் கோமாளிகளுக்கு பதிவுலக அரசியலும் தெரியாது, ஜாதி மதம சாயமும் பிடிக்காது. நான் நானகவே இருக்கிறேன் என்னை தயவு செய்து இந்த சண்டைகளுக்கு இழுக்காதீங்க!
நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி.
தம்பி, பதிவில் நகைச்சுவை இல்லை. ரிஜெக்டட் ரிஜெக்டட்
ReplyDelete:)
Freeyaa vidunga... feel pannaathinga..
ReplyDelete;-(
ReplyDeleteஎன்னண்ணே காலையிலேயே ஒரே ஃபீலிங். படிச்சு டைம் வேஸ்ட்.
ReplyDeleteவிளக்கப் பதிவெல்லாம் போடுற!!
ReplyDeleteஉன் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லாமப்போச்சு
:)))
:(((
ReplyDelete//எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteவிளக்கப் பதிவெல்லாம் போடுற!!
உன் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லாமப்போச்சு//
repeat
போய்யா பொசக்கெட்ட பயலே..நீயும் உன் விளக்கமும்.. நம்ம எதிரி யார்னு நாம தான் தீர்மானிக்கனும்.. ஏன்னா , நமக்கு எதிரியா இருக்கிறதுக்கான தகுதி அவங்களுக்கு இருக்கான்னு பார்க்கனும்.. வினவுக்கு ஒரு தகுதியை உருவாக்கி குடுத்த உனக்கு அவர்கள் வாயாலே புகழ்ந்து பதிவிடும் தண்டனை வழங்க வேணும்.. அவங்க உளறினங்களமாம்.. இவுரு விளக்கம் குடுக்கிறாராமாம்.. ஹய்யோ.. ஹய்யோ..
ReplyDeleteநர்சிம் எழுதியது பெரும் தவறென்றும், அதை வைத்து நடுநிலையானவர்கள் என்ற பெயரில் சிலர் அதை வளர்த்துவிடுவார்கள் என்றும் கருதி வெளியிட்ட ஒரு சாதாரன பதிவைக் கூட புரிந்துக் கொள்ள இயலாத மங்குனிகளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டி இருக்கு?
கடைசி வரிக்கு, உம்மை மிக அசிங்கமாக திட்டிவிட்டேன்.. எனக்கும் விளக்கம் சொல்லி ஒரு பதிவு போடு.. என்னவோ நாங்க தான் அப்டி பட்டம் குடுக்க சொன்ன மாதிரி.. வெளக்கெண்ண.. வெளக்கெண்ண..
அவங்க வருத்தம் தெரிவிக்கனும்னா உங்க சாதியை சொல்லுங்க மொதல்ல.. மீதிய அப்புறம் பேசலாம்..
ReplyDelete:( கூல் பேபி... ! :)
ReplyDelete?!?!?!?!
ReplyDeleteஅனைவருக்கு நன்றி, மின்னல் மன்னிக்கவும் உங்க பின்னூட்டத்தை டெலிட் செய்து விட்டேன் :(
ReplyDeleteவெளியில் செல்கிறேன் வருவரை பின்னூட்டம் போடும் கொஞ்சம் கவனமாக போடுங்க. எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை ஜஸ்ட் இது ஒரு விளக்க பதிவு அவ்வளோதான்!
தல,
ReplyDeleteஎன்ன ஃபீலிங்க்ஸா, இல்ல ஃபீலிங்க்ஸான்னு கேக்கறேன். உனக்கு எதுக்குயா ஃபீலிங்க்ஸு,
//நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி.//
இப்படி எங்களையும் ஒரு அடி அடிச்சிருக்கயே, எங்களுக்குத்தாயா ஃபீலிங்க்ஸு.
சில மாதங்களாக மட்டுமே, பதிவுலகம் எனக்கு பரிச்சயம். எந்த பதிவருடனும், மின்னஞ்சல், அலைபேசி மற்றும் நேரடி தொடர்பில்லை.
ReplyDeleteஒரு கடைநிலை வாசகனாக சொல்கிறேன். இப்படி ஒரு தன்னிலை விளக்க பதிவு தேவையில்லை. இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
//கோமாளிகளுக்கு பதிவுலக அரசியலும் தெரியாது, ஜாதி மதம சாயமும் பிடிக்காது. நான் நானகவே இருக்கிறேன் //
ReplyDeleteரைட்டு பாஸ் லூஸ்ல விடுங்க.
நகைச்சுவை பதிவாக மாற்ற
//பொற்கிழி என்ன பொறை டீ கூட வாங்கி கொடுத்தது இல்லை.//
என்ன கொடுமைங்க இது. நண்பருக்கு டீ பார்சல்
ஜஸ்ட் இது ஒரு விளக்க பதிவு அவ்வளோதான்!////////
ReplyDelete:( :(
மடல்.....லெட்டர்.....ஏன் கடுதாசின்னே வச்சிகலாமே.
ReplyDelete:)
இவனுக்கெல்லாம் ஒரு பதிவு போட்டு விளக்கம் போங்க பாஸ்
ReplyDeleteசுவாமி, இதுக்கெல்லாம் எதுக்கு விளக்கப்பதிவெல்லாம்!?
ReplyDeleteஎல்லா விரல்களும் ஒன்றல்ல! அவங்க அவங்க தளத்துள அவங்க அவங்க இயங்கட்டும்.
யாரையும் மல்லுக்கட்ட அவசியம் இல்லை.
பொங்க விட மாட்டீங்களே
ReplyDeleteபியூஸை புடுங்கிடுவீங்களே
ரைட்டு ஒரு வாரம் அப்புறமா வருகிரேன்
::)))
மற்றவர்களின் 'வலிகள்' உங்களுக்கு கிண்டலாகத் தோன்றி ஓட்டுக்களை வாங்கும் பதிவாக மாறும் போது வினவு சொன்னதில் தவறேதும் இல்லை,சிந்தியுங்கள்.
ReplyDelete//தம்பி, பதிவில் நகைச்சுவை இல்லை. ரிஜெக்டட் ரிஜெக்டட்
ReplyDelete:)//
வழிமொழிகிறேன்
வழிமொழிகிறேன்
வழிமொழிகிறேன்
//என் வலைதளத்துக்கு வரும் ஒரு சிலர் சந்தோசமாக திரும்பனும் அதே சமயத்தில் அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்யனும்//
ReplyDeleteஎன்ற உங்கள் நோக்கத்தை சிறப்பாக கடைப்பிடித்து வருகிறீர்கள். உங்கள் பதிவுக்கு வந்து படித்து சிரித்து மனம் நிறைவது தமிழ் வலைப்பதிவுகளில் அருமையான ஒரு அனுபவம்.
உங்கள் கலாய்த்தல் பணியைத் மேலும் மேலும் தொடருங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
தங்கம் கூல் டவுன்..!
ReplyDeleteஇதெல்லாம் உள் அரசியல்.. நீ இதுல ஒரு ஊறுகாய்..!
ஆனாலும் பெரிய ஆளாயிட்டடா..! வாழ்த்துக்கள்..!
///சகோதரிகளை பற்றி இப்படி ஒரு புனைவு வந்திருந்தால் என்னால் இப்படி ஒரு நாட்டாமைகள் தேவை என்ற பதிவை எழுதியிருக்க முடியாது, என்னோடு தொடர்பில் இருந்த முல்லையின் மனநிலையை யோசிக்காமல் மொக்கக போட்டது தவறு. ஆகவே இப்படி ஒரு பதிவு எழுதியதுக்காக வருந்துகிறேன். நீங்கள் சொல்வதுபோல் வெட்கமும் படுக்கிறேன் இதில் மாற்று கருத்து
ReplyDeleteஇல்லை தோழர்களே///
இந்த புரிதலுக்காய் குசும்பனுக்கு தலைவணங்குகிறேன்.
பிதாமகன்ல லைலா சொல்ற அதே டயலாக் தான்: "குசும்பாஆஆஆ.... லூசாப்பா நீங்க?"
ReplyDelete"நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி."-இப்டி சொல்லிட்டீங்க இல்ல? உங்க கூட கா. நாங்க குடுத்த பின்னூட்டம் எல்லாம் திருப்பித் தாங்க. எங்களோட மனசை எல்லாம் ஒடச்சீங்க இல்ல, திருப்பி ஒட்ட வெச்சுத் தாங்க. :-)))))
\\நல்ல பட்டம் வாங்கி தந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நன்றி\\
ReplyDeleteஅப்போ இனிமேல் குசும்பன் என்கிற உங்கள் பதிவு கோமாளி குசும்பன் என்று போட்டுவிங்களா!!? இல்லை இனி உங்களை கோமாளி குசும்பன் அப்படின்னு கூப்பிடலாமா இல்லை வேறும் குசும்பன் அல்லது கோமாளின்னு கூப்பிடலாமா!!
நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்க அண்ணே ;))
அட.. நீயும் ஒரு பதிவு போட்டு இருக்கியா... வெளங்கீடும்..!
ReplyDeleteகுசும்பன் குசும்பனாக மட்டுமே இருக்கக்கடவது.. கோவி.கண்ணன் சொன்னது போல.. ரிஜெக்ட்..ரிஜெக்ட்..!
:)
அடிபட்டா தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் வரும், அந்த ஆம்புலன்ஸே அடிபட்டுட்டா..???
ReplyDeleteசரவணன்!வினவு தோழர்கள் எல்லோரையும் சாடியிருக்கிறார்கள்.பெரும்பாலும் அவர்கள் சீரியஸாக எதனையும் விவாத களத்திற்கு கொண்டு வருவதால் ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் நகைச்சுவைக்குட்படுத்துவதால் பதிவுலகின் இரு வேறு நிலைகள் என்பதால் அவர்களுக்கு கோபத்திற்கான காரணங்கள் உண்டு.
ReplyDeleteஆனால் வார்த்தைகளில் யாரையும் புண்படுத்தாத உங்கள் நிலைப்பாட்டில் அனைவருக்கும் உடன்பாடே.
Enna maamu ore feelings of indiava keethu,freeya vidu maamu, nama enna guarantee ,warantee ellam kudukka cooker yaavarama panrom tamaasu pathivu thane podurom,appuram ethuku feelingslam.
ReplyDeleteMirugathukku sirikka therinja than manusan,adikkadi sirippai ninaivutti nee innum manusa paya thannu niyapagapaduthurathe nee than maamu.!
Ambulance adipatta recovery van varum@ila
அப்துல்லா ரிபீட்டு...ஃப்ரியா விடு..
ReplyDeleteஇங்கே குசும்பன்னு ஒரு கலாய்க்கிற பார்ட்டி இருந்தாரே!, எங்க அவரு?
ReplyDeleteநம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
ReplyDeleteநம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!
இதை மட்டும் கடைபிடியுங்கள்!
உங்கள் உணர்வை மதிக்கிறேன்.
ரைட்டு தல .... விருமாண்டி டயலாக்கையும் டிஸ்கில போட்டிருக்கலாம். நீ பெரிய மனுசன்யா...:-)
ReplyDeleteஉன் நல்ல மனசுக்கு ஒருகுறையும் வராது...
மற்றபடி சுரேகாவை வழிமொழிகிறேன்.
//நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!//
டேக் இட் ஈசி குசும்பன்.
ReplyDeleteடாடாடாடா.....ய்ய்ய்ய்ய்ய்!!!
ReplyDeleteஎட்றா அருவாள...! குசும்பனை சீரியஸ் ஆக்கினவங்களை பொலி போட்டுட்டுத்தாண்டா மறுவேளை.
==
ஹை.. நானும் சீரியஸா எழுதறேன் பார்த்தீங்களா??
தோழர் குசும்பன், நான் முன்பே ஒருமுறை சொன்னேன் உங்கள் குசும்பு எப்போதும் ரசிக்கப்படாது என்று, அது இப்போது உண்மையாகிவிட்டது. இந்த பின்னூட்டம் உங்களை காயப்படுத்த அல்ல முன்பு ஒருமுறை நம்மிருவருக்கும் நடந்த விவாதத்தை இப்போதைய சூழ்நிலையில் உங்களால் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க இயலும் என்ற ஒரே காரணம் தான்
ReplyDeleteஎன்ன இன்னைக்கு ஒரே மந்தமாக இருக்கே !
ReplyDeleteஒவ்வொரு உடலிலும் கழிவுகள் உண்டு.
ReplyDeleteஒவ்வொரு வீட்டிலும் சாக்கடை/செப்டிக் டான்க் உண்டு. பொதுவாய் அதை நல்லார் அனைவரும் நாற்றம் வெளிவராமல் இருக்க மூடி வைத்திருப்பார்கள்.
ஆனால், எப்போதாவது சில செப்டிக் டாங்குகள் நிறைந்து வழிந்து புனைவு இல்லா நாற்றம் கொடுக்கும். ஆனால், இங்கே, சம்பந்தமில்லாத அத்தெருக்காரர் அதை மண்ணை அள்ளி போட்டு மூடுவது பார்ப்பதற்கு ஒருவகை 'கோமாளித்தனம்'தான். அவற்றை சுத்தம் செய்யாவிடினும் கிண்டி கிளறி 'யார்வூட்டு டேங்கு' என்று வினவி வினவி பெரிசாக்கி ஊரெல்லாம் நாறடிக்க வைப்பது எல்லாம் ஒரு பொழப்பா? நாட்டில் வேற முக்கியமா ஒண்ணுமே நடக்கலியா? எழுத, விவாதிக்க வேற ஒன்றுமே இல்லையா? எல்லாரும் சவுக்கியமா இருக்காங்களா? என்னமோ போங்க... பலர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கிராங்க...
//என்னை அரசனை மகிழ்விக்கும் அரசவை கோமாளி என்று சொன்னது எனக்கு வருத்தத்தை தந்தது அதுக்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பீர்களா?//
...மன்னிப்பா...
...அது எந்த அரசர்களுக்கும் தங்கள் மொழியில் பிடிக்காத ஒரே வார்த்தை...
சோ..நோ சான்ஸ்...
Kusumbu maamu,
ReplyDeletekalaaithal ,comedy pathivu poduvathil vallavar, "gulf kalaivaanar" neer ithanai naalum suyamaga kalaaithu pathivu poduvathaga ninaithen.
But "Utha tamilan" avar solli than tharsamayam oru kalaaipu pathivu potathaga solli irukkar, ithu enna neyar virupama? Or kalaaithal koolipadai sevaiya?
Ethu pannalum sonthama sey maamu rasikka nanga ready ,aduthavan savaari poga kuniyatha.
பாஸ்... உங்க உணர்வுகள் புரியுது. உங்களை தொடர்ந்து படிக்கிறவங்களுக்கு உங்க மனசு புரியும்.
ReplyDeleteசுரேகா சொல்றதை நான் ரிப்பீட்டிக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!
ReplyDelete//ஒருவார்த்தை said...
மற்றவர்களின் 'வலிகள்' உங்களுக்கு கிண்டலாகத் தோன்றி ஓட்டுக்களை வாங்கும் பதிவாக மாறும் போது வினவு சொன்னதில் தவறேதும் இல்லை,சிந்தியுங்கள்.
//
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்கிற மாதிரி, எவ்வளோ பிரச்சினை இருந்தாலும் உங்களுக்கு சிந்தனை முழுவதும் ஓட்டில் இருக்கிறது, நல்ல நோக்கம்.
உணர்ந்து, சிந்தித்துதான் எழுதியிருக்கிறேன், அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. பதிவுக்கு வரும் ஓட்டுதான் கண்ணுக்கு தெரிகிறது நல்ல பார்வை!
***********
நன்றி உடன்பிறப்பு, தவறு செய்யாத மனுசன் இல்லை, நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் தெரிஞ்சே தவறு செய்தது இல்லை என்கிறேன், தாங்கள் எந்த பதிவினை சொல்கிறீர்கள் என்று தெரியும் இப்பொழுதும் சொல்கிறேன் அதில் எந்த தவறும் இல்லை.
வால்பையன் கொஞ்சம் இதையும் படிங்க
//சில சமயங்களில் அப்படி செய்திருக்கிறோம். அதுபோல் தான் இப்பொழுதும் செய்தேன். நர்சிம் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை பதிவுலக பிரச்சினையாக தான்பார்த்தேன்.//
இதுபோல் நேயர் விருப்ப பதிவுகள் பல எழுதியிருக்கிறேன், ஏன் ஒன்றுபடுங்கள் என்று அழைக்கும் பைத்தியக்காரன் அவர்களே இதுக்கு முன்னாடி நடந்த சில பிரச்சினைகளின் பொழுது குசும்பன் பதிவு போட்டு கொஞ்சம் மக்களை கூல் செய்யுங்க என்று கேட்டு இருக்கிறார். இன்னொன்னு வால் இதை தான் நான் எழுதனும் என்று யாரும் சொல்லவும் முடியாது அப்படி சொல்லி எழுதியதும் கிடையாது. புரிதலுக்கு நன்றி!
//ஒரு கடைநிலை வாசகனாக சொல்கிறேன். இப்படி ஒரு தன்னிலை விளக்க பதிவு தேவையில்லை. இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.//
ReplyDeleteநானும் தான். But, I am a வாசகி =))
///////முதல் கேள்வி யார் இந்த பாலபாரதி?
ReplyDeleteகல்தோன்றி மண்தோன்றா காலத்தே பிளாக் எழுதி தமிழ் வளர்த்தவர் ரொம்ப சீனியர்////////
நண்பரே அப்பொழுது கனினி தோன்றி இருந்ததா !
பாஸ்.ஏன் பாஸ் ஏன்?
ReplyDeleteவை ஃபீலிங்க்ஸ்? நோ ஃபீலிங்க்ஸ்!!
டோண்ட் க்ரை..டோண்ட் க்ரை..!!
கூல் டவுன்! கூல் டவுன்..!!
குசும்பன் ஒன்லி ஃபார் காமெடி..!!
யுவர் ஹார்ட் ஃபீல்ஸ்..மை ஹார்ட் ஃபீல்ஸ்..!!
மக்கள சிரிக்க வெக்கிற மகராசனுங்க ஃபீல் பண்ணாக்கூட மக்கள் மனசு கலங்கிடும்..!!
இப்ப வினவு பண்ணுறது தான் கோமாளி வேலை..::))
ReplyDelete//குசும்பன் ஒன்லி ஃபார் காமெடி..!!//
ReplyDeleteஇந்த வரியை வாபஸ் வாங்கிக்குறேன்..
எந்த இமேஜுக்குள்ளும் உங்களை தள்ளிவிட, தள்ளிவைக்க நான் விரும்பலை.!!
குசும்பன் ஈஸ் பெஸ்ட் இன் காமெடி..அவ்வளவுதான்..!!